இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், நவம்பர் 15, 2017

நான் இந்திய குடிமகனா ?


மிழகத்தில் தற்போது எங்கு நோக்கினும் ஜாதீய அமைப்புகளை உருவாக்கி மக்களை ஒருக்கிணைக்கின்றோம் என்ற பெயரில் பிரிவினைகளை உருவாக்கி தனது சமூகத்து மக்களை திரட்டிக்காண்பித்து அரசை மிரட்ட வைத்து அதில் ஒரு சிலர் மட்டும் பயன் பெறுகின்றார்கள் நமது சமூகத்துக்கு உயர்வு வேண்டும் நமது சமூகத்து அங்கத்தினர் சட்டமன்றம் செல்லவேண்டும் என்று பொய்யுரைத்து பக்குவமாக தான் நுழைந்து தனது வாழ்க்கையை செம்மை படுத்திக்கொள்கின்றார்கள் இதை முதலில் அனைத்து சமூகத்து பொது மக்களும் உணரவேண்டும் உணராவிடில் இது நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையான விடயமே.

இதில் இந்த ஜாதிதான் என்றில்லை அனைத்து ஜாதிகளுமே களம் இறங்கி விட்டன நாளை இதன் உள்ளே ஊடகழி ஜாதிக்காரர்களும் ஊடுறுவலாம் மல்லாங்கி ஜாதிக்காரர்களும் மலையை புரட்டலாம். இதற்காக இவர்கள் எடுத்துக்கொள்ளும் பலம் என்ன தெரியுமா ? எல்லா மதத்தினரும், எல்லா ஜாதியினரும் சுதந்திரத்துக்காக பாடுபட்டு இருக்கின்றார்கள் என்பது உலகறிந்த உண்மை தனது ஜாதியில் அன்று கொடி பிடித்தவர் யாரோ அவரின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு அவருக்கு சிலை வடித்து அவரின் பெயரில் அமைப்போ, சங்கமோ உருவாக்கி அதையும் சட்டரீதியாக பதிவு செய்து பிரச்சனையை கையில் எடுத்துக்கொள்கின்றார்கள் இதற்கு அரசு பதிவு என்ற பெயரில் சான்றிதழ் அளித்து அனுமதி கொடுக்கின்றதே அங்குதான் இந்த அரசு மக்களை குழியில் தள்ள வழி வகுத்து விடுகின்றது மற்றொரு விடயம் அந்த தலைவர்களில் சிலர் திரைப்பட நடிகராக மட்டுமே இருந்தவர்களும் உண்டு காரணமென்ன ? தனது ஜாதியில் வேறு யாரும் கிடைக்கவில்லை இதில் இன்னொரு வேடிக்கையான விடயம் என்ன தெரியுமா ? நான் உயர்ந்த ஜாதி என்றும், நான்தான் பலசாலி என்றும் சொல்லிக் கொள்பவர்கள்.

(பலசாலி என்பவன் யார் ? வம்பு சண்டையை இழுத்து ரவுடிசம் செல்பவன் அல்ல  தான் தனது மனைவியோடு செல்கிறான் என்று வைத்துக் கொள்வோம் சில கேடுகெட்ட ஜென்மங்கள் வம்பு இழுக்ககூடும் அந்த இடத்தில் எத்தனை பேர் இருந்தாலும் தான் தோற்போம் என்று தெரிந்தாலும் எதிர்ப்பவனே வீரன்)

