இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஆகஸ்ட் 25, 2017

இது நியாயமா ?


கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று கல்லிலான கடவுளுக்கு பாலாபிஷேகம் செய்யும் பலரும் ஏழையின் சிரிப்பிலும் இருப்பார் என்பதை நம்பி அவர்களுக்கு தர்மம் கொடுக்காமல் உதாசீனப்படுத்தி பேசுகின்றார்களே... இது நியாயமா ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *

தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்தவர்கள் என்று அவர்கள் வீட்டில் தண்ணீர் வாங்கி அருந்துவதைக்கூட நாம் ஒதுக்கி வைப்பவர்கள் அதேநேரம் உயர்ந்த ஜாதியில் பிறந்தவர்கள் தாழ்ந்த ஜாதியில் பிறந்த மருத்துவர் தன்னை பரிசோதிக்கும் பொழுது விட்டுக் கொடுக்கின்றார்களே... இது நியாயமா ?
* * * * * * * * * * 02 * * * * * * * * * *

தனது இளவயது மனைவி இறந்து விட்டதால் அவள் உடுத்தியிருந்த உடைகளை சொந்த பந்தங்களுக்கு கொடுத்தால் வாங்க மறுப்பவர்கள் அவள் போட்டிருந்த தங்க நகைகளை மட்டும் மறுக்காமல் வாங்கி கொள்கிகின்றார்களே... இது நியாயமா ?
* * * * * * * * * * 03 * * * * * * * * * *

தான் தமிழ்நாட்டை ஆளும் மந்திரிகளில் ஒருவராக இருந்தும் பொது இடத்தில் வயதின் தன்மையைக்கூட மறந்து ஊடகங்கள் புகைப்படம் எடுப்பது தெரிந்தும் காலில் விழுபவர்கள் தனது தலைமையில் நடக்கும் விழாக்களுக்கு வரும் பொழுது மேடையில் பந்தாவாக உட்கார்ந்து பேசுகின்றார்களே... இது நியாயமா ?
* * * * * * * * * * 04 * * * * * * * * * *

கணவனே கண்கண்ட தெய்வம் என்றும் கணவர்களின் நல்வாழ்வுக்கு வேண்டி என்ற பெயரில் பெண்கள் ஆண்களை ஒதுக்கி ஏமாற வைத்து செவ்வாய்க் கொழுக்கட்டை அவித்து தனியாக அவர்கள் மட்டும் சாப்பிடுகின்றார்களே... இது நியாயமா ?
* * * * * * * * * * 05 * * * * * * * * * *

தமிழ் நாட்டில் பெரும்பாலான அரசியல்வாதிகள் தமிழைக் கையில் எடுத்துக்கொண்டு அரசியல் நடத்தும் அனைவருமே வேற்று மொழிக்காரர்களாக இருக்கின்றார்களே இது தெரிந்திருந்தும் உண்மையான தமிழர்கள் அவர்களுக்காக வாழ்க கோஷம் போடுவதோடு உயிரையும் கொடுக்கின்றார்களே... இது நியாயமா ?
* * * * * * * * * * 06 * * * * * * * * * *

தெருவுக்குள் வறுமையின் காரணமாய் தனது குழந்தைகளை காப்பாற்ற தன்னைக் கொடுத்தவளை விபச்சாரி என்று ஒதுக்கி வைக்கும் சமூகம் திரைப்படத்தில் நடித்தால் மட்டும் கோவில் கட்டுவதோடு காலில் விழுந்து வணங்குகின்றார்களே இது நியாயமா ?
* * * * * * * * * * 07 * * * * * * * * * *

தமிழ் நாட்டில் பல தாய்மார்கள் தனது மகனை தமிழ் பேசும் பக்கத்தில் இருக்கும் சென்னைக்கு தனியாக அனுப்புவதற்கு எம்புள்ளை அப்பாவி என்று மறுப்பவர்கள் வேற்று மொழி, வேற்று மதம், வேற்று உணவு உள்ள வெகுதூரத்தில் இருக்கும் துபாய்க்கு மட்டும் தைரியமாக அனுப்புகின்றார்களே... இது நியாயமா ?
* * * * * * * * * * 08 * * * * * * * * * *

