இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, பிப்ரவரி 16, 2018

மெட்ராஸ், மெக்கானிக்கர் மெக்னேஷ்


மெக்கானிக்கர் மாப்பிள்ளைக்கு பொண்ணு கொடுத்தது தப்பாப்போச்சு.
ஏன் மாப்பிள்ளை என்ன சொல்றார் ?
நெய்த்தோசை சுட நெய் தீர்ந்து போச்சுனு சொன்ன மகள்ட்ட பணமில்லைனு க்ரீஷை கொண்டு வந்து கொடுத்துருக்கார்.
அய்யய்யோ அப்புறம் ?
நெய்க்கு க்ரீஷை தடவச் சொல்றீங்களே... நட்டு கழண்டு போச்சா ? னு கேட்டதுக்கு எட்டாம் நம்பர் ஸ்சுவாணரை எடுத்து மண்டையை உடைச்சிட்டான்.
அடப்பாவமே.... பின்னே
ஹோஸ்ப்பிட்டலில், சேர்த்து ஏழு தையல் போட்டுட்டு எங்களுக்கு போன் பண்ணிச் சொல்றான்.
என்ன சொன்னான் ?
உங்க மகள் ஹோல்ப்பிட்டல் இருக்கா, பாடி இன்னும் பினிஷிங் வேலை முடியலைனு...
? ? ?
* * * * * 1 * * * * *

என்ன... கோமளம் உன் மகள் ஏன் ? கல்யாணம் ஆகியும் புருஷன் வீட்டுக்கு போகாமல் இருக்கா ?
அதயேன் கேட்கிறே ? பெட்ரோல் பங்க்ல வேலை செய்யிற மாப்பிள்ளைக்கு கட்டிக்கொடுத்தோம்.
அதுக்கு என்ன வருமானம் உள்ள வேலைதானே.... ?
வருமானத்துக்கு குறைச்சல் இல்லைதான் எதுக்கெடுத்தாலும் பெட்ரோலை ஊத்தி கொளுத்திடுவேன்னு சொல்றானாம் அதனாலே பயந்துக்கிட்டுப் போகமாட்றா நான் என்ன செய்யிறது ?
? ? ?
* * * * * 2 * * * * *

அதோ போறவரு பூர்வீகம் காக்கி நாடா’’னு சொல்றாங்களே.. பேரென்ன ?
அங்கே இருந்து வந்தவருதான் பேரு பச்சையப்பன்.
அப்ப ஏன் எல்லோரும் மஞ்சமாக்கான் அப்படினு சொல்றாங்க ?
அவரு நீலப்படம் எடுத்தே ஓஞ்சு போனவரு... அதனாலதான்.
எப்பவுமே கருப்பு சட்டைதான் போடுவாரோ ?
ஆமா ஆனால் அவரு கில்லர்ஜி மாதிரி வெள்ளை மனசுக்காரரு...
புதுசா அரக்கு மொத்த வியாபாரம் செய்யிறாராமே.. பணம் ஏது ?  
சொந்த ஊருல ஆரஞ்சு தோட்டத்தை வித்துட்டு வந்தாராம்.
ஆளு நல்லா சிவப்பு தக்காளி மாதிரி இருக்காரே...
* * * * * 3 * * * * *

42 கருத்துகள்:

  1. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:)

    பதிலளிநீக்கு
  2. ஹையோ, கலர் கலரா பயமுறுத்தலா? :) எ.கொ.இ.ச. !!!!!!!!!!!!!!!!!!!!!! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க எ.கொ.இ.ச. ???
      ஐயய்யோ என்ன சொல்லி திட்டுறீங்களோ....

      நீக்கு
    2. அது கில்லர்ஜி... கீசாக்கா அ பா தி தி தி:)) ஹா ஹா ஹா:)

      நீக்கு
    3. இது அதைவிடக் குழப்புகிறதே....

      நீக்கு
  3. ///பெட்ரோலை ஊத்தி கொளுத்திடுவேன்னு சொல்றானாம் அதனாலே பயந்துக்கிட்டுப் போகமாட்றா நான் என்ன செய்யிறது ?///

    ஹா ஹா ஹா...

    சைக்கிள் ஹப் ல கில்லர்ஜியின் பெருமைகளையும் அப்பப்ப அவிட்டு விட்டிடுறார்:)... சே சே இப்ப பார்த்து சிறீ சிவசம்போ அங்கிள் எங்கினயோ போயிட்டாரே கர்ர்ர்ர்ர்ர்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நானா ஜொன்னேன் இரண்டு பேர் பேசிக்கிட்டதுதானே... ?

      உங்க அங்கிள் எட்டாம் நம்பர் கடைக்கு போயிருப்பாரோ...

      நீக்கு
  4. ஜீவி said...
    //முயலை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது இருப்பினும் இது தவிர்க்க இயலாத சூழல்தான் என்ன செய்வது ?

    அவரும் வேண்டுமென்றே ஏற்றி இருக்க மாட்டார். //

    இவ்வளவு இளகிய மனம் கொண்டவருக்குப் பெயரோ?..

    பெயரை மாற்றுங்கள், ...... ஜி! //

    ஜீவி சார் வேண்டுகோள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி ஸாரிடம் சொல்லுங்கள்

      எனது தாத்தா கொலைதெய்வத்துக்கு வேண்டிக்கொண்டு வைத்த பெயர் நான் இடையில் மாற்றுவது முறையாகாது மன்னிக்கவும்.

      நீக்கு
    2. ஙே!!!!!!!!!!!!!! என்ன பேசிக்கிறீங்க? ஒண்ணுமே புரியலை! இந்தப் பதிவுக்கு என்ன சம்பந்தம்?

      நீக்கு
    3. தங்களுக்கு சகோ கோமதி அரசு கீழே பதில் சொல்லி இருக்கின்றார்.

      நீக்கு
    4. இருந்தாலும் கில்லர்ஜி:).. தமிழை வளர்க்கப் பாடுபடும் நீங்கள் ஆங்கிலப் பெயரோடு உலாவருவது சரியில்லை:)) இனிமேல் உங்கட பெயரை மொழிபெயர்த்து வச்சால் என்ன தமிழில்?:) ஹா ஹா ஹா:)) சரி சரி முறைக்காதீங்க:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)..

      நீக்கு
    5. தமிழாக்கம் ??? ஒரு மாதிரியாக வருதே...

      நீக்கு
  5. தேவகோட்டை ஜி பற்றி ஜீவி சார் சொன்னது "இளகிய மனம் கொண்டவர்."

    பேரை மாற்றுங்கள் ஜி என்கிறார்.

    இந்த பதிவில் தேவ கோட்டை ஜி வெள்ளை மனசுக்காரர் என்கிறார், நான் பூ போன்ற மனசு என்கிறேன்.


    பூவைப் பறிக்க கோடாரி எதற்கு என்கிறார்.

    பூ போன்ற மனசை சிலர் காய படுத்துவதால் மேலே குறிப்பிட்ட வார்த்தையை சொல்கிறாரோ?

    பதிவு நல்ல நகைச்சுவை.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோ.

      ஜீவி ஸார் அவர்களுக்கும் எமது நன்றி

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      நல்ல நகைச்சுவை.ஒன்றும், இரண்டும் படித்தவுடன் இயல்பான நகைச்சுவவயில் சிரிப்பு வந்தது. மூன்றாவதாக ஓரிரு நிமிடம் வரிக்கும் வார்த்தைக்கும் சம்பந்தமில்லாமல் என்ன இது என்று தலைக்குள் டியூப் எரிந்து அணைய, மறுநிமிடம் கலர் கலராக விளக்குகள் கண் சிமிட்டின. அத்தனையும் அருமை.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. ஆஹா தாமதமானாலும் புரிந்து விட்டதே நன்றி சகோ.

      நீக்கு
  6. ஹாஹாஹாஹா ரசித்தோம்....

    கீதா: அண்டப ஹாஹாஹா உடன்...மல்லாக்கப் படுத்துட்டு கமெண்ட் அடிச்சிட்டுருப்பாரே....அந்த பாட்டை ஆள் இருந்திருந்தா இந்நேரம் சாம்பசிவத்த வேராட்டிருப்பாரு. தாமஸ் அலியும் தான்...போய் அந்த பெட்ரோல் பங்கு ஆளை விரட்டி டே எம்பொன்னை மிரட்டுரியாக்கும்.... நீ இருக்கறதும் பெட்ரோல் பங்குதான்...நினைருக்கட்டும்....கொழுத்திப்புடுவோம்னு...பொன்னைக் கொண்டு விட்டோருப்பாய்ங்க....ஹூம்.. கில்லர்ஜிக்கிட்ட கோடரி இருந்தும் நோ யூஸ்...ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோடரியை எடுத்தால் கொலைக் கேஸாகும், பெட்ரோலை உபயோகப்படுத்தி தற்கொலையாக மாற்றி விடலாமே...

      நீக்கு
  7. நல்லா இருந்தது கில்லர்ஜி. மூணாவதுல, பச்சை பச்சையா எழுதிட்டீங்க. சந்தடி சாக்குல உங்க மனம் வெள்ளைனு எங்களுக்கு சிவப்பு சிக்னல் கொடுத்துட்டீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவப்பு சிக்னல் கொடுத்து விட்டேனா ? அப்படீனாக்கா.... நான் டேஞ்சரா ?

      நீக்கு
  8. ஹாஹா :) ரசித்தேன் ...மெக் நேஷ் பெயரும் பொருத்தமாயிருக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ வாழ்க்கையில் பொருத்தம் இல்லையே...

      நீக்கு
  9. ஹா ஹா ஹா ஹா ஹா...ரசித்தோம்...

    கீதா: அந்த ஹா ஹாஹா வுடன்...மல்லாக்கப் படுத்துக்கிட்டு இதுக்கெல்லாம் கமென்ட் கொடுக்கற அந்த பட்டை ஆளைக் காணலியே!!! சாம்பசிவம்னா இப்படியா செஞ்சுருப்பாரு..முதல்ல பொண்ணைக் கொண்டு விட்டுட்டு..மாப்பிள்ளை நீங்க வேலை செய்யறதும் பெட்ரோல் பங்குதான் நினைவு இருக்கட்டும்னு மிரட்டி விட்டுருப்பாரு...ஹும்...கில்லர்ஜி கோடரி வைச்சுக்கிட்டு என்ன பண்ணறாரோ/...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சாம்பசிவம் கொட்டாம்பட்டி சந்தைக்கு போயிருப்பாரு...
      மீண்டும் வருகை தந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  10. மெக்கானிக் மாப்பிள்ளை ஜோக்கை இரண்டு மூன்று வரிகளுக்கு இழுத்தது சாகசம்.

    பெட்ரோல் பங்க்ல வேலை செய்தா நல்ல சம்பளமா? அப்படியா? வரிக்கு நடுவில் ஏன் வந்தாலே அங்கேயும் ஒரு கேள்விக்குறி போடணுமா?

    மூன்றாவது ஜோக்குக்கு கண்கள் சிவக்கச் சிரித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஸ்ரீராம்ஜி இனி கேள்விக்குறிகளில் கவனம் செலுத்துகிறேன் இரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  11. முதல் 2ஜோக்கும் வாசித்து சிரித்து முடியல...3வது ஜோக் வாசித்தும் சிரிக்க விளங்கிகொள்ள முடியல... 😔

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மூன்றாவதில் கலர் ஃபுல்லான வார்த்தைகளின் ஜாலம் மட்டுமே...

      நீக்கு
  12. ஒரிஜன்ல் நகைச்சுவைகள் சிரிக்க வைக்கின்றன

    பதிலளிநீக்கு
  13. கோடாலிய வீசுனா கொலைக் கேசாப் பூடும்!...

    பெட்ரோலை ஊத்திக் கொளுத்துனா
    தற்கொலக் கேசா மாத்திப் போடலாம்!...

    அம்மாவாசை!?..

    உள்ளதைச் சொல்றீயளே ஜாமீய்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி இப்படித்தான் நான் சில நேரங்களில் உண்மையை உளறிடுவேன்.

      நீக்கு
  14. மெக்கானிக்கை கட்டிக்கிட்டா இப்படித்தானோ....
    ஆஹா... ரசித்தேன் அண்ணா...
    அடுத்து ஒரு நகைச்சுவை தொகுப்பு கொண்டு வாங்க...

    பதிலளிநீக்கு
  15. நகைச்சுவை தங்களுக்கு பயின்று வருகிறது. சிரிக்க வைப்பது கடினம். மேலும் முயற்சி செய்க. வெற்றிபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  16. நகைச்சுவையை இரசித்தேன். நீங்கள் வெள்ளை மனசுக்காரர் என்பதை சொல்லியா தெரியவேண்டும்?

    பதிலளிநீக்கு