இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூலை 11, 2018

கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (5)


இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக...

றுதினம் எழுவன்கிழமை ஓய்வு தினம் ஆகவே சற்று கூடுதலாக துயில் கொள்ள அனுமதியுண்டு முந்தைய தினம் அதிக தூரம் நடந்து வந்ததின் களைப்பில் செந்துரட்டி தனது மூட்டையை சிரத்துக்கு முண்டு கொடுத்தபடி துயில் கொண்டு விழித்து எழ, தன்னைச்சுற்றி தனது மாணாக்கர்கள் அனைவரும் நாடியில் கை வைத்து அமர்ந்திருப்பதை கண்ட செந்துரட்டி பதறி எழுந்து...
சினேகிதர்களே.. என்ன விடயம் எதற்காக ? எம்மை சூழ்ந்து இருக்கின்றீர்கள் ?
செந்துரட்டி உமது காதல் கதையை கேட்டு எங்கள் அனைவரது மனமும் வேதனை கொள்கின்றது இதற்காக நாம் விவாகம் வேண்டாமென்று தீர்மானிப்பது தவறு உமது தாய் தந்தை அறிந்தால் எவ்வளவு வேதனைப்படுவார்கள் ?
மாயா உமக்கு இந்த விடயங்களை உரைத்தது யார் ?
உமது நெருங்கிய சினேகிதர் கோடரி வேந்தன்தான்.
கோடரி வேந்தன் எங்கே ?
அதோ துயில் கொள்கிறார்.
சற்று அடுத்த படுக்கையிலிருந்து சப்தமுடன் (கொர்.... கொர்.... கொர்...) துயில் கொண்டு இருந்த கோடரி வேந்தனைக் காண்பித்தார் மற்றொரு மாணாக்கர்.

அப்படியானால் ? குருகுலம் அனைத்தும் விடயம் தெரிந்து விட்டதா ? ஒருக்கால் குருநாதரும் அறிந்திருக்க கூடுமோ ? இறைவா அவர் எம்மை இழிவாக நினைந்து விட்டால் எம்மால் அவரின் வதனத்தை விழி கொண்டு காண இயலுமா ? ஆருடரின் கூற்றுப்படி அடுத்த பிறவியிலும் இந்த கோடரியாரின் நட்பு தொடர்ந்தால் ? அதுவும் சமுத்திரம் கடந்த தேசம் என்றுரைத்தாரே அதற்கு அப்பிறவியே வேண்டாமே இப்பிறவியில் கோடரியின் உபத்திரவம் எமக்கு கடந்த பிறவியின் யாம் செய்த பாவமாகத்தானே இருக்க கூடுமோ ? இதை தீர்ப்பதற்கான வழிகள் என்ன ? நேற்றிரவு இருவரும் ஒன்றாகத்தானே துயில் கொண்டோம் அதற்குள் அனைத்து மாணாக்கர்களும் அறிந்தது எப்படி ?  

செந்துரட்டி என்ன... பலமான சிந்தனை ?
கொடுமுடியானின் உலுக்கலில் சிந்தனை களைந்த செந்துரட்டி எழுந்து வெளியில் வந்து குவளையில் நீர் எடுத்து வதனம் அலம்பி வந்து தமது இருக்கையில் அமர...
கோடரி வேந்தரே போதும் எழுந்திருங்கள்.
எழும்பிய கோடரி வேந்தன்
பதனீர் எங்கே ?
ஆம் இதோ
(மாடன் தினம் எழுப்பி கொடுக்க வேண்டும் இல்லையேல் கன்னத்தில் அறை விழும் இதை குருநாதரிடம் இயம்பினால் மீண்டும் கூடுதலாக விழும் இந்த அச்சத்தின் காரணமாக அறை மாணாக்கர்கள் தினம் ஒருவர் கோடரி வேந்தனை எழுப்பிக் கொடுப்பார்கள் செந்துரட்டியைத் தவிர)
கோடரி கொடுவாயோடு பதனீர் அருந்தியதை கண்ட செந்து வதனம் சுழிக்க...

செந்துரட்டி பதனீர் அருந்தவில்லையா ?
வேண்டாம் யாம் இன்னும் பல் துலக்கவில்லை.
செந்துரட்டி அவலையும், சீடையையும் நமது மாணாக்கர்களுக்கு கொடுக்கலாமே ?
இல்லை முதலில் குருநாதரை சந்தித்த பிறகே கொடுக்க வேண்டும் அதுதான் முறை வாருங்கள் புழையில் நீராடி விட்டு வருவோம்.
இன்று ஓய்வு தினம்தானே நாளை நீராடலாமே ?
இல்லை புறப்படுங்கள் தங்களிடம் சில விடயங்கள் இயம்ப வேண்டும்.
இருவரும் மாற்று உடைகளை எடுத்துக்கொண்டு புழையை நோக்கி நடந்தார்கள்.

செந்துரட்டி தங்களது வதனம் புலர் வேளையில் சோகமாக இருக்க காரணம் எதுவோ ?
கோடரியாரே தங்களுக்கு அறியாதா ?
அறியாததால்தான் வினவுகின்றேன் ?
நேற்று சத்தியம் செய்தீர்களே எமது காதல் விடயங்கள் வெளியிட மாட்டோம் என்று ஒரே இரவுக்குள் அனைத்து மாணாக்கர்களிடமும் இயம்பி விட்டீர்களே... நியாயமா ? எதற்காக இப்படி செய்தீர்கள் ?
செந்து யாம் சத்தியம் மீறவில்லையே தங்களது காதல் விடயங்களை சுவடிகளில் எழுதி தகவல் பலகையில் மாட்டி விடமாட்டேன் என்றுதானே தங்களிடம் வாக்கு கொடுத்தோம்.

அப்படியானால்... பிறரிடம் வாக்குமூலம் கொடுப்பது மீறுதல் இல்லையோ ?
செந்து தாங்கள் இப்படி வினவுவது மனதுக்கு வேதனிக்கின்றது.
குருநாதரிடமும் இயம்பினீர்களா ?
இல்லை செந்து அவரை இனிமேல்தானே சந்திக்க வேண்டும்.


கோடரியாரே தயை கூர்ந்து குருநாதரிடம் உரைத்து விடாதீர்கள் மற்ற மாணாக்கர்களிடம் யாம் இயம்பி சரி செய்து கொள்வோம்.
இல்லை செந்து சரி வாருங்கள் நீராடலாம்.
இருவரும் புழையில் நீராடி உடை மாற்றி விட்டு கரையில் இருந்த அரச மரத்தடியில் வீற்றிருந்த விநாயகரை செந்துரட்டி வணங்க, கோடரியார் நின்று கொண்டிருக்க விநாயகருக்கு உக்கி போட்டு விட்டு திரும்பிய செந்துரட்டி.

கோடரியாரே விநாயகரை வழிபடவில்லையா ?
எப்படியாயினும் எமக்கும் சேர்த்துதானே தாங்கள் வழிபட்டு இருப்பீர்கள் ஆகவேதான் செந்து.
கோடரியாரே தாங்கள் இப்பொழுது கூடுதலாக தவறிழைத்துக் கொண்டு வருவது எமக்கு வேதனை அளிக்கின்றது.
விடுங்கள் செந்து யாம் இப்பொழுது சிந்தனையில் இருக்கின்றோம்.
எதைப்பற்றி சிந்தனை ?
குருநாதரிடம் எமது அவலுக்கும், சீடைக்குமான வழி.
தங்களுக்கு கணப்பொழுதில் யோசனைகள் வருமே...
நல்லது பார்க்கலாம்.

