அரசியல்வாதிகளை, நாட்டை
ஆளுபவர்களை நியாயமற்றவர்கள் என்றும், பணம் கோடி கோடியாக கொள்ளையடிக்கின்றார்கள்
என்றும் குற்றம் சொல்வோரே... உங்களிடம் சில கேள்விகள்.
அரசியல்வாதிகள் மட்டும் இந்த நாட்டில் எத்தனை
சதவீதம் பேர் இருப்பார்கள் ? அவர்களுக்கு ஓட்டுப் போட்டு நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும்
அனுப்பி வைக்கும் வாக்குரிமை பெற்றவர்கள் எத்தனை சதவீதம் இருப்பார்கள் ?
அந்தந்த கட்சிகளின் தொண்டர்கள் என்று சொல்கின்றார்களே
இவர்கள் எத்தனை சதவீதம் இருப்பார்கள் ?
இவர்கள் அனைவரும் நியாயமானவர்களா ?
இல்லையே ஓட்டுப் போட பணம் வாங்கும் நீ எப்படி
அவர்களை குற்றம் சுமத்த முடியும் ?
தொண்டர்களே நீங்கள் நியாயமானவர்களா ?
கண்டிப்பாக இல்லை காரணம் உனது தலைமையாளர் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கவில்லை என்று நீ உண்மையிலேயே நம்புகின்றாயா ? அப்படியானால் நீ இறைவனை வணங்காதே காரணம் நீ
நம்பிக்கை வைக்கும் இறைவன் உன்னை கண்டிப்பாக நாளை தண்டிப்பான் உன் மனசாட்சியை
தொட்டுச்.... வேண்டாம் உனக்கு மனசாட்சி இருக்க சாத்தியமில்லை.
உனது தலைவனோ தலைவியோ மக்கள் பணத்தை
கொள்ளையடிக்கவில்லை என்று நீ பெற்ற குழந்தைகள்மீது தலையில் அடித்து சத்தியம் செய்ய
முடியுமா ? ஒருவேளை முடியும் காரணம் பெரும்பாலும்
டாஸ்மாக் டார்கெட்டில்தானே நீ இருக்கின்றாய் இந்த சத்தியத்தின் வலிமை உனக்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை ஆகவே உன்னால் முடியும் நண்பா.
நம் நாட்டில் அரசியல்வாதிகள்,
சினிமாக்காரர்கள், கிரிக்கெட் வீரர்?கள்
அரசியல் பலம் படைத்த பணமுதலைகள், அடித்தட்டு மக்கள் இவர்கள் அனைவரும் சுகபோகமாக,
சந்தோஷமாக வாழ்கின்றார்கள் ஆனால் கில்லர்ஜியைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினர்தான்
வாழ்க்கையை கடத்துவதற்கு மேல்வாழ்க்கையும் போகமுடியாமல், கீழ்வாழ்க்கைகும்
போகமுடியாமல் அல்லோலப்படுட்டு வாழ்வைக் கடத்துகின்றார்கள் இவர்களால்
அரசியல்வாதிகளை தட்டிக்கேட்டும் பலம் இல்லை காரணம் சமூக கௌரவத்துக்கு கட்டுப்பட்டு
வாழ நினைப்பவர்கள் அந்த வட்டத்தை விட்டு வெளியே வரமுடியாது அடித்தட்டு மக்களுக்கு
அரசியல்வாதிகளை கேட்க வேண்டிய அவசியம் இல்லை காரணம் அவர்கள் ஐந்து வருடக் கூலியை
ஒரே நாளில் பெற்றுக்கொண்டு ராக்காயி ஆண்டாலும் ராமாயி ஆண்டாலும் எனக்கொரு
கவலையில்லே ஹை என்று போய் விடுபவர்கள் தொண்டர்கள் கேட்க மாட்டார்கள் காரணம்
மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் அதன் காரணமாய் சிந்திக்கும் திறன் கிடையாது
சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்கள் தனது மரணகாலம்வரை தனது தலைவன் தலைவியை விட்டு
வெளியே மாட்டார்கள் மேலும் தமிழன் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவன்.
இந்த இடத்தில் ஒரு விடயம் சொல்லக்
கடமைப்படுகிறேன் ஆம் மலையாளிகள் இந்த வகையில் அறிவாளிகள் தவறென்றால் மறுநொடியே
தலைமையைத் தூக்கி எறிந்து விடுவார்கள் அதாவது கேரளத்தில் பெரும்பான்மையானவர்கள்
இப்படித்தான்.
இப்பொழுது நடுத்தர வர்க்கத்தினருக்கு வருவோம்
இவர்களுக்கு எதிர்த்துக் கேட்கும் எண்ணம் இருந்து கொண்டே.....................
இருக்கும் அதாவது சுமார் 71 ஆண்டுகளுக்கும் மேலாக
இவர்கள் 98 சதவீதம் நியாயமானவர்கள் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்பது இவர்களின் சித்தாந்தம் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்
என்று எவனோ ஒருவன் சொல்லி மற்ற மொழிக்காரனை எல்லாம் வாழ்வதற்கு வழி வகுத்து
வைத்தானே அதைப் போலவேதான் இதுவும் ஆகவேதான் 71 ஆண்டுகள் கடந்தும்....... கடக்கும்.......
ஒரு மாற்றுச் சிந்தனைக்கு வர தயங்குபவர்கள்
சரி விடயத்துக்கு வருவோம் நாம் ஏன் இவ்வளவு காலமும் ஏமாந்து கொண்டே இருக்கின்றோம்
சரி நடந்ததை மறப்போம் இனியாவது நடப்பதை நினைப்போம் நாம் நோட்டு வாங்கி ஓட்டுப்
போடுவதை நிறுத்தி நோட்டாவை முழுமூச்சுடன் ஆதரித்தால் என்ன ?
நண்பர்களே... நண்பிகளே... இதுவரை என்
வாழ்வில் எந்தவொரு அரசியல்வாதிகளும் வார்டு கவுன்சிலர் முதல் ஜனாதிபதி வரை
என்னிடமிருந்து வாக்குப் பெற்றதில்லை தேர்தல் நேரங்களில் நிறைய போஸ்டர்களும்,
சுவர் விளம்பரங்களும், தட்டிகளிலும் உங்கள் ஓட்டு கோடரி சின்னத்திற்கே இந்த
மாதிரியாக எழுதி வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள் வேட்பாளர்கள் ஜால்ரா
கோஷ்டிகளுடன் வீட்டுக்கு வந்து சம்பந்திகளைப்போல் கும்பிட்டு வாக்கு கேட்பார்கள்
எனது வீட்டு வாசலுக்கும் அனைத்துக் கட்சிக்காரர்களும் வந்து கேட்டு
இருக்கின்றார்கள் எனது அம்மாவும் பதிலுக்கு கும்பிட்டு இருக்கின்றார்கள் நான் எனது
அம்மா பக்கத்திலேயே நிற்பேன் காரணம் நானும் இந்த வீட்டுக்காரன்தான் என்பது தெரிய
வேண்டுமே...
நான் கே.பாக்கியராஜ் போலவே கையைக்
கட்டிக்கொண்டு நிற்பேன் ஆனால் கண்டிப்பாக கும்பிட மாட்டேன் அவர் முன்னாள்
எம்எல்ஏவாக இருந்தாலும் சரி தலையை மட்டும் ஆட்டுவேன் அனைவரும் எனது தலைக்கு மேலே
இருக்கும் தட்டியை கண்டிப்பாக பார்க்காமல் போகமுடியாது பார்த்து என்னையும்
வினோதமாக பார்த்து விட்டே போவார்கள்.
