இதன்
பின்னணிகளை அறிவதற்கு கீழே சொடுக்கலாம்...
தவறு செய்து விட்டேன் உன்னை இங்கு கொண்டு வந்தது என் தவறு
வனிதா உனது உயிர் பிரிந்த நேரம் நள்ளிரவு 2:30 am
அவர்களிடம் போராடி அதிகாலையில் உன்னை
ஸ்டெச்சரில் வைத்து கொண்டு வந்த காட்சி இருக்கின்றதே... இன்னும் எனது விழிகளை
விட்டு நீங்கவில்லை. வீட்டில் வளர்த்த நாய்களைக்கூட சற்று மரியாதையாக
நடத்துவார்கள். உன்னை மட்டுமல்ல சுமார் இருபது நபர்களாவது இருக்கும் நேற்று இரவு
முழுவதும் எங்களுடன் காத்துக்கிடந்த கூட்டம் உயிருடன் அனுப்பிய உறவுகளை உடல்களாக
பெறுவதற்குத்தானா ? பிணக்கிடங்கு அருகில்
காத்துக்கிடந்தோம் உன்னை கோவையில் அடக்கம் செய்ய எனக்கு விருப்பமில்லை இங்கு யார்
இருக்கிறார்கள் ? நீ பிறந்து, வாழ்ந்த தேவகோட்டை மண்ணுக்கே உன்னை
கொண்டு செல்ல விருப்பம் மேலும் அந்த வீட்டில் உன்னை கொண்டு சென்று ஒரு இரவாவது
உறங்க வைக்க(?)வேண்டும் என்பது எனது அவா. காரணம் நாளை நானும்
எங்கு இறப்பினும் தேவகோட்டையில்தான் அடங்குவேன்.
நீ சற்றே நேரத்தில் சிறிய குழந்தைபோல சுறுங்கி
விட்டாயே உயிர் பிரிந்து விட்டால் இப்படித்தானா ? அல்லது நான் நெருக்கத்தின் காரணமாய் முதன்முதலாக
காண்பதால் எனக்கு இப்படி தோன்றுகிறதா ? உன்னை
வெள்ளைத்துணியில் சுருட்டி தருவதற்கு இவ்வளவு பணமா ? எந்த இடத்தில் இப்படியெல்லாம் கேட்பது என்ற
வரைமுறை கிடையாதா ? தினம் பிணமும், அழுகையும்,
மரணஓலமும் கேட்பவர்களுக்கு மனிதநேயம் இருக்குமா ?
நண்பர் திரு. நெல்லைத்தமிழன் அவர்கள்
சொல்வதுபோல். //இவர்களுக்கு
எத்தனையோ உயிர்களில் ஒன்று நமக்குத்தான் நீ ஒன்றே ஒன்று// இது உண்மைதான். உடன் கிளம்ப
மருத்துவமனை ஆம்புலன்ஸ் தரவில்லை இலவசமாம் ஓட்டுனருக்கு பணம் கொடுக்ககூடாதாம்
எழுதிப்போட்டு இருக்கின்றார்கள் அவர் கேட்பது ஆம்புலன்ஸின் வாடகையை அப்படியே கேட்பார்
போலயே... தனியாக ஆம்புலன்ஸ் வேண்டுமெனில் பத்துமணி ஆகும் உடன் கிளம்ப வேண்டுமெனில்
போகும் வழியில் பொள்ளாச்சி அருகே ஒருவரை இறக்கி விட்டு பிறகு அப்படியே போகலாம்
என்பதை பெரிதாக கருதாமல் ஏற்று முன்புறம் ஓட்டுனருடன் சகோதரரும், அம்மாவும் இருக்க
பின்புறம் உன்னுடன் நான் ப்ரீஜருக்குள் நீ பின்புற சக்கரத்தின் தூக்கலான சற்றே
சறுக்கலான இடத்தில் நான் உட்காரக்கூட இடமில்லாமல் தேவகோட்டை புறப்பாடு நேரம் காலை
ஐந்துமணி பொள்ளாச்சியோரம் ஏதேதோ கரடுமுரடான பாதையில் பயணம் மொத்தமும் குலுக்கல்
திடீரென ஒரு இடத்தில் குலுங்கியதில் எனது மடியில் வந்து விழுந்தது ஒரு முகம்
அதுவும் கோரமான மிகவும் மோசமான வாடையுடன் நெடுநாட்களாக ஐஸியூவில் கிடந்தவரின்
பிரேதம் அந்த அரையிருட்டில் பார்த்ததும் ஒரு கணம் திகிலடித்து உறைந்தே விட்டேன்.
