இப்பதிவின் தொடக்கத்தை படிக்க கீழே சுட்டியை சொடுக்குக...
செங்கமலம் அழகி அவள் எமது
தூரத்து உறவுக்காரியாயினும் எமது இல்லத்தின் எதிர்புற இல்லத்துக்காரி யாம் தினமும்
கோயில் திடலில் சடுகுடு விளையாடி வந்ததும் அந்தி வேளைகளில் நாங்களிருவரும் இல்லத்தின்
முன்பே பாண்டி விளையாடுவோம் அவள் பட்டுப்பாவாடை சட்டையில் ஒரு காலை உயர்த்திக்
கொண்டு வெள்ளிக் கொலுசு சலசலக்க அவள் பாண்டி விளையாடும் அழகே அழகு அவளின்
அன்னையார் தினமும் அவளுக்கு முருக்கு, அதிரசம், தேன்குழல், சீடை, எள்ளுருண்டை
இப்படி திண்பண்டங்கள் செய்து கொடுப்பார் நல்ல சுவையாகவும் இருக்கும்.
செந்து அவை சுவையாக இருக்கும் என்பது
தங்களுக்கு எப்படித் தெரியும் ?
அவள் ஓர் தினம்கூட எமக்குத் தராமல் அவள்
மட்டும் தின்பதில்லை.
ச்சே தேவராய கோட்டத்தில் எமது இல்லத்துக்கு எதிர்த்த
இல்லத்திலும் ஒருத்தி இருக்கின்றாள் சண்டாளி ஓர் முறைகூட எமக்கு தந்ததில்லை.
தாங்கள் ஏதும் அப்பெண்டிருக்கு கொடுத்து
இருக்கின்றீர்களா ?
எனது அன்னையார் எமக்கு கொடுப்பதே ஓர் தினத்துக்கு இருபது அதிரசங்கள் மட்டுமே இதில் எப்படி பிறருக்கு
கொடுப்பது ?
தாங்கள் யாருக்கும் எதையும் கொடுக்காமல்
பிறரிடமிருந்து எதிர் பார்ப்பது தவறில்லையா ? நமது சான்றோர்கள் இதற்குத்தான் முன்கை நீண்டால் முழங்கை
நீளும் என்றுரைத்தார்கள்.
யாம் பொருள் கண்டது வேறு சினேகிதரே...
எப்படி ?
முன் கையை நீட்டினால் அவனது முழங்கையை ஒடிக்க
வேண்டுமென்று இப்படித்தான் தேவராய கோட்டத்தில் யாம் பலமுறை பலரின் முழங்கைகளை
ஒடித்திருக்கின்றோம்.
ஆகவே தங்களின் தந்தையார் செல்வந்தராக இருந்தும்
சகோதரர், சகோதரிகளை எல்லாம் இல்லத்தில் வைத்திருக்கும் தங்களது பெற்றோர் தங்களை
மட்டும் திருத்துவதற்கு ஊமையனார் கோட்டையில் இருக்கும் இராமநுசர் குருகுலத்தில்
சேர்த்து இருக்கின்றனர்.
அதை விட்டுத்தள்ளுங்கள் செந்து அப்படியானால் தங்களது
காதலில் முறிவு ஏற்பட்டதெப்படி ?
சற்றும் முன் ஓர் கயவர் என்று இயம்பினீர்களே
அவர்தான் காரணம்.
நல்லது தொடந்துரையுங்கள் அந்தக் கயவனைப்
பற்றியும்....
எங்களின் வீட்டிற்கு வரும் செங்கமலம் எமது
அன்னையார் செய்யும் வெண்ணை ரொட்டி, லொதலு, காசுக்கட்டி, கொழுக்கட்டை திண்பண்டங்களை
உரிமையுடன் எடுத்துச் செல்வாள் இதில் யாமும் தனியாக பரிமாறிக் கொள்வதுண்டு அவள்
எம் மீது அளவிள்ள அன்பு செலுத்தினாள் திடீரென்று ஒரு தினம் அவளைக்காண முடியவில்லை
யாரிடம் வினாவினாலும் விசமமாய் சிரித்துக் கொண்டே விடையளிக்காமல் சென்றார்கள்
எமக்கு அவளைக் காணாமல் மனம் ஒரு நிலைப்பாட்டில் இல்லை வேறு வழியறியாது அவளது
இல்லத்துக்குள் நுழையும் தருவாயில் அவளது பாட்டி டேய் செந்துரட்டி எங்கு
போகின்றாய் ? என்று வினவ யாம் செங்கமலத்தை காணச் செல்கிறேன் பாட்டி பாண்டி
விளையாட என்றேன்.
