சிவனை
யாராவது பார்த்து இருக்கிறார்களா ? அவர் முறுக்கிய மீசையுடன் தமிழ் சினிமா, சீரியல் நாடகங்களில் வருகிறார் சரி.
அதேநேரம் வடநாட்டு சினிமா சீரியல் நாடகங்களில் ஏன் மீசையில்லாமல் வருகிறார் ? வடநாட்டு
தெய்வங்கள் எல்லா வகையிலும் அப்படியே வேறு படுகிறார்கள் தற்கால சராசரி மனிதர்கள்
போலவே தலைமுடியை வெட்டாமல் அப்படியே வருகிறார்கள் சரி ஆனால் முகத்தை மட்டும்
மீசையை ஒதுக்கி தாடியை மழித்து விட்டு வருகிறார்களே அப்படியானால் அவர்களுக்கும்
ஷேவிங் செய்யும் பழக்கம் இருந்திருக்கிறதா ?
அதேபோல்
கழுத்தில் எப்பொழுதும் நாகம் ஒன்று இருக்கிறது அவருக்கு ஏன் இந்த செக்யூரிட்டி ? சிவனுக்கு
பசிக்காது உணவு தேவையில்லை சரி, நாகத்திற்கு ? அதனுடைய மற்ற காலைக்கடன்கள், இத்யாதி, இத்யாதிகள் இதெல்லாம்
எப்போது ? அதேபோல்
பார்வதியும் சராசரி பெண்களைப்போல் மாடலிங் காஸ்மெடிக் விதவிதமாய் போட்டு சேலை
அணிந்து ரவிக்கை போட்டு வருகிறார் நன்றாகவே தெரிகிறது இதெல்லாம் கைவேலை இல்லை
டெய்லரிங் வேலைதான் என்று. சமீபத்தில் விநாயகர் சீரியலில் பார்த்தேன் பார்வதிக்கு
பதினெட்டு வயதுதான் இருக்கும் படுகவர்ச்சியாக இருந்தார் அவரது மகனாக நடிக்கும்
விநாயகருக்கு இருபத்து மூன்று வயது இருக்கலாம் இது என்ன கணக்கு என்று இதுவரை
விளங்கவில்லை..
இதைவிட
நான் ஆச்சர்யப்பட்டது அவர் சுடிதார் அணிந்து இருந்ததே... மேலும் தமிழக பார்வதி
பச்சை நிறத்தில் இருக்கின்றார். ஆனால் வடநாட்டு பார்வதி ஆரவல்லி திரைப்படத்தில்
இரண்டாவது நாயகியாக வந்து நாயகனின் அப்பாவுக்கு செம்பில் தண்ணீர் கொடுப்பாரே
குமுதவர்த்தினி அவரை மாதிரி நல்ல மாநிறமாக இருக்கின்றார். அப்புறம்
தொலைக்காட்சியில் சமீபத்தில் பார்த்தேன் ஒருத்தி மிகவும் அழகாக இருந்தாள், அழகிய
முறையில் மாடர்ன் உடையில் அதையும் ஆபாசமாக அணிந்து இருந்தாள் எனக்கும் சட்டென
அவள்மீது காதல் பற்றிக்கொள்ளும் சூழல் திடீரென்று பார்த்தால் ? அவள் நாகமாக மாறி மீண்டும் பெண்ணாகி விட்டாள். பிறகு அக்கம்
பக்கத்தில் விசாரித்த போதுதான் அறிந்தேன் அவள் பேயாம்...
உடனே
இவள் அதுக்கு சரியாக வரமாட்டாள் என்று எனது எண்ணங்களை மாற்றிக் கொண்டேன்
அப்படியானால் பேயாகியும் மேக்கப் செய்வார்களா ? விளக்கம் கேட்டால்
கிருதுகாலம் புடிச்சவன்னு சொல்வாங்க நண்பர் திரு. பசி பரமசிவம் அவர்கள்கூட
சண்டைக்கு வந்தாலும் வரலாம் நமக்கு எதுக்கு ஊர் வம்புஸ் ?
சிவாதாமஸ்அலி-
அதான்
கேள்வியை கேட்டாச்சே ?
டிவில சமையல் செய்யும்போது கூட பட்டுப்புடவை நகையெல்லாம் போட்டுத்தான் சீரியல் ஆன்ட்டிங்க சமைக்கிறாங்க ஆனா நிஜத்தில் நம்ம வீட்டில் பருத்தி தானே கட்டுவாங்க .இதெல்லாம் சும்மா கண் குளிர பார்த்திட்டு விட்டுடனும் :)
பதிலளிநீக்குஹையோ ஆரவல்லி குமுதவர்தினிலாம் நான் எங்கே போய் தேடுவேன் :)
இப்போல்லாம் ரொம்ப டிவி பாக்கறீங்களா :) பேய் மேக்கப் போடலைன்னா இப்போ இந்த பதிவே எழுத முடிஞ்சிருக்காது உங்களுக்கு :)
ஹ ஹா பயப்படாதிங்க ஆரவல்லி குமுதவர்தினி லாம் அடுத்த பதிவில்
நீக்குகொண்டு வருவாரு அன்பு நண்பர் கில்லர்ஜி...
