இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜனவரி 30, 2018

எண்ணம் நலமெனில்...


உலகையும், மனிதனையும், ஜீவராசிகள் அனைத்தையும் படைத்தது ஒரே இறைவனா ? இல்லை பல தரப்பட்ட இறைவன்களா ? பல இறைவன்கல்ள் இருப்பது எப்படி சாத்தியமாகும் ? ஏதாவது ஒரு இறைவன் மரணத்தை தவிர்த்திருக்கலாமே... ஒருவேளை எல்லா இறைவன்மார்களும் ஒன்றுகூடி மரணம் இல்லையெனில் எல்லா மானிடர்களும் ஆட்டு மந்தையைப்போல் ஒருபுறமே சாய்ந்து விடுவார்கள். இடப்பற்றாக்குறை வந்துவிடும் ஆகவே மரணம் பொதுவான விசயமாக இருக்கட்டுமென பேசி வைத்தார்களோ ? மதப்பிரிவினைகளை மனிதன்தானே வகுத்துக் கொண்றாடான் எல்லா மனிதர்களுமே ஒருநாள் மரணிக்கின்றோம் என்பது நிதர்சனமான உண்மை.

இன்று உலகெங்கிலும் மதக்கலவரங்களால் இனக்கலவரங்களால் மக்கள் கொல்லப்படுகின்றார்கள். ஒரு மதத்தினரின் வழிபாட்டு ஸ்தலங்களை மற்றொரு மதத்தினர் நாசப்படுத்துகின்றனர் அவர்களுக்கு இது தவறென்று தெரியாதா ? அல்லது அவன் சார்ந்த மதம் இப்படி செய்யச்சொன்னதா ? ஒருக்கால் சொல்லி இருந்தால் ? அதை கேட்க வேண்டிய அவசியமில்லை என அறிந்து கொள்ள முடியாத அறிவற்ற ஜீவியா மனிதன் ? வேறொரு வழியில் சிந்திக்கலாமே... நீ அவனது உடைமையை இடிக்கும் போதும், அவன் மற்றொருவனுடைய உடைமையை இடிக்கும் போதும், மற்றவன் உனது உடைமையை இடிக்கும் போதும் இறைவன்களால் தடுக்க முடியாதா ?

இந்த இடத்தில், அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும், உட்கார்ந்து கொல்லும் எனச்சொல்லி என்னைக் கொல்லாதே...

அன்பைப்போதி

இதை எந்த மதம் சொல்லவில்லை ? முன்பின் தெரியாத ஒரு நபரைப்பார்த்து நீ புன்முறுவல் பூத்துப்பார் அவரும் உன்னைப் பார்த்து சிரிப்பார். உனக்கு தெரிந்த, பழக்கப்பட்ட நபராக இருந்தாலும் அவரை அடித்துப்பார் அவரும் உன்னை அடிப்பார். ஆக நாம் கொடுத்தது நமக்கே திரும்புகிறது. ஒருவனுக்கு உதவிப்பார் உனக்கும் அந்த உதவிகள் ஏதாவது வகையில் என்றாவது கிடைக்கும். ஒருவனுக்கு தீங்கு செய்துபார் அதுவே உனக்கும் கிடைக்கும். இந்த இடத்தில், தர்மம் தலைகாக்கும் என்பதையும், தன்வினை தன்னைச் சுடும் என்பதையும் நினைக்கலாமே...

எண்ணம் நலமெனில் எல்லாம் நலமே...
Anyway
எண்ணுவோம் எண்ணமெல்லாம் நலமே.
- கில்லர்ஜி

சாம்பசிவம்-
எல்லாம் சரி, இதை சொன்னவருக்கு பேரே சரியில்லையே...

Chivas Regal சிவசம்போ-
உலகம் பூராம் மதப்பிரச்சனையில் அடிச்சுக்கிறாங்கே... இதுல நம்ம ஊருக்காரன் ஜாதிப்பிரச்சளையில அடிச்சுக்கிறாங்கே... நமக்கு நெப்போலியன் கிடைச்சாலும் சரி, சிவாஸ் ரீகல் கிடைச்சாலும் சரி வேறுபாடு நினைக்காம ஒரே நேரத்திலே ஏத்திக்கிறோம் இதான் நம்ம ஸ்டைல்.

சிவாதாமஸ்அலி-
அடடே இதைச் சொன்னவருக்கு பேரே ஒத்துப் போகுதே...

