இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜனவரி 27, 2018

இஞ்சி முரப்பா


குண்டடத்திலிருந்து அம்பிளிக்கை செல்லும் பேருந்தில் பயணிக்கிறேன் அளவான குடும்பம் ஆம் அவர்களிருவர், அவர்களுக்கிருவர் அந்தக் குடும்பம் ஏறியது இரண்டு இருக்கைகள் கொண்டதில் நான் மட்டும் அமர்ந்திருந்தேன் வழியில் தாராபுரம் பேருந்து நிலையத்தில் இஞ்சி முரப்பா விற்றார் ஒரு பெரியவர் பொதுவாக நான் இப்படி திண்பண்டங்கள் வாங்கித்திங்கும் பழக்கம் கிடையாது இருப்பினும் இஞ்சி முரப்பாவை கண்டதும் நாவு ஊறியது வெகு காலமாகி விட்டதே சாப்பிட்டு என்று ஒரு பொட்டலம் வாங்கினேன் ஒரு சில்லு சாப்பிட்டு விட்டு கையில் வைத்திருந்தேன். அந்தக் குடும்பம் எனக்கு பின்புறம் அமர்ந்திருக்க அந்தக் குடும்பத்தின் மூத்தது பெண் குழந்தை ஐந்து வயது இருக்கும் அடுத்தது பையன் கைக்குழந்தை. பெண் குழந்தையை என்னுடன் மாமாவோடு உட்கார்ந்துக்கோ என்று சொல்லவும் என்னுடன் பேசிக்கொண்டே வந்தது என்று சொல்ல மாட்டேன் என்னை கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்தது எனக்கே குழப்பம் வழக்கமாக நாம்தானே கேள்வி கேட்போம் ? பக்கத்தில் இரண்டு ரவுடிகளை பாதுகாப்புக்கு ஆறு காவலர்கள் துப்பாக்கி ஏந்திய நிலையில் கொண்டு செல்கின்றார்கள். இந்தக்குழந்தை கேட்டது.
அங்கிள் இவங்க போலீஸ்காரவுங்களா ?
ஆமா ஏன் கேட்கிறே ?
நான் வேற மாதிரி நினைச்சேன்
எந்த மாதிரி ?
முனுஷிபாலிட்டியில குப்பை அள்ளுறவங்களோன்னு...
எனக்கு ஒருநொடி தூக்கி வாறிப் போட்டது காரணம் பக்கத்து இருக்கையில் இருக்கின்றார்கள் மேலும் சத்தமாகவே பேசுகிறது இந்தக் குழந்தை.
ஏன் அப்படி நினைச்சே ?
இவங்களும் அவங்களை மாதிரித்தானே காக்கி ட்ரெஸ் போட்ருக்காங்க...
டிக்கெட் கொடுக்கிறவர் கூடத்தான் இந்த மாதிரி இருக்காரு... அப்படி எல்லாம் சொல்லக்கூடாது அவங்க காதுல கேட்டுச்சு உன்னை புடிச்சுக் கொண்டு போயிருவாங்க...
புடிச்சுட்டுப் போயி என்னை என்ன செய்ய முடியும் ? உங்களுக்கு பயமா ?
நான் இதற்கு என்ன பதில் சொல்வது அரபிக்காரங்கே கேள்வியையே திருப்பி விட்ருக்கோமே... இதை எப்படி சமாளிப்பது.... ? சரியென்று கையிலிருந்த இஞ்சி முரப்பாவை எடுத்துக் கொடுத்தேன்.
எனக்கு வேண்டாம்.
சாப்பிடு நல்லா இருக்கும் உடம்புக்கு நல்லது.
மாமா கொடுக்கிறதை வாங்கிக்க... அந்தக் குழந்தையின் அப்பா சொல்லியும் கேட்கவில்லை.
இப்படித்தான் இருக்கணும் வெளியாள் யார் தின்பண்டம் கொடுத்தாலும் வாங்க மாட்டியா ?
வாங்க மாட்டேன்.
இப்படித்தான் இருக்கணும் நல்லபிள்ளை.
சிறிது நேரத்தில் ஒரு காவலர் தனது பேக்கிலிருந்து பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்து அவர்களுக்குள் ஆளுக்கு இரண்டாக கொடுத்தவர் இந்த குழந்தையிடம் கொடுக்கவும் உடன் வாங்கி கொண்டது.
யாரு கொடுத்தாலும் வாங்க மாட்டேனு சொன்னே இப்ப வாங்கி கிட்டே ?
இது பிஸ்கட்ல...
நான் கொடுக்கும்போது வேண்டாம்னு சொன்னே ?
ஹும் அதை மனுஷன் திம்பானா ?
? ? ? ? ?
ஒன்றும் பேசாமல் பார்த்துக் கொண்டே இருந்தேன் அம்பிளிக்கை வரவும் குடும்பத்தினர் இறங்கினர் கடைசியில் அந்தக் குழந்தை ஒரு வார்த்தை சொல்லிச் சென்றது பாருங்கள் இன்னும் நெஞ்சை அறுக்குது.
அங்கிள் தைரியமாப் போங்க...
கையிலிருந்த இஞ்சி முரப்பாவை தின்பதா ? வேண்டாமா ? என்று நினைத்தவாறே இஞ்சி தின்ற சிங்கம் போல் பயணித்தேன். நீ எதற்கு குண்டடத்திலிருந்து அம்பிளிக்கை போனாய் ? என்று கேட்க நினைக்கின்றீர்களா ? கோயமுத்தூரியிலிருந்து மதுரை போனால் இந்த வழியில்தானே பேருந்து போகிறது.


Chivas Regal சிவசம்போ-
நமக்கு கொடுத்தாலும் நண்பர் நெல்லைத்தமிழன் மாங்காய் ஊறுகாய் கொடுக்காத நேரத்துல நாக்குல தேச்சுக்கிறலாம். ஆசுப்பத்திரிக்கு அய்நூறு ஓவா கொடுக்காதவங்கே... செத்துட்டா ஆயிரம் ஓவாய்க்கு ரோசா மாலை வாங்கி போடுவாங்கே... ஹூம் காலக்கொடுமையடி கருமாரி.

காணொளி

44 கருத்துகள்:

  1. மொபைலில் காணொளி ஓடாது போலும்.

    அந்தக்குழந்தை உங்களை ஒரு கலக்கு கலக்கி விட்டது போல.. அந்த போலீஸ்காரர்களைப் பாருங்கள்.. அதனிடம் வாய் கொடுக்கவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எனக்கு தெரிந்த விபரம் இம்புட்டுதான்....

      நீக்கு
  2. ஹாஹாஹா. கில்லர்ஜி அந்தப் புள்ளை வாழ்க! கொடுவா மீசைக்குக் கூடப் பயப்படாம..இந்த மீசை சும்மா...இந்த மாமா பயன்தான்கொள்ளி னு எப்டிக் கரெக்ட்டா கண்டுபிடிச்சுருக்கு பாருங்க...ஹிஹிஹி

    இளங்கன்று பயமறியாது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகத்தைப் பார்த்தாலே அப்பாவின்னு தெரிஞ்சு போகுதோ....

      நீக்கு
  3. இஞ்சி மொறப்பா நல்லாருந்துச்சா ஜி...

    சிவாஸ் ரொம்பத்தான் அலையுறார்...ஹாஹாஹா..நெல்லை கில்லர்ஜிக்கு கொடுப்பார்...சிவாஸ் கு எல்லாம் கொடுக்க மாட்டார்...நெல்லை ரொம்ப நல்ல பிள்ளையாக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இஞ்சி மொறப்பா நல்லா இருக்கிறது நண்பரே

    பதிலளிநீக்கு
  5. இஞ்சி முரப்பா, வீட்டில் செய்தால்தான் நீங்கள் படத்தில் காண்பித்துள்ளதுபோல் வரும். ஆசையைக் கிளப்பிவிட்டீர்கள்.