வாங்க சகோ டி.வி. அம்மா பார்ப்பாங்க ஹாலை விட்டு அறைக்குள் சென்றாலும் பேயின் சத்தம் அழைத்து வருகிறதே...
நீக்குகுமுதவர்த்தினியை தெரியாதா ? கஷ்டம்தான் அனுஷ்க்கா சொன்னால் தெரியும்போல...
நண்பரே குமுதவர்த்தினியை நான் எப்படி கொண்டு வரமுடியும் ? அவங்க சமாதியாகி பல மாமாங்கம் ஆகிடுச்சே...
நீக்குஅடுத்த பதிவின் கதாப்பாத்திரத்தில் உயிருடன் கொண்டு வருவீங்கனு நெனச்சேன்.
நீக்குஉயிரோடு கொண்டு வருவதாக சொல்வதற்கு நானென்ன போலிச்சாமியாரா ?
நீக்குஅய்யய்யோ இது அது இல்ல?
நீக்குவடிவேல் மாதிரி புலம்ப விடுறாங்களே😜😜
ஏஞ்சல் ஹைஃபைவ்! சொன்னது சூப்பர். நான் லேட்டா வந்தா இந்த மாதிரி ஹைஃபைவ் தட்டிட்டுப் போயிடலாம் போல ஹா ஹா ஹாஹ் ஆஹ் ஆ
நீக்குகீதா
ஒருமுறை பிளாக் ஜீசஸ் க்ரைஸ்ட் படத்தை பார்த்தேன்
பதிலளிநீக்குஇதுவரைக்கும் எல்லா இயேசுவின் படமும் யூதர் முகம் வெள்ளையாய் பொன்னிற தலை முடி என்றுதான் பார்த்திருப்போம் .ஆனா இந்த ஜீசஸ் ஆப்பிரிக்க முகம் முடி நிறம் எல்லாம் அப்படியே கருமை நிறம் .அவரவருக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கிட்டாங்க .
படத்தில் மட்டுமல்ல டைரக்டர்ஸ் பணத்திலும் கருத்தை வைத்து
நீக்குபடம் பண்ணுறாங்க,
ஆனால் அநேகர் வீட்டில் பார்த்துள்ளேன் இயேசு படம் வைத்து வணங்குகிறார்கள்,
அந்த படங்களில் வருபவரெல்லாம் படத்தில் இயேசுவாக நடித்த நாயகர்களென்றுத் தெரியாமல்..
பெயரே பிளாக் என்று சொல்லிட்டீங்களே... பிறகு ?
நீக்குஆம் நண்பரே என்.டி.ராமாராவை கடவுளாகவே பாவித்தார்கள் நம் மக்கள்.
நீக்குகடைசியில் அவன் 60 வயசுலயும் திருமணம் செய்தான்.
நிறையபேர் இப்படிதான் ...
நீக்குசினிமா நடிகர்கள் ருசி கண்ட பூனைகள்.
நீக்குஎன்.டி.ராமாராவ், சிவ பார்வதியை விரும்பி மணம் செய்யவில்லை. அது ஒரு கேலிக் கூத்து! :(
நீக்குஅந்தக்கூத்தை பதிவாக இடுங்களேன்.
நீக்குவேணாம் கில்லர்ஜி! :(
நீக்குஅதானே...
பதிலளிநீக்குபேயாகித் திரிஞ்சாலும் இவிங்கே விடமாட்டாய்ங்க....
வம்படியா புடிச்சு இழுத்துக்கிட்டு வந்து மேக்கப்பு - மேக் அப்பு - எல்லாம் போட்டு உட்டு கல்லா கட்டிடுவாய்ங்கே!..
அப்புறம்
இந்தி ஒழிய்க!...
சத்தம் போட்டுக்கிட்டே
இந்தி குப்பை எல்லாத்தையும்
நம்ம ஊட்டுக்குள்ளாற போட்டுட்டு
அதுக்கும் நம்மகிட்டயே காசு புடுங்கிடுவாய்ங்கே!..
கேட்டா -....
உங்கள் டண்டனக்கா டீவீயில்...
அப்புடீன்னு சவுண்டு உடுவாய்ங்கே!..
இவிங்களோட சங்காத்தமே வேணாம்ன்னு தான் கம்பியப்
புடுங்கி உட்டுட்டோம்!...
ஆமாம் ஜி ரொம்ப படுத்துறாங்கே...
நீக்குவீட்ல படுக்க முடியலை...
மோடிதான் இதற்கு தீர்வு காணணும்.
