பழங்கால வாகனங்கள் எவ்வளவு பெரிய விபத்து நடந்தாலும்
சிறிய அளவில் நெளிந்தோ, அல்லது வர்ணங்கள் பெயர்ந்த நிலையில் இருக்கும்,
உள்ளே பயணம் செய்த நபர்கள் அதிக பட்சமாக, இறந்து விடுவார்கள், அல்லது படுகாயம்
அடைவார்கள் இதன் காரணம் என்ன
? பழைய
வாகனங்கள் அதிக எடை கொண்டதாக இருக்கும் (2400 kg) இதன் காரணமாக வாகனங்கள் வேகமாக செல்வது
தடைபட்டுக் கொண்டே வந்தது எரிபொருள் செலவுகளும் கூடியது, உள்ளே மனித உயிர்களுக்கு எந்த விதமான பாதுகாப்புகளும் கிடையாது, அனைத்து பகுதிகளும்
இரும்புகளால் வடிவமைக்கப்பட்டது கண்ணாடிகளிலும் அதிகமான பைபர் உபயோகம் இல்லை இதன்
காரணமாக மனிதர்கள் உள்ளுக்குள்ளேயே அல்லோலப்பட்டு காயமடைகிறார்கள், அதிலும் வாகனம்
பல்டி அடித்தால் கண்டிப்பாக மரணம் என்பது நிச்சயிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையை மாற்றியமைக்கவே விஞ்ஞானிகள் பெரும்
முயற்சிகொண்டு மனிதர்கள் குறைந்த பட்ச காயங்களுடன் பிழைத்துக் கொள்ளவேண்டும் என்ற
வகையில் தயாரித்ததே இன்றைய வாகனங்கள் இவை குறைந்த பட்ச எடையாக (1200 kg) வாகனங்களை உருவாக்கினார்கள், உட்புறத்தில்
பைப்பர் உடைந்தாலும் தெரிக்காமல் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு சிதில் சிதிலாக கீழே
விழுவது போன்ற கண்ணாடிகள், முடிந்த அளவு இரும்பை குறைத்து கனத்த ரப்பர்கள்,
அலுமினியங்கள், வாகனம் ஒரு குறிப்பிட்ட சப்தத்திற்குமேல் மோதினால் எட்டுத்
திசைகளிலும் வாகனத்தின் உட்புறங்களில் காற்றுகளை நிரப்பி திணிக்கப்பட்டிருந்த SRS AIRBAG என்று சொல்லப்படும் (Supplemental Restraint System) ஊதுகூண்டுகள் வெளியேறி மனிதர்கள் உள்ளே எந்தப்பக்கம் வந்து மோதினாலும் ஊதுகூண்டுகளால்
மோதப்பட்டு படுகாயம் அடையாதவாறு காப்பாற்றப்படுகிறார்கள் வாகனம் பல்டி அடித்தாலும்
உயிர் பாதிக்கும் அளவுக்கு போவதில்லை, சுற்றிலும் மென்மையான பஞ்சு இருக்கைகள்
குறைந்த எரிபொருள் செலவில் கூடுதலான தூரம் செல்ல முடிவதோடு விரைவாகவும் செல்கிறது
மேலும் அபார விஞ்ஞான வளர்சியின் உதவியால், போகும் இடத்திற்கு வழிகாட்டும் GPS Navigation என்று சொல்லப்படும் கருவி இருக்கிறது அது மனிதனுக்கு
வேண்டிய மொழிகளில் பேசி வழி சொல்கிறது, பின்புறத்தில் இருப்பவர்கள்
தொலைக்காட்சியில் திரைப்படங்கள் காணலாம், சங்கீதம் கேட்கலாம், வாகனம் ஓட்டிச் செல்லும்
பொழுது தொல்லைபேசி அழைத்தால் எடுக்காமலே வாகனத்தின் இணைப்புடன் உள்ள Bluetooth என்று சொல்லப்படும் கருவி இருக்கிறது அதன் பொத்தானை அழுத்தி விட்டு பேசிக்கொண்டே
வாகனத்தை ஓட்டலாம், வெகுதூரம் ஓட்டியதால் கால் வேதனை ஏற்பட்டால் Cruise Control என்று சொல்லப்படும் கருவி இருக்கிறது இதன் அமைப்பை சரி செய்து
