இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மே 12, 2018

ஆண்கள் விரைவில் பிரசவிக்கலாம்


முன்னுரை இது தொடர் பதிவல்ல...

நட்பூக்களே... விஞ்ஞானம் நாளுக்கு நாள் புதிய, புதிய விடயங்களை தந்து கொண்டே இருக்கிறது கலைவாணர் என்.எஸ்.கே அவர்கள் பழைய திரைப்படம் ஒன்றில் பாடியிருப்பார்
ஆணை பெண்ணாக பெண்ணை
ஆணாக ஆளையே மாத்துறாங்க...
இங்கே ஆளையே மாத்துறாங்க...
மேலும்...
பட்டனைத் தட்டி விட்டா தட்டுல இட்டிலியும்
கெட்டி சட்டினியும் வந்துடுங்க...
இப்படி.... அன்றைய காலகட்டத்தில் இது நம்பிக்கை தரக்கூடியதாக தோன்றவில்லை இன்று சாத்தியமாகி விட்டது உண்மை தொலைபேசி வந்த காலங்களில் கைப்பேசியை நாம் நினைத்துப் பார்த்திருப்போமா ? இல்லை தொலைக்காட்சி வந்த காலங்களில் கணினியை நினைத்துப் பார்த்திருப்போமா ? இல்லை இன்று எல்லாமே சாத்தியமாகி விட்டது அதாவது இனி நான் சொல்லப் போவது அடுத்த காலகட்டங்களில் நான் மறைந்த பிறகாவது நிச்சயமாக விஞ்ஞானிகளால் கண்டு பிடித்து நடைமுறைக்கு வரும் என்பது எமது திண்ணமான எண்ணம் அதற்காகவே தேவகோட்டையான் சொல்வது சரித்திரத்தில் நிற்கும் என்ற நம்பிக்கையில் இந்தப்பதிவை பகிர்கின்றேன் இதற்கு எடுத்துக் காட்டுகளுடன் நான் தரும் விடயங்கள் அனைத்தும் பொருந்துகின்றதா ? என்பதை கணித்துச் சொல்லுங்கள்.

01. பண்டைகால இயற்கை வழி பிரசவங்கள் மற(று)க்கப்படும் அல்லது அரசே சட்டம் போட்டு தடை செய்யும் அனைத்து பிரசவங்களும் சிசேரியன் முறை.
01. எடுத்துக்காட்டு இப்பொழுது குழந்தைகளின் பிரசவம் எண்பத்து ஐந்து % அறுவை சிகிச்சை வழியே நடைபெறுகிறது காரணம் மனிதநேயம் செத்து பணந்திண்ணிக் கூட்டங்கள் பெறுகி விட்டது மேலும் பிரசவ வேதனையை இன்றைய பெண்கள் விரும்புவதில்லை காரணம் உடல் வலுவில்லை மேலும் வேலை உடன் முடிந்து விடும், மற்றொரு காரணம் அற்ப ஆசைக்காக ஆண் வர்க்கமும் இதையே விரும்புகிறது உண்மைதானே...

02. எதிர்கால புரட்சிப் பெண்கள் நாங்கள் சுமந்தது போதுமென்று போராட... இதற்கு விஞ்ஞானிகள் தன் திறமையை வெளிப்படுத்த முன் வந்து வெற்றி பெறுவார்கள் ஆண்களும் குழந்தையை வயிற்றில் சுமந்து பிரசவிப்பார்கள் குழந்தை பிறப்பின் வழி சிசேரியன் முறையே.
02. எடுத்துக்காட்டு இப்பொழுதே இயற்கையான சேர்தலின்றி ஆணின் வித்தை பெண்ணுக்குள் புகுத்தி பிரசவிக்க வைக்கின்றார்கள் ஆகவே இதுவும் சாத்தியமே மேலும் இப்போது இதை செய்து கொடுக்கும் பல நிறுவனங்கள் இதனால் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது.

03. இனி விட்டாலாச்சார்யா திரைப்படங்களில் பார்த்தது போல மனிதர்கள் செயற்கை இறகுகளுடன் நினைத்த இடங்களுக்கு பறந்து சென்று வருவார்கள் இதன் தூர அளவுகள் காலமாற்றத்துக்கு தகுந்தாற் போல் தொடரும்...
03. எடுத்துக்காட்டு பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்று கவியரசர் எழுதியது உண்மைதானே... அவ்வழியே இன்றைய போக்குவரத்து பெறுகி விட்டது எவ்வளவுதான் சரி செய்தாலும் இன்றைய அவசர மனிதன் விரைவாக காரியத்தை முடிக்கவே விரும்புகிறான்.

04திருமணங்கள் என்ற சடங்கு ஒழிந்து போகும் ஆணும், பெண்ணும் வேண்டியவர்களுடன் விருப்பப்பட்டால் வாழலாம் அல்லது பிரிந்து செல்லலாம் தாய்-தந்தை என்ற பாசத்துக்கு இடமில்லை குழந்தைகள் நிறுவனங்களின் காப்பகத்தில் சேர்க்கப்படும் விருப்பப் பட்டால் வளர்த்துக் கொள்ளலாம்.
04. எடுத்துக்காட்டு இப்பொழுதே ஒரு நாட்டில் மன்னிக்கவும் பெயர் மறந்து விட்டது திருமணம் நடப்பதற்கு முன் ஆணும், பெண்ணும் ஒரு வருடம் சேர்ந்து வாழவேண்டும் கணவன் – மனைவி போலவேதான் ஆனால், குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாது அதில் அவர்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டால் திருமணம் செய்த பிறகே குழந்தை பெற்றுக் கொள்ளலாம் பிரிந்தாலும் இவனுக்கும், இவளுக்கும் மீண்டும் ஒருவனும், ஒருத்தியும் சேர்ந்து வாழ தயாராக இருக்கின்றார்கள் ஒருவர் அல்ல சமூகமே ஆகவே யாரும் யாரையும் இழிவாக பேசி விடமுடியாது.

05பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு பாடத்திலேயே காமசாஸ்த்திரம் சொல்லிக் கொடுக்கப்படும் காரணம் அவனது கல்லூரி முடிக்கும் காலத்தில் அனைத்தும் தெரிந்து விடும்.
05. எடுத்துக்காட்டு இப்பொழுதே எல்.கே.ஜி, யூ.கே.ஜி சேர்க்கும் பொழுதே குழந்தைகளின் பாதுகாப்புக்கும், உடனடி தகவல் தொடர்புக்கும் அவசியமென்று கைப்பேசியோடுதான் பள்ளியில் சேர்க்கிறோம் மேலும் பேசுவதற்கு இடும் பணத்தில் விபரமான குழந்தைகள் மூன்று ரூபாய் செலுத்தி தற்கால இணையம் பெற்று விடுகின்றன காரணம் கழிவறைக்குள் சென்று யூட்டியூப் பார்க்கின்றனர் மேலும் விரைவில் அரசே இலவச இணையம் தருவதாக சொல்லி வாக்கு கேட்பார்கள் வாக்கு கிடைக்கவும் வாக்கு கொடுத்தவர்கள் வாய்க்கு வாய்க்கரிசியும் கிடைக்கும்.

06எந்த அளவுக்கு நாட்டில் கல்வி நிலையங்கள் இருக்கின்றதோ.. அந்த அளவுக்கு முதியோர் இல்ல ஒப்பந்த நிறுவனங்கள் பெறுகும் இதில் பணக்கார வர்க்கங்களின் பெற்றோர்கள் சகல வசதிகளுடன் சந்தோஷம் தொலைத்து வாழ்வார்கள் செய்த வினையை எண்ணியபடியே.... அதே அளவுக்கு வயது முதிர்ந்த பிச்சைக்காரர்கள் வெளியில் வாடித்திரிவார்கள் துணைகளின்றி இருபாலருமே...
06. எடுத்துக்காட்டு இப்பொழுதே முதியோர் நிலையங்கள் பெறுகி விட்டது காரணம் பாசம் என்றால் என்னவென்று நாம் நம் சந்ததிகளுக்கு கற்றுக் கொடுக்காததே அதே போல எங்கும் பிச்சைக்காரர்கள் பெறுகி விட்டது காரணம் ஆனால் அரசியல்வாதிகள் மட்டுமே சொல்கின்றார்கள் இந்தியா வல்லரசு என்று இதுதான் எனக்கு புரியவில்லை.

07மனிதர்களுக்கு ஏழறிவு என்று ஐநா சபையில் நிறைவேற்றப்பட்டு உலகம் முழுவதும் மக்கள் ஆரவாரமாய் ஏற்றுக்கொண்டு உலக ஏழாம் அறிவு நாள் என்று மார்ச் மாதம் முடிந்த மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது அன்று உலக பிரதமர்கள், விஞ்ஞானிகள், அரசியல் வல்லுனர்கள் அனைவரும் கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பி மகிழ்கின்றார்கள், அங்கயற்கன்னி பட்டம் பெற்ற நடிகை நமீதாவின் கொள்ளுப்பேத்தி இடுப்பில் மட்டும் உடையணிந்து தொலைக்காட்சிகளில் தமிழ் நாட்டு மக்களுக்கு இனி வாழும் முறை என்னவென்பதை அலகு டமிளில் உறையாற்றுகிறார் ரசிகர்கள் ஆரவாரத்துடன் பட்டாசு கொளுத்தி மகிழ்கிறார்கள்.
07. எடுத்துக்காட்டு இப்பொழுது குடியரசு தினம், சுதந்திர தினம் வந்தால் நான் காலையில் தொலைக்காட்சியை திறந்தவுடன் தமிழ் நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷங்கள் தேசத்தியாகிகள் திருமதி. குஷ்பு சுந்தர், திருமதி. நமீதா கந்தர், திருமதி. மும்தாஜ் பந்தர் இவர்கள் வந்துதான் எனக்கு தேசபக்தியை ஊட்டுகின்றார்கள் வருடத்தில் மற்ற 362 நாட்களும் எனது மரமண்டைக்கு மறந்து போய் விடுகிறது.

08ஆண்களும், பெண்களும் ஒரு இன்ஞ் அளவிலான அதாவது ரிப்பன் போன்ற துணிகளை இடுப்பில் இணைத்திருக்கும் ரப்பர் பட்டையோடு ஊக்கு மாட்டி தொங்க விட்டுக்கொண்டு போவார்கள் அவைகள் காற்றில் அசைந்தாடி உடலுக்கு குளுமையை உண்டு பண்ணும் என்று தொலைக்காட்சிகளில் ஐஸ்வர்யாராவின் கொள்ளுப்பேத்தி விளம்பரங்களில் சொன்ன காரணத்தால் இனிவரும் காலங்களில் இதுதான் தேசிய உடை என்று மக்கள் பரவலாக பேசத் தொடங்குகின்றார்கள் சுடர்மணி மற்றும் நாயுடு ஹால் போன்ற நிறுவனங்கள் இழுத்து மூடப்படும்.
08. எடுத்துக்காட்டு இப்பொழுதே நாகரீகம் என்ற பெயரில் பணம் கொடுத்து வாங்கிய ஜீன்ஸ் பேண்ட் என்று சொல்லப்படும் உடையை முழங்காலிலிருந்து... தொடைவரை கிழித்துக் கொடுக்கின்றார்கள் அதைத்தான் அனைத்து மனிதனும் அணிகின்றான் கேட்டால் ஃபேஷன் என்று சொல்கிறான் ஏண்டா... தெரியாமல்தான் கேட்கிறேன் இருப்பவன் கிழிச்சுப்போட்டால் ஃபேஷன் இல்லாதவன் போட்டால் கிறுக்கனா ?

