இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், நவம்பர் 21, 2018

சுமார் 847 ½ அடி



பதிவின் முந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக...

தைப் பார்த்து விட்டு அங்கிட்டுப் போனதும் கைத்தடிகள் கூடவே போவார்களே அவர்களிடம் கேட்பார்கள்.
இவன் யாரு ?
நம்ம மீசைக்காரர் இருக்காருல அவரு மகன் இவன் ஒரு வீணாப் போனவங்க.... வெத்து வேட்டு.

நண்பர்களே... நான் பலமுறை என் இனிய இந்தியாவுக்கு விடுமுறையில் வரும் பொழுது தேர்தல் சமயமாக அமைந்ததுண்டு அபுதாபியில் சிலர் என்னிடம் கேட்டு வாங்கிக் கொண்டவர்கள் உண்டு. அவர்களின் கேள்வி...
என்ன தேர்தலுக்கு ஊருக்கு போறீங்களோ ?  
நான் சொன்ன பதில்...

வேண்டாமே இங்கு காரணம் எனது மதிப்பை தங்களிடம் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை ஆனால் கேள்வி கேட்டவன் தனது வாழ்நாள் முழுவதும் யாரையும் மீண்டும் அந்தக் கேள்வி கேட்க மாட்டான் என்பது உறுதி பெரும்பாலும் நான் ஊருக்கு வருவது எனது அன்புச் செல்வங்களின் பள்ளி விடுமுறையே அந்த நேரத்தில்தானே தேர்தலும் வைப்பார்கள் இதற்கு நானா பொறுப்பு ?  

வேட்பாளர்களின் மனதைப்படிக்க அவர்களுடன் பழகித்தான் அறிந்து கொள்ளமுடியும் என்றால் அது மடமை மருத்துவம் படித்தவனும், சட்டத்துறையை படித்தவனும் பணத்தைக்கட்டி தலைமையின் காலடியில் தலையை வைத்து கோடி கோடியாக தேர்தல் செலவு செய்பவன் நாட்டுக்கு சேவை செய்ய அல்ல தனது வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே இதைப்புரிந்து கொள்வதற்குகூட நமக்கு சுயசிந்தனையின்றி கடமை என்று சொல்லி ஓட்டுப் போடுகின்றோம் ஏன் ஒருமுறை நிறுத்திப் பார்த்தால்தான் என்ன ? இப்பொழுது நான் முடிவு செய்து விட்டேன் நான் நோட்டு வாங்கும் குடிமகன் அல்ல நோட்டாவில் குத்தும் மகன்.

ஓட்டுப் பொடுவது ஜனநாயக கடமை என்று சொல்வோரே வாழ்வில் ஒரு முறையேனும் தாங்கள் தவறு செய்ததில்லையா ? நான் இதுவரை ஓட்டுப் போட்டதில்லை என்பதை பகிரங்கமாகவே அறிவிக்கின்றேன் இது தவறென்றால் இதை சட்டப்படி சந்திக்கத்தயார் ஒரு உயிரைக் காப்பாற்ற ஒரு பொய் சொல்லலாம் என்று சொன்ன காந்திஜியின் வாக்கை ஏற்றுக் கொள்பவன் இந்தக் கில்லர்ஜி ஆகவே நானும் இந்தத் தவறைச் செய்தேன் செய்வேன் காரணம் நான் நூறு சதவீதமும் உண்மையானவன் அல்ல !

எனது மாமா ஒருவர் வார்டு கவுன்சிலராக நின்றார் தேர்தல் வேலைகளை பலரும் செய்தார்கள் சொந்த பந்தங்களால் நானும் செய்யக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டேன் எனக்கு மனம் உறுத்தியது காரணம் தேர்தல் வேலையால் அவர்கள் வீட்டில் சிலமுறை சாப்பிடும் சூழல் ஆனால் நான்தான் தேர்தல் வேலை செய்வதை விரும்புவதில்லையே அது ஏனோ தெரியவில்லை எனக்கு மட்டும் தேர்தல் வேலை செய்வது சாலையில் நடந்து போகும் கிழவியை சேலையைப் பிடித்து இழுத்து பொது மக்களிடம் உதை வாங்குவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது இதனால் ஓட்டு கேட்க கூட்டமாக செல்லும் போது நான் மட்டும் கடைசியாக சுமார் 847 ½ அடி விட்டு நடந்து வருவேன் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் ஏதோ வேற்று கிரக மனிதன் போலவே தொப்பியை போட்டு மறைத்துக் கொள்வேன். தேர்தலும் வந்து நடந்து முடிந்தது மாமா அமோக வெற்றி மறுநாள் மாமா சொன்னார்.

பரவாயில்லை மாப்பிள்ளை எனக்காகவாவது ஓட்டெல்லாம் போட்டாயே..
நான் ஓட்டுப் போடலை.
ஏன் ?
எனக்காககூட எனது கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டேன் பின்னே உங்களுக்காக.. எப்படி .?

முறைத்து விட்டு போய் விட்டார் நான் நினைத்தால் பொய் சொல்லி இருக்கலாமே எனக்கு பொய் தேவையில்லை காரணம் நான் நானாக வாழ்பவன்.

முற்றும்.

35 கருத்துகள்:

  1. அன்பின் ஜி..

    நாமே ஒரு பொய்..
    நமக்கெதற்கு வேறொரு பொய்!...

    இது வேதாந்தம்..
    இன்னொரு சித்தாந்தம் - இது..

    நாமே ஒரு மெய்..
    நமக்கெதற்கு வேறொரு பொய்!..
    இதுதான் மெய்..
    இதுக்குத்தான் வைக்கணும் மொய்!..

    ( எப்படியோ தகர டப்பா நிறைந்தால் சரி..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      ஆஹா ரசிக்க வைத்த ஸூப்பர் சித்து.

      நீக்கு
    2. துரை அண்ணா அரசியலுக்கு/லில் கூட வேதாந்தமா.....ஹா ஹா ஆனா சூப்பர் அண்ணா...

      கீதா

      நீக்கு
  2. என்ன சீக்கிரமா முற்றும் போட்டாச்சு..
    இடைவேளை இல்லையா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி முந்தைய பதிவு சற்றே நீண்டு விட்டது ஆகவே தொடரும்... போட்டேன்.

      நீக்கு
  3. துளசிதரன் இப்ப தேர்தல் சமயமோ? தமிழ்நாட்டில்?

    கீதா: கில்லர்ஜி இதுதான் நல்லவர்கள் எல்லாம் போன பிறகு ஆண்டாண்டு காலமாக நடக்கும் ஒன்றாகிற்றே தேர்தல் அட்ராசிட்டிஸ்....ஏதேனும் புரட்சி வந்தால் மட்டுமே நாடு பிழைக்கும்..அதுவரை தேர்தலில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை ஏனென்றால் அந்தப் புரட்சி மக்களிடம் அல்லவா வ்ர வேண்டும்?..ஹா ஹா ஹா

    .மக்கள் நலம் பெறுவார்கள். அரசியலில் மக்களுக்கு நல்லது செய்யனும் என்று யார் நுழைகிறார்கள்...பணம் அள்ள நல்லதொரு வழி மனசாட்சியை கழட்டி வைத்துவிட்டு....அப்படியான கூட்டம் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் தேர்தல் வரப்போகிறதே...
      மக்களிடம் மாற்றம் வேண்டும் என்ற எண்ணமே மனதில் வராதபோது எல்லோரும் சேர்ந்தேதான் கஷ்டப்படணும்.

      நீக்கு
  4. அவரவர்க்கு அவரவர் கொள்கை. இதில் தப்பென்ன, சரியென்ன? கொள்ளைகள் நடக்குமிடத்தில் வாக்குதானே அளிக்காமல் இருக்கிறீர்கள்? இது தவறல்ல...

    ஆனால்,

    நோட்டாவிவிலாவதுநீங்கள் போடாவிட்டால் உங்கள் வாக்கு நீங்கள் நினைக்காத ஒரு இடத்துக்கு கள்ளத்தோணி எரிக் சென்று விடுமே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி இனி எமது வாக்கு நோட்டாதான்.

      நீக்கு
  5. மீசைக்காரர் மகனுக்கே இவ்வளவு பெரிய மீசை என்றால்...?

    ஹா.. ஹா.. ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது அப்பா பாரதியார் போலவே முறுக்கு மீசை வைத்திருந்தவர்.

      நீக்கு
  6. இருப்பவர்களிலேயே நல்லவர்களாகப் பார்த்துப் போடலாம். அவர் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ குறைந்த பட்சம் நம் வாக்கு வீணாகாது அல்லவா? நாங்க அப்படித் தான் செய்து வருகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருப்பவர்களிலேயே நல்லவர் என்றால் செலவு செய்யவழியின்றி இருக்கும் சுயேட்சைதான் இனி.

      நீக்கு
  7. ஸ்ரீராம் சொல்வது போல் நீங்கள் ஓட்டு போடவில்லை என்றாலும் உங்கள் ஓட்டு அளிக்கப்பட்டு விடும்.
    கீதா சாம்பசிவம் சொல்வது போல் இருப்பவர்களில் யார் நல்லவர் என்று பார்த்து ஓட்டு போடலாம்.