எல்லா ஜாதியினருமே நான் உயர்ந்தவன் என்று சொல்கின்றார்கள் சமூகத்தில் காட்டிக்கொள்ள முயல்கின்றார்கள் அதேநேரம் அரசிடம் மனு கொடுக்கின்றார்கள் எங்களை சிறுபான்மையினர் வகுப்பில் சேர்த்து கூடுதல் சலுகை வழங்கு என்று இது கேளிக்கூத்தாக இல்லை. ஜாதீய அமைப்புகளின் பதாகைகளையும், சுவரொட்டிகளையும் காணும் பொழுது நான் மேலும் சிந்தித்தேன் இவர்கள் யார் ? ஆம் இவர் அவரே.. இவர் தியாகிதான், வீரர்தான், இவர் போற்றப்படக்கூடிய மகான்தான் சரி இன்றைய நிலையில் இவரது வாரிசுளும், சந்ததிகளும் தற்போது எங்கே ? ஆழ்ந்து தேடினால் சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டு நலிந்த நிலையில் இருக்கும் இடமறியாத நிலையில் அன்றாடங்காச்சியாக இருக்கின்றார்கள் அவர்களை இந்த சங்கமோ, அமைப்புகளோ தேடிப்பிடித்து அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த முன் வரவில்லையே ஏன் ? என்றோ மறைந்து போனவர் சுயநலமின்றி பொதுமக்களுக்காக அப்பழுகற்றவராக வாழ்ந்து மறைந்தவர் அவருக்கு சிலை வைத்து கழுவி மரியாதை செய்வதற்கு அவர்களது சந்ததிகளை வாழவைக்கலாமே ! அதனால் பலனில்லை என்பது அறிந்தவர்கள் என்பதை நான் அறிவேன் ஆனால் ஜாதீய அமைப்பை உருவாக்குபவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் மக்கள் தெளிவு பெறவேண்டும் என்பதே எமது எண்ணம் திரு. காமராஜர் தான் முதல்வராக இருந்த நேரத்தில் தனது வயதான தாயார் கழிவறை கட்டுவதற்கு ரூபாய் 3000/ கேட்டு கடிதம் எழுத, அதற்கு காமராஜர் பதில் கடிதம் எழுதுகின்றார்...

///அம்மா என்னிடம் அவ்வளவு வருமானம் இல்லை உன்னைப்போல தமிழகத்தில் பல தாய்மார்களுக்கும் இந்நிலை உண்டு ஆகவே பொறுத்துக் கொள்///

என்று அவரின் குடும்பத்தினருக்கு இன்று கௌரவம் இருக்கின்றதா ? காந்திஜியை போற்றுகின்றோம் அவரது பேரனையே தேர்தலில் தோற்கடித்தார்களே நமது மக்கள் அதற்காக காந்திஜியைப் போலவே அவரது பேரனும் உத்தமர்தான் என்று நான் சொல்ல வருவதாக அர்த்தமல்ல ! அதேநேரம் நகைச்சுவை நடிகர் கருணாஸ் வெற்றி பெற முடிகின்றதே இதை மக்கள் எவ்வகையில் தீர்மானித்தார்கள் இவரை மட்டுமல்ல ! வெற்றி பெற்றவர்களில் அதிக சதவீதம் பேர் வழக்குகளில் உள்ளவர்கள்தானே இப்படி தேர்ந்தெடுப்பது அறிவின் வளர்ச்சியா ? வீழ்ச்சியா ? திரு. கக்கன் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து கௌரவிக்கின்றோம் அதேநேரம் அவரது மகன் மனநலம் குணமடைந்தும் 32 ஆண்டுகளாக கீழ்ப்பாக்கம் மனநிலை மருத்துவமனையில் அழைத்துப்போக உறவின்றி இன்றுவரை அங்கேயே தங்கி இருக்கின்றாரே அவரை யார் நினைத்துப் பார்க்கின்றோம் ? அதிகாரப்பூர்வமான இந்திய குடிமகனானாலும் என்னால் அவரை நினைத்து வருந்த மட்டுமே முடிகின்றது வேறொன்றும் செய்ய முடியவில்லையே என்ற நிலையில் வெட்கப்பட்ட குற்ற உணர்வுடன் பதிவை முடிக்கின்றேன்,

தேவகோட்டை கில்லர்ஜி
காணொளி

41 கருத்துகள்:

  1. பாராட்டுகள்.நல்லதொரு நேரத்தில் நேர்த்தியான ஒரு பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம் ஜி பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு
  2. உண்மைதான் நண்பரே
    நம்மால் வருந்தத்தான் முடிகிறது
    நாம் நம்வரை இந்த சாதீய கட்டுமானங்களுக்குக்
    கட்டுப்படாமல், மனிதத்தோடு
    இருப்போம்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் அழகிய கருத்துரைக்கு நன்றி
      மனிதம் காப்போம்

      நீக்கு
  3. இது மிகவும் உண்மை. நம்மால் வருந்த மட்டுமே முடிகிறது....செயல் இல்லை எனவது. இறுதி வரி உண்மையே...அதுதான் உண்மை. நாம் வாய்ச்சொல்லில் வீரரடி!!

