இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், அக்டோபர் 17, 2019

அழகர்மலையிலிருந்து...


துரை, அழகர்கோவில் சென்றிருந்தேன் உறவினர்கள் சாமி கும்பிடுவதற்காக எனது மகிழுந்தில் போயிருந்தோம்.. மருமகள் எட்டு மாதமாக இருந்ததால் மலைக்கோவில் போகக்கூடாது என்ற ஐதீகத்தை மதித்து நான் மேலே போகவில்லை //இல்லாட்டாலும் கொச்சிக்கு போக கொடிகட்டித்தான் நிற்பே// என்று முணங்குவது கேட்கிறது. ஆகவே கீழே மலையடிக் காட்சிகளை தங்களிடம் பகிரலாமே என்று எமது விழிகளால் ஸ்கேன் செய்யத் தொடங்கினேன்.


பெருமாள் என்னைக் கடந்து போனார்.

பொழுது புலரும் தருணத்தில் சென்று விட்ட காரணத்தால் எல்லாவற்றையும் என்னால் கண்டு களி(ணி)க்க முடிந்தது. அங்கு நிறுத்தி இருந்த தேரின் மரவேலைப்பாடுகளின் நுணுக்கங்களை ஆராய்ந்தேன் பள்ளியொன்று இருந்தது அதனை கண்டு புகைப்படம் எடுத்தேன். சாலையோரத்தில் துறவிகளைப் போல் எல்லா அகவையிலும் சாமியார் (?) கோலத்தில் Moneyயைத் தேடும் மனிதர்கள். இவர்கள் எல்லோருமே காவி வஸ்திரம், விபூதி, சந்தனம், குங்குமப்பொட்டு, ருத்ராட்ஷ மாலைகள், கவசகுண்டலம் சகிதமாக முருகனின் அருளை நாடிவரும் பக்தர்களுக்கு இவர்கள் முன்கூட்டியே அருளைத் திணிக்கின்றார்கள், காணிக்கை கூடினால் மென்மேலும் அருள். ஒரு தலை ராகம் திரைப்பட இசையமைப்பாளரின் மூத்த மகனின் தொடக்ககால பால்வடியும் முகம் போன்ற ஒரு சாமியார் (இப்படி சுற்றி வளைத்து சொல்லக்காரணம் எனக்கு சிம்பு என்ற பெயரை எல்லாம் எனக்கு சொல்லவோ, எழுதவோ தெரியாது) அகவை இருபத்து மூன்றரை இருக்கலாம் சீக்கிரமே பெயரன் பிறக்கப் போகிறான் என்றா(ன்)ர்.

நாடோடி மன்னர்களின் மண்டபம்

உறவினர் குழுவில் ஓர் இளஞ்ஜோடியும் உண்டு வழக்கமாக இப்படி ஜோடிகளிடம் இவர்கள் விடும் வசனம்தானே... ஐயா உங்களைத்தான் என்று என்னை அழைக்க, எனக்கு குழப்பம். ஆஹா இதற்கெல்லாம் மயங்கி நாம் சட்டென நூற்றி இருபத்து ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்தால் திருச்சிக்காரவுங்க நம்மைப் பார்த்து ஹூஸ்டனிலிருந்து இஃகி இஃகி இஃகி என்று எள்ளி நகையாடக்கூடுமே என்ற கவலை வேறு.

தேர் இழுக்கும் வடம்

இருப்பினும் மனதிலொரு மகிழ்ச்சி பெயரன் பிறக்கப் போவது உறுதிதான் போலும் ஆகவேதான் திருச்சிற்றம்பலம் திருவாய் மலர்ந்து இருக்கிறார். காலையில் இவர் பல் துலக்கவில்லை என்பதை பிறகு ஆதாரத்துடன் சொல்வேன். இருப்பினும் எனக்கு ஐயம் உடன் மகிழுந்தின் உள்ளே இருக்கும் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடியில் எனது அழகிய முகத்தைப் பார்த்தேன், சற்றே மீசையை முறுக்கி விட்டும் பார்த்தேன் ஏமாளி ஏகாம்பரம் என்று எழுதி இருக்கிறதா... ? இல்லையே.


சுவாமிகளே மீண்டும் திருவாய் மலர்ந்தார் நான் சோசியன் அல்ல சொன்னது பலிக்கும் இறைவனை அரைமனதுடன் நம்புபவர் ஐயா நீர் இதற்கு உமது வாகனத்தில் எழுதி இருக்கும் இறைவன் இருப்பின் அவனே துணை என்ற உமது மூலமந்திரமே சாட்சி உம்மால் இயன்ற காணிக்கையை கொடும். இவ் வாகனத்தின் உரிமையாளர் நாமென்று எப்படி தீர்மானித்தார் ? ஏற்கனவே வலைப்பூவில் எழுதி இருந்தோமே படித்து இருப்பாரோ... இப்பொழுதுதான் எல்லோர் கையிலும் டச்போன் இருக்கிறதே... யாரிடம்தான் பணம் இல்லை ? வேறு வழியின்றி பத்து ரூபாய் நோட்டு ஒன்றை ஐந்துமுறை எண்ணி விட்டு கொடுத்தேன் நானும் நாணயமானவன்தானே...

வழியில் வள்ளலார் ஆலயத்தில்.

அடுத்து இவர்களின் காலைக்காட்சிகளை விவரிக்கிறேன். இவர்கள் எல்லோருமே இரவு நேரங்களில் ஏதோவொரு மண்டபங்களில் உறங்கி விட்டு காலையில் பொதுக்கழிப்பறைகளில் அல்லது மலையடிவாரங்களில் போய் காலைக்கடன்களை ஃபே பண்ணி விட்டு பிறகு இந்த மரத்தடிகளில் கூடுகின்றார்கள். நிகிழிக்குப்பிகளில் தண்ணீர் பிடித்து வந்து, அதில் பல் துலக்கி விட்டு, அந்த நீரிலேயே முகம் கழுவி தலையை சற்றே நீரில் துடைத்து வேறு வழி இல்லையே குளமோ, குட்டையோ எங்கு இருக்கிறது ? என்றாவது ஓர்தினம் குளிப்பார்கள் போலும். சந்தனம், விபூதிப்பட்டை, உத்திராட்சக் கொட்டை சகிதமாக ஒருவருக்கொருவர் அலங்காரம் செய்து கொள்கிறார்கள். வேறென்ன ஃப்யூட்டி பார்லர் போகவா முடியும் ? முருகப்பெருமானிடம் அருள் பெற வரும் பக்தர்களை மடக்கி அருள் பாவிக்கின்றார்கள். இதில் அதிகாலையில் வந்தவர்கள் நா(ன்)ங்கள் ஆகவே இவர்களின் வணடவாளங்கள் தண்டவாளத்தில் ஏறுவதை காண முடிந்தது. வரும் வழியில் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை இல்லத்தில் கொண்டு சென்ற உணவுகளை உண்டு களித்தோம்.


சரி இவர்களில் மற்றொரு வர்க்கங்களின் வாழ்க்கை முறைகளையும் கண்டு கொள்ளும் வாய்ப்பும் கிட்டியது அதை வேறொரு பதிவில் சந்திப்போம்.

காணொளி

85 கருத்துகள்:

  1. இஃகி, இஃகி, இஃகி! (பெங்களுருக்காரனும் சிரிக்கிறேனே! )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது கீதாக்காவின் சிரிப்பாக்கும் ராயல்டி கொடுக்கோணும்!! கௌ அண்ணா...இஃகி இஃகி இஃகி!!!!!!!(நான் அவங்களுக்காக இப்பவே சொல்லிட்டேன் அவங்க எழுந்து வந்து சொல்றதுக்குள்ள!!!!!!)

      கீதா

      நீக்கு
    2. வாங்க கௌதமன்ஜி சிரிங்க, சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க! ஹூஸ்டன் பிரச்சனை வராதவரை சிரிங்க!

      நீக்கு
    3. ஹூஸ்டன், அங்கே திருவரங்க உலா குறித்து ஏங்கிகிட்டு இருக்காங்க!

      நீக்கு
    4. அப்படி கிடையாது ஜி குட்டி குஞ்சுலுவோடு குலாவிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

      நீக்கு
  2. மிகவும் மகிழ்ச்சி...

    வாழ்த்துகள் தாத்தா ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமா சகோதரரே.. தங்களுக்கு உடல் நலம் சரியில்லை என கேள்விப் பட்டேன். இப்போது பூரண குணமா? மீண்டும் இப்பதிவில் உங்களைக் காண மகிழ்வாய் உள்ளது. நன்கு குணமடைந்து ஆரோக்கியத்துடன் வாழ மனமாற பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    2. வாழ்த்துகளுக்கு நன்றி ஜி

      நீக்கு
    3. தாத்தவிற்கு என் வாழ்த்துகள்

      நீக்கு
    4. வாங்க ஜி நன்றி

      நீக்கு
  3. கில்லர்ஜி நான் தான் ஃபர்ஸ்ட்டாக்கும்..ஹா ஹா ஹா.கரன்ட் போய் இப்பத்தான் வந்தது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா சொல்ற ஃபேவரிட் வார்த்தையல்லோ...

      நீக்கு
  4. ஹப்பா கில்லர்ஜி நீங்க ஹூஸ்ட்டன் காரங்க சிரிப்புனு சொல்லி தப்பிச்சுட்டீங்க!!! கௌ அண்ணா மாட்டிக்கிட்டார்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ஹா ஹா ஹா நான் உங்கள் காரின் மேல்ருக்கும் வாசகத்தைச் சொல்ல வந்தது இதுதான் - என்ன கில்லர்ஜி இப்படி கமல் ஹாசர் பாஷைல எழுதி வைச்சுருக்கீங்க..என்று -

    ஆரூடம் சொல்றவரை இப்பூடியா கேள்வி கேட்பது அது இருக்கட்டும்...பேத்தினாலும் மகிழ்வீங்கதானே. அது சரி ஆருடம் சொல்றவங்க - இவங்கனு இல்ல வாழ்த்தறவன எல்லாருமே பேரன்னுதானே சொல்றாங்க அது ஏன்!!!?? பேத்தி பிறக்கட்டும், பொண்ணு பிறக்கட்டும்னு ஏன் சொல்றதில்லை???!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமால் ஹசனே... எனது வார்த்தையைத்தானே உல்டா செய்கிறார்.

      அதானே பேத்தி என்று சொன்னால் வரவு வராதோ...

      நீக்கு
  6. 50 ரூபாயைக் கொடுத்தேன்னு சொல்றதுக்கு...10ரூ யை ஐந்து முறை எண்ணினாராம்...ஹூக்கும் எங்களுக்குக் கணக்கே தெரியாதாக்கும்!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உழைக்காத சோம்பேறிக்கு நானா ஐம்பது ரூபாய் கொடுக்கிற ஆளு ?

      //பத்து ரூபாய் நோட்டு ஒன்றை ஐந்துமுறை எண்ணி விட்டு கொடுத்தேன்//

      நல்லாப்படிச்சு பாருங்க!

      நீக்கு
    2. என்ன கீதா ரங்கன்... நான் அதைச் சரியாப் படிச்சுப் பார்த்தேன். //உழைக்காத சோம்பேறிக்கு// இந்த வேலைக்கு அவர் எவ்வளவு உழைக்கணும் தெரியுமா கில்லர்ஜி...

      நீக்கு
    3. உழைக்காமல் இருப்பது'ம் உழைப்பு கணக்கில் சேர்ந்து விட்டதா தமிழரே ?

      நீக்கு
    4. அதிகாலைலயே எழுந்து மேக்கப் போட்டுக்கணும். அப்போ அப்போ 'சிவாய நமஹ' என்று நமக்குக் கேட்கும்படியாகச் சொல்லி, நம்மகிட்ட இரக்கம் சம்பாதிக்கணும்.

      அவர் இருக்கிற இடம் நோக்கி நீங்க போய் காசு கொடுப்பீங்களா? அவர் உங்க கிட்ட வந்து கை ஏந்தணும். நீங்க அவரை எடை போடற வரை உங்க முகத்தையே பார்த்துக்கிட்டு அப்பாவியா இருக்கணும். சிலர் காசு போடாம திட்டுவாங்க. அதை வாங்கிக்கணும். கோபத்தைக் காண்பிக்கக்கூடாது. சிலர் சட்டுனு ரூபாய் தரமாட்டாங்க. 10 ரூபாய் நோட்டை நூறு தடவை எண்ணி எண்ணிப் பார்த்து, பத்து ரூபாய் நோட்டுத்தானான்னு ரொம்ப செக் பண்ணுவாங்க. அதுவரை அவர் வேகாத வெயில்ல, பார்த்திராத மனிதரைப் பார்த்து நின்னுக்கிட்டிருக்கணும். நீங்க கேட்கற கேள்விக்கு பொருத்தமா பொய் சொல்லணும்.... எவ்வளவு கஷ்டமான வேலை... ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்களே.

      நீக்கு
    5. //பத்து ரூபாய் நோட்டை நூறு தடவை எண்ணுவார்கள்//

      ஹா... ஹா... ஹா... இது என்னைச் சொல்லவில்லையே... ?

      நீக்கு
  7. அவங்க வண்டவாளத்தால தண்டவாளம் போட்டாலும் அதில் வண்டி ஓடும்னு நாங்க நம்பிட மாட்டோமே!!!ஹெ ஹெ ஹெ...

    அந்தக் காணொளி மனதை என்னவோ செய்தது பாவம் ஆனால் அவர் காட்டியது அங்குள்ள புத்தகங்கள் தானே அதாவது பக்திப் புத்தகங்கள் தானே..இது பத்திதான் அப்புறம் பதிவோ?!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளியில் காட்டுவது புத்தகமா ? பணமா ?

      அடுத்த பதிவு உழைப்பாளிகளைப் பற்றியதே...

      நீக்கு
  8. பேரனோ பேத்தியோ! மாதம் நெருங்கிவிட்டது இல்லையா...எல்லாம் நல்லபடியாக நடக்கவும், குழந்தை நல்லபடியாகப் பிறக்கவும் வாழ்த்துகள். குறிப்பாக கில்லர்ஜி தாத்தாவுக்கு வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. என்ன இந்த பதிவு இத்தனை தூய தமிழில் எழுதியுள்ளீர்கள்? சாமி கும்பிட சென்றதாலா? ஆங்காங்கே தெளித்துள்ள நகைச்சுவை நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா வழக்கம் போலவேதான் தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறேன்.

      வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  10. வாழ்த்துகள் ஜி.  

    காணொளி என்ன சொல்ல வருகிறது?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி காணொளி சொல்வது....

      //இப்பொழுதுதான் எல்லோர் கையிலும் டச்போன் இருக்கிறதே... யாரிடம்தான் பணம் இல்லை ?//

      நீக்கு
  11. எதிர்பாராத இடத்தில இருந்து நமக்கு ஆசீர்வாதம் வரும் நினைக்காத நேரத்தில் . ஒருவரை எனக்கு பிடிக்காது .. சும்மா எல்லாரையும் ஏமாத்தறான்னு திட்டுவேன் ஆனா அவர் என்னை பார்த்து ஒரு நாள் இறைஆசீர்வாதம் god பிளஸ் யூ என்றார் ..அது கொஞ்சம் மனசை ப்ரேகிடுச்சி எனக்கு :) அதனால் சாமியார் சொன்னதை சந்தோஷமா அக்செப்ட் செஞ்சிக்கோங்க .எழுத மாட்டேன்னு வம்புவை எழுதிட்டீங்க :) நாடோடி மன்னர்களுக்கு குளிராதா ? பாவம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ
      அவரது வாழ்த்து பலன் பெறுவதற்காக சொல்வதுதான்.

      இருப்பினும் ஏற்போம் நல் வார்த்தைகள்தானே...

      நீக்கு
  12. அழகர் மலை என்றால் மலையேறும் பாதையில் வரும்முருகன் கோவிலாஇடம்பார்த்து ச்ப்ல்ல முடியவில்லை ஆண்டுகள்பல ஆகிவிட்டதால் கோவிலுக்கு சாமி கும்பிடப்போனது போல் இல்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. வாங்க ஐயா

      சாமி கும்பிடத்தான் நான் போகவே இல்லையே... எப்படியோ பதிவு தேத்திட்டோம்ல...

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    அழகர் மலையிலிருந்து அருமையான பதிவு.
    மருமகளுக்கு எட்டு மாதமென்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.. அவர்கள்தான் மலையேறக் கூடாது. எப்படியிருந்தாலும் உங்களை காண பெருமாளே சிரமம் பாராமல் உள்ளேயிருந்து கடந்து வந்து விட்டார்.

    படங்கள், விளக்கங்கள் அழகு.
    வாகன வசனம் நன்று. இறைவன் இருக்கக் கண்டுதானே தங்கள் காரில் ஏறியுள்ளான்.

    பால் வடியும் முகம்.. ஆமாம்.. அந்தப் பெயரை நானும் எங்கோ கேள்வி பட்ட மாதிரி உள்ளது. இப்போதுதான் உங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.:)

    நூற்றி இருபத்தைந்து ரூபாயை எடுத்து கொடுத்திருந்தால் அந்த பால் வடியும் பாலகனே, எப்படியெல்லாம் சிரித்திருப்பார் என கற்பனை பண்ணினேன். என்னையும் அந்த இஃகி சிரிப்பு தொற்றிக் கொண்டது. ஹா.ஹா.ஹா.

    நாடோடி மன்னர்களின் மேக்கப்பை ரசித்து, கண்காணிப்பு செய்தது ரசிக்க வைத்தது. மற்றொரு பதிவுக்கும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ
      தங்களது மகிழ்ச்சிக்கு நன்றி.

      இறைவன் எனது காரிலும் பவனி வரட்டும் மகிழ்ச்சிதானே...

      இராயல்டி இல்லாமல் சிரிக்ககூடாதாம் மோடி ஆட்சியில் இப்படியும் வரலாம்.

      காத்திருப்புக்கு நன்றி.

      நீக்கு
  14. சிம்பு மேல என்ன கடுப்பு சாமீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க எனக்கு கடுப்பு இல்லையே...
      (எங்களுக்கு சொத்து தகராறா இருக்கு ?)

      நீக்கு
  15. உங்களுக்கு முதலில் வாழ்த்துக்கள். மருமகள் மகனுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    அழகர் கோவில் வந்தீர்களா? அழகர் கோவிலுக்கு போக விட மாட்டார்கள் இந்த சாமியார் மாதிரி இருப்பவர்கள். பெண்களும் இருக்கிறார்கள் கையில் கறுப்பு குச்சி வைத்து இருப்பார்கள். பிள்ளையார் பட்டி, திருசெந்தூர் எல்லாம் இவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் நம்மை பற்றி நிறைய சொல்வார்கள், வேண்டாம் என்று கேட்காமல் கடந்து போனால் உன் கையால் ஒரு ரூபாயாவது கொடுத்து போ என்பார்கள்.

    என்ன செய்வது வயிற்று பிழைப்பு. ஏதோ நல்ல வார்த்தை சொல்லி பிழைக்கிறார்கள். ஒருத்தர் என்றால் பரவாயில்லை நிறைய பேர் சூழ்ந்து கொள்வார்கள் . சாப்பாட்டு பணம் கொடு என்பவர்களும் இருக்கிறார்கள்.

    காணொளி அவர்களை பற்றிதான் சொல்கிறதா? வேறு மொழி பேசுபவர்கள்தான் அவர்கள்.

    உங்கள் காரில் உள்ள வாசகங்கள் நன்றாக இருக்கிறது. 'இறைவன் இருக்கிறானா' என்ற சினிமா பாடல் நினைவுக்கு வருது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ வாழ்த்தியமைக்கு நன்றி. அவர்களும் வயிற்றுப் பிழைப்புக்காகத்தானே இப்படி செய்கிறார்கள் பாவம்.

      அரசியல்வாதிகள் போல் மோசடி செய்யவில்லையே...

      காணொளியில் அவர் காட்டுவது எல்லாம் பணம்தான் மனநலம் குன்றியவர் இப்பணமே அவரது உயிருக்கு ஆபத்து.

      நீக்கு
  16. தங்கள் வீட்டிற்கு வர இருக்கும் பெயரக்குழந்தைக்கு முதற்கண் எனது ஆசிகள்! அழகர் கோவில் பெருமாள் கோவில் அல்லவா?அங்கு எப்படி முருகனின் அருளை நாடி வரும் பக்தர்களுக்கு அந்த சாமியார்கள் குறி சொல்கிறார்கள்? ஒருவேளை பழமுதிர் சோலை செல்லும் பக்தர்களை வழி மறித்து தங்கள் ‘சேவைகளை’ தொடர்கிறார்களோ? ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுகிறவர்கள் இருப்பார்கள்.

    அந்த காணொளியில் உள்ளவர் பேசும் மொழி என்ன ? ஒன்றுமே புரியவில்லையே. தொடர்கிறேன் .


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது ஆசிகளுக்கு நன்றி.

      ஆம் ஏமாறுபவர்கள் நாட்டில்தான், ஏமாற்றுபவர்களும் வாழமுடியும்.

      அவர் மனநலம் குன்றியவர் பணம் நிறைய வைத்து இருக்கிறார்.

      நீக்கு
    2. அழகர் கோயில் என்பது மூன்று கோயில்கள் தொகுப்பு. மலை அடிவாரத்தில் அரண் சூழ்ந்த கோட்டை போன்ற அமைப்பினுள் முதலில் வருவது கருப்பண்ணசாமி கோயில். அதுதான் விடாது கருப்பு. கருப்பண்ணசாமி கோயில் என்பது ஒரு கதவு மட்டும் தான். பின்னர் அதற்கு அடுத்த பெரிய கோயில் அழகர் கோயில். சித்திரை திருவிழாவில் மதுரையில் வைகை ஆற்றில் இறங்குவார். பெயர் கள்ளழகர். இவருக்குத்தான் ஆண்டாள் நூறு தடா அக்கார அடிசில் (சர்க்கரை பொங்அழகர் கோயில் என்பது மூன்று கோயில்கள் தொகுப்பு. மலை அடிவாரத்தில் அரண் சூழ்ந்த கோட்டை போன்ற அமைப்பினுள் முதலில் வருவது கருப்பண்ணசாமி கோயில். அதுதான் விடாது கருப்பு. கருப்பண்ணசாமி கோயில் என்பது ஒரு கதவு மட்டும் தான். பின்னர் அதற்கு அடுத்த பெரிய கோயில் அழகர் கோயில். சித்திரை திருவிழாவில் மதுரையில் வைகை ஆற்றில் இறங்குவார். பெயர் கள்ளழகர். இவருக்குத்தான் ஆண்டாள் நூறு தடா அக்கார அடிசில் (சர்க்கரை பொங்கல்) படைப்பதாகப் பாடியது. பெரியாழ்வார் அதை நிறைவேற்றினார்.
      மலையின் மேல் இருப்பது ஆறு படை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை. முன்பு கோயில் ஆக இல்லாமல் வெறும் வேல் மட்டும் இருந்தது. தற்போது விரிவு ப்படுத்திவிட்டார்கள். இதற்கும் மேலே நூபுர கங்கை எனப்படும் சிறிய ஊற்று உள்ளது. அங்கே ராக்காயி கோயில் உள்ளது. நூபுர கங்கையின் நீர் சுவையாக இருக்கும். Jayakumarகல்) படைப்பதாகப் பாடியது. பெரியாழ்வார் அதை நிறைவேற்றினார்.
      மலையின் மேல் இருப்பது ஆறு படை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை. முன்பு கோயில் ஆக இல்லாமல் வெறும் வேல் மட்டும் இருந்தது. தற்போது விரிவு ப்படுத்திவிட்டார்கள். இதற்கும் மேலே நூபுர கங்கை எனப்படும் சிறிய ஊற்று உள்ளது. அங்கே ராக்காயி கோயில் உள்ளது. நூபுர கங்கையின் நீர் சுவையாக இருக்கும். Jayakumar

      நீக்கு
    3. வாங்க ஐயா விரிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி

      நீக்கு
    4. ஹாஹாஹா, ஜேகே அண்ணா, நூறு தடா அக்காரவடிசிலை அழகருக்கு ஆண்டாள் சார்பாகப் படைத்தது ஸ்ரீராமானுஜர். இங்கே பிரார்த்தனையை முடிச்சுட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் போன ஸ்ரீராமானுஜரை ஆண்டாளின் அர்ச்சா விக்ரஹம்,"வாருங்கள் என் அண்ணாரே!" என வரவேற்றதாகச் சொல்லுவார்கள். அப்போ வர்ணிச்சிருப்பாங்க பாருங்க ஆண்டாளின் கால் சதங்கையின் கிண்கிணி சப்தமும் கழுத்தில் குலுங்கும் மாலையுடனும், தோளில் தொங்கும் கிளியுடனும்! ஆஹா! நினைத்துப் பார்க்கையில் கண்ணீரே வந்துடும்.

      நீக்கு
    5. மீள் வருகைக்கும், தகவலுக்கும் நன்றி.

      நீக்கு
  17. ஹாஹாஹா, முதல்லே உங்களுக்கும், உங்க மகன், மருமகளுக்கும் வாழ்த்துகள், நல்லாசிகள். பேரன் பிறக்கட்டும் நல்லபடியாக.

    ஹூஸ்டன்காரங்க சிரிப்பதைச் சொல்லிட்டீங்க. சிரிக்கவேண்டாமா? இஃகி,இஃகி,இஃகி,இஃகி, கூடவே
    "பெண்"களூர்க்காரரும் சிரிச்சுட்டார். நன்றாக நுணுக்கமாகக் கவனித்திருக்கிறீர்கள். அழகர்கோயில் போகணும்னு உங்க பதிவையும் கோமதி பதிவையும் படிச்சதிலே இருந்து தோணுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக வாழ்த்துகளுக்கு நன்றி.

      பெண்'களூரு ஹா.. ஹா..

      அழகர்கோவில் சென்று வாருங்கள்.

      நீக்கு
  18. அழகர்கோவில் பதிவு படிச்சுட்டேன். பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  19. உங்கள் வாழ்க்கையில் நல்லதே நடக்கட்டும், நடக்கும்.

    கூட்டுக் குடும்பம் அமையட்டும். பெயரன் உங்களுக்கு நிறைய வேலை வைக்கட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வார்த்தை கண்டு மகிழ்ச்சி நண்பரே...

      நீக்கு
  20. மலையடிக் காட்சிகளைச் சிறப்பாகக் கணித்திருக்கிறீர்கள்.

    ‘இறைவன் இருப்பின் அவனே துணை’. இல்லையெனின்.....

    கில்லர்ஜிக்குச் சுற்றங்களும் சொந்தபந்தங்களும் நல்ல நண்பர்களும் துணை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      நான் தற்சமயம் நப்பூக்களால்தான் வாழ்கிறேன் (இது உண்மை)

      நீக்கு
  21. முதலில் பேரன் பிறந்ததற்கு வாழ்த்துகள். அமோகமாக ஆனந்தமாக வாழவேண்டும். தாத்தாவிடம் அன்பு பொழிய வேண்டும்.
    பெருமாள் உங்களைத் தேடி வந்து விட்டார் பாருங்கள்.
    சாமியார் இந்தியில் என்ன சொல்கிறார்.
    புரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா அடுத்த மாதம்தான் பிரசவம் தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

      அவர் சாமியார் இல்லை மனநலம் குன்றியவர் அம்மா.

      நீக்கு

  22. கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் சென்று உலாவிய இடம் எங்கள் கல்லூரியில் பெண்கக் கிடையாது ஒருவேளை இருந்திருந்தால் தோழிகளுடன் உளா வந்திருப்பேன்...வாழ்க வளமுடன் கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே
      //எங்கள் கல்லூரியில் பெண்கள் கிடையாது//

      இப்பொழுது அமெரிக்காவில் அலுவலக பெண்களோடு சுற்றலாமே...

      நீக்கு
    2. கல்லூரியில் படிக்கும் போது நேரம் இருந்தது ஆனால் இப்ப நேரம் கிடைக்கவில்லையே ஜி இது எப்படின்ன கஷ்டப்படுகிறப்ப சாப்பிட ஆசையாக இருந்தாலும் நினைச்சதை சாப்பிட முடிவதில்லை ஆனால் நினைத்தை சாப்பிடும் அளவிற்கு வசதி வந்த பின் நினைத்ததை சாப்பிட முடியாது

      நீக்கு
  23. தாத்தா வாங்கப்போகும்வாகப் போகும் நண்பருக்கு மன மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன்.
    (வாழ்த்த வயதில்லை தகுதியும் இல்லை).
    அது என்னாங்க VTR ஏதும் கோவமா ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி.
      விஜய. டி. ராஜேந்திரன் மீது எனக்கென்ன கோபம் ?
      அதற்காக அவர் பெற்றெடுத்த தறுதலை மீது கோபமா ? என்று கேட்டு விடாதீர்கள்.

      நீக்கு
    2. அப்போ சிம்புவின் கேள்ஃபிரெண்ட் மீதா கோபம் கில்லர்ஜி உங்களுக்கு ஹா ஹா ஹா?:)

      நீக்கு
    3. சிம்புவோட கேலிபெண்டு எனக்கென்ன என்னுடைய, துணை மாமனாரோட மூணாவது மனைவியோட கொழுந்தன் மகளா ? கோவிப்பதற்கு...

      நீக்கு
  24. கில்லர்ஜி இப்போ நேரம் மாறிப் போஸ்ட் போடுவதால் கண்ணில் படுவது லேட்டாகத்தான், நேற்று நைட்தான் இப்போஸ்ட் பார்த்தேன், ஆனா கையில ஒரு காயம் அதனால ஸ்ரெயின் பண்ண விரும்பாமல் நித்திரையாகிட்டேன்.

    தேர் அடி மட்டும்தான் செய்திருக்குமோ.. மேல் பகுதி உடனுக்குடன் கட்டித்தான் இழுப்பார்களோ அங்கெல்லாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நேரத்தில் அலங்காரம் செய்வார்கள். மற்ற நேரங்களில் பிரித்து வைப்பார்கள்.

      நீக்கு
  25. ஓ.. வயசாகிட்டுது முழங்கால் வலி.. மலை ஏற முடியாது என்பதனை, மருமகளைச் சாட்டி அழகாகச் சொல்லிட்டீங்க:)) ஆனா தீர்க்கதரிசியான அதிராவுக்கு எல்லாம் தெரியுமெல்லோ ஹா ஹா ஹா என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஊ:)..

    பதிலளிநீக்கு
  26. மன்னர் மண்டபம், வள்ளலார் ஆலயம் எல்லாமே அழகாக இருக்கு.. ஹூஸ்டனில் இப்படி எல்லாம் இல்லையாக்கும்:)) இஃகி இஃகி:)).

    பாருங்கோ பேரப்பிள்ளை கிடைக்கப்போகிறார் என்றதும் கில்லர்ஜிக்குப் பக்தி வந்துவிட்டது:)).. என்னா கடவுள் பக்தி மீ புல்லாஆஆஆஆஆஆஆஆஅரிச்சுப்போனேன்ன் கில்லர்ஜியின் நேரடி வர்ணனை பார்த்து:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுள் பக்தியில் நான் என்றுமே ஒரே நிலைப்பாடுதான்.

      நீக்கு
  27. அதென்னது காசுக்கட்டோ.. ஹையோ என்ன சொல்கிறார் அவர் புரியுதில்லையே பாஷை.. இப்போ இந்த வீடியோ வெளிவரமுன் அவரைப் பொலீஸ் பிடிச்சிருக்கும் ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போலீஸ் பிடித்தால் பணத்தைதான் பிடுங்குவார்கள், மற்றவர்களிடம் சிக்கினால் உயிருக்கு ஆபத்து.

      நீக்கு
  28. http://mathysblog.blogspot.com/2019/10/blog-post_16.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பதிவு படித்து விட்டேன் ஐயா.
      முதல் கருத்துரையே என்னுடையதுதான்.

      நீக்கு
  29. அழகர் கோவில் அடிவார காட்சிகள் கண்டுகொண்டோம்.
    புது வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் குடும்பத்தினர்களுக்கும் பேரக் குழந்தைக்கும் வாழ்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்துரைக்கும், வாழ்த்தியமைக்கும் நன்றி.

      நீக்கு
  30. அழகர் கோயிலை நானும் தரிசனம் செய்து கொண்டேன்...

    மழலையின் வரவு மகிழ்ச்சியில் மனது...
    அன்பின் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      தங்களது வரவு கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  31. அழகர்கோயில் அழகிய இடம்....எங்களின் பயணங்கள் நினைவுக்கு வந்தன ...

    அங்குள்ள சாமியார் களை பார்த்து கொஞ்சம் பயந்து ஒதுங்கியே சென்றோம் ...

    குட்டி பேபி வரவிற்கு எனது வாழ்த்துக்களும் அண்ணா ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
  32. விரைவில் தாத்தா ஆகப்போவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! பேரன் அல்லது பேத்தி பிறந்ததும் தான் அது எப்பேர்ப்பட்ட உயர்வான பதவி என்று புரியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வாழ்த்து கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  33. வணக்கம் சகோ
    உடல் நலம் சுகமில்லை என கேள்விப்பட்டேன் நலமா..

    அடுத்தமாதம் பதவி உயர்வு வந்து விடும்...
    வாழ்த்துகள்

    பேரன் கொடுக்கப் போகிறான இல்லை பேத்தி கொடுக்கப் போகிறாளாவென பார்த்து விடுவோம்.

    மகிழ்ச்சியான தருமில்லையா....வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு