இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, அக்டோபர் 12, 2019

பேரையூர், பேட்டி பேரறிவாளன்


ணக்கம் ஐயா பேரறிவாளன் அவர்களே.. தொல்பொருள் ஆராய்ச்சியில் தோற்று தொலைந்து போய் தேடித் தோண்டியெடுத்த தங்களை எங்களது தோல் உரிப்பான் தோழன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தங்களுக்கு எமது வாழ்த்துகள் பேட்டியை தொடங்கலாமா ?
பேரின்பத்தமிழுக்கு வந்தனம் நன்று தொடங்கலாம்.

நாட்டுப்பற்றுக்கும், மதவாதத்திற்கும் வேறுபாடுகள் சொல்லுங்கள்.
இந்தியாவும், பாக்கிஸ்தானும் மட்டைப்பந்து விளையாட்டில் விளையாடும் போது இந்தியா வெற்றி பெறவேண்டும் என்று நினைத்தால் அது உண்மையான நாட்டுப்பற்று, அதேநேரம் இங்கிலாந்தும், பாக்கிஸ்தானும் விளையாடும் போது பாக்கிஸ்தான் தோல்வி பெறவேண்டும் என்று நினைத்தால் அது நேர்மையற்ற மதவாதம். இருவரில் திறமையானவர்கள் வெற்றி பெறட்டும் என்று நிளைப்பதே நியாயம். இன்னும் சொல்லப்போனால் பக்கத்து நாடான பாக்கிஸ்தான் வெற்றி பெறட்டும் என்று நினைப்பதுகூட அண்டை நாட்டையும் நேசிக்கும் நற்பண்பை வெளிப்படுத்தும். அதற்காக இங்கிலாந்து எதிரி நாடென்ற அர்த்தமும் அல்ல.

திரைப்படங்களில் நடிகர்கள் பேசுவதற்கும், மேடைகளில் அரசியல்வாதி பேசுவதற்கும் வேறுபாடு சொல்லுங்கள்.
திரைப்படங்களில் கூத்தாடிகள் பேசுவது உண்மையான நடிப்பு இதில் தயாரிப்பாளர்களுக்கு லாபம் மேடைகளில் அரசியல்வாதிகள் பேசுவது பொய்யான நடிப்பு இதில் மக்களுக்கு நஷ்டம் ஆகமொத்தம் இருவருமே வேடதாரிகளே...

பழைய காலம், இன்றைய காலம் மாமியார்-மருமகள் உறவுகளின் வேறுபாடுகள் சொல்லுங்கள்.
எல்லா காலங்களிலுமே இவர்களின் உறவுகளில் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும் பண்டைய காலத்தில் மாமியாரை தனது மறு தாயாகவே கருதிய மருமக்களும், மருமக்களை தனது மகளாகவே கருதிய மாமியார்களும் அதிக சதவீதமாக வாழ்ந்தார்கள். இதில் ஆண் வர்க்கங்களில் சற்றே மயங்கிய காலகட்டம் மாமியாரும், மருமகளும் பிற்காலத்தில் விஜய் தொலைக்காட்சிக்கு தலைப்பு கொடுப்பதற்காக நீயா ? நானா ? என்று வாழத் தொடங்கியதில் மாமியாரின் பழங்கால உணவின் அசுர பலத்தால் அவர்களின் கை ஓங்கியே இருந்தது நவீன விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக ஸ்டவ் அடுப்புகள் வெடிக்கத் தொடங்கின இதில் இளவயதான மருமக்கள்மார்களை மட்டுமே ஸ்டவ் அடுப்புகள் நேசித்து விழுங்கின. மருமக்கள்மார்கள் ஸ்டவ் நிறுவனங்களின் மீது சினம் கொண்டே வளர்ந்து வரும் வேளையில் கேஸ் அடுப்பு என்ற நிலையை உருவாக்கும் பொழுது இதன் விஞ்ஞான உபயோகம் மாமியார்களுக்கு பிடிபடவில்லை.ஸ்டவ் வெடிப்புகள் நாளடைவில் குறைந்தன பல நிறுவனங்கள் மறைந்து போயின மேலும் உணவின் கலப்படம் தொடங்கியபோது மாமியார்களின் பலம் குறைந்து போனது. இனி கேஸ் அடுப்பை வெடிக்க விட்டால் வாழும் வீடே இடிந்த போகும் என்று கருதிய மருமக்கள் அவர்களை வெளியில் இறக்கிவிட தீர்மானித்தனர். மாமியாரை தனியே இறக்கிவிட மனமில்லாத மாதரசிகள் இலவச இணைப்பாக மாமனாரையும் அனுப்பி வைத்தனர். இதற்கு மகுடிக்கு மயங்கிய மணவாளர்களும் உடந்தையாயினர். இன்று ஸ்டவ் நிறுவனம் நடத்தி வந்த பலரும் முதியோர் இல்லங்களை தொடங்கி தங்களது வருமானங்களை வரவு வைத்துக் கொண்டு இருக்கின்றனர். காலப்போக்கில் இந்நிலையும் மாறும் இதுவே உலக நியதியாகும்.
அல்வா வாங்குவதற்கும், அல்வா கொடுப்பதற்கும் வேறுபாடு சொல்லுங்கள்.
அல்வா வாங்குவதற்கு பணம் இருந்தால் போதுமானது. அல்வா கொடுப்பதற்கு பக்குவப்பட்ட மனம் வேண்டும், பேச்சாளும் திறன் வேண்டும் முக்கியமாக அறிவு வேண்டும். வலைப்பதிவர் கில்லர்ஜியைப் போன்ற பாமரர்களுக்கு இது வகைப்படாத விடயம்.

நாத்திகருக்கும், ஆத்திகருக்கும் வேறுபாடு சொல்லுங்கள்.
இறையால் இவ்வுலகம் தோன்றி மானிடர்களால் மதங்கள் உருவாக்கப்பட்ட காலம் முதல் யாருமே நிரந்தரமாக ஆத்திகராகவோ, நாத்திகராகவோ தொடர்ந்து வாழ்ந்ததில்லை. வெளியுலகம் தெரியாமல் வாழ்ந்த, வாழ்பவர்களும் உண்டு. ஒவ்வொரு சூழலிலும் மனிதர்கள் இருபுறமும் நின்று தவி(ர்)த்து இருக்கின்றனர். சோதனைகள் வரும்போது இறைவனை நினைப்பதும், வெற்றிகள் சூழும்போது எல்லாம் தனது திறமையே என்று இறைவனை மறப்பதும் மனிதஇயல்பு. இதில் எமது நண்பர் கில்லர்ஜிகூட நாத்திகத்திலும், ஆத்திகத்திலும் மாறி மாறி விசித்திகமாகவும் இருந்ததுண்டு. இன்னும் உதாரணம் திராவிடக்கட்சி குடும்பங்களின் நிலைப்பாடு.

அரசியல் குடும்பத்தில் இருப்பதற்கும், குடும்பமே அரசியலில் இருப்பதற்கும் வேறுபாடு சொல்லுங்கள்.
குடும்பமே அரசியலில் இருந்தவர்களால் இந்தநாடு நாசமாகி இருக்கிறது, இருப்பவர்களால் மிச்சமும் நாசமாகிக் கொண்டு இருக்கிறது. அரசியலில் குடும்பம் இருந்தால் தாய், தந்தை, சகோதரப்பாசம் செத்து அழிந்து இருக்கிறது இன்னும்கூட தொடர்கிறது. இது என்று முடிவுக்கு வருகிறதோ அன்றுதான் தமிழகம் உருப்படும் ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் எமது விழிகள் எட்டும் தூரம்வரை தென்படவில்லை.

அன்றைய திரைப்படப்பாடலுக்கும், இன்றைய திரைப்படப்பாடலுக்கும் வேறுபாடு சொல்லுங்கள்.
அன்றைய பாடல்களில் வாழ்க்கையின் தத்துவத்தை அழகாக எழுதி, இனிமையாக இசைத்து, அற்புதமாக பாடினார்கள். இன்றைய பாடல்களின் முதல்வரிகூட என்னவென்பது விளங்கவேயில்லை இசை என்ற பெயரில் இம்சை செய்கின்றார்கள் செவிகளுக்குத்தான் சேதம்.

தொடக்ககால தொலைபேசிக்கும், இன்றைய அலைபேசிக்கும் வேறுபாடு சொல்லுங்கள்.
அன்றைய தொலைபேசியில் உயர்வகை மனிதர்களுக்கு மட்டுமே என்ற நிலைப்பாடு இருந்தது. அதேநேரம் கீழ்மட்ட மனிதர்களுக்கு அவசியப்படாத விசயமாகவும் இருந்தது. இன்றைய அலைபேசி விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி பட்டிதொட்டி எல்லாம் பரவியது என்பதில் பெருமைப்பட்டாலும் இவைகளால் இளைய தலைமுறையினர் தறிகெட்டு திரிகின்றனர் என்பதில் ஐயமில்லை. மானிடப்பிறவியின் முக்கிய அங்கம் தாம்பத்யமே இவ்வுலக பயணமே அதை நோக்கியும், அதிலிருந்துமே இணைகிறது தொடர்கிறது. ஆனால் அவ்வளவு சக்தி வாய்ந்த தாம்பத்யத்தையே தூக்கிப்போடு என்று இரண்டாம் நிலைக்கு தள்ளி விட்டது இந்த இணைய அலைபேசி. இதில் இருபாலருமே அடக்கம். ஒவ்வொருவரும் கூர்ந்து நோக்கினால் நான் சொல்வது நூறு சதவீதம் உண்மை என்பது அனைவரது விழிகளுக்கும் தென்படும்.

பண்டைகால திண்ணைப் படிப்புக்கும், இன்றைய கால படிப்புக்கும் வேறுபாடு சொல்லுங்கள்.
அன்றைய படிப்புகளில் நற்பண்புகள், வாழ்க்கையின் பாடங்கள், ஒழுக்கங்கள் போதிக்கப்பட்டன... ஆசிரியர்-மாணவர் என்பது ஆசான்-சிஷ்யன் என்ற நிலைப்பாட்டில் இருந்தது. பெற்றோர்களும் தனியொரு மதிப்போடு நடத்தினார்கள். நானும், எமது அருமை நண்பர் கில்லர்ஜியும் பயின்ற காலங்களில் ஆசானின் துணைவியார் கோமேதநாயகி அம்மாள் திண்ணையில் படிக்கும் எங்களுக்கு தொன்னையில் பொங்கல் வைத்து தந்த நினைவுகள் நெஞ்சில் நிழலாடுகின்றது. இன்று ஆசிரியர்களை மாணவர்கள் மதிக்கும் முறைகள் மிகவும் கேவலமாக இருக்கிறது. இந்நிலைக்கு போனதற்கு காரணமாக முக்கிய அங்கம் வகிப்பது திரைப்படத்துறையினரே... அவர்கள்தான் திரைப்படங்கலில் ஆசிரியர்களை கோமாளிகளைப்போல் சித்தரித்து இப்படி ஆக்கி விட்டார்கள். நாமும் ஆசிரியர்களிடம் பயின்றுதான் இந்நிலையை எட்டி இருக்கிறோம் என்று அந்த நன்றி கெட்ட நாதாரிகளும் நினைத்துப் பார்ப்பதில்லை. பெற்றோர்களும் மாணவர் புறமாக நிற்பதால் எவன் எப்படி போனால் நமக்கென்ன ? நமக்கு ஊதியம் வந்தால் சரிதான் என்ற நிலைப்பாட்டிற்கு அதிக சதவீத ஆசிரியர்கள் தள்ளப்பட்டார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. முடிவு பெற்றோர்களுக்கே நஷ்டமும், கலாச்சார அழிவும்.

கன்னிக்கும், கணினிக்கும் வேறுபாடு சொல்லுங்கள்.
கன்னியிடம் மூழ்கினால் காலப்போக்கில் வயோதிகத்தின் காரணமாக, உடல் தளர்வின் காரணமாக்கூட அதிலிருந்து என்றாவது ஓர்நாள் மீண்டு விடலாம். ஆனால் கணினியில் மூழ்கினால் மண்டை மண்ணைக் கவ்வும் காலம்வரை நமது விழிகளையும் வீணாக்கி இறுதிவரை மீளவே விடாது.

நன்றி ஐயா தங்களது வெட்டி நேரத்தை ஒதுக்கி எங்களது நிகழ்ச்சியை சிறப்பித்து, சீரழித்து தந்தமைக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி.
நன்றி, பேரின்பத்தமிழ் வாழ்க

Chivas Regal சிவசம்போ-
அப்படீனாக்கா... இவரு மட்டும் கணினிக்குள்ளே கவுந்துக்கிட்டு பதிவு எழுதுறாரே ஏன் ?

71 கருத்துகள்:

  1. அடேங்கப்பா எப்படியெல்லாம் யோசிக்கறீங்க? அருமை. வலப்புற க்னிக்க டிசேபிள் பண்ணதால முக்கியமான பகுதிகளை குறிப்பாக விமர்சிக்க முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களது உடனடி வருகை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  2. நிறுத்தி நிதானமாக விளையாடி இருக்கிறீர்கள்.  நிதர்சனங்களை எடுத்துக் காட்டி இருக்கிறீர்கள்.  (அதனால் கணினியில் 'கவுந்து கிடந்தால்' தப்பில்லை!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஸ்ரீராம்ஜி மிக்க நன்றி.
      அதானே சிவசம்போ சொல்வது கதைக்கு ஆகுமான்னேன் ?

      நீக்கு
  3. டி கல்லுப்பட்டி அருகே ஒரு பேரையூர் இருக்கிறது.  என் அண்ணன் அங்கு பணிபுரிந்த காலத்தில் நான் அவருக்கு சிலகாலம் அங்கு துணையாக இருந்திருக்கிறேன்.  பேரையூர் என்றதும் அது நினைவுக்கு வந்து விட்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது கமுதி அருகில் உள்ள பேரையூர்யானே ?

      நீக்கு
  4. திரைப்பட விழாக்களில் நடிகர்கள் பேசுவதற்கும், அரசியல்வாதிகள் மேடையில் பேசுவதற்கும் - என்று வந்திருக்கலாமோ? முன்னதில் தயாரிப்பாளருக்கு நஷ்டம், பின்னதில் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நஷ்டம்.

    பெர்லின் சட்டை தேவகோட்டை நாட்டில் வாங்கினதான்னு கேட்கமாட்டேன். நீங்க ஜெர்மன் போயிருக்கீங்க என்பது தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கூத்தாடிகள் விழாக்களில் பேசுவது சமீபகால புதுமைகள், திரைப்படங்களில் பேசுவது (காதில் பூ சுற்றுவது) பழங்காலத்தாலிருந்தே வருஙிறதே...

      அன்று பேட்டி எடுத்தபோது அந்த பனியன்தான் பேரறிவாளன் போட்டு இருப்பார் போலயே...

      நீக்கு
    2. ////பெர்லின் சட்டை தேவகோட்டை நாட்டில் வாங்கினதான்னு கேட்கமாட்டேன். நீங்க ஜெர்மன் போயிருக்கீங்க என்பது தெரியும்.//
      ஹா ஹா ஹா நானும் இதை நினைச்சனே படம் பார்த்து:)..
      கொஞ்சம் லேட்டாகும் என் வருகை கில்லர்ஜி மன்னிக்கவும்...

      நீக்கு
    3. வாங்க வாங்க எப்பொழுதும் தளம் திறக்கலாம் பயம் வேண்டாம்.

      நீக்கு
  5. கன்னியிடம் கவிழ்வதற்கும் கணிணியிடம் கவிழ்வதற்கும் ஒரு வேறுபாடும் இருப்பதாக எனக்குத் தெரியலையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கனிணிக்குப் பதில் இன்று செல்லில்தான் அதிகம் கவிழ்ந்து கிடக்கின்றனர்.

      நீக்கு
    2. ///
      நெல்லைத்தமிழன்10/12/2019 8:43 முற்பகல்
      கன்னியிடம் கவிழ்வதற்கும் கணிணியிடம் கவிழ்வதற்கும் ஒரு வேறுபாடும் இருப்பதாக எனக்குத் தெரியலையே////

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதுகூடவா தெரியேல்லை:)... முதலாவதில் கவிண்டால் மீளமுடியாது:)... 2 வது மீண்டு வரலாம்:)... இதிலிருந்து மீள வைக்கவும் ஒரு கன்னியாலயே முடியும்:)... ஹா ஹா ஹா

      நீக்கு
    3. அதானே... ஸூப்பராக சொன்னீங்க...

      நீக்கு
    4. கில்லர்ஜி,

      கன்னியிடம் மூழ்கினால் ஒரு நாள் மீளலாம். கணினியில் மூழ்கினால் மீள முடியாது என்கிறீர்கள். பக்திமான் அதிராவோ, முதலாவதிலிருந்து மீள முடியாது; 2ஆவதிலிருந்து மீளலாம் என்கிறார்.

      நான் அதிராவின் கட்சி நண்பரே.

      கால மாறுபாடுகளை நடுநிலையுணர்வுடன் கணித்து, பேட்டி வடிவில் வழங்கிய பேரறிவாளன் கில்லர்ஜிக்குப் பாராட்டுகள்.

      நீக்கு
    5. ஆஹா இது வேறு கோணமாக செல்கிறதே...
      நான் எப்போதுமே சுயேட்சைதான் நண்பரே

      பேரறிவாளனை பாராட்டியமைக்கு நன்றி.

      நீக்கு
    6. @அதிரா... நல்ல பின்னூட்டம். அதுனாலத்தான் சின்ன வயசுலயே என் அம்மா என்னிடம் பொண்கள்ட பேசினா காது அறுந்துடும் என்று சொல்லியே வளர்த்தார்..ஹா ஹா

      நீக்கு
    7. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:)... நெ தமிழன்...

      அறிவுப்பசிஜி எப்பவும் அதிரா கட்சிதேன்ன்ன்ன் ஆனா பக்தியில்லாமான் கட்சி ஹா ஹா ஹா:)

      நீக்கு
    8. நான் எப்போதுமே தனிக்கட்சிதேன்.

      நீக்கு
  6. இனிய காலை வணக்கம் கில்லர்ஜி!

    தோல் உறிப்பான் தோழன்// ஹா ஹா ஹா ஹா ஹா இது ரொம்பப் பிடிச்சுப் போச்சு கில்லர்ஜி!! நல்ல தலைப்பு..சூப்பர்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இன்று தோள் கொடுப்பவனைவிட, தோல் உறிப்பவனே அதிகம். வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. கில்லர்ஜி... ஸ்பெல்லிங்கு மிஸ்ரேக்கூ.... அது உறி அல்ல உரித்தல்:)... அதிராக்கு டமில்ல டி எல்லோ:)... ஹையோ என் டி யை எப்பூடியெல்லாம் காப்பாத்த வேண்டிக்கிடக்கூ:)

      நீக்கு
    3. வருக வீரகேசரி எடிட்டரின் குற்றச்சாட்டை ஏற்று திருத்தம் செய்யப்பட்டது தகவலுக்கு நன்றி.

      நீக்கு
  7. ஆசிரியர்கள் மதிக்கப்படாமல் போனதற்கு திரைப்படம் மற்றும் பெற்றோர்கள்தாம் காரணம். தங்கள்ட குறைகளை வைத்துக்கொண்டு இந்த இருவரும் சமூகத்தைச் சாடுவதுதான் நகைச்சுவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே தவறுகளை ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவம் நம்மில் பலருக்கும் இருப்பதில்லை.
      ஆகவே பிறர்மீது திணிக்கவே முயல்கிறோம்.

      நீக்கு
  8. உண்மையான நடிப்பு, பொய்யான நடிப்பு வார்த்தைகளை விளையாடியதை ரசித்தேன் ஜி. வேஷதாரிகள்// ஹா ஹா ஹா...இதுவும் !!

    ரெண்டுமே 'பிழை'ப்புதான் இல்லையா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  9. மாமியார் மருமகள் உறவு முறை ம்ம்ம்ம் அது மட்டும் ஏற்க முடியவில்லை அந்தக்காலம் என்று சொல்லுவது...அந்தக் காலத்திலும் கொடுமைகள் நிறையவே இருந்தன யாரும் மகள் போலவோ தன் அம்மா போலவோ எல்லாம் இருந்தது என்று சொல்லிட முடியாது...அந்தக்காலம் இந்தக்காலம் எல்லாம் ஒன்றுதான்...இந்த உறவு முறை பொருத்தவரை. அப்போது கூடவே இருந்து கொடுமை...இப்போது வெளியில் தள்ளுதல் அல்லது தனியாக விடுதல் இதுதான் வித்தியாசம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்தை விரிவாக தந்தமைக்கு நன்றி.

      இன்றைய மருமகள் நாளை நாமும் மாமியார் ஆவோம் என்பதை எல்லாக் காலங்களிலும் மறந்து விடுகின்றனர்.

      நீக்கு
  10. கில்லர்ஜி ஆசிரியர்களை மாணவர்கள் மதிப்பதில்லைனு சொல்ல முடியாது...அதுக்கேற்றாற் போல ஆசிரியர்களும் இருக்க வேண்டுமில்லையா? நல்ல ஆசிரியர்களை இதில் சேர்க்க வேண்டாம்..பொதுவாகச் சொல்கிறேன். இதில் அந்தக்காலத்தை உங்களுடன் வழி மொழிகிறேன் அந்த சகவிதிகம் கூடுதல்தான்...

    திரைப்படத் துறை என்று கொஞ்சம் தான் சொல்ல முடியும் ஜி. அதை எப்படி எடுத்துக் கோள்ள வேண்டும் என்பது நம் புத்தியில்தான் இருக்கிறது. குழந்தைகள் வளர்க்கப்படுவதில்தான் இருக்கிறது பெற்றோர் கையில்தான் இருக்கிறது.நம் மீது தவறு வைத்துக் கொண்டு மற்றதைச் சொல்லக் கூடாது என்று நினைப்பதுண்டு நான். நம்மைச் சுற்றி நல்லதும் இருக்கும் க்ட்டதும் இருக்கும். இது எக்காலத்திற்கும் பொருந்தும் அதிலிருந்து எதை எடுத்துக் கொள்ளணும் எதை விடணும் என்ற பகுத்துப் பிரிதல் அறிந்தால் போதும் ஜி. அதுதான் குழந்தைகளுக்குச் சொல்லப்பட வேண்டும். அதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். பெர்றோரும் டி வி யிலேயே இருந்தால் குழந்தைகள் என்ன செய்யும்...இளையவர்கள் என்ன செய்வார்கள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எல்லாக் காலங்களிலும் சொல்லி வருவது பிள்ளைகளின் தறிகெட்ட வழிக்கு காரணம் பெற்றோர்களே...

      விஞ்ஞான வளர்ச்சிகளை குறுக்கு வழியில் பயன்படுத்துவதற்கு சிந்திப்பதில் நாமே முன்னணியில் நிற்கிறோம் ஆகவே நம்மைப் போலவே நமது சந்ததிகளும்...

      நீக்கு
  11. கில்லர்ஜி நல்ல விஷயங்களைத்தான் சொல்லியிருக்கீங்க இதுக்காக கணினியில் கவிழ்ந்து கிடப்பது தவறு இல்லையே....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே குடிகாரமட்டை சொன்னதை கணக்கில் எடுக்ககூடாதுதான்.

      நீக்கு
    2. ////அதானே குடிகாரமட்டை சொன்னதை கணக்கில் எடுக்ககூடாதுதான்////
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஆரைப்பார்த்து இப்பூடிப் பேசுறீங்க:)... ச்றி சிவசம்போ அங்கிள் உங்களை ஊரணியில் தள்ளிடப்போறார்ர் ஜாக்ர்ர்ர்ர்ர்ர்தை:)..

      நீக்கு
    3. ஆஹா உங்கள் அங்கிள் மேட்டரோ...

      நீக்கு
  12. அந்துமணி கேள்வி பதில் படித்ததின்  வினையா? உங்களுடைய பதிவுகளை வழக்கமாக ஒரு தடவை பார்த்துவிட்டு விலகி விடுவது வழக்கம். ஆனால் இது நீங்கள் எழுதியது தானோ என்று உறுதிப்படுத்த இரண்டு தடவை படிக்க வேண்டியிருந்தது. Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா
      எனது மரணகாலம்வரை நான் எழுதிக்கொண்டு இருப்பேன் அதுவரையிலும் எனது தளத்தில் வருவது எனது சிந்தனையில் உதித்ததே சந்தேகமே வேண்டாம்.

      நான் மற்றவர்களுடைய எழுத்தை எனது எழுத்தாக தரவேமாட்டேன் எனது பதிவுகளை முன்பு சுசீந்திரம் ஜெயக்குமார் என்பவர் காப்பி எடுத்து தனது முகநூலில் அவரது சிந்தனை போலவே தொடர்ந்து போட்டு வந்தது நண்பர் மூலம் அறிந்தேன்.

      பிறகு அவருக்கு சவுக்கடி கொடுப்பது போல்

      மலம் கழித்து வாழ்!
      மலம் களித்து வாழாதே!

      என்று பதிவு போட்டேன் பிறகு நிறுத்தி விட்டார்

      பிறருடைய கருத்தை நான் சொல்ல வேண்டிய நிலை வந்தால் அவர்களுடைய பெயரையும் நிச்சயம் குறிப்பிடுவேன்.

      எனது எழுத்துக்களின் பாணி தாங்கள் அறிந்திட சாத்தியமில்லை காரணம் நீங்கள் ஆடிக்கும், அமாவாசைக்கும் எனது தளம் வருபவர்.

      இதனைப் போன்ற பேட்டி பதிவுகள் நிறைய கொடுத்து இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  13. கில்லர்ஜி யை எதுக்கு வீல் ஷெயாரில இருக்கவிட்டுப் படம்பிடிச்சிருக்கினம் ஜேர்மனியில:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ அது அபுதாபி நண்பரது கம்பெனி அலுவலகத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தபோது எடுத்தது.

      நீக்கு
  14. உண்மைதான், இப்போ ஸ்ரவ் வெடிப்பது, பெற்றோல் தவறுதலாக மருமகள்மேல் ஊத்தப்பட்டு:)) எரிவது போன்றவை இப்போ கொஞ்சக்காலமாக இல்லை.. இதுக்கு என்ன காரணம்? தனிக்குடித்தனம் பெருகி விட்டதாலோ?:)).. இப்போ தனிக்குடித்தனம் பார்த்து கில்லர்ஜி பொயிங்க முடியாதேஎ:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இப்பொழுது மருமக்கள் இறப்பது குறைந்து விட்டது உண்மையே...

      நீக்கு
  15. என்னாது கில்லர்ஜிக்கு அல்வாக் குடுக்கத் தெரியாதோ?:) கதை கதையா எழுதி எங்களுக்கு அல்வாக் குடுத்ததை எல்லாம் எந்தக் கணக்கில சேர்ப்பதாம்?.. இப்பூடி சிறீ சிவசம்போ அங்கிள் கேய்க்கச் சொன்னர்ர்?:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க அங்கிள் கேட்கச் சொன்னாரா ? கேட்ட நேரம் எப்போது இரவா பகலா ?

      நீக்கு
  16. அரக்கோணத்தில் நானிருந்தபோது 6 வயது முதல் பத்து வயதுவரை என்வீட்டின் அருகே ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம் இருந்தது அதன் ஆசிரியர் நன்கு குடித்து விட்டு மனைவியை அடிப்பார் ஆனால் பாடம் மட்டும் ஒழுக்க நெறிகளாக இருக்கும் எல்லாம் நினைவில் ஆடுபவையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா மாதா, பிதா, குரு என்ற இடத்தில் தான் இருப்பதை மறவாதவர் போலும்...

      நீக்கு
  17. அடேங்கப்பா...

    பேரறிவாளனைப் பேட்டி எடுத்த மாதிரி

    குடித்தே கிடக்கும் கூரறிவாளன்..
    லஞ்சம் பிறாண்டும் பெருந்தொகையாளன்..
    குறுஞ்செய்தி போடும் குறுந்தொகையாளன்.

    இவிங்களையும் கூட்டி வந்து பேட்டி எடுத்துப் போடும்படி -
    அகில உலக அல்வாப் பிரியர்கள் மற்றும்
    இனா வானா சங்கத்தினர்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி விரைவில் உங்களுக்காகவே இவர்களை அழைப்போம். என்று விழாக்கமிட்டி தீர்மானித்து இருக்கிறது.

      நீக்கு
  18. பதிவிடுவதும் படிப்பதும் கணினி மூலமாக தானே நண்பரே

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    நல்ல காரசாரமான பதிவு. பேட்டி எடுக்கும் பதிவு கேள்விகளும். பதில்களுமாக நன்றாக உள்ளது. அதுவும் தொல்பொருள் ஆராய்ச்சி செய்பவரையே,தோண்டி எடுத்து வைத்து கொண்டு பேட்டி நடத்துவது நல்ல நகைச்சுவையாக இருந்தது. ஹா.ஹா.ஹா.

    ஆனாலும் கேள்வி, பதில்கள் கன்னத்தில் அறைவது போல் கருத்துள்ளவையாக தங்களுக்கே உரிய பாணியில்,புதியதாக மின்னுகின்றன.

    மாமியார், மருமகள் பிரச்சனைகள் இப்போதும் முற்றிலும் ஓயா விட்டாலும், தாங்கள் சொல்வது போல் இருவரையும் ஒதுக்கி வைத்து விட்டு சற்று ஓய்வு எடுத்து கொள்கின்றன.

    பாடல்கள் தற்சமயம் அக்கால பாடல்களின் இனிமையை இழந்து விட்டதென்னவோ உண்மைதான். அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

    கணினி நம்மை அடிமையாக்கி விட்டது என்பது முற்றிலும் உண்மை. சொந்தங்களை தூர விலக்கி வைத்து இருப்பதற்கு இந்த விஞ்ஞான வளர்ச்சியும் ஒரு காரணம்.

    பேட்டியில் எழுந்த கேள்வி பதில்கள் அருமை. தங்கள் சிந்தனைகளை அழகாக பகிர்ந்திருப்பதற்கு மிக்க நன்றிகள்.

    என் பதிவாக இன்று வந்த அவ(ளை)லை சந்திக்க தாங்கள் வரவில்லையே? நானும் இன்னமும் வந்தாரை வரவேற்கவில்லை. இனிதான்..!வரவேற்க ஆயத்தமாக வேண்டும். வேலைகள் சரியாக உள்ளன.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தொல்பொருள் ஆராய்ச்சி செய்பவரையே,தோண்டி எடுத்தது//

      அதானே இது பெரிய கொடுமைதான் போங்க...

      பதிவை ரசித்து கருத்துரை தந்தமைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  20. எல்லாமே உண்மை என்னும்போது என்ன சொல்லுவது? என்றாலும் அலைபேசி, தொலைபேசியும் திண்ணைப்படிப்பும் முதல் இடத்தைப் பிடிக்கின்றன. ஆனால் மாமியார், மருமகள் கொடுமை அந்தக் காலங்களை விட இந்தக் காலத்தில் குறைந்திருப்பதே உண்மை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  21. தங்கள் வெட்டி நேரத்தை....அதிகமே ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா முனைவர் அவர்களின் கருத்து நிருபரை சார்ந்தே இருக்கிறதே...

      நீக்கு
  22. கேள்விக் கணைகளும்
    பதில் கணைகளும்
    நெருப்பாகப் பறக்கிறது.
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  23. கன்னி கணினி முற்றிலும் உண்மை.

    பதிலளிநீக்கு
  24. அதே அதே ..யார் நன்கு திறமையா விளையாடறாங்களோ அவர்கள் ஜெயிக்கணும்னு நினைப்பதே நியாயம் நடிகர்கள் முதல் படத்திலேயே அரசியல் வசனம் பேசுவதுபோல் காட்சி வந்திருந்தா ஓகே .ஆனா இவங்க கொஞ்சம் உயர்நிலை வந்ததும் எல்லாத்தையும் அவதானித்து தன் நலன் கருதி பேசறாங்க அது தவறே ஹாஹா அந்த கால உணவும் அரிசியும் பலம் தந்தன என்பது அசைக்க முடியாத உண்மை :)இன்றைய தொலைபேசி தொல்லை பேசித்தான் .எல்லாத்தையும் அவசரமா செய்றாங்க கோபத்தைக்கூட நிதானமா கையாண்டது பழைய தொலைபேசி .sms மூலம் கோபம் வெறுப்பு எழலாம் தட்டோ தட்டுன்னு தட்டி விடறாங்க இப்பெல்லாம் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நடிகர்கள் முதல் படத்திலேயே அரசியல் வசனம் பேசுவதுபோல் காட்சி வந்திருந்தா ஓகே .ஆனா இவங்க கொஞ்சம் உயர்நிலை வந்ததும் எல்லாத்தையும் அவதானித்து தன் நலன் கருதி பேசறாங்க அது தவறே//

      ஸூப்பர் சகோ நடிகர்களுக்கு செருப்படி கொடுத்தது போல் இருக்கிறது.

      ஆனால் இதுல உங்க 'சித்தப்பா'வும் இருக்கிறாரே...

      விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  25. ஆராய்ச்சி மிக அருமை. நேரம் கழித்து வருகிறேன் மன்னிக்கவும்.
    எல்லாக் கேள்விகளுக்கும் பிரமாதமாக பதில் தந்துவிட்டார் பேரறிவாளன்
    ஜெர்மன் ரிட்டர்ன் தேவகோட்டைஜி.
    நடிப்பு பதில் பிரமாதம்.
    மாமியார்களும் மருமள்களும் மாறி மாறி அடிபடுகிறார்கள் மெச்சப் படுகிறார்கள்.
    கணினி நமது தோழன்,தோழி.
    கன்னியிடமிருந்து மீண்டு மனைவியிடம் சரணமடைவர்கள் அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா அழகான, விரிவான கருத்தை தந்து பாராட்டியமைக்கு நன்றி.

      நீக்கு
  26. ஆண்டிபட்டி ..தேர்தல் ரிசல்டா ?அவங்க சேர்ந்து ஒரே நேர்மையான கட்சிக்கு வேலை செய்திருக்கலாம் ஒரு  தந்தையும் மகளும் வெவேறு கட்சியில் ஆனால்  பேசிக்கொள்வதில்லைனு கேள்விப்பட்டேன் :(
    ஆசிரியர் மாணவர் பெற்றோர் சரியா சொன்னிங்க .ஆனா இப்போல்லாம் படங்கள் பார்த்தா  எதினாலன்னு தெரில பெரியோரை மதிப்பதேயில்லை 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியலால் பேசாமல் இருப்பது பெரிய குற்றமே இல்லை சகோ.

      சகோதரனை வெட்டிக் கொன்ற வெட்டிப்பயல்கள் குடும்பமே உண்டு.

      நீக்கு
  27. பேரறிவாளன் பெயருக்குத் தகுந்தாற்போல் அறிவார்த்தமான பதில்களைத் தந்திருக்கிறார். அதிலும் அவர் திரைப்படங்களில் நடிகர்கள் பேசுவதற்கும், மேடைகளில் அரசியல்வாதிகள் பேசுவதற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கியது மிக அருமை. அடிக்கடி பேரறிவாளனை பேட்டிகண்டு அவைகளை வெளியிடுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே...
      அவர் அமௌண்ட் அதிகம் எதிர்பார்க்கிறாரே... நமக்கு கட்டுபடியாகாது போலயே...

      நீக்கு
  28. பேரளிவாளன் அவர்கள் பேட்டி சூப்பர்.
    கேள்வியும் பதிகளும் அருமை.

    நான் ஊரில் இல்லாத போது பதிவு வந்து இருக்கிறது பார்க்கவில்லை, இப்போதுதான் பார்த்தேன்.

    காலங்கள் மாற்றங்கள் எப்போதும் உண்டு.
    நல்லதை எடுத்துக் கொண்டு அல்லதை விட திடசித்தம் வேண்டும்.
    அதை எல்லோரும் பெற்று இன்புற்று வாழ் இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  29. அருமையான கேள்விகளை தேர்ந்தெடுத்து... அது தான் சிறப்பு... அதற்கு தகுந்த பதிலாக... அது உங்கள் பாணி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஜி

      நீக்கு