விட்டால், வாகனம் ஒரே சீரான நிலையில் போய்க்கொண்டு இருக்கும்... கால்களை மாற்றி
வைக்கலாம் அல்லது இருக்கையில் மடித்து வைத்துக் கொண்டு உட்காரலாம்
தயவு செய்து கை வலித்தால் ? என்று கேட்டு விடாதீர்கள், அதன் முயற்சியும்
நடந்து முடிந்து விட்டது விரைவில் நடைமுறைக்கு வருகிறது, அதாவது போகுமிடத்தை பதிவு
செய்து விட்டால் மகிழுந்து தானாகவே கொண்டு போய்விடும் இதில் ஒரு நல்ல செயல்
இருக்கிறது விபத்துக்கள் குறைய வாய்ப்புண்டு மகிழுந்துகள் மனிதனைப்போல போட்டி
போடாமல் விதிமுறைகளை சரியாகப் பயன்படுத்தும் அடுத்த வாகன ஓட்டிகளை சென்னைத்தமிழில்
பெற்றோர்களை திட்டாது காரணம் இவைகளுக்கு ஆறறிவு கிடையாது
இப்படி விபத்துகள் நடந்தால் வாகனம் அதிகமான
அளவில் பாதிக்கப்படும், ஒருவேளை பல்டி அடித்தால் கண்டிப்பாக வாகனம் கண்டம் ஆவது
உறுதி அதேநேரம் மனிதர்களுக்கு அதிகமான காயம் ஏற்படலாம் உயிர்ச்சேதம் ஏற்படுவது
குறைவு என்பது 100/100 உண்மை, மேலும் ஒரு உண்மை
இருக்கிறது இந்த விஞ்ஞான வளர்ச்சியின் உதவியால் செயல்படும் Navigation, Cruise
Control, Supplemental Restraint System, Bluetooth போன்றவைகளின் அலைவரிசைகளால்
மனிதனின் இதயம் பாதிக்கப்பட்டு, மருத்துவர் ராமதா... மன்னிக்க, ஊரில்
உள்ள மருத்துவர்களிடம் சென்று சொந்த வீட்டை விற்று கப்பம் கட்டி அவர்கள் சொந்தமாக
மருத்துவமனையும், அதன் வளாகத்திலேயே மருந்தகமும் கட்டிய பிறகே விரைவில் மரணத்தை
தழுவும் சூழலுக்கு தள்ளப்படுகிறான் என்பதும்100/100 உண்மையே ஆனால் நமக்கு இதனைப்பற்றி கவலையில்லை
காரணம் நாம் அனைத்து விஞ்ஞான அதிசயங்களையும் சீக்கிரம் அனுபவிக்க வேண்டும், இதனால்
நாம் சீக்கிரம் மேலே போகிறோமே என்ற சிந்தை இந்த ஆட்டு மந்தை (ஆறறிவு) கூட்டத்துக்கு என்று தோன்றும் ?
காணொளி
ஆஆஆஆஆவ்வ்வ் மீ தேன்ன்ன்ன்ன் 1ஸ்ட்டூஊஊஊஊஊ பூஸோ கொக்கோ?:).. கீசாக்கா ரெம்ம்ம்ம்ப லேட்டூஊஊஊஊ:) அவவால ஓட முடியாதே அதிராவைப்போல:).. ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குரைட்டு...
நீக்குநல்ல அலசல்.. நீங்க சொன்னதைப்போல போகுமிடத்தை செட் பண்ணி விட்ட்டால், கார் தானாகப் போய் நிற்குமாம்.. அதை அமெரிக்காவில் ரயல் விட்டுப் பார்த்த இடத்தில் அது போய் அடித்து ஒருவரைக் கொன்று விட்டதாம் அதிலிருந்து இப்போ யோசிக்கிறார்களாம் என எங்கோ படித்த நினைவு.
பதிலளிநீக்குவீடியோ.. அது தேவைதானா எனும் எண்ணம்தான் வருகிறது..
அற்பனுக்குப் பவுசு வந்தால் கதைதான்.. போகிற உசிர் ரோட்டிலபோனா என்ன வீட்டில போனா என்ன என நினைச்சிட்டினம் போல:)..
