இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், பிப்ரவரி 19, 2018

தமிழ் (நிகழ்)ச்சி


தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளை பார்த்து இருப்பீர்கள் நடத்துபவர் தமிழர்தான் அவருக்கு தமிழ் மிகவும் அழகான உச்சரிப்புடன் பேசத் தெரிந்தவர்களைத்தான் நியமித்து இருப்பார்கள் இதில் சிறப்பு விருந்தினராக வருவார்கள் சிலர் அவர் தற்போதுதான் தனது திறமையை இயக்குனர்களிடம் காண்பித்து முன்னுக்கு வந்து கொண்டு இருப்பார் தமிழ் உச்சரிப்பு கிடக்கட்டும் அவளுக்கு முதலில் தமிழ் பேசவே வராது நல்ல வார்த்தை எது கெட்ட வார்த்தை எது என்று பிரித்துப் பார்க்கும் பக்குவம் வந்து இருக்காது அவளை குற்றமும் சொல்ல முடியாது அவளிடம் இவர்கள் கேள்விகள் கேட்பார்கள் ஏற்கனவே அவளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட விடைகளை இவளும் சொல்வாள் இடையில் மறந்து விடும் காரணம் பிறமொழி பழகிக்கொண்டு இருக்கும் புதுமொழி ஏதாவது வார்த்தை உச்சரிப்பு மாறி அது ஆபாசமான வார்த்தையாக வந்து விடும் சமீபத்தில் ஒருத்தி இப்படி பேசி விட்டாள் இதைக்கேட்டு அனைவரும் சிரிக்கின்றார்கள் சிரிப்பு வருவதும் இயல்புதான் ஆனால் நிகழ்ச்சி நடத்துபவன் அவளை மீண்டும், மீண்டும் சொல்ல வைத்து ரசிக்கின்றான் இது முறையா ?
 
ஓர் ஆபாசமான வார்த்தை பொது இடத்தில் தவறுதலாக வந்து விட்டது அதை மூடி மறைப்பதுதான் நல்ல மனிதர்களுக்கு அழகு நாம்தான் பொது இடத்தில் எதைத்தான் செய்வது என்று விவஸ்தையே தெரியாமல் போய்க்கொண்டு இருக்கின்றோமே... இதிலும் இப்பொழுது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தமிழர்களோ, தமிழச்சிகளோ அவசியமில்லை என்றும் ஆகிவிட்டது ஆம் பீஸ்போன பழைய நடிகர் நடிகைகளை வைத்து நடத்துகின்றார்கள் குஷ்பு, மீனா, கௌதமி, ரோஜா, நமீதா, அம்பிகா, ராதா, நிரோஷா இந்த மாதிரியான வி...............களை வைத்து நடத்துகின்றார்கள் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் டமில் பேசலாம் காரணம் இவர்கள் தமிழச்சிகள் இல்லை கேள்வி கேட்பார் யாருமில்லை காரணம் நாம் கொஞ்சும் தமிழைவிட கொல்லும் டமிலை ரசிக்கின்றோம் இவர்கள் தமிழச்சிகளுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள் அவர்களுக்கு முக்கியமான வேலைகளுக்கு மட்டுமே தேவை அது செய்திகளை நல்ல உச்சரிப்புடன் சொல்வதற்கு மட்டும் மற்ற வேலைகள் கிடைக்காது காரணம் நம் இன தமிழச்சிகள் மேலேயுள்ள வி...............களைப்போல வளைந்து போக மாட்டார்கள் இதுதான் நடைமுறை உண்மை மறைந்துள்ள உண்மை.