சட்டென சுதாரித்து சடச்சடவென்று சைடில் தட்டி
ஓட்டுனரிடம் சொன்னேன் வண்டியை நிறுத்துங்க.... ஏன் ? இங்கே... இங்கே ஏதோ பாடி
கெடக்குங்க... அப்படியே
தள்ளி விட்டு உட்காருங்க... வண்டி நிற்காமல் தொடர்ந்து குலுக்கலோடு போய்க்கொண்டே
இருந்தது... வாடை தாங்க முடியவில்லை ஸ்டெர்ச்சரை விட்டு தலை கீழே விழுந்த பாடியை தலையை
அழுத்தி தள்ளினேன் குலுக்கலில் தலை சடக்கென்று ஒடிந்ததுபோல் உணர்ந்தேன்
இருப்பினும் அழுத்தி தள்ளினேன் பிறகுதான் அந்த அரையிருட்டில் கவனித்தேன் அதனுள்
இன்னொரு பாடியும் ஒரு துணியை போட்டுகூட மூடாமல் ஏதோ கலவரத்தில் இறந்து கிடந்த
சடலம்போல எனது பக்கத்தில் இருந்ததை வாழ்வில் அந்த நொடி என்னை எதிரியாக
நினைப்பவர்களுக்கும் வரக்கூடாது வனிதா உனக்காக நான் எவ்வளவோ பணம் செலவு செய்து
இருக்கலாம் அதெல்லாம் ஒரு விடயமே இல்லை ஆனால் இந்த நொடியில் உனக்காக நான்
பட்டகஷ்டம் இருக்கின்றதே.... ஆம்புலன்ஸின் முன்புறம் ஒரு கார் வழி நடத்தி சென்று
கொண்டு இருந்தது இந்த சடலத்தின் உடமைக்குறியவர்கள் என்று அறிந்தேன். பிறகு கையை
பார்த்தால் பிசுபிசுவென்று ஏதோ பசை போலிருந்தது துடைப்பதற்கு வழியில்லாமல் அந்த
கிராமம் வரும்வரை பொறுமையாக இருந்தேன் அதன் பிறகு அக்குக்கிராமம் செல்லும் பொழுது
விடிந்து விட்டது உடன் சட்டென கீழே இறங்கி மண்வெளியில் கையை தேய்த்து விட்டு கை
கழுவுவதற்கு கிராம மக்களிடம் தண்ணீர் கேட்டால் யாரும் கொடுக்கும் நிலையில் இல்லை
அப்பொழுதுதான் அந்த சடலத்தின் முகத்தை கவனித்தேன் இத்தனை கோரமான முகமா ? இந்த முகம்தான் அதிகாலை நம் மடியில் விழுந்ததா ?
வனிதா நல்ல மனதுடன் வாழ்ந்து இறந்தவர்கள்
தெய்வமாகி விடுவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் அப்படியென்றால் யாருக்குமே
தீங்கு நினைக்காத நீ நிச்சயமாக தெய்வமாகி இருப்பாய் என்று நம்புகிறேன் ஆகவே எனது
சந்ததிகளுக்கு துணையாய் இருப்பாய் என்றும் நம்புகிறேன். மதியம் மதுரை இராஜாஜி
மருத்துவமனை வந்தது ஆம்புலன்ஸ் அங்கு மற்றொரு ஆம்புலன்ஸில் உன்னை மாற்றும் பொழுது
எனது விழிகளில் நீர் வற்றி விட்டது. மாலை நான்கு மணியளவில் தேவகோட்டை நமது
வீட்டுக்கு நீ வாழ்ந்த வீட்டில் உன்னை கொண்டு வந்து இரவு முழுவதும் உறங்க
வைத்ததில் அந்நிலையிலும் எனது மனதில் சிறிய நிறைவு ஏற்பட்டது.
கூண்டுகள் சுழலும்...
வணக்கம் ஜி !
பதிலளிநீக்குபிரிவுத் துயரைப் பிழிகிறாய்
வாசிக்கும்போது மனம் தவிக்கிறது ஜி
எல்லோருக்கும் இறப்புண்டு
இருந்தும் இடைநடுவில் பிரிவது
இயற்கையின் கோரத்தனம்
இருக்கும் வரை நிம்மதி கொள்ளுங்கள் ஜி
நன்றி
தம 2
மனம் மௌனமாகி விட்டது..
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
படித்த போது மனைவியின் மீது வைத்த அன்பு தெரிகிறது அந்த தெய்வம் நிச்சயம் உங்களை சொர்க்கத்தில் சந்திக்கும் த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நண்பருக்கு இறந்தது என் அன்புத்தங்கை.
நீக்குதம்பி ரூபன் அவர்களுக்கு. கில்லர்ஜி கூண்டு என்று தொடர் பதிவாக எழுதிவருவதும், இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்புகளும் சமீபத்தில் இறந்த அவரது அன்புத் தங்கை பற்றியது தம்பி. தாங்கள் அவரது மனைவி என்று குறிப்பிட்டு வருகிறீர்கள்.
நீக்கு----கீதா
வணக்கம்
நீக்குதவறுதான் அண்ணா
நெகிழ்ச்சி. நெருங்கியவர்கள் மரணங்கள் சாதாரணமாகவே வலி மிகுந்தவை. இது போன்ற அனுபவங்கள் பெரிய ரணம். ஆற நாட்களாகும்தான். ஆம்புலன்சில் பயண அனுபவம் கொடுமை, திகீர் அனுபவம்.
பதிலளிநீக்குரொம்பவே வேதனையா இருக்கு! படிக்கிறச்சேயே மனம் கனக்கிறது.
பதிலளிநீக்குபடிக்கப் படிக்க மனம் கனத்துப் போய்விட்டது நண்பரே
பதிலளிநீக்குஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை
தம +1
வேதனை.... மனதை கனக்கச் செய்த பகிர்வு.
பதிலளிநீக்குextremely painful
பதிலளிநீக்குமிகவும் வருத்தமாய் இருக்கிறது சகோ.
பதிலளிநீக்குபடித்து முடித்ததும் மனம் கனத்து விட்டது.
தெய்வமாய் இருந்து குடும்பத்தினரை காப்பார் , ஆறுதல் அடையுங்கள்.
//அந்த நொடி என்னை எதிரியாக நினைப்பவர்களுக்குக்கூட வரக்கூடாது//
பதிலளிநீக்குவரக்கூடாதுதான். வந்து தொலைக்கின்றனவே! அவ்வப்போது மனதைக் கல்லாக்கிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
நெஞ்சு கனத்துவிட்டது நண்பரே.
மனக் கூண்டை திறந்து விடுங்கள். அல்லது தேவகோட்டை பக்கம் ஒரு வலைப்பதிவர் சந்திப்பினை நடத்துங்கள்.
பதிலளிநீக்குநண்பரே, படிக்கப் படிக்க மனம் அதிகமாகக் கனக்கிறது. அனைத்தையும் தாங்கிய உங்களின் இதயம் அப்பப்பா...நினைத்துப் பார்க்கமுடியிவில்லை.
பதிலளிநீக்குமறந்தால்தானே..நிணைப்பதற்கு.......
பதிலளிநீக்குஎன்ன பண்ணுவது சில விசயங்களைத்தாங்கித்தான் ஆக வேண்டும்... நம்முடைய முறை வரும்வரை உயிர்வாழ்ந்துதானே ஆக வேண்டும்.
பதிலளிநீக்குஅந்த இரவுப்பிரயாணம்.. ஒருவரின் உடல் உங்கள் மடியில் விழுந்தது.. என்ன கொடுமை.. உயிர் உடம்பில் இருக்கும்வரைதான் நமக்கு மரியாதை.. கண்ணை மூடிக்கொண்டால்ல் என்னவும் பண்ணலாம்.. அதை நினைக்கும்போதுதான், உயிரோடு இருக்கும்வரை எல்லோரோடும் ஒற்றுமையாக சந்தோசமாக இருந்திடோணும் என மனம் எண்ணும்.
துன்பத்திலும் ஒரு திருப்தி.. நீங்கள் நினைத்ததுபோல தங்கையை, தேவகோட்டைக்கு எடுத்து வந்து விட்டீங்கள்... இப்படியான விசயங்களை நினைத்து மனதை தேற்றிக்கொள்ள வேண்டும்.
அது என்ன G V ?:).
G.VANITHA
நீக்குஓ.. வீட்டுக்கு தங்கையின் பெயரைத்தான் வைத்திருக்கிறீங்களோ...
நீக்குமனதை நெகிழ வைத்த பதிவு கில்லர்ஜி. நீங்கள் கொடுத்திருந்த இணைப்புக்களில் சென்று முன்னைய பதிவுகளையும் வாசித்தேன். உங்கள் தங்கையின் ஆத்மா சாந்தியடையட்டும்..!!
பதிலளிநீக்குபடிக்கும்போதே மனதை ஏதோ செய்கிறது. எப்படி தங்களின் துக்கத்தோடு அதையும் அதையெல்லாம் தாங்கிக்கொண்டீர்கள் என்பதை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. காலம் தங்களின் மனதில் ஏற்பட்ட சோகத்தை மாற்றும்.
பதிலளிநீக்குநம்மோடு பேசிப் பழகியவர், சடலமாகக் கிடப்பதையே நம்மால் தாங்க இயலாது. உங்களுக்குத்தான் எத்தனை எத்தனை வருத்தமான அனுபவங்கள், தருணங்கள். யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்றுதான் ப்ரார்த்தனை. சும்மா மறந்துவிடக்கூடிய நிகழ்வுகளா? ராம் ராம்.
பதிலளிநீக்குநினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா
பதிலளிநீக்குவாசித்து முடித்தபோது கண்ணில் நீர் :(
பதிலளிநீக்குஒரு ஆம்புலன்ஸ் கூடவா தர முடியாது இந்த மருத்துவமனைகளால் ..பணம்தின்னிகள் ..
அந்த இரவு பயணம் நெஞ்சை பதைபதைக்கவைத்தது என்ன ஒரு கொடுமையான அனுபவம் :(
உங்கள் விருப்பப்படி தங்கையை வீட்டுக்கு கொண்டுவந்தது மனதுக்கு ஆறுதல்
எத்தனை துன்பங்கள்! நெகிழ்ச்சியான பதிவு மட்டுமின்றி ஆம்புலன்ஸில் தங்களது பயணம் ஐயோ இப்படியுமா என்று எண்ண வைத்தது. கொடுமை! என்ன சொல்ல? என்னதான் காலம் நம் வருத்தத்தை மாற்றினாலும் அதன் தாக்கத்தையும் ஆழமாகப் பதிந்த அந்தத் தடங்களையும், உணர்வுகளையும் மாற்ற முடியாதுதான்.
பதிலளிநீக்குதுளசி, கீதா
அண்ணாவின் அன்பை இங்கே கண்டேன். நெகிழ்ச்சி.
பதிலளிநீக்குசம்பவங்கள் நிஜமானதா? ஆம்புலன்சில் இப்படியும் நிஜத்தில் நடக்கின்றதா? உயிர் பிரிந்த பின் சடலத்திலிருந்து வரும் கிருமிகள் குறித்தெல்லாம் சிந்திக்க மாட்டார்களா? ஆனால் எப்படியான சூழலாயிருந்தாலும் சடலங்களுடன் ஒரே வண்டியில் செல்ல எப்படி சம்மதித்தீர்கள்?
நீக்குஅதாவது உடன் புறப்பட வேண்டுமானால் மற்றொரு உடலை இறக்கி விட்டு பிறகு அப்படியே போகலாம் என்றதை பெரிதாக அந்த நிலையில் யோசிக்க அவகாசமில்லை
நீக்குமேலும் தனியாக போக வேண்டுமானால் புறப்படுவதற்கு 5 மணி நேரம் காத்திருக்க வேண்டும் நாங்கள் செல்ல வேண்டிய பயண தூரம் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேல்.
காலம் மட்டுமே தங்கள் காயத்திற்க்கு மருந்திடும். அந்த காலமும் விரைந்து வர வேணும்.
பதிலளிநீக்குதுக்ககரமான பயணத்தில் இப்படியும் ஒரு கோரமான நிகழ்வா ,உங்களின் நிலை மிகவும் கஷ்டம்தான்:(
பதிலளிநீக்குநின்னுட்டீங்க ஜீ....
பதிலளிநீக்குமனதை வருத்தும் வேதனையான நிகழ்வுகள்...
பதிலளிநீக்குஎன்ன செய்வது ...நாளுக்கு நாள் மனிதம் மடிகிறதே...