இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, நவம்பர் 17, 2017

தமிழ் வாழ்க !


கோவை விமான நிலையம் சித்ரா அவினாசி சாலை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த எனது விழிகளில் கண்டதுதான் மேலேயுள்ள புகைப்படத்திலிருக்கும் வாகனத்தின் இலக்கப் பலகை உடன் என் மனம் படபடத்தது காரணம் தமிழ் எண்களில் எழுதியது மனதுக்கு சந்தோஷமளித்தாலும் அந்த எண்கள் எழுதிய முறைகளில் பிழைகள் இருக்கிறது அவரிடம் சொல்ல வேண்டுமே... சொன்னால் ஏற்றுக்கொள்வாரா ? இருப்பினும் பிழை என்றறிந்தும் சொல்லாமல் செல்வது தமிழன்னைக்கு செய்யும் துரோகம் அல்லவா ! ஆகவே விரட்டினேன் அவருடையது ஃபல்சர் என்னுடையது ஸ்கூட்டி அவர் பறந்தார். நானும்தான் இருப்பினும் நான் அபுதாபியில் ஓட்டும் சட்டத்தை இன்னும் கடைப்பிடித்து வருகிறேன் இவரோ சராசரி இந்தியனாய் தொடர்ந்து விடாமல் துறத்தி கொடிசியா, ஹோப் காலேஜ், ஃபன் மால், பீளமேடு, கடந்து வந்தும் அவரைப் பிடிக்க முடியாமல் இனி இந்தியனாய் மாறுவோம் என்று விரட்டினேன் நவஇந்தியா வரும் பொழுது பிடித்து விட்டேன் தலைக்கவசத்தை உயர்த்தியபடியே....
ஸார் இது நீங்களாக எழுதியதா ?
ஆமா..
இதுல பிழை இருக்கு.
வாகனத்தை ஓரங்கட்டி நிறுத்தினார் நானும் நிறுத்தினேன்.
ஸார் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க...
சொல்லுங்க ஸார்
இந்த எண்கள் தமிழில் எழுதி இருக்கீங்க சந்தோஷம் ஆனால் எண்களில் பிழைகள் இருக்கிறது இது சராசரி தமிழ் எழுத்துகள்தான் எண்கள் அல்ல ! இதில் நான்கும், மூன்றும் பிழை மற்றவைகள் சரிதான் இருந்தாலும் எல்லாமே தமிழ் எழுத்து வழியாக எழுதி இருக்கீங்க...
உங்களுக்கு தெரியுமா ஸார் ?
தெரியும்.
சரி எழுதித்தாங்க நான் மாற்றிக் கொள்கிறேன்.
உடன் ஒரு பேப்பரில் ஒன்றிலிருந்து பத்துவரை எழுதிக் கொடுத்தேன்.
ரொம்ப சந்தோஷம் ஸார் எல்லா நண்பர்களிடமும் தமிழ்ப்பற்று உள்ளது போல பேசுவேன் ஆனால் சரியாக தெரியாமல் எழுதியதற்காக வருந்துறேன்.
நான்கூட கோபப்படுவீங்களோன்னு நினைச்சேன் சித்ராவிலிருந்து விரட்டி வர்றேன் ஸார்.
உங்களைப் பார்த்தால் கோபம் வராது பார்த்திருந்தால் நிறுத்தி இருப்பேன்.
பரவாயில்லை.
உங்களை சந்திச்சதில் ரொம்ப சந்தோஷம் ஸார்.
நன்றி மாற்றி எழுதிடுங்க...
நல்லது ஸார் இன்றைக்கே எழுதிடுறேன்.
போலீஸ்காரங்க யாருமே கேட்டதில்லையா ?
யாருக்கு ஸார் இதெல்லாம் தெரியுது ?
நன்றி வர்றேன்.
நன்றி ஸார்.
அதற்கு மேல் பேசுவதற்கு சூழல் சரியில்லை அடுத்த ஸிக்னலில் நிற்கும் பொழுது கிளிக்கினேன். அந்த முகம் அறியாத நண்பர் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்தியனான நான் ஹிந்துஸ்தான் கல்லூரி சாலையில் பறந்தேன்.