09நாட்டில் உள்ள குடியரசுத் தலைவர், பிரதமர், கவர்னர்கள், முதல்வர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நாடளுமன்ற உறுப்பினர்கள் மாதம் ஒருமுறை அரசு செலவில் ஸ்ரீ ஹரி கோட்டாவிலிருந்து விண்கலத்தில் சந்திர மண்டலம் சென்று ஒருவாரம் ஓய்வு எடுத்து வரலாம் என்றும், அவர்களுக்கு உதவியாக ஆண்பாலோ, பெண்பாலோ ஒருவரையும் அழைத்துச் செல்லலாம் என்றும் சட்டம் நிறைவேறுகிறது விண்கலத்தில் இந்தியாவின் அக்கீகரிக்கப்பட்ட 18 மொழிகளில் அதில் முதல் மொழியாக தமிழில் எழுதி இருக்கின்றது இப்படி அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு ஐயன் எழுத்தாணியோடு இருக்கிறார் உடன் முன்னணி நடிகைகள் நாங்கள் நாட்டுக்காவும் சேவை செய்வோம் என்று அறிக்கை விட அரசியல் தலைவர்களிடத்தில் சேவை செய்வதற்கு யார், யாரை வைத்துக் கொள்வது ? என்று போட்டி நிலவுகிறது இதன் எதிரொலியாய் என் தலைவன்தான் உயந்தவன் என்று கஞ்சிக்கு வழியில்லாத தொண்டர்கள் விமானம், கப்பல் போன்ற அரசு சொத்துகளுக்கு தீ வைக்கின்றார்கள்.
09. எடுத்துக்காட்டு இப்பொழுதே நாடாளுமன்ற, பாரளுமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளம் ஒரு இலட்சத்தை தாண்டி விட்டது மற்ற அனைத்து செலவுகளும் இலவசம் ஆனால் நாம் எதிர்த்துக் கேட்க மாட்டோம் அதேநேரம் கைவண்டித் தொழிலாளி மட்டும் கூலி கூட்டிக் கேட்கக்கூடாது தான் வாழ்ந்தோமோ இல்லையோ தன் தலைவன் வாழ்ந்தால் போதும் என்ற உயர்ந்த சிந்தாந்தவாதிகள் தமிழர்கள் ஆகவேதான் தலைவன் இயற்கை மரணம் அடைந்தாலும் ஏற்றுக் கொள்வதில்லை பதாகைகளுக்கு பாலாபிஷேகம் செய்கின்றோம்.

10வலைப்பதிவர்கள் உழைத்துக் களைத்துப் போவதால் இல்லம் வந்து கணினியைத் திறந்து பதிவுக்கு தட்டச்சு செய்ய ஒருவேளை விரலில் நகச்சுத்தி இருந்தால் மேலும் கஷ்டம்தானே... ஆகவே பெத்தோமேட்டிக் ஆர்காய்டு இணைக்கப்பட்ட கண்ணாடி அணிந்து கொண்டு கணினியைப் பார்த்தால் மனதில் நினைப்பது எல்லாம் அழகிய தமிழில் கணினியில் வந்து கொண்டே இருக்கும் பிறகு சகோ ராஜியிடமிருந்து தினம் மூன்று பதிவுகள் வரலாம். விருப்பப் படுபவர்கள் வர்ண எழுத்துக்களையும் நினைக்கலாம் என்னைப்போல... ஹி... ஹி... ஹி...
10. எடுத்துக்காட்டு இப்பொழுதே கைப்பேசிகளில் நாம் குறித்து வைத்திருக்கும் நண்பர்களின் பெயர்களை சொன்னால் உடன் அந்த நபரின் பெயரும், எண்ணும் தொடு திரையில் வந்து நிற்கிறது உடன் நாம் மேற்கு திசைநோக்கி தள்ளி விட்டு சம்பிரதாயத்துக்காக கிரஹாம் பெல்லின் சகோதரியின் பெயரைச் சொல்லி விட்டு... வலிப்போக்கன் நல்லா இருக்கீங்களா ? என்று கேட்கிறோம் உண்மைதானே...

போனஸ் செய்தி இத்தனை அதிவேக விஞ்ஞான வளர்ச்சியால் விரைவில் மனிதன் முதுமையாகி இறந்து போகின்றான்.

நட்பூக்களே... இந்தப்பதிவுக்கு தங்களது விரிவான கருத்துரையை எதிர் பார்க்கிறேன் மேலும் கருத்துடன் தங்களது மதிப்பெண்களையும் அவசியம் போடவும் அதாவது மதிப்பெண் இரண்டு போட்டால் இரண்டு % நடக்கும் என்றுமே, பத்து போட்டால் முழு % நடக்கும் என்றும் பூஜ்யம் போட்டால் தாங்கள் இது எதுவுமே நடக்காது என்று சொல்வதாக கணக்கு எடுக்கப்படும் தங்களது மனது கணிக்கும் மதிப்பெண் இடவும் பின்னூட்டத்தை மொத்தமாக நாளை மறுதினம்14.05.2018 திங்கள்கிழமை இந்திய நேரம் மாலை 04.00 pm திறந்து விடுவேன் அனைவருமே மொத்தமாக கணிப்பைத் தெரிந்து கொள்வோம் நன்றி.

காணொளி

89 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மீதான் 1ஸ்ட்டூஊஊஊஉ:)..

      நீக்கு
    2. உங்கள் மனது கணிக்கும் மதிப்பெண் கொடுக்கலாம் அதிக பட்சமாக மொத்த மதிப்பெண் 10

      நீக்கு
    3. இன்னும் வண் அவர் இருக்கோ?:) தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு:)).. ஏதும் அசம்பாவிதம் நடந்திடாமல் பாதுகாப்புப் படை ஏற்பாடு பண்ணிடுங்கோ கில்லர்ஜி:)) அல்லது என் கறுப்புப் பூனைப்படை வேணுமோ?:) வேணுமெனில் இப்பவே செக்:) ஐ என் செக்:) க்கு அனுப்பிடுங்கோ:))

      நீக்கு
    4. அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.
      பூனைகள் வேண்பாம் உதவிக்கு நன்றி

      நீக்கு
  2. மூன்றாவது நடக்க வாய்ப்புள்ளது. அல்ரெடி அது முயற்சி செய்யப்பட்டது என்று வாசித்த நினைவு....இதை நம் கார்ட்டூனிஸ்ட் மதன் முன்பே ட்ராஃபிக் ஜாம் ஆகும் போது என்ன நடக்கலாம் எதிர்காலத்தில் என்பதற்கு சொன்ன நினைவு....

