இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜூலை 29, 2018

ஆயிரம் அர்த்தங்கள்

வர்களை பார்த்தவுடன், சட்டென சிரிப்பவரா நீங்கள் ? அப்படியென்றால் உங்களுக்கு விரிவான, உயர்வான மனதை இறைவன் கொடுக்கவில்லை என்றே பொருள், மாறாக சிந்தித்து பார்த்தீர்களானால் நல்ல எண்ணமுள்ளவர், நன்றி மறக்காதவர், ஆம் சில விசயங்களை வைத்தே சிலரை கணிக்க முடியும் என்பது உண்மைதான், சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் வரும் வசனம் கைபேசியின் ஒலியோசையை வைத்துக்கூட ஒருவரது குணதியசங்களை கணிக்க முடியும், என கசாநாயகி கசாநாயகனிடம், சொல்வார். ஆம் இதுவும் ஓரளவு உண்மையே உணர்வு என்பது எல்லா ஜீவராசிகளுக்கும் இறைவன் கொடுத்துள்ளான், அப்படியிருக்க இவர்களும் மனிதர்கள்தானே இவர்களுக்கும் ஒரு வாழ்க்கை வேண்டுமே...

இந்த பெண்மணியை நமது சகோதரியாக நினைத்துப்பாருங்கள் உங்களுக்கு சிரிப்பு வராது, மனதுக்குள் இறைவனுக்கு நன்றி சொல்லத் தோன்றும், இதைவிட இந்த சகோதரரை நீங்களாக நினைத்துப் பாருங்கள் ? ? ? என்ன கசக்கிறதா ? ஆம் உண்மையின் சுவை கசப்பானதே... இறைவன் நம்மை எத்தனை உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறான் என்பது புலப்படுமே ! தனக்கு தனக்குனா சரீரம் சாரீரம் பாடும் இதுவும் உண்மைதான். ஊனமுற்றோர்களை உதாசீனப்படுத்தாதீர்கள், இரண்டு கை, கால்களும் உள்ள உழைக்காத வாழைப்பழ சோம்பேறிகளை விட ஊனமுற்ற உழைப்பாளி உயர்ந்தவரே...

இரண்டு கைகளும் இல்லாத காரணத்தால், கால்களை கொண்டு எழுதுவோர் உண்டு, தனக்கென தானே ஸ்டேரிங் உருவாக்கி கால்களால் கார் ஓட்டும் 23 வயது வாலிபன் உண்டு, வாயால் தூரிகை பிடித்து ஓவியம் தீட்டுவோர் உண்டு, ஒரு கை இல்லாத மண்வெட்டி தொழிலாளி உண்டு, பிறவியிலேயே கண் இல்லாத எலக்ரோனிக் மெக்கானிக்கர் உண்டு, ஒரு கால் இல்லாமல் தினம் Abu Dhabi to Sharjah Taxi Trip  அடிக்கும் எனது பாக்கிஸ்தானி நண்பரும் உண்டு, (Automatic Carக்கு மற்றொரு கால் தேவையில்லை என்பது வேறு விசயம்) இன்னும் சொல்லப் போனால் இதயமே இல்லாமல் எத்தனையோ பேர் வாழும் இந்தப் பூமியில் இறைவன் உனக்கு நல்ல (?) இதயத்தை கொடுத்திருக்கின்றாரே...


இவர்களை எல்லாம் உன் மனக்கண்முன் நிறுத்திப்பார் நீ பாக்கியசாலியென சந்தோஷம் கொள்வாய். இனியும் நீ இவர்களை தாழ்வு மனப்பான்மையுடன் காண்பாயெனில் உனது ஒரு கையையோ, அல்லது ஒரு காலையோ, மடக்கி கட்டிக்கொண்டு ஒரேயொருநாள் வாழ்ந்துபார் ஆயிரம் அர்த்தங்கள் உனக்கு விளங்கும்.

59 கருத்துகள்:

  1. பதிவில் ஆயிரம் அர்த்தமல்ல அதற்கும் மேலேயும் உள்ளன அர்த்தங்கள்,
    அறியாப்பருவத்தில் இவர்களைப்பார்த்தால்
    என்ன செய்தேனென்றுத் தெரியவில்லை,
    இப்போதெல்லாம் ஊனமுற்றோரைக் கண்டால்,
    மனதில் ஒரு வலி, ஆனால் அவர்களிடம்
    காட்டிக்கொள்ளமாட்டேன்,
    காரணம் ஊனமுற்றோர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம்,
    யாராவது இரக்கப்பட்டால் அவர்களுக்கு பிடிக்காது.
    தொலைவாக இருந்து ஏதாவது உதவமுடியுமா
    என்று பார்ப்பது என்னால் மாற்றமுடியாதது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  2. சிரிப்பு எப்படி வரும் ஜி? இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளாவது இவர்கள் போல இல்லாமல் பிறக்கவேண்டும் என்கிற பிரார்த்தனை வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது பிரார்த்தனைகள் அருமை ஸ்ரீராம்ஜி

      நீக்கு
  3. அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.. அதனினும் அரிது கூன் குருடு செவிடின்றிப் பிறத்தல்...

    இதை எவ்வளவு மனிதர்கள் மனதார உணர்வார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா நல்லவேளை ஸ்ரீராம் கடசிச் சொல்லைச் சொல்லாமல் விட்டிடார்:) சொல்லியிருந்தால் அவ்ளோதேன் பொயிங்கியிருப்பேனாக்கும் ஹா ஹா ஹா:)

      நீக்கு
    2. சில மனிதர்கள் சில உறுப்புகளை இழந்ததும் உணர்கின்றனர்.

      நீக்கு
    3. அதிரா பொங்கல் வேண்டாம் சப்பாத்தி போதும்.

      நீக்கு
  4. இவர்களுக்கும் இவ்வுலகில் வாழும் வகையினை தந்திருக்கின்றான் இறைவன்...

    பள்ளி நாட்களில் இருந்தே
    உரு கண்டு எள்ளாமல் வாழப் பழகியிருக்கிறேன்...

    எனது பெரியப்பா ஒருவர் பேசும் திறனற்றவர்...

    எனது நண்பர்களில் ஒருவர்
    மடங்கிய பாதத்தை உடையவர்...

    நானே சற்று குள்ளம் தான்...
    இதில் எதற்காக பிறரை நோகச் செய்வது?....

    எல்லாரும் இன்புற்று வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      தங்களது அழகிய கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  5. இவர்கள் அனைவரும போற்றுதலுக்கு உரியவர்கள் நண்பரே
    நல்ல கைகளையும், கால்களையும் வைத்துக் கொண்டு, நல்ல மனம் இன்றி, நல்ல எண்ணங்கள் இன்றி வாழும், மனிதர்களுக்கு இடையில், வாழ்வில் நம்பிக்கை கொண்டு, நமக்கெல்லாம் முன்னுதாரனமாக விளங்கும் இவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உண்மையான கருத்து வருகைக்கு நன்றி

      நீக்கு
  6. உடல் ஊனமுற்றோரைக் கண்டு பரிதாபப் படுவதைபெரும்பாலும் அவர்கள் விரும்புவதில்லை மனதில் ஊனமில்லாமல் இருப்பதே அவசியம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இவர்களில் பெரும்பாலானவர்கள் தன்னம்பிக்கைவாதிகள்தான் ஐயா

      நீக்கு
  7. உணர்ச்சிபூர்வமான வார்த்தைகள்...வரிகள். கல் நெஞ்சையும் கரைய வைக்கும் ஆழ்மன வெளிப்பாடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்துரைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  8. கை கால் நன்றாக இருப்பவர்களின் தலைக்கனத்தின் முன்னால் இவர்களின் வாழ்க்கை ஒரு நல்ல பாடம் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  9. ஏன் கில்லர்ஜி தப்பாகவே நினைக்கிறீங்க?.. சிரிப்பவரா நீங்க எனக் கேட்டுவிட்டு.. திட்டிக்கொண்டே போறீங்க .. அடுத்தவர்களை அப்படி தப்பாக நினைச்சுக் கேட்பதே முதலில் தப்புத்தானே.. பொஸிடிவ்வாக நினைக்கோணும்.

    இக்காலத்தில் ஆருமே இப்படியானவற்றைப் பார்த்துச் சிரிப்பதில்லை, நிறையவே மக்கள் பக்குவப்பட்டிருக்கிறார்கள்.. இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கு, பரிதாபப் படுவதுகூடத் தப்புத்தான்.. அதுவும் அவர்களைப் பாதிக்கும்.. அவர்களும் சாதாரண மனிதர்கள்தானே, விரும்பிக் கேட்டா இப்படி பிறவி எடுத்தார்கள் இல்லைத்தானே...

    நல்ல அழகிய ஜோடி.. நீடூழி வாழட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா நான் யாரையும் திட்டவில்லையே...

      ஊனமுற்றோரை நொண்டி என்று சொல்பவர்களைக்கூட நான் எதிர்ப்பவன் நான்.

      நீக்கு
    2. அதிரா உங்கள் கருத்தே எனக்கும் தோன்றியது. அந்தக் கேள்வி வேண்டாம் என்றே தோன்றியது எனக்கும்.

      கீதா

      நீக்கு
    3. இதற்கு பதில் கீழே கொடுத்துள்ளேன்.

      நீக்கு
  10. அந்த மணமக்கள் வாழ்க வளமுடன்.
    மனவலிமையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் நல்ல உள்ளங்கள்.
    தோற்றத்தில் என்ன இருக்கு? மனம் நன்றாக இருக்க வேண்டும்.

    நல்ல கால்,கை இருப்பவர்கள் தினம் வாழ்க்கையில் குறைபட்டுக் கொண்டே இருக்கிறவர்கள் இவர்களைப் பார்த்து நம்மை எப்படி நல்லபடியாக படைத்து இருக்கிறார் ஆண்டவர் அவருக்கு காலம் எல்லாம் நன்றி சொல்லவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அருமையாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  11. பிறவி குறைப்பாடு இருக்கவுங்களை பார்த்து சிரிக்கவும் மாட்டேன். அனுதாப பார்வை பார்க்கவும் மாட்டேன். உதவி தேவைப்பட்டால் செய்வேன். இல்லன்னா, மற்றவர்களை எப்படி நடத்துவேனோ அப்படிதான் நடத்துவேன்., பார்ப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நல்லகொள்கை வருகைக்கு நன்றி

      நீக்கு
  12. இவர்களைப் பார்த்தவுடன் நான் சிரிக்கவில்லை. சிந்தித்தேன். இவர்களுக்கு மனத்துணிவு நம்மைவிட அதிகமாகவே உண்டு என்பது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  13. கில்லர்ஜி, இதில் இருவரும் பிறவிக்குறைபாடு உடையவங்க. இதைவிட, ஒரு பிறவிக்குறைபாட்டுடையவரை மணந்துகொண்ட நார்மல் பெர்சன்ஸ் பலபேர் இருக்காங்க. அவங்கள்லாம் பாராட்டுக்குரியவங்க.

    அடுத்தவங்க கமெண்ட்ஸ் பற்றி ஏன் கவலைப்படணும்? அவங்க அவங்க வாழ்க்கை நல்லா இருந்தாப் போதாதா? இயற்கையாக பிறருக்கு ஏற்படும் குறைபாடு நமக்கு அவங்கமீது அதிக அன்பு செலுத்த ஒரு காரணமாக இருக்கணும். இல்லையா கில்லர்ஜி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை அவர்கள் தியாகிகள்தான்.
      எனக்கு ராணுவத்தில் இறந்தவர்களின் மனைவிக்கு மறுவாழ்வு கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது

      ஆனால் இப்பொழுது செய்வது தியாகமாகாது ஆகவே அந்த எண்ணமும் அழிந்து விட்டது.

      நீக்கு
  14. மணமக்களுக்கு வாழ்த்துகள். அவங்க குழந்தைகள் ஆரோக்கியமாகப் பிறக்கப் பிரார்த்தனைகள். மற்றவர் நம் உருவைக் கண்டு எள்ளுவது எத்தனை வலிதரும் விஷயம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

    பதிலளிநீக்கு
  15. அதிரா சூப்பர்.
    ஆமாம் தேவகோட்டையாரே,
    யாரும் சிரிப்பதில்லை. எங்களிடமே ஊனமுற ஒரு பெண் தான் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டாள். அவளைப் பார்த்து யாரும் பரிதாபப்பட்டால் சினம் கொள்வாள். ஜெயித்தே காட்டினாள்.
    அனைவரும் நலமுடன் இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வல்லிம்மா:)) கில்லர்ஜிக்கு எப்பவும் அடுத்தவர்களைத் திட்டாட்டில் நித்திரையே வராது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... ஹா ஹா ஹா மீ தேம்ஸ்க்கு ஓடிடுறேன்ன்:))

      நீக்கு
    2. தங்களது கருத்துரைக்கு நன்றி அம்மா.

      நீக்கு
    3. அதிராவை நான் என்று திட்டினேன் ?

      நீக்கு
    4. ஹையோ கில்லர்ஜி, என்னை எதுக்குத் திட்டப் போறீங்க நீங்க ஹா ஹா ஹா ..

      நீக்கு
    5. ஊரணி மேட்டரை வைத்தே திட்டலாமே...

      நீக்கு
  16. தற்பொழுது நானும் அவர்களுடன் சேர்ந்துவிட்டேன். காது கேட்பதில் குறைபாடு உள்ளவனாக.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் இறைவனின் சித்து விளையாட்டு நண்பரே

      நீக்கு
    2. நாட்டுக்கு நாடு ,தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு..இருக்கும் இறைவனில் எந்த இறைவனின் சித்து விளையாட்டு நண்பரே....

