யாருய்யா.... இதுல சீமான் புகைப்படத்தை சொருகியது ?
* * * 01 * * *
நான்
ஆத்திகமோ, நாத்திகமோ பேசவரவில்லை தெய்வம் என்றால் உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள்
தெரிந்திருக்க வேண்டும், ஆனால் தமிழ் நாட்டில் சில தெய்வங்களை சில திரைப்பட
நடிகர்கள் அறிமுகப்படுத்தி இருகிறார்களே ! இது கேளிகூத்தாக இல்லை.
தாய் மூகாம்பிகை, ஸ்ரீராகவேந்திரர், ஐயப்பன் இவர்களெல்லாம் தமிழ் நாட்டில்
பிரபலமடைந்தது... சில திரைப்பட நடிகர்களால் என்பதை யாரும் மறுக்க முடியுமா ? இதில் இன்னொரு வேடிக்கை
என்னவென்றால் ? இந்த நடிகர்கள்
தமிழர்களும் அல்ல சுயகாரணங்களுக்காக அவர்கள் வணங்கினார்கள் சரி ஆனால் அதே வழியை
ரசிகன் என்பதால் தானும் பின்பற்றுவது முறையா ? இந்த அறியாமைகள்
சமூகத்தால் பெருமைப்பட முடியுமா ?
* * * 02 * * *
முன்னாள்
பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பொழுது தீக்குளித்து
இறந்தவர்கள் 8 பேர் இவர்கள் இந்திரா காந்தி மகன்களோ, இந்திரா
காந்தி பிறந்த மாநிலத்தையோ வேறு எந்த மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் அல்லர் 8 பேருமே தமிழர்கள் இந்த அறியாமைகள் சமூகத்தால்
பெருமைப்பட முடியுமா ?
* * * 03 * * *
ஒரு
திரைப்படத்தில் கசாநாயகனை (தமிழன் அல்ல) அனாதைப்பயலே என்று வசனம்
பேசிய காரணத்தால் சென்னையில் ஒரு நடிகையின் (தமிழச்சி) வீடு கல்வீசி
தாக்கப்பட்டது அதில் போலீஸாரால் பிடித்து போனவனின் வாழ்க்கை திசைமாறி போய் விட்டது
குடும்பம் சின்னா பின்னமாகி விட்டது எனது நண்பனுக்கு வேண்டப்பட்ட குடும்பம் இந்த
அறியாமைகள் சமூகத்தால் பெருமைப்பட முடியுமா ?
* * * 04 * * *
நண்பனுக்கு
திருமணம் என்றால் வாழ்த்தி சுவரொட்டி ஒட்டுகின்றான் நல்ல செயல்தான் அதிலும் தனது
நடிகனை புகழ் பாடுகிறான் எப்படி ? மணமக்கள் இருவரும் எங்கள் அண்ணன்-அண்ணியைப்போல
வாழ்க ! என்று அவன் சொல்லும் அண்ணனும் அண்ணியும் விவாகரத்து வரை
போய் விட்டு திரும்பியவர்கள் இந்த அறியாமைகள் சமூகத்தால் பெருமைப்பட முடியுமா ?
* * * 05 * * *
திருமண
விழா ஒன்றில் மணமக்களை M.L.A வாழ்த்திப் பேசுகிறார்
எப்படி ? மணமக்கள் இருவரும் எங்கள்
தலைவனைப் போலவும் (ஒரு குறிப்பிட்ட
நடிகையையும் இணைத்து அவர்கள் இருவருமே
இறந்து விட்டார்கள் என்று நான் சொன்னால்தான் புரியுமா ?) அவர்களைப் போல வாழ்க ! என்று திருமணத்திற்கு வந்தவர்கள் முகம் சுழிக்கிறார்கள்
காரணம் அவர்கள் இருவரும் திருமணம் செய்யாமலே வாழ்ந்தவர்கள் அவருக்கு
மனைவி உண்டு என்பது வேறு விசயம் எப்படி என்று நான் விளக்க
முடியுமா ? இந்த அறியாமைகள்
சமூகத்தால் பெருமைப்பட முடியுமா ?