    முதல் இரண்டும் ஒரு சின்ன கன்ஸல்டிங்க் நடக்கிறது அறிவியலாளர்க்ளிடம்...கேட்டுச் சொல்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கேட்டு சொல்லுங்க.... முதல் வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. 4. அவது மிகப் பழமையான கலாச்சார முறை. முன்பு மனிதன் சமூக அமைப்பு உருவாகும் முன் இப்படித்தான் நாடோடி வகையில் வாழ்ந்து வந்தான்...மீண்டும் சுழற்சி தொடங்குமோ என்னமோ...நீங்கள் சொல்லியிருப்பது போல் லைஃப் சைக்கிள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரும் ஆனா வராது என்று சொல்வது போலிருக்கிறது.

      நீக்கு
  4. 5,6,7,8 ஹா ஹா ஹா கிலல்ர்ஜிக்கு ஏதொ ஆகிப் போச்சு...

    9.ல் முதல் பகுதி நடக்கலாம்..

    10. அல்ரெடி வெர்சுவல் வந்தாச்சு கில்லர்ஜி...

    முதல் இரண்டிற்கும் இதொ..

    கில்லர்ஜி முதல் கருத்து சாத்தியமாகுமா என்பது சந்தேகம் காரணம் இப்போது இயற்கை சார்ந்த விழிப்புணர்வு பெருகி வருவதால் மக்களே சிசேரியனுக்குப் போக மாட்டார்கள் என்று தோன்றுகிறது. ஏனென்றால் வேறு வழி இல்லாமல் சிசேரியன் செய்வதற்கும் நாமாகக் கேட்பதும் உள்ள வித்தியாசங்களைப் பல மருத்துவர்கள் பேசத் தொடங்கியுள்ளார்கள். விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியுள்ளது. இது என் மருத்துவம் சார்ந்த தோழி அத்துறையில் இருப்பதால் சொல்ல முடிகிறது. அவரிடமும் கேட்டுவிட்டுத்தான் சொல்கிறேன். ஆனால் வேறு வழியில்லாமல் பல சிக்கல்கள் உருவாகி சிசேரியன் என்பது நடைபெறலாம் ஆனால் அறுவை சிகிச்சையைத் தாங்களாகக் கேட்பது வெகு குறைவு என்றுதான் சொல்கிறார்.

    2. இதுவும் சாத்தியமாக வழியில்லை. உடல் உறுப்புகள் என்பது வெளியில் உள்ள உறுப்புகளைத் தவிர உடலின் உள் இருக்கும் உறுப்புகள் இயற்கையின் விந்தை அது. க்ளோனிங்க் தடை செய்ப்பட்டுவிட்டது. எனவே இதுவும் சாத்தியமாகுமா என்பது சந்தேகமே. இதுவும் பயோடெக் நிபுணர் ஒருவரிடம் பேசித் தெரிந்து கொண்டுதான் சொல்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அலசி, ஆராய்ந்த தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  5. ஆனால் கிலல்ர்ஜி பெண்கள் மணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெறுவதை அதாவது ஆண் தொடர்பும் இல்லாமல் குழந்தை பெறுவது பரவலாகலாம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கூற்று நடக்கலாம் எல்லாம் சரி மதிப்பெண் ?

      நீக்கு
  6. தற்போது நாள் நட்சத்திரம் நேரம் பார்த்து அறுவை செய்து குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். நல்ல ஜாதகம் அமைய.

    தற்போது அமேசானின் Alexa வந்து விட்டது ்்

    IOT என்ற Internet of things என்பதும் புதிய வரவே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா ஒரு திரைப்படத்தில்கூட காண்பித்தார்கள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  7. நீங்கள் சொல்லியிருப்பவை சாத்தியமாகலாம் என்று தோன்றினாலும் சில யோசிக்க வைக்கிறது. இப்படி நடக்குமா என்று...ஏனென்றால் இப்போதைய நிகழ்வுகளை வைத்து அப்படிச் சொல்லிவிட முடியாது இல்லையா? தொழில்நுட்பம் பெருகலாம் அதே சமயம் மக்கள் மீண்டும் பண்டைய வாழ்க்கை முறைக்கு மாறத்தொடங்குவார்களோ என்றும் தோன்றுகிறது. மாற்றங்கள் நிகழலாம் இல்லையா..இன்றைய காலகட்டத்திலும் டெக்னாலஜி வளரும் வேகத்தில் வளராத, மாறாத எங்களைப் போன்றோர் அப்போதும் இருக்கலாம் இல்லையா? இப்படியும் எண்ண வைக்கிறது

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது விரிவான அலசலுக்கு நன்றி இருந்தாலும் ‘’வளராத நாங்கள்’’ என்று சொல்வது ரொம்பவே இடிக்கிறது.

      நீக்கு
  8. அறிவியலின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவே முடியாது என்பதை நினைவில் கொள்வோம். உங்களின் கோபமும் நியாயமாகத்தான் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  9. பிரசன்ட் சார்! மத்தவங்க சொல்லி இருப்பதைத் திங்கற கிழமை வந்து பார்க்கறேன். :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இப்படியே எல்லோரும் சொன்னால் கருத்து எப்படி வெளியாகும் ?

      நீக்கு
  10. நீங்கள் கேட்டபடி பின்னூட்டம் எழுதினால் மிக நீளமாகும் பதிவுபோல் ஆகி விடும் ஏன் இந்தக் கொலை வெறி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா ஹா.... ஹா... ஹா... கொலைவெறி போலவா இருக்கு..... மதிப்பெண் இடலாமே...

      நீக்கு
  11. பதில்கள்
    1. ஜி ரைட்டு மட்டும்தானா ? மீண்டும் வருவீர்கள் என்று நம்புகிறேன்.

      நீக்கு
  12. என் லக்கேஜ்!?...

    லக்கேஜை எடுத்துக்கிட்டு ஓடுறான்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புடிங்க.... புடிங்க.... ஜி.