அது இன்னும் பரிசீலனையில் உள்ளது.
நீக்குகாணொளியில் உள்ளது சௌதி அரேபியர்கள் இப்படித்தான் உயிரின் மதிப்பு அறியாத மடையர்கள்.
இன்னொன்று கில்லர்ஜி.. வாகனங்கள் கனமாக இருந்தால்தான்.. அக்ஷிடண்ட்டுகளில் இருந்து தப்பவும் முடிகிறது எனவும் அறிந்தேன், காரணம் நசுங்காதாம்.. நசுங்கிட்டால் உள்ளே இருப்போரை நசுக்கிடுமெல்லோ. ரொயோட்டா ... ஹொண்டா போன்றவை இதனாலேயே ஹெவியாக செய்யப் படுகிறது என அறிஞ்சேன்.. கதவில், பின் boot ல் ஏதும் அடிபட்டாலும் தாக்குப் பிடிக்குமாம்.
பதிலளிநீக்குஇதுவும் உண்மையே பென்ஸ் கார் எவ்வளவு மோசமாக மோதினாலும் பல்டி அடிக்காது.
நீக்குஎல்லாம் இன்பமயம் என்பதுபோல் எல்லாம் இயந்திரமயம்.இங்கு அதனைப்பார்த்துக் கொண்டுதான் உள்ளேன்
பதிலளிநீக்குகவிஞரின் கருத்து உண்மையே... வருகைக்கு நன்றி
நீக்குமீண்டும் நல்லதொரு பதிவு...
பதிலளிநீக்குகவனத்தில் கொள்ளத் தக்கது..
வாழ்க நலம்..
அன்பின் ஜி வருகை தந்தமைக்கு நன்றி
நீக்கு
பதிலளிநீக்குவீடியோவில் அப்படி கார் ஊட்டுவது ஒன்றும் அதியமில்லை வேண்டுமென்றால் தேம்ஸ் நதிக்கரையோரம் போய் பாருங்கள் அதிரா உட்கார்ந்து அவர் கணவர் கார் ஒட்டினால் கார் அப்படிதான் போகுமாமாம் அப்படின்னு வாட்ஸப் மூலம் ஒருத்தர் தகவல் சொல்லி சிரிக்கிறார்
இந்த தகவல் எனக்கு புதிதாக இருக்கிறது நண்பரே. வருகைக்கு நன்றி
நீக்குஅது உண்மைதான் அதிராட பக்கம் மேலெ எழும்பிடும் ..பிக்கோஸ் மீ சரியான மெல்லிசு எல்லோ:)... கிக் கிக் கீஈஈஈஈஈஈஈஈஈ:)..
நீக்குஇதில இந்தத் தகவல் புதிசாமே கில்லர்ஜிக்கு:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) வருங்காலப் போஸ்ட்டுக்கு பாவிக்கும் ஐடியாப்போல:)..
ஊசிக்குறிப்பு: ட்றுத்தை குயின் அம்மம்மா தேடுறா:) எதுக்கு கொஞ்சக்காலம் தலைமறைவகவே இருக்கச் சொல்லுங்கோ கில்லர்ஜி:).
குயின் அம்மம்மாவுக்கு தமிழர் எதுக்கு ???
நீக்குஅது அவர் அதிரா குண்டு என ஜொள்ளிட்டார் எல்லோ:) அதாலதான் தேடுறா, தன் செல்லப் பேத்தியை எப்பூடி அப்படி ஜொள்ளலாம் என:)... ஹா ஹா ஹா
நீக்குஅவர் எதற்கு பேத்தியை (உங்கள் மகளை) தேடுகிறார் ?
நீக்குஹாஹாஆ அது கில்லர்ஜி :) உங்களுக்கு தெரியாதா :) தேம்ஸ் கரைக்கராம்மாவின் பேரனுக்கு 19 ஆம் தேதி கல்யாணம் :) அரசி போகாத முக்கிய விசேஷங்களுக்கு அரசியாரின் முதல் சகோதரி அதாவது அரிசியைவிட 9 மாதமே இளைய அதிரா மியாவை அனுப்பி வைக்க போறார் அதான் தேடல் :)
நீக்குஅரசியாரைவிட 9 மாதம் இளையவரா ? நான் அரசிதான் 9 வருடம் இளையவராக இருப்பாரென்று நினைத்தேன்.
