இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், நவம்பர் 13, 2017

பசியின் கொடுமை


லகில் 936 Million மக்கள் உணவின்றி தவிக்கின்றனர் தினம் 20864 நபர்கள் உணவு கிடைக்காமல் இறக்கின்றார்கள் இந்நிலைக்கு இன்னும் இந்தியா வரவில்லை என்பதில் பெருமையும், இறைவனுக்கு நன்றியும் சொல்வோம் பசி என்றால் என்னவென்பது பலருக்கும் தெரிவதில்லை காரணமென்ன ? அவர்கள் வளர்ந்த விதம் அப்படி உதாரணம் தமிழக முன்னாள் முதல்வர் திரு. மு. கருணாநிதி அவர்களுக்கு பசியைப்பற்றி தெரியும் அதேநேரம் அவரது பேரன் திரு. உதயநிதி ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, திரைப்பட இயக்குனர் திரு. T. ராஜேந்தர் அவர்களுக்கு பசியின் கொடுமை தெரியும், அவரது மகன் சிலம்பரசனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை இந்நிலை நம்மில் பலரது குடும்பத்தினருக்கும் உண்டு

நமது குழந்தைகளை பசியின் அருமையை உணர்த்தி வளர்க்க வேண்டும் அப்பொழுதுதான் அவர்கள் பணத்தின் அருமையை, உழைப்பின் தன்மையை உணர்ந்து வளர்வதோடு பிறருக்கும் உதவும் மனப்பான்மையும் வளரும் அவர்களை நல்லவழியில் மட்டுமே பணத்தை செலவு செய்யவைக்கும் பெரும்பாலும் நம்மில் பலர் நமது பிள்ளை கஷ்டப்படக்கூடாது என்று நினைக்கின்றோம் அங்குதான் அவர்களது கேடுகாலம் தொடங்க ஆரம்பிக்கின்றது உதாரணம் ஒரு குறிப்பிட்ட டிகிரிவரை படிக்க வைக்கின்றோம் எப்படியோ பணத்தைக் கொடுத்து நமது திறமையால் ஒரு நல்ல வேலையை வாங்கி கொடுத்து விடுகிறோம் அவர்களது தொடக்க சம்பளமே 40,000/ ரூபாய் என்று வைத்துக் கொள்வோம் அவனுக்கு என்ன தெரியும் அவன் எப்படி ? சிக்கனமாக செலவு செய்ய பழகுவான் அவர்களுக்கு வாழ்வின் சூட்சுமமே விளங்காமல் வாழத்தொடங்கி விடுவார்கள்.

ஒரு மனிதன் அடிமட்ட வாழ்க்கையைத் தொடங்கி வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி சிறுகச் சிறுக முன்னேறி வாழ்வில் உயரத்தை தொடுகின்றார் தனது பிள்ளை கஷ்டப்படவே கூடாது என்று எல்லாமே பார்த்து பார்த்து செய்கின்றார் பிள்ளையோ பணத்தின் அருமை தெரியாமல் எல்லாவற்றையும் செலவு செய்கிறான் இவர் மனம் நொந்தே இறந்தும் விடுகின்றார் நாளை இவனுக்கு வாரிசு உருவாகி பிள்ளையைப் பெற்று தனது தந்தையின் நிலைக்கு கொண்டு வந்து விட்டு இவனது வாழ்க்கையையும் முடித்து விடுகின்றான் பிறகு பேரன் கஷ்டப்பட ஆரம்பிக்கின்றான் இப்படித்தான் சமூகத்தில் பலருடைய இல்லங்களிலும் சந்ததிகளின் வாழ்க்கை சுழன்று கொண்டு இருக்கிறது நான் லட்ச ரூபாயைக்கூட அவசியத்தோடு அலட்சியமாய் செலவு செய்திருக்கின்றேன் சமயங்களில் ஒரு ரூபாயை செலவு செய்ய மறுத்திருக்கின்றேன் காரணம் அவை அவசியமற்றவைகளாக இருக்கும் இதனால் பலரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்து இருக்கின்றார்கள், பேசி இருக்கின்றார்கள் இதனைப்பற்றி எமக்கு கவலையில்லை நான் உழைப்பின் தன்மையை அறிந்தவன் எனது வாழ்க்கையில் நான் முதல் சம்பளம் பெறத்தொடங்கியது வாரச்சம்பளம் ரூபாய் 2.50 ஆகவே எனக்கு பணத்தின் அருமை தெரியும் இப்பொழுதுதானே டீ குடித்தோம் மீண்டும் எதற்கு ? என்று தவிர்த்ததுண்டு இப்பொழுதுதானே தர்மம் செய்தோம் மீண்டும் எதற்கு ? என்று ஒருபோதும் நினைத்ததில்லை இதுவே எனது கொள்கை உழைப்பே உயர்வுக்கு உறுதுணை.