      நீக்கு
    3. இறைவன் எங்கும் இருப்பார். நித்தி போன்ற மகான்களிடமும்...

      நீக்கு
  17. நல்ல பதிவு..

    அவர்களும் நம்மில் ஒருவரே என்ற எண்ணம் போதும் அவர்களை சந்தோஷபடுத்த..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நல்ல கருத்து வருகைக்கு நன்றி.

      நீக்கு
  18. ஆயிரம் அர்த்தங்களை சொல்லும் புகைப்படம் இது! மணமக்கள் ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்து நிறைவான குழந்தைகளைப்பெற இனிய வாழ்த்துக்கள்!
    மனதில் ஆயிரம் ஊனங்களை சுமந்து கொன்டிருக்கும் சாதாரண மானிடர்களை விட ஊனங்களை வெல்லும் மன வலிமை கொண்ட இவர்கள் மேலானவர்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அருமையான கருத்துரை தந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  19. நீங்கள் சொல்வது 100ⁿஉண்மை . நானும் பல முறை சில உடல் அசௌகளரியங்கள் வரும்போது அப்படித்தான் நினைத்துக் கொள்வேன் . குறைபாடு உள்ளவர்கள் மீது கருணை காட்டாவிட்டாலும் பரவாயில்லை ,சிரிப்பது என்பது Too much

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  20. கில்லர்ஜி எப்படிச் சிரிப்பு வரும் ஜி?! மனம் வேதனைப்படும். மட்டுமல்ல இவர்கள் சந்தோஷமாக இவ்வுலகில் வாழ்ந்து இவர்களின் சந்ததிகள் எக்குறையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றே இறைவனிடம் வேண்டத் தோன்றும்.

    கீதா: எங்களின் அக்கருத்துடன்.....கில்லர்ஜி அந்த ஆரம்பக் கேள்வியே வேண்டாமோ என்று தோன்றியது. இப்போதெல்லாம் மாற்றுத் திறனாளிகள் என்றுதான் எல்லோருமே சொல்லுறாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கால் ஊனமுற்ற ஒருவர் சாலையை கடக்க முயன்றபோது அவரை "நொண்டிப்பயலே சாவுகிராக்கி" என்று ஒரு ஆறறிவு மோசமான வார்த்தைகளால் திட்டியபோது எழுந்ததே இப்பதிவு.

      ஆக இன்னும் இவர்களை புரிந்து கொள்ள முயலாதோர் நிறைய உண்டு.

      நீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    நல்ல மனங்கள் வாழ்க.. அவர்கள் இருவரும் மனமொப்பி நீண்ட வருடங்கள் வாழ பிரார்த்திக்கிறேன்.

    இவர்களை பார்க்கும் போது நல்லபடியாக நம்மை படைத்த ஆண்டவனுக்கு நன்றி கூறத் தோன்றும். ஆனால் இவர்களை இப்படி குறையுடன் படைத்து விட்டாயே.. ஏன் இத்தனை பாரபட்சம்? என்ற சிறு கோபமும் வரும். அவர்களது திறமையை கடவுள் வேறு விதத்தில் பிரகாசிக்க செய்வார் என்ற நம்பிக்கைதான் கூடவே ஒரு ஆறுதல். கண்டிப்பாக அவர்கள் நம் அனுதாபத்தை மட்டும் எதிர்பார்க்க மாட்டார்கள்... அது ஒரு ப்ளஸ் பாயிண்ட் அவர்களிடம்... நல்ல பதிவை தந்தமைக்கு நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அழகாக விளக்கியமைக்கு நன்றி

      நீக்கு
  22. முதலில் அவர்களை அனுதாபத்தை வெளியில் காட்டாமல் உதவி செய்வதை தர்மம் செய்வதாக நினைக்காமல் சாதாரணமாக அவர்களை எதிர்கொள்வது அவர்களுக்கு நாம் கொடுக்கும் முதல் மரியாதை. நல்ல பதிவு தோழர்.

    பதிலளிநீக்கு
  23. //சொல்லப் போனால், இதயமே இல்லாமல் எத்தனையோ பேர் வாழும் இந்த பூமியில், இறைவன் உனக்கு நல்ல இதயத்தை கொடுத்திருக்கின்றாரே// எங்கேயோ போயிட்டிங்க ஜி.மணமக்கள் எல்லா நலமும் பெற்று வாழ்க பல்லாண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் அந்த இதயம் உறுதியில்லை (?) கவனித்தீர்களா ?

      நீக்கு