இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2017

எல்லாம் மண்ணாச்சு...


எல்லோருமே பழைய பாடலை காப்பியடித்து பாடல் எழுதுகிறார்கள்... அதுவும் சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி அதே இசையை புதுமெட்டு எனச்சொல்லி ஏமாளிகள் இருக்கும்வரை நமக்கு ஏறுமுகம் என்ற தைரியம் எழுதுகிறார்கள் நான் அவசரமாக உகாண்டாவுக்கு புறப்பட்டு கொண்டிருந்தேன் எமது இனிய நண்பர் தயாரிப்பாளர் திரு.சாம்பசிவம் தன்னோட படத்துக்கு நீங்க ஒரு காதல் தோல்வி பாடல் எழுதணும்னு சொல்லி நிறுத்திட்டாரு வேறவழி  போற வழியில... காரிலேயே எனக்கு பிடித்த பாடலான நான் உன்னை நினைச்சேன் பாடலை அப்படியே மாற்றி எழுதி கொடுத்த பிறகுதான் விமான நிலையத்துக்குள் விட்டார் இதோ பாடலை S.P.பாலசுப்ரமணியம் வாணி ஜெயராம் பாடிய மெட்டில் பாடவும்.


1980 - படம்  
கண்ணில் தெரியும் கதைகள்

இத்திரைப்படத்திற்கு ஐந்து இசையமைப்பாளர்கள்
திரு.கே.வி.மகாதேவன், திரு.ஜி.கே.வெங்கடேஷ், திரு.அகத்தியர், திரு.சங்கர்-கணேஷ், திரு.இளையராஜா
இணைந்து இசையமைத்தார்கள் மேலும் ரீ-ரிக்கார்டிங் இளையராஜா என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆண்
நான் உன்னை நினைச்சேன்...
பெண்
நான் அவரை நினைச்சேன்...

ஆண்
உன்னாலே மனம் ரெண்டாச்சு...
பெண்
உன்னாலே எல்லாம் மண்ணாச்சு...

ஆண்
அவன் நம்மை பிரிச்சுப்புட்டான்...
பெண்
நீ கதையை திறுச்சுபுட்டே...

ஆண்
உன் கோபத்தில்கூட கன்னம் செவந்திடுச்சு...
பெண்
என் அறையில்கூட உன்கன்னம் செவந்திடுமே...

ஆண்
அவன் கொஞ்சம் விட்டு கொடுத்தால்...
பெண்
என் நெஞ்சம் பட்டுபோய் விடுமே...

ஆண்
நீ பட்டுப் போனால்... நான் செத்து விடுவேன்...
பெண்
நீ செத்து தொலைஞ்சா... நான் மொட்டு விடுவேன்...

ஆண்
யேண்டியம்மா என்னை உனக்கு பிடிக்கலையா...
பெண்
ஒம்மூஞ்சை நீ கண்ணாடியில் பார்க்க வில்லையா...

ஆண்
பார்த்தா பிடிக்காது... ஆனா பார்க்க பார்க்க பிடிக்குமே...
பெண்
ஒம் பஞ்ச் டலயாக்குல நான் தீயவெக்கே...

ஆண்
நீ தீயவெச்சா... எம் மனசு நோகுமடி...
பெண்
நீ இப்படி பேசினா நான் கொடுப்பேன் செருப்படி...

ஆண்
நான் ஓடிவந்து போடப்போறேன் பூமாலை...
பெண்
நீ நடந்து வந்து போட்டாலும் அது பிணமாலை...

ஆண்
நான் உன்னை நினைச்சேன்...
பெண்
நான் அவரை நினைச்சேன்...

ஆண்
உன்னாலே மனம் ரெண்டாச்சு...
பெண்
உன்னாலே எல்லாம் மண்ணாச்சு...

காணொளி

70 கருத்துகள்:

  1. ஹா... ஹா...

    பாட்டிற்கு போட்டியா...?

    ரசித்தேன் ஜி...

    (சற்று நேரம் முன்பு உங்களிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன்...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி முடிந்தவரை பாட்டு எழுதுவோம்.
      பேசினால் போகிறது.....

      நீக்கு
    2. பேசிட்டீங்களோ?:) ஹா ஹா ஹா ச்ச்ச்சும்மா ஒரு ஆர்வக்கோளாறில் கேட்டேன்ன்:)..

      நீக்கு
    3. பேசிட்டோம் இந்த பாடலை ஹிந்தியில் ரீமேக் செய்யப்போறோம்.

      நீக்கு
    4. ஓ வாழ்த்துக்கள்.... பாடுவதற்கு ஆள் தேவை எனில் ஆஷா போஸ்லே அதிராவைக் கூப்பிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)..

      நீக்கு
    5. தயாரிப்பாளர் திரு. சாம்பசிவம் அவர்களை தொடர்பு கொள்க...
      தொல்லைபேசி எண்: 00987654321

      நீக்கு
    6. ஹா ஹா ஹா :)நேக்கு எந்த தொல்லை:) பேசி எண்ணும் வாணாம்:).. ஒரு ரெக்கோடர் அனுப்பினால் பிளஸ் செக்:).. பாடி அனுப்பப்படும்:)

      நீக்கு
    7. உங்களுக்கு செக்கு இழுக்கத் தெரியுமா ?

      நீக்கு
    8. ஜி ஹையையோ!!! இந்த ஆஷா போன்ஸ்லேய அந்த ஆஷா போன்ஸ்லேனு நினைச்சு பாட வைச்சுராதீங்க....ஏற்கனவே எல்லாரும் ஓடிப் போயுடுவாங்கனு அவங்க செக்ரட்டரி சொல்லிருக்காங்க...எதுக்கும் செக்கரட்டரி வந்ததும் கேட்டுப்புட்டு சான்ஸ் கொடுங்க ஓகேயா!!?? இல்லைனா படம் கவுந்துரப் போகுது!! ஹிஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    9. வாங்க இதை முடிவு செய்வது திரு. சாம்பசிவம் அவர்கள்.

      நீக்கு
    10. கர்ர்ர்ர்ர்:)... கீதாக்கு என் குரலில் பொறாமை:).. செக்கரட்டறி வந்தா ஐஸ் கிறீம் தீத்தியே பாடாமல் பண்ணிடுவா..:)...
      மேன்மைமிகு திருவாளர் சாம்பசிவம் ஐயா அவர்களை விரைவில் அடுத்த போஸ்ட்டில் எதிர்பார்க்கிறேன்:).

      நீக்கு
  2. 'சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி, அதே இசையை புதுமெட்டு' - இதற்குக் காரணம் இசையமைப்பாளர்களோ அல்லது பாடலாசிரியர்களோ இல்லை. தயாரிப்பாளர்கள்தான்.

    இசையமைப்பாளர்களுக்கோ அல்லது பாடலாசிரியர்களுக்கோ மக்கள் வேலை கொடுப்பதில்லை. அவர்கள் புழங்குவது திறமைசாலிகளின் மத்தியில். அதனால் 'காப்பி'யடித்து அவர்களால் ஒரு புது வாய்ப்பையும் பெறமுடியாது. ஆனால் தயாரிப்பாளர்கள், பெரும்பாலான சமயம், 'எனக்கு இந்த ஹிந்திப் பாடல்மாதிரி, அல்லது இந்தப் படத்தில் ஹிட்டான பாடலையே வேறுவிதமாக' செய்துதரவேண்டும் என்று அனத்துவார்கள். பலசமயம் சில இசையமைப்பாளர்கள், 'முடியாது' என்று நிர்தாட்சண்யமாகக் கூறினாலும், சில சமயம் 'சரி வச்சுக்கோ' என்று செய்துகொடுத்துவிடுவார்கள். 'படக் கதையைப் பொருத்தவரை, நிறைய தடவை, இந்தக் காப்பி அடிப்பது நிகழ்ந்துள்ளது.

    உங்க பாடல்ல, இவ்வளவு முரண்டு பிடிக்கும் பெண்ணோடு பாடலைப் பாடி ஏன் நேரத்தை வீணடிக்கிறார் அந்த 'ஆண்'? த ம. ஓவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மை சினிமாத்துறையின் நிலைப்பாட்டை அழகாக விளக்கினீர்கள்

      கதைப்படி அந்த ஆண் காதல்பித்து பிடித்த மூதேவி என்று தயாரிப்பாளர் சொன்னதால் இவ்வளவு கேவலமாக எழுத வேண்டிய நிலை வந்து விட்டது நண்பரே... இருந்தாலும் இவங்கே இப்படியெல்லாம் அலையக்கூடாது...

      நீக்கு
  3. பாடலை ரசித்தேன்.

    சாம்பசிவம், பாட்டுக்குப் பணம் கொடுத்தாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஸ்விஸ் அக்கவுண்ட நம்பர் கொடுத்தேன் மோடி கைக்கு போய் விடக்கூடாது என்பதால் இன்னும் பணம் அனுப்பவில்லை என்று நண்பர் சாம்பசிவம் சொன்னார்,

      நீக்கு
  4. உங்களை மாதிரி உன்னிப்பாக கவனிக்கும் மனிதர்கள் இருக்கும்போதேவா .........?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இருக்கிறதாலதான் கொஞ்சம் கவனமாக பாட்டு எழுதுறாங்கே.... எனது மறைவுக்குப் பிறகு பாருங்க காது கொடுத்து கேட்க முடியாது.

      நீக்கு
  5. பாட்டுக்கு பாட்டு நன்றாக எழுதி விட்டீர்கள்.
    காணொளி கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  6. திரைப்படப் பாடல் எழுத இது ஒத்திகையா? இரசித்தேன்! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கன்னி முயற்சி, ஒத்திகை என்றும் சொல்லலாம் வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. "எனக்குப் பிடிச்ச பாடலான நான் உன்னை நினைச்சேன்" இதுக்கு அப்புறம் வர வார்த்தைகள் இடம் மாறிவந்துள்ளன, சரி செய்யவும், நன்றி. :) பாடலில் கொன்னுட்டீங்க போங்க! :P

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எனக்கு முதலில் சந்தேகம் வந்தது காரணம் செல்லில் மட்டும் குழறுபடி கண்டேன்

      பிறகு யாரும் குறை சொல்லாததால் சரிதான் போல என்று விட்டு விட்டேன் இப்பொழுது சரியாகி விட்டது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  8. ஹா ஹா ஹா இது எப்போ வந்துதூஊஊஊ நான் மண்ணாப்போச்சை இப்போதானே பார்க்கிறேன்:)..

    உகண்டா போகும் வேகத்தில எழுதினமையால் மிக அருமையாக எழுதியிருக்கிறீங்க... உங்களுக்கு வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசரத்தில் எழுதியதே உங்களுக்கு பிடிச்சு இருக்கே நிதானமா அடுத்து ஒன்னு எழுதுறேன்..

      நீக்கு
  9. பாட்டு மட்டுமோ? இப்போ உணவில் இருந்து.. உடையில் இருந்து அனைத்தும் பழசுக்குத்தானே திரும்பிக்கொண்டிருக்கு... எல்லாமே ஒரு உணவுச்சங்கிலி போன்றதே... பழசு ஸ்டைல் இல்லை எனத் தூக்கிப் போட்டதெல்லாம் தூசு தட்டப்பட்டு மேடைக்கு வருது...

    முந்தி நீண்டுக்கைச் சட்டை பாசன்:).. பின்பு கை இல்லாததுதான் பாசன்.. கை இருப்பின் பட்டிக்காடு என்பது போல பார்த்தார்கள்.. இப்போ பழையபடி நீட்டுக்கை பாசனுக்கு வந்திருக்கு...

    மண்சட்டி எனில் கஸ்டப்பட்டோர் தான் சமைப்பது என ஆகி.. இப்போ மேசைக்கு மண்சட்டி, டிஸ் எல்லாம் பாஷனாகி வந்திருக்கு...

    இப்படி நிறையவே சொல்லலாம்.. இப்படி பழசு தான் திரும்படியும் மெருகேறிக்கொண்டிருக்கு...:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் பழமை மீண்டுதான் வருகிறது.

      நீக்கு
  10. என்ன ஒரு அழகிய பாட்டு.. எப்போ காதில் கேட்டாலும் மனதை என்னமோ பண்ணும்.. காரணமே இல்லாமல்... அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று...

    படப்பெயர் இப்போதான் பார்க்கிறேன்ன், கேள்விப்படாத பெயர்.... விரைவில் பார்த்திடுறேன்ன்ன் எங்கிட்டயேவா?:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நான் அடிக்கடி இந்த பாடலை கேட்பேன்

      நீக்கு
  11. சிறந்த சிந்திக்க வைக்கும் எண்ணங்கள்


    தாங்கள் https://seebooks4u.blogspot.com/2017/08/blog-post.html இல் வெளியிட்டுள்ள மின்நூல்களை 10,000,000 வாசகர்களுக்குப் பகிர்ந்து உதவுங்கள். என்னங்க... இந்த உதவியைத் தானே கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. நம்ம யாரு பிரிச்சா அந்த 'நெட்டு' பிரிச்சா.!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நலமா ?
      பதிவை போடுங்கள் நண்பா...

      நீக்கு
  13. அகத்தியர் என்று இசை அமைப்பாளரா ,இதுவரை கேள்வி பட்டதே இல்லையே ஜி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி பழையவர் நிறைய படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

      நீக்கு
  14. தெரியாத செய்தி. அகத்தியர்னு ஒரு இசையமைப்பாளர் இருந்தாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இருந்தார் மேலே புகைப்படத்தில் இருப்பதை படிக்கவும்.

      அந்த படத்தை யூட்யூப்பில் ஓடவிட்டு டைட்டிலை நிறுத்தி வைத்து படம் எடுத்தேன் ஆகவே தங்களுக்கு ஐயம் வேண்டாம்.

      பதிவுக்காக நான் சிரத்தை எடுக்கும் விடயங்களில் இதுவும் ஒன்று.

      நீக்கு
    2. ஏன்னா சின்சியரிடி ஏன்னா சின்சியரிடி

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி நண்பரே...
      இதுல உள்குத்து இல்லையே.... ஹி.. ஹி.. ஹி...

      நீக்கு
  15. நல்ல பாடல். பாட்டுக்குப் பாட்டாக உங்கள் பாட்டும் அருமை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி மிக்க நன்றி தங்களின் வருகைக்கு.

      நீக்கு
  16. அடுத்த புதிய முயற்சி போலுள்ளது, பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு
  17. அருமையான பாடல்! மிகவும் பிடித்த பாடல்! ஹாஹாஹா..அதை உருமாற்றி உகாண்டாவுக்குப் போகையில....சரி ஏதோ கொஞ்சம் குழப்பம் உள்ளது போல இருக்கே!! வரிகளில் இல்லையோ...சரி விடுங்க...இன்னும் கொஞ்ச நாள் ல கொடுவா மீசை பாடலாசிரியர் என்று அடை மொழியுடன் திரையுலகில் வலம் வரப் போறீங்கனு சொல்லுங்க!!! அதுக்கும் இப்பவே வாழ்த்துகள் சொல்லிடறோம்!!!

    அகத்தியர் நு ஒரு இசையமைப்பாளர் இருந்தார் தெரியும் ஆனால் அவரைப் பற்றிய குறிப்புகள் யாரேனும் கொடுத்தால் நல்லது. அதிகம் தெரியவில்லை. அவரது பாடல்கள் உட்பட...

    நல்லாருக்கு ஜி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது கணினியில் மிகச்சரியாக எனது எண்ணப்படியே வந்து இருக்கிறது.... ஆகவே என்ன செய்வது என்று தெரியவில்லை.

      அகத்தியர் எனக்கு முன்பே தெரியும் ஆனால் பழக்கம் கிடையாது.

      நீக்கு
  18. ரசித்தேன். காணொளியில் இந்த வரிகள் உபயோகப்படுத்தப் பட்டிருக்கும் சரியாக வருகிறதா என்று பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒரிஜினல் பாட்டு! வரிகளை படித்து ரசித்தேன். ஐந்து இசையமைப்பாளர்கள் என்றாலும் இந்தப் பாடலுக்கு இசை சங்கர் கணேஷ். நானொரு பொன்னோவியம் கண்டேன் எதிரே பாடலுக்கு இசை இளையராஜா. ஏ எல் ராகவன் தயாரித்த திரைப்படம் என்று நினைவு. அவரும் ஒரு இசை அமைப்பாளராக இருந்ததாகவும் நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம் ஜி தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி

      நீக்கு
  19. நான் குறிப்பிட்ட தவறு அப்படியே இருக்கு! கருத்துச் சொல்லப் பல முறை முயன்றும் முடியவில்லை. இப்போது மீண்டும் முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எனது கணினியில் மிகச்சரியாக எனது எண்ணப்படியே வந்து இருக்கிறது....
      ஆகவே என்ன செய்வது என்று தெரியவில்லை

      நீக்கு
  20. நண்பரின் உகண்டா பயணம் வெற்றி அடைய வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  21. இரசித்தேன் த ம 16

    பதிலளிநீக்கு
  22. நான் உங்களை நெனச்சு பதிவு படிச்சேன் தங்கமே ஞானத்தங்கமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நான் தங்கமா ? வருகைக்கு நன்றி

      நீக்கு
  23. பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  24. நமக்கு கோல்ட் ஆகாதவரை ஓல்ட் இஸ்ட் கோல்ட். சூப்பர் சார். நீங்கள் எழுதிக்கொண்டே இருங்க. நாங்க வரும் போது படிச்சிட்டு போவோம்.

    பதிலளிநீக்கு
  25. பாட்டுக்கு பாட்டு போட்டி அருமை கலக்கீட்டீங்க

    பதிலளிநீக்கு