ஆம் எனது செலவில் எனது கைப்படவே எழுதி வீட்டின்
மேலே நிறுத்தி இருப்பேன் சிறிய வாசகமே அது.... அடுத்த பதிவில் பார்ப்போமே....
தொடரும்...
மகிழ்ச்சி மீசைக் காரரே.வந்து விட்டேன் உமைத் தேடி. இனி சந்திப்போம். துவைத்தெடுப்போம்.துடைத்தெறிவோம்.துர்மதியாளர்களை...
பதிலளிநீக்குஆனாலும் ஜன நாயகத்தின் உள்ள நல் வாய்ப்புகளை புறக்கணிக்க சோம்புபவர் களின் ஆயுதமாக நோட்டா மாறிவிடக் கூடாது. தன் பணியாளனைத் தேர்ந்தெடுக்கக் கூட திக்கற்ற பார்வதி யாய் வக்கற்ற எஜமானாய் வாக்காளர் மாறிவிடக்கூடாது.எனவே என் வாக்கு NOTAவுக்கு அல்ல.
வருக நண்பரே நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்ட சொர்க்கமாய் பதிவுலகம் வருவதில் மகிழ்ச்சி.
நீக்குஇன்றைய அரசியல் வியாதிகளை களைய மாற்று வழியாக இருப்பது நோட்டோ ஒன்றே ஓட்டு போடாமல் புறக்கணிக்கவும் இயலவில்லை காரணம் எவனோவொருவன் நாமாகி விடுகிறான்.
பார்ப்போம் வரும் தேர்தல் மாற்றத்தை தருமா என்று.... வருகைக்கு நன்றி நண்பரே.
சிவம் வந்துட்டீங்களா...ஆஹா அப்ப அவ்வளவுதான் இனி நீங்களும் கில்லர்ஜியோட சேர்ந்து வறுத்தெடுப்பீங்களே!!
நீக்குகீதா
வறுத்தெடுக்க நாங்க என்ன வேர்கடலை வியாபாரமா செய்யிறோம் ?
நீக்குகில்லர்ஜி கருத்துகள் அனைத்தும் சரியே...
பதிலளிநீக்குநாங்களும் பணம் வாங்கியதில்லை...சுயேச்சைக்கு ஓட்டுப் போட்டதுண்டு பெரும்பாலும் கொஞ்சம் நல்ல மனிதராக இருப்பார் என்ற எண்ணத்தில்..எங்க ஏறியாவை கொஞ்சம் கவனிச்சுக்குவாரேன்னுதான்....ஆனால் நான் போடுறதாலேயே என்னமோ அவர் தோற்றுத்தான் போவார்..ஹா ஹா ஹா
பணம் வாங்கியதே இல்லை. வெள்ளம் வந்தப்ப கூட எங்க ஏரியாவுல வெள்ளம் வரலைனு வாங்கலை..வந்திருந்தாலும் வாங்கிருப்போமா என்பது சந்தேகமே...ஏன்னா பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டும்...
நோட்டா நல்ல விஷயம்...ஆனால் ஏனோ நாம சொன்னா அதை சரியல்ல என்று சொல்லுறாங்க...
கீதா
வருக ஏனோ தெரியவில்லை சுயேச்சைகளுக்கு மக்கள் வாக்களிக்க முன்வருவதில்லை.
நீக்குஅவர்களால் ஆளுங்கட்சிகளை எதிர்த்து எதையும் செய்ய முடியாது என்று நினைக்கின்றார்களோ...
ஜி!.. பதிவு அருமை.... ஆனாலும்,
பதிலளிநீக்குஇந்த மாதிரி படத்தையெல்லாம் போட்டு
காலையிலேயே கலவரப்படுத்தாதீங்க!..
நல்லவேளை -
நடுச்சாமத்துல பார்க்கலே...
அந்த மட்டுக்கும் தப்பிச்சோம்!...
வாங்க ஜி அடுத்த பாகத்துக்கு படத்தை மாற்றி விடுகிறேன். பயப்படமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
நீக்குஜீ!...