      நீக்கு
    2. துரை அண்ணனால ஸ்பீட்டா ஓட முடியாதே:) வேணுமெண்டால் நான் கலைச்சுப் பிடிக்கட்டோ?:) லக்கேஜ் உள்ளே என்ன இருக்குகெனச் சொல்லுங்கோ முதல்ல:) அதன் பின்புதான் பிடிப்பதா வாணாமா என முடிவெடுப்பேன்:))

      நீக்கு
  13. ஜீ!...

    ///மனிதன் விரைவில் முதுமையாகி.....//

    இனிவருங்கால தலைமுறைக்கு முதுமையே இருக்காது...

    பல மாதிரி யோசனை செஞ்சதில 60℅ ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ‘’முதுமையே இருக்காது’’ சிந்திக்க வைத்த விடயம் மதிப்பெண்ணுக்கு நன்றி ஜி

      நீக்கு
    2. இதை நானும் சொல்ல நினைத்தேன்... பின்பு விட்டிருந்தென். இனி முதுமை தள்ளிப்போகிறதாம்.. முன்பு 70 வயதுகளில் இறப்புக்கள் இருந்தன.. இப்போ மனிதனின் ஆயுட் காலம் 100 க்கு மேல் எனச் சொல்கிறார்கள்..

      நீக்கு
  14. நீங்கள் விவரித்தவற்றில் சில நடப்பில் இருப்பவை. பல நடக்க இருப்பவை. பத்துக்குப் பத்து மதிப்பெண் தர நினைத்தேன். அதிவேக விஞ்ஞான வளர்ச்சியால் விரைவில் முதுமையடைந்து மனிதன் செத்துப்போவான் என்ற ஒன்று மட்டும் நடக்காது அல்லது நடக்கக்கூடாதது என்பதால், ஒன்று குறைத்து, பத்துக்கு ஒன்பது மதிப்பெண்கள் வழங்குகிறேன் நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது கருத்தை மிகவும் எதிர் பார்த்தேன் நண்பரே மதிப்பெண்ணுக்கு நன்றி

      நீக்கு
  15. ​சுவாரஸ்யம். ஆனால் முதல் நான்கைந்து பாராக்களில் இருக்கும் தேடல் போகப்போக எள்ளல் பதிவாகி விடுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி மனதில் பட்டதை சொன்னமைக்கு நன்றி.

      நீக்கு
  16. பத்தாவது கண்டுபிடிப்பு நடந்தால் நன்றாகத்தான் இருக்கும். சில வருடங்களுக்கு முன்னால் விகடனில் ஒரு கட்டுரை படித்தேன். ஏதோ ஒரு நாட்டில் காரில் ஏறி அமர்ந்து எங்கே போக வேண்டும் என்று நினைக்கிறோமோ, அங்கு கார் செல்லத் தொடங்குமாம். கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று வந்தது. இன்றுவரை அப்படி ஓர் காரின் விற்பனை பற்றி நான் கேள்விப்படவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது இன்னும் தீர்வுக்கு வரவில்லை ஜி விரைவில் சரியாகும்

      நீக்கு
  17. காணொளி புன்னகைக்க வைக்கிறது! இப்படியும் நடந்தால்? அதுசரி.. அதற்குள் அமர்ந்திருந்த மனிதர்கள் என்ன ஆவார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி மனிதர்களே இறகுகளை மாட்டிக் கொண்டு பறப்போம் என்றுதான் சொல்கிறேன்.

      நீக்கு
  18. முதல் விஷயம் : அரசாங்கத்துக்குக் அதாவது அங்கிருக்கும் மனிதர்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விட்டால் இலாபம் கருதி இது மாதிரி சட்டங்கள் பிறப்பிக்கப் படலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டத்தை இயற்றவும் பணம் நாம்தான் கொடுக்கணுமா ?

      நீக்கு
  19. இரண்டாவது விஷயம் நடக்குமோ என்னவோ தெரியாது. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தித்தாளில் ஒரு செய்தி படித்தேன். கேரளாவில் என்று நினைக்கிறேன்... ஆணாக மாறிய ஒரு பெண்ணும், பெண்ணாக மாறிய ஒரு ஆணும் திருமணம் செய்து கொண்டார்களாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி ஜி.

      நீக்கு
  20. பதில்கள்
    1. ஆஹா தெளிவாக பிரித்து மேய்ந்தமைக்கு நன்றி ஜி

      நீக்கு
  21. //நடிகைகள் வந்து தான் எனக்கு தேசபக்தியை ஊட்டுகிறார்கள்; மற்ற நாட்களும் எனது மரமண்டைக்கு மறந்து போய் விடுகிறது// சரியான சவுக்கடி ரசித்தேன்..!! ஆனால் பரிவாரக்கும்பல்கள் இன்னுமொருமுறை ஆட்சி அதிகாரத்தில் வருவார்கள் என்றால் பின்னோக்கி பயணம் செய்து சோமாலியாவையும் உகாண்டாவையும் அசுரத்தனமாக பின்னோக்கிச் தள்ளி இந்தியாவின் தென்கோடியில் மாராப்பு அணிவதற்கு தடையும் வரியும் இருந்தது போன்று ஒரு இன்ச் துணிக்கும் கட்டுப்பாடு வரலாம்.. அதுதான் நியாயம் தர்மம் என்று பூண்டேயின் கொள்ளுப்பேரன் ஓண்டேயை வைத்து பரப்புரை செய்யப்படலாம்... பள்ளிக்கூடம் இல்லாத நிலை, வலைப்பதிவர்கள் இல்லாத நிலையும் வரலாம்.. ஆனால் அவாள் கூட்டம் வராமல் கர்நாடகாவை ஏமாற்றியது ஏமாற்றியது போல் இல்லாமல் மின்னணு வாக்கு இயந்திரத்துக்குப் பதிலாக வாக்குச் சீட்டு தான் வரவேண்டும், இல்லையென்றால் அணுகுண்டு வீசப்படும் என்று ஐநா போன்ற அமைப்புகள் மிரட்டினால், காட்சிகள் மாறி நீங்கள் சொல்லும் காரியங்கள் எண் 2ஐத் தவிர்த்து மற்ற அனைத்துமே நடக்க வாய்ப்புள்ளது நண்பரே எனது மதிப்பெண் 8சதவீதம் ...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரிவாக அலசியமைக்கு நன்றி.
      மதிப்பெண் இட்டமைக்கும் நன்றி

      நீக்கு
  22. கில்லர்ஜி நேற்றே படித்தேன். என்ன சொல்ல என்றுதான் தெரியலை.

