எழுத்து
எனக்கு
எனது
சுவாசம்போல
எப்பொழுதும்
எனது
எண்ணங்களை
எழுதிக்கொண்டே
இருக்கணும்
எனது
பொழுதுபோக்கு மட்டுமல்ல
எனது
கொள்கையும்கூட நாளை
எனது
பிறந்தநாள்
என்ன
எழுதலாம்
எதையாவது
எழுதுவோம்
மனம்
எதை
எதையோ
எழுதச்
சொன்னது
எத்திராஜ்
கல்லூரியில்
எழுபத்து
ஐந்தில் நடந்த
எழுத்துப்
போட்டியில் நான்
எழுதிய
எத்தோப்பிய
சாம்ராஜ்யம்
எங்கள்
தேவகோட்டைக்கே சொந்தம்
என்ற
கவிதையைப்பற்றி
எழுதலாமா
இல்லை
எனது
ஊரைப்பற்றி
எழுதுவோமா
எப்பவோ
எழுதிட்டோமே
எட்டையபுரத்து
கவிஞனைப்பற்றி
எத்தனை
தடவைதான்
எழுதுவது
எமது
நண்பர்
எமனேஸ்வரம்
எழுத்தாளர்
எமகண்டனைப்பற்றி
எழுதலாமே
என்னத்துக்கு
அவரைப்போயி
எவனையாவது
திட்டி
எழுதுவோமா
எவனைத்
திட்டலாம்
எல்லோரையும்
திட்டி
எழுதியாச்சே
எவனும்
இல்லையே
எருக்கஞ்செடியைப்பற்றி
எழுதலாமா
எதுவும்
தோனலையே
எமனைப்பற்றியும்
எமன்
எருமை
மாட்டுல
எதற்கு
வருகிறார்
என்பதைப்பற்றி
விரிவாக
எழுதுவோமா
எதற்கு
அது அபசகுணமாக
எருமை
மாட்டைப்பற்றி
எழுதுவோமா
எருமை
மாட்டுல
என்ன
இருக்கு
எதுவும்
இல்லை
என்னைப்பற்றி
எதுவுமே
இல்லையே
என்னத்தே
கண்ணையாவைப்பற்றி
எழுதலாம்
என்னத்தே
எழுதி
என்னத்தே
கிழிச்சு
என்ன
இது
என்றைக்குமில்லாமல்
எனக்கா
சலிப்பு
எழுத்து
மீது
எனக்கே
என்மீது
ஆச்சர்யம்
எப்படியோ
உறங்கிப் போனேன்
எனது
செல்லிலிருந்து
எங்கே
என்
ஜீவனே உன்னில் கண்டேனே
என்னைத்
தந்தேனே
எழுந்து
பார்த்தால்
எட்டு am மணி
எனது
அலுவலக
எண்ணிலிருந்து
அழைப்பு சட்டென
எதிர்ப்புறம்
பாய்ந்தேன்
எந்த
இடம் தெரியுமா
எனது
TOILET Sorry inside not allowed
Chivas Regel சிவசம்போ-
எதுவுமே இல்லாமே எதையாவது எழுதி என்னை படின்னா எனக்கு என்ன வேலை இல்லையா ? எட்டு மணியாச்சு கடை
திறந்திருப்பான் என்னோட நண்பன் எத்திராஜூ எழும்பூர் எட்டாம் நம்பர் கடையிலே எட்டணாவுக்கு எள்ளு உருண்டை வாங்கிகிட்டு எனக்காக காத்திருப்பான்...
கட்டிங்கோட எட்றா வண்டிய..
வா,,வ் சூப்பர் அண்ணா ஜீ. எ முன்னால வந்திருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும். ஆனாலும்வாசித்து எண்ணிவிட்டேன் எ 100.
பதிலளிநீக்குஆ.. சிவசம்போ கூடவா...
நோஓஓஓஓஓஓஓ இதை நான் ஒத்துக்கவே மாட்டேன்ன்ன்ன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்:))
நீக்கு//ஒத்துக்கவே மாட்டேன்//
நீக்குஏங்....கிறேன் ???
எ ?துக்குங்கறேன் ..இது சரியா இருக்கும் :)
நீக்குமீதான்ன்ன்ன் 1ஸ்ட்டூஊஊஊஊஊ:)
நீக்குஹாஹாஹாஹாஹாஹாஹா ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி ஹூஹூஹூஹூஹூ அதிரடி அதிரா, வேணுங்கட்டிக்கு வேணும், வெங்கலங்கட்டிக்கு வேணும்! ஏமாந்தீங்களா! ஜாலியா இருக்கே!
நீக்கு"எமன் எருமை மாட்டில் எதற்காக வருகிறார் என்பதைப்பற்றி விரிவாக எழுதுவோமா " என வந்திருக்கவேணுமோ....?
பதிலளிநீக்கு" என்னத்தே கன்னையா வைப்பற்றி எழுத்தலாம் " இதையும் கவனியுங்க அண்ணா ஜீ
பதிலளிநீக்குஎழுந்து பார்த்தால் எட்டு மணி, எனது அலுவலக எண்ணிலிருந்து அழைப்பு..இந்த கடைசி பந்தியும் கவனிங்க அண்ணா ஜீ..
பதிலளிநீக்குவணக்கம் சகோ நள்ளிரவில் எழுந்து அம்மாவிடம் திட்டு வாங்கி கொண்டே மீண்டும் ஒன்றிலிருந்து டைப்பினேன்.
நீக்குஎனது கணினியில் சரியாகவும், செல்பேசியில் குழறுபடியாகவும் காண்பித்தது.
ஏதோ பிரச்சனை இருக்கிறது வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்திக்கு விரதம் இருந்தால்தான் சரியாகும் போல...
தகவலுக்கு நன்றி சகோ
ஆஹா.. கில்லர்ஜி... உங்கள் அம்மாவிடம் திட்டு வாங்கினீர்கள் என்று கேட்கும்போதே எனக்கு சந்தோஷமா இருக்கு. வேற யாருக்கு அந்த உரிமை இருக்கு (பசங்களைவிட்டால்)
நீக்குஅம்மா எனது பராமரிப்பில் இருந்தாலும்கூட பயப்பட வேண்டிய விசயங்களுக்கு பயப்படணும் அதுதானே நண்பரே நல்ல மகனுக்கு அழகு.
நீக்குஅம்மா எனக்கு பயப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆங்ங்ங் கவிஞர் கில்லர்ஜி வாழ்க!!!
பதிலளிநீக்குஜி எம் பி ஐயா போஸ்ட் படிச்ச எபெக்ட் போல:) எமன் பற்றியும் எழுதியிருக்கிறீங்க:) நல்லவேளை வைரவர் என்னைக் காப்பாத்திட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என் பெயர் எ யில இது டமில் எ:) தொடங்கவில்லை.. :).
ஐயாவுக்காக மரணத்தைப்பற்றிய பதிவு எழுதிக் கொ'ன்'று வருகிறேன்.
நீக்குஉங்கள் பெயரை ஆங்கிலத்தில் எழுதினால் "எதிராதானே"
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
நீக்குஹா ஹா ஹா சிறீ சிவசம்போ அங்கிள் திருந்திட்டார்போல.. எள்ளுருண்டைக்காக வெளிக்கிடுறாரே:))
பதிலளிநீக்குஉங்கள் அங்கிள் திருந்திட்டாரா ? அவரோட நண்பர் எத்திராஜ் எள்ளுருண்டையும் 'கட்டிங்'கோடுதானே காத்திருக்கிறார்.
நீக்குஎ வில் துவங்கி அத்தனையும் எவிலேயே எழுதியிருக்கீங்க:) சூப்பர்
பதிலளிநீக்குவருகை தந்து இரசித்தமைக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோ!
பதிலளிநீக்குஅட.. அட.. என்ன திறமை! எத்தனை இயல்பாகச் சொற்கள் வந்து உங்கள் முன் மண்டியிட்டு நிற்கின்றன...:))
மொழித்திறனுக்கு நல்ல பயிற்சி!
விடயங்களும் நகைச்சுவை கலந்த பொருட்சுவை!
கலகலப்பாக்கிய நல்ல பதிவு!
நல் வாழ்த்துக்கள் சகோ!
வாழ்க வளமுடன்!
பாவலரின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி வருகைக்கு நன்றி சகோ.
நீக்குஹா ஹா ஹா ஹ ஹா....சரிதான் சிவாஸும், சிவதாமஸ் அலியும் சேர்ந்து சாம்பசிவத்தை நல்லா மண்டைய குழப்பியிருக்காங்களோ...அவருக்குத் தெரியாம என்னத்தையோ ஊத்திக் கொடுத்து!!!! இது சிவாஸோட வேலையாத்தான் இருக்கும்.....
பதிலளிநீக்குஎ எ எ எ எ எ எ எ ....சாம்பசிவத்தைப் பிடித்தது என்ன என்ன என்ன?!!
தேம்ஸ் காரங்க எல்லாம் முந்திக்கிட்டாங்க ஹா ஹா ஹா...
வருக சிவாதாமஸ்அலி அவங்க மத வழக்கப்படி குடிக்க மாட்டாங்களாம்.
நீக்குஎடா.... எடா.... எடா...... (அடா வுக்கு பதில்!) எல்லாமே எக்குத்தப்பா எழுதி எவர்ந்துட்டீங்க! (அதான்... கவர்ந்துட்டீங்க)
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி நீங்களும் கருத்துரையில் கலக்கிட்டீங்க...
நீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை
நண்பரே
வருக நண்பரே நன்றி
நீக்குஎதையும் என்னால் எழுதமுடியும் என்ற எண்ணமே எங்கோ எடுத்துச்செல்லும் தங்களை.
பதிலளிநீக்குஎனது பாராட்டுகள்!
ஆஹா நீங்களும் "எ" 8 கொடுத்து விட்டீர்கள் வருகைக்கு நன்றி நண்பரே...
நீக்கு100 எ எழுதினால் எழுத்தாளன். அப்போ 50 எ எழுதினால் அரை எழுத்தாளனோ? உங்கள் நண்பர் பகவான்ஜீயையும் எழுத வையுங்கள்.
பதிலளிநீக்குJayakumar
வாங்க ஐயா இது என்ன கணக்கு என்பது புரியவில்லையே...
நீக்குநண்பர் திரு. பகவான்ஜி எழுதுவது அவரது கையில் உள்ளது.
எங்கும்
பதிலளிநீக்குஎதிலும்
எ - என்று
எழுத்து அதனை
எண்ணி
எங்கள் முன்
எப்படி
எந்தன் பதிவு
எனப் படைத்திட்ட
எங்கள் ஜி!..
எடடா அந்த
எட்டடி வாளை
என்னும் சொல்லை
எடுத்தெறிந்து
எடடா அந்த
எழுதும் கோலை
என்றே
எங்கும் தமிழ் பரப்ப
எழுந்த தம்மை
என்னென்று சொல்ல!..
எல்லாம் இனிது
என்றும் புதிது..
எழு ஞாயிறாய்
எழும் திங்களாய்
எந்தன் தோழா..
என்றும் வாழ்க!..
அன்பின் ஜி
நீக்குதாங்களும் கவிதையை கருத்துரையாய் தந்து விட்டீர்கள் மகிழ்ச்சி.
,🙏👌
நீக்குநன்றி நண்பா.
நீக்குநாளை பிறந்த நாளா? வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகவிதை நன்றாக இருக்கிறது.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
வருக சகோ எனது பிறந்தநாள் டிசம்பர்-19 இது கவிதைக்காக வந்த வரிகள் சும்மாகாச்சுக்கும்...
நீக்குவருகைக்கு நன்றி
பிறந்த நாட்கள் ஆண்டுக்கு எத்தனை முறை வரும் எதையாவது சும்மாவாச்சுக்கும் எழுதி குழப் பாதீர்கள் குழம்பாதீர்கள்
பதிலளிநீக்குஐயா எனது பிறந்தநாள் டிசம்பரில்தானே வந்தது இங்கு சொல்லப்பட்டது வார்த்தைகளுக்காக...
நீக்குஎன்னத்தை என்று கூறியே இவ்வளவு எழுதியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குவருக முனைவரே இவ்வளவுதான் முடிந்தது கணக்கு 100 வருகைக்கு நன்றி
நீக்குபிறந்த நாள் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஎனக்கு பிறந்தநாள் இல்லை ஐயா வாழ்த்துகளுக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஎப்படி,எவ்வாறு இப்படி 100ஐ தொட்டு நிறைய விசயங்களை கோர்த்தவாறு வார்த்தை ஜாலங்கள் புரிந்தீர்கள்? சூப்பர். மிகவும் ரசித்துப் படித்தேன். வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ இரசித்து படித்தமைக்கு நன்றி
நீக்குதேவகோட்டைக்காரர் ஏன் இப்படி எ எடுத்துக் கொண்டீர்கள்.
பதிலளிநீக்குஎளிமையும் கற்பனை வளமும் நிரம்பியிருக்கிறது.
இதே போல கோட்டையூர் நினைவாகக்
கோ என்று இன்னோரு பதிவு போட வேண்டுமாய்க்
கேட்டுக்கொள்கிறேன்.
வாங்க அம்மா வருகைக்கு நன்றி.
நீக்குஆஹா மறுபடியும் ஆரம்பிச்சு வச்சுட்டீங்களா...?
"எ" என்னும் எழுத்தில் இத்தனை சொற்களா?
பதிலளிநீக்குஇவ்வளவுதான் என்னால் இயன்றது நண்பரே...
நீக்குநம்ம ஜிஎம்பி ஐயா எழுதினதின் தாக்கமோ? ரசிக்க வைத்தது! உண்மையும் இதானே!
பதிலளிநீக்குவருக ரசித்து படித்தமைக்கு நன்றி
நீக்குஎழுதிய
பதிலளிநீக்குஎழுத்துக்கள்
எல்லாம் சிறப்பு.....
வருகைக்கு நன்றி சகோ
நீக்குஎன்னவோ எழுதணும்னு எண்ணம். என்ன எழுதலாம் எச்சரிக்கயா என எண்ணிக்கிட்டிருக்கேன்.
பதிலளிநீக்குஅடடே நீங்களும் 8 போட்டுட்டீங்க... விரைவில் லைசென்ஸ் கிடைக்கும்.
நீக்குஅருமைங்கிறேன்
பதிலளிநீக்குநன்றிங்கிறேன்...
நீக்குஎன்னத்த எழுதி
பதிலளிநீக்குஎன்னத்த கிழிச்சு
என்ற
சலிப்பு வந்தால்
சற்று ஓய்வு எடுக்கலாம்!
என்னத்த எழுதி
என்னத்த பண்ணினால்
என்ற
உணர்வு வந்தால்
எழுதாலாம் பாருங்கோ - அந்த
எழுத்தே எம்மை உயர்த்தும்!
வருக நண்பரே சரியாக சொன்னீர்கள்.
நீக்கு