மீயும் லாண்டட்ட்ட்ட்ட்ட்..... எத்தனையாவது எனத் தெரியாததால் அடக்கி வாசிக்கிறேன்:))
பதிலளிநீக்கு//கடவுளைப் பார்த்தது யார்?//
இதிலென்ன ஜந்தேகம்?:).. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அஞ்சரை அடி உயரம் அப்பாத்து ஒம்பேது கிலோ எடையுடன் இருக்கிறேன் என்னைக் கண்ணு தெரியல்ல?:)) மீ பார்த்தேன்ன்:)) ஹையோ கவிதைகூட எழுதினேனே:)).. முருகனையும் அவர் ப்பிரதரையும் பார்த்தேன்...:) எந்தக் கோயில்ல வேணுமெண்டாலும் கற்பூரம் கொழுத்துங்கோ மீ வந்து அடிச்சு ஜத்தியம் பண்றேன்ன்:)) ஹா ஹா ஹா...
நீங்க கடவுளா ? அப்படீனாக்கா எதுக்கு ஊரணியில குதிக்கப் போறேன்னு டீலா வுடுறீங்க ?
நீக்குஅதிரா அதை ஏன் கேக்கறீங்க...உங்களுக்கும் அப்பாலதான் வர முடியுது..அதனால மீ டூ அடக்கி வாசிக்கிங்க்! ஹா ஹாஹ் ஹா
நீக்குகில்லர்ஜி அவங்க எங்க ஊரணில குதிக்கறாங்க....நீங்க அழகர் ஆத்துல இறந்தறத பார்த்ததில்லை?!!! அதான் இப்பூடி கேள்வி. கேட்டுப்புட்டீங்க..ஹிஹிஹிஹிஹி அதிரா சரிதானே??!!
கீதா
உங்க ஊரணி கூவம்தானே ?
நீக்குகீதா.. கீழே விழுந்தாலும் மீசையில மண் படாத கதையா:).. சவுண்டு விட்டே.. எனக்கொண்ணும் பிரச்சனை இல்லை, மீ த 1ஸ்ட்டா வராட்டில் என்ன... என்பதுபோல ஜமாளிச்சிடோணும்:)) இதெல்லாம் ஒரு தக்கினிக்கி தான்ன்:)) ஹா ஹா ஹா.
நீக்குகீதாட ஊரணி கூவமோ?:) ஹா ஹா ஹா கில்லர்ஜி:) கூவத்தில மேக்கப் போடாமல் இறங்கினால், மேக்கப்போடு வெளியே வரலாமாம் :).
அந்த மேக்'கப்'போடு வந்தால் வீட்டுக்குள் விடமாட்டார்களே...
நீக்குஹையோ கில்லர்ஜி.. எதுக்கு இப்போ கடவுளை இழுத்து சிபனைப் பார்த்தது யார்.. கழுத்துப் பாம்பைப் பிடிச்சது ஆர் எண்டெல்லாம் கேய்க்கிறீங்க?:).. நான் கேட்கிறேன்ன்..
பதிலளிநீக்குபாரியைப் பார்த்தது ஆர்? அவர் தேரை முல்லைக்கு முட்டுக் கொடுத்ததைப் பார்த்தது ஆர்?:).. ராமரைப் பார்த்தது ஆர்? வில்லை உடைச்சதைப் பார்த்தது ஆர்?:)) சீதையுடன் பேசியது ஆர்ர்?:)).. இவை எல்லாம் கடவுள் கதைக்கு பிந்திய கதை எல்லோ.. அதனால இது கிட்டடியில் நடந்த கதை இதுக்கு எனக்குப் பதில் வேணும்?:)) ஹையோ மீ ஓடிடுறேன்ன்...
கனக்க வாணாம்ம்ம்ம் ஸ்ரீராமைப் பார்த்தது ஆர்ர்?:) நெ.தமிழனைப் பார்த்தது ஆர்ர்ர்:) ஏனெனில் அவர்களின் படம்தான் எங்குமே பார்க்கல்ல:) கடவுளின் படமாவது கற்பனையில எண்டாலும் பார்த்தாச்சே:)) ஹா ஹா ஹா:))..
அதிரா... காணாமல் போகிறவர்கள் எல்லாம்... மன்னிக்கவும், காணமுடியாமல் இருப்பவர்கள் எல்லாம் கடவுளா!!
நீக்கு.ஹா... ஹா... ஹா...
சீதையுடன் பேசியது ராவணன். இது எனக்கு உறுதியாக தெரியும்.
நீக்குநெ.த. அவர்களை தெரியும்.
ஹை ஸ்ரீராம் அண்ட் நெ த கடவுள்கள் போல ஹா ஹா ஹா அதாவது பூஸாரின் தியரிப்படி....!!!
நீக்குகீதா
பின்ன என்னவாம், இந்த ஜென்மத்தில இருப்போரையே கண்ணால காண முடியுதில்லையாம்:) அதை எல்லாம் தாண்டி சிவனைப் பார்த்தியா எனக் கேய்க்கிறாரே கில்லர்ஜி கர்ர்ர்ர்:))..
நீக்குஏன்னாது ஜீதையை ராவணன் பார்த்தாராமே.. அதைப் பார்த்தது ஆராம்?:) ஹையோ ஜாமீ எனக்கு என்னமோ ஆகிடும்போல இருக்கே:)).. இப்போ ராவணன் பத்துத் தலையோடு இந்தியாவின் நியூயோர்க்கில:) காலை வச்சால்ல்.. கில்லர்ஜியை எமேஜென்சிக்கு அனுப்ப வேண்டி வந்திடப்போகுதே:)) பின்ன 10 தலைகளோடு ஒரு மனிசனைக் கண்ணால பார்க்க முடியுமோ?:) ஹா ஹா ஹா..
கற்பனையில் வந்த கதையில் பத்து தலையென்ன ? இருபது தலையோடும் பார்க்கலாம்.
நீக்குநீங்கள் கேட்ட சிவபெருமானை நான் பார்க்க வில்லை...காரணம் நான் டிவி சீரியல் பார்ப்பதில்லை நல்ல வேளை அந்த சிவ பெருமான் அமெரிக்கா வந்தால் வேற காஸ்ட்யூம் போட்டு இருப்பார்
பதிலளிநீக்குநித்தியானந்தாகூட அமெரிக்கா வந்தால் பெர்முடா மட்டுமே போடுவாரே... அப்படியா ?
நீக்குஅடக் கடவுளே. கோடரி வேந்தரே ,
பதிலளிநீக்குதொலைக்காட்சியில் ஈசனைத் தேட வேண்டாம்.
இவர்கள் பணத்துக்காக வேடம் ப்போட்டவர்கள்.என்ன எதிர்பார்க்க முடியும் மா.
வாங்க அம்மா பக்தியை மழுங்கடித்து விடுவது போலிருக்கிறது இன்றைய சீரியல்கள்.
நீக்குகுறும்பான கேள்விகள்!
பதிலளிநீக்குயாரு ஜி நானா ?
நீக்குபட்டமரத்துக்கு பட்டுடுத்தினாலும் அவுத்து பாக்குற சமூகமிது,
பதிலளிநீக்குபார்வதிய கவர்சியா காட்டினால்தான் சீரியல பாப்பாங்கனு நெனச்சி
பார்வதிய பதினெட்டு வயதா மாத்திருப்பாங்க,
உண்மைதான் நண்பரே எல்லாம் வியாபார தந்திரங்களே...
நீக்குநாடு வெளங்கின மாதிரிதான்.
நீக்குமாதிரி என்றால் ஐயப்பாடுதான்.
நீக்குஹா... ஹா... இதை எல்லாம் கூட கவனிப்பீர்களா...?
பதிலளிநீக்குநான் கவனிக்கலைனா... இன்னும் மோசமாக எடுத்துருவாங்கே ஜி
நீக்குஅவரவர்களின் கற்பனைத் திறனுக்கு ஏற்றவாறு அவரவர்களின் மனதில் இறைவன் தோன்றுவான். தற்போது உங்களுடைய எண்ணத்தில் தோன்றி சில சிந்தனைகளை இறைவன் கிளறியுள்ளான் போலுள்ளது.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி
நீக்குஇறைவனை எல்லோரும் பார்த்திருக்கோம். நாம ரொம்ப கஷ்டத்துல இருக்கும்போது தெய்வமா வந்து உதவி செய்து நம்மைக் கைதூக்கி விட்ட சம்பவம் ஒரு தடவையாவது நம்ம வாழ்வுல நடந்திருக்காதா?
பதிலளிநீக்குபக்தி, இறைவன் என்ற பெரிய கான்சப்ட் எல்லாருக்கும் புரியாது என்ற காரணத்தினால் உருவ வழிபாடு இருக்கிறது. 'நம்ம குழந்தை'க்கு உடைகள் அணிவித்து அழகு பார்ப்பதுபோல்தான் 'நம் இறைவன்' என்ற உரிமையோடு அழகு பார்ப்பதும்.
'இறைவன்' என்பதற்கு உருவம் கொடுக்கும்போது, நம்மைப் போல ஆனால் நம்மைவிட மேன்மையானவனாகத்தான் உருவம் கொடுக்கிறார்கள். நேபாளில் தெய்வ உருவம் நேபாளிகளின் உருவ அமைப்பை ஒத்து இருக்கும்.
நீங்க தொலைக்காட்சி சீரியல்களையும் சினிமாக்களையும் பார்த்து ரொம்பக் கெட்டுப்போயிட்டீங்க. ஹா ஹா ஹா. இனிமேல் வீட்டில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தால், கண்ணை மூடிக்கொண்டு அறையைக் கடந்து செல்லவும்.
அருமையாக சொன்னீர்கள் தமிழரே இது எனது வாழ்வில் பலமுறை நடந்து இருக்கிறது. அதேபோல் நானும் பிறருக்கு இருந்திருக்கலாம்.
நீக்குநன்மையும், தீமையும் இறைவன் நேரடியாக தரமாட்டார். நண்பர்கள், எதிரிகள் வழியாகவே கிடைக்கும்.
சீரியஸான விஷயம் கில்லர்ஜி. ஆர்ட் ஆஃப் லிவிங் (வாழும் கலை), ஒரு வகுப்பு வச்சிருந்தாங்க (Sudarshan kriya course). அதுல கடைசி நாளில், வகுப்பில் இருப்பவர் ஒவ்வொருவரையும் இன்னொருவர் முன்னால் உட்காரவைத்து, அடுத்தவரது கண்ணையே உற்று நோக்கச் சொல்வார்கள் (ஆன்மாவைப் பார்க்கும் விதமாக). அப்போது, ஒரு கேள்வியும் கேட்பார்கள், 'கடவுள், உன் எதிரில் உள்ளவர் வடிவத்தில் வந்தால் உன்னால் அடையாளம் காண இயலுமா, அதை ஏற்றுக்கொள்வாயா' என்று. அதன் அர்த்தம், மனிதன் ஒவ்வொருவரிடமும் கடவுள் உறைந்திருக்கிறார், அவன் மீது அன்பு செலுத்து என்பது. இது எனக்கு மனதுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. சக மனிதர்கள் மீது கோபம் கொண்டிருப்பவன், அன்பு செலுத்தத் தெரியாதவன் (நானும் இதனைக் கற்கணும்), 'இறைவன் தான் உலகத்தைப் படைத்தவன், எல்லோரும் அவன் மக்களே' என்று சொல்லும்போது, 'குட்டி பகை, ஆடு உறவு' என்று அவர்கள் நடப்பதை ஏன் உணரமுடிவதில்லை?
பதிலளிநீக்குஒரு சிலையோ படமோ ஒருவனின்
நீக்குபிரதிபலிப்பைத்தான் தோற்றுகிறது உண்மையில் ஒரு பூவோ பழமோ நிவேதனமோ வைத்து ஆராதிக்கையில் வேண்டுபவனும் வேண்டப்படுபவனும் ஒரே நிலையில் நிறுத்தப் படுகிறார்கள்.சிலையோ படமோ, தன உள்ளத்தின் மெல்லிய திரை இடப்பட்ட பிரதிபலிப்பேயாகும்.அந்நிலையில் எண்ணத்தின் வாயிலாக அகமும் புறமும்
ஒன்றரக்கலந்து, தேடுபவனும் தேடப்படுபவனும் ஒன்றாகிறது .இந்நிலையில் ஒரு
கண்ணாடி முன் அமர்ந்து "நீதான் அது" என்று தன பிரதி பிம்பத்தைப் பார்த்து சொல்ல முடிந்தால் படம் சிலை பிம்பம் எல்லாம் ஒன்றுதான்
நெல்லை உங்கள் பதில்கள் செம. நான் நினைக்கும் சொல்ல வந்த கருத்துகளைச் சொல்லிவிட்டீர்கள். இரண்டு கருத்துகளுமே...ஆர்ட் ஆஃப் லிவிங்க் அனுபவம் கிடையாது என்றாலும்....ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இறை இருக்கிறான் அவன் மீது அன்பு செலுத்துவது யெஸ் அதுதானே அன்பே சிவம்!...
நீக்குஉடனே கில்லர்ஜிக்கு கேள்வி வரும் அப்படினா என்று சமீபத்திய சில கிராதர்களைப் பற்றி...
அதற்கும் பதில் ஒவ்வொருவர் உள்ளத்திலும் கடவுள் பாதி மிருகம் பாதி தான் இதில் நாம் எந்த குணங்களை நல்ல பயிற்சிகளால் குணங்களால் நம்முள் மேன்மைப்படுத்தி விதைத்து வளர்க்கிறோம் என்பது. இதைத்தான் ஒரு குறியீடாக நம் புராணங்களில் புராணம் என்றில்லை எல்லா கதைகளிலுமே ஒரு ஹீரோ ஒரு வில்லன்...அதாவது பாசிட்டிவ் நெகட்டிவ்...எல்லோருள்ளும் இந்த இரண்டுமே இருக்கும் நாம் எதை வளர்த்துக் கொள்கிறோம் என்பதுதான் அது..
கீதா
திரு.நெ.த.
நீக்குஅற்புதமான கருத்து.
(வெளியூர் ஃப்ரம் செல்)
திரு.ஜியெம்பி. ஐயா
நீக்குதங்களின் வருகைக்கு நன்றி.
திருமிகு.தில்லை அகத்தாரின் அருமையான கருத்துரைக்கு நன்றி
நீக்குதில்லையகத்து கீதா ரங்கன் - //ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறைவன் இருக்கிறான்// - சரி. நான் எழுதியிருக்கிறேனே தவிர, நான் முழுமையா ப்ராக்டிஸ் செய்ததில்லை. அந்த நிலைக்குப் போகணும் என்று ஆசை.... ஆனால் பிறந்த வளர்ந்த குணம் அப்போ அப்போ என்னை ஆக்கிரமிக்கிறது.