நீக்குபயமா... நமக்கா!...
சரியாப் போச்சு போங்க!...
அந்தப் படம் மகா கண்றாவியா இருக்கு...
அதுக்குத் தானே சொன்னேன்!...
ஹா.. ஹா.. அடுத்த படம் அயகா போடுகிறேன் ஜி.
நீக்குதுரை செல்வராஜு சார்.. கில்லர்ஜி ஊர்க்காரவுகளை நாம் கிண்டலடித்தால் கில்லர்ஜி நம்மகிட்ட சண்டைக்கு வருவாரே. நீங்க தைரியமா அவர் ஆளு படம் நல்லால்லைனு சொல்றீங்க....
நீக்கு"அவரு ஆளு"
நீக்குயேன்... இதுவரை நல்லாத்தானே போயிக்கிட்டு இருந்துச்சு ?
விரலுக்காக இந்த படத்தை தேர்வு செய்தேன் அதுக்காக இப்படியா என்னை கேவலப்படுத்துவது ?
(மைண்ட் வாய்ஸ் ச்சே வழக்கம்போல நம்மளே விரலைக் காண்பித்து இருக்கலாம்)
கில்லர்ஜி..... பரமக்குடி கமலஹாசன் உள்ளவர்களில் பரவாயில்லை என்று, தேவகோட்டை பாசத்துல ஒரு இடத்துல சொல்லியிருந்தீங்களே....
நீக்குஇருந்தாலும் நீங்க கமலஹாசனுக்கும், எனக்கும் தொடர்பு உண்டு பண்ணிக்கொணடு வருகிறீர்கள்.
நீக்குபரமக்குடி எனது சம்பந்தி ஊர் என்ற நிலையிலிருந்து இப்போது எனது சம்பந்திகள் ஊர் என்ற இலக்கை விரைவில் தொடப்போகிறது.
நான் மாற்றி மாற்றி வாக்களித்திருக்கிறேன். விஜயகாந்த் வந்தபோது அவருக்க்க் கூட ஒருமுறை வாக்களித்து ஏமாந்திருக்கிறேன்! வாக்களிக்கும் கடமை தவறியதில்லை.
பதிலளிநீக்குவருக ஸ்ரீராம்ஜி தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
நீக்குசென்னையில் இருந்தவரை இந்த ஓட்டுக்குப் பணம் என்பதெல்லாம் வீடு வரை வந்ததில்லை. ஆனால் இங்கே வந்தப்புறமா இரு முறைகள் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எனப் பணக்கட்டைத்தூக்கிக் கொண்டும் புடைவை, வேட்டியைத் தூக்கிக் கொண்டும் வந்திருக்கிறார்கள். நாங்க கதவையே திறந்ததில்லை! கும்பிடு போட்டு அனுப்பிடுவோம். உங்கள் தலைக்கு மேல் தொங்கும் தட்டியைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கேன்.
பதிலளிநீக்குதங்களது உண்மையான கருத்தை முன்வைத்தமைக்கும், அடுத்த பதிவை காண ஆவல் கொண்டமைக்கும் நன்றி சகோ.
நீக்குமாயவரத்தில் இருந்த வ்ரை யாரும் ஓட்டுக்கு பண்ம கொடுக்க வரவில்லை, வந்தாலும் நாங்கள் வாங்க மாட்டோம்.
பதிலளிநீக்குஅங்கு இருந்தவரை எங்கள் தொகுதிக்கு நன்மை செய்தவருக்கு ஓட்டு போட்டோம்.
தொகுதி பக்கமே எட்டிப் பார்க்காத அரசியல்வாதிகள் இருக்கிறார்களே.
வருக சகோ தங்களது கருத்துரையை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
நீக்கும்...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகேரளா : காரணம் கல்வி...
பதிலளிநீக்குஉண்மைதான் ஜி
நீக்குதமிழகத்திலேயே கன்னியாகுமரி மாவட்டம் கல்வியறிவில் முன்னணி.