    இங்கு மற்றோன்றும் சொல்ல விரும்புகிறோம். நாம் பெற்றோர்கள் நம் பிள்ளைகள் வேறொரு சாதி பெண்ணையோ, பையனையோ மணம் செய்து கொள்ள முடிவு செய்தால் பெரும்பான்மையோயான பெற்றோர் ஒவ்வொரு விதமாக எதிர்ப்பு காட்டுகிறார்கள் தானே. அந்த உணர்வுதான் வாழ் வழியாக வந்து கொண்டிருக்கு இல்லையா? அப்போ ஒரு சின்ன சமூகத்திலேயே முடியாத போது இவ்வளவு பெரிய சமுதாயத்தில் எப்படி மாற்றத்தைக் கொண்டு வர முடியும்?

    ஆனால் இதில் பணம் எனும் மாயை கூடச் சில சமயம் சாதீயம் பேசுபவர்கள் சிலரது கண்களை மறைத்து விடும்...தான்... இதுதான் யதார்த்தம் இது மாறுவது என்பதற்குப் பெரும் புரட்சி வந்தால் மட்டுமே மாறும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக அருமையாக அலசியுள்ளீர்கள் சொன்னவை அனைத்தும் உண்மை புரட்சி வரும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை

      காரணம் இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் திரைப்பட நடிகனின் பின்னால் திரிவதால் இது சாத்தியப்படும் என்பதில் நம்பிக்கை இல்லை.

      நீக்கு
  4. மாமனிதர்களாகிய இவர்கள் அனைவரும் நமக்கென்ன .. - என்று போயிருந்தால்...

    நமக்கெல்லாம் இப்படிப்பட்ட வாழ்வு மலர்ந்திருக்குமா?...

    நன்றி கெட்ட மனிதர்களால்/மடையர்களால் நாடு சீரழிந்து போயிற்று..

    அவர்களெல்லாம் உப்பு போட்டுத் தின்றவர்கள்..
    அதனால் மானம் ரோஷம் என்றெல்லாம் இருந்தன..

    இன்றைக்கு நவீன மருத்துவம் உப்பை போட்டுக் கொள்ளச் சொல்கிறதா?.. இல்லை!..

    அதற்கு வால் பிடிக்கும் ஊடகங்களும் ஆமாம் போடுகின்றன!..

    பின்னே எப்படி மனுசனுக்கு ரோஷத்தை எதிர்பார்ப்பது?..

    கோமாளிகளுக்கு பட்டனை அமுக்கி விட்டு
    இவனும் கோமாளியாகவோ ஏமாளியாகவோ ஆகின்றான்..

    கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் -
    இந்த ஜனங்கள் திருந்துவதற்கான வாய்ப்பு தெரியவே இல்லை..

    சனங்களே திருந்தாதபோது - திருந்த விரும்பாதபோது -
    நீங்களும் நானும் சத்தம் போட்டு என்ன ஆகப் போகிறது!..

    மதுக்கடைகள் வேண்டாம் என்றது ஒருகாலம்..
    போராட்டம்.. தடியடி.. மண்டை உடைப்பு - எல்லாம்!..
    இன்று அப்படியா!?..

    ஊற்றிக் கொடுத்து உபசரிக்க ஒய்யார நாரிமணிகள் தயார்!!!..

    பங்களாக்கள் ஓலைக் குடிசைகளாயின..
    குதிரைகள் கழுதைகள் ஆகின.. -
    ஆடம்பர ஆரவாரத்துடன் - மதுவரக்கன் தன்னை விரும்புபவர்களுக்கு ரத்னக் கம்பளம் விரிக்கின்றான்!....

    இதைப் பார்த்து யமனும் எருமையுடன் வாய் விட்டுச் சிரிக்கின்றான்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      உண்மைகளை அழகாக அடுக்கி விட்டீர்கள். நன்றி கெட்ட மானிடர்களே...

      அந்த பாவங்களின் சம்பளத்தை பெற்றே தீரவேண்டும் அரசியல்வாதிகளை குற்றம் சுமத்தி என்ன செய்ன ?

      தவறுகளின் தொடக்கமே மக்கள்தானே.. நம்புவோம் காலம் ஒருநாள் மாறுமென்று...

      நீக்கு
  5. படிப்பும், நாகரீகமும், விஞ்ஞானமும் வளர, வளர மூடநம்பிக்கையும், குறுகிய மனப்பான்மையும் வளர்ந்துக்கிட்டே போகுது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மூடநம்பிக்கை வளரும் பொழுது அறிவு மங்கியே போகும்.

      நீக்கு
  6. சாதியை கொண்டு நாட்டை கெடுக்கிறார்கள் பலர் இன்று...