பார்த்தீர்களா... செந்து ?
இல்லை கோடரியாரே பாட்டி செங்கமலத்தை பார்க்க
கூடாது என்று உள்ளே விடாமல் தடுத்து விட்டாரே...
பக்கத்தில் கிடக்கும் உலக்கையை எடுத்து
பாட்டியை ஒரே போடாக போட்டு விட்டு உள்ளே நுழைந்திருக்கலாமே செந்து.
இது தவறில்லையா ? பாட்டி நமக்கு முன்னோர்கள் அவர்கள் தடுத்திருப்பதும் ஏதோ
நல்ல காரணத்திற்காகத்தான் இருக்கும் என்று திரும்பி விட்டேன்.
என்ன செந்து வேதாந்தம் உரைக்கின்றீர்கள் ? நான் பலமுறை எனது அப்பத்தாவை உலக்கையில்
அடித்து மண்டையை பிளந்து இருக்கின்றேன்.
அப்படியா ? அதற்கு உங்களது தந்தையார் ஒன்றும் கேட்க மாட்டார்களா ?
நல்ல வினா கேட்டீர்கள் செந்து ? வேப்பமரத்தில் எம்மை தலைகீழாக தொங்க விட்டு
சவுக்கடியால் விளாசி விடுவார்.
அய்யோ கேட்கவே அச்சமாக இருக்கின்றதே எப்படித்
தாங்கினீர்கள் ?
யாம் மண்டையை உடைத்ததும் அடுத்து இதுதான்
நடக்கும் என்பதை அறிந்தவன்தானே துரிதமாக இல்லத்திலிருக்கும் வேப்பங்காய் எண்ணையை
எடுத்துக் கொண்டு கண்மாய்க்குள் ஓடி கத்தாழைச்சாறு பிழிந்து இரண்டையும் உடம்பில்
தடவி விட்டு உலுவங்காய் ௪ பறித்து தின்று விட்டு இல்லம் வரும் போது
எமது தந்தையார் கயிற்றுடனும், சவுக்குடனும் நிற்பார் கூடி நிற்பவர்கள் என்னை
சுற்றி வளைத்து வேப்பமரத்தில் தொங்க விடுவார்கள் சவுக்கடி தொடங்கி விடும்.
அப்படியானால்... தங்களுக்கு வேதனிக்காதா ?
வேதனை தரக்கூடாது என்பதற்காகத்தானே இத்தனை
முன்னேற்பாடுகள் நல்லது செந்து தங்களது விடயங்களை உரையுங்கள்.
பிறகு எமது அன்னையாரிடம் சென்று இயம்பினேன்
செங்கமலம் எதற்காக ? இல்லத்தை விட்டு வெளியில்
வருவதில்லையென... அதற்கு அன்னையார் நீர் சிறார் உமக்கு அதெல்லாம் அறிய வேண்டாம்
என்று நகைத்து விட்டு சென்றார்கள் எமக்கு ஒன்றும் புரியவில்லை.
ஒருக்கால் செங்கமலத்திற்கு அம்மை போட்டு
இருக்குமோ ?
இப்படி அவசரப்பட்டு ஏதும் வினவாதீர்கள்
கோடரியாரே யாம்தான் உரைத்து வருகின்றோமே...
நல்லது செந்து உரையுங்கள்.
அதன் பிறகு எமது இல்லத்துக்கு அடுத்த பெரிய
தந்தையாரின் இல்லத்தில் சகோதரரின் மனைவியார் எமக்கு மதினியார் என்பதால் அவரிடம்
வினவினேன் அதற்கு அவர்கள் சொல்லியது எமக்கு விளங்கவில்லை.
அப்படியென்ன சொன்னார்கள் செந்து ?
செங்கமலம் பெரிய மனுசியாகி விட்டாள் என்று.
அப்படியென்றால் ?
யாமும் இதையே மதினியாரிடம் வினாவினோம் அதற்கு
மதினியார் போங்கள் கொழுந்தனாரே எப்பொழுதும் உங்களுக்கு விளையாட்டுதான் என்றுரைத்து
விட்டு சென்றார்கள்.
