இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, மார்ச் 15, 2019

சற்றே சிரிக்கலாமா ?

 ஊரின் பெரிய மனிதர்கள்
இந்தியனுக்கு தெரியலை இந்தோனிஷியாக்காரனுக்கு தெரியுது.
உன்னாலயே பலபேர் தூக்குப் போடப்போறான் பாரு...
கார்பெண்டரை வரச்சொல்லவா ?
பணக்காரன் வீடு போல தெரியுதே...
ரிவர்ஸில் போவது தப்பாயா ? 
இதுவும் வேண்டுமடா.... எமக்கு இன்னமும் வேண்டுமடா...
எங்கள் ப்ளாக் வாசகர்களுக்கு டஃபுள் சார்ஜ்
செல்பேசி தவிர்ப்பீர் உயிரைக் காப்பீர் - காவல்துறை
அன்றைக்கே இருநூறு பவுன் வாங்கிப் போட்டு இருக்கலாம்.
லஞ்சம் வாங்குறாரா... கொடுக்கிறாரா ?
எதற்கு தூக்கணும் ? எதற்காக எறியணும் ?
நான் மரண வீடுகளுக்கு செல்வதில்லை – கமல்
நிஜமும், நிழலும்
தேவகோட்டை பெண்கள்தான்.
மருத்துவமனையிலுமா ?
(அபுதாபியில் நான் சுட்டது)
நம் நாட்டில் இப்படி நடக்குமா ?
இதுவுமொரு பாரதவிலாஸ்
அவசியமான பொருத்தம் இல்லாமல் போச்சே...
(ஸ்ரீராம்ஜி மகிழ்ச்சி அடைவார்)

97 கருத்துகள்:

  1. ஆவ்வ்வ்வ் இன்று மீ 1ஸ்ட் இல்ல மீ1ஸ்ட் இல்ல:)) ரொம்ப லேட்டாகிட்டேன்ன்:) சரி போனாப்போகுது..:)...எம்மதமும் சம்மதமே.. சே..சே டங்கு ஸ்லிப்பாச்ச்.. எந்தக் கொமெண்ட்டும் முதல் கொமெண்ட்டே:)) ஹா ஹா ஹா.

    அழகாக தொகுத்துப் போட்டிருக்கிறீங்க...

    தேவகோட்டைப் பெண்கள்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. புதுவரவோ கில்லர்ஜி?:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே!! பாருங்க அதிரா...புதுசு புதுசா ஃபோட்டோ எல்லாம் போடுறார்...!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    2. அதிரா இவர்களின் அழகை பார்த்தபோது பூர்வீகம் தேவகோட்டையாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  2. அதெப்படி கில்லர்ஜிக்கு மட்டும்.. ஸ்ரீராம் ஹொஸ்பிட்டல்:), முன்பும் ஒன்று போட்டிருந்தீங்க.. ஸ்ரீராம் ஸ்ரோர் ஓ என்னமோ.. எல்லாம் உங்கட கண்ணுக்கு மட்டும் தெரியுதே..:).. டொக்டர் ஆரோ?:)..

    பதிலளிநீக்கு
  3. ஹா ஹா ஹா விடிய எழும்பி வந்து அனுக்கா:) பொருத்தம் பார்த்துவிட்டு ஸ்ரீராம் மயங்கி விழப்போறார்ர் ஹா ஹா ஹா:)).. கூடவே இருந்துகொண்டு குழிபறிக்கலாமோ கில்லர்ஜி:))..

    ஆனாலும் ஒன்று சொல்லட்டோ.. தேவையானதெல்லாம் பொருத்தமாத்தான் இருக்குது.. நீங்க பயப்பூடாமல் கோ எகெட்:)) ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா சோசியர் ஜாதகம் பார்த்ததற்கு நான் காரணவாதி இல்லை.

