மாஞ்சோலை
கிராமம் சாலையோர டீக்கடையில்....
வணக்கம் ஐயா இங்கே
பத்மநாபன்னு...
தம்பிக்கு எந்த ஊரு
தர்மபுரி
வாங்க டீ சாப்பிடலாம்
பரவாயில்லை நான்
சாப்பிட்டேன்.
எந்த பத்மநாபன் நம்ம கோயமுத்தூர்
மாப்ளே அவரா ?
இல்லை பட்ஜெட் பத்மநாபன்
அடடே நம்ம கந்தசாமி
மகன்
ஆமா பட்டப்பெயர்கூட குருவிமண்டைனு
சொல்வாங்க...
சரிதான் இப்படியே... நேரே
போங்க, பீச்சாங்கை பக்கமா திரும்பவும் கிழக்கு வாசல் வரும் அதுதான்.
நல்லது ரொம்ப நன்றி
தெருவில் திரும்பியதும்...
விருமாண்டியண்ணே நல்லாயிருக்கீங்களா ?
அடடே வா கண்ணா வா
என்ன திடீர்ன்னு உன் மனைவி வரலை ?
புறப்பட்டேன் மனைவி ரெடியாகலை
வந்துட்டேன்.
புதுவீடு கண்டு
புடிச்சு வந்திட்டியே... இது பத்மா கட்டியதுதான்,
வரும்போது குரு
அத்தான் கிட்டே விபரம் கேட்டுத்தான் வந்தேன்.
அம்மா இப்ப எங்கே இருக்காங்க ?
அவுங்களுக்கென்ன ? மெட்ராஸ் டூ பாண்டிச்சேரிதான், எல்லா மாசமும்.
எல்லா தடவையும் நீ
மட்டுமே வர்றே குடும்பத்தை கூட்டிட்டு வா.
அண்ணே அண்ணி இவங்களெல்லாம் எங்கே ஆளையே... காணோம் ?
இன்னைக்கு வெள்ளிக்கிழமை
விரதம்ல பத்மநாபனை கூட்டிக்கிட்டு எங்கிட்டாச்சும் கும்புடப் போயிருப்பா
வேண்டுதலுக்கு...
அண்ணே சாமி கும்பிடப்
போகலையா ?
எப்பவுமே நான் கடவுள்
இல்லைங்கிற சாதிதானே இதோ வந்துட்டா..
கண்ணா நல்லாயிருக்கியா ? மண்
வாசனை இழுத்துருக்கு இந்தப்பக்கம்.
கிழக்கு
சீமையிலே கால் வைக்காமல் இருக்க முடியுமாண்ணி ?
என் தங்கை கல்யாணி குழந்தைங்க,
எப்படியிருக்காங்க ?
இருக்காங்கண்ணி பத்மா நல்லா
இருக்கியா... எந்த கோவில் போனீங்க ?
நல்லாயிருக்கேன் நவக்கிரக
நாயகிக்கு படையல்,
வைஜயந்தி இன்னும் கல்லூரியிலிருந்து வரலையா.... படிப்பெல்லாம் எப்படிணே போகுது ?
வைஜயந்தி ஐ.பி.எஸ்தான் படிப்பேனு
சொல்றாடா...
நம்ம புள்ளையாவது
படிக்கட்டும்ணே, நாந்தேன் படிக்காதவன் ஆயிட்டேன்.
படிக்காட்டாலும் பட்ஜெட்
போட்டு வாழ்க்கை நடத்துறியே அது போதும்.
இருந்தாலும் அ.ஆ.இ.ஈ
கூட படிக்கலையேணே...
உன்னைப்போல அறிவாளி
யாரு சொல்லு ?
எல்லாம் என்னோட விதி
வேறென்ன ?
நம்ம வீட்டுக்கு படிக்காத
மேதையா வந்துட்டியே...
படிக்கிற ஆசை மட்டும்
விடமாட்டுதுணே...
விடுடா உன்னைப்போல உழைப்பாளி
படிச்சவன் எவன் இருக்கான் ?
காலம் பூராம் தொழிலாளியாவே
போயிட்டேனே..