சரி செந்து பெரிய மனுசியாகி விட்டால் என்றால்
என்னதான் அர்த்தம் ?
அது தெரியாமல்தானே ஆறு மாத காலங்களாக வயல்
வெளிகளில் பித்துப் பிடித்து அலைந்தோம் ஆயினும் அதனால் ஒரு பலனும் கிட்டியது.
அதன் பிறகு பித்தம் தெளிந்து விட்டதா ?
ஆம் எமது செங்கமலத்தால்.
ஏதும் களிம்பு கொண்டு வந்து தடவினார்களோ... ?
இல்லை கோடரியாரே அதுதான் காதல்.
என்ன செந்து எம்மை குழப்புகின்றீர்கள்
முதலில் பித்துப் பிடித்தது என்றீர்கள் பிறகு அதையே காதல் என்கின்றீர்களே... ? சரி பலன் என்ன ?
வயல்வெளிகளில் அலைந்ததில் குழம்பிப்போய் கவிதை
எழுத படித்தோம்.
ஓ.... வயல்வெளிகளில் திரிந்தால் புலவர்
ஆகலாமோ.. சரி தொடருங்கள்.
கோடரியாரே.... செங்கமலம் ஆறு மாதம் கடந்த பிறகே இல்லத்தை
விட்டு வெளியே வந்தாள்.
பிறகு பாண்டி விளையாடினீர்களா ?
இல்லை இனிமேல் எம்மோடு பாண்டி விளையாடக்கூடாது
என்று பாட்டி தடை போட்டு விட்டார்கள்.
சரி யாம் ஏதாவது கேட்டால் வேறு மாதிரியாகும்
ஆகவே தாங்களே உரையுங்கள் யாம் ம் மட்டும் போட்டுக்கொண்டே வருகிறோம்.
யாம் செங்கமலத்திடம் நீ பெரிய மனுசியாகி
விட்டாயாமே என்று இயம்பியதும் அவள் நாணத்தால் குனிந்து பூமியில் கால் விரல்களால்
கோலம் போட்டாள்.
செந்து, பெரிய மனுசியானதற்கும், பூமியில்
கோலம் போடுவதற்கும் ஏதும் பந்தம் உண்டா ?
இல்லை கோடரியாரே அதுதான் காதலின் தொடக்கம்.
செந்து தேவராய கோட்டத்தில் காதல் செய்பவர்கள்
சோளக்காட்டுக்குள் ஒளிந்து விளையாடுவார்கள் என்றுரைத்து அறிந்ததுண்டு தாங்கள்
பூமியில் கோலம் போடுவதை காதல் என்றுரைப்பது எமக்கு குழப்பமாக இருக்கின்றதே.
கோடரியாரே தாங்கள் எம்மைவிட அகவையில் சிறார்
ஆகவே புரிந்து கொள்வதில் தாமதமாகும் முதலில் யாம் உரைப்பதை செவி சாயுங்கள்
ம்
யாமும், செங்கமலமும் விழிகளால் இயம்பினோம்...
விழிகளால்..... எப்படி ? சரி... சரி... சினம் கொள்ளாமல் உரையுங்கள்.
பிறகு எங்கள் இல்லத்துக்குள் மீண்டும் உலாவினாள்
நுழையும் பொழுதே எமது அன்னையாரிடம் என்ன அத்தையாரே மருமகளுக்கு இன்று என்ன வைத்து
இருக்கின்றீர்கள் ? எனக்கேட்கும் பொழுதே
எம்மைப்பார்த்து விழிகளால் சிரிப்பாள்.
செந்து மன்னியுங்கள் சிறிய ஐயம் முதலில்
விழிகளால் இயம்பினோம் என்றுரைத்தீர்கள், பிறகு விழிகளால் சிரித்தாள் என்று எம்மை
மேலும் குழப்புகின்றூர்களே.. வாயால்தானே உரையாடவும் சிரிக்கவும் இயலும் ?
கோடரியாரே யாம் தொடக்கத்திலேயே அறிவித்தோம்
தாங்கள் அகவையில் சிறார் என்று...
ம்
தொடரும்...
இந்தப்பதிவு உருவான காரணக்
கதையை படிக்க இதோ
தொடர்கதையா எழுதுறீங்க. ரசிக்க வைக்கிறது. ஆனால் இன்றைய இடுகையைப் படிக்கும்போது முந்தி என்ன படித்தோம் என்று மறந்துவிட்டது.
பதிலளிநீக்குவருக தமிழரே மறந்தால் ஜஸ்ட் க்ளிக் செய்க அகோசெ.
நீக்குரசித்தமைக்கு நன்றி
ஆஆஆஆஆஆஆஆ இன்று நெ.தமிழனோ 1ஸ்ட்டூஊஊஊஊ:) இது கிலர்ஜியின் திட்டமிடப்பட்ட ஜதீஈஈஈஈஈ கர்ர்ர்:))
நீக்குசவுக்கடியை தங்குவதற்கும் முன்னேற்பாடா...?!
பதிலளிநீக்குஆமாம் ஜி இதெல்லாம் இன்னும் ஞாபகம் இருக்கிறது.
நீக்குசெந்தூ மற்றும் கோடாரியாரின் உரையாடல்கள் சுவாரஸ்யமாக செல்கிறது :)
பதிலளிநீக்குஆனாலும் 20 அதிரசத்தில் ஒன்றுகூட பகிராதது தப்போ தப்பு :)
செந்தூ +செங்கமலம் அழகிய காதல் கதையாக செல்லும்போது கோடாரியார் க்ராஸ் கேள்வி கேட்டு கதையின் போக்கை திசைதிருப்ப கூடாது :)) செந்தூ பேசட்டும் :) தொடருங்கள்
ரசித்தமைக்கு நன்றி அப்படீனாக்கா.... கோடரிவேந்தன் ''ம்'' மட்டும் சொன்னால் போதும்னு சொல்றீங்க.....
நீக்குஇருந்தாலும் நீங்க குவைத் ஜி க்குத்தான் சப்போர்ட் பண்ணுறீங்க...
ஹாஹா இல்லை :) செந்தூ எத்தனை அழகா நினைவுகளை மீட்டெடுக்கிறார் அந்த நேரம் நீங்க கேள்வி கேட்டா டிராக் மாறிடும் :)
நீக்குஅதற்கு நானென்ன செய்ய முடியும் ? கடந்த ஜென்மத்தில் நிகழ்ந்ததைத்தான் சொல்லி வருகிறேன் எனக்கு அதிரா மாதிரி பொய் சொல்ல வராது.
நீக்குஹாஹா :) ஓகே ஓகே அப்டியே தொடருங்க :)
நீக்குமீள் வருகைக்கு நன்றி சகோ
நீக்கு//ஆனாலும் 20 அதிரசத்தில் ஒன்றுகூட பகிராதது தப்போ தப்பு :)///
நீக்குஆமா ஆமா இதை நான் படுபயங்கரமா வழிமொழிகிறேன்:))
//KILLERGEE Devakottai7/03/2018 6:48 பிற்பகல்
நீக்குஅதற்கு நானென்ன செய்ய முடியும் ? கடந்த ஜென்மத்தில் நிகழ்ந்ததைத்தான் சொல்லி வருகிறேன் எனக்கு அதிரா மாதிரி பொய் சொல்ல வராது.//
ஆவ்வ்வ்வ் கில்லர்ஜி லொக் எடுட்த்திட்டார் மக்கள்ஸ்ஸ்:)).. பலருக்கு இது இன்னும் தெரியாமல் இருக்கும்:))..
கில்லர்ஜிக்கு போன ஜென்மமே இல்லை..:) இதுதான் உங்கட முதலாவது சென்மம் சே..சே.. ஜென்மம்:)).. இனி அடுத்த ஜென்மம் ..கோடரியார்தான்ன்:))
ஆமோதிப்பதில் அதென்ன படுபயங்கரம் ?
நீக்குகோடரியார் பழைய ஜென்மம்.
// முருக்கு //
பதிலளிநீக்குகடிக்க கஷ்டப்படவேண்டாம் போல... ரொம்ப மென்மையா இருக்கும் போலவே...
வாங்க ஸ்ரீராம்ஜி ஆமாம் உளுந்தம் மாவு கலந்தால் நல்லா மொறு மொறுவென்று இருக்கும்.
நீக்கு//லொதலு,//
பதிலளிநீக்குஅப்படி என்றால்? கேள்விப்படாத வார்த்தையாய் இருக்கே...
கீழக்கரை ஏரியாவில் செய்வார்கள் அல்வா போன்ற வகைதான் ஆனால் தின்பதற்கு மென்மையாக இருக்காது.