      நீக்கு
  4. ஹா... ஹா... ஹா... அனைத்தையும் ரசித்தேன் ஜி. அப்படி ஒரு மருத்துவமனை நான் கட்டியிருந்தால் (கட்டியிருந்தால்தானே!!!!) எங்கள் பிளாக் வாசகர்களுக்கு டபுள் சார்ஜ் நான் கொடுத்து அனுப்புவேன் ஜி!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியலை ஶ்ரீராம்... வேறு நல்ல மருத்துவமனைக்கு கொண்டுபோய் காட்டச் சொல்லறீங்களா? ஹா ஹா

      நீக்கு
    2. கரும்பு தின்னக்கூலி! ட்ரீட்மெண்ட்டும் கொடுத்து காசும் கொடுத்து அனுப்புவேன்!!!!!!!

      நீக்கு
    3. ஸ்ரீராம் உங்க ஆஸ்பத்திரின உடனே நான் அங்கதான் வருவேன் கன்செஷன் கிடைக்குமேனு சொல்லிட்டு வரேன் நீங்க பைசாவும் கைல கொடுத்து அனுப்பறேன்றீங்க!! இன்னும் என்னல்லாம் தொடங்கியிருக்கீங்கனு ரகசியமா சொல்லிருங்க...ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    4. ஸ்ரீராம்ஜி கிட்னி ஆபரேஷனுக்கும் இது சாத்தியமாகுமா ?

      நீக்கு
    5. வருபவர்களின் ஒரு கிட்னியை மட்டும் எடுத்துக்கொண்டு மறு கிட்னியை பெருந்தன்மையாய் விட்டு விடுவோம்!

      நீக்கு
    6. அடடே நீங்கள் கொள்(ளை)கைவாதிதான் ஜி

      நீக்கு
  5. ஆஹா... ரஜ்ஜு தட்டுகிறதா? அவர் படத்தைக் காணோமே ஜி?

    இப்போ ரொம்ப இளைச்சிட்டார் ரொம்ப இளைச்சிட்டார் என்கிறார்களே என்று போய்ப்பார்த்தால் (இணையத்தில் போட்டோக்களைதான்!!) டைபாய்டிலிருந்து எழுந்த நோயாளி மாதிரி இருக்கிறார்! போங்க ஜி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... அடுத்த இடுகைகள்ள வரிசையா படங்கள் வரப்போகுதா?

      நீக்கு
    2. இப்போதே படங்கள் வராததற்கு காரணம் து நெல்லை!!!

      நீக்கு
    3. ஆ! அனுஷ் இளைச்சுட்டாங்களா...பார்க்கனுமே நெட்ல போய்ப் பார்க்கிறேன்...இல்லை விசாளக் கிழமை ஒன்னு கூட போடாமவா போயிடுவீங்க!!

      கீதா

      நீக்கு
    4. ஆமாம் ஜி ரஜ்ஜூ ஆயுள் பந்தப்பட்டதாமே...

      நீக்கு
  6. கமல் மரியாதை செய்யும் மரணம் யாருடையது என்று தெரியவில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யதார்த்தத்தில் நாயகனாய் வாழ்ந்த எம்.என.நம்பியார்.

      நீக்கு
    2. ஓஹோ... மரியாதைக்குரிய மனிதருக்குதான் மரியாதை செய்திருக்கிறார்,

      நீக்கு
  7. பின்னோக்கி ஓடிய ரயில்... நான் சிறுவனாயிருக்கும்போது எங்கள் பைண்டிங் கலெக்ஷனில் ஒரு சம்பவம் படித்திருக்கிறேன். ஒரு ரயில் எஞ்சின் தானாக ஓடத்தொடங்கி பல கிலோமீட்டர் தூரம் ஓடிக்கொண்டிருக்க, ஒரு எஞ்சின் டிரைவர் துணிச்சலாய் செயல்பட்டு அதனை நிறுத்திய நிகழ்ச்சி... அது நினைவுக்கு வந்தது.

    பின்னோக்கி என்று ஒரு பதிவர் இருக்கிறார், தெரியுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பின்னோக்கி//
      இது பதிவரின் பெயரா ?

      நீக்கு
    2. ஆம். அப்படி ஒரு பதிவர் முன்னர் எங்கள் தளத்துக்கும் வருகை தந்திருக்கிறார். நானும் அவர் தளம் சென்றிருக்கிறேன்.

