இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜூலை 19, 2019

வெங்கடாசலம் ஐயா (2)



பதிவின் முதல் தொடர்ச்சிக்கு சொடுக்குக...

ரியாக காலை பத்து மணிக்கு மகனும், மருமகளும், பேரனும் காரில் வருவார்கள் வெயில் அதிகமாக அடிக்கும் காரணத்தால் மருமகள் அம்பாஸிடர் காரிலேயே இருந்து கொள்ள மருமகளைப் பார்த்து ஆறு மாதத்திற்கும் மேலிருக்கும் உள்ளே வந்தால்தானே இவரும் வெளியில் போக முடியாது மகன் டிஃபன் பாக்ஸோடு வருவான் அதில் இருப்பது தனது மகன் சாப்பிட வேண்டிய லஞ்ச் கண்டிப்பாக கேன்டீன் சாப்பாடு மகனுக்கு கொடுக்க கூடாது என்ற உத்தரவுடன் மகனை தந்தையிடம் ஒப்படைத்து விட்டு வார்டனிடம் கட்ட வேண்டிய பணத்தை கட்டி விட்டு ஒப்புக்காக அவரிடமும், இவரிடமும் நல்லாயிருக்கீங்களா ? என்ற உயிரற்ற வார்த்தை இயந்திரம் போல் கேட்டு விட்டு போய் விடுவான்.

மனைவியோடு கோல்டன் பீச், அல்லது மகாபலிபுரம், மேட்னி ஷோ முடிந்து சரியாக மாலை ஆறு மணிக்கு மீண்டும் வருவான் செலவுக்கு பணம் கொடுத்து விட்டு அருணை அழைத்துக்கொண்டு போய் விடுவான் அருண் டாடா காண்பித்துக் கொண்டு போகும்போது தனது உயிரே தன்னிடமிருந்து பிரிவதுபோல் உணர்வார்... மீண்டும் அடுத்த முப்பது நாட்கள் கழித்து இந்த நாள் வரும் இந்த நாளே இவரது வாழ்வின் பொன்நாள் இது மட்டும் இல்லையெனில் இவர் வாழ்ந்து கொண்டிருப்பாரா ? என்பது சந்தேகமே ஒருமுறை அருண் கேட்டான்...

தாத்தா நீ ஏன் இங்கேயே இருக்கே... வீட்டுக்கு வரமாட்டியா ?
அது... வந்து... தங்கம் இதுவும் நம்ம வீடுதான் இங்கே மரமெல்லாம் இருக்குதா... எனக்கு காத்து வேணும் அந்த வீட்ல மரம் இல்லையா... காத்து வராது அதான் இங்கேயே இருக்கேன்.

அப்படினா... வீட்டுல மரம் வளர்த்தா... வருவியா ?
? ? ?

சொல்லு, தாத்தா...
அது வந்துய்யா... அங்கே... மரம் வளர்க்க இடம் இல்லையே....

மம்மி சொன்னாங்க, புது வீட்டுக்கு போகப்போறோம் அங்கே கார்டன் வைக்கணும்னு சொன்னாங்களே... அங்கே நான் மரம் ஊண்டி வைக்கவா ?
வேண்டாம்ய்யா.. நான் எதுக்குய்யா ? அங்கே...

இல்லை தாத்தா நீ வீட்டுலயே இருந்தீன்னா, இப்படி தினம், தினம் உப்பு மூட்டை தூக்குவியா... எனக்கு ஜாலியா இருக்கும் தாத்தா.
வீட்ல அப்பாவை உப்பு மூட்டை தூக்கச் சொல்லுய்யா...

இல்லே தாத்தா, டாடி எந்த நேரமும், கம்ப்யூட்டரிலேயே இருப்பாங்க, மம்மியும் டி.வியிலே சீரியல் பார்த்துக்கிட்டே என்னை படி படினு சொல்லிக்கிட்டே இருப்பாங்க... என்னை யாருமே உப்பு மூட்டை தூக்க மாட்டாங்க... அதுனாலேதான் ஃபஸ்ட் ஸண்டே வரும் வரைக்கும் காத்துக்கிட்டே இருப்பேன் நாந்தான் டாடிக்கிட்டே சொல்வேன் ஃபஸ்ட் ஸண்டே வந்துருச்சு தாத்தாக்கிட்டே போகணும்னு...
வெங்கடாசலம் ஐயாவுக்கு கண்களில் நீர் துளித்தது என்ன சொல்வது ?

என்ன தாத்தா கண்ணுல தண்ணி அழுவுறியா ?
இல்ல, ராசா தூசு விழுந்துடுச்சு...   
இரு, தாத்தா நான் துடைச்சு விடுறேன்...

தாத்தாவின் துண்டை எடுத்து அருண் துடைத்து விட மேலும், மேலும் அவரால் அழுகையை நிறுத்த முடியாமல் பேரனை கட்டிப்பிடித்து தலையை கவிழ்த்திப் பிடித்திக்கொண்டு தன்னை பார்க்க விடாதவாறு அழுதார்....

‘’க்க்க்க்கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’’

திடுக்கிட்டு விழித்தார் மதிய உணவுக்கான அலாரம்.... எழுந்து முகம் கழுவி விட்டு உணவுக் கூடத்துக்கு வந்தார்.

சாப்பாடு முடிந்ததும் வழக்கம்போல வேப்பமரத்தடிக்கு வந்து உட்கார்ந்தார் என்னவோ தெரியவில்லை இந்த மரத்தின் அடியில் வந்து இருந்தால் பேரனின் நினைவு வராமல் இருக்காது அவனோடு ஊஞ்சல் ஆடுவது, விளையாடுவது இப்படியான நினைவலைகள்....

மறுவாரம் ஞாயிற்றுக்கிழமை. பேரன் அருண் ஓடி வந்து கட்டிப்பிடித்தான்.
பேரனை விட்டு விட்டு மகனும் போய் விட்டான், வழக்கம்போல தனது நண்பர்கள் அனைவரிடமும் அழைத்துப் போய் எம்பேரன், எம்பேரன் என்று எல்லோரிமும் பெருமையாக காண்பித்து விட்டு அந்த வேப்ப மரத்தடிக்கு பேரனுக்கு வாங்கிய பிஸ்கட், சோக்லெட்டுடன் வந்தார்.

ராஜா ஸ்கூல் எத்தனையாவது ராங்க்
ஃபர்ஸ்ட் ராங்க்

ரொம்ப சந்தோஷம்ய்யா.. இப்படித்தான் நல்லா படிக்கணும் அப்பத்தான் நான் உப்பு மூட்டை தூக்குவேன்.
சரி தாத்தா.

அப்புறம் நீ பொய் பேசக்கூடாது, யாருடைய பொருளையும் எடுக்க கூடாது, யாருக்கும் வாக்குறுதி கொடுத்தா, அதை கண்டிப்பா செய்திடணும் யாருக்காவது சத்தியம் செய்து கொடுத்தால் அதை மீறக்கூடாது அதன்படியே நடக்கணும் சரியா... இல்லைனா கடவுள் நம்மை தண்டிப்பாரு...
சரி தாத்தா..

அய்யா எனக்கு ஒரு சத்தியம் செய்து தருவியாய்யா...?
என்ன சத்தியம் தாத்தா ?

வா !
என்று ஒரு மரத்தடிக்கு கீழே உட்கார்ந்திருக்கும் பிள்ளையாரை நோக்கி அழைத்துக் கொண்டு நடந்தார்.

தொடரும்...

53 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஜி

    நலமா...
    உண்மையில் சொல்ல வரும் சத்தியத்தை அறிய ஆவல் ஜி காத்திருக்கேன் அடுத்த பதிவுக்காக. சிறப்பான கதைக்களம் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே வாங்க ரூபன் நலம், நலமே விளைக!
      நீண்ட தினங்களுக்கு பிறகு தங்களது வருகை மிக்க நன்றி.

      நீக்கு
  2. முதல் பாராவிலேயே கலங்கடித்து விட்டீர்கள். தொடர்கிறேன் ஜி.

    பதிலளிநீக்கு
  3. முள்ளில் படுக்கை இட்டு
    இமையை மூட விடாதிருக்கும்
    பிள்ளைக் குலமடியோ...
    என்னை பேதைமை செய்குதடி
    பேருக்குப் பிள்ளையுண்டு...
    பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு
    என் வேரென நீ இருந்தாய்
    அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு எப்பொழுதுமே பிடித்த பாடல் ஜி

      நீக்கு
    2. ஸ்ரீராம் - இது செத்த மனைவியை நினைத்துப் பாடுவது. அவள் உயிரோடு இருக்கும்போதும், தனக்கு இளமை இருக்கும்போதும் எத்தனை பேர் மனைவியைத் தாங்கறாங்க?

      60 வயசு ஆனாலுமே டாமினேட் பண்ணறாங்க. ஆள் அவுட்டானதுக்கு அப்புறம், செத்துச் சீரழியும்போது, அவள் நினைவு வந்தால் என்ன, அவளைப் பெருமைப் படுத்தி மனசில் நினைத்தால் என்ன..இல்லாவிட்டால் என்ன? உசுரோடு இருக்கும்போது கொஞ்சாமல், அவள் செத்தப்பறம் தெவசம் செய்து படையல் போட்டு என்ன பயன்?

      நீக்கு
    3. உண்மைதான் நண்பரே இவைகளை எல்லாம் கேள்விக்கணைகளாக ஒரு பதிவு எழுதி இருக்கிறேன் விரைவில் வரும்...

      நீக்கு
    4. நெல்லை.... கருத்தை விட்டு விடுகிறேன். காட்சிக்கு மட்டும் வருகிறேன். மனைவியின் மடியில் படுத்து பாடும் பாடல்தான் அது.

      நீக்கு
  4. கண்ணும், மனமும் கலங்கி விட்டது. இம்மாதிரிச் சோகங்கள் நடப்பவையே என்றாலும் மனம் ஏற்பதில்லை.

    பதிலளிநீக்கு
  5. நாங்களும் தொடர்கிறோம் நண்பரே

    பதிலளிநீக்கு
  6. இதை எல்லாம் படித்தால் மனம் கனத்து போகிறது.
    வருந்தி வருந்தி அழைக்கும் பிள்ளையோடு இருக்கமாட்டார்கள் சிலர்.
    இப்படி வேண்டாத விருந்தாளியாக நினைப்பவர்களை நினைத்துக் கொண்டு கலங்கும் மனது உடையவர்கள் ஒரு சிலர்.

    என்ன சத்தியம் வாங்க போகிறார் ? தன் மகனை கைவிடக் கூடாது என்று பேரனிடம் உறுதி மொழி வாங்க போகிறரா?

    தன் நிலை வரக்கூடாது என்று நினைப்பார் என்று நினைக்கிறேன்.
    பெற்றோர்களை மதிக்க வேண்டும், அவர்களை நல்லபடியாக மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சத்தியம் வாங்குவார் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மை மனிதர்கள் பலவிதம்.

      தங்களது யூகம் சரியாவென்று விரைவில் தெரியும்.

      வருகைக்கு நன்றி

      நீக்கு
    2. நானும் இதையே நினைத்தேன் ஜி...

      நீக்கு
    3. வருக ஜி தங்களது யூகத்திற்கு நன்றி

      நீக்கு
  7. வேறன்ன சத்தியம்!...

    எந்த காரணத்துக்காகவும் அப்பா அம்மாவை அனாத ஆஸ்ரமத்தில உட்டுடக்கூடாது...
    - ந்னு சத்தியம் வாங்கப் போறார் தாத்தா..

    மேற்படி சத்தியத்தையே கில்லர்ஜியும் யோசித்து வைத்திருந்தால்!..

    ஆகா!...

    தானாட மறந்தாலும் சதை மட்டும் தனியாக
    தாளாமல் துடிக்கின்றதே தம்பீ
    தாளாமல் துடிக்கின்றதே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது யூகத்தையும் பார்ப்போம் வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. துரை செல்வராஜு சார்...இதைத்தான் நானும் நினைத்தேன். ஆனா அப்படி இருக்காது. அவர்தான் அழுதுக்கிட்டு, அதைக்கூட ஒப்புக்காம கண்ணுல தூசின்னு சொல்றாரே. இப்படீல்லாம் உண்மையச் சொன்னா, அடுத்த முறை பேரனை எங்க கூட்டிக்கிட்டு வரப்போறாங்க?

      நீக்கு
    3. தங்களது யூகத்தையும் பார்க்கலாம் நண்பரே...

      நீக்கு
  8. மறக்க முடியாத மனிதர் வெங்கடாசலம் ஐயா. உண்மை நிகழ்வா கில்லர்ஜி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இது உண்மையில்லை நிச்சயமாக சமூகத்தில் இவ்வாறு நிகழ்கிறது.

      ஆனால் இது எனது கற்பனையில் உருவானதே...
      நாளை உங்களுக்கு "தெரிந்த" நண்பருக்கு நிகழும் சூழல் இருக்கிறது.

      அதன் பிரதிபலிப்பை இன்று உணரப்பார்க்கிறேன், பிறருக்கு உணர்த்தவும் பார்க்கிறேன்.

      ஒருக்கால் இவ்வாறு நிகழவில்லை எனில் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் மகிழ்ச்சி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    உண்மை நிகழ்வென கதை நகர்கிறது. முதலில் நடப்பது இப்படித்தான் என எழுதியது எல்லாம் மனதை வருத்தச் செய்கிறது. அவரால் உயர்ந்து இன்று தல்ல நிலைமையில் இருக்கிறோம் என்பதை இத்தகைய மகன்களால் எப்படி மறக்க முடிகிறது. அவர் ஆசைப்படும்படி அந்த பேரனை கவனிக்க ஒரு தடை, பார்க்க ஒரு தடை என்று போட இந்த மகன்களுக்கு எப்படி மனம வருகிறது. நாளை நமக்கும் இந்த வயது வரும் என்பதை உணர மாட்டாரா? என்றெல்லாம் நினைக்க வைக்கிறது.

    அந்த மகன் தவறை உணர்ந்து திருந்துவதற்கு கதையின் முடிவு வாய்ப்பளிக்குமா?

    அடுத்து அவர் மகன் தன் மகனால் திருந்துவதற்கு இநத சத்தியம் உதவி செய்யுமா? என தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      இந்த அவலங்களின் தொடக்கமே நாளை நாமும் முதியோர் ஆவோம் என்பதை இன்றைய இளைஞர்கள் மறப்பதே காரணம்.

      பல இடங்களிலும் இது போன்ற துயரங்கள் நிகழவே செய்கிறது என்பது உண்மையே...

      நல்லதொரு முடிவு எல்லோருக்கும் இறைவன் அருள வேண்டும்.

      நீக்கு
  10. தாத்தா பேரன் உறவு இனிப்பதுஎல்லாம்பேரனின் சில வயதுக்குள் அதுவும் இந்த காலத்தில்மூச்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா உண்மை நிலையை சரியாக சொன்னீர்கள்.

      நீக்கு
  11. தாத்தா, பேரனிடம், உன் அப்பா அம்மாவையும் இப்படி கடைசி காலத்தில் பரிதவிக்க விட்டுடாதேயா..இதை நான் சொன்னதை உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லிடாதேயா என்று சொல்லணும்...ஆனா அதைச் சொல்லுவாரா? அப்புறம் நிரந்தரமாக பேரன் பார்க்கவரமுடியாதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அப்புறம் நிரந்தரமாக பேரன் பார்க்க வரமுடியாதே//

      இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதோ....

      நீக்கு
  12. கில்லர்ஜி...சோகத்தைப் பிழியறீங்க.

    கதைல இருக்கற மாதிரி நிஜத்துல நடப்பதில்லை. இந்தக் கால பேரன்கள், போம்மா...ஒரு நாள் லீவுலயும் முழு நாள் அங்க கூட்டிக்கிட்டுப் போயிடறீங்க. எனக்கா போரடிக்குது. பேசாம என்னை மொபைல் போனையும் கொண்டுபோக அனுமதிச்சீங்கன்னாத்தான் அங்க வருவேன். இது மாதிரி, இல்லைனா, நீங்க வேணும்னா போயிட்டுவாங்க. நான் வரலை. லீவு நாள்லதான் மொபைல்ல விளையாட முடியும், டிவி பார்க்க முடியும்... என்று சொல்வாங்க.

    இருந்தாலும் உங்க ஆசையை நிராசையாக்க நான் விரும்பலை. நீங்க நினைப்பதுபோலவே இந்தக் காலத்துக் குழந்தைகள் நினைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சம்பவங்கள் நிகழத்தான் செய்கிறது நண்பரே...

      இக்கால பேரன்கள் இப்படித்தான் ஆனால்???

      நீக்கு
    2. நெல்லை எல்லாப் பேரன் பேத்திகளும் அப்படி இல்லை. வளரும் சூழலைப் பொருத்து இருக்கிறது. எனக்குத் தெரிந்து என்னைப் போல பாட்டி தாத்தாவுடன் ஒட்டி உறவாடும் குழந்தைகளையும் பார்க்கிறேன். அட்லீஸ்ட் என் உறவு வட்டத்திலும் நட்பு வட்டத்திலும். இதுவரை யாரும் முதியோர் இல்லம் செல்லவில்லை...

      கீதா

      நீக்கு
    3. //நட்பு வட்டத்திலும். இதுவரை யாரும் முதியோர் இல்லம் செல்லவில்லை//

      இனி வந்தாலும் வரலாம்
      மேபி ஆர் மே நாட் பி

      நீக்கு
  13. அந்த சத்தியம் என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  14. அன்பு தேவகோட்டைஜி,
    வெங்கடாசலம் ஐயாவின் நிலை எல்லா முதியோர் இல்லங்களிலும் காணலாம்.
    காலம் தாழ்வதற்குள் தந்தையை மீட்டுக் கொள்வான் மகன் என்று
    ஆசைப்படத் தோன்றுகிறது.

    வேண்டாத விருந்தாளியாக மருமகளிடம் சிரமப் படுவதை விட,
    பெரியவர் இந்த இல்லத்தில்
    மனம் சமனிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள
    வேண்டும்.
    அடுத்த பதிவிற்குக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது கருத்தும் சரியே காத்திருப்புக்கு நன்றி.

      நீக்கு
  15. பேரனிடம் என்ன சத்தியம் வாங்கப் போகிறார் என்று கொஞ்சம் யூகிக்க முடிகிறது. பெரும்பாலான குழந்தைகள் தாத்தா பாட்டியை அம்மாவின் மாமனார், மாமியாராகத்தான் பார்க்கின்றனர். அதனால் தாத்தாவைப் பார்க்க சீ.சி.ஹோமிற்கு வருவார்களா என்பது சந்தேகமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  16. பல வீடுகளில் இப்படித்தான் நிலை. பரஸ்பர புரிதல் என்பது நிறைய வீடுகளில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

    தொடர்கிறேன் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  17. கில்லர்ஜி மனம் என்னவோ செய்கிறது...எனக்குப் பல நினைவுகளை எழுப்புகிறது.

    தாத்தா என்ன சத்தியம் வாங்கப் போகிறார்...நான் எழுதுவது என்றால் ...அதற்கு முந்தைய லைன்களில் தாத்தா குழந்தைக்கு பொய் சொல்லக் கூடாது என்றெல்லாம் சொல்லுவது போல..

    நீ பெரியவன் ஆனதும் அம்மா அப்பாவைக் கண்கலங்காமப் பார்த்துக்கணும். உன் கூடவே வைச்சுக் காப்பாத்தணும் அதைச் செய்வியா எனக்கு சத்தியம் செஞ்சு கொடுப்பா....

    அதை அப்படியே குழந்தை வருண் வீட்டில் போய்ச் சொல்வான்..கூடவே தாத்தா எங்கிட்ட சத்தியம் வாங்கினார் அது போல அப்பா உங்க தாத்தா உங்கிட்ட சத்தியம் வாங்கலியாப்பா?.....அது அவர்கள் இருவர் மனதிலும் உரைக்குமா?!! குத்துமா...குத்தணும்!!

    அம்மா அப்பாவின் மனம் கோணங்கியா இருந்தா உடனே சொல்லுவாங்க வருண் இது பெரியவங்க விஷயம் இதெல்லாம் நீ பேசக் கூடாது....பாருங்க உங்கப்பா என்னம்மா சின்னப் பிள்ளை மனசைக் கெடுக்கறாருனு (அவங்களுக்கு பிற்காலத்தில் நல்லது விளைவிக்கச் சொல்லப்பட்டது என்பது கூட மனசுல மூளைல ஏத்திக்காம கோணங்கி ஈகோ பிடித்த மூளை இபடித்தான் சிந்திக்கும்...) அடுத்தவாரத்துலருந்து அவனை அனுப்பக் கூடாதுனு...சொல்லிடவும் வாய்ப்பு....கில்லர்ஜி எப்படிக் கொண்டு போகிறார் என்று பார்க்கணும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா அழகாக கதையை மற்றொரு கோணத்தில் நகர்த்தி இருக்கிறீர்கள் ரசித்தேன்.

      வருகைக்கு மிக்க நன்றி

      இருப்பினும் ஆடிட்டர் சித்திரகுப்தன் என்ன எழுதி வைத்து இருக்கிறாரோ...

      உங்களைப்போல் ஆவலுடன் ஞானும், பின்னே சிவாதாமஸ்அலியும்.

      நீக்கு
  18. சத்தியம் சர்க்கரை பொங்கல்னு ஆகாமல் இருந்தால் சரி.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியும் நடக்க வாய்ப்பு இருக்கிறதோ...

      நீக்கு
  19. மனம் கணத்துவிட்டது
    காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  20. கொடுமையான வரிகள்...
    பேரனின் சத்தியத்திற்காக நானும்
    காத்திருக்கிறேன் நண்பரே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது காத்திருப்புக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  21. திருமதி கோமதி அரசு அவர்கள் சொல்வதுபோல், தன் பெயரனிடம் என்னைப்போல் உன் அப்பாவை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடக்கூடாது என உறுதிமொழி வாங்கிக்கொண்டாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது யூகமும் சரியாவென்று விரைவில் பார்ப்போம்.

      நீக்கு
  22. தாத்தா பேரன் பாசம் நெகிழ வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக டோக்டர் நலமா ?
      நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகை தந்தமைக்கு நன்றி.

      நீக்கு