    ஆண்கள் பிரசவமா? சும்மா வித்தியாசத்துக்கு அபூர்வமா நடக்கலாம். அதைவிட, பெண் பிரசவிக்கும்போது கணவன் கண்டிப்பா கூட இருக்கணும் என்று மேல் நாடுகளைப்போல் வந்தால், கணவனுக்கு மனைவியின் அருமை தெரியும்.

    சிசேரியன் என்று எழுதிட்டு, இப்போல்லாம் ஜோசியரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு தாங்கள் விரும்பும் நல்ல (?) நேரத்தில் சிசேரியனில் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகமாகிவிட்டதே.. அதை விட்டுவிட்டீர்களே.

    05வது பாயிண்ட் ரொம்ப முக்கியம். குழந்தைகளுக்கு இதைச் சொல்லித்தரணும். இந்தியர்கள் இதுலதான் முழு கவனத்தையும் செலுத்தராங்க (பதின்ம வயதிலேர்ந்து). இது எதனாலனா, பெண்ணை இன்னொர் சகாவாகப் பார்க்கும் மனத்துக்கு அவன் தயார்படுத்தப்படுவதில்லை.

    நீங்களும் இது இது நடக்கலாம் என்று ஆருடம் கூறியிருக்கீங்க. திருமணம் என்ற பந்தத்தின் முக்கியத்துவம் குறைந்து மேலை நாடுகளைப்போல அது ஒரு காண்டிராக்ட் என்ற அளவில் முன்னேறும் என்று தோன்றுகிறது. இதுல, ஜாதியின் பங்கு போகப் போக குறையும் என் நினைக்கிறேன்.

    10வது-பேசுவது தானாகவே தட்டச்சு செய்யும்படி வந்துவிடும். இப்போவே குறைந்த அளவில் இருக்கு என்றாலும் இது பரவலாக வந்து, சுருக்கெழுத்து, டைப்பிங் என்ற வேலைகள் காணாமல்போகும் சாத்தியம் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தாங்கள் பதிவை முழுமையாக அலசியமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  23. this blog does not respond to google chrome browser there only i can comment in tamil

    பதிலளிநீக்கு
  24. வேறு பட்ட கோணத்தில் சிந்தித்திருக்கிறீர்கள் என் எஸ் கிருஷ்ணன் அவர்களின் திரைப்படம் "நல்ல தம்பி" படமே நினைவிற்கு வருகிறது. மதிப்பெண் 200.
    ஏன் என்று உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே அழைத்து விடயம் சொன்னீர்கள் மதிப்பெண் இரண்டு மடங்கு வருகைக்கு நன்றி

      நீக்கு
  25. கில்லர்ஜி எதுக்கு பேர்சன்ரேஜ் கேட்கிறீங்க எனப் புரியல்ல.. ஆண்கள் குழந்தை பெறும் காலம் வரும் என்பது பற்றியா? இல்லை ஒட்டு மொத்தமாகவோ? ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு பதில் இருக்கு என்னிடம்.. பின்பு வந்து விபரமா படிச்சிட்டு சொல்றேன்...

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் சகோதரரே

    அற்புதமான அழகான பதிவு. விஞ்ஞான வளர்ச்சியின் வேகத்திற்கு தகுந்த மாதிரி அருமையாக யோசித்திருக்கிறீர்கள். கலைவாணர் சொன்னதெல்லாம் இன்றைய நாகரீகங்களை மாறி வருகிறது. அதுவும் உண்மையே ..
    இதை எழுத உங்களுக்கு மிக சுலபமாக இருந்திருக்கலாம். ஆனால் அதற்கு தகுந்த பதில்கள் அதுவும் விளக்கமாக பதில்கள் எழுத எனக்கு ஆற்றல் பத்தாது எனத் தோன்றுகிறது.

    ஒவ்வொன்றும் எடுத்துக்காட்டுடன் பிரமாதம். நீங்கள் சொன்ன அத்தனையும் நடக்க வாய்பில்லாவிடினும், பல நடக்க வாய்ப்பிருக்கிறது.

    இனி வரும் காலங்கள் இயற்கை பிரசவங்களுக்கு முழுதாகவே ஒத்து வராமல் போகலாம்...

    மனிதர்களுக்கு உண்மையிலேயே சிறகுகள் முளைக்கலாம். அல்லது சிறகுகள் மாதிரி கருவிகள் கண்டுபிடிக்கப் பட்டு அனைவரும் போட்டிக்கென்றே வாங்கி தரித்துக்கொண்டு விண்ணில் பறக்கலாம். பூமியில் சாலைகள் அதிக பாதிப்பின்றி, வாகன நெருக்கடிகள் குறைந்து, விபத்துக்கள் பெரும்பான்மை யாக, இல்லை முழுதாகவே தவிர்க்கப்படலாம். ஆனால் விண்ணில் எத்தனை பாதகங்கள் வருமோ?
    இப்போதே சிறகு முளைத்த மாதிரிதான் மனிதர்கள் அவசரமாக பற(யணி)க்கிறார் கள். அப்போது கேட்கவே வேண்டாம். பறவைகள் சுதந்திரமாக மரங்களில் (அப்போது மரங்கள் இருந்தால்) கூடு கட்டி பூமியின் சுதந்திர காற்றை அனுபவித்து எவ்வித இடையூறும் இல்லாமல் வாழும். வானத்தை பார்த்து பார்த்து தலை மேலெழும்பிய மாதிரியான, வினோதமான ஒரு உருவத்தை மக்கள் பெறலாம். ஹா ஹா ஹா ஹா.