நீக்குஅதுனால எழுத்தைப் படித்துவிட்டு, 'இவர் அப்படித்தான் எல்லோரிடமும் அன்பு செலுத்துவாரோ' என்று நினைத்துவிடாதீர்கள் ஹா ஹா ஹா (ஆனால் நீங்கள் அப்படி இல்லை என்று தோன்றுகிறது, அதுவும் உங்கள் எழுத்தைப் படித்து)
என்னாது நெ.தமிழன் எல்லோரோடும் அன்பு செலுத்த மாட்டாரோ?:) அதுதான் நேக்கு அப்பவே தெரியுமே:) ஹா ஹா ஹா..
நீக்குஉங்களுக்கு தெரியுமா ?
நீக்குரொம்ப ஆராய்ந்து பார்த்தால் பைத்தியம் பிடிக்கும்
பதிலளிநீக்குஆகவே இத்துடன் நிறுத்தினேன் கவிஞரே...
நீக்குசீரியல்கள் நிறையவே பார்ப்பீர்கள் போல அனுமானுக்கு குவிழ்ந்த வாயும் வாலுமுண்டு ஆனால் பெண்வானரங்களுக்கு எதுவும்கிடையாது ஏன் என்றுயோசித்தீர்களா
பதிலளிநீக்குஐயா எனக்கு இந்த பழக்கமே கிடையாது. இலவசமாக ஒட்டுக்கேட்டு, ஓரமாக பார்த்ததால் வந்த பதிவு.
நீக்குவால் விடயம் தெரியவில்லை ஐயா.
நீங்க தமிழ் சீரியலைப் பார்த்து ரொம்பக் கெட்டுப் போயிட்டீங்க போல! :)))) ஆனால் ஹிந்தியில் வருவதைத் தான் தமிழில் மொழி மாற்றம் செய்யறாங்கனு கேள்வி! இதை விட ஒண்ணு வருதே ஏழு மணிக்கு "மாயா"னு அதை விட மோசமான தொடர் வேறே ஏதும் இருக்காது! :( நல்லவேளையா அந்த நேரம் தோசை வார்த்துக் கொண்டோ, சப்பாத்தி பண்ணிக் கொண்டோ, உப்புமா செய்து கொண்டோ இருப்பேனோ, பிழைச்சேன்! :)))) ஆனாலும் வசனங்கள் காதில் விழத்தான் செய்கிறது.
பதிலளிநீக்குஅதுவும் அந்த மாயாவில் மனோபாலாவை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ரொம்.......பப் பொறுமை வேண்டும். நான் ஆரம்பித்துவிட்டு நிறுத்தி விட்டேன். பாஸ் அவ்வப்போது தொடர்கிறார். இயற்கைக்கே பொறுக்காமல் ஏதாவது ஒருவகையில் தடங்கல் வந்து விடும்!
நீக்குஒன்று சொல்லவேண்டும். பெயர் போடும்போது நரசிம்மன் என்று போட்டார்கள். இவரிடம் 121 இல் சொன்னேன். மாற்றி விடலாம் என்றார். இப்போது நரசிம்மா என்றுதான் வருகிறது!
திருமிகு.திருச்சி
நீக்குஎன்னைப்போயி இப்படி சொல்லலாமா ? வசனங்கள் காதில் விழுது பிறகு யாருக்காக... டி.வி... ஓடுது.
ஸ்ரீராம்ஜி நீங்களும் சீரியல் பார்க்கிறீங்க....
நீக்குஅதே அதே.. நான் பார்பதில்லை எனச் சொல்லிச் சொல்லியே ஸ்ரீராம் சிரியல் பார்க்கிறார்ர்:).. அஞ்சுவைப்போலவேதேன் ஹா ஹா ஹா ஹையோ மீ ரன்னிங்:))
நீக்குநீங்கள் பார்ப்பது உண்டா ?
நீக்குநோ...................................................................... நான் சீரியல் பார்ப்பதில்லை. நரசிம்மாவுக்காகப் பார்க்க ஆரம்பித்து அதையும் நிறுத்தி விட்டேன் / டோம்!! மனோபாலா... நறநறநறநறநற....
நீக்கு
நீக்கு// ஸ்ரீராம்ஜி நீங்களும் சீரியல் பார்க்கிறீங்க..//
இல்லை. நண்பருக்காக ஆரம்பித்ததையும் தாங்க முடியாமல் நிறுத்தி விட்டேன். இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழும் மந்திரவாதி வில்லன் ஒரு இளைஞனோடு சினிமா போல டிஷ்யூம் டிஷ்யூம் என்று சண்டை போடுகிறார்.... அந்தத் தொடர் எரிச்சலூட்டியது.
நானும் ஸ்ரீராம் :0 நரசிம்மா அவர்களின் ஹிந்து பேப்பர் கட்டுரைகளை வாசிச்சிட்டு உங்க ப்ளாகிலும் அவர் பற்றி சொன்னதில் முதல் எபிசோட் மாயா பார்த்தேன் எது வரைக்கும் தெரியுமா ? அந்த பணிப்பெண்ணின் உடையை மேஜிக் செஞ்சி மாற்றுவார் மனோபாலா .அதோட ஸ்டாப்ட் .வெறுத்துப்போச்சு போர் :)
நீக்குஎனக்கு யூ டுயூப் வீடியோஸ் பற்றி சொல்லித்தந்ததே இந்த மியாவ்த்தான் .நான் சீரியலெல்லாம் பார்ப்பதில்லை :)
ஆனா சீரியல் எவ்ளோ பெட்டர்// பறைவதெல்லாம் கள்ளத்தை// பார்ப்பதை விட .
ஸ்ரீராம்ஜி மாயா இப்படியும் ஒரு சீரியலா ? இவ்வளவு விளக்கம் தர்றீங்களே...
நீக்குஅப்புறமா இந்த உம்மாச்சிகள் எல்லாம் கலர் கலரா வர விஷயம்! நாராயணன், நாராயணி இருவரும் ஒருவரே என்பதே பொதுவான கருத்து! அந்த அந்த நேரத்துக்கு ஏற்றாற்போல் நாராயணனாகவும், நாராயணியாகவும் வருகிறார்கள்.இந்த நாராயணி தான் யோக மாயா என்பார்கள். இவள் ஆதி பராசக்தியிடமிருந்து வந்தவள் என்பார்கள். அதோடு இல்லாமல் ஆதி பராசக்திக்கும் பத்து அவதாரங்கள் உண்டு. ஒவ்வொரு அவதாரத்துக்கும் ஒவ்வொரு பெயர். ஒவ்வொரு நிறம், உடைகள், அணிகலன்கள், பலாபலன்கள்! இவற்றைத் தான் தசமஹா வித்யா என்பார்கள்! இதில் காளியாக வரும்போது கருமை நிறத்திலும் மாதங்கியாக வரும்போது பச்சை நிறத்திலும், கௌரியாக வரும்போது பொன்னிறத்திலும் காணப்படுவாள். இது அந்த அந்த வித்யாமாதாவின் யோகநிலையில் எங்கே இருப்பார்கள் என்பதைப் பொறுத்து! உதாரணமாக மூலாதாரத்தில் பாலாதிரிபுர சுந்தரி! அதே போல் ஒவ்வொரு ஆதாரத்துக்கும் ஒவ்வொரு தேவி. அந்த ஆதாரத்தைப் பொறுத்து தேவியரின் நிறம், குணம், உடைகள், வழிபடுவதின் பலன்கள் அமையும்.
பதிலளிநீக்குதங்களது விசாலமான ஆன்மீக கருத்துரைகளுக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகடவுள் வேடமிடுகிறவர்களை கண்டால், மனது இப்படித்தான் நினைக்க தோன்றுகிறது என்பதை விளக்கும் பதிவு. பக்தியை தூண்டும் விதமாக அவர்கள் நடித்தால்,இயல்பாக நம்முள் தோன்றும் பக்தியோடு பார்த்துப் பரவசமாகலாம். ஆனால், உலகில் யுகயகமாக நம்மையும் மீறி ஒரு சக்தி உள்ளது. அதைதான் நாம் கடவுளாக போற்றித் துதிக்கிறோம். மனிதனுக்குள்ளும் இருக்கும் ஜீவனையும் கடவுளின் பிரதிநிதியாக நினைப்பதால், மனிதாபிமானங்கள் ஒரளவு குறையாமல், நீடிக்கிறது. பதிவு தங்கள் பாணியில் அருமை. சிந்தனை பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
நீக்கு😄😄
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குதொலைக்காட்சியில் வரும் கடவுளை ஆராயகூடாது.
பதிலளிநீக்குபார்க்கபிடிக்கவில்லை என்றால் பார்க்காமல் விட்டு விட வேண்டும்.
புராணம், வேடங்களை ஆராய்ந்தால் கடவுள் பக்தி போய்விடும்.
கோமதிக்கா டிட்டோ ஹைஃபைவ் அக்கா...யெஸ் யெஸ்
நீக்குஅது இந்த அண்டத்தில் இருக்கும் மாபெரும் சக்தி!!! அதை யாரும் கண்ணுற்றிருக்க முடியாது. உணரத்தான் முடியும். அப்துல்கலாம் அவர்களின் ஒரு கதை உண்டு கடவுள் பற்றியது அவருக்கும் ஒரு ப்ரொஃபசருக்கும் நடந்த உரையாடலாக .....அது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று
கீதா
திருமிகு.கோமதி அரசு
நீக்குதங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.
வருக அப்துல்கலாம் பற்றி சொன்னதை படித்ததாக நினைவு.
நீக்குசண்டை போடணும்னா கோபம் வரணும். எனக்குக் கோபத்துக்குப் பதிலா சிரிப்புத்தான் வருது.
பதிலளிநீக்குநாம் நமக்காகவும் சக மனிதர்களுக்காகவும் கவலைப்படுறதைவிடக் கடவுளுக்காகத்தான் அதிகம் கவலைப்படுறோம்!!!!!