நட்பூக்களே சமீபத்தில் வாட்ஸ்-அப் குழுக்களில் பலமுறை தமிழ் எண்களை அறியத் தருகிறேன் என்று தமிழ் எழுத்துகளையே பதிவிட்டு எண்கள் என்று சொல்கின்றார்கள் இது தவறு பொது விடயத்தை அதுவும் நம் தமிழ் மொழியைப்பற்றி பிறருக்கு பொது இடத்தில் சொல்லும் பொழுது அதில் மிகத்தெளிவான பொருளை நாம் முன்வைத்தல் வேண்டும் இதுவே நாம் நமது அடுத்த தலைமுறைக்கு கொடுத்துச் செல்லும் பாடமாகும். இதற்கு மறுப்பு சொல்லி உடனே நானும் வாட்ஸ்-அப்பில் பதில் விளக்கி செல்லிலேயே தமிழ் எண்களை கொடுத்து இருக்கிறேன். ஏற்கனவே இதனைக் குறித்து எனது தளத்தில் பதிவும் எழுதி இருக்கிறேன் இதோ அந்த இணைப்பு தமிழ் எண்கள்


இதுதான் தமிழ் எண்கள் அறிந்து கொள்க – கில்லர்ஜி
௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰
1  2  3  4  5  6  7  8  9  0

காணொளி

58 கருத்துகள்:

  1. மீசை கார நண்பரே ...முதலில் இருவரையும்பாராட்டுகிறேன்... உங்களை (மீசையை) பார்த்து ஓட்டுனர் உரிமம் எடுத்து காண்பிக்கவில்லையே..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நான் கேட்கவில்லை அவர் காண்பிக்கவில்லை.

      நீக்கு
  2. விரட்டிப் பிடித்து உண்மையை விளக்கியமைக்கு பாராட்டுகள். ஆனால் சட்டப்படி தமிழில் எண் பலகை வைத்துக்கொள்வது தவறு என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஸ்ரீராம்ஜி சட்டத்தில் இதற்கு அனுமதி இல்லை.

      நீக்கு
  3. ஆஆஆஆஆஆவ் மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ:)... இருங்கோ எனக்கும் டமில்ல ஆரும் பிழை விட்டால் பிடிக்காதூஊஊ:) படிச்சிட்டு வாறேன்ன்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா.. படிச்சிட்டு வாறேன் எனச் சொல்லிட்டுப் போனதுதான் போனேன்ன் அப்பூடியே போயிட்டேன்:)..

      இப்படித்தமிழ் எனக்குத் தெரியாதே.. “அ” க்கு 8 ம் நம்பரா? அவ்வ்வ்வ்வ்..

      அதுசரி விரட்டியதுதான் விரட்டினீங்க.. வீடியோப் போட்டா விரட்டினீங்க... “உங்கள் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்”..:)..

      ஊசிக்குறிப்பு:
      அப்போ இங்கின நான் 1ஸ்ட்டூ இல்லையா?:) ஏதோ ஜதி:) நடக்குதுபோல...:)

      நீக்கு
    2. காணொளி இடாவிட்டால் பிறகு உங்களைப் போன்றோர் ஆதாரம் கேட்பார்களே...

      நீக்கு
  4. தங்களின் தமிழ் பற்றை பாராட்டுகிறேன். திரு ஸ்ரீராம் அவர்கள் சொன்னதுபோல் சட்டப்படி, வாகனங்களின் எண்கள் இலத்தீன் எழுத்துகள் மற்றும் அராபிய எண்ணுருக்கள் கொண்டு பொறிக்கப்பட வேண்டும் என்று அந்த நண்பரிடம் சொல்லியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அவரிடம் அதிகம் பேசும் சூழல் இல்லை.

      நீக்கு
  5. கில்லர்ஜி சூப்பர்...பாராட்டுகள்
    துளசி:எண்ணின் முன் தமிழில் ஊர்ப்பெய ர்.ஏரியா...எல்லாம் இருப்பதை பார்த்திருக்கேன்...ஆனால் எண் வண்டியில் பார்த்ததில்லை....

    கீதா: தமிழில் எண் வண்டியில் வைத்துக் கொள்ளலாமா என்ன? பாண்டியில் சிலர் நம்பருடன் வரும் எழுத்துகளை தமிழில் வைத்திருப்பது தெரியும்...நம்பரையும் தமிழில் வைத்திருக்க போலீஸ் பிடித்து நார்மல் நம்பராக மாற்றச் சொன்னார்....பின் மாற்றினார்கள்...

    என் தமிழ் ஆசிரியை எங்களை கேள்வி மற்றும் விடைக்கான எண்களைத் தமிழில் தான் எழுத வேண்டும் என்று அப்படி நானும் பபித்தது எழுதியதுண்டு....கல்லூரியில் இல்லை..அப்புறம் போய்விட்டது பழக்கம்...இப்பவும் என்னிடம் எண்கள் உள்ளன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சட்டப்படி இது செல்லுபடி ஆகாது இருப்பினும் தமிழுக்கு மரியாதை கொடுத்து சிலர் விட்டு விடுகின்றனர்.

      நீக்கு
  6. விரட்டிப் பிடித்தாவது விஷயத்தைச் சொல்வோம்...ல்ல!..
    கில்லர்ஜி..யா!.. கொக்கா!..

    இருந்தாலும் அராபிய வடிவத்திலிருந்து வழிமாறி வந்த எழுத்துருக்களைத்தான் சட்டம் அனுமதிக்கின்றது!..

    நாம வேணும்..னா சொல்லிக்கலாம்..
    நாந்தேங்.. கோவாலகிருஸ்ணன்... அப்படின்னு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      தாங்கள் சொல்வதே நடைமுறை உண்மை வருகைக்கு நன்றி்

      நீக்கு
  7. நிறையக் கற்றுவைத்துள்ளீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுகளுக்கு மிக்க நன்றி நண்பரே

      நீக்கு
  8. கண்டுகொண்டேன்..கண்டுகொண்டேன் தமிழ் எண்களை.
    விரட்டிப் பிடித்த வீரரே, பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  9. இப்படி நம்பர் பிளேட்ல தமிழ் எண்களை எழுதி குற்றவாளிகள் தப்பிச்சுடுறாங்கன்னும் பேச்சு வந்திச்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இப்படியும் நடக்க சாத்தியம் உண்டே தமிழ் அவர்களையும் வாழ வைக்கிறதே...

      நீக்கு
  10. ஒரு சந்தேகம்...தமிழகத்தில் உள்ள வங்கிகளின் செக்குகளில் தமிழில் நம்பர்களை எழுதி கொடுத்தால் அதை அவர்கள் அக்சப்ட பண்ணி கொள்வார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வங்கிகளில் மட்டுமல்ல சட்டப்படியும் செல்லாது. ஆனால் பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக எனது வங்ஙி கணக்குகளை தமிழ் எண்களில்தான் எழுதி வைக்கிறேன் கடந்த 20 வருடமாக...

      நீக்கு
  11. உங்களின் விடா முயற்சிக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  12. நன்கு தெரிந்ததை எப்படி சொல்லாமல் விடுவது அதுவும் தமிழுக்கு சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே பார்த்து விட்டு சும்மா விட முடியுமான்னேன்....

      நீக்கு
  13. நல்ல செயல்.
    தெருவில் செல்லும் நண்பர் ஏற்றுக் கொண்டதும் நல்லது.
    துரத்தி சென்று சொல்லியதும் பாராட்டபட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அந்த நண்பர் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டது பாராட்டப்பட வேண்டியதே....

      நீக்கு
  14. நல்ல விடயம் ஜீ! அடிக்கடி எனக்கும் எழுத்துப்பிழை அதிகம் வந்து என்னையும் கொல்லுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே முயலுங்கள் விரைவில் நிவர்த்தியாகும்

      நீக்கு
  15. மீசைக்கார நண்பரே
    முதலில் கை கொடுங்க
    தமிழ் எழுத்துக்களை அறிந்து வைத்திருப்பதற்கு முதல் பாராட்டு,
    தவறென்று கண்டவுடன்,துரத்திப் பிடித்து,சுட்டிக் காட்டினீர்கள் அல்லவா அதற்குத் தனியே ஒரு முறை பாராட்ட வேண்டும்
    மகிந்தேன் நண்பரே
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுகள் கண்டு அகம் மகிழ்ந்தேன் நண்பரே.

      நீக்கு
  16. நண்பரே.
    எதிர்வரும் 26.11.2017 ஞாயிறு பிற்பகல்
    3.00 மணிக்குப் புதுகைக்கு வாருங்கள்
    புத்தகத் திருவிழாவில் சந்திப்போம்
    தம +1

    பதிலளிநீக்கு
  17. அன்புள்ள ஜி,

    ௧ = 1
    * ௨ = 2
    * ௩ = 3
    * ௪ = 4
    * ௫ = 5
    * ௬ = 6
    * ௭ = 7
    * ௮ = 8
    * ௯ = 9
    O - O

    தமிழ் வாழ்க!