தமிழ் மொழிக்காக எனது உயிரையும் கொடுப்பேன் என்று சொன்ன அரசியல் தலைவர்கள் பலரும் ஒரு முறையாவது தூக்குப்போட்டு காண்பிக்காமல் மீண்டும், மீண்டும் அதே வார்த்தையை சொல்லி பாமர மக்களை ஏமாற்றுகின்றார்களே... இது நியாயமா ?
* * * * * * * * * * 09 * * * * * * * * * *

நமது கழிவுகளை உண்பதால் பன்றிகளை ஈனப்பிறவிகளாக நினைத்து ஒதுக்குகின்றோம் அதேநேரம் தேனீக்கள் தனது கழிவுகளை ஒதுக்கும் பொழுது அதை தேன் என்றும், அமிர்தம் என்றும் நினைத்து வழித்து நக்குகின்றோமே... இது நியாயமா ?
* * * * * * * * * * 10 * * * * * * * * * *

Chivas Regal சிவசம்போ-
…. ? ? ?
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் – கில்லர்ஜி

புகைப்படங்கள் எதிர்வரும் 99 வருடங்களுக்கு ஓசி கொடுத்த சகோ திருமதி. ராஜி அவர்களுக்கு நன்றி

62 கருத்துகள்:

  1. நீங்க கேட்ட எல்லா கேள்விகளும் நியாயமானதுதான் ஆனால் ஒரே ஒரு சந்தேகம்
    இம்மாம்பெரிய விநாயகர் தம்மாத்துண்டு எலியார் கூட விளையாடறது நியாயமா ? அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சிறிய ரிமோட் பெரிய டிவியை தனது கண்ட்ரோலில் வைத்துக் கொள்வதில்லையா ?

      அதுபோல்தான் நண்பரே... தங்களுக்கும் வாழ்த்துகள்

      நீக்கு
    2. நச்-சுன்னு சொன்னீங்க ஜி...! இந்த விடைக்கு ஒரு LIKE !

      நீக்கு
    3. வருக நண்பரே நன்றி

      நீக்கு
    4. கில்லர்ஜி... எதிர்பாராத நச் என்ற பதில். பாராட்டுகள் உங்கள் quick and smart thinkingக்குள்.

      நீக்கு
    5. பாராட்டுகளுக்கு நன்றி நண்பரே

      நீக்கு
    6. அருமையான பதில் பாராட்டுக்கள் .

      நீக்கு
    7. மீள் வருகைக்கு நன்றி நண்பா.

      நீக்கு
  2. கேள்விகள் அருமை. சீரியஸ் கேள்விகளுக்கு நடுவே ஐந்தாவதாய் ஒரு சிரிப்புக் கேள்வியும்!​!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம் ஜி தனியாக கொழுக்கட்டை தின்பது தவறுதானே...

      நீக்கு
  3. ம்ஹிம்... எதுவுமே நியாயமா படலை ஜி...

    பதிலளிநீக்கு
  4. த ம ஓவர். எல்லாம் மிகவும் ரசித்தேன், கொழுக்கட்டை தவிர, அது மொத்த இடுகையையும் சீரியஸிலிருந்து திருப்பிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே V.நாயகருக்காக கொழுக்கட்டையை இழுத்தேன்.

      நீக்கு
  5. எல்லாக் கேள்விகளும் மிக மிக நியாயமானது....விபச்சாரிகள் பாவம் அதில் பெரும்பான்மை சிக்கித் கொண்டவர்களே அல்லாமல்...அவர்களாகச் செல்வதில்லை....

    கொழுக்கட்டை ..ஹாஹாஹாஹா அதானே.. என்ன நியாயம். .

    ரசித்தோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் நாட்டில் பிட்பாக்கெட்காரனுக்கு கிடைக்கும் உதை விஜய் மல்லையா போன்றவர்களுக்கு கிடைப்பதில்லையே அதைப்போல்தான் இதுவும்

      நீக்கு
  6. அந்தக் கொழுக்கட்டை உப்பிருக்காதாம். அதனால் தனியாக அவங்களே சாப்பிடட்டுமே! பரவாயில்லை. பிள்ளையார் வருவார்னு சொன்னதாலே ஆவலோடு ஓடோடி வந்தேன்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களுக்காக பிள்ளையாரை ஊஞ்சலாட விட்டேன்.

      நீக்கு
    2. ரொம்ப நன்றி! :)

      நீக்கு
  7. பிள்ளையாருக்கு ஹப்பி பேர்த்டே...

    அதென்ன செவ்வாய்க் கொழுக்கட்டை? கிளவிப்பட்டதே.. வெரி சோரி கேய்விப்பட்டதே.. சே..சே.. கேள்விப்பட்டதே இல்லயே...:).. தனியாச் சாப்பிடுவாங்களோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:).. செமிக்குமா?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் காலமாக செய்து சாப்பிட்டது செமிக்காமலா போச்சு.

      நீக்கு
  8. இருப்பினும் பிள்ளையாரை எலிக்குச் சமனா சீ சோ பண்ணவிட்டது டப்புத்தேன்ன்ன்ன்ன்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிள்ளையாரை தூக்கி கொண்டு பறக்கும் மூஞ்சிலாருக்கு சறுக்கு விளையாட்டில் தூக்குவது கடினமா ?

      நீக்கு
    2. ஏன் நியூ போஸ்ட் இன்னமும் வரவில்லை கில்லர்ஜி.. பல மணித்தியாலங்கள் தாமதமாகிவிட்டதே:)..

      நீக்கு
    3. வாங்க ஏன் கேக்குறீங்க..... "எல்லாம் மண்ணாச்சு..."

      நீக்கு
  9. நீங்க நியாயமா? என்று கேட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பவர்கள் நியாயமாகப் படவில்லை என்றே தோன்றுகிறது. ஒரு வாரம் சென்னைப் பயணம். பொறுத்து கொள்வீர் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சென்னை நலமுடன் சென்று வர வாழ்த்துகள்.

      நீக்கு
  10. எல்லா கேள்விகளும் நியாயம் தான் , உப்பில்லாமல் சாப்பிட பிடிக்காது என்று கொடுக்கவில்லை போலும், ஆச்சிகள் கதை சொல்வார்கள் ஒளவையார் அம்மன் விரதத்தின் போது . சிறுமியாக இருக்கும் போது கேட்பேன் அம்மாவிடம், அப்பா, தம்பி அண்ணனுக்கு எல்லாம் கொடுக்க கூடாது என்று.
    படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ விரிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி

      நீக்கு
  11. நகை ஆசை யாரை விட்டது?

    பதிலளிநீக்கு
  12. சேலை மட்டும் வேண்டாம் என்று சொல்லலாமா ?

    பதிலளிநீக்கு
  13. முதற் கடவுள் கொழுக்கட்டையில் இருப்பதால் நான் கொழுக்கட்டையை தின்றதேயில்லை என்று நிணைக்கிறேன் தலைவரே.........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே நீங்களே பிள்ளையார்தானே... இப்படி சொல்லலாமா ?

      நீக்கு
  14. நல்ல கேள்விகள்!

    த.ம. 12-ஆம் வாக்கு.

    பதிலளிநீக்கு
  15. நீங்க இன்னும் இந்தியனாய் தமிழனாய் மாறவில்லை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி உண்மையிலேயே நேர்மை தவறினால்தான் அப்படியாக முடியும் என்றால் நான் இப்படியே இருந்து விடுகிறேன்.

      நீக்கு
    2. நம்ம நாட்டுக்கு ஜனநாயகம் கூட சாபக் கேடுன்னுதான் சில நேரங்களில் தோன்றுகிறது :)

      நீக்கு
    3. ஆம் ஆகவேதான் நான் சொல்கிறேன் மன்னராட்சியே போதுமென்று.

      நீக்கு
  16. நியாயமான கேள்விகள். ஹ்ம்ம்.. திரைப்படத்தில் நடித்தால் விபச்சாரமா? என்ன இது? நியாயமில்லாத கேள்வியா இருக்குதே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பழைய காலங்களில் உள்ள நடிகைகள் கட்டிப்பிடிக்கும் காட்சிகள் இருந்தால் பெண்களை ஆண் வேடமிட்டு கட்டிப்பிடிக்க அனுமதித்தார்கள் ஆகவே இக்காட்சிகளை வெகுதூரத்தில் காண்பித்தார்கள்.

      அன்று கூத்தாடிகள் என்று சொல்லப்பட்டாலும், கற்பு விடயத்தில் பெரும்பாலும் கண்ணியமானவர்களாகவே இருந்தார்கள்.

      இன்று நட்சத்திரம் என்று அழைக்கப்பட்டாலும் முதல் படத்திலேயே அவளை சிதைத்து விடுகிறார்கள், இதில் திரைமறைவுக்கு பின்னால் உள்ளதை நான் சொல்லவே இல்லை.

      நம் கண் முன்னால் நடக்கும் காட்சிகளே இன்று ஒரு நடிகையைகூட உத்தமி என்று சொல்ல முடியாது காரணம் அவள் நடிக்க வந்து கற்பை இழக்கவில்லை.

      நடிப்பதற்காகவே கற்பை இழந்து வந்தவள் இதற்கு மேலும் வேண்டாமே...

      வருகைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  17. அநியாயமான கேள்விகளைத்தந்து நியாயமாகச் சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  18. நியாயமான கேள்விகள்தான் நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
  19. ஞாயங்கள் இங்கு அநியாயமாகவும் அநியாயங்கள்
    இங்கு ஞாயங்களாகவும் பிரதிபிம்பப்படுத்தப்படுகிறது/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் அழகிய கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  20. நல்ல கேள்விகள். அவசியமானவர்கள் காதில் விழ வேண்டுமே..?

    பதிலளிநீக்கு

  21. நீங்கள் கேட்ட கேள்விகள் எல்லாம் சரிதான். ஆனால் தேன் என்பது தேனீக்களின் கழிவு அல்ல என்கிறது அறிவியல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நானொரு நூலில் அது கழிவு என்ற விபரங்களை படித்தேன் அந்த அடிப்படையில் எழுதினேன் வருகைக்கு நன்றி

      நீக்கு
  22. அதென்ன 99 வருடத்துக்கு ?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 99 வருடங்கள்தான் அரசின் கணக்குப்படி செல்லும்.
      100 செல்லுபடி ஆகாது

      நீக்கு
  23. தூணிலும், துரும்பிலும் இருக்கும் கடவுள் கொஞ்சம் மனுசங்க மனசுலயும் இருக்கலாம். என்ன செய்ய?! நாம கொடுத்து வச்சது அவ்வளவ்தான்ண்ணே

    பதிலளிநீக்கு
  24. எல்லோருமே மனசாட்சியை கடவுளாக நினைத்து வாழ்ந்தால் குற்றங்கள் குறைந்து விடும்.

    பதிலளிநீக்கு
  25. அனைத்து கேள்விகளிலும் ஞாயம் மிளிர்கின்றது.
    கேள்வி என் மூன்று இதயத்தில் ......ஈட்டி பாய்ச்சுகிறது.

    ஐந்து கொஞ்சம் அசட்டு புன்னகைக்கு வழி சமைக்கின்றது.

    அருமை.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மூன்று சொந்த அனுபவம் நண்பரே
      வருகைக்கு நன்றி

      நீக்கு