ஏன் அப்படி நினைக்கிறே ? விவசாயினு நினைச்சுக்க.
சரிண்ணே நான் கிளம்புறேன் காடு
கரைக்கு போகணும். ஏண்ணே பத்மாவுக்கு நிச்சய தாம்பூலம் முடிஞ்சு வருஷமாச்சு
கல்யாணம் எப்போ வயசு கூடுதுல ?
தைப்பிறந்தால் வழி
பிறக்கும் பார்ப்போம் சரி, உன் மகனுக்கு அரசாங்க வேலை என்னாச்சு ?
சொல்ல மறந்துட்டேனே... ஜனவரி 1 டூட்டியில
ஜாய்ண்ட் பண்ணிட்டான்.
சந்தோஷம் செல்வி
கண்ணாவுக்கு குடிக்க ஏதாவது கொண்டுவாடி..
வேண்டாண்ணி இப்பத்தான்
சாப்பிட்டேன், ஊருல தேர்த்திருவிழா கண்டிப்பா குடும்பத்தோட வந்துடணும்,
சொல்றதுக்குத்தான் வந்தேன்.
கந்தர் அலங்காரம் பார்த்து ரொம்பநாள்
ஆச்சு..
போன வருஷம் தைப்பொங்கல்
விழாவுக்கு வந்தீங்கள்ல ?
ஆமா அப்பத்தானே தேர்ல தீ
பிடிச்சது...
ஆமா இந்த வருஷம் வீரபாண்டிய
கட்டப்பொம்மன் நாடகமும் வச்சு இருக்காங்க..
வந்துர்றோம் மாயாண்டி
குடும்பத்தார் வருவாங்களா ?
அவுங்க வராமலா திருவிழா முதல்
மரியாதை அவுங்களுக்குத்தானே...
நம்ம கும்பக்கரை
தங்கையா மச்சான் வருவாரா ?
அவருக்கும், நம்ம நாட்டாமைக்கும்
சண்டை அதனால் வரமாட்டார்.
இவெங்க சண்டைக்கு தெய்வம்
என்ன செய்யும்... ?
அதானே பார்த்தேன் நம்ம தெய்வமகன்
வாயைத் திறக்கலையேனு...
உண்மைதானடி சொல்றேன் கண்ணா,
அவரு மகன் ராஜா என்ன செய்யிறான்... ?
அவன்தான் ரவுடியாகி அந்த
ஏரியாவுக்கே குப்பத்து ராஜா ஆயிட்டானே..
அவன் சின்ன வயசுலயே தில்லாலங்கடியில...
இப்ப சொல்லவா வேணும்.
சரிண்ணே மழை வர்ற...
மாதிரி இருக்கு கிளம்புறேன் கண்டிப்பா எல்லோரும் வந்துடுங்க.
சரிப்பா இப்ப சுந்தரா
டிராவல்ஸ் வரும் கவனமாப் போயிட்டு வா.
நட்பூக்களே...
இதில் வரும் ஒவ்வொரு கேள்வி பதில்களிலும் சில வார்த்தைகள் BOLD-ல் இருக்கிறது அதன் காரணமென்ன ? உங்களில் யாருக்காவது பிடிபட்டால்
சொல்லுங்களேன்.
எல்லாமே சினிமாவா டைட்டில் வந்த பெயர்கள் ..
பதிலளிநீக்குவருக சரியான பதில் நன்றி.
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) எனக்கு நித்திரைக் குளிசை கரைச்சுத் தந்திட்டு வந்திட்டா இங்கின:))
நீக்குஎத்தனை எத்தனை படப்பெயர்கள்... சில பெயர்களில் எல்லாம் படம் வந்ததே தெரியவில்லை!
பதிலளிநீக்குவருக ஸ்ரீராம்ஜி இவை அனைத்துமே படங்களின் தலைப்புதான்.
நீக்குஅச்சச்சோ என் கண்ணில இப்போதானே பட்டுது:) அப்போ மீ எப்ப்பூடி 1ஸ்ட்டா வர முடியும்?:)) இருப்பினும் பார்ப்போம்ம் தும்பிக்கைதானே.. சே..சே.. இதென்ன இது இபூடி டங்கு ஸ்லிப்பாகுது:) நம்பிக்கைதானே வாழ்க்கை.. பார்ப்போம்:))
பதிலளிநீக்குநமது பதிவு இந்திய நேரம் நள்ளிரவு 12:00 மணிக்கு வரும்.