    திருமண சடங்குகள் இப்போதே, ரிஜிஸ்டர் திருமணம், காதல் மணங்கள் என சடங்குகள் குறைந்து வருகிறதே..

    குழந்தைகளுக்கு கல்வியில் முன்னேற்றங்கள் வரலாம். ஆனால் எல். கே ஜி லேயே கை பேசியா? தகவல்கள் ஆச்சரியமூட்டுகின்றன. இதைவைத்து பார்த்தால் எல்லாமே நடந்து விடுமோ என்ற பயம் வருகிறது. நாமெல்லாம் இருக்க மாட்டோம் என்ற சுயதல மகிழ்ச்சி வந்தாலும், நம் சந்ததிகள் நெஞ்சு முட்ட அவமானங்களை சுமக்க நேருமே என்ற கவலையும் வருகிறது.

    முதியோர்களின் நிலைமையை சொன்ன விதம் பயங்கரம். நம் காலத்திலேயே முதியோர் பாடு திண்டாட்டமாக இருக்கிறது.

    இப்போதே ஆடைகள் குறைக்கப்பட்டு, ஆங்காங்கே கிழித்து விடப்பட்டு பிச்சைகாரர்கள் போல் பேஷன் என்ற பெயரில் நாகரீகம் தலைவிரித்தாடுகிறது. போக போக கேட்கவே வேண்டாம்.. மானத்தோடு உடையணிந்தால் நல்லது.

    மனிதனே விண்ணில் பறக்கும் போது செல்வாக்குள்ளவர்கள் நிலவுக்கும், வேறு கிரகங்களுக்கும் போகாமல் இருப்பார்களா? ஹா ஹா ஹா

    வலைப்பதிவர்கள் தட்டச்சு ஏதுமின்றி மனதில் நினைப்பதை திரையில் காணலாம். அத்வும் வண்ண வண்ண எழுத்துக்களில்... வாவ். இது சூப்பரா இருக்கே.. இது மட்டும் இப்பவே வந்தால் (ஒரு சுயநலம்தான்) பதிவுகள் தங்கு தடையின்றி வெளி விடலாமே....

    அப்பாடா ஒரு மட்டும் 'பதிவு'
    இல்லையில்லை கருத்துரை எழுதி விட்டேன் என நினைக்கிறேன். இந்த மார்க் எப்படி தருவது என தெரியவில்லையே.. (நாளை அனைவரும் எப்படி கொடுத்திருக்கிறார்கள் எனப் பார்த்து விட்டு தரலாமென்றால், அங்கொரு செக்.. நாளை 5 மணிக்கு அனைவருமே மொத்தமாக கணிப்பை தெரிந்து கொள்ளலாமேயென்று..) நான் குறைவாக மதிப்பெண் கொடுத்து நான் கஸ்டப்பட்டு எழுதிய கருத்துரை தங்களுக்கு பிடிக்காமல் போய் விட்டால் என்ன செய்வது என்ற யோசனைதான். வேறு ஒன்றுமில்லை..

    சரி.. என மனதில் உண்மையாக வந்ததை கூறுகிறேன் 8 மதிப்பெண்கள் தருகிறேன். வாழ்த்துக்கள்....

    காணொளி படு சூப்பர். விமானம் மனிதனாக மாறும் இடத்தில் விஞ்ஞானம் புலப்பட்டது..

    பிழை இருந்தால் நான் திருத்த வாய்ப்பில்லை. பிழைகளுக்கு பொறுத்துக் கொள்ளவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை உள்வாங்கி படித்து பிரமிப்பான கருத்திட்டமைக்கு மனம் நிறைந்த நன்றி

      முடிவில் மதிப்பெண்ணும் கொடுத்தமைக்கு நன்றி

      நீக்கு
  27. ///ஆண்கள் விரைவில் பிரசவிக்கலாம்////
    எதை?:) ஹையோ ஹையோ டங்கு ஸ்லிப்பாகி ஏதும் ஜொள்ளிடப்போறேன்ன்ன் என்னைக் காப்பாத்துங்கோஓஒ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கவிஞனின் பேனாவிலிருந்து வரும் கவிதையைகூட பிரசவம் என்று சொல்லலாமே....

      நீக்கு
  28. கில்லர்ஜி இதில் மொத்தம் பத்து விசயங்கள் கூறியிருக்கிறீங்கள், அதனால அனைத்துக்கும் மொத்தமாக என்னால் மார்க் குடுக்க முடியாது:).. தனித்தனியேதான் குடுக்க முடியும்.

    அதனால இலக்கத்தோடு போடுகிறேன்.

    1. 7%
    2.0% [ என்ன நினைக்கிறீங்க? குழந்தையை சுமப்பதென்பது அவ்வளவு ஈசியாகி விட்டதா?.. மெசின்மூலம் ஒருவேளை குழந்தையை முழுமையாக உருவாக்கும் நிலைமை வரலாம் ஆனால் ஆண்கள் வயிற்றில் சுமக்கவே முடியாது.. அதுக்கேற்ற முறை ஆண்கள் வயிற்றில் இல்லையே... மனித இனம் மட்டுமல்லவே அனைத்து உயிரினத்திலும் ஆண்களால் முடியாது]

    3. 5%
    4.8%
    5. 5%
    6. 5% [இதுவும் இலங்கை இந்தியா போன்ற நம் நாடுகளில் மட்டுமே நடக்கும்.. மேற்கத்தைய நாடுகளில்.. பெற்றோரும் எதிர்பார்ப்பதில்லை, அரசாங்கம் பொறுப்பை எடுக்கிறது].

    7 அண்ட் 8. [[ இது ஒருவரை வைத்து எதுக்கு ஒட்டு மொத்தப் பெண்களையும் எடைபோட வேண்டும்... உலகில் உள்ள பெண்களில் எத்தனை சதவிகிதம் அப்படி நடக்கிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.. இன்னொன்று உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக உலகில் எல்லோருக்குமே பிடிக்காமல் போயிடாதெல்லோ... அதை விட இன்னுமொன்று.. ஆடை குறைப்பதால் ஒழுக்கம் கெட்டு விட்டது என நினைப்பதும் தப்பு.. முழுக்க மூடிக்கொண்டு தவறு செய்வோரும் பலர் உள்ளனர்... அதனால 7,8 க்கு என் மதிப்பெண் கிடையாது:)]]

    9. அரசியல் பற்றி எனக்கு கணிப்பிடத் தெரியவில்லை.