நீக்குஅதை தொல்தொல் /தொதல் என்றும் சொல்வாங்க .கருப்பு புட்டரிசி தேங்காய்ப்பாலில் செய்வாங்க
நீக்குஇதுவா கில்லர்ஜி //லொதலு/
ஆம் இதற்கு இடியாப்பமாவு, தேங்காய்ப்பால், கடல்பாசி, ஏலக்காயில் செய்வதுதான் லொதலு.
நீக்குவிரைவில் இதன் செய்முறையை அறிமுப்படுத்துகிறேன்.
ஆஆஆஆஆஆ சிற்...றாம் அது இலங்கைப் பாசையாக்கும்:) நாங்க தொதல் எனத்தான் ஜொள்ளுவோம்ம்:))
நீக்கு//விரைவில் இதன் செய்முறையை அறிமுப்படுத்துகிறேன்//
ஓ மை கடவுளே:)... தொதலுக்குள் கடற்பாசியா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அரிசிமா தேங்காய் சீனி.. அவ்வளவே...
அதிரா, உங்களது செய்முறையை பதிவிடுங்களேன்...
நீக்குநெடுக நினைபேன் கில்லர்ஜி, ஊரில் வெளியிலே அடுப்பு மூட்டி அம்மா அடிக்கடி செய்வா. வீட்டுக்குள் செய்வது மிக மிக கஸ்டம்... அது கடசியில் நன்கு வெந்து வரும்போது பாலிலிருந்து எண்ணெய் பிரிந்து பொயிங்கித் தெறிக்கும்.. இருப்பினும் பார்ப்போம் முடிந்தால் முயற்சிக்கிறென்.. நாங்க செய்யும் தொதலுக்கு பின் அப்படித்தொதல் எங்குமே கிடைத்ததில்லை.
நீக்குசெய்து தேவகோட்டைக்கு பார்சல் அனுப்பவும்.
நீக்குஇருபதே இருபது அதிரசம் தந்தால் அவர்தான் என்ன செய்வார், பாவம்! இதை எழுதும்போது என் கண்களே குளமாகின்றன.
பதிலளிநீக்குஆமாம் ஜி கோடரிவேந்தனுக்கு பத்தாதுதானே....
நீக்குஇருபது அதிரசம் ஒருத்தருக்கும் தராமல் த்ன்பாரா.... அது சரியல்லவே.... எனக்கு பிடித்தமான இனிப்பு அதிரசம்.
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
வாங்க ஜி இருபது அதிரசம்தானே ?
நீக்குதொடர்பவமைக்கு நன்றி ஜி
உரையாடலில் மேலோங்கியிருக்கும் நகைச்சுவை, கதையை வேகமாக நகர்த்துகிறது.
பதிலளிநீக்குஇருவரும் உற்ற தோழர்களாயினும், செந்து அப்பாவியாகத் தெரிகிறார். கோடரிவேந்தன் நேர் எதிர்மாறானவர். இந்த முரண்பாடும் கதையில் சுவை கூட்டுகிறது.
வருக நண்பரே பதிவை அழகாக உணர்ந்து படித்து கருத்துரை தந்தது கண்டு மகிழ்ச்சி.
நீக்குஇருபது அதிரசத்தை காட்டிலும் செங்கமலம் இனிப்புதானே கில்லர்ஜி
பதிலளிநீக்குவருக கவிஞரே, செங்கமலம் சினேகிதர் செந்துரட்டியின் காதலி.
நீக்குகோடரி வேந்தன் சரியான சாப்பாட்டு ராமனாகவும்,பிறரை துன்புறுத்தி இன்பம் காண்பவர் போலிருக்கிறதே. அது சரி கபடி என எழுதாமல் சடுகுடு என குறிப்பிட்டிருக்கலாமே. கோடரியார் செந்துரட்டியாரிடம் தனது காதல் பற்றி என்ன இயம்பினார் என அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவருக நண்பரே இப்படி பொதுவில் போட்டு உடைத்து விட்டீர்களே...
நீக்குசடுகுடு நல்ல தமிழ் வார்த்தை மாற்றி விட்டேன், பதிவில் ஏதும் பிழைகள் இருந்தால் அவசியம் குறிப்பிடும்.
காத்திருப்புக்கு நன்றி நண்பரே.
'குறிப்பிடவும்'
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி
நீக்குகோளரி வேந்தன் கோவிந்தன் தெரியும். கோடரிவேந்தன் கதை, செந்து ,செங்கமலம்
பதிலளிநீக்குசேர்ந்து சுவையாக இருக்கிறது அதிரசம் போல.