கடவுளுக்காக கவலையா ? திருப்பதியில் பெருமாள் பட்டினியாக இருப்பதாக சமீபத்தில் தீட்சிதர் கவலைப்பட்டாரே...
நீக்குஎன்மீது கோபப்பாடாதமைக்கு நன்றி.
அது ஒரு அன்பின், பக்திப் பரவசத்தின் வெளிப்பாடு ஐயா, உண்மையில் கடவுள் சாப்பிடவா செய்கிறார்? எல்லாமே மனித குலத்துக்காகக் குலம் தழைக்க ஆண்டவனால் அருளப்பட்டவை! அவற்றை நாம் இவ்விதம் செய்வதன் மூலம் நம் நன்றியை வெளிப்படுத்திக் கொள்கிறோம். சிவபூஜை தொடர்ந்து செய்பவர்கள் எக்காரணத்தினாலாவது வெளியே செல்ல நேர்ந்தால் மீண்டும் வீட்டுக்கு வந்து குளித்து பூஜை செய்து தன் கைகளால் செய்த அன்னத்தை நிவேதனம் செய்யாமல் ஒரு கவளம் கூடச் சாப்பிட மாட்டார்கள். இதெல்லாம் ஓர் அன்பின் வெளிப்பாடே!
நீக்குதங்களது விளக்கவுரைக்கு நன்றி.
நீக்குஅலைபேசியில் டைப்பினேன். சரியாக வரவில்லை!
பதிலளிநீக்குசரியே...நண்பரே.
நீக்கு"சினிமா என்பது ஒரு தொழில் . டைரக்டர் சொல்றபடிதான் செய்யணும் , சொந்த வாழ்க்கை வேறு . சம்பந்தமில்லாமல் ரெண்டையும் போட்டுக் கொழப்பிக்கப் படாது " என்றெல்லாம் அட்வைஸ் பண்ண மாட்டேன் . அதனாலே தானே ஒரு சுவாரசியமான பதிவு கிடைச்சது .
பதிலளிநீக்குபதிவை சுவாரஸ்யம் என்றமைக்கு நன்றி.
நீக்குஅந்தந்த பிரதேசங்களில் வாழும் மக்களின் ஆடை அலங்காரங்களைத் தான் ஆண்டவனுக்கும் அலங்கரித்துப் பார்க்கின்றார்கள். கதா நாயகர்களும் நாயகிகளும் அவ்வண்ணமே ஆடை தாங்கி அருள் பாலிக்க வருகின்றனர்.
பதிலளிநீக்குநாயக, நாயகியின் அருள் பலன் பெறுமா நண்பரே...?
நீக்குசிவன் பார்வதி இவர்கள் தென்னாட்டவர்கள் மற்றும் வடநாட்டவர் கற்பனையில் எப்படி இருப்பார்கள் என்று விவரித்த விதம் நகைச்சுவை என்றாலும் தொக்கி நிற்கும் கேள்விக்கு என்ன பதில்? சைவ ஆகமங்கள் (மொத்தம் 28. தற்போது சில ஆகமங்கள் மட்டும் கிடைத்துள்ளன.இவை 25 மகேஸ்வர மூர்த்தங்கள் எப்படியெல்லாம் சித்தரிக்கப்படவேண்டும் என்று வரையறை செய்துள்ளன.
பதிலளிநீக்குநண்பரின் விரிவான கருத்துரைக்கு நன்றி.
நீக்குஆகா...அக்கம்பக்கத்தில் விசாரித்து பேயை தெரிந்தது போல....அந்த சீ..வனையும்..அந்த பார்...வதியையும் கேட்டு பார்த்திருக்கலாம்...சீரியல் கணக்குபடி பார்த்தால்.........
பதிலளிநீக்குஇனி அதையும் விசாரிக்கணும் நண்பரே...
நீக்குஅண்ணே நீ இன்னும் பச்சை மண்ணாவே இருக்கியே! இது செல்பி காலம் அதான் சாமியும் சாத்தானும் ஃபுல் மேக்கப்ல இருக்குதுங்க.
பதிலளிநீக்குஅடடே... இப்படியும் இருக்கிறதா ?
நீக்குமுகம் பார்த்து குறைகளை சொல்லி ஆறுதல் பெற ஆள் வேணும்ன்னுதான் இப்படிலாம் உருவகப்படுத்தி இருக்கோம். இல்லாட்டி, எதுக்கு இத்தனை செலவு செஞ்சு காஸ்ட்யூம் டிசைன் பண்ணி அழகு படுத்தி வச்சிருக்கோம்.
பதிலளிநீக்குஎப்படியோ இறைசக்தி மனிதகுலத்தை வாழவைக்கட்டும்.
நீக்குசீரியல் எல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க ஜி! பார்த்தா இப்படித்தான்.... நான் டி.வி. பார்க்கறதே இல்லை - வீட்டில் டி.வி.யே இல்ல!
பதிலளிநீக்குகேள்விகள் ஸ்வாரஸ்யம்.
சத்தியமாக நான் சீரியல் பார்ப்பதில்லை ஜி
நீக்கு