இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, மார்ச் 10, 2019

அபிநந்தனுக்கு அபிநந்தனம்


ணக்கம் நட்பூக்களே... முதலில் திருமிகு. அபிநந்தன் அவர்களுக்கு எமது வணக்கங்களையும், வாழ்த்துகளையும் சொல்லிக் கொள்கிறேன். மேலும் இவர் தமிழன் என்று அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியும் கொள்கிறேன்.

அதேநேரம் அபிநந்தன் அவர்கள் விடுதலையாகி இரண்டே தினங்களில் இணையத்தில் இவர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்று தேடிய ஒரு லட்சத்து அறுபதனாயிரம் கேடு கெட்ட ஜென்மங்களின் கூட்டத்தில் நானில்லை என்பதை இங்கு தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்.

இவரது புகைப்படத்தை காண்பித்து அரசியல் ஆதாயம் தேடும் இழிபிறவிகளை இத்தேர்தலில் தோற்கடியுங்கள் எதிரி நாட்டில் அகப்பட்டுக் கொண்டாலும் அந்த சூழலிலும் இந்திய நாட்டின் இராணுவ ரகசியங்களை காப்பாற்றுவதற்காக பேப்பர்களை கிழித்து ஓடையில் வீசியும், சில பேப்பர்களை தின்று முழுங்கியும் இருக்கின்றார். விசாரணை செய்யும்போது சற்றும் மரணபயமின்றி எதையும் நான் சொல்ல முடியாது என்றும் நான் மரணித்தாலும் பரவாயில்லை என்று தேனீர் அருந்திக் கொண்டே பேசிய அவரது நெஞ்சுரம் உலகத்து இராணுவ வீரர்களுக்கு ஒரு பாடமே...

இந்திய தேசத்துக்காக அன்னிய தேசத்தில் இரத்தம் சிந்திய இந்த மாவீரனை நாம் என்றுமே மறக்ககூடாது. இவரைப் பெற்றவர்கள் எவ்வளவு பெருமைப்பட்டு இருப்பார்கள் இவரது மனைவியின் தாலிப்பாக்கியம் கெட்டி என்று சொல்வார்கள் அதனால்தான் மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்பி வந்து இருக்கின்றார். அந்தச் சகோதரி தீர்க்கசுமங்கலியாய் வாழ நாமும் பிரார்த்திப்போம். இந்த மாவீரனுக்குதான் பாலாபிஷேகம் செய்யவேண்டும்.


திரைப்பட பிம்பங்களை உண்மையென்று நம்பி அவர்களது பதாகைகளுக்கு வீதிகளில் பாலாபிஷேகம் செய்யும் அறியா மடந்தைகளே... கூமுட்டைகளே... இவர்தாண்டா உண்மையான நாயகன்.

கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வாழும் கேடுகெட்ட குடும்பங்களை இன்னும் தங்கமே என்றும், சிங்கமே என்றும் சிங்கத்தை அசிங்கப்படுத்தும் தொண்டர்கள் என்னும் விடியாமூஞ்சி தெண்டங்களே... இவர்தாண்டா உண்மையான நாயகன்.

எத்தனையோ கைவண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயராதிருக்க, கிரிக்கெட்டில் மட்டையை அடித்து வாழ்பவர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் உயர்வதற்கு வழிவகுத்து விட்டு காலம் முழுவதும் கை தட்டிக்கொண்டே வாழும் வீட்டில் வளரும் விட்டில்பூச்சி காமுட்டைகளே... இவர்தாண்டா உண்மையான நாயகன்.

இந்த மீசைவீரனை எனது வாழ்நாளில் ஒருமுறையாவது சந்தித்து வாழ்த்து சொல்லவேண்டும் என்பதே இந்த தேவகோட்டை தமிழனின் புதிய ஆசை.
நினக்கு அபிநந்தனங்கள் ஸ்ரீ அபிநந்தன்

சாம்பசிவம்-
இவர் மீசை ஸ்டைலை பார்த்தால் மல்லாங்கி ஜாதிக்காரர் மாதிரி இருக்கே ?

Chivas Regal சிவசம்போ-
எனக்கென்னவோ எங்க ஊடகழி ஜாதி மாதிரித்தான் இருக்கு.

சிவாதாமஸ்அலி-
அடக்கொங்கா மட்டைகளா நீங்களும் இப்படித்தானா ?
காணொளிகள் முழுமையாக காணுக...

76 கருத்துகள்:

  1. கில்ல்ர்ஜி உங்களின் மீசையைப் போலவே இந்த வீரரின் மீசையும் இருக்கிறதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம பங்காளிதான் நண்பரே

      நீக்கு
    2. எனக்கும் அவர் படத்தை முதலில் பார்த்ததும் அப்படித்தான் தோன்றியது மதுரை...

      கீதா

      நீக்கு
  2. முதலில் வரும் அதிராவை இன்னும் காணலியே ஒரு வேளை அவர் கூழ்(கேக்) செய்து கொண்டு இருக்கிறார் போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆஆஆஆஆஆஆ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நோஓஓஓஓஓஓஓஓஓஒ.. கொஞ்சம் பிஸியாக இருந்தவேளை கவனிக்காமல் விட்டுவிட்டேன்ன்ன் கர் 4 ட்றுத்:))

      நீக்கு
  3. கடசி வீடியோவில் வரும் படத்தொகுப்பாளரின் வயசில ரெண்டு வருடத்தை மட்டுமோ குடுக்கச் சொல்றீங்க?:).. அபிநந்தனுக்கு வயசு வேண்டாமாம்.. சொத்தை எழுதித்தரட்டாம்.. சுசுக்கி மாருதி கார் தந்தாலும் ஓகேயாம்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதோ அவரிடம் தொடர்பு கொண்டு உறுதி செய்து விட்டு வருகிறேன்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா பின்ன காசா பணமா என அதுவும் ஆகவும் ரெண்டு வருடத்தை மட்டுமே குடுக்கிறேன் என்கிறீங்க கர்ர்:)).

      ஊசிக்குறிப்பு:
      அவர் என்ன ஜொனார் என்பதனையும் வீடியோக் கோலில் போடவும்:)

      நீக்கு
    3. என்னுடைய அலைபேசியில் காணொளியில் அழைக்க இயலாது.

      நீக்கு
  4. அவருக்கு உண்மையில் வணக்கம் செலுத்தோணும்.. நல்ல விதி பிழைத்து வந்தார். அவரின் அப்பா முன்னாள் எயார்ஃபோஸ் கொமாண்டராக இருந்தவராம். ஆனா இராணுவத் தரப்பில் சிலர் குமுறுகிறார்களாம், அபிநந்தன் செய்தது தவறு என....

    ஏனெனில், ராணுவ உத்தரவு இடப்பட்டதாம், நீ பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்துவிட்டாய் திரும்பு திரும்பு என, ஆனா இவர் அதைக் கேட்காமல் கலைச்சுப் போய், அவர்களின் எல்லைக்குள் வைத்தே அவர்களின் ஆளைச் சுட்டு வீழ்த்தி விட்டாராம்[பிளேனை].. அப்படி இருந்தும் இம்ரான்கான் இவரை விடுதலை பண்ணிட்டார் என..

    எது எப்படியாயினும் அவரின் விதி வலியது, நலமோடு வாழட்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருடைய தந்தைதான் மணிரத்னம் படத்துக்கு இந்தியவீரர் பாக்கிஸ்தானியர்களிடம் சிக்கி சித்திரவதையை அனுபவிப்பது போல் காட்சிகளை தத்ரூபமாக அமைத்து கொடுத்தாராம்.

      இத்தனை வருடம் கடந்து அவரது கற்பனை அவரது மகனுக்கு நிகழ்ர்து விட்டது ஆச்சர்யமானது.

      அவர் பல்லாண்டு வாழ்க!

      நீக்கு
    2. காற்று வெளியிடை எனும் படத்துக்கு ஆலோசகராக இருந்தவராம்... ரோஜா அல்ல.

      நீக்கு
    3. தகவலுக்கு நன்றி

      நீக்கு
  5. உண்மையில் ஒரு போற்றுதலுக்குரிய மாவீரன். ட்றுத் அவர்கள் சொன்னதுபோல நானும் நினைத்தேன்..உங்களின் ஆசை நிறைவேறட்டும் அண்ணா ஜீ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எனது ஆசையை செயல் படுத்துவது இறைவன் கையில்.

      நீக்கு
  6. காலை வணக்கம் கில்லர்ஜி..

    அபிநந்தனுக்கு அபிநந்தனம்!!

    நிஜ ஹீரோ!!

    பதிவு பார்த்துட்டு வரேன்..

    ராத்திரி பேய் உலாவர டைம்ல போட்டு ரெண்டு பேர் உங்க உலாத்திருக்காங்க ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க எனது பதிவுக்கு நள்ளிரவில் வந்து படித்த அதிராவை இப்படி சொல்வது நன்னாயில்லை கேட்டோ...

      நீக்கு
    2. என்னைய்யத்தான் வலை உலகில் சாகாடிச்சீட்டீங்க அதனாலாதான் நான் இரவில் உலா வருகிறேன்.... நான் வலை உலகில் வராத போது நான் பதிவே எழுதவில்லை என்பதால் அதிரா தேம்ஸ்நதியில் குதித்துவிட்டு அவரும் ஆவியாக இரவில் உலா வருகிறாரோ என்னவோ

      நீக்கு
    3. ///நான் பதிவே எழுதவில்லை என்பதால் அதிரா தேம்ஸ்நதியில் குதித்துவிட்டு ///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) ஓவர் நினைப்பு உடம்புக்கு கெடுதியாம்:)...

      கீதா மார்ச் 30 எங்களுக்கு ரைம் மாறுது:)... இனி இன்னும் ஈசியா ஜாமத்தில உலா வருவோம்:) ஹா ஹா ஹா...
      கில்லர்ஜி... அதிராவை ஆராவது திட்டினால் உடனேயே அவர்களை புளொக் பண்ணி விட்டிடுங்கோ ஜொள்ளிட்டேன்ன்ன்:)

      நீக்கு
    4. ரைட்டு...
      அப்படி திட்டுபவர்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

      நீக்கு
  7. அபிநந்தனுக்கு ராயல் சல்யூட்!

    அவரை நினைத்தால் புல்லரிக்கும் கில்லர்ஜி.

    எப்பேர்ப்பட்ட வீரர்...அவர் மீண்டு வரவேண்டும் என்று மனம் பதைபதைத்தது அன்று. அவர் வந்ததும் என்ன ஒரு மகிழ்ச்சி!

    அருமையான பதிவு கில்லர்ஜி!

    அவர் தந்தை அமைத்துக் கொடுத்தது ரோஜா படமோ? அதுவும் காஷ்மீர் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் பிடித்துக் கொண்டு போய் அவர்கள் முகாமில் சிறை வைத்தது என்று வரும்.

    மீண்டும் நம் இந்திய மகனுக்கு சல்யூட்! சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எவ்வளவு சொன்னாலும் வார்த்தைகள் இல்லை கில்லர்ஜி இதற்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் உலக இராணுவவீரர்களுக்கே ஒர் எடுத்துக்காட்டான வீரராக தன்னை நிலைபடுத்தி விட்டார்.

      அந்த திரைப்படம் ரோஜாவாகத்தான் இருக்ககூடும்.

      நீக்கு
  8. கொஞ்சம் லேட்டாச் சொன்னாலும் சொல்ல வேண்டியதைச் சொல்லியிருக்கீங்க. 10 லட்சம் பேர் அவர் சாதியைத் தேடினதாகப் படித்தேன். நாடு விளங்கிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே சற்று வேலைப்பளு காரணமாக உடன் எழுத இயலவில்லை.

      நீக்கு
  9. இந்திய மக்கள் அனைவர் இதயங்களிலும் இடம்பிடித்து விட்டவர். அபிநந்தன் என்றால் வணக்கம் செலுத்துவது என்று பொருள் என்று படித்தேன். நமது வணக்கங்களும். மானம் காத்த மருது பாண்டியர் அவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி இவர் சரித்திரத்தில் இடம் பெற்று விட்டார்.

      நீக்கு
  10. முதல் காணொளி எனக்கும் வாட்ஸாப்பில் வந்தது. இன்னொன்று கைகள் கட்டபப்ட்ட நிலையில் பாக். ராணுவ அதிகாரிகளிடம் அவர் பேசுவது போன்ற காணொளி ஒன்று. இதைத்தவிர அவர் முக்கியமான டாகுமெண்ட்ஸை மெல்லுவது போன்ற விடியோவும் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் எனக்கும் காண்செவியில் கிடைத்தவையே...

      நீக்கு
  11. இரண்டாவது காணொளி பாடலின் அர்த்தம் முழுசும் புரியவில்லை என்றாலும் தெலுங்குப் பாடலான "எந்தரோ மகானுபவலு... அந்தரிகி வந்தனமு" என்கிற அர்த்தம் கொண்ட பாடல் என்றுதான் நினைக்கிறேன்.

    படத்தொகுப்பாளர் அழகாய் இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது மலையாளப்பாடல் நான் மிகவும் விரும்பி கேட்கும் பாடல்களில் ஒன்று.

      அபிநந்தனம் என்பது வாழ்த்துகிறேன், வணங்குகிறேன் என்றும் பொருள் கொள்ளலாம்.

      படத்தொகுப்பாளர் பல ஆண்டுகளாக அழகாகத்தான் இருக்கிறார். நீங்கள் சொல்வது டூ லேட் ஜி

      நீக்கு
  12. அபிநந்தனுக்கு நம்முடைய வணக்கங்கள். அவருடைய வீரம் போற்றத்தக்கது. ஆனால் இங்கே உள்ள ஊடகங்கள் செய்வது தான் மனதிற்கு வருத்தம் தருகிறது. ரோஜா படத்துக்கான காட்சிகளை அவர் தந்தை அமைத்துக் கொடுத்தார் என்பதும் புதிய செய்தி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ ஊடகங்கள் தன்னை வளர்த்துக் கொள்வதே குறிக்கோள்.

      நம்மில் எத்தனைபேர் கேபிள் இணைப்பை துண்டிக்க தயாராக இருக்கிறோம் ?

      நீக்கு
    2. இப்போது தான் காணொளியைப்பார்க்க நேரம் கிடைத்தது. முதல் காணொளியை ஏற்கெனவே பார்த்திருந்தாலும் மறுபடி பார்க்க மனம் பதைக்கிறது. இரண்டாவது பாடல் இன்று வரை கேட்டதில்லை.மலையாளம் எனினும் எம்.எஸ்.வியின் குரலில் அருமையான தொகுப்பாளர் அளித்து வழங்கி இருப்பது அருமையாக உள்ளது. பொருத்தமான பாடல்.

      நீக்கு
    3. மீள் வருகை தந்து கண்டமைக்கு நன்றி சகோ.

      காணொளியின் தொகுப்பாளர் யாரென்று நினைக்கின்றீர்கள் ?

      நீக்கு
  13. அபிநந்தனுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்! வாழ்க வளமுடன்.
    வாகா எல்லையில் அவரை ஒப்படைக்கும் நேரடி நிகழ்வை பார்த்தேன்.
    அவர்கள் குடும்பத்தினர் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்களோ அந்த அளவு இந்திய மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
    இந்த உண்ர்வுபூர்வமான நிகழ்வை அரசியல் ஆக்காமல் இருக்க வேண்டும்.
    காணொளிகள் பார்க்க முடியவில்லை, பார்க்க முடிந்தால் பார்த்து கருத்து சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் உணர்வுப்பூர்வமான நிகழ்வே அவரது குடும்பத்தினருக்கு எப்படி இருந்திருக்கும்.

      காணொளி அவசியம் பாருங்கள்

      நீக்கு
    2. காணொளிபார்த்தேன், அவர் அடிபடுவது பார்த்து மனம் கனத்து போகிறது.
      அவர் குடும்பம் இந்த காணொளி பார்த்து துடித்து போய் இருப்பார்கள்.
      பள்ளி குழந்தைகள் மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் போது ஒருத்தருக்கு ஒருந்தர் அடித்துக் கொண்டு போவார்கள், கீழே விழுந்து கை, கால எல்லாம் அடிபடும் அப்போது அவர்களை அடிக்காதீர்கள் என்று விலக்கி விட்டு அம்மா வருத்தபடுவார்கள் உங்களைப் பார்த்து என்பேன்.
      சண்டை என்றாலே பயம், இரத்தம் வரும் வரை அடிப்பது பார்க்கவே கொடுமை, உடல் நடுங்கி போகிறது.

      பாடல் எம்.எஸ் விஸ்வநாதன் போல் பாடும் பாடகர் யார்?

      நீக்கு
    3. உண்மை அவரது குடும்பம் எவ்வளவு துடித்து இருக்கும்.

      பாடல் எம்.எஸ்.வி.அவர்கள் பாடிய மலையாளப்பாடல்தான் எனக்கு பிடித்த பாடல்.

      மீள் வருகை தந்து காணொளி கண்டமைக்கு நன்றி சகோ

      நீக்கு
  14. வீரருக்கு எனது வணக்கங்களும் ...

    உங்கள் ஆசை நிறைவேறட்டும் ...அவரை நேரில் காண வாழ்த்துக்கள் ..

    எங்கள் நண்பர்கள் குழுவில் கூட ஒரு சிநேகிதி ...யாருக்காவது அந்த அண்ணா நம்பர் தெரியுமா ஒரே ஒரு தடவை அவர்ட்ட பேசணும் ன்னு ரொம்ப ஆசையா இருந்தாங்க...

    அவரின் ஜாதி ...அயோ இந்த மக்கள் ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ அவரது தொடர்பு எண் கிடைத்தால் அவசியம் சொல்கிறேன்.

      நீக்கு
  15. நம் மக்கள்தான் ஜாதி, இனம் என்றவாறு பார்த்து கொச்சைப்படுத்திவிட்டார்கள்.
    உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  16. மிக அருமையான பதிவு...

    சவுக்கை உப்புத் தண்ணீரில் ஊற வைத்து அடித்திருக்கிறீர்கள்...

    ஆனாலும் சொரணை என்பது ஏற்படாது..

    அடிமேல் அடி அடித்தாலும் இந்த அழுக்குகள் அகலாது...

    வீணாய்ப் பிறந்த விசக் கிருமிகள்....

    அபிநந்தனுக்கும்
    உங்கள் பதிவுக்கும் வணக்கம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      தங்களது உணர்வுப்பூர்வமான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  17. அபிநந்தன் அவர்களுக்கு எனது வீர வணக்கம்.....

    ஊடகங்கள் - :(

    இங்கே எல்லாமே அரசியல்!

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    இந்திய வீரருக்கு எனது வணக்கங்களும். வாழ்த்துகளும்.. தமது வீர செயலால் இந்திய மக்கள் மனதில் என்றும் இடம் பெற்று விட்டார். காணொளிகள் கண்டேன். மனதை வருத்தியது. அவர் இன்னமும் வீரத்துடன் பல்லாண்டுகள் பாரத மாதாவுக்கு சேவை ஆற்றிட இறைவனை வேண்டுகிறேன்.

    நாங்கள் சொல்ல நினைப்பதை, தயங்குவதை எளிதாக சொல்லும் தங்கள் வீரத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களின் ஆசை நிறைவேறவும், பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

      நீக்கு
  19. அபிநந்தனுக்கு பாராட்டுகள் சாதி என்பது நமது ர்த்தத்தில் ஊறியது அதை ஒழிக்க என்ன செய்ய வேண்டு என நினைக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதியை ஒழிப்பது அரசாங்கத்தின் கையில் இருக்கிறது சாதிச் சான்றிதழ் கொடுப்பது அரசுதானே...

      பள்ளியில் சேர்க்கும்போதே சாதி கேட்பது மறக்கப்படல் வேண்டும் ஆனால் அரசியல்வாதிகள் சாதியை வைத்தே ஓட்டு வாங்குவதால் அதற்கு சாத்தியங்கள் குறைவே...

      நீக்கு
  20. கண்ணீர் அபிஷேகம் இந்த மகனுக்கு. என்றும் வாழ்க வளமுடன். உனக்குத்தான் எத்தனை வீரமடா.
    அபி நந்தனுக்கு எப்பொழுதும் வீர வணக்கங்கள்.
    நீங்கள் ஒருங்கிணியத்திருக்கும் எம் எஸ்வி சாரின் காணோளீயும் கேட்க அமிர்தம். என்ன ஒரு குரல். என்ன ஒரு பொருள்.
    அன்பு தேவகோட்டையாருக்கு மனம் நெகிழ் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா பாடலை கேட்டு இரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  21. சே...சே..உங்க மீசையும்...அவரு மீசையும் வேறு வேறங்க....வாயும் வயிறும் வேறு வேறு மாதிரியும் சொல்லலாம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  22. ￰ராணுவ வீரர்களின் படங்களை பயன்￰படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது மகிழ்ச்சி நண்பரே.

    பதிலளிநீக்கு
  23. அபிநந்தனுக்கு ஒரு சல்யூட்

    பதிலளிநீக்கு
  24. அபிநந்தன் ஜாதி கண்டுபிடிச்சாச்சா?! அப்ப சரி

    பதிலளிநீக்கு
  25. அபிநந்தனுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்!

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் ஜி !

    பொங்குநதி பூரிக்கப் பூலோகம் பூக்கும்
    ....புழுதினிலம் வயல்வெளிகள் தானாகக் காய்க்கும்
    எங்குமிது அதிசயம்தான் இருந்தாலும் வாழ்க்கை
    ....ஏற்றமுற வழியில்லை இருந்தென்ன யாக்கை
    அங்குமொரு மாவீரன் அகப்பட்டு நின்றான்
    ....அடித்தாலும் தாய்நாட்டின் அகங்காத்து வென்றான்
    செங்குருதி சிந்தியவன் சிரிக்கின்றான் அங்கே
    ....சீர்கெட்டோன் அவன்சாதி தேடுகிறான் இங்கே !

    இந்த மானுடன் இப்படித்தான் ஜி கடவுள் வாய் பேசினாலும் அவரிடம் கேட்க்கும் முதல் கேள்வி உன் சாதியென்ன என்பதாகத்தான் இருக்கும் !

    மாற்றங்கள் எல்லாம் மாந்தர்தம் கையில் எம்மிடம் ஏதும்மில்லை நல்ல சாட்டையடிக் கேள்விகள் அருமை ஜி

    வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாவலரே அழகிய கவிதையாக கருத்துரை தந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  27. நிஜமான ஹீரோவான அபிநந்தனுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும். எங்கிருந்து பிடித்தீர்கள் இதனை பொருத்தமாக ஒரு பாட்டு? அதற்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் எனது விருப்பமான பாடல்களில் இதுவும் ஒன்று. வருகைக்கு நன்றி.

      நீக்கு
  28. வசை மாரி பொழிந்த விதம் அருமை

    பதிலளிநீக்கு
  29. கீழக்குயில்குடி அய்யனார் கோவில் பகுதி- 2
    பதிவு போட்டு இருக்கிறேன் சகோ.
    அது பழைய பதிவு என்று நினைத்து நீங்கள் வரவில்லையோ?

    பதிலளிநீக்கு
  30. பதிவு அருமை!
    உங்களுடன் சேர்ந்து நானும் அபிநந்தனுக்கு தலை வணங்குகிறேன்!

    பதிலளிநீக்கு