    என்ன செய்வது அதை தடுக்க வேண்டிய அரசே ஊக்குவிக்கும் போது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசு தனக்கு சாதகமானதை பயன் படுத்துகிறது.

      நீக்கு
  7. மாவீரர் படங்களோடு கில்லர்ஜி படமும் இணைஞ்சு வருவது... சந்தேகத்தைக் கொடுக்கிறது:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி.. ஹி.. ஹி.. பாய்ண்டை பிடிச்சுட்டீங்களே...

      நீக்கு
  8. அதானே! கில்லர்ஜி படமும் மாவீரர் வரிசையிலே வந்திருக்கே! நான் என்னடாப்பானு நினைச்சேன். அதிரா கேட்டுட்டாங்க! :)

    அழகுமுத்துக் கோன் பற்றி அதிகம் அறிந்ததில்லை. மத்தவங்க பத்தி நிறையப் படிச்சிருக்கேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியாவது சரித்திரத்துல இடம் பிடிக்கலாம்னு பார்த்தால் இப்பவே இவ்வளவு பொறாமையா ?

      நீக்கு
  9. நல்லா எழுதியிருக்கீங்க. உண்மையில் பொதுவாழ்வுக்கு வருவது என்பது பெரிய தியாகம். தன் வீட்டைக் கவனிக்க முடியாது, சொந்தக்காரங்களைக் கவனிக்க முடியாது, எந்த விசேஷத்துக்கும் போகமுடியாது, எல்லாரும் கவனித்துக்கொண்டிருப்பார்கள் என்பதால், தன் குடும்பத்துக்கு எந்த விதமான உதவிகளையும் செய்யமுடியாது. நியாயத்தை மீறி நடக்க முடியாது என்பதால் எல்லோரிடமும் கெட்டபெயரும் எடுக்க நேரிடும். இதுதான் பொதுவாக பொதுவாழ்வுக்கு வந்தவர்களது நிலை. (1960 வரை).

    இப்போ என்னன்னா, யாரைப் பாராட்டுவதற்கு முன்பும், அவன் ஜாதி என்ன என்று தெரிந்துகொள்ளப்பார்க்கிறார்கள். வ.உ.சி. குடும்பமே பல வகைகளில் கஷ்டப்பட்டது. இப்போது வெறும்ன தற்கொலை பண்ணிக்கொள்பவர்களுக்கு 5 லட்சம் நிதி கொடுக்கும் அரசுகள், சுதந்திரத்துக்காக சொத்தை இழந்ததனால் குடும்பமே கஷ்டப்பட்டாலும் 5 காசு கொடுப்பதில்லை. அதிலும் ஜாதி பார்க்கிறார்கள். ரொம்ப வருத்தம்தான்.

    எம்ஜியார் அரசு பாரதியாருக்குச் சிறப்பு செய்ய நினைத்தபோது, அவரது உறவினருக்கு பணமுடிப்பு அளித்தது (அந்த உறவினர், பாரதி, பாரதி குடும்பம் கஷ்டப்பட்டபோது அந்தத் திசைக்கே போயிராதவர்கள்). வ.உ.சி வாரிசுகள் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தபோது உதவவே இல்லை (ஏனென்றால் அது ஓட்டுக்களைப் பெற்றுத்தராது). இப்படி இருந்தால் என்ன செய்ய கில்லர்ஜி. மனதுக்குத்தான் நினைத்தால் கஷ்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரிவான கருத்துரை.இன்று எல்லாமே ஜாதி அடிப்படையில்தான் நிகழ்கின்றது.

      அதேநேரம் கமல்ஹாசனை ஜாதி அடிப்படையில் பார்க்கும் ரசிகன் ரஜினிகாந்தை பார்க்க மறுக்கிறான்

      தனக்கு எதிர்பதமாக எது உள்ளதோ அதை மூடி மறைக்க நினைக்கிறான் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  10. சாதீயம் நம்ரத்தத்துடன் கலந்தது தாய்ப்பாலுடன் ஊட்டப்படுகிறதோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை இதுதான் அடிப்படை காரணம். வருகைக்கு நன்றி ஐயா

      நீக்கு
  11. சா//தீ // இந்த நூற்றாண்டிலும் மனிதர்களை பிளவு படுத்தியிருக்கு வேதனையான விஷயம் .
    சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டபோ அவங்க தன்னலமின்றி விடுதலையை மட்டும் யோசிச்சாங்க அதையும் அவங்க பெயரை வைச்சி இந்த நூற்றாண்டில் எப்படிசாதகமா பயன்படுத்தறாங்க :(
    காணொளியில் பாட்டு கட்சிகளுக்கும் காட்சிகளுக்கும் அட்டகாசமா பொருந்தியிருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக அருமையான கருத்துரை தந்தமைக்கு நன்றி