இருவரும் தங்களது இருப்பிடம் வந்ததும் செந்துரட்டி பூசையறைக்கு செல்ல, கோடரி வேந்தன் செந்துரட்டியின் மூட்டையின் அருகில் அமர்ந்திருக்க..
செந்து புறப்படுவோமா ?
நல்லது எனது மூட்டையின் ஓரத்தில் துளையிட்டு இருக்கின்றதே....
எலி ஏதாவது கடித்திருக்கலாம் செந்து.
இல்லையே எலி கடித்திருந்தால் அதன் துகள்கள் சிதறிக் கிடக்க வேண்டுமே இது ஏதோ சிறிய ஆயுதத்தால் துளையிட்டது போல் அல்லவா இருக்கின்றது.
உடன் முடிச்சை அவிழ்த்து காண, உள்ளே சிறிது அவலும், நான்கு சீடை உருண்டைகளும் இருந்தன...

கோடரியாரே யாம் ஒன்று களித்தோம், ஆருடருக்கு இரண்டு கொடுத்தீர்கள், தாங்களும் ஒன்று களித்தீர் மீதம் ஆறு வேண்டுமே ? நான்குதானே இருக்கின்றது.
மாணாக்கர்களே... யாமும், செந்துரட்டியும் புழையில் நீராடச்சென்ற தருணத்தில் முடிச்சை அவிழ்த்து இரண்டு சீடைகளை உண்டது யார் ? எமக்கு இப்பொழுது அறிய வேண்டும் இல்லையேல்........ ?
கோடரி வேந்தரே இறைவன்மீது ஆணை இதை யாருமே தொடவில்லை.
செந்து கோடரி வேந்தனை ஐயத்துடன் காண...
செந்து எமது நெருங்கிய சினேகியதரான தாங்கள் எம்மீது ஐயம் கொள்வது மனதுக்கு வேதனிக்கின்றது.
விட்டுத்தள்ளுங்கள் புறப்படுங்கள் குருநாதரை காணச்செல்வோம்.
குருவே நமச்காரம்
இருவரும் தரையில் விழுந்து வணங்கினர்.


நலமே விளைக எழுந்திருங்கள் செல்வங்களே... எமது அன்புச்சினேகிதர் திருவாளர். மோகனரங்கம் அவர்கள் நலமுடன் இருக்கின்றார்களா ?
ஆம் குருவே நலமுடன் இருப்பதாகவும், தங்களின் நலத்திற்காக இறைவனை வேண்டுவதாகவும் தங்களிடம் இயம்ப பணித்தார்கள்.
நல்லது மிக்க மகிழ்கின்றேன்.
இதோ எமக்கு அன்புடன் உண்டு களிக்க தந்தார்கள்.
நல்லது இதை மற்ற மாணாக்கர்களிடம் பகிர்ந்து உண்டு களிப்பீராக... கோடரி வேந்தனே உமக்கு கொடுக்கவில்லையா ?
குருவே எமக்கும் தந்தார்கள் யாம் வரும் வழியில் மலசலம் கழித்து கண்மாய்க்கு செல்லும் தருணத்தில் தண்ணீருக்குள் விழுந்து விட்டது.
மலசலம் கழிக்கும் தருணத்தில் உணவுப் பண்டங்களை கொண்டு செல்லலாமா ? அதை செந்துரட்டியிடம் கொடுத்து இருக்கலாமே... ?

சினேகிதர் உடல் நலமின்றி இருந்தார் அதன் காரணமாகவே இவரிடம் பாரத்தை கொடுத்துச் செல்ல எமக்கு மனமில்லை குருவே மன்னியுங்கள்.
செந்துரட்டி பாரத்தை சிரத்தில் வைத்துக் கொள்ளவில்லையே... உமது சினேகிதரின் பாரத்தையும் நீர்தான் சுமந்து வந்தீரா ?
ஆம் குருவே....
அப்படியானால்... இவரின் பாரம் நீருக்குள் விழவில்லையோ ?
குருவே யாம் எமது உடமை, எமது உயிரை விட பிறருக்காக உடமைகளில் கவனம் கொள்வோம் அதன் காரணமாக இவருடையதை கவனத்தில் கொண்டோம் ஐயமெனில் சினேகிதரையே வினவுங்கள் குருவே.
செந்துரட்டி, கோடரி வேந்தன் இயம்பியது அனைத்திலும் மெய்யுண்டோ ?

ஆம்... குருவே....
உமது வாக்குகளில் மெய்யுண்டு என்பதில் எமக்கு என்றும் விசுவாசமே இருப்பினும் உமது விழிகளில் ஏன்... தடுமாற்றம் ? உணவுப் பண்டத்தை மலசலம் கழிக்கும் இடத்துக்கு கொண்டு செல்வதை நீராவது தவிர்த்திருக்கலாமே...

மன்னியுங்கள் குருவே.
சரி இந்த அசுத்தமான தின்பண்டங்களை பிற மாணாக்கர்களுக்கு உண்ண அளித்தல் கூடாது உமது தவறுக்கு பிராயசித்தமாக இவை அனைத்தைம் நீரே உண்ண வேண்டும் செந்துரட்டி காப்பாளரிடம் யாம் கட்டளை இட்டதாக இயம்பவும் செல்லுங்கள்.
உத்தரவு குருவே.
குருவே தங்களது தண்டனையை ஏற்கிறேன்.
இருவரும் பணிந்து வணங்கி குருவிடம் விடை பெற்று வெளியேறினர் கோடரி வேந்தனின் வதனத்தில் மகிழ்ச்சி.
            
தொடரும்...

இந்தப்பதிவு உருவான காரணக் கதையை படிக்க இதோ
என்னை F m E சொடுக்க.

39 கருத்துகள்:

  1. குரு வாழ்க...
    குருவே சரணம்!...

    பதிலளிநீக்கு
  2. எழுவன் கிழமை என்பதாவது -
    ஏழரையான் கிழமையாகும்...

    நடக்கின்ற நடப்புகளை நுட்பமாக
    ஆய்ந்தோமேயானால்

    மெய்யாகவே ஏழரையான் கிழமை ஆகி விடுமோ என ஐயுற்கின்றது - மனம்...

    எப்படியோ நல்லது நடந்தால் சரி!..

    அடே... செந்துரட்டி!...
    எங்காகிலும் நல்லது நடக்குமா?..
    அது ஊர்ந்தல்லவா போகும்!...

    ஆஹா.. இவனொருவன் கடிநகை காட்டுகிறான்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏழரையின்றி நல்லதே நடக்கும் ஜி.
      தங்களது கருத்தை ரசித்தேன்

      நீக்கு
  3. குரு சொல் தெய்வ வழக்கிற்கு சமம் வாழ்த்துகள் பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது பாராட்டுகளுக்கு நன்றி கவிஞரே

      நீக்கு
  4. நடக்கட்டும் நடக்கட்டும்...

    எழுவன் கிழமை. நல்லாத்தான் இருக்கு.பதனீர் மாணாக்கர்களுக்கு எந்தக் குருகுலத்தில் கொடுக்கறாங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே... இது குருகுல வளாகத்தினுள் வளரும் பனை மரங்களிலிருந்து மாணாக்கர்களாக இறக்கி வைத்துக் குடிக்கும் பதநீர் இது விற்பனைக்கு அல்ல!

      கடந்த பதிவின் சித்திரத்தில் குருகுலத்தை சுற்றி வளர்ந்த பனை மரங்களை பார்க்கவில்லையா ?

      நீக்கு
    2. ///யாம் ஒன்று களித்தோம், ஆருடருக்கு இரண்டு கொடுத்தீர்கள், தாங்களும் ஒன்று களித்தீர் //

      ஆங்ங்ங்ங் கண்டுபிடிச்சிட்டேன்ன்.. இதில இந்த ளி வராதே.... கழித்தேன்... எனத்தானே வரோணும்..

      தமிழ் புரொஃபிஸர் என்ன பண்றார்?:).. எனக்கு டமில்ல டி ஆக்கும்:) ஹையோ ஒருவேளை மீதான் தப்போ தெரியலியே எதுக்கும் நெ.த வந்து சொல்லுவார்ர்:)

      நீக்கு
    3. கிட்டத்தட்ட ஒருவாரமா அதிரா பிஸி. அவசர அவசரமாக வந்து பின்னூட்டம் போட்டால் அவரது சிறு வயதில், அதாவது 50 (ஐம்பது) வருடங்களுக்கு முன்னால் படித்த தமிழ் அதிராவுக்கு மறந்துவிட்டதே...

      களித்தோம்- சந்தோஷப்பட்டோம். உண்டு களித்தோம். அவளுடன் விளையாடிக் களித்தோம். Enjoyed. கழித்தோம் - Spent. செலவழித்தோம். என் நேரத்தை அவளுடன் விளையாடிக் கழித்தேன். அவருக்கு உடம்பால் உழைத்து என் கடனைக் கழித்தேன். Minusக்குள் இது பொருந்தும். இன்னொரு அர்த்தம் இருக்கிறது.

      நீக்கு
    4. அதிரா, தெ.த. அதிகம் சொல்லி விட்டார்.
      சௌச்சாலயம் சென்று வருவதையும் கழித்தேன் என்று சொல்லலாம்.

      அதன் உள்ளே போய்வந்து களித்தேன் என்றால் சமூகம் சிரிக்கும்.

      நீக்கு
    5. //அவரது சிறு வயதில், அதாவது 50 (ஐம்பது) வருடங்களுக்கு முன்னால் படித்த தமிழ் அதிராவுக்கு மறந்துவிட்டதே... ///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சந்தடி சாக்கில என்னமோ சொல்லி மனதை சந்தோசப்படுத்த நினைக்கிறீங்க:)).. இந்தச் சலலசலப்புக்கேல்லாம் பயப்பூடாது இந்த “புலிக்காட்டுப் பூஸ்” ஹா ஹா ஹா:)..

      ஹையோ எனக்கு தெரியும் இந்த வித்தியாசம்.. ஆனா இந்த வசனத்தில்..

      “யாம் ஒன்று களித்தோம்” என்றால் கழிக்கப்பட்டு விட்டது எனத்தானே அர்த்தம்..

      “யாம் ஒன்றை உண்டு .. [என வந்தால்] களித்தோம்” என்பது பொருந்துமெல்லோ.. நெ.தமிழன் வாங்கோ நேக்கு நீடி டேவைஈஈஈஈ:)).

      //சௌச்சாலயம்/// சென்று வருவதையும் கழித்தேன் என்று சொல்லலாம்.//

      ஹையோ இதென்ன கில்லர்ஜி புதுச் சொல் சொல்றீங்க.. நான் கேள்விப்பட்டதே இல்லை...

      நீக்கு
    6. அதிரா நீங்கள் இந்த பதிவுக்கு சென்று வந்தால் அதன் விபரம் அறியலாம்.

      http://killergee.blogspot.com/2016/06/blog-post_3.html

      நீக்கு
  5. அது சரி.. கோடரி வேந்தன் ஆட்டைய போட்டுட்டாரே..நினைச்சோம்..இந்த அவலும், சீடையும் கோ வே ஆட்டைய போட்டுருவார்னு... தந்திரசாலி!! ஹா ஹா ஹா ஹா ஹா...

    -துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்க குருவோட தண்டனையை ஏற்கும்போது சீடையை தின்றுதானே ஆகணும்.

      நீக்கு
  6. சீடையை எண்ணி மூட்டையில் வைப்பார்களா?
    ஒரு கைபிடி, இரண்டு கைபிடி, மூன்று கைபிடி, அல்லது ஒரு குத்து சீடை அப்படித்தான் கேள்வி பட்டு இருக்கிறேன்.
    பெரிய சீடை போல. சிலர் வீடுகளில் இனிப்பு சீடை பெரிதாக செய்வார்கள் கிருஷ்ணஜெயந்திக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த சீடை தேவராயகோட்டத்து மாடல் பழைய பொரி உருண்டை அளவில் பெரிதாக இருக்கும்.

      நீக்கு
  7. முகநூலில் கறுப்பு,வெள்ளை படம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
    நீங்களும், உங்கள் நண்பரும் இருக்கும் படம் கறுப்பு, வெள்ளையில் இருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ பழங்கால சம்பவங்கள் என்பதால் பழைய சித்திரங்கள்.

      நீக்கு
  8. கோடரி வேந்தன் சரியான ஆளாய் இருக்கிறாரே...

    எழுவன் கிழமைக்கு துரை ஸார் பொழிப்புரை தந்திருப்பது உதவியது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஸ்ரீராம்ஜி பழைய தமிழ்ப் பெயர்களில் எழுவன்கிழமை உண்டு. ஏற்கனவே இதை நான் உபயோகப்படுத்தி இருக்கிறேன்.

      நீக்கு
  9. கோடரியார் உதிர்க்கும் பொய்களால் செந்துரட்டியின் வாழ்வில் சோகம் சூழுமோ என்ற கவலை மனதை அரித்தெடுக்கிறது.

    கவலையைப் போக்க, கோடரி வேந்தன் விரைவில் நல்ல குணவேந்தனாக மாற வேண்டும். மாறுவாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கவலை தீர காலம் பதில் சொல்லும் நண்பரே...

      நீக்கு
  10. //கோடரி வேந்தனின் வதனத்தில் மகிழ்ச்சி.//

    ஆஹா என்னா டமில்ல்ல்:)) .. அந்த தொடரும் எனும் சொல்லுத்தான் இடிக்குது கில்லர்ஜி..:))

    பதிலளிநீக்கு
  11. எப்படி அதே ஓட்டத்தை சீராக உங்களால் கொணர முடிகிறது? வியப்பாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி பகுதி நான்கு (4) படித்தீர்களா ?

      நீக்கு
  12. அது என்ன எழுவன் கிழமை நன்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதன்கிழமை என்பது எழுவன்கிழமையாக இருந்தது. இது பழைய பெயர் ஏழில் நான்கின் பெயர் மாற்றப்பட்டு தற்போது நிலுவையில் உள்ளது.

      நீக்கு
  13. எழுவன் கிழமை எனில் ஞாயிறு என நினைச்சேன். புதன்கிழமையா? அது சரி! இந்தக் கோடரி ஏன் இப்படி? எப்போவுமே இப்படித் தானா? பாவம் செந்து! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அப்படீனாக்கா... நாங்க பாவம் இல்லையா ?

      நீக்கு
    2. இலங்கையில் சிலர் சொல்வதுண்டு எழுவான்கரை.. படுவான்கரை:).. இது கிழக்கும் மேற்கும்:)..
      கிழமையில் ஞாயிறோ?:)

      நீக்கு
    3. இது திசைகளை குறிக்கிறதோ.... மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  14. பெயரில்லா7/14/2018 5:56 PM

    படிக்காமல் விட்டதை மீண்டும் பிடித்துப் படிக்கிறேன். என்னது அவ்வளவு பெரிய சீடையா.
    கோடரியாரே சுதாரித்துக் கொள்ளும்.

    அக்குறும்பு அதிகம் கூடாது. மிக மிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தொடர்ந்து படித்து வருபவமைக்கு நன்றி

      நீக்கு
    2. கோடரியார் எப்பவும் இப்படித்தானா?

      நீக்கு
    3. வருக நண்பரே இப்படித்தான் எப்பவும்.

      நீக்கு