காரணம் கேரளாவின் அருகில் இருப்பது மட்டுமல்ல முன்பு அது கேரளாவாக இருந்ததாலும்கூட...
கேரளாவில் படிக்காமல் இருந்த அந்த ஒரு பாட்டியும் இப்போது படித்து லாப்டாப் பரிசு வாங்கி விட்டார்களாம்!
நீக்குஹா.. ஹா.. ஹா.. பாசிடிவ் செய்தியா ?
நீக்குமக்கள் காதோரம்
பதிலளிநீக்குசொல்ல வேண்டிய செய்தி
மெல்ல வந்து படித்தேன்!
சிந்தித்து வாக்களித்தால்
மகிழ்வான மாற்றம் காணலாமே!
உண்மைதான் நண்பரே மக்கள் மனது வைக்கட்டும்.
நீக்குசஸ்பென்சாக நிறுத்தி விட்டீர்களே! நியாயமா ?
பதிலளிநீக்குவருக கவிஞரே நானும் எப்பொழுதுதான் எழுத்தாளராவது ?
நீக்குகில்லர்ஜி.. உங்க பாயின்டுகள் எல்லாம் கரெக்ட்தான். ஆனா பாருங்க... அனேகமா எல்லா ஜனங்களுக்கும் அரசியல் என்பது மதம் மாதிரி. இந்தக் கட்சிக்குத்தான் வாக்களிப்பதுன்னு நினைத்துப்பாங்க. ஏன் என்பதற்கு வெத்துக் காரணங்கள்தான் இருக்கும்.(பாலம் கட்டினான், குறைவா கொள்ளையடித்தான், எங்க பரம்மரையே இவருக்குத்தான் போடுவோம் போன்ற மொக்கைக் காரணங்கள்). பணம் வாங்கினா பயந்துகிட்டுதான் ஓட்டு போடுவான்.
பதிலளிநீக்குஅரசியல் மாற்றம் கட்சி சார்பில்லாத, நியாயம் பார்க்கிற 20% மக்களாலதான் நிகழுது. இந்த 15-20% பேர் யாருக்கு ஓட்டுப் போடறாங்களோ அவங்கதான் ஜெயிக்கறாங்க.
அதுனால சிந்திக்கறதாவது....
//எங்க பரம்பரையே//
நீக்குஆம் நண்பரே இப்படி நிறையபேர் சொல்லும்போது செவிட்டில் ஒன்று விடுவோமா ? என்று நான் நினைத்ததுண்டு.
20% மக்களாவது சிந்திக்கின்றார்களே அதுவரை சந்தோஷப்படுவோம்.
ஒரு செய்தி பெரும்பான்மையினரின் வாக்குகள் சரியாக இருக்க வேண்டும் என்றில்லை நான் படித்த வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது YOU get what you deserve
பதிலளிநீக்குஐயாவின் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
நீக்குநட்பிலும் உறவிலும் போட்டியிடும் கட்சிக்கார்களால் சிலபேர்,
பதிலளிநீக்குஅவர்களால் வேலை வாய்ப்பு அல்லது வேறு ஏதாவது கப ஆதாயம் அடைந்த சிலபேர்,
பரம்பரையாக சில பேர்...
என்று ஊழல்களைக் கண்டாலும் வாக்களிக்கும் மக்கள்தான் அதிகம். மேலும் வாக்களிக்க நமக்கு இருக்கும் வாய்ப்புகளில் குறைந்த குற்றம் செய்தவரைத் தேட வேண்டியிருக்கிறது. குற்றமே / ஊழலே செய்யாதவர் என்று ஒருவரையும் சொல்ல முடியவில்லை.
ஆமாம் ஜி எது எப்படியோ யாரும் இங்கே ராமர் இல்லை என்ற நிலைதான்.