    நீங்கள் வாக்காளர் பெருந்தகை மக்களுக்கு சொன்னது அருமை. அரசியல்வாதி போல போட்டோ இருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ இனி நோட்டோவில் வாக்களிப்பேன்.

      நல்லவேளை இலங்கை அதிபர் ராசபட்சே என்று சொல்லவில்லை.

      நீக்கு
  8. இப்படியே இருங்க ஜி... நல்லது...

    பதிலளிநீக்கு
  9. வாக்குப் போடாமல் இருக்க வேண்டாம் நண்பரே
    இருப்பவ்ரகளிலேயே தங்களுக்கு நல்லவராகத் தோன்றும் ஒருவருக்கு
    ஓட்டுப் போடுங்கள் அவர் வெற்றிபெறா விட்டாலும் பரவாயில்லை,
    ஒரு நல்லவரை ஆதரிக்க ஆள் இருக்கிறார்கள் என்பதாவது வெளி உலகிற்குத்
    தெரியட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே எனது வாக்கை பிறர் உபயோகப்படுத்தாத வண்ணம் இனி தடுப்பேன்.

      நீக்கு
  10. நோட்டாவுக்குப் போட்டு வீணடிப்பதைவிட உள்ளவர்களிலேயே நல்லவர் ஒருவருக்குப் போட்டால், அவரைப் போன்ற நல்லவர்களாவது தேர்தலில் நிற்க முயலுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே நோட்டோவை வீண் என்று சொல்வது ஏன் ?

      அதை அரசமைப்பின் எதிர்ப்பு அணியாக பாருங்கள். கடந்த தேர்தலில் நோட்டோவுக்கு ஐந்தரை லட்சம் வாக்குகள் கிடைத்து இருக்கிறது.

      இது மக்கள் தெளிவின் அறிகுறி.

      நீக்கு
  11. அரசியல் தேர்தல் எல்லாம் ஒத்துவராத விஷயங்கள் தான். 847 1/2 அடி தூரத்தில் ஒதுங்கி நின்றதில் ஏதேனும் சூட்சமம் உள்ளதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இதன் முந்தைய பதிவை படிக்கவும் இது நிறைவுப்பகுதி.

      நீக்கு
  12. உங்களால் யாரையும் தேர்ந்தெடுக்க முடியாது நோட்டா முற்றினால் யாருக்கு பானில்லை தனிப்பட்ட வருக்கு ஓட்டு அளிப்பதைவிடௌமது கொள்கைக்கு ஓரளவாவது ஒத்து வரும் கட்சிக்குப் போடலாம் நமது அரசியல் வழியில்தேர்ந்தெடுப்பது என்பதுகஷ்டமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இந்த தேர்தல் முதல் நான் நோட்டோவுக்கு வாக்களிக்கப் போகிறேன்.

      நீக்கு
  13. தே்ர்தலுக்கு முன்ன என்ன நண்பரே..ஒவ்வொரு தேர்தலின் போதும்... சிந்திக்கத்தான் முயற்சி செய்கிறார்கள். பாவம் அவர்களை சிந்திக்கவிடாமல் மூடநம்பிக்கைகளும். சினிமா .டீவீ..அப்புறம் போலீசு, கேப்மாறி..மொள்ள மாரி போன்ற அரிய பெரிய சாதனங்களால் சிந்திக்க விடாமல் செய்து விட்டார்கள் நண்பரே........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் இருப்பினும் நம்மை நாம்தானே தீர்மானிக்கணும் நண்பரே...

      நீக்கு
  14. நம் கொள்கையில் நாம் தெளிவாக இருக்கும்போது யாரைப் பற்றியும் நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களின் போற்றத்தக்க மாண்பு எங்களை நெகிழவைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  15. மாமாவுக்கும் ஓட்டு போடாத உங்கள் கொள்கைக்கு தனி வணக்கம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது மகனே நின்றாலும் போட்டு இருக்கமாட்டேன், போடவும் மாட்டேன்.

      ஆனால் அவன் வெற்றி பெறவேண்டும் என்று நினைப்பேன் தந்தை என்ற நிலையில்...

      நீக்கு
  16. விரலில் ஒரு சின்ன மைக்கோடு வைக்கும் வைபவத்தினை வைத்து இவ்வளவு பெரிய விவரமான பதிவா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம்...
      விரலில் மை வைப்பதை இவ்வளவு சாதாரணமாக சொல்லிட்டீங்களே... நமது தலையெழுத்தையே தீர்மானிப்பது இந்த "மை"

      நீக்கு