நீக்குஓ .... அப்படியா.. நோட்டட்:))
நீக்கு////நட்பூக்களே... இதில் வரும் ஒவ்வொரு கேள்வி பதில்களிலும் சில வார்த்தைகள் BOLD-ல் இருக்கிறது அதன் காரணமென்ன///
பதிலளிநீக்குஇது பெரீஇய ஜிதம்பர:) ரகஜியமாக்கும்:)... அத்தனையும் படப் பெயர்கள்:)
சம்பாசனைகள் ஓகே:)... வழமையான உங்கள் நகைச்சுவை இம்முறை இல்லையே....
உங்கள் அங்கிள் வராதது காரணமாக இருக்கலாமோ...
நீக்குஆஜர்.....இதோ vaasichchuttu வரோம்...
பதிலளிநீக்குFrom mobile
கீதா
நன்று, நன்றி.
நீக்குபடம் பெயர்கள்....அது சரி அண்ணி, நன்றி னு கூட படங்கள் இருக்கா....கேட்டதே இல்லை...
பதிலளிநீக்குகீதா
"அண்ணி" K.பாலாஜி எடுத்த படம் 35 வருடத்துக்கு முன்பு...
நீக்கு"நன்றி" மோகன்-பூர்ணிமா நடித்தது.
நீக்குவாங்க டீ சாப்பிடலாம்னு படமா....நீங்க எடுக்க போறீங்களா...ஹிஹிஹி
பதிலளிநீக்குகீதா
இந்த படம் வந்த வேகத்தில் ஓடிமது தியேட்டரை விட்டு...
நீக்குதிரை படங்களின் பெயர்கள்..
பதிலளிநீக்குசரி தானா
மிகச்சரியே நண்பரே வருகைக்கு நன்றி
நீக்குஆஹா சினிமா படங்களுன் பெதர்களை பயன்படுத்தி ஒரு பகிர்வு.
பதிலளிநீக்குஆமாம் ஜி வருகைக்கு நன்றி.
நீக்குதமிழ் சினிமா பெயர்களை தொடுத்து இப்படியொரு பதிவா..!
பதிலளிநீக்குஅருமை நண்பரே அருமை...
தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே
நீக்குஹாஹாஹா, எல்லாத் திரைப்படப் பெயர்களையும் இணைச்சு அழகா ஒரு பதிவு.
பதிலளிநீக்குவாங்க, வாங்க வருகைக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதிரைப்படங்களின் பெயர்களை சேர்த்து தங்கள் பாணியில் ஒரு நகைச்சுவை பதிவு. மிகவும் நன்றாக உள்ளது. ஒவ்வொரு பெயரையும் அந்தந்த வரிகளுக்கு ஏற்றமாதிரி இணைத்துள்ளீர்கள். கடின உழைப்புதான். இதில் பாதி பெபர்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். மீதி தெரியவில்லை.மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
வருக சகோ இதில் அனைத்து பெயர்களுமே திரைப்படங்களே... ஐயம் வேண்டாம் விரிவான கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅனைத்துமே திரைப்படங்களின் பெயர்கள்தான். அதில் சிறிதும் ஐயமில்லை..நான் சில படங்களின் பெயர்களை அறிந்ததில்லை என்ற அர்த்தத்தில் சொன்னேன்.
நீக்குநல்லது மீள் வருகைக்கு நன்றி சகோ.
நீக்குநீங்களே கேள்வி கேட்டு அதற்கு பதிலையும் நீங்களே தரப்போகிறீர்கள் என்று நினைத்தேன். திரைப்பட பெயர்களை வைத்து விளையாடியிருக்கிறீர்கள். நன்று!
பதிலளிநீக்குவருக இரசித்தமைக்கு நன்றி
நீக்குஅண்ணே... நல்லவனுக்கு நல்லவன் நீங்க...
பதிலளிநீக்குஇருக்கட்டும்!.. அதுக்கென்ன இப்போ?..
இருந்தாலும் பொல்லாதவன் மாதிரி புதிர் எல்லாம் போடுறீயளே!..
ஒரே மூடுபனி.. தூக்கம் வரலே.. கோழி கூவுது.. விடிஞ்சாச்சு.. பொழுது போகணும்..ல்லே.. அதான்!...
ஒன்னு சொல்லவா!.. பொற்சிலை வடிக்கிற நீங்க... அம்மி அடிக்கவும் தெரியும்..ன்னு தூள் கிளப்பிட்டீங்க!..
அப்படியா!?..
இதுல தங்க மலை ரகசியம் மாதிரி கேள்வி வேற.. அபாரம்!..
நாம ரெண்டு பேருமே வேலை இல்லா பட்டதாரி.. இனிமே
சகாதேவன் மகாதேவன் மாதிரி பரிட்சைக்கு நேரமாச்சு.. ந்னு பள்ளிக்கூடம் போகவா முடியும்?...
கலக்குறீங்க அண்ணே.. இந்தாங்க கோலி சோடா.. குடிங்க!..
அப்புறம் என்ன சேதி!..
நாளன்னைக்கு முகூர்த்த நாள்.. தங்கச்சிக்கு நிச்சயதாம்பூலம்..
ஆகட்டும்.. நல்ல நேரம் பார்த்து வந்துடறேன்!...
= = = = = = = = = = =
ஆள விடுங்க ஜாமீய்!.. மூச்சு வாங்குது!..
வாங்க ஜி கருத்துயில் கலக்கிட்டீங்க... ஸூப்பர்.
நீக்குஎன்னாது துரை அண்ணனின் இன்னொரு தங்கச்சிக்கு முகூர்த்த நாளோ?:) அவ்வ்வ்வ்வ்வ்.. அப்போ கலா அண்ணியை முதல்ல வரச் சொல்லுங்கோ:))
நீக்குஐயா, நீங்களும் கலக்கிட்டீங்க :)
நீக்குகெத்து....
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குஅருமை
பதிலளிநீக்குதங்களால்தான் இதுபோல் எழுத முடியும் நண்பரே
நண்பரின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.
நீக்குநன்றாக எழுதியிருக்கிறீங்க. ரசித்தேன்.
பதிலளிநீக்குவருக சகோ வருகைக்கு நன்றி
நீக்குஅனைத்து திரைப்படங்களையும் பார்த்தாகி விட்டதா...?
பதிலளிநீக்குஇதில் ஆறு படங்கள் பார்த்து இருக்கிறேன் ஜி
நீக்குரொம்ப நல்லா கோர்வையா எல்லா சினிமா பெயர்களும் சேர்த்து எழுதியிருக்கீங்க. இதைப் படிச்சபின்பு எனக்கு தோன்றியது ஒன்று.
பதிலளிநீக்குராவணன், ஹிரண்யகசிபு போன்ற பலரை, கடவுள் அவதாரம் எடுத்து அவர்களை அழித்தாலும், அந்த 'அரக்கர்கள்' என்று சொல்லப்படுபவர்களுக்கு இறைவன் சுவர்க்கத்தை அருளுவதாகச் சொல்வார்கள். காரணம், அவங்க, எப்போதும் கடவுளை நினைத்துக்கொண்டே இருந்தார்கள் என்று (அதாவது எதிர்ப்பு மனதில் இருந்தாலும், எப்போதும் கடவுளை நினைப்பது).
அதுபோல், சிலருக்கு, சினிமா, நடிகர்கள், நடிகைகள் போன்றவர்கள் அலர்ஜியாக இருந்தாலும், அவங்களும் சினிமாப் படப் பெயர்களை வைத்து அழகான இடுகை போடறாங்க. இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
வருக நண்பரே
நீக்குஇறைவன் இல்லையென்று நான் நினைக்கவும் இல்லை, சொல்லவுமில்லை.
மூட பழக்கங்களை வெறுத்து எதிர்க்கிறேன்
அதேபோல...
எனக்கு திரைப்படங்கள் பிடிக்காது என்று சொல்லவே இல்லையே...
சமூகத்தை சீரழிக்காத படங்களை நான் என்றுமே ஆதரிப்பவன் ஆனால் இன்று எல்லா படங்களுமே ஏதாவது கெடுதல் விடயங்களையே புகுத்துகின்றன...
அதேபோல...
கூத்தாடிகளை வெறுக்கவில்லை ரியல் எஸ்டேட்காரன் ஃப்ராடு என்று அறிந்திருந்தும் தனக்கு பணம் கிடைத்து விட்டதால் விளம்பரத்தில் நடிப்பதை எதிர்க்கிறேன்.
இதைப்போல் நிறைய சொல்லலாம்.
திரைப்படங்கள் பல லட்சம் தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கிறது இதில் ஒரு சிலர் மட்டும் ராஜவாழ்க்கை வாழ்வதை எதிர்க்கிறேன்.
என்னண்ணே ஆச்சு உங்களுக்கு?!
பதிலளிநீக்குவாங்க சகோ ஆரணியில் இருந்தாலும் உங்களை மாதிரி ஊரணியைப்பற்றி எழுதலாம் என்ன செய்யிறது ?
நீக்குசினிமா பட பெயர்களை வைத்து அருமையான கேள்வி, பதில் அருமை , அருமை.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குஅடி ...ஆத்தி..எம்புட்டு ஞாபகம்....அம்புட்டு சினிமாவ சொல்லிக்கிட்டு....இதில ஒரு சில படத்தை தவிர ..மற்றதை நான் பாக்கவே..கொடுத்து வைக்கல....
பதிலளிநீக்குபார்க்காததுவரை நீங்கள் கொடுத்து வைத்தவர்தான் நண்பரே...
நீக்குபார்த்தேன் ரசித்தேன்
பதிலளிநீக்குதூள்!
தங்களின் வருகைக்கு நன்றி சகோ
நீக்குபடத்தலைப்புக்களை வைத்து எழுதிய பதிவு நெஞ்சிருக்கும் வரை நினைத்தாலே இனிக்கும் நட்பே! நன்றி!
பதிலளிநீக்குவருக நண்பரே வருகைக்கு நன்றி
நீக்குஅருமையான பதிவு. எப்படித்தான் ஒன்று கோர்த்தீர்களோ. அபார நினைவாற்றல் தேவை.
பதிலளிநீக்குமிக ரசித்தேன். நன்றி தேவகோட்டை ஜி.
வாங்க அம்மா தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஅது எப்படி இந்த அளவிற்கு இவ்வளவு படங்களின் பெயர்களை நினைவு வைத்துள்ளீர்கள். ஆச்சர்யமாக உள்ளது.
பதிலளிநீக்குவருக முனைவரே திரைப்படங்களைத்தான் எதிர்க்கின்றேனே தவிர அதன் விபரங்கள் விரல் நுணியில் உண்டு.
நீக்குசினிமா பெயர்களைப் பயன்படுத்தி நீங்கள் இட்ட பதிவு அருமை. வித்தியாசமான பதிவு.
பதிலளிநீக்குவருக நண்பரே மிக்க நன்றி.
நீக்குநல்ல கற்பனை வளம். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குவாங்க டீ சாப்பிடலாம் எண்று ஒரு படம் வந்ததா?
ஆம் நண்பரே சுமார் 25 வருடங்களுக்கு முன்பு.
நீக்குதிரைப்படத் தலைப்புகளை வைத்து பதிவை எழுதிய தாங்கள் ஒரு வித்தகன்!
பதிலளிநீக்குநண்பரின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.
நீக்குஅட! அருமை. திரைப்பட தலைப்புகளை வைத்து அருமையான பதிவை ரசிக்கும் படியாய் வழங்கியிருக்கிறீர்கள். சிறப்பு. நன்றி.
பதிலளிநீக்கு#084/2018/SigarambharathiLK
2018/03/29
கவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்! #SigaramCO
https://newsigaram.blogspot.com/2018/03/KAVIK-KURAL-14-NANDRUM-THEEDHUM-NAKKE-SEIYUM.html
பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
#சிகரம்