* * * 06 * * *
பத்திரிக்கையை
புரட்டினால் நடிகருக்கு 60 அடி உயர கட்டவுட்
கட்டும்போது கீழே விழுந்து ரசிகர் பரிதாப மரணம் கட்டவுட்டிற்கு பாலாபிஷேகம்
ரோட்டில் ஓடிய பாலால் மோட்டார் சைக்கிள்கள் வழுக்கி விழுந்து சாலைகளில் அபகடம்
தலைவன் படம் வெளியிடாததால் நடுரோட்டில் ரசிகர் தீக்குளிப்பு இப்படிப்பட்ட செய்தி
இந்த அறியாமைகள் சமூகத்தால் பெருமைப்பட முடியுமா ?
சொல்
தமிழா... சொல் ?
சீமான் போலவே நீங்களும் நல்ல கேள்விகள் கேட்டுள்ளீர்கள் ,சீமானிடம் எனக்குப் பிடிக்காமல் போனது ,முருகனை நம்மோட முப்பாட்டன் என்று சொன்னதுதான் :)
பதிலளிநீக்குவாங்க ஜி
நீக்குஇதிலென்ன தவறு ?
பிள்ளையாரை பெரியப்பா என்று ஆண்டாண்டு காலமாக சொல்லி வர்றீ்றீங்க...
ஆற்றில் குளிக்கும் பெண்களின் சுடிதாரை எடுத்து மறைத்து விளையாடும் கண்ணனை இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் குழந்தையாக நினைத்து வணங்குவீர்கள் ?
இன்னும் வளரவே இல்லையா ?
பிள்ளையாரை பிரம்மச்சாரி என்று சொல்றீங்க...
அப்புறம் சித்தி-புத்தி என்று இரண்டு மனைவிகள் இருக்கிறதாவும் சொல்றீங்க...
இதுல க்ரீன் தமிழன் திரு. சீமான் சொன்னது மட்டும்தான் தவறா ?
மனசாட்சியை தொட்டு பேசுங்க ஜி.
ம்ம்ம்ம்ம், இதுக்கு பதில் இருக்கு. ஆனால் தில்லையகத்து/கீதா சொல்வது போல் பெரிதாகி விடும். :)
நீக்குவாங்க சகோ பதிலை தங்களது தளத்தில் பதிவாக்குங்கள் இதுவும் நல்ல யோசனைதானே...
நீக்குகற்பனை உருவங்கள் எப்படி பெரியப்பா ,முப்பாட்டன் ஆக முடியும் ?அப்படி என்றால் பெரியம்மா ,முப்பாட்டியும் உண்டா :)
நீக்குஆண்பால் இருக்கும்போது பெண்பாலும் இருப்பதே முறையாகும் ஜி.
நீக்கு///யாருய்யா..... இதில சீமான் புகைப்படத்தைச் செருகியது?///
நீக்குஅதானே? யாரு செருகியது???? பிடிச்சு உள்ளே போடுங்கோ:)... கில்லர்ஜி இன் படம் இருக்க வேண்டிய இடத்தில் சீமானா???.. பகவான் ஜீ இதைத்தட்டிக் கேய்க்க மாட்டீகளோ?:)
வாங்க நலமா ?
நீக்குநான் புகைப்படம் எடுப்பதில்லை படம் எடுத்தால் எனக்கு அலர்ஜி வரும்.
நீங்கள் சொல்லும் கருத்து ஏற்றுக்கொள்ள கூடியதே , அதே நேரம் மத இன மொழி ,துவேஷ கருத்துக்களுக்கும் தமிழக மக்கள் துணை போனதில்லை எனபதை ஒப்புக்கொள்ளவேண்டும் இதில் தென்னகம் தலை நிமிர்ந்தே நிற்கிறது
பதிலளிநீக்குஇருப்பினும் மற்றவரை உயர்த்தி விட்டு தமிழன் கீழேயே நிற்பது சரியில்லையே நண்பரே...
நீக்குசினிமா மோகமும் இலவச மோகமும் ஒழிய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு!