நீக்குஜனநாயகக் கடமையினை உணர்த்திய விதம் அருமை. அன்னாருடைய புகைப்படம் எதற்காகவோ?
பதிலளிநீக்குவருக முனைவரே...
நீக்குவிரலின் "மை" அடையாளத்துக்காக இந்த படத்தை உபயோகப்படுத்தினேன்.
என்மீது தொண்டன், ரசிகன் என்ற சாயத்தை பூசி விடாதீர்கள்.
நோட்டு வாங்கி ஓட்டு போடுவதை நிறுத்தி.மதல் படியாக.நோட்டாவுக்கு ஓட்டு போடுவதையாவது நேர்மையாக தைரியமாகச் செய்யட்டும் நண்பரே....
பதிலளிநீக்குவருக நண்பரே அருமையாக சொன்னீர்கள்.
நீக்குசரி..... நோட்டாவுக்கு ஒரு ஓட்டுக்கு எவ்வளவு கிடைக்கும் ?
(அமௌண்டை கருத்துரையில் சொல்லாமல் ரகசியமாக மின்னஞ்சலில் சொல்லுங்கள், நம்ம வீட்டில் ஆறு ஓட்டு இருக்கு)
ஒரு தம்..பீடி கூட கிடைக்காது நண்பரே... நான்தான் தேர்தல்பாதை திருடர்பாதை என்று சொல்வதை சரி என்று ஆமோதிக்கிறவனாச்சே..... இருந்தாலும் நண்பருக்காக சொல்கிறேன்... டி.டி..அல்லது ஓ..பி.பி உஸ..., ஏ...ஏ...டப்..பாடி.....இப்படியான இடங்களை பார்த்தால் ...
நீக்குஇவங்க நோட்டோவுக்கும் நோட்டு கொடுப்பாங்களா ?
நீக்குஎன்ன தட்டி என்பதை காண ஆவலாய் இருக்கிறேன் நண்பரே.
பதிலளிநீக்குகாத்திருப்புக்கு நன்றி நண்பரே...
நீக்குகேரளாவின் வளர்ச்சிக்குக் காரணம் கல்வி நண்பரே
பதிலளிநீக்குவருக நண்பரே உண்மைதான்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் காலம் மாறும்....நிச்சயம் நல்லதே நடக்கும் மிக அருமை.நமது உரிமையை நிதனமாக செலுத்தினால் சரி
வருக கவிஞரே தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.
நீக்குஇறுதியில் ஒரு வேண்டுதல் மீசைக்காரரே.
பதிலளிநீக்கு'நேர்மை'யாக வாழ விரும்புபவர்கள் கூட
'நேர்மையை'த் தேர்ந்தெடுக்க மறுப்பதும் அதையும் நம்மில் சிலர் கைதட்டி ஆதரிப்பதும் நியாயம்தானா?.
நண்பரே "அவர்கள்" உண்மையானவர்கள் அல்ல பசுத்தோல் போர்த்திய புலியாக தன்னை காட்டிக் கொள்பவர்களே...
நீக்குநேரம் அமைந்தால் நேர்மை வெளிப்படும் அதுவரைக்கும் காத்திருப்போம். மகிழ்ச்சி
நீக்குஉண்மை நண்பரே இருப்பினும் அந்நிலையை உருவாக்குவது நமது செயல்பாட்டில்தான் இருக்கிறது.
நீக்குசஸ்பென்ஸை சீக்கிரம் உடைத்து விடுங்கள்.
பதிலளிநீக்குவாங்க மேடம் தொடர் பதிவுக்கு மட்டும்தான் வருவீங்களா ?
நீக்குநாளையே மீண்டும் வறுக்க வருக...
அது என்ன வாசகமா இருக்கும்..
பதிலளிநீக்குநாளையே வருக சகோ
நீக்குஉண்மை உரைக்கிறது, உறைக்கிறது
பதிலளிநீக்குகவிஞரின் வருகைக்கு நன்றி
நீக்கு