      நீக்கு
    3. தகவலுக்கு நன்றி ஜி

      நீக்கு
  8. // சற்றே சிரிக்கலாமா?//

    நிறையவே சிரிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  9. அனைத்துப்படங்களும் பிரமாதம். எப்படி சிக்கினார்கள் இவ்வளவு பேரும்.
    ஸ்ரீராம் பார்த்த பிறகு என்ன சொல்கிறார் பார்க்கலாம்.ஹாஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லி விட்டேன்மா!!

      நீக்கு
    2. வாங்க அம்மா எனது கண்ணில் பட்டு விடுகின்றார்களே...

      நீக்கு
  10. ஊரில் பெரிய மனிதர்கள் மாரியம்மன் அருளால் நல்லபடியாக வளரட்டும், வாழ்க வளமுடன்.

    ஸ்ரீராம் மருத்தவமனையில் எங்கள் ப்ளாக் வாசகர்களுக்கு டஃபுள் சார்ஜா? எந்த ஊரில் இருக்கிறது?


    பெண் காவலர் என்ன சொல்வது!

    பாரதவிலாஸ் நன்றாக இருக்கிறது.

    தேவகோட்டை பெண்கள் சூப்பர். (மேல் நாட்டு மருமகளோ?)
    கடைசி படம் பொருத்தம் இப்படி ஆகிவிட்டதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ மருத்துவமனை கோயமுத்தூரில் இருக்கிறது.

      பதிவை ரசித்து கருத்துரை பதிந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  11. அனைத்து படங்களையும் அதற்கான உங்கள் வரிகளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  12. சிரிக்க மட்டுமல்ல, அதிகம் சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  13. ரசித்தேன்
    சிரித்தேன் நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  14. இந்தோனேஷியாவில் அப்படிப் போடலாம். பெயரெல்லாம் வைச்சுக்கலாம். ஆனால் இந்தியாவில் அப்படிச் செய்தால் அந்த அரசுக்குப் பெயர் என்ன? கில்லர்ஜி, இது கூடப் புரியலையா? இஃகி, இஃகி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் பல பிரச்சனைகள் முளைத்து விடும் அதுவும் இன்றைய சூழலில்...

      நீக்கு
  15. பாவம் ஸ்ரீராம், அனுஷ்கா தவிர வேறே யாரும் கிடைக்கலையா உங்களுக்கு? :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுஷ்கா ஸ்ரீராம்ஜிக்கு மட்டுமே உரிமையானவரா ?

      நீக்கு
    2. இறைவனின் விதி எப்படி இருக்கிறதோ...

      நீக்கு
  16. ஸ்ரீராம் மருத்துவமனை தானே! நமக்கெல்லாம் கட்டணம் இருக்காது! எல்லாமே அருமை. பாரத விலாஸ்! சூப்பர்!

    பதிலளிநீக்கு
  17. இன்னைக்குக் காலையிலேயே பட்டாசு வெடிச்ச மாதிரி இருக்கு...

    கடைசியில கல்யாண விருந்து நழுவிப் போனது வருத்தந்தான்...

    ஆனாலும் மொய்ப் பணம் மிச்சம் ஆச்சே... அந்த மட்டுக்கும் சந்தோசம்!....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொய்ப்பணம் மிச்சமானது சந்தோஷமா ?
      அனுஷ்காவுக்கு வாழ்க்கை போச்சே...

      நீக்கு
  18. டபுள் சார்ஜுனா என்ன அர்த்தம் கில்லர்ஜி? ஒரு ஊசி போட்டா ஒண்ணு இலவசம், ஒரு பிரஷர் மாத்திரைக்கு பதில் இரண்டு பிரஷர் மாத்திரை, ஒரு கிட்னி ஆபரேஷனுக்குப் பதில் இரண்டையுமே ரிப்பேர் பண்ணிடுவாங்களா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே அவரும் மருத்துவமனையை எப்போது எக்ஸ்டன்ஷன் செய்வது ?

      நீக்கு
  19. சிலவற்றை ஏற்கனவே வாட்சப்பில் பார்த்திருக்கிறேன். "இந்தோநேஷியா காரனுக்எஉத் தெரிந்தது"- இது புரியலை. நம்ம நோட்டுல என்ன மார்க் பண்ணியிருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெ.த. நம்ம நோட்டையும் இந்தோனேஷியா நோட்டையும் மறு பரிசீலனை பண்ணுங்க! :))) புரியும். இந்தோனேஷியா பற்றிய பல தகவல்களும் ஆச்சரியமானவை!

      நீக்கு
    2. கீசா மேடம்... நான் அங்கும் சென்றிருக்கிறேன். கடலில் மூழ்கி (உண்மைதான்), பிள்ளையார் சிலையையும் பார்த்திருக்கிறேன். நிறைய இந்துக் கோவில்களையும் பார்த்திருக்கிறேன். ஆனா நம்ம நோட்டுல இருக்கிற பிரச்சனை தெரியலை.

      நீக்கு
    3. ஹையோ, ஹையோ, இந்தோனேஷியா நோட்டில் கணபதி பப்பாமோரியா! இந்திய நோட்டில் காந்தி! :)))) நம் நாட்டில் இப்படிப் போட்டுட முடியுமா? :))))) இந்தோனேஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு!

      நீக்கு
    4. நெ.த.அவர்களுக்கு...
      சகோ கீ.சா. சொல்லி விட்டார்கள். எனது ஆச்சர்யமும் இந்தோனிஷியா முஸ்லீம் நாடாச்சே என்பதுதான்.

      நீக்கு
    5. கடலுக்குள் கோவிலா ?

      நீக்கு
    6. கில்லர்ஜி, இந்தியாவிலும் குஜராத் மாநிலம் பவநகரில் கடலுக்குள் சிவன் கோயில் உண்டு. நாங்க போனதில்லை. ஆனால் நம்ம வெங்கட் போயிட்டு வந்து எழுதி இருக்கார்னு நினைக்கிறேன்.

      நீக்கு
    7. ஆம் கடல் மூடி மீண்டும் திறக்கும் கோவிலை யூட்டியூபில் கண்டு இருக்கிறேன்.

      நீக்கு
  20. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா சிரிச்சு முடிலயலை கில்லர்ஜி!!!!!

    அதுவும் அனுஷ்கா கில்லர்ஜி!! ஹையோ ஹையோ உருண்டு பிரண்டு....

    ரஜ்ஜு தட்டிடுச்சு ஹப்பா அரம வுக்கு ஒரே ஷந்தோஷம் பொயுங்குதே...ஸ்ரீராம் நிஜமாவே சந்தோஷப்பட்டிருப்பார்....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னால் சில ஜீவன்கள் மகிழ்ந்தால் எனக்கு மகிழ்ச்சியே...

      நீக்கு
  21. பணக்கார வீடு செம ஜி!!!! அழகான படம் உங்க கேப்ஷன் அருமை

    இஞ்சின் இல்லாம எபப்டி ரயில் பின்னாடி ஓடிச்சு அதுவும் 10 கிமீ?

    போலீஸ் செல்ஃபோன் பேசுவது....ஜி என்ன ஜி இப்படி சொல்லிப்போட்டீங்க...அவங்களுக்கு அப்பத்தான் பப்ளிக்கிட்டருந்து ஏதோ கேஸ் பத்தி கால் வருது என்ன கடமை உணர்ச்சி!!! இதைப் போயி!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  22. அது சரி ஸ்ரீராம் வேற என்ன பிஸினஸ் எல்லாம் செய்யுறார் சொல்லவே இல்லை...

    அதுவும் ஆஸ்பத்திரினா நான் அங்கிட்டுதானே போயிருப்பேன் கன்செஷன் கிடைக்கும்லா....நமக்கு!! ஹா ஹா ஹா

    ரூ 50 பெட்றோல் செம ஹா ஹா ஹா

    எல்லாப் படங்களும் அருமை அதுக்கான கேப்ஷன்ஸும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் சேர்ந்து அவரை "சேர்க்க" விடமாட்டீர்கள் போலயே...

      நீக்கு
  23. சற்றே அல்ல நிறையவே சிரிச்சோம் ஜி!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  24. அது￰ என்ன நண்பரே தேவகோட்டை பெண்கள் மட்டும் அழகாக இருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கையின் அமைப்பே அப்படித்தான் நண்பரே...

      நீக்கு
  25. ஹாஹா ஒரே ஒரு பொருத்தத்தில் அனுஷ் மிஸ் ஆகிட்டாங்களே :)
    எல்லாம் அருமை :) ஆனாலும் சித்தப்பாவை இப்படி ஆண்டி கோலத்தில் காட்டிடீங்களே :)
    பில் அங்கிள் ஒபாமா அங்கிள் புஷ் அங்கிள் மட்டுமில்லை இங்கே எல்லா வெளிநாட்டினரும் அப்படிதான் நம்ம ஊரில்தான் போட்டி பொறாமை ஊசி குத்தல் பேச்சு கலாய் வாரிவிடல் எல்லாம் நடக்கும்,
    இந்தோனேஷியா வில் தான மிக அழகிய பழமைவாய்ந்த கோயில் இருக்குனும் கேள்விப்பட்டிருக்கேன் .

    தங்கத்தை எங்க பாட் டி தாத்தா தான் வாங்கி வச்சிருக்கணும் :) நாங்கல்லாம் அப்போ பூமிக்கு கால்வைக்கலியே
    உங்க தேவகோட்டை பொண்ணுங்க அழகா யிருக்காங்க ,கூந்தலை சடையா பின்னி விட்டிருந்தா :) இன்னும் அழகா இருப்பாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அனுஷுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

      உங்கள் சித்தப்பாவை நான் ஒன்றும் செய்யவில்லையே...

      தேவகோட்டை பெண்களிடம் ஜொள்ளி விடுகிறேன்.

      நீக்கு
  26. வணக்கம் சகோதரரே

    படங்கள் அத்தனையும் நன்றாக இருந்தது. ஓவ்வொன்றுக்கும் பொருத்தமான வாசகங்களை தேர்ந்தெடுத்து பொருத்தியிருக்கிறீர்கள்.
    ஒவ்வொன்றையும் ரசித்த போது சற்றே இல்லை, நிறையவே சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து சிரித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  27. சற்றே அல்ல நிறைய சிரிக்க வைத்த பதிவு

    பதிலளிநீக்கு
  28. உங்க ஊரு பெரிய மனுசங்கலாம் பெத்த ஆளுங்க போல!

    உங்க ஊரு பொண்ணுங்கலாம் தகதகன்னு மின்னுறாங்க. எல்லாம் உங்க கேர்ள்பிரண்டா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ எல்லா பெண்களும் நம்ம சொந்தங்கள்தான்...

      நீக்கு
  29. இதுல சிரிக்க குறைவுதான். சிந்திக்க வேண்டியவைகளே அதிகம்

    பதிலளிநீக்கு
  30. ஆஹா இப்படி அழகான பெண்களை தேவகோட்டையில் இனி காணலாம் போல.. இரசி(ரி)க்க வைத்த பதிவு நிறைய...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ தேவகோட்டை பெண்கள் 99.9 % அழகுதானே...

      நீக்கு
  31. ரசித்தேன் சகோதரா...

    பதிலளிநீக்கு
  32. அனைத்தையும் இரசித்தேன்! தேர்தல் விழா களைகட்ட ஆரம்பித்துவிட்டது. இனி இதுபோன்ற படங்களுடன் தங்களுடைய தனித்தன்மையான தலைப்புகளை பார்க்கலாம் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே முயற்சிக்கின்றேன் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  33. நன்றாகவே சிரித்தேன் ஜி
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  34. அனைத்தும் ரசித்தேன்

    அபுதாபியில் சுட்டது - உங்களை சுடாமல் விட்டுவிட்டார்களே...

    பதிலளிநீக்கு
  35. அனுஷ்கா கில்லர்ஜி - 12 மனப்பொருத்தங்களில் ரஜ்ஜு தட்டிப்போனது பற்றி வலைப்பதிவு மக்கள் மிகவும் கவலையடைந்துள்ளனரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆதர்ஷ தம்பதிகள் தட்டிப்போனது வருத்தம் தரக்கூடியதுதானே...

      நீக்கு