பதிலளிநீக்குஇனியாவது தங்களது கனவு நனவாகட்டும்
நீக்குநியாயமான கேள்விகள்தான். பதில் சொல்வார் யார்?
பதிலளிநீக்குயாராவது வருவார்கள் ஸ்ரீராம் ஜி
நீக்குஅதுதானே.. அந்தப் படத்தை யாருங்க இங்கே வைத்தது!?..
பதிலளிநீக்குஅதானே எனக்கக்கும் தெரியலை...
நீக்குநண்பரே அருமை வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
நீக்குநடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மாபெரும் நடிகர்.
பதிலளிநீக்குஇதில் மாற்றுக் கருத்து யாருக்குமே கிடையாது.
ஆனால் அந்த மாபெரும் நடிகர் இறந்தபோது, தமிழ் நாடு முழுவதும் அவரது ரசிகர்களில் பலரும் மொட்டை அடித்துக் கொண்டார்கள். ஆனால் அவரது சொந்த மகனோ, படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, மொட்டை அடித்துக் கொள்ளவே இல்லை.
இதுதான் தமிழ் நாடு
இந்த சினிமா மோகம் முதலில் ஒழிய வேண்டும் நண்பரே
நடிகர்களை நடிகர்களாக மட்டுமே பார்க்க மக்களைப் பழக்க வேண்டும், தம +1
வருக நண்பரே அருமையான கருத்தை முன் வைத்தீர்கள்
நீக்குஒரு மனிதனுக்காக தலைமுடியை மழிப்பது எதற்காக ?
அதன் அர்த்தம் என்ன என்பதை முழுமையாக அறியாதவர்கள்.
தனது தாயை களங்கப்படுத்துகிறோம் என்பது தெரியவில்லையே...
தமிழ்நாடு முன்னேறாமல் போவதற்கு இந்த மாதிரி மடந்தைகளே காரணம்.
மதவெறிக்கும், சாதி வெறிக்கும், எந்த வகையிலும் குறைந்ததல்ல இன வெறி. மொழிப் பற்று அவசியம் தேவை தான். ஆனால் அதை வெறியாக மாற்றக்கூடாது.
பதிலளிநீக்குவருக நண்பரே தமிழன் மட்டும் ஏமாளியாய் இருப்பது கண்டு பொறுக்குதில்லையே...
நீக்குஉங்கள் கேள்விகள் சரியே! நியாயமானதும் தான். இதற்கு ஒரு சில பதில்கள் சொல்ல வேண்ண்டுமென்றால் பதிவு போல் ஆகிவிடுமே!!!
பதிலளிநீக்குசரி இப்படி எல்லாம் உரக்கச் சொல்லாதீங்கப்பா இதுதான் தமிழ்க்கலாச்சாரம்!!! ஹிஹிஹிஹி
பதிவைப் போடுங்கள்.
நீக்குஇந்த லிங்கை யாருக்கும் அனுப்பிடாதீங்க...
தமிழ்நாட்டில், யார் யார் தமிழர் என்பதிலேயே நிறைய குழப்பம். தாய்மொழி தமிழ் என்று தமிழ் பேசும் பூர்வீகக் குடிகளா? மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட, ஆனால் இங்கேயே தமிழர்களோடு தமிழராய் நிரந்தரம் ஆகி விட்ட அவர்களா? வந்தாரை வரவேற்கும் தமிழ்நாட்டில், தமிழன் என்ற உணர்வைவிட, நான் இன்ன ஜாதிக்காரன் என்று சொல்லிக் கொள்பவர்களே அதிகம்.
பதிலளிநீக்குநண்பர் திரு. தமிழ் இளங்கோ அவர்களுக்கு மன்னிக்கவும் தங்களது மற்றொரு கருத்து தவறுதலாக டெலிட் ஆகி விட்டது.
நீக்குமறுபடியும் அந்த கருத்துரையை ந்க்கு தருகிறேன்.
நீக்கு// சினிமாவில் ஸ்ரீகிருஷ்ணர் வேடம் போட்ட என்.டி.ஆர் காருவையே கிருஷ்ணனாக நினைத்து அவரைப் பார்க்க சென்னை வந்தவர்கள் ஆந்திர ரசிகர்கள். நடிகர் கிருஷ்ணாவை கன்னடராக நினைத்து ( இவரது பூர்வீகம் நம்ம திருச்சி என்று எம்.ஜி.ஆர் சொல்லி இருக்கிறார்) தமிழர்களை தாக்கியவர்கள் கன்னட ரசிகர்கள். இந்த ரசிகர்கர்கள் ரசித்த படங்களுக்கு எல்லாம், ஆரம்பகால செட்டிங் சென்னையில் போட்டவர்கள் தமிழர்கள். அப்புறம் தமிழ் ரசிகர்கள் வேறு எப்படி இருப்பார்கள். //
வருக நண்பரே விரிவான விளக்கம் தந்தீர்கள்.
நீக்குஉண்மையில் அசல் தமிழன் யாரென்பது குழப்பமாகி விட்டது.
ஒரு காலத்தில் என்.டி.ஆர். திரையில் வந்தவுடன் தீபம் காட்டி வணங்கிய அரியவகை அறியாமைகள் தமிழ்நாட்டில் இருந்தார்கள்..
இந்த கலைக்கடவுள்தான் இளவயது பெண்ணை திருமணம் செய்தால் ஆட்சியை பிடிக்கலாம் என்ற சோசியரின் பேச்சை நம்பி தேவிகாவின் மகள் கரகாட்டம் கனகாவை நள்ளிரவில் இரகசிய மணம் முடித்து கன்னி கழித்த மனிதக்கடவுள்.
வேண்டாம் நண்பரே நம் நாட்டான் இன்னும் விழிக்காமல் இருக்கிறான் இவனை எழுப்ப தண்ணீர் சரியாகாது ஆசிட் தெளிக்க வேண்டும்.
சினிமா மட்டுமே வாழ்வியல்....
பதிலளிநீக்குநடிகர்கள் மட்டுமே ஆதர்ச நாயகர்கள்...
என்ற எண்ணங்களை நமது ஊடகங்கள் அள்ளி தெளித்து...
இன்றைய இளைய தலைமுறையின் எண்ணங்களில் அவைகள் வேர்பிடித்து விட்டன...
முதலில் அந்த தலைகளை களைய வேண்டும்...
இங்கு ஊடகங்கள் தனது நிலைப்பாட்டினை மாற்றினால் தான்....அனைத்தும் சிறிதாவது மாறும்..
>>> இந்த ஊடகங்கள் தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டால்!... <<<
நீக்குஅவர்களது கல்லாப் பெட்டி காய்ந்து விடும்..
எனவே அதெல்லாம் நடவாது..
அன்றைக்கு எம்ஜியாரும் சிவாஜியும் சிறு வயது பெண்களுடன் டூயட் பாடிய போது கடுப்படித்தன - ஊடகங்கள்.. அந்த ஊடகங்களின் வம்சாவளிகள் தான் இன்றைய கிழடுகளின் டூயட்களுக்கு சிறப்பு மலர் வெளியிட்டு கலை விமர்சனங்களை நல்குகின்றன...
ஊடகங்கள் எல்லாம் அவர்களுக்காகவே..
நமக்காக அல்ல!..
சகோ. அனுராதா ப்ரேம்குமார் அவர்களுக்கு அன்பின் ஜி திரு.துரரை செல்வராஜூ அவர்கள் அழகான விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள்.
நீக்குஅன்பின் ஜி தங்களது மீள் வருகைக்கு நன்றி
நீக்கு---அவர்களது கல்லாப் பெட்டி காய்ந்து விடும்.----...
நீக்குநீங்கள் சொல்வது சரியே...
இது எல்லாம் புரிந்தாலும்...ஆதங்கம் குறைவது இல்லையே ஐயா ..என்ன செய்வது...
வருக சகோ ஆதங்கப்பட்டு என்ன செய்ய ?
நீக்குஇன்றைக்கு தமிழக குடும்பங்களை கைக்குள் அடக்கி ஆள்வது பிக்பாஸ் இதை மக்கள் புறக்கணிப்பார்களா ?
01-கில்லர்ஜி, உங்கள் நண்பன் எனக்கு நண்பன் என்பதைப்போல, உங்கள் அபிமான கடவுள், எனக்கும் அபிமான கடவுள் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது?
பதிலளிநீக்கு02-தன் நேசத்துக்குரியவர்கள் இறந்துவிட்டால், தலையை மழிப்பது (அதாவது தன் அழகை இழப்பது) பெரும்பாலானவர்களின் வழக்கம். நேசத்துக்குரிய தலைவி இறந்ததால் சோகம் பொறுக்கமுடியாமல் அவர்கள் இறக்கிறார்கள். ஆனால், அந்த முடிவு எடுப்பதற்குமுன், தன்னை நம்பியிருக்கும் குடும்பத்தைப் பற்றி அவர்கள் சிந்தித்திருக்கலாம். (மதுவிலக்குக்காக சமீபத்தில் இறந்த சசிபெருமாளும் இவ்வகைதானே)
03-நியாயம்தான். வடிவுக்கரசி அந்தப் படத்துக்குப் பிறகு மிகவும் கஷ்டப்பட்டார். இதுவும் இதற்கு அடுத்ததாகச் சொல்லியிருக்கும் செய்திகளும் உண்மையே. ரசிகர்கள் அவர்களது வாழ்க்கையை இந்த மாதிரி வேண்டாத விஷயத்தில் தொலைக்கிறார்கள். அவனவன் வேலை பார்த்தால்தான் அவனவன் வீட்டில் கஞ்சி என்பதை எப்போதுதான் புரிந்துகொள்வார்களோ.
ஓ.. இப்படியும் ஒரு வழி இருக்கிறதா ?
நீக்குநேசத்துக்குறியவன் ரசிகன் மட்டும்தான் நண்பரே நடிகன் ரசிகனிடம் இல்லையே...
வடிவுக்கரசி உயிருக்கு பயந்து பலகாலம் வீட்டை விட்டு வெளியேறவில்லை.
தன் உழைப்பே தன்னை உயர்த்தும் என்பதை அறியாதவர்கள் நண்பரே.
தமிழ் சினிமாவும் நாமும் செய்திகள் வாசித்தது கில்லர்ஜி
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா.. என்னங்க ஐயா இப்படி நக்கலடிக்கிறீங்க...
நீக்குஉங்களின், ஆற்றாமையை வெளிப்படுத்திய விதம் நன்று. ஆனாலும்.....
பதிலளிநீக்குஅழிந்துகொண்டிருக்கும் ஒரு இனத்துக்காகக் [கில்லர்ஜி] இத்தனை மெனக்கெட் வேண்டாமே.
முற்றிலுமாக நம்பிக்கை இழக்ககூடாது நண்பரே நமக்காக இல்லாவிடினும் நமது சந்ததிகளுக்காக... முயல்வோம்.
நீக்குஎன்றைக்கு நாம் திரைப்படத்தை திரைப்படமாக பார்க்கிறோமோ அன்றுதான் தமிழ் நாட்டிற்கு விமோசனம், அதுவரை இது போன்ற அவலங்களை பார்த்து மனம் வெதும்ப வேண்டியதுதான்!
பதிலளிநீக்குவருக நண்பரே உண்மையை அழகாக சொன்னீர்கள் நன்றி.
நீக்குதொண்டர்கள் சிந்திக்காமல் இருப்பது அரசியல்வாதிக்கு நல்லது.
பதிலளிநீக்குரசிகன் கண்மூடிதனமாக தன் மேல் பாசம் வைப்பது நடிகருக்கு நல்லது.
இப்படிதான் கால காலமாய் நடக்கிறது.
மிகச்சரியான வார்த்தை சகோ.
நீக்குகண்டிப்பாக பெருமைப் பட முடியாது நண்பரே....எவ்வளவு சொல்லியும் திருந்த மறுக்கும் மாமண்டுகள் நிறைந்த தமிழ்நாடு நண்பரே....
பதிலளிநீக்குஎன்ன செய்வது இழுத்துச் செல்வோம் நண்பரே
நீக்குஉங்களின் ஆற்றாமையே எங்களுடையதும். இந்திராகாந்தி சுட்டுக்கொள்ளப்பட்டபோது அல்ல. சுட்டுக்கொல்லப்பட்டபோது.
பதிலளிநீக்குமுனைவரின் வருகைக்கு நன்றி.
நீக்குதாங்கள் சொன்ன பிறகே பார்த்தேன் மாற்றி விட்டேன் தகவலுக்கு நன்றி.
வேதனை தான் பட வேண்டும் ஜி...
பதிலளிநீக்குஉண்மைதான் வருகைக்கு நன்றி ஜி
நீக்குஎத்தனை பிரச்சினை இருந்தாலும் சினிமா மோகம் குறையாது அண்ணா..
பதிலளிநீக்குகுறைய வேண்டும், நம்மைப் போன்றோர் எழுதியாவது குறைக்க வேண்டும்.
நீக்குதமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா ! என்று உணர்வுபூர்வமாகக் கூறிச் சென்றான் ஒரு கவிஞன். இன்றைய தமிழன் உண்மையில் தமிழன் என்றால் அப்படிச் சொன்னவனையல்லவா தன் ஆதர்ஷமாக, வழிகாட்டியாகக் கொண்டு வாழவேண்டும்?
பதிலளிநீக்குஅதனை எழுதியவன் எவன், அவனது வாழ்க்கை என்ன, தன் தேசத்தைப்பற்றி அவன் கண்ட கனவென்ன என்றெல்லாம் ஏதாவது தெரியுமா இவனுக்கு? தெரிந்துகொள்ள அக்கறையாவது, ஆசையாவது உண்டா?
வருக நண்பரே இவன் என்ன வானத்திலிருந்து குதித்து வந்தவனா..... எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே...
நீக்குஇவனுக்கு ஆயுதம் தமிழன், ஈழம்.
பத்திரிக்கையை புரட்டினால் நடிகருக்கு 60 அடி உயர கட்டவுட் கட்டும்போது கீழே விழுந்து ரசிகர் பரிதாப மரணம் கட்டவுட்டிற்கு பாலாபிஷேகம் ரோட்டில் ஓடிய பாலால் மோட்டார் சைக்கிள்கள் வழுக்கி விழுந்து சாலைகளில் அபகடம் தலைவன் படம் வெளியிடாததால் நடுரோட்டில் ரசிகர் தீக்குளிப்பு இப்படிப்பட்ட செய்தி இந்த அறியாமைகள் சமூகத்தால் பெருமைப்பட முடியுமா ?
பதிலளிநீக்குரொம்பவும் வேதனைக்குரிய வார்த்தை தொகுப்பு நண்பரே...
வருக நண்பரே உண்மை நிலவரம் இதுதானே வருகைக்கு நன்றி
நீக்குசினிமா மோகத்தை சீராக பதிவிட்டமைக்கு நன்றி த.ம. வாக்குடன்
பதிலளிநீக்குவருக நண்பரே வருகைக்கு நன்றி
நீக்குநான் புதியவனாக உள்ளே வருகிறேன், மிக சாதரணமானவன். கில்லர்ஜியின் எழுத்துகளை அவ்வபோது படித்துவருகிறேன். 'சொல் தமிழா' அருமையான தொகுப்பு. என் மனவானில் வட்டமடித்து கொண்டிருந்த எண்ணங்கள் கில்லர்ஜியின் வார்த்தைகளாக வந்து விழுந்ததை படித்து ஆனந்தம் அடைந்தேன். இது போன்ற பதிவுகளை whatsapp, fb, twiter போன்ற சமுக வலைத்தளங்களிலும் பதிவிடுகிறீர்களா? அப்படி பதிவிட்டால் நன்றல்லவா! பலரும் படிப்பார்கள். சிலராவது திருந்துவார்கள் என்று நினைக்கிறேன்,
பதிலளிநீக்குதிரு. விக்டர் விஜயகுமார் அவர்களின் முதல் கருத்துரைக்கு நன்றி சந்தோஷம் தாங்கள் சொல்வதை ஆலோசிக்கிறேன் நண்பரே
நீக்குபகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குதமிழ் செய்திகள்