சிறுதுளி பெருவெள்ளம் உணவை மிச்சப்படுத்துவீர் குப்பையில் போடுவதை பிச்சை எடுப்போருக்காவது இடுவீர்

 காணொளி

50 கருத்துகள்:

  1. இன்று உங்கள் புளொக் , போஸ்ட் போட்ட சிறிது நேரத்திலிருந்தே முயற்சித்தேன் ஓபின் ஆகவே இல்லை, இப்போ மொபைலில்தான் திறந்திருக்கு...

    உண்மைதான் நாங்களும் உணவைக் கொட்டுவதில்லை, பிள்ளைகளுக்கும் அதையே சொல்லி வளர்க்கிறோம்..

    என்ன சொல்வது சிலருக்கு அதிகம் குழந்தைகள் , சிலருக்கு இல்லை, இப்படித்தான் உணவும் ... சிலருக்கு ஓவராக இருக்கு சிலருக்கு ஒரு பிஸ்கட்டுக்கே வழியில்லை... ஏன் இப்படி உலகில் நடக்கிறது......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக இன்று என்னவாயிற்று உங்களுக்கு மட்டும்தானா ? எனது கணினியில் பிரச்சனை இல்லை

      ஆமாம் எல்லாம் உலக மேலாளரின் செயல் வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. அனைத்திலும் சிக்கனம்
    தேவை இக்கணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம் ஜி அருமையாக சொன்னீர்கள்.

      நீக்கு
  3. சாப்பாடு கொடுத்தாலும் வாங்குபவர் இருக்கணுமே! பெரும்பாலும் பணமாய்க் கொடுங்க என்றே கேட்கின்றனர். எங்களால் இயன்றவரை இங்கே ஓர் ஆசிரமத்துக்கு அரிசி, சர்க்கரை வாங்கிக் கொடுத்து விடுவோம். சொந்தங்களிலேயும் கஷ்டப்படறவங்க உண்டே!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க உண்மைதான் சிலர் உணவு வாங்குவதில்லை, சிலர் உடை கேட்கின்றார்கள், சிலர் பாத்திரங்கள்கூட கேட்கின்றார்கள். ஆசிரமத்துகு உதவுவது மிகவும் நல்லது.

      நீக்கு
  4. சாப்பாடு என்றில்லை எல்லாத்துலயும்...நீர் முதற்கொண்டு நேரம் உட்பட வேஸ்ட் செய்யக் கூடாது.....
    எங்கள் குடும்வத்தில் உணவை வீட்டிலும் சரி வெளியிலும் சரி வேஸ்ட் செய்வத்தில்ஸ்....