வாங்க அம்மா பதிவை ரசித்தமைக்கு மிக்க நன்றி
நீக்குஇருபது அதிரசத்தை இப்படி மற்றவர்களுக்கு கொடுக்காமல் தின்றால் உடம்பு என்னத்துக்கு ஆகும்?
பதிலளிநீக்குஇப்படி சாப்பிட்டால்தானே... கோடரி பிடிக்க முடியும்.
நீக்குஇரண்டு பேர் உரையாடல் மூலம் கதை நகர்கிறது.
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
தொடர்வதற்கு நன்றி சகோ
நீக்குதொதல் என்று கேள்வி பட்டு இருக்கிறேன் கீழக்கரை சிறப்பு. லொதலு கேள்வி பட்டது இல்லை.
பதிலளிநீக்குஆம் இது கீழக்கரை ஸ்பெஷல்தான்.
நீக்குஎனது அம்மாவின் ஊர்
கோமதிக்கா தொதலைத்தான் லொதலு என்று சொல்லுறாங்க. இரண்டும் ஒன்றுதான்
நீக்குகீதா
கோடரிவேந்தன் பெரிய தாதாவா இருப்பார் போல. தனது அப்பத்தாவையே உலக்கையால் அடித்து மண்டையை பிளந்திருக்கிறாரே..
பதிலளிநீக்குஆ....20 அதிரசமா தினமும்
முறுக்கு,அதிரசம்,சீடை என பல தின்பண்டங்களை எழுதி ஞாபகப்படுத்திவிட்டீங்க.
அருமையாக தொடர் செல்கிறது.
வாங்க சகோ அப்பத்தா மண்டையை உடைத்தால் தாதாவா ? அப்படீனாக்கா தாத்தாவை ஊரணியில் வைத்து அமுக்கியதற்கு என்ன சொல்வீர்கள் ?
நீக்குஇந்தத்தொடருக்கே மூலகாரணகர்த்தாவாக இருப்பவர் எங்கட கடற்கரைப்புகழ்:).. துரை அண்ணனோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..
பதிலளிநீக்குதொடர் நல்ல நகைச்சுவையாக நன்றாகப் போகுது இருப்பினும் இடைக்கிடை கொயப்பமாவே இருக்கே:).
// செங்கமலமும் விழிகளால் இயம்பினோம்...// எனக்கு இப்போ டவுட்டு என்னவெனில்.. செங்கமலம் ஆருக்கு காதலி:)).. செந்தீரட்டிக்கோ? இல்ல கோடரியாருக்கோ?:).
ஐயய்யோ... கதை கப்பி ரோட்டுல போகுதே... உங்களுக்கு ஏஞ்சல்தான் விளக்கம் சொல்லணும்.
நீக்குராமாயணத்தை மஹாபாரதத்தில் லிங்க் விட்ட :) அப்புறம் லவன் குசனை சீதைக்கு தம்பியாக்கிய பெருமை வாய்ந்த ஞானியே :)
நீக்குஇதை எல்லா இடத்திலும் சொல்லியே தீருவேன் வரலாறு முக்க்கியம் :)
இங்கே செங்கமலம் தான் செந்தூரட்டியின் காதலி :)
கோடாரியார் 20 அதிரசத்தையும் தானே உண்டதால் அவருக்கு காதலிக்கும் சான்ஸ் மிஸ்ட் :)
இந்த வரலாறு எப்போ ?
நீக்குசரி 20 அதிரசத்தை தின்றதால் கோடரியை யாரும் காதலிக்க மாட்டார்களா ? இதென்ன அநியாயம்...
ஏஞ்சல் ஹா ஹா ஹா ஹா நல்லா சொன்னீங்க. சீதைக்கு ராமன் சித்தப்பா கதைதான் இந்த பூஸார்....யெஸ் யெஸ் ஏஞ்சல் வரலாறு ரொம்ப முக்கியம்!!!
நீக்குகீதா
அப்போ கலா அண்ணியின் காதில் போட்டுக் குடுத்திட வேண்டியதுதேன்ன்:))...
நீக்குஊசிக்குறிப்பு:
நேக்கு டமில்ல டி ஆக்கும்:)) வரலாறு.. கம்பர், ராமர் எல்லாம் இந்த ஒரு டி க்குள் அடங்குமாக்கும்:) க்கும்:)
நீங்கள் தமிழ் பண்டிட் என்பது தெரிந்ததுதானே...