நீக்குஉண்மையான தகவலுக்கு நன்றி.
கில்லர்ஜி கார் வெயிட் கனமாக இருந்தால்தான் நல்லது இல்லையா...இப்போது தொழில்நுட்பம் நன்றாக வளர்ந்திருக்கிறதுதான். உயிர் போகாதுதான் ஆனால் அடி பட்டு எதற்கும் பயனில்லாமல் பெட்டில் பலரது திட்டுக்களையும் சலிப்பையும் வாங்கிக் கொண்டு கிடப்பதும் கஷ்டம்தான். அதீத தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு சிலவற்றில் நன்மை என்று சொல்லப்பட்டாலும் பல வகைகளில் சமுதாயத்திற்கு எமன். இது உறுதி.
பதிலளிநீக்குகீதா
விஞ்ஞான வளர்ச்சி மனித வாழ்வுக்கு என்றுமே அழிவுதான். இதை நான் இறுறிவரை வலியுருத்துவேன்.
நீக்குமனிதன் வேகமாக போய் முடிவில் எதைச்சாதிக்கப் போகின்றான் ?
காணொளியில் வித்தை காட்டி ஓட்டுகிறென் என்று ஓட்டுவது அதிரா தானே!!? ஹா ஹா
பதிலளிநீக்குகீதா
அதிராவா ? இது நீங்கள் சொல்லித்தான் அறிந்தேன்.
நீக்குஹா ஹா ஹா தெரியாமல் ஒரு வீடியோவைப் போட்டு இப்போ கில்லர்ஜிக்கும் நடுங்குதே:) அதனால அதிரா பற்றிய தகவல் எல்லாம் புதுசூஊஊஊஊ எனத் தப்புறார்:)).. கீதா நீங்க வந்து ஏறி இருங்கோ இதேபோல மீ ஓடுறேன்:)) ஆனா உசுருக்கு:) மீ உத்தரவதமில்லை.. லைவ் இன்சூரன்ஸ் எடுத்து வாங்கோ:)
நீக்குஉயிருக்கு உத்ரவாதமில்லையா ?
நீக்குவண்டியைப் பற்றி நான் அறியாத தகவல்கள். சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குவருக ஸ்ரீராம்ஜி நன்றி
நீக்குகாணொளி திகைக்க வைக்கிறது. என்னென்ன சாகசங்கள் செய்கிறார்கள்!
பதிலளிநீக்குசௌதி அரேபியர்கள் கார் ஓட்டுவதில் திறமைசாலிகளே... ஆனால் பயன் ???
நீக்குஅதிரா சொல்வதுபோல இதுபோன்ற சாகசங்கள் தேவைதானா என்றும் தோன்றுகிறது. அந்த ஓட்டுநர் மிக்க திறமைசாலி என்று தெரிகிறது.
பதிலளிநீக்குஅரேபியர்களுக்கு மரணபயம் எப்போதுமே கிடையாது. மரண வீட்டில் அடுத்த நொடியே ஒட்டக பிரியாணிக்கு அண்டாக்கள் வந்து இறங்கி விடும்.
நீக்குஒப்பாரிச்சத்தம் வராது ஒட்டகத்தின் மரணச்சத்தம் கேட்கும்.
ம்ம்ம் மனம் வேதனை கில்லர்ஜி...இந்தப் பதிலைக் கண்டு..உயிரைப் பணயம் வைத்து சாகசங்கள் செய்வது என்பது அவசியமே இல்லை...என்னதான் கார் ஓட்டும் திறமை மிக்கவராக இருந்தாலும்...கார் என்றில்லை எந்தவித சாகசம் என்றாலும்...இல்லையா ஜி
நீக்குகீதா
உண்மை உயிரை பணயம் வைத்து பெயர் வாங்குவதை காண நாம் இருப்போம் என்ற உறுதி இல்லாதபோது எதுவுமே தேவையற்றதே...
நீக்குமேவே உள்ளவர்கள் போலீஸ் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக முகத்தை மறைத்துக் கொண்டனர்.
அரபிகளுக்கு சாவைப் பற்றிய எண்ணங்கள் எல்லாம் கிடையாது..
நீக்குஅசுரத்தனமாக காரை ஓட்டி போவோர் வருவோரை - குறிப்பாக விடியற்காலையில் தெரு கூட்டுபவர்களை - மேலே அனுப்பி வைத்திருக்கின்றார்கள்....
அரபிகளுக்கு சடங்கு சம்பிரதாயங்கள் ஏதும் கிடையாது .. ஆகையால் மரண வீட்டில் உடனடியாக விருந்து உபசரிப்பு தான்..
ஆம் உண்மையே மீள் வருகைக்கு நன்றி ஜி
நீக்குஅரபியர்கள் பற்றி படிக்கையில் மனிதர்கள்தானோ எனும் டவுட்டு வருகிறது.. குழந்தைகளை ஒட்டகக் காலில் கட்டுகிறார்கள்.. இப்போ இப்படிச் சொல்றீங்க..:(.
நீக்குஉண்மை அவர்களில் பெரும்பாலானோர் மூடர்களே...
நீக்குதுரை சார்/கில்லர்ஜி - கல்ஃப் தேசங்களில், சௌதிகளும் குவைத்திகளும் கொஞ்சம் ரஃப் டைப். ஓமானியர்களும் பஹ்ரைனிகளும் நல்ல குணம் உடையவர்கள். எமராத்திகள் மிகவும் குறைவு, செல்வச் செருக்கு. அவ்வளவாக மற்றவர்களிடம் பழக மாட்டார்கள். கத்தாரிகள் ஓரளவு பரவாயில்லை.
நீக்குஇந்த வட்டங்களில் எமராத்திகள் பரவாயில்லை ரகம்தான் நண்பரே.
நீக்குஅன்பின் நெ.த.
நீக்குதாங்கள் சொல்வது உண்மையே...
நான் இங்கே உள்ள சூழலைத் தான்
குறிப்பிட்டுள்ளேன்...
கருத்துரைக்கு நன்றி..
ஆவ்வ்வ்சம்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குதேவ கோட்டையாரே,
பதிலளிநீக்குவண்டி கனமாக இருத்தலே நலம். இப்போதைய லைட் வெஹிகிள்ஸ்
எப்படி மோசமாகச் சிதைகின்றன.
எனக்கு பழைய வண்டிகளில் நம்பிக்கை.
உண்மை அம்மா இன்றும் பென்ஸ், BMW,செவ்ரோலெட், லாம்போர்க்கினி வகை கார்கள் பழைய கனத்துடன் பாதுகாப்பாகவும் வருகிறது.
நீக்குநல்ல அலசல் நண்பரே
பதிலளிநீக்குவண்டிகள் எடை குறைந்தது மட்டுமல்ல , வண்டிகளின் வேகம் மிக மிக அதிகரித்து விட்டதும் விபத்திற்கான காரணமாய் இருந்து விடுகிறது நண்பரே
வருக நண்பரே இதுவே முதல் காரணம் மற்றவையே நான் சொல்லியது.
நீக்குவேகத்தை விட விவேகம் முக்கியம் ஜி...
பதிலளிநீக்குவாங்க ஜி ஸூப்பர் உண்மை.
நீக்குகாரில் வேகமாய் போகும்போது திடீர் பிரேக் இல்லாமல் போகிற போக்கிலேயே மருத்துவமனையும் மருந்தகமும் பற்றி போட்டு சாத்துனது அழகு!!! என்ன எழுதினாலும் அதில் ஒரு சமூக அக்கறை இருப்பது கில்லர்ஜீயின் கெத்து..!! போட்டோ போன்றே!!
பதிலளிநீக்குவருக நண்பரே சந்தர்ப்பம் கிடைக்கும்போது சாத்திடணும்.
நீக்குதங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.
ஆட்டோமோபைல் மற்றும் வெஹிக்கிள் எலக்ட்ரானிக்ஸ் துறைகள் நாள்தோறும் புதுப்புது தொழில் நுட்பங்களை உருவாக்கி வருவது கண்கூடு. ஆட்டோ தொழிற்சாலைகள் ரோபோவின் கட்டுப்பாட்டில் இயங்கி உற்பத்தி செய்வதால் துல்லியமான தரக்கட்டுப்பாடு உள்ளது. அபரிதமான தொழில் நுட்ப வளர்ச்சி. தங்களது தகவல் நிறைந்த பதிவிற்கு நன்றி.
பதிலளிநீக்குவாங்க நண்பரே எவ்வளவுதான் வளர்ந்தாலும் முடிவு விரைவில் மனிதனை அழிப்பதிலேயே இருப்பது வருத்தமான விடயம்தானே...
நீக்குசரி, சரி சீக்கிரம் எனக்கொரு கார் வாங்கி அனுப்புங்கண்ணா
பதிலளிநீக்குஇதோ புறப்பட்டு விட்டேன் ஷோரூம்.
நீக்குநல்ல பதிவு.
பதிலளிநீக்குகாணொளி பார்த்தேன்.
நன்றி சகோ
நீக்குசீக்கிரம் அனுபவிக்க வேண்டும் என்று சீக்கிரமாய் போய் சேராமல் இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குவேகம் விவேகம் அல்ல.
வருக சகோ உண்மையான வார்த்தை.
நீக்குவண்டி எப்படி இருந்தாலும் விபத்து நேராமல் போய்ச் சேருவதற்கே பிரார்த்திப்போம். எனக்கு அதிகம் கார்கள் குறித்துத் தெரியாது. காணொளி பார்க்கணும். அப்புறமா வரேன்.
நீக்குகில்லர்ஜி நடு ராத்திரியில் பதிவு போடுவதால் நான் முதல்லே வருவதற்கான வாய்ப்பே இல்லை அதிரடி! அதான் இங்கே போட்டிக்கு வரதில்லை! :)
நீக்குவருக சகோ மிதவேகம், மிகநன்று என்பார்கள் இதை புரிந்து நடந்தால் அனைவரும் நலமே...
நீக்குஅடுத்து உங்களுக்காக பகலில் பதிவு வரும்.
கீசாக்கா நித்திரை முழிச்சு வாங்கோ:)
நீக்குகாருக்குள் இவ்வளவு விசயம் இருக்கே!
பதிலளிநீக்குகண்டுபிடிப்புகள் சீக்கிரம் நிகழட்டும். அவசரப்பட்டுப் போய்ச் சேராமல் ஆற அமர அனுபவிப்போம்.
புதுப்புதுத் தகவல் தந்ததற்கு நன்றி கில்லர்ஜி.
நிதானமாக அனுபவிப்போம் ஸூப்பர் நண்பரே
நீக்குஅடுத்த பதிவுக்கு அவசியம் வாருங்கள். விஞ்ஞானிகளுக்கு வரவேண்டிய சிந்தனையில் எமது பதிவு.
அறிவுப்பசிஜி படம் மாத்திட்டாரே:)
நீக்குயாருடைய கண்ணோ பட்டுடிச்சி. நாலஞ்சி நாளா செம காய்ச்சல். வீட்டம்மா ஆலோசனைப்படி, படத்தை மாத்தினேன்.
நீக்குஅறிவுப்பசிக்குப் பொருத்தமான படம்தானே அதிரா?
பொருத்தமே முதலில் ஊதா நிறத்தில் இருந்ததே... நண்பரே.
நீக்குகில்லர்ஜிக்கு நினைவாற்றல் ரொம்ப ரொம்ப அதிகம்!
நீக்குஉண்மை சரிதானா ?
நீக்குஇந்த நினைவாற்றல்தான் எனது வாழ்க்கையில் எதையுமே மறக்க விடாமல், சராசரி மனிதர்களைப்போல் எதையுமே அனுபவிக்க விடாமல் காலத்தை வெட்டியாக கடத்தி விட்டது.
மிகப் பொருத்தமான படம்தான் அறிவுப்பசிஜி...:) புளொக்கில் என்ன எழுதலாம் எனச் சிந்திப்பதைப்போல இருக்கு ஹா ஹா ஹா.. விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்.
நீக்குவண்டி கனமாக இருப்பது நல்லது. நம்ம ஊரில் பழைய மாருதி ஸ்விஃப்ட் நல்லா இருந்ததாகவும் இப்போது வருவது தகர டப்பா என்றும் சொல்கிறார்கள்.
பதிலளிநீக்குஎன்ன இருந்தாலும் விதி வந்தால் மாளவேண்டியதுதான்.
கிரே சூப்பர் பவர் கம்யூட்டரைக் கண்டுபிடித்த க்ரே (அந்த நிறுவனம்தான் ஆப்பிளால் வாங்கப்பட்டு இப்போ பெரிய நிறுவனமா வளர்ந்துவிட்டது) ஜோதிடத்தை நம்பி (ஆப்பிரிக்காவில் கூறப்பட்டதை என்று படித்த ஞாபகம்), கார் விபத்தில்தான் தான் மறைவோம் என்று அறிந்து, தன் காரில் இரு புறமும் தகுந்த பாதுகாப்பும் (ஸ்டீல்) முன்பக்கமும் பின்பக்கமும் தகுந்த உபகரணங்களும் பொருத்தினாராம். நெடுஞ்சாலையில், இரு புறமும் வந்த டிரைலர்களால் கார் நெருக்கப்பட்டு, அதனால் காரின் மேல் பகுதி கீழே இறங்கி அவர் தலையைத் தாக்கி விபத்தில் இறந்தார். கார் மேல் பகுதி இறங்கி இறக்க வாய்ப்பு உண்டு என்பதை அவர் எதிர்பார்க்கவில்லை.
இதனை முன்னர் படித்திருக்கிறேன். (இந்த கிரே தான் கொடைக்கானலிலோ ஊட்டியிலோ இருந்தார் என்றும் படித்திருக்கிறேன்)
உண்மை மரணம் எப்படியும் நிகழ்வது உறுதியே...
நீக்குதங்களது விரிவான கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகாணொளி அசர வைத்தது. இப்படியா பயமில்லாமல், ஓடும் வண்டியில் வித்தைகள் புரிவார்கள்? சரி அவர்கள் உயிரைப்பற்றி அவர்களுக்கு கவலையில்லை என வைத்துக் கொள்வோம். இதர வாகனங்கள் அவர்களுடன் சாலையில் எப்படி பயணிக்கும்...
வாகனங்களின் வடிவமைப்புக்கள் பற்றி அவ்வளவாக தெரியாது. இப்போது தங்கள் பதிவு தெளிவாக விளக்கியது. விஞ்ஞான வளர்ச்சியில் தாங்கள் குறிப்பிட்டிருப்பது( காருக்குள்) ஒரளவுக்கு அறிவேன். ஆனாலும் விபத்து ஏற்பட வேண்டும் என நேரமும், காலமும் குறி வைத்து விட்டால், மனிதனும், விஞ்ஞானமும் ஒன்றும் செய்ய இயலாது.அருமையான விழிப்புணர்வு பகிர்வு.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நான் பல நேரங்களில் இப்படிச் செய்யும் அரேபியிக் கிறுக்கர்களை நினைத்ததுண்டு நீங்கள் செத்தால் பிரச்சனையில்லை ஆனால் பிழைக்க வந்த பிற நாட்டான் இறந்து விடுகின்றானே... என்று.
நீக்குகில்லர்ஜி - இன்னொன்று... நிறைய படங்கள், காணொளிகள் சேர்த்து வைத்திருக்கீங்க. பொருத்தமா இடுகை போடறீங்க. பாராட்டுகள்.
பதிலளிநீக்குநம்மலோட ஸ்பெஷாலிட்டியே படங்களும், காணொளிகளும்தான் நண்பரே...
நீக்குஏன் வேறு ஸ்பெஷாலிட்டியே இல்லையா:) ஹையோ ச்ச்சும்மா ஒரு டவுட்டூஊஊ:)...
நீக்குநெல்லாத் தமிழன் உங்களைப் பாராட்டுவதைப் பார்த்து எனக்கொன்றும் புகையவில்லையாக்கும்:).. மீ ச்ச்சும்மாதான் மோர் குடிக்கிறேன்ன்ன்ன்:).. ஹா ஹா ஹா
அவரு பாராட்டுவதால் பொறாமையா ?
நீக்குபொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராஆஆஆண்மையா?:) நேக்கா? சே..சே.. பெண்களுக்கு அந்த “..ஆண்மை”..:) எல்லாம் இல்லவே இல்லையே.. ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:).
நீக்குநம்பிட்டோம்.
நீக்குAmbassodor car கதை முடிந்து போனதற்க்கு இது தான் காரணமா
பதிலளிநீக்குஆம் நண்பரே ஒரு காலத்தில் அதுதான் ஹீரோ... 1987-ல் நான் முதன் முதலில் அதில்தான் பழகினேன்.
நீக்குகியர் ராடு ஸ்டேரிங் வளையத்தை ஒட்டி இருக்கும் கையிலேயே போடவேண்டும்.
எனக்கு ஒரு ஹெவி காரும் லைட் வெய்ட் காரும் வாங்கித்தந்தால் , நான் ஓட்டக் கத்துக்கிட்டு ஓட்டிப் பாத்துட்டு .................அப்புறமாத்தான் இதுக்கு காமெண்ட் பண்ண முடியும்
பதிலளிநீக்குஅடடே வாங்க யோசனை மஞ்சிவாடுதான்.
நீக்குகாணொளியை தான் முதல பார்த்தேன் .அம்மாடியோவ் இதுங்களை கட்டிக்கிட்டவங்க /பெத்தவங்க /இதுங்களுக்கு பிறக்கப்போற ஜீவன்களை நினைச்சா :(
பதிலளிநீக்குவானரங்கள் கூட இப்படி சேஷ்டை செய்யாது :(
அறிவியல் வளர்ச்சியுடன் வீழ்ச்சியையும் எதிர்நோக்குகிறோம் என்பதே உண்மை
எல்லாவற்றுக்கும் இரு பக்கம் இருக்கு வேகமா போற கார் மேலேயும் வேகமா கூட்டிட்டு போயிரும் ..
தானியங்கி கார் ஒன்னு ரெண்டு நாளுக்கு முந்தி பாதசாரியை கவனிக்காம ஏத்தி போட்டிருக்கு .மனுஷனுக்கே கண்ணு குழம்பும் இந்த விஞ்ஞ்சான வளர்ச்சி யில் உயிரற்ற பொருளுக்கு உயிர்பற்றி தெரியுமா ?
நான் நீங்கள் சொன்னவர்களைவிட, இவர்கள் வீட்டில் ஹவுஸ்மேட் வேலை செய்யும் இந்தோனிஷியா, பிலிப்பைன்ஸ், ஸ்ரீலங்கா பெண்களின் நிலையை நினைத்துப் பார்த்தேன். நினைவுகளே மனதை பதற வைக்கிறது.
நீக்குஅறிவியலின் பயனைக் குறிப்பிட்டதோடு, ஆபத்தையும் சுட்டிக்காட்டிய விதம் அருமை.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.
நீக்குகாணொளி முன்பே எனக்கு வந்திருக்கிறது என் நண்பனமெரிக்காவிலொருகார் ஆக்சிடெண்டில் மாட்டினான் அந்தக்கார பப்படமாகநசுங்கிப் போய் இருந்ததுஆனால் நண்பன்பிழைத்து விட்டான் கழுத்தில் மட்டும் முழுவதும் திருப்பமுடியாமல் இருக்கிறது ஹெவி காரோ லைட் காரோ ஏதும் தெரியாது
பதிலளிநீக்குவாங்க ஐயா இச்சம்பவம் இந்தப் பதிவின் சாராம்சமே...
நீக்குஅந்தக்கார் லைட் வெயிட்டாக இருக்கும். வருகைக்கு நன்றி ஐயா.
நாம ஒழுங்கா போவதைப் பார்த்து..... எதிரில் வருவபவர்கள், சைடில் வந்து முந்துபவர்கள் இவர்கள் எல்லாம் ஒழுங்கா வந்தால் விபத்தே ஏற்படாதே!..அங்கிகாரம் பெற்ற எல்லா வழிப்பறி திருடர்கள் உள்பட..........
பதிலளிநீக்குசட்டத்தை அனைவரும் மதித்து நடந்தால் எல்லோருக்கும் நல்லதுதான் நண்பரே...
நீக்கு