இந்த தரங்கெட்ட சூழலை உருவாக்கியது திரைப்படத்துறையினர்தான் என்று மேதாவிகளைப்போல சொல்லி விட்டு இதற்கு சமூக அங்கத்தினராகிய நான் அல்ல என்று ஒதுங்கி விடுகின்றோம் உண்மையில் நாம்தான் காரணவாதிகள் இன்னும் சொல்லப்போனால் நமது முந்தைய சந்ததியினர் அதாவது நமது தந்தையர்களே அவர்கள்தான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் பார்த்து வளர்த்து விட்டு நமக்கு தாரை வார்த்து கொடுத்தார்கள் நாம் அதை இன்னும் அபிவிருத்தி செய்து நமது பிள்ளைகளிடம் கொடுத்து விட்டோம் இனி ஏதும் செய்ய முடியுமா ? இன்று ஏதாவது திரைப்படம் மனைவி மக்களுடன் உட்கார்ந்து பார்க்க முடிகின்றதா ? ஆனாலும் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம் பழைய திரைப்படங்களில் நாயகியை ரவிக்கை பாவாடையுடன் பார்ப்பதே அரிதான விடயமாக இருந்தது இன்று திரையரங்கில் படங்களை விடுங்கள் வீட்டில் தொலைக்காட்சியில் விளம்பரத்தில்கூட உள்ளாடைகளுடன் பெண்கள் காட்சி தருவதை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கின்றோம் இதையெல்லாம் தடுக்க முடியாதா ? முடியும் ஆனால் நமக்கு இது அவசியம் என்ற வட்டத்துக்குள் நம்மை நிறுத்திக்கொண்டு வாழ பழகி விட்டோம் இதை தடுப்பது எப்படி ? உடன் சொல்லி வைத்தாற்ப்போல தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தியிருக்க வேண்டும், திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி இருக்க வேண்டும் அவர்களும் நிறுத்த தொடங்கி இருப்பார்கள் நாம் நிறுத்தவில்லை அவர்களும் நிறுத்தவில்லை இதுதான் நடந்தது

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் இந்த நொடியில் எத்தனை லட்சம் மக்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதை கணக்கு எடுக்கமுடியும் அவ்வழியில்தான் நிகழ்ச்சிகள் மேலும், மேலும் அலங்காரம் என்ற பெயரில் அலங்கோலம் ஆக்கப்படுகின்றது தமிழ் வாழ்க ! என்று சொல்கின்றவர்கள் நானாட நாயாட என்ற நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். இனி இதை நமது பிள்ளைகளிடம் சொல்லி தடுப்பது நடக்குமா ? முடியாதுதான் காரணம் அன்று நாம் பெற்றோருக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தோம் இன்று எந்த வீட்டிலாவது பிள்ளைகள் பெற்றோரின் பேச்சைக் கேட்கின்றார்களா ? ஒரு வீடு காண்பியுங்கள் காரணம் அன்று குழந்தைகளை ஆசிரியரிடம் ஒப்படைக்கும் பொழுது இரண்டு கண்ணை மட்டும் விட்டுப்புட்டு தோலை உறிச்சுடுங்க என்று சொன்னார்கள் இன்று எம்புள்ளை மேலே கையை வச்சே லாக்கப்புல வச்சு நச்சுப்புருவேன் என்று குழந்தைகள் முன்பே சொல்லி சேர்க்கின்றோம் விளைவு அனுபவிக்கின்றோம் அனுபவிப்போம் வேறு வழியில்லை எதிர் காலத்தில் நம் இனிய தமிழில் கற்பு என்ற சொல் களையப்படலாம் என்பது எனது கணிப்பு.

குறிப்பு - மேலே குறிப்பிட்ட, வி............களை இடைப்பட்ட இடத்தில் ஐ.பி. என்று போட்டுக் கொள்ளுங்கள் அப்படி நினைத்துதான் நான் எழுதினேன்.

44 கருத்துகள்:

  1. அனுபவிப்போம்.. - என்பதை விட
    இந்தக் கொடுமைகளை எல்லாம் அனுபவிக்க வைத்து விட்டார்கள்..

    இவர்கள் தான் தமிழை வாழ வைப்போம் என்று வந்தவர்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீ இல்ல மீ இல்ல இம்முறை மீ 1ஸ்ச்ட்டு இல்லை:(.. சரி அது போகட்டும் துரை அண்ணன் தினைப் பாயாசம் குடிச்ச உசாரில முதலாவதா வந்திட்டார்:)

      நீக்கு
    2. ஓ!..

      பூஸாரை முந்திக்கிட்டோமா!... ஆகா!..

      தெரியாமலா சொல்லி வெச்சாங்க!...

      ஒரு கதவை அடைச்சா
      இன்னொரு கதவு திறக்கும்..ண்டு!..

      நீக்கு
    3. ஹா ஹா ஹா இனிமேல் எப்போ தினைப் பாயாசம் செய்தாலும் நேக்கு சொல்லி அனுப்புங்கோ துரை அண்ணன்:) நான் உசாராகிடுவேனே:)

      நீக்கு
    4. அன்பின் ஜி
      தங்களது அழகிய கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  2. கில்லர்ஜி இன்று பொயிங்கோ பொயிங்கெனப் பொயிங்கியிருக்கிறார்.. பின்ன டமிலைக் கொன்றால் எனக்கும் கெட்ட கோபம் வரும்.. ஏனெண்டால் மீக்கு டமில டி ஆக்கும்.

    இப்போதைய தமிழ் நாட்டுத்தலைமுறையினருக்கு தமிழ் தெரிவது குறைவு.. ஆனா இதில் இன்னொரு விடயம், வெளிநாட்டில் இருக்கும் நமக்கு.. நம் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது.. எழுதப்படிக்க மாட்டார்கள் என கூச்சப்பட்டு சங்கடப்பட்டுச் சொல்கிறோம்... ஆனா அங்கிருப்போரில் சில பெற்றோர் பெருமையாகச் சொல்கின்றனர் .. என் பிள்ளைக்கு தமிழ் தெரியாது என... அப்போ தவறு எங்கே ஆரம்பிக்கிறது??..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தமிழ்நாட்டில் உள்ளவங்க சொல்வதற்கு தயங்குவதில்லை பெருமையே கொள்கின்றனர்.

      நீக்கு
  3. உலகம் எங்கயோ போய்க் கொண்டிருக்கிறது கில்லர்ஜி.. இனிமேல் காலத்தில் நடப்பதைப் பார்த்து காக்க போய்விடுவதே மேல்.. தட்டிக் கேட்போரை.. நாகரீகம் இல்லாதவர்.. பட்டிக்காடு என ஏழனம் செய்யும் நிலைதான் வந்து கொண்டிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க எப்படியோ மற்றவங்க ஜொள்வது போல நீங்களே ஜொள்ளிட்டீங்களே....

      நீக்கு
  4. நல்லவேளையாக நான் இந்தக் கண்ராவி நிகழ்ச்சிகள் எல்லாம் பார்ப்பதில்லை. அவர்கள் ஆட்டமும், பாட்டமும் பார்க்க சகிக்காது. பொறுமையும் இருக்காது. சி... களை என்கிற இடத்தில் நான் யோசித்து வைத்தது "வியாபாரிகளை "

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி.. நான் 'வி.....களை' என்பதை 'வித்தகர்களை' என்று வாசித்தேன் என்று பொய் சொல்லமாட்டேன். :-)

      நீக்கு
    2. வருக நண்பரே ஸ்ரீராம்ஜி பொய் சொல்கிறார் என்பதை நாசூக்காக சொல்வதை புரிந்து கொண்டேன்.

      நீக்கு
    3. கில்லர்ஜி... இது ஞாயமா? தமன்னா ரொம்ப அழகுன்னு சொன்னா, அப்போ அனுஷ்கா அசிங்கமாவா இருக்காங்கன்னு எடுத்துக்கலாமா :-)

      நீக்கு
    4. வாங்க ஸ்ரீராம்ஜி எனக்கு டி.வி. யை உடைத்து விடுவோமா என்று தோன்றும்.

      நீக்கு
    5. நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களுக்கு உங்களது உவமைகூட டீன்-ஏஜ்ஜாகத்தான் இருக்கு.

      நீக்கு
  5. கில்லர்ஜி உங்களின் ஆதங்கப் பதிவு நல்ல பதிவு. இங்கு பெற்றோர் தங்கள் குழந்தைகளூக்குத் தமிழ் தெரியாது என்று சொல்லிக் கொள்வதை மிகவும் பெருமையாக நினைக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. மட்டுமல்ல என் குழந்தை ஹிந்தியின் இந்த பரீட்சை பாஸ் செய்திருக்காங்க, ஃப்ரென்ச், ஜெர்மன் படிச்சுருக்காங்க என்று சொல்வர். தவறு இல்லை. கண்டிப்பாக கில்லர்ஜி போல பல மொழிகளைக் கற்க வேண்டும். ஏனென்றால் பல மொழிகள் கற்பதில் நிறைய நன்மைகள் இருக்கு. ஆனால் பல மொழிகள் கற்கும் அதே சமயம் நம் தாய் மொழியையும் கற்க வேண்டாமோ?! கற்கணும்.

    ஒன்றே ஒன்று மட்டும் எனக்குப் புரிவதில்லை கில்லர்ஜி....யாரை நீங்கள், நீங்கள் என்றில்லை பலரும் சொல்வது.....யாரைத் தமிழர் என்று சொல்கின்றீர்கள் என்பது மட்டும் புரிவதில்லை. அதற்கு என்ன அடையாளம்? என்ன ஆதாரம்...

    மற்றபடி தொலைக்காட்சிகள் நிகழ்ச்சிகள் பற்றிய குமுறல் மிகவும் சரியே...

    ஆசிரியர்களைப் பற்றிச் சொல்லும் இடத்தில்...முன்பு ஆசிரியர்கள் அடித்தார்கள் என்பது நியாயமாக இருந்தது. ஆனால் இப்போது ஆசிரியர்களின் மேலும் தவறு இருக்கிறது. எல்லா ஆசிரியர்களையும் நல்லாசிரியர்கள் என்று சொல்ல முடியய்லை. விரல் விட்டு எண்ணிடலாம். ஆனால் அப்போது, நாம் படிக்கும் காலத்தில் கொஞ்சம் கடுப்படிக்கும் ஆசிரியர்களை விரல் விட்டு எண்ணிடலாம்...அதை விடுங்கள் எத்தனை நல்லவர்கள் ஆசிரியர் தொழிலுக்கு வருகிறார்கள்? அத்தொழிலை ஆத்மார்த்தமாகச் செய்கிறார்கள் சொல்லுங்கள்? எனக்குத் தெரிந்தவரை அவர்கள் நினைக்கும் வேலை கிடைக்காதவர்கள் தான் ஆசிரியர்களாகப் பள்ளியிலும், கல்லூரியிலும் வருகிறார்கள். ஏதோ ஒரு வேலை கிடைத்ததே என்று. வேறு வேலை கிடைத்துவிட்டால் இவ்வேலையை விட்டும் செல்கிறார்கள்.
    தயவாய் இங்குள்ள நல்லாசிரியர்கள் என்னுடைய இந்தக் கருத்தைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எங்கள் வீட்டில் கல்வித் துறையில் பலர் இருப்பதால் என்னால் இதை ஆணித்தரமாகச் சொல்ல முடியும். கல்வி சரியாகப் போதிக்கப்படுவத்ல்லை. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

    அடுத்து திரைப்படங்கள். கில்லர்ஜி அந்தக் காலத்திலும் திரைப்படங்களில் ஆபாசமா உடைகள், நடனங்கள், சீன்கள் எல்லாம் இருந்தன.நான் அப்போது படங்கள் பார்த்ததில்லை. ஏனென்றால் என் வீட்டில் திரைப்படம் என்றாலே தவறு என்ற போதனை. ஆனால் இப்போது சமீபத்தில் சில பார்க்க நேர்ந்தது. எனக்கு அப்போதைக்கும் இப்போதைக்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை. மே பி அப்போ டெக்னாலஜி அத்தனை டெவலப் ஆகாததால் கறுப்பு வெள்ளையாக, அல்லது ஈஸ்மென்ட் கலராக இருந்ததால் நம் கண்களுக்குத் தெரியவில்லையோ...இப்போது எல்லாமே பளிச்சென்று இருப்பதால் கண்ணில் ரொம்பப் படுதோனு தோணுது!! ஹா ஹா...என்னைப் பொருத்தவரை எந்த மாற்றமும் இல்லை.

    பொதுவெளி நாகரீகம் என்பதும் அப்படியே....அப்போது பல கண்ணில் படவில்லை இப்போது எல்லாமே கண்ணில் படுது. ஆனால் பொதுவெளி நாகரீகம் இப்போது கண்ணில் சிறுசுகளுக்கும் படுவதால் கெட்டுப் போகிறது என்பதை உங்கள் கருத்தை டிட்டோ செய்கிறேன்.

    நல்லதை மட்டும் பார்ப்போம்...எடுத்துக் கொள்வோம்...குழந்தைகளுக்கும் நல்லதைப் பிரித்தாளச் சொல்லிக் கொடுப்போம் அவ்வளவே கில்லர்ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தாய் மொழி பழகாமல் அவன் எந்த மொழி பழகினாலும் அவனது பெருமை முழுமை அடையாது.

      தாய் மொழி பழகி, தமிழர் பண்பாட்டை, கலாச்சாரத்தை, உடைகளை, பண்டிகைகளை மறக்காமல் பொது இடத்திலும் தன்னை தமிழன் என்பதை வெளிப்படுத்திக் கொள்ள நினைப்பவர்கள்தான் உண்மையான தமிழர்கள்.

      அதை விட்டு தமிழில் பேசிக்கொண்டு இருக்கும் போதே பிறருக்காக சட்டென ஆங்கிலத்துக்கு மாறிப்பேசும் ஜென்மங்களை நான் தமிழராக நினைப்பதில்லை.

      ஆசிரியர்கள் இன்று பெரும்பாலானோர் சம்பளத்துக்காகவே வேலை செய்கின்றார்கள் காரணம் அவர்கள் மாணவ-மாணவிகளின் உள் விவகாரத்தில் தலையிட்டு அவர்களை செம்மை படுத்தவேண்டும் என்று நினைப்பவரையே கோமாளியாக்கி விடுகின்றனர்.

      இதை வளப்படுத்தி விட்டது திரைப்படங்களே...

      நல்லதை மட்டும் பார்ப்போம் என்று சொல்கின்றீர்கள் இன்று எந்த வீட்டிலுமே பிள்ளைகள் பெற்றோர் சொல் கேட்பதில்லை அவர்களாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை

      காரணம் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு.

      நீக்கு
  6. இப்போதெல்லாம் அநாகரிகங்களை ஆதரிப்பதும், போற்றிப் பாராட்டுவதும் பெருமை கொள்வதுமே நாகரிகம் என்றாகி விட்டது. மற்றபடி நல்ல வேளையா நம்ம வீட்டிலே இம்மாதிரி நிகழ்ச்சிகள் வருதுனே தெரிஞ்சுக்கலையோ பிழைச்சோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இதுதான் நடைமுறை உண்மைகள் என்ன செய்வது ?

      நீக்கு
  7. நம் சமூக அவலங்களில் இதுவும் ஒன்று. படிக்கும்போது வேதனையாக உள்ளது. முடிந்தவரை நாம் குழந்தைகளை பக்குவப்படுத்தவேண்டும். நாம்கூட இவற்றைத் தவிர்த்துவிடவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் அழகிய கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  8. இது போதாது என்று நிகழ்ச்சிக்கு வரும் வேறு மாநிலத்தவர்களை தமிழ் படிப்பிக்கின்றேன் என்று செய்யும் அட்டகாசத்தை என்னவென்று சொல்வது. சில நிகழ்ச்சிகள் பார்க்கமுடிவதில்லை. பார்ப்பதுமில்லை.
    நல்லாசிரியர்கள் நமக்கு கிடைத்ததால் நாம் இந்தளவு தமிழை பிழையின்றி எழுத ,பேச முடிகிறது. இங்கு தாய்மொழிக்கு எவ்வளவு முக்கிய்த்துவம் கொடுக்கிறார்கள். எங்க பிள்ளைகள் சேர்ந்திருந்தாலே பிறமொழியிலதான் பேசுதுங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மையில் நாம் பாக்கியம் செய்தவர்களே.... தாய் மொழியை சரியாக பேச பழகி விட்டோமே....

      நீக்கு
  9. உண்மையான ஆதங்கம்....எனக்கும் உண்டு..

    பதிலளிநீக்கு
  10. நாம் நல்லவைகளை மட்டும் பார்ப்போம்.
    ரிமோட் நம்கையில் நமக்கு பிடித்தவைகளை மட்டும் பார்ப்போம்.

    வேறு என்ன செய்ய முடியும் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி.... நீங்க எழுதியிருக்கறது எல்லாம் நியாயம்தான். ஆனா அதைச் சொல்லமுடியாது. சொன்னா, 'உங்களுக்கு வயசாச்சு... இந்த ஜெனெரேஷன் நீங்க இல்லை'னு சொல்லிடுவாங்க.

      மக்கள் தொலைக்காட்சியில் தமிழ் உச்சரிப்பு நல்லா இருக்கும். ஆனால் பார்வையாளர்கள் குறைவு. என்ன செய்ய... நம்மளோட ரசனையே மாறிப்போச்சு. தொலைக்காட்சிகளில் வரும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் நம் ரசனைக் குறைவைத்தான் காண்பிக்கிறது.

      நீக்கு
    2. நெ.த. உங்களுக்குப் பொதிகை வராது இல்லையா? அதிலேயும் நிகழ்ச்சிகள் மிக அருமையாக இருக்கும்.

      நீக்கு
    3. வருக சகோ கோமதி அரசு அவர்களே... இதுவும் சரியான யோசனையே... வருகைக்கு நன்றி

      நீக்கு
    4. To, நெல்லைத்தமிழன்
      அவர்கள் சொல்கின்றார்களோ இல்லையோ நீங்கள் எடுத்துக் கொடுக்கின்றீர்கள் என்பது விளங்குகிறது.

      ஆம் நண்பரே நீங்கள் சொல்லும் மக்கள் தொலைக்காட்சி நான் விரும்புவதே....

      அவர்கள் ஜாதியை மட்டும் களைந்தசு விட்டு அரசியல் நடத்தினால் வெற்றி பெறலாம் உண்மையில் அவர்கல் அலட்டிக் கொள்ளாமல் தமிழ் வளர்க்கின்றார்கள்

      நீக்கு
  11. பல வருஷம் முன்பே தமிழ் தொலைக்காட்சி சாட்டிலைட் கனெக்ஸனை நிற்பாட்டியதன் காரணம் எங்கள் மகள் டிவியில் பார்க்கும் தொகுப்பாளினிகளின் தமிழை பிராக்டிஸ் செய்ய பார்த்தா .எல்லாம் நம்மிடம்தான் இருக்கு எதை தேர்வு செய்யவேண்டும் எதை பிள்ளைகளுக்கு காட்டி நாமும் முன்மாதிரியா இருக்கணும்னு நாம் தெளிவாக இருந்தால் குறைந்தது நம் வீட்டிலாவது தமிழ்க்கொலைகளை தடுக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நல்ல காரியம் செய்தீர்கள்
      நம் வீட்டிலாவது கொலைகளை தடுக்கலாம் உண்மையான வார்த்தை.
      வாழ்க வளமுடன்.

      நீக்கு
  12. ஆதங்கம்....

    நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதே இல்லை - இன்னும் சொல்லப் போனால், தில்லியில் என்னிடம் இருந்த தொலைகாட்சிப் பெட்டியை ஒரு வருடத்திற்கு முன் காவல்காரருக்குக் கொடுத்து விட்டேன்! இப்போது நிம்மதியாக இருக்கிறது! பார்ப்பதே இல்லை எனும்போது வெட்டியாக வீட்டில் எதற்கு அது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பார்க்காதவரை மனம் தெளிவு பெறும் டென்ஷன் இல்லாத வாழ்க்கை. வருகைக்கு நன்றி

      நீக்கு
  13. பாரதியின் வரிகள் இவை:
    ஆதிசிவன் பெற்று விட்டான்-என்னை
    ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
    வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை
    மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். 1

    மூன்று குலத்தமிழ் மன்னர்-என்னை
    மூண்டநல் லன்பொடு நித்தம் வளர்த்தார்;
    ஆன்ற மொழிகளி னுள்ளே-உயர்
    ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன். 2

    கள்ளையும் தீயையும் சேர்த்து-நல்ல
    காற்றையும் வான வெளியையும சேர்த்துத்
    தெள்ளு தமிழ்ப்புல வோர்கள்-பல
    தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். 3

    சாத்திரங் கள்பல தந்தார்-இந்தத்
    தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
    நேத்திரங் கெட்டவன் காலன்-தன்முன்
    நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான். 4

    நன்றென்றுந் தீதென்றும் பாரான்-முன்பு
    நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
    சென்றிடுங் காட்டுவெள் ளம்போல்-வையச்
    சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான். 5

    கன்னிப் பருவத்தில் அந்நாள்-என்தன்
    காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
    என்னென்ன வோபெய ருண்டு-பின்னர்
    யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்! 6

    தந்தை அருள்வலி யாலும்-முன்பு
    சான்ற புலவர் தவவலி யாலும்
    இந்தக் கணமட்டும் காலன்-என்னை
    ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி யிருந்தான். 7

    இன்றொரு சொல்லினைக் கேட்டேன்-இனி
    ஏதுசெய் வேன்?என தாருயிர் மக்காள்!
    கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு
    கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்! 8

    "புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
    பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
    மெத்த வளருது மேற்கே-அந்த
    மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை. 9

    சொல்லவும் கூடுவ தில்லை-அவை
    சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
    மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
    மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" 10

    என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ!
    இந்த வசையெனக் கெய்திட லாமோ?
    சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச்
    செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! 11

    தந்தை அருள்வலி யாலும்-இன்று
    சார்ந்த புலவர் தவவலி யாலும்
    இந்தப் பெரும்பழி தீரும்-புகழ்
    ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன். 12

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எட்டையபுரத்தானின் அழகிய பா வரிகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல...

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    நல்லதோர் ஆதங்க பதிவு..இந்த நிகழ்ச்சிகளையெல்லம் நான் பார்ப்பதே இல்லை.ஆகவே இதை பற்றிய எந்த கருத்தும் சொல்ல தெரியவில்லை.யார் மறந்தாலும் நாம் தமிழை மறக்க மாட்டோம். உங்கள் வருத்தங்கள் நியாயமானவைதான்.நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது மனதில் பட்ட கருத்தை முன்வைத்தமைக்கு நன்றி

      நீக்கு
  15. நீங்கள் சொல்லியிருப்பவை எல்லாம் முற்றிலும் சரி. நான் பெரும்பாலான தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது இல்லை. என் கணவர் சூப்பர் சிங்கர், சரிகமப போன்ற இசை நிகழ்ச்சிகளை பார்ப்பார். அதில் வரும் தொகுப்பாளினிகள் அடிக்கும் கூத்தையே என்னால் சகிக்க முடியாது.
    பி.கு.: கோடிட்ட இடங்களை நிரப்புவதில் உங்கள் கெட்டிகாரத்தனத்தை மெச்சுகிறேன். நான் ஶ்ரீராம் போலவோ, நே.த.போலவோ பொய் சொல்ல விரும்பவில்லை ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மையே அவர்களின் பேச்சைக் கண்டாலே எனக்கு பற்றிக்கொண்டு வரும்.

      பொய் சொல்லாத உங்களது கருத்தை இரசித்தேன் வருகைக்கு நன்றி

      நீக்கு
  16. ‘ஆடையில்லா ஊரில் ஆடை கட்டியவன் பைத்தியக்காரன்’ என்பது போல் இப்போது தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் வரும் இரட்டைப்பொருள் கொண்ட உரையாடல்கள் மற்றும் அறைகுறை உடைகளை இரசிக்காதவர்கள் பழம் பஞ்சாங்கங்கள் என்று சொல்லும் நிலை ஏற்பட்டதற்கு நாம் எல்லோருமே காரணம். எப்போது நாம் இவைகளை புறக்கணிக்கின்றோமொ அப்போதே அவைகள் ஒழிந்துபடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே முடிவு நம் கையில் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  17. நீங்கள் நிகழ்ச்சிக்கு வரும் நடுவர் விருந்தினர் பற்றி சொல்கிறீர்கள். செய்தியாளர்கள் என்று நேரடி தகவல் சொல்பவர்களின் நிலை இன்னும் மோசம்.

    திரு சாலமன் பாப்பையா சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொன்னதை இங்கே பகிர நினைக்கிறேன். பொங்கல் அன்று ஒளிபரப்பான பட்டிமன்ற நிகழ்ச்சி என்று நினைக்கிறேன். அதில் அவர் பேசும்போது சொன்ன ஒரு முக்கியம்மான விஷயத்தின் சாராம்சம் இது: ஆங்கில ஹிந்தி தொலைக்காட்சி செய்தியாளர்கள் களத்தில் இருந்து தகவல் தரும்போது மிக சரளமாக ஆங்கிலத்திலோ ஹிந்தியிலோ விஷயத்தை சொல்கிறார்கள். அனால் தமிழ் செய்தி தொலைக்கட்சி செய்தியாளர்கள் களத்தில் இருந்து தகவல் தரும்போது தட்டு தடுமாறி திக்கித்திணறி விஷயத்தை சொல்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்களின் நிலையே இது என்றால் என்னத்தை சொல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு