01. செய்த தவறுக்கு இறைவனிடம் தண்டனை உண்டு
என்கிறார்களே செய்யாத குற்றத்திற்க்காக நீதி மன்றங்களின் தவறுகளால்,
ஆட்சியாளர்களின் அதிகாரத்தால் சிறைச்சாலைகளில் எத்தனையோ நிரபராதிகள் தண்டனை
அனுபவிக்கின்றார்கள் அப்படியானால் இவர்களுக்கு இறைவன் என்ன கொடுப்பார் ?
02.
பொது இடத்தில் நின்று கொண்டு சிறுநீர் கழித்ததின் காரணமாய்
எந்த விசாரணையுமின்றி 36 ஆண்டுகள் சிறையில்
இருந்தவருக்கு இறைவன் என்ன கொடுப்பார் ?
03.
இவ்வளவு ஏன் பொது நலத்திற்காக குரல் கொடுத்து தனது இளமைப் பருவத்தை 27 ஆண்டுகள் சிறையில் கழித்தாரே நெல்சன் ரோபிசலா மண்டேலா
இவருக்கு இறைவன் என்ன கொடுப்பார் ?
04.
மக்களின் சுதந்திரத்திற்கு முன் நின்ற காரணத்தால் நாதுராம்
விநாயக் கோட்ஷேவால் சுடப்பட்டவருக்கு இறைவன் என்ன கொடுத்திருப்பார் ?
05.
சுட்டதின் காரணமாய் கோட்ஷேவுக்கு இறைவன் என்ன
கொடுத்திருப்பார் ?
06.
கோட்ஷேவை சுடச் சொன்னவருக்கு இறைவன் என்ன கொடுத்திருப்பார் ?
07.
கோட்ஷே செய்தது சரி என்றவருக்கு இறைவன் என்ன
கொடுத்திருப்பார் ?
08.
கோட்ஷே செய்தது தவறு என்றவருக்கு இறைவன் என்ன கொடுத்திருப்பார் ?
09.
தீர்ப்பு தவறென்று தெரிந்தும் தீர்ப்பெழுதிய நேற்றுவரை
இறந்து போன நீதியரசர்களுக்கு இறைவன் என்ன கொடுத்திருப்பார் ?
10.
நாளை முதல் இறக்கப் போகும் நீதிமான்களுக்கு இறைவன் என்ன
கொடுப்பார் ?
11.
உலகமே அறியப்பட்டவரை உலகறிய கொலை செய்தவனைகூட குற்றவாளி
அல்ல ! என வாதாடிய வழக்கறிஞருக்கு இறைவன் என்ன கொடுப்பார் ?
12.
குற்றம் செய்யாதவர்களைக்கூட அடித்து துன்புறுத்திய
காவல்துறையினருக்கு இறைவன் என்ன கொடுப்பார் ?
13.
அரசாங்க உத்தரவு தனது வேலை என்பதால் குற்றவாளிகளின் தலையை
வெட்டியவருக்கு இறைவன் என்ன கொடுப்பார் ?
14.
மார்ச்சுவரியில் பிரேதத்தைக்கூட கூறுபோடும்
மருத்துவர்களுக்கு இறைவன் என்ன கொடுப்பார் ?
15.
மனதால் பாதிக்கப்பட்டவரை பேய் பிடித்து விட்டதென சொல்லி
சவுக்கால் அடிக்கும் மந்திரவாதிகளுக்கு இறைவன் என்ன கொடுப்பார் ?
16.
இறைவனை நீ இல்லை என்ற நாத்திகர்களுக்கு இறைவன் என்ன
கொடுப்பார் ?
17.
இறைவனை வணங்கிய, வணங்கும் ஆத்திகர்களுக்கு இறைவன் என்ன
கொடுப்பார் ?
18.
இறைவனுக்கு தீபம் காண்பித்தது போலவே.... சங்கராச்சாரியார்,
நித்யானந்தா, பிரேமானந்தா போன்ற ஞானிகளுக்கு தீபம் காண்பித்தவருக்கு இறைவன் என்ன
கொடுப்பார் ?
19.
இறைவனுக்கு தீபம் காண்பித்தது போலவே.. இறந்து போன குடிகார
தந்தையின் போட்டோவுக்கு தீபம் காண்பித்தவருக்கு இறைவன் என்ன கொடுப்பார் ?