      நீக்கு
  12. நல்ல மனநிலையோடு இறப்பதர்கு இனி வழியில்லை மனம் இருப்பவர்களுக்கு தவிர்க்கமுடியாது தள்ளவும் முடியாது இந்த வெட்கத்தை உள்ளே எப்போதும் உறுத்தும் மிகவும் நல்ல பதவி தேவையான பதிவு படிப்பவர் எத்தனை பேரோ புரிபவர் புரிந்து கொள்ளட்டும் பச்சை வரிகள் சிந்திக்கவேண்டிய வரிகள்

    பதிலளிநீக்கு
  13. ஜி நல்ல பதிவு (என்பது வுக்கு பதில் வி விழுந்துவிட்டது )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்து பகிர்வுக்கு நன்றி.
      செல்லில் எழுத்து பிழைகள் வருவது சகஜமாகி விட்டதுதானே...

      நீக்கு
  14. வெட்கப்பட்ட குற்ற உணர்வுடன் - இது தான் நம்மில் பலரின் நிலையும்.

    இங்கே எல்லாமே அரசியலாகி விட்டது. ஒன்றும் சொல்வதிற்கில்லை.

    பதிலளிநீக்கு
  15. நமது சமூகத்தில் சாதி இப்போது சாதீயாகப் போய்க்கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வார்த்தை உண்மையே...

      நீக்கு
  16. தன்நலம் பார்க்காமல் பொது சேவை செய்தார்கள் அன்று.
    இன்று அது போன்ற தலைவர்களை பார்க்க விரும்புவது நம் பேராசை.
    அழகு முத்துகோன் , கக்கன், வீரபாண்டிய கட்டபொம்மன் மூவர் நினைவிடத்திற்கும் போய் சமீபத்தில் வணங்கி வந்தேன். அவர்களைப் பற்றி பதிவு போட்டேன். அது தான் என்னால் முடிந்தது.
    மாமனிதர்கள் போல் மீண்டும் வர வேண்டும் மக்களை ஒன்றுஇணைக்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மையில் நம்மால் முடிந்ததை செய்வோம். இருப்பினும் தியாகங்கள் அங்கீகரிக்கப்படாவிட்டாலும் பரவாயில்லை உதாசீனப்படுத்தக்கூடாது நமது மக்கள் இதையே செய்கின்றனர்.

      நீக்கு
  17. இப்பொழுதுதான் கோடாரி தேவைப்படும் நண்பரே..

    பதிலளிநீக்கு
  18. தங்கள் ஆதங்கமும், கோபமும் புரிகிறது. இளைய தலை முறையை சரியாக வளர்ப்போம், கோடரியை வீசி தூர எறியுங்கள், வன்முறை வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக காந்திஜி வழி இனியும் கை கொடுக்குமா ? இவர்களுக்கு நேதாஜி வழியே சரியாகும் போலயே...
      தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  19. சாதியை வைத்து அரசியல் செய்த தலைகளால் தான் இந்த நிலை...!

    பதிலளிநீக்கு
  20. நமது காலத்திற்குப் பின்னால் நம் மக்கள் நம்மை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைப்பார்கள் என்று அந்த தியாகிகள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். என்றைக்கு சாதி அரசியல் ஒழிகிறதோ அன்றுதான் நமக்கு விடிவு காலம்.அது நடக்குமா? நம்பிக்கையோடு காத்திருப்போம்.

    சிந்திக்க தூண்டிய பதிவு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

    காணொளி அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சரியாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  21. சாதி மத அரசியலில் இந்த தேசம் அடிமைப்பட்டு கிடப்பதை எண்ணும்போது அவமானமாக இருக்கிறது. அப்பழுக்கற்ற மாமனிதர் அய்யா கக்கன் அவர்களின் மகனின் நிலை கண்டு பெரிதும் வருந்துகிறேன் தோழர். புரட்அசியாளர்ண்ண ல் அம்பேத்கார் அவர்களையே ஒடுக்குமுறை அரசியலில் வைத்திருப்பது இத்தேசத்தின் சாபக்கேடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இதற்கு அடிப்படை காரணம் நாம்தானே...

      நீக்கு