    குழந்தை உங்கள் கொடுவாள் மீசை கண்டு பயப்படும் என்று நினைத்தால், உங்களுக்கே தைரியம் சொல்லிவிட்டுச் சென்றுள்ளதே.

    நீங்கள் குறிப்பிட்ட ஊர் பெயரை இன்றுதான் அறிந்தேன். இவை, கோவை-மதுரை இடையில் இருக்கிறதா?

    6-7 வருடங்களுக்கு முன், பெங்களூர்-சென்னை (ஆபீஸ் டிராவல்தான்) செல்ல ரொம்ப விலை ஜாஸ்தியான பஸ் டிக்கெட்டை புக் பண்ணச்சொல்லி என் ஆபீஸ் நண்பனிடம் சொன்னேன் (1750 ரூ.. அது விமானத்தில் பயணிப்பதுபோல் சீட் அமைந்திருக்கும் பஸ்). ஆனால் சரியாகச் சொல்லாததால், அவன் 600-700ரூ டிக்கெட்டை புக் செய்தான் (ஸ்லீப்பர்). இந்த மாதிரி அருமையான பேருந்துகள் (டிக்கெட் விலை ஜாஸ்தியாத்தான் இருக்கும்) தனியாரிடம்தான் சாத்தியம். அரசு பஸ்கள் நீங்கள் போட்டுள்ளபடிதான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆசைப்பட்டால் செய்து பார்த்து உடன் நமக்கும் ஒரு பார்சல் அளுப்பிடுங்க....

      கடைசியில் நான்தான் பயந்து போனேன் அந்தக் குழந்தையிடம் ஆம் தாராபுரம் அடுத்து உள்ள ஊர்களே....

      தங்களது அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

      நீக்கு
  6. கண்டதை தின்னக்கூடாது என்பது அண்ட்சக் குழந்தைக்குத் தெரிந்திருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா குழந்தைக்கு தெரிந்தது எனக்கு தெரியவில்லையே......

      நீக்கு
  7. ஆஹா இஞ்சி முரப்பா சாப்பிடனும் போல இருக்கே. திருநெல்வேலிக்கே அல்வாவா(அருவாளா) வெவரமான குழந்தைதான்.

    கோயமுத்தூர் டூ மதுரை பஸ் இப்படிதான் இருக்குமா....

    பஸ்ஸாஆஆ...இல்லை பலஸ்ஸாஆ. அழகான பஸ் (காணொளி)
    ம்.. 2 பஸ்ஸுக்கும் எவ்வளவு வித்தியாசம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க உண்மைதான் அல்வா கொடுத்துட்டுதான் போச்சு அந்தக் குழந்தை
      நான் போன பஸ் இப்படித்தான் இருந்துச்சு.

      நீக்கு
  8. >> எனக்கே குழப்பம்.. வழக்கமாக நாம் தானே கேட்போம்?..<<

    ஆகா!...
    வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு.. என்பது இது தான் போலிருக்கிறது...

    அது இருக்கட்டும்...

    அந்த (!) மாலையையும் ஆயிரம் ரூவாய்க்கு கொண்டாந்துட்டானுவளா!..

    அதுல நாலு ரோசாப் பூவையும் நாலு கோழிக் கொண்டப் பூவையும் மிச்சத்துக்கெல்லாம் நெய்வேலிக் காட்டாமணக்கு இலையையும் தானே வெச்சிக் கட்டியிருப்பானுங்க!...

    அடே.. வெளங்கா மட்டை..
    சாயந்தரமானா அவிங்க சரக்கடிக்க வேணாமா?...

    ஆகா... ஊரு வெளங்கிடும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மையிலேயே திணறடித்து விட்டுதான் போனது.

      எல்லா விலையும் இப்போ இப்படித்தான் ஆயிருச்சு.

      நீக்கு
  9. இந்தக் கால குழந்தைகளுக்கு அறிவுத்திறன் அதிகம். அவர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு நம்மால் உடனே பதில் சொல்ல இயலாது. நல்ல வேளை அந்த குடும்பத்தினர் அம்பிளிக்கையில் இறங்கிவிட்டார்கள். இல்லாவிடில் மதுரை போகும் வரை அந்த குழந்தையை சமாளித்திருக்கமுடியாது என நினைக்கிறேன்.

    நல்ல அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மைதான் அம்பிளிக்கையில் இறங்க வைத்து அம்பாள் காப்பாற்றினாள்

      நீக்கு
  10. இஞ்சி முரப்பா காரமா இருக்குமே! அதான் குழந்தை வேண்டாம்னு சொல்லிடுச்சு! ஊர் பெயர் புதுசா இருக்கு! மற்றபடி பயணம் நன்றாக ரசித்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்பேரிக்கா மட்டும் போய் வந்தால் போதாது அம்பிளிக்கையும் போய் வரணும்

      நீக்கு
  11. ஆவ் !!இஞ்சி முரப்பா இப்போ சாப்பிடணும் போலிருக்கே :) இஞ்சி முரப்பா இலந்தை அடை எல்லாம் கண்ணால் பார்த்தே வருஷமாகுது .
    கில்லர்ஜி அது அந்த குட்டிப்பொண்ணுக்கு பதில் அஞ்சு வயது பையனை உக்காரவச்சிருந்தா இவ்வளோ கேள்வி கேட்டிருக்க மாட்டான் :) உண்மையில் பெண் குழந்தைகள் நல்ல விவரம் .ஒருமுறை சென்னையில் ஒரு 4 வயது குட்டி அவங்க அம்மாவை கேள்வியா கேட்டுது ..எக்ஸ்சாம்பில் ..காற்று எங்கிருந்து வருது நிலா ஏன் வானத்தில் இருக்கு இப்படி நிறைய ஒருகட்டத்தில் அம்மா பொண்ணுகிட்ட சொன்னாங்க இங்கே பாருடி ரொம்ப கேள்வி கேட்டினா பக்கத்து கம்பார்ட்மெண்டில் அப்பா கைல கொடுத்திட்டு வருவேன் உன்னை :) அது லேடிஸ் கம்பார்ட்மெண்ட் .

    ரெண்டு பேருந்துகளையும் பார்த்தேன் ..நீங்க போன பஸ் இவ்ளோ மோசமா !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இஞ்சி முரப்பா செய்வது எப்படி என்று இப்பொழுது அதிரடி அதிரா பதிவு போடுவார்கள்.

      உண்மைதான் கல்லூரிவரை இவர்களின் அறிவு நீள்கிறது.

      ஆம் நான் போன பேருந்து காணொளியில் உள்ளது மட்டுமே அதைத்தவிர வேறெதிலும் செல்வதி்ல்லை.

      நீக்கு
  12. அந்த "இஞ்சி துடுக்கு அழகி" உங்களை ஒரு உலுக்கு உலுக்கிட்டுப்போய் விட்டாள் போலிருக்கிறதே.
    சுவையான பதிவு!

    பதிலளிநீக்கு
  13. //ஹாஸ்பிடலில் 500 கொடுக்காதவங்க//

    கொடுத்துட்ட்டா அவர் பிழைச்சுகுக்குவாரே

    //செத்த பின் 1000 க்கு மாலை//

    அது போய்ட்டாருன்ன்னு சந்தோஷத்தில் வாங்கி போடுவது

    ஒருத்தன் சந்தோசமாக் இருக்கும் போது 1000 ரூ செலவழிச்சா தப்பா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா இதில் இப்படியொரு உண்மை ஒளிந்து இருக்கா ?

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இஞ்சி முரப்பா நன்றாக இருந்தது. படத்திலுள்ள இஞ்சி முரப்பாவை போல் சாப்பிட்டு நாளாகி விட்டது. குழந்தை படுசுட்டி போலும். கேள்வியாலேயே தங்களை பாடாய் படுத்தி கடைசியில் உங்களுக்கே
    தைரியம் கொடுத்தும் சென்று விட்டாள். பஸ அருமை. (முதலில் உள்ளதல்ல! காணொளியில் கண்டது.) தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ படுசுட்டிதான்.
      காணொளியில் கண்ட பேருந்தில்தான் பயணித்தேன்.

      நீக்கு
    2. அப்படியா? கோவையிலிருந்து மதுரையா? பயணத் தொகை அதிகமாயிருக்குமே! படுக்கை வசதி மட்டுமுள்ள பேருந்துகளே 1000,1500 க்குமேல் போகிறது.நீங்கள் பயணித்த பேருந்தின் வசதிகளை பார்த்து கேட்கிறேன்.வேறு ஒ்ன்றுமில்லை!

      நீக்கு
    3. நான் பயணித்த பேருந்து புகைப்படத்தில் உள்ளதே... தட்டச்சு செய்யும்போது விரல் குழப்பிடுச்சு ஹி.. ஹி.. ஹி..

      அப்ப காணொளியில் உள்ளது ஜப்பானில் எடுத்ததாக இருக்குமோ...?

      நீக்கு
    4. இருக்கலாம். இங்கெல்லாம் அத்தகைய வசதிகள் விரைவில் வருமென நம்புவோம்.

      நீக்கு
    5. நமக்கு நல்ல சாதாரண மக்களின் உயிருக்கு பாதுகாப்பான பேருந்துகள் ஓடினால் போதுமானது.

      தமிழ் நாட்டில் தற்போது ஓடிக்கொண்டு இருக்கும் பேருந்துகளில் 87000 பேருந்துகளுக்கு தகுதி இல்லையாம் என்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.

      நீக்கு
  15. விவரமான குழந்தைதான். உங்களை அப்பாவியாக்கி விட்டதே. நீங்கள் சொன்ன விதம் சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே டம்மி பீஸாக்கி விட்டது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  16. கில்லர்ஜி... இனியும் உந்த மீசையை வைச்சுக்கொண்டே இருக்கோணுமோ:) இல்ல வாணாமோ என மறு பரிசீலனை செய்யவும்:)..

    ஆபத்துக் குதவாப் பிள்ளை
    அரும்பசிக்குதவா அன்னம்..
    தாகத்தைத்தீரா தண்ணீர்ர்:)
    ஒரு கொயந்தை பயப்பிடாத மீசை:))

    இத்தனையும் இருந்தும் என்ன பயன்ன்ன்ன்ன்ன்:)).. ஹையோ இதைக் கேட்டவர் அடிரா செ..சே.. அதிரா இல்லை:) சிறீ சிவசம்போ அங்கிள் கேட்கச் ஜொள்ளி ஜொண்ணார்:)).. எய்தவர் இருக்க அம்பை:)) நோகக்குடா:) மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹும் அந்த குழந்தை கேட்டதாவது பரவாயில்லை போலயே...

      உங்க அங்கிள் சிவசம்போ சொல்லச் சொன்னதால சும்மா விடுறேன்.

      நீக்கு
  17. சகோ நலமா...
    ஶ்ரீராம் ப்ளாகுல இஞ்சி மொரபாவை சாப்பிட முடயாத ஏக்கத்துல வந்தா. இஞ்சியை மறக்க வைத்து விட்டது பிள்ளை....

    பஸ் 2 டும் மலையும் மடுவுமாக இருக்குது...என்ன செய்யறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே வாங்க சகோ நலமா ?
      பதிவை படித்து இரசித்து காணொளி கண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  18. சுவையான அனுபவங்கள். அதுவும் ஒரு குழந்தை மூலம் கிடைத்துள்ளது. இக்காலக் குழந்தைகளுக்கு இஞ்சி முரபா பற்றி தெரியாமல் இருந்திருக்கலாமோ🏝🏜🚎

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மைதான் இன்றைய குழந்தைகளுக்கு பஞ்சு மிட்டாய், கடலை மிட்டாய், இஞ்சி முரப்பா, தேன் மிட்டாய், பால் ஐஸ், குச்சி மிட்டாய் இதையெல்லாம் அழிந்து விட்டதால் தெரியாமலே போய் விட்டது.

      நீக்கு