20.
வழிபாட்டு ஸ்தலங்களை கட்டியவர்களுக்கு இறைவன் என்ன
கொடுத்திருப்பார் ?
21.
வழிபாட்டு ஸ்தலங்களை இடித்தவர்களுக்கு இறைவன் என்ன
கொடுத்திருப்பார் ?
22.
நடிகைகளுக்கு கோவில் கட்டிய, கட்டவுட்டிற்கு பாலாபிஷேகம்
செய்த மாமனிதனுக்கு இறைவன் என்ன கொடுப்பார் ?
23.
கருணை வடிவாகவே வாழ்ந்த அன்னை தெரசாவுக்கு இறைவன் என்ன
கொடுத்திருப்பார் ?
24.
கொடுங்கோல் ஆட்சி நடத்திய அடோல்ஃப் ஹிட்லருக்கு இறைவன் என்ன கொடுத்திருப்பார் ?
CHIVAS
REGAL சிவசம்போ-
அஞ்சு பைசாவுக்கு வித்த ஊறுகாயைக்கூட ரெண்டு ரூபாய்
ஆக்கிட்டாங்களே இவெங்களுக்கு இறைவன் என்ன கொடுப்பார் ?
கோட்சே செய்தது சரி என்பவர்கள் இந்தியாவில் ஆட்சியைப் பிடித்து விட்டார்கள், கடவுள் தீர்ப்பு தரும் லட்சணம் இதுதானா :)
பதிலளிநீக்குஅவ(ர்)லட்சணம்தான் ஜி உங்கள் கடவுளா"ச்சே"
நீக்குஹா ஹா ஹா அப்படியானவர்களுக்குத்தான் இறைவன் எல்லாத்தையும் கொடுக்கிறார். நல்லவர்களுக்கு காலமேது இப்போ?:)
பதிலளிநீக்குஅதனால்தான் எல்லோரும் "அப்படி" ஆகின்றார்களோ...
நீக்குவணக்கம் ஜி !
பதிலளிநீக்குஅர்த்தமுள்ள கேள்விகள்தான் ஆனாலும் பதில் சொல்ல யாரும் இல்லை எல்லாம் மரணத்தின் பின்னர் மனிதன் அறியக் கூடிய வினாக்கள் ....தொடர்க ஜி வாழ்க நலம்
தமன்னா வாக்கு மேலும் ஒன்று
வருக பாவலரே நலமோ ?
நீக்குதங்களின் கருத்துரைக்கு நன்றி
அது தானே!..
பதிலளிநீக்குநானும் யோசித்துக் கொண்டுதான் இருக்கின்றேன்..
என்னவெல்லாம் கொடுத்தார்?..
என்னவெல்லாம் கொடுக்கவில்லை!.. - என்று...
கேள்விகள் நன்று.. கேட்கப்பட்ட விதமும் நன்று!..
அன்பின் ஜி நானும் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
நீக்குநாம போகும்போது பார்த்துத் தெரிஞ்சிக்கலாம் ஜி!!!!
பதிலளிநீக்குஸ்ரீராம் ஜி விபரமான பதில் தந்திட்டீங்களே... ஹா.. ஹா.. ஹா..
நீக்குஇது பொதுவாக எல்லோரும் கேட்கும் கேள்வி.....நீங்கள் சொல்லியிருப்பதற்கும் இறைவனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது....இது நம் மக்களின் மனதில் சிறு காயத்திலேயே இதைச் செய்தால் இறைவன் அதைத் கொடுப்பான். ..அதைச் செய்தால் இது கிடைக்கும்....இதைச் செய்தால் கடவுள் கண்ணைக் குத்தி விடுவார் என்று நம்மை மீறிய சக்தியைப் பற்றிய ஒரு தவறான புரிதலை ஏற்படுத்தியுள்ளதால்....இதற்கு விளக்கம் மொபைலில் அடிப்பதால்....விரிவாகக் கொடுக்க முடியலை ஜி... ..
பதிலளிநீக்குவருக சரியான வழித்தடங்களை விவரித்தமைக்கு மிக்க நன்றி
நீக்கு
பதிலளிநீக்குமண்குடிசை வாசலென்றால்...
தென்றல் வர வெறுத்திடுமா...?
மாலைநிலா ஏழையென்றால்...
வெளிச்சம் தர மறுத்திடுமா...?
உனக்காக ஒன்று...
எனக்காக ஒன்று...
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை...
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்...
அவன் யாருக்காகக் கொடுத்தான்...?
ஒருத்தருக்கா கொடுத்தான்...
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்...
ஒருத்தருக்கா கொடுத்தான்...
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்...
இல்லை என்போர் இருக்கையிலே...
இருப்பவர்கள் இல்லை என்பார்...
கிடைத்தவர்கள் பிழைத்துக்கொண்டார்...
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்...
எதுவந்த போதும்...
பொதுவென்று வைத்து...
வாழ்கின்ற பேரை வாழ வைப்போம்...
ஜி இது உங்கள் கருத்து அல்ல.. இருப்பினும் மிகச்சரியான பாடல் வரிகளை எடுத்து வைத்தீர்களே...
நீக்குஅதற்காக எமது இராயல் சல்யூட் தங்களுக்கு.
இறைவன் என்று ஒருவன் இருந்திருந்தால் இதையெல்லாம் செய்ய விட்டிரப்பானா?
பதிலளிநீக்குஅல்லது இவர்கள் அனைவரும் இறைவன் இருப்பதானே உண்மையிலேயே நம்பியிருப்பார்களேயானால், இவற்றை யெல்லாம் செய்திருப்பார்களா?
இறைவன் வணிகப் பொருளாகிவிட்டான் நண்பரே
வருக நண்பரே நியாயமான கேள்வியே..
நீக்குஇன்றைய நிலைப்பாடு இப்படித்தான் இருக்கிறது இறைவனை வணங்காதவர்களைவிட, வணங்குபவர்கள் பலரும் அயோக்கியர்களாக இருப்பதை பார்த்துக் கொண்டுதான் வாழ்கிறோம்.
நீண்ட கருத்துரைக்கு நன்றி நண்பரே.
யோசிக்க வைக்கும் கேள்விகள்
பதிலளிநீக்குநன்றி கவிஞரே.
நீக்குசூச்சு போனதுக்கு 36 வருசங்கள் தண்டனையா?!
பதிலளிநீக்குஆமாம் சகோ இதனைக்குறித்து விரைவில் எழுதுகிறேன்.
நீக்கு25ஆவது கேள்வி - நகர்ப்புற வீட்டுவசதித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், இன்றைக்கு, 'சென்னை சில்க்ஸுக்கு' 4 மாடிகள் கட்ட மட்டுமே சென்னை பெரு'நகரக் குழு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அவர்கள் 7 மாடிகளைக் கட்டியிருக்கின்றனர் என்று கண்டுபிடித்துச் சொல்லியுள்ளார். இப்போதுதான் பல வருடங்கள் நெடிய தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட அமைச்சருக்கும், சென்னை பெருநகரக் குழுவிற்கும் இறைவன் என்ன கொடுப்பான்? என்பதையும் சேர்த்திருக்கலாம்.
பதிலளிநீக்குஆஹா... இதுவும் நியாயமான கேள்விதான்.
நீக்குநண்பரே நம்நாட்டில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் 90% உள்ளனர் என்ன செய்வது ?
புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டுகின்றான் சரி நகராட்சி கவனிக்கத்தான் இல்லை.
மின்சாரவாரியம் கரண்ட் கொடுக்கின்றானே எப்படி ?
நண்பரே இதை 26 வது கேள்வியாக எடுத்துக் கொள்ளுங்கள்
காலுக்கடியில் கிடக்கும் விவசாயியை சந்திக்க நேரமில்லாத தலைவன் விமானம் ஏறிப்போய் விபச்சாரியை சந்திக்கிறானே...
இறைவன் என்னத்தை கொடுத்தான் போங்க நண்பரே... எனக்கு தூக்கம், தூக்கமா வரு"தூ"
ரகசியம்,பரம(ன்)ரகசியம்
நீக்குரகசியம் இறுதிவரை தெரிவதில்லையே ஐயா
நீக்குவாவ்வ்வ்வ் எத்தனை கேள்விகள் ஜீ ?
பதிலளிநீக்குகடவுளிடம் இருந்து பதில் வருமா?
கண்டிப்பாக வரும் என்ற நம்பிக்கையில் போஸ்ட்மேனை எதிர் பார்த்து காத்திருக்கிறேன் நண்பரே
நீக்குநீங்கள் கேட்டிருக்கும் வினாக்களுக்கு பதில் சொல்லத்தான் தெரியவில்லை. இணைத்திருக்கும் காணொளி பொருத்தமானது.
பதிலளிநீக்குவருக நண்பரே பதில் கிடைக்காத கேள்விகளை கேட்டு விட்டேனோ... நன்றி நண்பரே
நீக்குஎனக்கும் இப்படி நிறைய கேள்விகள் தோணும் ..நல்லதே நினைக்கிற நல்லதை செய்கிற பலர் இன்னும் கஷ்டத்தில்தானே இருக்காங்க .நிறைய கேள்விகள் கேட்டிருக்கிங்க விடை தான் இல்லை நம்மிடம் .சாமியார்ங்க கண்ணுக்கு தெரிற கடவுள் நம்மகிட்ட ஒருநாள் மாட்டாமலா போகப்போறார் .இதனை கேள்வியையும் ஒண்ணு விடாம கேட்டுடுவோம்
பதிலளிநீக்குவருக நானும் மாட்டுவார்னுதான் காத்துக்கொண்டு இருக்கிறேன்.
நீக்குஒருவேளை தம வாக்குகள் போடவில்லையென்றால் இறைவன் என்ன கொடுப்பார் என்று நீங்கள் கேட்டுவிடும் முன் நான் தம 14 போட்டுவிட்டேன்
பதிலளிநீக்குஹா.. ஹா... ஹா.. பயந்து்துதான் ஓட்டு போட்டீர்களா நண்பரே ?
நீக்குஆதங்கத்தை அடுக்கிக் கொண்டே போனதை
பதிலளிநீக்குபடிக்கப் படிக்க இறைவன் மீது'அவ நம்பிக்கை
வந்து விடுமோ எனத் தோன்றியது
கடைசி ஊறுகாய் ஆதங்கமே
ரொமபப் பிடித்திருந்தது
காரணம் அது நேரடியாக
நம் சம்பந்தப்பட்டது இல்லையா
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்களுடன்...
கவிஞரின் விரிவான ரசித்து எழுதிய கருத்துரைக்கு நன்றி
நீக்குஇ றைவன் ஒருத்தன் இருந்தால்..அவன் நல்லவர்க்கு நரகத்தையும் கெட்டவர்களுக்கு சொர்க்கத்தையும்தான் கொடுத்திருப்பான்
பதிலளிநீக்குநல்லவர்களுக்கு நரகமா ?
நீக்குபயமாக இருக்கிறது நண்பரே
மீண்டும் கருடபுராணம் தான் பதில் சொல்லவேண்டும்))
பதிலளிநீக்குவருக நண்பரே சொன்னால் நல்லது.
நீக்குஇருப்பதாக நினைக்கும் ஒருவரிடம் கேள்விகள் கேட்கும் உங்களுக்கு அவர் என்ன பதில் சொல்வார்
பதிலளிநீக்குஅதைத்தானே ஐயா நானும் கேட்கிறேன் வருகைக்கு நன்றி
நீக்குஇறைவன் இருக்கின்றான்
பதிலளிநீக்குஇத்தனையும் கேட்டால்
எத்தனை முறை கேட்டாலும்
ஒன்று தான் - அவன்
மொழி மௌனம் தான்...
அதனால்,
நாமே முயன்று வெல்வோம்!
வருக நண்பரே உண்மை
நீக்கும்ம்ம்ம்ம் கோட்சேவை காந்தியைக் கொல்லும்படி யாரும் கூறியதாகப் படிக்கவில்லை. இது கோட்சேவின் தன்னிச்சையான முடிவு! அதைச் சரி என்று இப்போதைய ஆளும் கட்சிக்காரர்கள் ஒரு நாளும் கூறியதில்லை! கோட்சே தான் நீதிபதியிடம் அப்படிக் கூறியுள்ளார். அது அவர் பெயரிலேயே புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இந்தியாவில் தடை செய்யப்பட்டது. Book name, "May It please your Honour!" Amazon மூலம் வாங்கலாம் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குவருக தங்களது விளக்கவுரைக்கு நன்றி சகோ
நீக்கு