    10. இது பத்து வீதம் நடக்க வாய்ப்பு உள்ளது:)).. மைண்ட் ஐ ரீட் பண்ணி எழுத முடியாவிடினும்.. நாம் சொல்லச் சொல்ல கொம்பியூட்டர் எழுத்தாக வடித்துத்தரும் நிலமை வரலாம்..

    சுபம்_()_.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது விரிவான அலசல் மதிப்பெண்ணுக்கு மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
  29. படத்தை பார்த்தவுடனே எனக்கு புரிந்துவிட்டது.. அய்யோ..பாவம் ஆண்கள்... என்று... திருமணம் என்று ஒன்று நடந்த..நடத்தி விட்டவர்களுக்குதானே.. இந்த சிரமம் என்பது படித்தவுடன்... தப்பித்தேன் என்ற நிம்மதி வந்தது....இருக்கிற இம்சையில்..............

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தங்களது தனிப்பட்ட வாழ்க்கை இல்லை நண்பரே பொது விடயமானதே... ஆகவே மதிப்பெண் கொடுக்கலாம்.

      நீக்கு
  30. எல்லாமே நடக்க சாத்தியமுண்டு ..ஆனா நமீதா கொள்ளுப்பேத்தி அழுக்கு தமிழ்னு அலற வைக்கிறிங்களே :)
    வருங்காலத்திலுமா மனுஷங்க டிவி பொட்டிக்கு அடிமையாயிருப்பாங்க ?
    எனது மதிப்பெண் 10 .

    ஆனா லிவிங் டுகெதர் பற்றி எனது பார்வை .இதெல்லாம் நம் நாட்டுக்கு எக்காலத்திலும் சரிவராது .வெளிநாட்டினருக்கு பல விஷயங்களில் தெளிவான புரிதல் உண்டு .நம் நாட்டில் தான் சிற்றன்னைக்கொடுமை எல்லாம் இருக்கு ஆனா வெளிநாட்டினருக்கு போட்டி பொறாமை நான் அறிந்தவரை குறைவே .
    கில்லர்ஜி ..இதே மாதிரி 50 வருஷம் பின்னாடிக்கு கொண்டு போங்களேன் எப்படி அக்காலம் இருக்கும்னு அறிய ஆவல் .
    அதிராம்பட்டினத்தம்மா கிட்ட விவரம் கேட்டா சொல்வாங்க ஏன்னா அவங்க 88 வயசாக்கும் :) தொகுத்து எழுதுங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது மாறுபட்ட அலசலுக்கும் மதிப்பெண்ணுக்கும் நன்றி
      50 வருடத்துக்கு முந்தையதென்ன ? 450 வருடங்களுக்கு முந்தைய நண்பரின் காதல் கதையை விரைவில் எழுதுகிறேன்.

      நீக்கு
  31. காணொளி செம கலக்கல் ..

    பதிலளிநீக்கு
  32. நான் 05 மதிப்பெண்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மதிப்பெண் கொடுத்தமைக்கு நன்றி

      நீக்கு
  33. கூகிள் க்ரோமில் திறக்காததால் ஆங்கிஅத்தில் ஒரு கமெண்ட் போட்டிருந்தேன் இப்போது ஓக்கே ஆண்கள்பிரசவிக்கலாம் உங்களுக்கு ஏன் இந்தக் கொல வெறி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா அதுவும் வெளியாகி விட்டது மீள் வருகைக்கு நன்றி கொலைவெறியாக இருக்கிறதா..... ஐயா

      நீக்கு
  34. பதிவிற்கு கருத்து போட வைப்பதற்கு பதிலாக எல்லோரையும் பதிவு போட வைக்கும் முயற்சியாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே இதற்குத்தான் தொடக்கமே இது தொடர் பதிவு அல்ல! என்றேன்.

      நீக்கு
  35. உங்கள் எல்லா கேள்விகளுக்கும் நான் 10 மார்க் கொடுத்துவிடுகிறேன்... நான் யாரையும் பெயிலாக்க மாட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதிப்பெண் எனக்கல்ல நண்பரே உங்களது யூகத்திற்கு... வருகைக்கு நன்றி

      நீக்கு
  36. கிண்டலும் கிளறலும் அழகு
    அறிவியலும் அலசலும் அழகு
    ஒப்பீடுகளும் வெளியீடுகளும் அழகு
    பெண்ணைப் போல ஆணும் பிரசவிக்க
    இடமளிக்கும் அறிவியலால் -'நம்மவர்
    ஆயுளை நீடிக்க இடமளிக்காதது ஏன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கவிதை வடிவில் கருத்துரை தந்தமைக்கு நன்றி.

      இன்றைய மனிதனின் ஆயுள் குறைந்து கொண்டுதானே வருகிறது.

      நீக்கு
  37. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் சொன்னால் சரியாக இருக்கும்.
    னெல்லைத்தமிழன், கமலா ஹரிஹரன், அதிரா மற்றும் அனைவர் பதில்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வரவு கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
    2. சகோதரர் கில்லர்ஜி அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி, அவருடைய விரிவான விஞ்ஞான பதிவுக்கு பதிலாக விரிவாக வந்த என் பதிவை ரசித்ததாக கூறிய, சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நீக்கு
    3. மீள் வருகை தந்து நன்றி சொன்னமைக்கு நன்றி சகோ

      நீக்கு
  38. துளசீதரன் சார் கைராசியா ?பின்னூட்டம் 100 ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறதே வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  39. தினத்துக்கு மூணு பதிவா?!

    நல்ல ஐடியாவா இருக்கே! இந்த தீபாவளிக்கு அந்த கண்ணாடியவே எனக்கு சீராய் அனுப்பவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணாடி வெளியாகட்டும் முதல் போனி உங்களுக்குத்தான் சகோ

      நீக்கு