நீக்கு//அப்படீனாக்கா தாத்தாவை ஊரணியில் வைத்து அமுக்கியதற்கு என்ன சொல்வீர்கள் ?//
பதிலளிநீக்குஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இது தாதாவுக்கே தாத்தா:)
கோடரிவேந்தன் தாத்தாவுக்கே தாதா. ரசித்தமைக்கு நன்றி
நீக்குமிகவும் சுவாரசியமான உரையாடல். அதுவும் இருபது அதிரசங்களை ஒருத்தருக்கும் கொடுக்காமல் தின்பது எனில்! ஹெஹெஹெஹெ! அது சரி, ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆச்சா இல்லையா என்பதைத் தெரிஞ்சுக்க அடுத்த பதிவு வரை காத்திருக்கணுமா?
பதிலளிநீக்குவருக சகோ ரசிய்தமைக்கு நன்றி.
நீக்குஏன் எமது சினேகிதரின் விவாகம் நிகழ்ந்ததா ? என்பதை இரண்டு தினங்கள் பொருக்க முடியாதா ?
ஆறு வருசமாக ஒரே சீரியலை டி.வி.யில் ஓட்டுறான் அதை மட்டும் பார்க்க முடியுமோ...
ஹலோ கில்லர்ஜி யாரைப் பார்த்து இந்தக் கேள்வி ஹா ஹா ஹா ஹா தானைத்தலைவி சீரியல் எல்லாம் பார்க்க மாட்டாங்க தெரியுமா...ஹா ஹா ஹா
நீக்குகீதா
நான் ஆள் மாற்றி கேட்டு விட்டேனோ...?
நீக்குஇப்போது வழக்கிலும் இல்லாத, தெரியவும் தெரியாத பல தின்பண்டங்களின் பெயரை இப்போதுள்ளவர்களுக்கு அறிமுகம் செய்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குஇவையெல்லாம் மறைந்து விட்டது வருத்தமான விடயமே...
நீக்குகீதாக்கா உங்களுக்குத் தெரிந்ததுதான் பெயர் தான் வேறு. தேங்காய்ப்பால் அரிசிமாவு கருப்பட்டி வெல்லம் அலல்து சீனி என்று செய்யப்படுவதுதான்
நீக்குகீதா
நான் சொன்னது இப்போதைய இளைஞர்களுக்குத் தெரியவும் தெரியாத பல தின்பண்டங்களின் பெயரை! அது விடுபட்டு விட்டது! :)
நீக்கும்..ம்..சரி.
நீக்குதொடர்ந்து வாசிக்கிறேன். எங்கள் ஆத்தாவை நாங்கள் திட்டியுள்ளோமே தவிர நீங்கள் சொல்வதுபோல் அல்ல. இதைப்படித்தபோது எங்கள் ஆத்தா நினைவிற்கு வந்தார்.
பதிலளிநீக்குவருக முனைவரே தங்களது பழைய நினைவுகளை எமது பதிவு மீட்டியது மகிழ்ச்சியானதே...
நீக்குகில்லர்ஜி நேற்று உங்கள் பதிவு வெளியானதுமே முதலில் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஉ சொல்ல நினைத்து தேம்ஸிலிருந்து தேவகோட்டை சாரி கோயம்புத்தூருக்குக் குத்தேன். ஆனா பாருங்க கரண்டு கட்டானதால் நெட் நகி...நினைச்சென் தேம்ஸ்லருந்து வரும்போதே சதி ஆரம்பிச்சுருக்கும்னு....ஹூம் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஉ மட்டுமில்ல நேத்து கமென்டே போட முடியாம இன்று வந்தா கோடரிக்குக் கோபம் போல....உள்ளே நுழையவே விடலை. அப்புறம் செந்துரட்டி நல்ல மனசாச்சே அவர்தான் வீட்டைத் திறந்தார்....இதோ உள்ளே நுழைஞ்சாச்சு....கோடரி தள்ளி நில்லுங்க சுத்துப் பாக்கோணும்
பதிலளிநீக்குகீதா
செந்துரட்டி திறந்து விட்டாரா...? அவர் இனியவர்.
நீக்குசெந்துரட்டி யின் செங்கமலத்தை மீண்டும் இங்கு கொண்டுவந்துட்டீங்களா....ரைட்டோ....முன் ஜென்மக் கதைதானே ஸோ ஓகெ....
பதிலளிநீக்குதொதல் தான் லொதலு என்று சொல்லபப்டுகிறது ஜி. பேச்சு வழக்கில். தொதல் தான் சரி...சிலோனில் அதான் இலங்கையில் நுதல் என்பார்கள். என் பாட்டி செய்வாரே. ராமேஷ்வரம் இலங்கையின் அருகில்தானே அதனால் இப்படிப் பெயர் மாறும் சான்ஸ் உண்டு....பாஸிங்க் ஆன் த சீக்ரெட் நு ஒன்னு சின்ன வயசுல விளையாடியிருப்போம் நினைவிருக்கா கில்லர்ஜி....சுற்றி வட்டமா உக்காந்து ஒருத்தர் ஒரு பெயர் அல்லது விஷயத்தை அடுத்துஇருப்பவரின் காதில் சொல்லுவார் அது அப்படியே பாஸ் ஆன் ஆகும் சுற்றி கடைசியில் வரும் போது முதலில் சொல்லப்பட்ட பெயர் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு வேறு வடிவத்தில் ஒலியில் வந்து நிற்கும் அப்படித்தான் நுதல் தொதல் லொதலு எலலம் ஒரே ஸ்வீட் வேறு வேறு வாய் வழக்கில்...இதேதான் கேரளத்திலும் செய்யப்படுவது. கேரளா ஹல்வா. ப்ரௌனிஷ் கறுப்பு கலரில் இருக்கும். இதில் வாழைப்பழமும் சேர்த்தும் செய்யப்படுவதுண்டு கேரளத்தில்.
னுதல் கருப்பட்டியிலும் வெல்லத்திலும் செய்யப்படும். நான் வீட்டில் செய்திருக்கேன். ஆனால் கடல்பாசி சேர்க்கப்படுவதில்லையே ஜி இதில். தொதல் என்றும் சொல்லபப்டும்....
கீதா
ஆமாம் இப்பொழுது அம்மாவிடம் கேட்டேன் கடல்பாசி தேவையில்லையாம்.
நீக்குதைரியமாகத் தொடர்ந்து படித்தால் தலையைப் பிய்த்துக் கொள்ளவேண்டும் என்றுதோன்றுகிறது
பதிலளிநீக்குவாங்க ஐயா அடுத்த பகுதி புரியும் என்று நினைக்கிறேன்.
நீக்குநன்றாகச் செல்கிறது. அது துரை செல்வராஜு ஐயாவா செந்துரட்டி. இன்றுதான் புரிந்து கொண்டேன். தொடர்கிறேன்
பதிலளிநீக்குதுளசிதரன்
செந்துரட்டியின் செங்கமலம் என்ன ஆனாள்? அடுத்த பதிவுல செந்துரட்டி சொல்லாமலா போயிடுவார் இல்லை கோடரிதான் அவர விட்டுருவாரா..ஹா ஹா ஹா
கீதா
செங்கமலம் நிலைப்பாடு அடுத்த பதிவில் தெரியும்.
நீக்குகொஞ்சம்கூட சுவாரஸ்யம் குறையாமல் கதை தொடர்கிறது.
பதிலளிநீக்குவருக நண்பரே மிக்க மகிழ்ச்சி தங்களது கருத்துரை கண்டு.
நீக்குசெங்கமலம் அழகு. ஆனால் அடி வாங்கிய வகை எல்லாம் படித்தால் அச்சமாயிருக்கு.
பதிலளிநீக்குவாங்க சகோ பயப்படாமல் தொடருங்கள்.
நீக்குகண்களும் உணர்ச்சிகளை காட்ட இயலும் என்பதை அழகாய் சொல்லி உள்ளீர்கள்
பதிலளிநீக்குவருக நண்பரே மிக்க நன்றி கருத்துரை வழங்கியமைக்கு...
நீக்குகோடாரி வேந்தரே...காதல் எப்படி வரும் நேராக வருமா? அல்லது குறுக்கு சந்திலே வருமா....செந்துரட்டியாரிடம் பவ்யமாக கேட்டுச் சொல்லுங்கள்.... நான் அங்கு நின்று கொள்கிறேன்..
பதிலளிநீக்குநீங்கள் கேட்டதாகவே சொல்லி கேட்கலாமா ?
நீக்கு