76 கருத்துகள்:

  1. மீதான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் 1ச்ட்டூஊஊஊஊஊஊ என்னை ஆரும் அடிக்க முடியாதூஊஊஊ ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று இன்னொரு பெரீய கொமெண்ட் போட்டேன், ஆனா அனுப்பிய உடன் எரர் காட்டிச்சுது, போச்சுதா இல்லயா எனத் தெரியாமல், நீங்க பப்ளிஸ் பண்ணட்டும் என வெயிட் பண்ணினேன்... நீங்க உகண்டா க் கனவில இருந்திருப்பீங்கபோல பப்ளிஸ் பண்ணவே இல்லை கர்ர்ர்ர்ர்:)) இப்போதான் பார்க்கிறேன் அது செண்ட் பண்ணுப்படவில்லை, இருப்பினும் விடமாட்டேன் இதோ திரும்ப ரைப்பப்போறேன் எங்கிட்டயேவா?:))..

      நீக்கு
    2. “எண்ணம் அழகானால் எல்லாம ழகாகும் “ என்பது அதிராவின் கொப்பி வலதாக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்:) அதை அங்கின இங்கின சொற்களை மாத்திப் போட்டு கீழே கில்லர்ஜீஈஈஈஈஈஈ எனப் போட்டால் மீ விட்டிடுவனோ:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

      இதோ போகிறேன் குயின் அம்மம்மாவிடம் சொல்லி நீதி கேட்கப் போகிறேன்ன்ன்ன்ன்ன் .. விட மாட்டேன்ன்ன்...:))

      நீக்கு
    3. வாங்க இந்த வசனம் உங்களுடையதாக்கும் 2011-ல் அபுதாபியில் நான் ஆரம்பித்த அமைப்புக்கு நான் வைத்துக்கொண்ட கொள்கை இது சந்தேகம் இருந்தால் துபாய் ஷேக்கிடம் போன் செய்து கேட்கவும்

      நீக்கு
    4. இதை 2007 இலிருந்தே மீ சிக்னேச்சரா வச்சிருக்கிறேனே:))...

      போனாப்போவுது:)) சேக் ட நெம்பரைத் தாங்கோ:))

      நீக்கு
    5. 000987654321 ஷேக். சேக்கிழார் துபாய்

      நீக்கு
    6. ஹா ஹா ஹா உங்களுக்கு எவ்ளோ பெரீய மனசு:) இந்த நெம்பரைப்போலவே:)).. அப்போ சேக்கிழார் இறந்திட்டார் என்றினமே.. தலைமறைவாகி இப்போ டுபாயிலயா இருக்கிறார்?:)..

      நீக்கு
    7. நான் இப்போக்கூட இந்த எண்ணில் தொடர்பில்தான் இக்கேன்

      நீக்கு
  2. ஜாதிப்பிரச்சனை எனச் சொல்லும் போது ஏன் சிவசம்போ அங்கிளுக்கு நாக்குத்தடுமாறுது...:).. அவருக்கு எம்மதமும் சம்மதமே என நினைப்பதனாலதான் எல்லாம் ஒன்றாக உள்ளே போகுது:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க அங்கிள் எல்லாவற்றையும் சமாளிப்பாரோ...

      நீக்கு
  3. சிலபேர் நினைக்கிறார்கள் தமக்கு மரணமே வரப்போவதில்லை என:) அதனால்தான் எதுக்குமே அஞ்சுவதில்லை அவர்கள்:)...

    இறைவனால் தடுக்க முடியாதா எனக் கேய்க்கிறீங்களே.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதுக்காகத்தானே அங்கின இங்கின எல்லாம் விதி என ஒன்றிருக்கு அதை இறைவனாலும் தடுக்க முடியாது எனப் போஸ்டர் ஒட்டுறேன் அதுக்கும் அடிக்க வாறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மனிசராப் பிறந்திட்டால், ஏதாவது ஒன்றை எனினும் நம்போணும் இல்லை எனில் தேம்ஸ்ல ஆவது குதிக்கோணும்:)) ஜொள்ளிட்டேன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த சிலபேர் அரசியல்வாதிகள்தானே...

      நானும் ஜேம்ஸ் ஊரணியை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்

      என்றைக்காவது "தொப்பக்கட்டீர்" என்ற சப்தம் கேட்காதா ?

      நீக்கு
  4. அடுத்டதவன் தூற்றுவதால் நம் மதத்திற்கு இழுக்கு ஏற்படாது என்று ஒவ்வொரு மதத்தவனும் நினைத்து அவன் மதத்தில் சொன்னவைகளை ஒழுங்காக பின்பற்றினாலே பிரச்சனைகள் பல திர்ரும் ஆனால் அதை யாரும் சிந்தித்து செய்யமாட்டர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் தமிழா மிகச்சரியான கருத்து.

      நீக்கு
    2. மிக மிக அருமையான கருத்து மதுரை சகோ....ஹைfive...

      கீதா

      நீக்கு
    3. நிறைகுடம் என்றைக்குமே தழும்பாது:) அதிராவைப்போல:)) ஹா ஹா ஹா சரி சரி முறைக்காதீங்கோ:)..

      நீக்கு
    4. வெறும் குடமும் தழும்பாதாமே...

      நீக்கு
    5. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 கில்லர்ஜீ:).. வெறும் குடத்தை ஆரும் எதுக்கும் ஒப்பிடுவதில்லை:))

      நீக்கு
    6. அந்தக்குடம் இருந்தால்தான் தண்ணீர் தழும்பும.

      நீக்கு
  5. அன்பைப் போதி என்று சொல்லப் பட்டிருக்கும் பாரா வரிகள் அத்தனையும் நூறு சதவிகிதம் உண்மை. நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  6. நீங்க நடு ராத்திரியில் பதிவை வெளியிடுவதால் அதிரடி முதல்லே வந்துட்டதாக் குதிக்கிறாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே குதிக்குறாங்க... ஜேம்ஸ் ஊரணியிலயா ?

      நீக்கு
    2. அப்படிப் போடுங்க கீதாக்கா...ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    3. ஆஆஆங்ங்ங்ங் பொயிண்டுக்கு வந்திட்டேன்ன்ன்ன்:))..

      ஹலோ கீசா மேடம்:))[ஹையோ இது அதிரா கூப்பிட்டேன், நொட் நெ.தமிழனாக்கும்:)].. உங்களுக்காகத்தான் ஸ்ரீராம், சேவல் கூவி முடிச்சூஊஊஊஊ.. கிழக்கு வானம் சிவக்கும் நேரம்.... போஸ்ட் போடுறார்:)).. அதைக்கூட துரை அண்ணனுக்கு கோட்டை விட்டிடுறீங்க:)).. இங்கின வந்தும் 1ஸ்ட்டூஊஊஊஊ என வரோணும் என ஆசையாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நாங்க முழிச்சிருந்து ஜாமத்தில எங்கள்புளொக்கில அப்பப்ப ஜம்ப்:) பண்ணுவமே:) அது போல பண்ணுங்கோ:))..

      ஊசிக்குறிப்பு:
      வரும் கிழமையோடு முடிய, ஒரு கிழமை ஸ்கூல் பிரேக்க்க்க்க்:)) ஸ்பிறிங் ஹொலிடே:))... ஜம்ப் பண்ணினாலும் பண்ணுவேன்:) அலேர்ட்டா இருங்கோ:)).. ஹையோ இப்போ துரை அண்ணனுக்கும் பிபி ஏறப்போகுதே:)) ஹா ஹா ஹா...

      நீக்கு
  7. எல்லா மதங்களுமே அன்பைத் தான் போதிக்கின்றன. மனிதன் தான் புரிந்து கொள்ளவில்லை. நல்லதொரு பதிவு.

    பதிலளிநீக்கு
  8. அருமை நண்பரே
    ஆனால் உலகத்தில் பிரச்சினையே மதங்களால்தான

    பதிலளிநீக்கு
  9. மதம் என்பதும் ஒருவகைப் பித்துதானே. நம்நாட்டில் ஒவ்வொரு ஜாதியும் ஒரு மதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சரியாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  10. அறிவுக்கோ சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் உணர்வுகளுக்கு இடம் கொடுக்கின்றார்கள். வேதனையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் அழகிய கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  11. நெட் இல்லை..நெட் வந்ததும்..பிறகு வரோம்....

    பதிலளிநீக்கு
  12. மெய்ப்பொருள் காண்பது அறிவு!..
    வள்ளுவரு சொன்னாலும் சொல்லி வெச்சார்..

    ஆனா - அறிவு இருந்தாத்தான் மெய்ப்பொருளைக் கண்டு புடிச்சிருப்போமே!..

    நாங்க என்னா வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்றோம்...

    ஏ... அது ஆரப்பா அங்கால கூவுறது!?...

    எப்பாடுபட்டாவது மெய்ப்பொருளைத் தேடிக் கண்டுபிடித்து
    அதையும் GST வரம்பிற்குள் கொண்டு வருவோம் என்பதைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படும் நேரத்திலே!!!......

    இவிங்களா... ஊரு வெளங்கிடும்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      அருமையாக சொன்னீர்கள். மெய்ப்பொருளை இப்போ வியாபாரம் செய்ய ஆரம்பிச்சுட்டாய்ங்களா ?

      நீக்கு
  13. காத்திருந்து காத்திருந்து....ஹூம் நெட் வரல...என்ன கோபமோ அதுக்கு...அதான் மொபைலில் இருந்து...

    சிவப்பு வரிகள் 100/100 சரி...அக்மார்க் உண்மை....மனுஷநே மதத்தை வகுத்து அவனே இப்ப அதுல கிடந்து நாறுகிறான்...எல்லா மதமும் அன்பைத்தான் சொல்லுகின்றன...மனுஷனுக்குப் புத்தி இல்லை...அறிவுகெட்டவன்...

    கீதா: அக்கருத்துடன்...கடவுள் பற்றி நிறைய சொல்லியாச்சு...அவருக்கும் இங்கு மனிதன் அறிவிலியாக நடப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பொதுவாகவே இறைவன் என்ற கான்ஸப் ட் பற்றி தவறான புரிதல்கள் மக்களிடையே....பழத்தைக் கொடுக்கத்தான் முடியும் அதை உரித்து உண்பது நம் கையில் போல மூளை நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது....அதை பயன்படுத்துவது நம் கையில்...அதையும் இறைவன் தான் செய்யணும்னு ஸ்பூன் feed எதிர் பார்ப்பதால்தான் இறைவன் என்ன செய்யறேன்...இருக்கானா போன்ற கேள்விகள்...

    ஜி...என்னாச்சு...சிவாஸ், தாமஸ் அலி, சாம்பசிவம் எல்லாரும் ஒரே ட்ராக் ல கும்மி அடிக்கிறாங்க...ஹாஹாஹா..தெளிஞ்சிட்டங்க போல...!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி

      ஆமாம் மும்மூர்த்திகளும் சேர்ந்து கொண்டு லந்து பண்ணுறாங்க.....

      நீக்கு
  14. சைவ, கிருத்துவ அல்லா வாழ்க!

    பதிலளிநீக்கு
  15. எண்ணம் நலம் எனில் அனைத்தும் நலம்...

    ......நாம் என்றும் நல்லவைகளையே எண்ணுவோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  16. இந்த ஜாதியும் மதமும் மனங்களைக் கூறுபோட்டு அழிக்கின்றன.
    வேதனை மிகுந்த விடயம்.
    அன்பை மட்டும் நோக்காகக் கொண்டால் அத்தனையும் ஒன்றாகுமே.
    நல்ல பகிர்வு சகோ! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

      நீக்கு
  17. சிவபுராணம்,

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.... என்று சொல்லி
    ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க! என்று முடிகிறது (முதல் பாடல்). கேபிசுந்தராம்பாளின் 'ஒன்றானவன் உருவில் இரண்டானவன்...' பாடலும் உங்களுக்குத் தெரியும்.

    இருந்தாலும், மதம் என்பது, 'கட்சி' நிலைக்கு மக்களைக் கொண்டுபோய்விட்டது. கட்சிக்கு உறுப்பினர் சேர்ப்பதுபோல் மதத்துக்கு ஆள் பிடிக்கின்றனர். அதுதான் பார்க்கவே அசிங்கமாக இருக்கிறது.

    அதனால்தான் , 'அன்பே சிவம்' என்று சொல்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரிவாக அலசியமைக்கு நன்றி

      முடிவில் ''அன்பே சிவம்'' ஆம் அதில் அணைத்தும் அடங்குகின்றதே...

      நீக்கு
  18. மதம் சில மனிதர் களுக்கு மதம்பிடிக்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா உண்மையை அழகாக சொன்னீர்கள்

      நீக்கு
  19. அருமையான பதிவு .இறைவன் அன்பே பிரதானம் உன்னைப்போல் பிறனையும் நேசி என்றே சொல்லியிருக்கார் அவர் சொன்னதை விட்டு மற்றதெல்லாம் மனுஷங்க செய்றாங்க அப்போ எப்படி அவர் பிரச்சினையின் போது தடுப்பார் ? ஆனால் மனிதன் சிந்திக்கும் யோசிக்கும் திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறான் என்பதில் ஐயமில்லை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக அருமையான கருத்தை முன்வைத்தமைக்கு நன்றி.

      நீக்கு
  20. மதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்
    கடவுள் உண்டு.
    கடவுள் இருந்தாலும் இல்லாவிட்டாலும்
    மதம் உண்டு.
    கடவுளுக்கும் மனிதனுக்கும்
    இடையே வந்தது தான்
    முதல் அரசியல்.
    யாரை யார் ஆள்வது
    என்பதே அந்த அரசியல்.

    கில்லர்ஜி நிறைய சிந்திக்கத் தூண்டிவிட்டீர்கள்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா புதுமையான கருத்தை வைத்தீர்கள் நண்பரே வருகைக்கு நன்றி

      நீக்கு
  21. எண்ணம் நலமானால் அன்பை போதிக்கத்தேவையேயில்லை. அது தானாகவே மனித இதயங்களினுள் ஊற்றெடுக்கும். நல்லதொரு பதிவு!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்துக்கு நன்றி

      நீக்கு
  22. எல்லா மதங்களுக்கும் அடிப்படையாக அன்பைதான் சொல்கின்றன. ஆனால் மனிதனுக்கு மதம் எனும் மதம்பிடித்து அழிக்கிறான். அழிக்கின்றான். அழிந்தும் போகிறான்.

    பதிலளிநீக்கு
  23. அன்புக்கு ஏது ஜாதி, மதம்?
    அன்பு செய்து வாழ்வோம்.

    பழையபாடால் ஒன்று உண்டு."அன்பு என்பது இன்பானது என்று
    ஆசைஅலைகள் என்ற படம் என்று நினைக்கிறேன்.

    உண்டு என்று இரு, தெய்வம் ஒன்று என்று இரு என்ற பட்டினத்தார் பாடலும், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரும் அனபை போதித்தார்கள்.
    உன்னை நேசிப்பது போல் அயலனையும் நேசி என்று ஏசுவும். அண்டைவீட்டில் பசித்து இருக்கும் போது நீ உண்பது பாவம் என்று நபியும் போதித்தது அன்பைதான்.

    அன்பு செய்து வாழ்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அன்பைக் குறித்து மதங்கள் சொன்ன நல்ல தத்துவங்களை பட்டியலிட்ட விதம் அழகு.

      பாடல் வரிகளும் நன்று.

      நீக்கு
  24. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்றும் சொல்கிறது.
    'அன்பு பொலியுமிடம் சுவர்க்கம், அன்பு மறைந்தவிடம் நரகம்
    மனமே,நீ அன்பில் ஊறி வளர்க.'

    அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
    அன்பே சிவமாவது ஆரும், அறிகிலார்
    அன்பே சிவமாவது அரும் அறிந்தபின்
    அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.
    -திருமந்திரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமந்திரத்தை அழகாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  25. வணக்கம் சகோதரரே

    அழகாக சிந்தித்து எழுதி அனைவரையும் சிந்திக்கவும் வைத்த பதிவு.
    எண்ணங்கள் நல்லதாயின் எதுவுமே நல்லதாய் நடக்கும். தாங்கள் எழுதிய வரிகளில் உண்மை நிறைந்திருக்கிறது.நன்றி வாழ்த்துக்கள்.

    இதற்கு மு்ன் நிறைய கருத்துக்களுடன் எழுதினேன். அது எங்கேயோ ஓடிவிட்டது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி வாழ்க நலம் இதற்கு முன் கருத்துரை வரவில்லையே....

      நீக்கு
  26. எல்லோர்க்கும் எண்ணம் நலமாய்த்தான் இருக்கிறது நண்பரே...புற நிலைமை எல்லோரின் எண்ணப்படியே இல்லையே......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே செயல்பாட்டில் நல்லவை இல்லைதான்...

      நீக்கு
  27. எண்ணம் நலமெனில் எல்லாம் நலமே

    பதிலளிநீக்கு
  28. எண்ணம் நலமேனில் எல்லாம் நலமே என்பது சரியே.

    அதனால் வள்ளுவர் கூட ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்கிறார்.நல்லதையே நினைப்போம் நல்லதையே செய்வோம். நல்ல கருத்தை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

      நீக்கு
  29. மதமும் மானிடமும் பிரிக்க முடியாது. என்றாலும் மானிடம் உன்னதமானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அழகான கருத்துரை தந்தமைக்கு நன்றி

      நீக்கு
  30. எண்ணம் அழகானால் எதிலும் சிறப்பே

    பதிலளிநீக்கு