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மணவையாரே
      பூச்சியத்துக்கு பலரும் 0 இதையே பயன்படுத்துகின்றனர்

      இதை "௰" ஏன் பயன்படுத்துவதில்லை ?

      நீக்கு
    2. மீள் வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  18. வாழ்த்துக்கள் அருமையான செயல்...

    அதை அப்படியே ஏற்றுக்கொண்ட அந்த மனிதரும் பாராட்டத்தக்கவரே.... தம் பிழைகளை ஒத்துக் கொள்பவர்கள் யார்..இந்த காலத்தில்...



    போன வருடம் ஒரு போட்டி தேர்வுக்காக படித்தேன்.. பாட புத்தகத்திலே ஆறாம் வகுப்பிலிருந்து உள்ளது....


    நம் நாட்டின் அனைத்து போட்டி தேர்விலும் இந்த கேள்வி கண்டிப்பாக இடம் பெறும்...என்ன அவர்கள் அதை மனனம் செய்யும் முறை தான் வருத்ததிற்கு உரியது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மை தவறை ஒத்துக்கொள்ளும் பக்குவம் மாமனினுக்கே வரும்.

      நீக்கு
  19. உங்கள் கண்களிலிருந்து எதுவும் தப்பாது போலிருக்கிறதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே எனது விழிகளில் கிடைத்தது தங்களது விழிகளுக்கும்.

      நீக்கு
  20. வாகனத்தின் பதிவு எண்ணை இதுபோல் தமிழ் எண்களில் எழுத சட்டப்படி அனுமதி இல்லை என்ற போதும் சும்மா ... ஒரு மாற்றத்திற்காக ... (தமிழ்ப் பற்றினால் அல்ல) எழுதுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சட்டப்படி அனுமதி இல்லைதான்.
      ஒரு சிலருக்கு பற்று இருக்கத்தான் செய்கிறது.

      கருணாநிதி குடும்பம் தமிழை வைத்தே முன்னேற்றம் அடைந்தது ஆனால் அவர்களே ஹிந்தி பள்ளி நடத்துக்கின்றார்களே... உலகம் இன்னும்தானே நம்புகிறது..

      நான் உண்மையான தமிழ்ப்பற்றாளனே ஆனால் உலகம் நம்பாது. வருகைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  21. உண்மையைச் சொல்லப் போனால் எனக்கும் தமிழ் எண்கள் தெரியாது தெரியாததால் பாதிப்பும் இருக்கவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா பொதுவாக எல்லோருக்கும் தெரியவில்லை என்பதால் இது பெரிய விடயமாக தெரியவில்லை.

      ஆனால் உண்மையில் இது தமிழர்களுக்கு தெரிய வைக்க வேண்டியது அரசின் கடமையே... நன்றி ஐயா

      நீக்கு
  22. ஆஹா எழுத்துக்களை மாற்ற சொன்னதும் நீங்க சொன்னது ஏற்றுக்கொண்ட அவரும் க்ரேட் :)
    ஆனால் காணொளியில் அந்த ரெண்டு பஸ் நடுவே போகும்போது பகீரென்றது ..ஹாரன் சத்தம் கூட நான் கேட்டு பல வருஷமாகுது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக உண்மையில் அவர் ஏற்றுக்கொண்டதால்தானே இப்பதிவை நான் எழுத முடிந்தது

      ஆமாம் நானும்கூட இப்பொழுது இந்த சப்தப்பதை ஜீரணிக்க பழகிக்கொண்டேன்.

      ஒலிப்பானை இந்தியாவின் தேசிய சப்தமாயிற்றே...

      நீக்கு
  23. நல்ல விஷயம். ஆனால் வாகனத்தில் இத்தனை வேகமாகச் செல்வது நல்லதல்ல நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களின் அறிவுரைக்கு நன்றி

      நீக்கு
  24. விடாமுயற்சிக்குப் பாராட்டுகள் எனினும் இப்படித் துரத்தணுமா வண்டியில்? அதுவும் வேகமாக? கொஞ்சம் கவனம் தேவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களின் கருத்தை ஏற்கிறேன் நன்றி.

      நீக்கு
  25. அறிந்து கொண்டேன் தங்களின் தமிழ் பற்றுதலை.....

    பதிலளிநீக்கு