    என் சிறிய வயதில் என் அப்பா வழிபாட்டி ஒரு கதை சொல்லிருக்கார். நாம் சாப்பிடுவதை வேஸ்ட் செய்தால் ஒவொரு பருக்கையும் கடலை சென்று அடைந்து சமுத்திர ராஜாவிடம் அழும்...என்னை வெஸ்டசெய்திட்டர் என்று...உடனே ராஜா நீ கவலை படாதே....என்னிடம் இருந்டது தானே வருணன் நீர் எடுத்து மழை கொடுக்க றான்...நான் அவனிடம் சொல்லி மழை கொடுக்காதே..வறட்சி வரட்டும், மக்கள் பசியால் வாடட்டும் என்று சொல்லிடுவான்....அப்புறம் நமக்கு சாப்பாடு கிடைக்காது.....பாரு அங்க..உன் பிரென்ட் வீட்டுல நேத்திக்கு சாப்பாடு பண்ணல....பாவம் நம்ம வீட்டுல தான் சாப்பிட்டா இல்லியா உன் பிரென்ட்.....அதனால வேஸ்ட் பண்ணாம சாப்பிடணும்....இது என் மகன் வரை சொல்லிக் கொடுத்தாயிற்று.....
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக உங்கள் பாட்டி சொன்ன கதையில் நீதிக்கதை போல் எவ்வளவு உள்ளார்ந்த அர்த்தம் உள்ளது இன்று சொல்வதற்கு பாட்டி இல்லை என்பது இருக்கட்டும் எந்தக்குழந்தை கேட்கும் ? அப்படியே சொன்னாலும் இடையில் ஆயிரம் கேள்விகள் கேட்டு (அதாவது நோஸ்கட் செய்து) சொல்பவரின் வாயை அடைத்து விடும். வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. நேர்த்தியான பதிவு..

    உணவை வீணாக்குவதென்பதை ஒத்துக் கொள்ளவே முடியாது.. ஆனால்.

    ஒரு நெல் மணியைகூட விளையாத அரபு மண்ணில் அவர்கள் செய்யும் அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்..

    சோற்றை இறைச்சியை வீணாக்குவதென்பது இவர்களுக்குக் கை வந்த கலை..

    Ouzi வகை உணவுகளை குதறி விட்டு எழுந்திருப்பார்கள்..
    கண்கள் கலங்கியிருக்கும் அதைப் பார்த்து..

    நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்வதும்
    அதைக் கடைப்பிடிப்பதும் அவரவர் தலையெழுத்து...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      பிற மதங்களில் சொல்லப்பட்டு இருக்கிறதா ? என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் இஸ்லாத்தில் சொல்லப்பட்டு உள்ளது.

      //பண விரயம் கூடாது//
      ஆனால் அரேபியர்கள் அதைத்தான் செய்கின்றார்கள் காரணம் இவர்களுக்கு உழைப்பின் அருமை தெரியாது.

      அரேபியர்களுடன் பிரமாண்டமான பார்ட்டிகளில் கலந்து கொண்டு பலமுறை உணவருந்தி இருக்கிறேன். பிரமாண்டமான டேபிளின் மையத்தில் எண்ணெய்யில் வறுத்து உட்கார வைக்கப்பட்ட ஒட்டகத்தை அனைவரும் பிய்த்து எடுத்து உண்ணும் பொழுது...

      எனக்கு அருவெறுப்பாகவும், பாவமாகவும் இதனால் தலைகுனிந்தபடி பிற உணவுகளை சாப்பிடுவேன்.

      10 நபருக்கு தேவைப்பட்டால் 20 நபருக்கு ஆர்டர் கொடுத்து வரவழைத்து 5 நபர்கள் சாப்பிடும் அளவு காலியானதும் மீதி 15 நபருக்கான உணவை குப்பையில் போடும் வழக்கம் உள்ள அரேபியர்களைக் கண்டு கோபப்பட்டு இருக்கிறேன் பிழைக்கப் போனவன் என்ன செய்ய இயலும் ?

      நீக்கு
    2. படிப்பதர்கு மிகவும் வருத்தமாய் இருக்கிறது அவன் பூமியில் தங்கத்தை புதைத்த கடவுளுக்குத்தான் வெளிச்சம் அவனின் வாழ்வு

      நீக்கு
    3. உலகில் பூமி சுழன்று வருவதாக ஒரு விஞ்ஞான கருத்து நிலவுகிறது இது அடுத்த 50 வருடங்களுக்குப் பிறகு இந்தியா எப்படி இருக்கும் எமிரேட்ஸ் எப்படி இருக்கும் என்ற எனது எண்ணங்களை எழுதி வருகிறேன்.

      இது அடுத்த சந்ததியினருக்கு நிச்சயம் ஆச்சர்யத்தை கொடுக்கும் அன்றே தேவகோட்டையான் ஒருவன் சரியாக கணித்து வைத்துள்ளான் என்பதை இவ்வுலகம் ஒருநாள் நிச்சயம் சொல்லும்.

      நீக்கு
    4. நான் இப்பொழுதே வாழ்த்துக்கள் சொல்லிவிடுகிறேன் ஜி

      நீக்கு
    5. வாழ்த்துகளுக்கும், மீள் வருகைக்கும் நன்றி

      நீக்கு
  6. என்னத்த சொல்ல போங்கசிலர் சாப்பாட்டை வேஸ்ட் செய்யக்கூடாது என்று நினைத்து அனைத்தையும் தம் வயிற்றுக்குள்ளே போட்டு பெருத்து போய்விடுகிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இதில் தவறே இல்லை உலகில் வாழ்வதில் மிச்சம் உணவு மட்டுமே...

      நீக்கு
  7. பதிவின் ஆரம்பித்தில் உள்ள புகைப்படத்தைப் பார்த்ததுமே மனம் நெகிழ்ந்தது. உணவை வீணாக்கக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்துவருகிறேன். என் குடும்பத்தாரையும் அவ்வாறே பயிற்றுவித்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கொள்கைக்கு எமது இராயல் சல்யூட்.

      நீக்கு
  8. உண்மை. உணவை வீணாக்குவது தவறு. ஆனால் சில சமயம் கடைபிடிப்பது கடினமாக இருக்கிறது. முன்பெல்லாம், ஒருவன் மற்றவர்கள் முன்னால் கொடுக்காமல் சாப்பிடுவதில்லை (இல்லைனா, மறைத்து வைத்துக்கொண்டாவது சாப்பிடுவார்கள், பிரயாணத்தின்போது). இப்போது அந்த மாதிரி நாகரிகம் எதையும் நான் பிரயாணத்தின்போது பார்க்கவில்லை.

    இதைப் படிக்கும்போதே இன்னொன்றும் சொல்லத் தோன்றுகிறது. பிராணிகளுக்கு உணவு அளிப்பது நல்லதுதான். அதற்காக கோவில் யானைகளுக்கு இஷ்டப்படி உணவினை வாங்கிப் போட்டு (வேற யார்.. பக்தர்கள்தான்) அதற்கு உடம்புசரியில்லாமல் வைத்துவிடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே யானை விடயம் நீங்கள் சொல்வதுபம் சரியாகத்தான் இருக்கிறது.

      மேலும் கோவில்களில் யானைகளுக்கு சரியான உணவுகள் வழங்காமல் வந்தவர்கள் எதைக் கொடுத்தாலும் சரி என்று யானையும் தின்று விடுகிறது நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை.

      நீக்கு
  9. That's a doctrine in my house too! Thanks for your post sharing the awareness needed!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இதை அனைவரும் கடைப்பிடித்தால் நல்லதே...

      நீக்கு
  10. நல்ல பகிர்வு அண்ணா...
    உணவை வீணாக்குவதற்குப் பதில் இல்லாதோருக்குக் கொடுக்கலாம்.

    இப்போது தேவகோட்டையில் பலர் பிறந்த நாள், மணநாள் போன்ற நாட்களில் சங்கரப்பதி அருகிலிருக்கும் இல்லத்துக்கு மதிய உணவு கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

    வீட்டு விசேசங்களில் மிச்சமாகும் உணவை ஆட்டோவில் ஏற்றி அந்த இல்லத்துக்கு அனுப்பிய நல்ல உள்ளங்களைப் பார்க்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன் நிச்சயம் அங்கு சென்று வருவேன்.

      நீக்கு
  11. உங்களுடைய இந்த பதிவு எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது சிறு வயதிலிருந்தே பிள்ளைகளின் பிறந்தநாளுக்கு அவர்களிடம் சொல்லிவிடனும்வளர்க்கணும் இல்லாதவருக்கு கொடுக்கணும் டோன்ட் பண்ணனும், திட்டமாய் சமைக்கனும் உணவை வீணடிக்கக்கூடாது, பெரியவன் ஆனவுடன் உன் சம்பாத்தியத்தை பொறுத்து அடுத்தவர் கல்விக்கு உதவனுமென்று,பிளாட்பாரங்களின் வசிப்போரை நின்று காண்பிக்கனும் அவர்களின் வாழ்வை உன்னுடன் ஒப்பிட்டு பார் உன் வசதியின் அளவு புரியும் உபயோகிக்கும் போது பயம் வரும் ... ரொம்ப நல்லது ஜி ரொம்ப நல்லது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நாம் சொல்லிக் கொடுத்தால்தானே பிள்ளைகளுக்கு தெரியும் இஸ்லாத்தில் இதை உணரத்தான் நோன்பு வைக்கின்றார்கள் ஆனால் ரமதான் மாதம் கழிந்ததும் மறந்து விடுகின்றனர்.

      எனக்கு விபரம் தெரிந்த நாள்முதல் நான் விரும்பி கேட்கும் பாடல் வரிகள் இதோ...

      //உனக்கும் கீழே உள்ளவர் கோடி
      நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு//

      நீக்கு
  12. அந்த படத்தை பார்க்கும்போது மனதுக்கு வலிக்குது .இவ்ளோ தொட்டி நிறைய வேஸ்ட்டா :( எத்தனி பேர் சாப்பாடில்லாம சாகிறாங்க .
    நான் ஒரு காலத்தில் அள்வு தெரியாம சாதம் செய்து குப்பையில் கொட்டுவேன் பிறகு அளவுடம் சமைத்து அன்றன்றைக்கு வரைக்கும் போதுமான அளவில் செய்வேன் .. எங்க மகளுக்கு வீணாக்கும் பழக்குமுண்டு யாரும் பாக்கலைன்னா டிஸ்யூவில் மறைத்து வீசுவாளாம் ..இதை எப்போ சொன்னா தெரியுமா :) ஒருமுறை குமார் சகோ உஸ்தாத் ஹோட்டல் என்ற மலையாளப்படம் பற்றி சொன்னதும் அவளுடன் போட்டு பார்த்தோம் அதில் வரும் காட்சி பாராது அப்படியே மனசு மாறிட்டா .அந்த காட்சி ஏழைகள் குப்பையில் இருந்து உணவு சாப்பிடும் காட்சி ..தேம்பி அழ ஆரம்பிச்சுட்டா ..அதிலிருந்து வீணாக்குவதில்லை ..
    அரபு நாட்டு விருந்து பற்றி உங்க பின்னூட்டத்தையும் துரை அண்ணா பின்னூட்டத்தையும் வாசிச்சப்போ மனம் கலங்குது .யாரா இருந்தாலும் தேவையான அளவு சமைத்து விருந்து பரிமாறலாமே :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.

      எங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டோம் துரை ஜி அவர்கள் குவைத் நாட்டில் அரேபியர்களுடன் வாழ்கிறார் ஆகவே அவருக்கு தெரியாதது எதுவுமில்லை.

      நீக்கு
  13. பசியின்கொடுமை இல்லாதபோது பசியெடுத்து அது கிடைக்காமல் போகும்பல நடுத்தர வர்கத்தினருக்குத் தெரியும் பசியும் இருக்கும் ஆனால் யாரிடமும் கேட்கத்தோன்றாது அவர்களின் கௌரவம் தடுக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை ஐயா நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை இக்கட்டானது. வருகைக்கு நன்றி

      நீக்கு
  14. வணக்கம்
    ஜி
    தாங்கள் சொல்வது 100 வீதம் உண்மை...சிலர் வெட்கத்தில் வேண்டுவதில்லை... இப்படி இருந்தால் இப்படித்தான் இருக்கும்.. அருமையாக சொல்லியுள்ளீர்கள் த.ம8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களது வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  15. உணவு வீணாவதைப்பற்றி எழுத ஆரம்பித்தால் பல பக்கங்கள் நீளும் கில்லர்ஜி! நீங்கள் வெளியிட்டிருக்கும் புகைப்படமும் அதிலுள்ள வாசகமும் உங்கள் கருத்துக்களும் மிக மிக அருமை!

    உணவு இங்கே [ அரபு நாடுகள்] மட்டும் தான் வீணாகிறதா? நம் நாட்டில் இல்லையா? இன்றைக்கு ஒரு திருமணத்துக்குப்போனால் அங்கே உணவு வகைகள் குப்பைத்தொட்டிக்குப்போவதைக் கண்கூடாக நாம் பார்க்கிறோமே! சமீபத்தில் ஒரு திருமண வீட்டில் கூட்டமாக இருந்த கை கழுவும் இடத்தில் காத்திருக்கப் பொறுமையின்றி மினரல் வாட்டர் பாட்டிலைத்திறந்து கை கழுவுவதைப்பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்து போனேன். நம் ஊரில் எப்படியெல்லாமோ உணவு வீணாகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மைதான்
      நீங்கள் சொன்ன விடயம் அதிர்ச்சி அளிக்கிறது எல்லாம் பணத்திமிர் வேறென்ன சொல்வது ?

      இறைவன் கொடுக்காத போதுதான் அதன் அருமை தெரியும் செல்வத்தை அள்ளிக் கொடுக்கும்வரை கஷ்டம் கண்களுக்கு தெரியாது

      நீக்கு
  16. பசித்துப் புசி!உணவு வீணாகாது !

    பதிலளிநீக்கு
  17. இல்லாதவர்களும் சரி..இருப்பவர்களும் சரி...சிக்கணம் என்று சொன்னாலே..வெறுப்பாகத்தான் பார்க்கிறார்கள்.. எனது அனுபவம் அப்படி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சிக்கனம் நம்மால் இயன்றவரை இருப்போம். அதற்காக கஞ்சனாக இருக்க வேண்டாம்.

      நீக்கு
  18. பத்து வீடுகள் கொண்ட ஒரு தெருவில் இருக்கிற வீட்டில் வேஸ்டாகிற உணவு இரண்டு பேரின் முழு உணவாகும்
    என்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மை நிலவரத்தை அழகாக சொன்னீர்கள்.

      நீக்கு
  19. எனக்கு சாப்பாட்டை வேஸ்ட் பண்ண பிடிக்காது. அதேமாதிரிதான் என் பிள்ளைகளும் ஒரு பருக்கையை சிந்தாதுங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நல்ல பழக்கங்களே... வருகைக்கு நன்றி.

      நீக்கு
  20. நீங்கள் சொல்லி இருப்பது மிகவும் உண்மை. குழந்தைகளுக்கு சிக்கனத்தின் அவசியத்தை சொல்லி வளர்க்க வேண்டும் தான்.

    என் பாட்டி, மாமியார், அம்மா எல்லாம் அடிக்கடி சொல்வது சிந்தாமல், சிதறாமல் காரியம் செய்யனும். பொருட்களை வீணாக்க கூடாது . உணவு பொருட்களை வீணாக்க கூடாது.
    அளவாய் கேட்டு வாங்கி சாப்பிடு தட்டு நிறைய வைத்துக் கொண்டு பின் சாப்பிட முடியாமல் வைத்து விட்டு எழ கூடாது அப்படி எழுந்தால் திட்டு விழும்.

    என் குழந்தைகளை உண்வை வேஸ்ட் செய்யாமல் தான் வளர்த்தேன் .

    கோபாத்தை சாப்பாட்டு மேல் காட்டாதே! என்பார்கள்.
    கதைகளில், சினிமாக்களில் தட்டில் சாப்பாடு மேலேயே கைகழுவிவிட்டு கோபாய் எழுந்து கொள்வது, உணவை வீசி ஏறிவது பார்க்கும் போது மனது வேதனை படும்.

    பாழாய் போவது பசு வயிற்றில் என்பார்கள். வீட்டில் மாடு இருந்தால் மிஞ்சிய உணவுகளை அதற்கு கொடுத்து விடுவார்கள்.

    நானும் மீதியான உணவுகளை மாடுகளுக்கு , பறவைகளுக்கு கொண்டு வைப்பேன். முன்பு யாசிப்போர் பாத்திரம் வைத்துக் கொண்டு உணவு கேட்டு வருவர் இப்போது எல்லாம் அப்படி யாரும் வருவது இல்லை. அப்படி கேட்டாலும் பணம் தான் கேட்கிறார்கள்.

    இந்த ஊரிலும் வீடு இல்லை, உணவு இல்லை என்று அட்டை வைத்துக் கொண்டு சிக்னல் பக்கத்தில் நிற்கிறார்கள்.
    பேரன் அவர்களுக்கு பணம் கொடுக்க சொல்வான்.

    உணவு மட்டும் இல்லை நீங்கள் சொல்வது போல் எல்லாவற்றிலும் அவசியத்திற்கு செலவு செய்ய வேண்டும், ஆடம்பரத்திற்கு செலவு செய்யக்கூடாது தான்.

    சிக்கனமாய் வளர்ந்த பிள்ளைகள் காலபோக்கில் தட்டில் மிச்சம் வைப்பது நாகரீகம், குடிக்கும் காப்பி, பாலில் மிச்சம் வைப்பது நாகரீகம் என்று மாறி போவதையும் பார்த்து வருத்த பட்டுக் கொண்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ விரிவான நிறைய விடயங்கள் தந்தீர்கள்.

      இப்பொழுது ஹோட்டலில் சாப்பிட்டால் மிச்சம் வைத்து செல்வதே நாகரீகம் ஆகிவிட்டது உண்மையான வார்த்தை.

      நீக்கு
  21. காணொளி காட்டும் உண்மை மனதை வேதனை படுத்துகிறது.
    வீணாகும் உணவை கொண்டு கொடுத்தாலும் இப்போது எல்லாம் ஆசிரமங்கள் வாங்க்குவது இல்லை. ஏனென்றால் உணவு வேலை தப்பி விடுகிறது, கொடுப்பதாய் இருந்தால் இவ்வளவு பேருக்கு உணவு, இத்தனை மணிக்கு கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.
    உணவு விழாவில் அதிகமாய் விட்டால் பிசைந்து கோவில் வாசலில் இருப்போருக்கு பொட்டலமாய் கொடுத்து விடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பொழுது பிச்சை கேட்பதில்கூட சில வரைமுறைகள் கொண்டு வந்து இருக்கின்றார்கள்.

      நீக்கு
  22. “இப்பொழுதுதானே டீ குடித்தோம். மீண்டும் எதற்கு? என்று தவிர்த்ததுண்டு. இப்பொழுதுதானே தர்மம் செய்தோம். மீண்டும் எதற்கு? என்று ஒருபோதும் நினைத்ததில்லை.”
    தங்களின் உள்ளப்பாங்கை நினைத்து பெருமைப்படுகிறேன். பாராட்டுகிறேன்.
    உணவை வீணாக்காமல் பசித்தோருக்கு தருவதை நமது பிள்ளைகளுக்கு கற்றுத் தரவேண்டும்.
    அருமையான பதிவு. பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் விரிவான கருத்துரைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு