இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், அக்டோபர் 22, 2019

கல்வியும், கலவியும்


துரை, அழகர்கோவில் பதிவின் மற்றொரு வர்க்கங்களின் வாழ்க்கை முறைகள்பற்றி சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா அவைதான் இந்த கல்வியும், கலவியும். இவர்கள் அந்த சாமியார்களைப் போல் சோம்பேறிகள் அல்லர் உழைப்பாளிகள் என்றே சொல்லலாம் காரணம் இவர்கள் காசிமணி, ஊசி முதல் திருஷ்டி பொம்மைகள் வரை விற்பனை செய்பவர்கள் இவர்களில் நரிக்குறவர்களும் உண்டு தெலுகு பேசுகிறவர்களும் உண்டு.

மரத்தடிவாழ் மாந்தர்கள்

குடும்பமாக கணவன், மனைவி, மகன், மகள், கைக்குழந்தை மற்றும் எல்லா பருவத்தினரும் இங்கு கூடி வாழ்கிறார்கள். இரும்பு கட்டில்கூட வைத்து இருக்கின்றார்கள் மழை வந்தால் பொருட்களை, உணவுகளை அதனடியில் மறைத்து வைத்து விட்டு பக்கத்து கட்டிடங்களில் ஒதுங்குகின்றார்கள். மரத்தடி நிழலில் முண்டுக்கற்களை வைத்து விறகுகள் கொண்டு சமைத்து மரத்தடியிலேயே சாப்பிட்டு அதனடியிலேயே உறங்குகின்றார்கள். குளிர், பனி, வெட்கை, காற்று, மழை, வெயில் இவைகளெல்லாம் ஒரு பொருட்டே அல்ல

நாளைய அரசியல்வாதிகளின் கூடாரம்

இவர்களில் சமீபத்தில் திருமணமான இளம் பெண்ணையும் கண்டேன் கழுத்தில் புதிய மாங்கல்யம் மஞ்சல் கயிறுதான். இவர்கள் ஐந்து பவுனில் தாலிச்சங்கிலி போடுவதில்லை ஆகவேதான் இதுவரை இவர்களில் ஒரு பெண்மணிகூட கழுத்தறுபட்டதாக சரித்திரமில்லை. நான் மேலும் யோசித்தேன் இந்தக் குழந்தைகள் எங்கு கல்வி பயில்கின்றார்கள் ?
காரணம் இவர்கள் எப்படி வியாபாரத்திற்கான கணக்குகள் அறிகின்றார்கள் ?
இந்த தம்பதிகள் எங்கு கலவி கொள்கிறார்கள் ?
தவறான கோணத்தில் எண்ணுதல் வேண்டாம்
இவர்களில் மரணமடைந்தால் எங்கு புதைக்கப்படுகின்றார்கள் ?
எல்லா ஊர்களிலுமே ஜாதிக்கொரு இடத்தில்தான் புதைக்கப்படல் நிகழ்கின்றது
இப்படி பல வகையான எண்ணங்கள் என்னுள் சிறகடித்துப் பறந்தது. நமக்கு ஆட்சியமைக்கும் அதிகாரம் அழகர்மலையான் அருளால் கிடைத்தால் இவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றி விடலாம் காரணம் இவர்கள் இவ்வுலக வாழ்வின் அளப்பெரிய சுகங்களை அனுபவித்ததே இல்லையே மேலும் மனம் ஆலோசித்தது இவர்களின் அடிப்படை வசதிகளை எண்ணி பாவம் என்றே நினைத்து மனம் சற்றே இளகியது.

தனி மனித ஒழுக்கமிருந்தால் இது தேவையில்லை

இவர்கள் காலைக்கடன் கழிப்பதற்கு வெஸ்டர்ன் டாய்லெட் இல்லை. குளிப்பதற்கு பாத்டப் இல்லை. சமைப்பதற்கு கேஸ் சிலிண்டர்கள் இல்லை. மிக்ஸிகள் இல்லை ஏன் அம்மிக்கல்கூட இல்லை. ஃப்ரிட்ஜ் இல்லை. ஃபேன்கூட இல்லை. இவர்களில் இளம் பெண்கள் பூப்பெய்தால் மறைவான குடிலும் இல்லை இவர்கள் கருத்தரித்தால் ஸ்கேன் செய்து பார்த்ததும் இல்லை. இவர்களும் சந்தோஷமாகத்தானே வாழ்கிறார்கள். இவர்கள் இறைவனை வணங்கி இருக்கின்றார்களா ? திருப்பதி கோவிலுக்குள் இவர்கள் நுழைந்து விடமுடியுமா ? இதோ மலையில் இருக்கும் முருகனைத்தான் வணங்கி விடமுடியுமா ? இவர்களுக்கும் ஓட்டுரிமை உண்டு என்கிறார்கள் இதனால் பலன் மோடி ஆட்சியாளர்களை கேள்விகள் கேட்க இயலுமா ? இவர்களை பகடைக்காயாக பயன் படுத்தி, ஒரு மலையாளியும், கன்னடத்தியும் //நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க// என்று டால்டா டின்னை வைத்து ஆடிப்பாடியதை நம்பிய கூமுட்டைகள் இன்றுவரை அதே சின்னத்துக்கே குத்துகின்றனர். என்ன எலவோ போங்க இதை நினைச்சு மனம் வெறுத்து சிக்கன் சாப்புடுறதையே நிறுத்திட்டேன் காலக்கொடுமையடி கருமாரி.

உறவினர் குடும்ப அங்கத்தினர்

Chivas Regal சிவசம்போ-
அழகர்மலையான் அருள் கிடைத்தால் போதுமா ? எங்களைப் போல ஆளுங்களுக்கு பாட்டிலோட பிரியாணி பொட்டணமும் கொடுத்தால் குத்துவோம்ல...

காணொளி

34 கருத்துகள்:

  1. ஏழைகளைப் பற்றி யார்தான் கவலைப்படுகிறார்கள்? நம்ம வாழ்க்கையிலேயே எத்தனை எளியவர்களைச் சந்தித்து, அவங்களை எளிதாக கடந்து போயிடறோம்.

    வாக்கு மாத்திரம் இல்லைனா இவங்களை யார்தான் மதிப்பாங்க?

    ஏதோ எம்ஜிஆர் இவங்களை மனுஷனா நினைத்து அவங்க வேடத்திலும் நடிச்சிருக்காங்க. அதை விட்டால் வேற யாராவது அரசியல்வாதி குறவர்களைப் பற்றியோ நாடோடிகளைப்பற்றியோ எழுதியிருக்காங்களா இல்லை பேசியிருக்காங்களா?

    பதிலளிநீக்கு
  2. ஓரோர் சமயம் இவர்கள் தான் வாழ்க்கையை வாழ்கிறர்களோ எந்தகவலையும் இல்லாமல் என்று தோன்றும்

    பதிலளிநீக்கு
  3. சிலரின் வாழ்க்கை முறைகள் அழுகை வரவைக்கும் :( அடுத்தநாள் எதை  உண்போம் எதை  உடுப்போம் என்பதெல்லாம் அவங்க நினைச்சும் பார்க்கிறதில்ல ..நோய் நொடியற்ற சிறப்பான வாழ்க்கை அவர்களுடையது . ஒருவேளை இதுதான் இறைவன் அவர்களுக்கு கொடுத்த வரமோ .ஒரு வேளை மூக்குப்பிடிக்க சாப்டதுமே வெயிட் ஏறப்போகுதுன்னு எக்ஸர்சைஸ் செய்ய ஓடும் மக்கள் ,ஊர்பட்ட வியாதிகளை சுமந்து திரியும் பணக்கார வர்க்கம் முன் இந்த மரத்தடி வாழ் மாந்தர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் .ஆனாலும் சில அடிப்படை வசதிகள் பெண்களுக்கு குறிப்பா நினைச்சா ரொம்பவே வருத்தமா இருக்கு . பேரிடர் காலங்களில் பலர் உதவிப்பொருட்கள் பெண்களுக்கான அத்யாவசியப்பொருட்களை கொடுப்பது அறிந்திருக்கிறோம் .அதுமாதிரி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இப்பெண்களுக்கு எப்பவும் உதவி செய்தா நல்லா இருக்கும் இதெல்லாம் படிக்கும்போது நமக்கு மனம்  கலங்குது  ஆனால் உண்மையா கலங்க வேண்டியது ஆட்சியாளர்கள் 

    பதிலளிநீக்கு
  4. ஹையோ இப்போ பெரிய சந்தேகம் அவர் அந்த காணொளியில் வெற்று பாட்டில்களை விற்கின்றாரா ? இல்லைன்னா உற்சாக பானத்துடனா ? 10 ரூபாய்க்கு எப்படி சாத்தியம் ? ப்ளூ கலர்ல கூட ட்ரிங்க்ஸ் இருக்குமா ??   

    பதிலளிநீக்கு
  5. கில்லர்ஜி மாலை வணக்கம். அவங்க்ளோட வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் இல்லையே என்ற ஆதங்கம் எனக்கும் ஏற்படுவதுண்டு. கல்வி கற்க வழியில்லையேன்னு நினைத்ததுண்டு. ஆனால் இவங்களோடு பேசிப் பார்த்திருக்கீங்களா நீங்க? பேசிப் பாருங்க அப்ப நமக்குப் புரிந்து கொள்ள முடியும். இவர்களில் கல்வி கற்க விழைவோர் மிக மிகக் குறைவு. அப்படிப் படித்து வேலைக்குப் போகும் ஒரு பெண் பற்றிக் கூட வாசித்த நினைவு. அப்பெண் சொன்ன பல விஷயங்கள் அவர்கள் ஏன் கல்வி கற்க முடியவில்லை என்பது புரிந்தது.

    அப்பெண் கல்வி கற்க மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறாள். பள்ளி அல்ல அதற்குக் காரணம். அவர்களது வாழ்வியல் முறை. விழிப்புணர்வு இல்லாமை. இடம் பெயர்ந்து கொண்டே இருத்தல். அப்பெண் கூட தன் பெற்றோர் இடம் பெயர்ந்து கொண்டே இருந்ததால் பள்ளியில் தொடர்ந்து படிக்க இயலவில்லை என்று அவர் ஒரு கிராமத்தில் தன் உறவினர் வீட்டில் தங்கி பெற்றோர் இடம் மாறிக் கொண்டே இருந்ததால் பிரிந்து என்று கல்லூரிப் படிப்பும் முடித்து தன் சமூகத்துக் குழந்தைகளை ஊக்கப்படுத்துகிறார் என்பதையும் வாசித்த நினைவு.

    ஆனால் ஒன்று நமக்கு ஃபேன் இருக்கு, ஏசி இருக்கு, வீடு இருக்கு, நல்ல துணிகள் இருக்கு, சாப்பாடு...எல்லாம் இருக்கு

    மகிழ்ச்சி இருக்கா? அதை விலை கொடுத்து வாங்க முடியுமா? ஜி?

    இதுதான் முக்கியம் எந்த வாழ்க்கையாக இருந்தாலும் என்று தோன்றியதுண்டு ஜி...மகிழ்ச்சி என்பது நம்மிடத்தில்தானே !

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்... நாம மகிழ்ச்சி, நிம்மதி என்று நிறைய எழுதலாம். ஆனால் அடுத்த வேளை சாப்பாடு கிடையாது, கிடைக்கும் என்று நிச்சயம் கிடையாது என்பதை நாம் கற்பனை பண்ணினால் அவங்க நிலைமை எவ்வளவு கொடுமை என்று புரியும். மும்பைல, வீடு விலை மிக மிக அதிகம் என்பதால் லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தில் கணவன் மனைவி போர்வைக்கும் முயங்குவதும், அம்மா, அப்பா பக்கத்தில் இருப்பதும் எவ்வளவு கஷ்டம்னு பாருங்க. இவங்களுக்கு அதுக்கும் இடம், மழை பெய்தால் ஒதுங்கிக்க என்று அவங்க நிலைமை எனக்கு எப்போதுமே வருத்தம் அளிக்கும்.

      இந்த வீட்டுல நான் வேண்டாம்னு போடப்போகும் பொருட்கள் (உபயோகமானவை ஆனால் எடுத்துச் செல்லப்போவதில்லை என்பவை) அவர்களுக்குத்தான் கொடுக்கணும் என்று நினைத்திருக்கிறேன்.

      நீக்கு
    2. அடுத்த கமென்ட் போட வந்தப்ப கரண்ட் போச்!
      பாவம் இவர்கள். இவர்களுக்கு விழிப்புணர்வை முதலில் ஏற்படுத்த வேண்டும். பல விஷயங்களில். இவர்களின் மொழியே வித்தியாசமாக இருக்கும். இவர்களின் கைவேலைகள் அருமையா இருக்கும். அதற்கேனும் அவர்களது கைத்திறன் எல்லோரையும் அடைந்து அப்படியேனும் அவர்களது வாழ்வில் முன்னெற்றம் ஏற்பட்டால் நல்லது.

      சென்னையில் இவர்கள் பாசி விற்பது தொழிலாக இருக்கும். இவர்களிலும் கூட கொஞ்சம் வித்தியாசங்கள் உண்டு. சிலர் பறவைகளைக் அடிப்பதை சென்னையில் பார்த்திருக்கிறேன்.

      மனம் கனத்துத்தான் போகும் ஜி இவர்களைப் பார்க்கும் போது. நீங்கள் சொல்லியிருப்பது போல் இவர்கள் எல்லாரும் சந்தோஷமாக இருப்பது போலத்தான் தெரிகிறது. எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. சில ஆண்கள் ஏதேனும் வேறு தொழில் செய்வதையும் பார்க்க முடிகிறது. பெண்கள் பலர் பாசி மணிகள் வியாபரம்தான்..பாவம் மனிதர்கள். இவர்களுக்கும் ஒரு நல்ல வாழ்வு வேண்டும்...

      கீதா

      நீக்கு
    3. கில்லர்ஜி காணொளி இப்பத்தான் பார்க்க முடிந்தது. அது "தண்ணி" தானே 10 ரூபாய்க்குத் குடிகாரத் தண்ணி கிடைக்குமா என்ன? அப்ப நல்ல குடிக்கும் தண்ணீரைத்தான் இப்படி பாட்டில்ல விற்கிறாரா? ப்ளாஸ்டிக் ஒழிப்பு? இல்லை பானமே இந்த விலையா?

      கீதா

      நீக்கு
    4. பானத்தையா இப்பூடி தண்ணி விலைல தண்ணியா விக்கிறாரு?? மலையாளத்து ஊரா?

      கீதா

      நீக்கு
  6. யாரும் இல்லை என்பலர்களுக்கு தெய்வமே துணை என்பார்கள். அதுபோலத்தான் நரிக்குறவர்களும்.எல்லாத்தையும் மேலருக்கறவன் பாத்துக்குவார் என்கிற நம்பிக்கை. அவர்கள் வாழ்க்கையும் எவ்வித தடங்கலும் இன்றி ஓடத்தானே செய்கிறது?

    பதிலளிநீக்கு
  7. ஒரு சின்னப்புள்ளி எப்படி ஒரு வார்த்தையின் அர்த்தத்தையே மாற்றி விடுகிறது என்பதை நானும் பல சமயங்களில் நினைத்துப் பார்த்திருக்கிறேன். சிந்தனைக்கு உரிய பதிவு. நானும் இப்படியான மக்களைக்குறித்தும் அவர்கள் வாழ்க்கை குறித்தும் சிந்தித்திருக்கிறேன். எண்பதுகளில் எம்ஜார் ஆட்சியில் நரிக்குறவர் நல்வாழ்வு மையம் அமைக்கப்பட்டு அவர்களுக்குத் தங்கச் சின்னச் சின்ன அறைகளும் பொதுகழிப்பறையும் கட்டிக் கொடுத்தார்கள். நாங்க 2012 ஆம் ஆண்டு அம்பத்தூரை விட்டுக் கிளம்பும் வரையில் அந்த இடங்கள் போக்கிரிகளால் குடிக்க ஒதுங்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு அசுத்தமாகக் கிடந்தது. நரிக்குறவர்கள் அதே பழைய மரத்தடி வாழ்க்கை தான். அவர்களில் பானு என்னும் ஒரு பெண் மட்டும் நன்கு படித்து உத்தியோகத்திற்குப் போனாள். ஆனால் திருமணம் நரிக்குறவரோடு தான். இந்தப் பெண்ணைப் பற்றிப் பத்திரிகைகளில் அப்போதெல்லாம் செய்திகள் வந்தன. இப்போது அம்பத்தூரில் நரிக்குறவர்களைப் பார்க்க முடியலை. ஒரு இளைஞர் பூவியாபாரம் பண்ணிக்கொண்டு குடிசையில் குடும்பத்தோடு வாழ்கிறார். சிலர் காய்கறி வியாபாரம் பண்ணுகிறார்கள். அழகர்மலையில் இவர்கள் இன்னுமும் பழைய வாழ்க்கையே வாழ்கிறார்கள் என்பது ஆச்சரியத்தைத் தருகிறது.

    பதிலளிநீக்கு
  8. அவர்கள் அப்படியே பழகி விடுகிறார்கள்.  சாலை ஓரங்களில் படுத்துறங்கும் சில குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன்.  ஏதோ ஒரு காயை வைத்து நூலெல்லாம் கட்டி விற்பார்கள்.  வீட்டு வாசலில் திருஷ்டிக்காக கட்டிவைக்க மக்கள் அதை வாங்கிப்போவார்கள்.  அவர்கள் குழந்தை சாக்கடை ஓரத்தில் படுத்துறங்கி வளரும்.  கொசுக்கடி, பூச்சிக்கடி... அவர்கள் குழந்தைகள் ஆரோக்யமாகத்தான் வளர்கின்றன.

    பதிலளிநீக்கு
  9. காணொளி ஆச்சர்யப்படுத்துகிறது.  என்ன அது?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பமுடியுமா? அப்படி இருந்திருந்தால், சென்னையே காலியாகி அங்க கியூ கட்டி நின்றுகிட்டு இருப்பாங்க so called white colors. ஹா ஹா

      நீக்கு
  10. நல்ல பதிவு. வீடு இல்லாமல் மக்கள் படும் துன்பத்தை நினைத்து வருத்தமாய் தான் இருக்கிறது.
    நானும் இந்த மாதிரி ரோட்ரோத்தில் படுத்து தூங்கும் மக்களை பற்றி நினைப்பது உண்டு. அத்தனை வசதிகளுடன் வாழும் போதே எத்தனை மனக்குறைகள் நமக்கு.

    வட நாட்டிலிருந்து வந்து சோபா, பொம்மைகள் விற்பவர்கள், கத்தி , தோசைகல்,இருப்பசட்டி விற்பவர்கள் கூடாரம் போட்டு வாழ்கிறார்கள். அதிலும் எந்த வசதியும் இல்லை. குளிர், மழைக்கு எல்லாம் அந்த கூடாரம் தாங்காது.

    அழகர் மலையில் நீங்கள் பார்த்த குடும்பங்களை அங்கு தங்க விட மாட்டார்கள் இரவு என்று நினைக்கிறேன்.
    வேறு எங்காவது தங்குவார்கள். விற்பனைக்கு கட்டில் வைத்து இருக்கிறார்கள் அதில் பொருட்களை வைத்து விற்பார்கள்.

    மாயவரத்தில் பேரூந்து நிலையத்தில் நரிக்குறவர்கள் மணிமாலைகள், ஊக்கு, ஹேர்பின் விற்பவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் ஊருக்கு வெளியே கூடாரம் போட்டு இருக்கிறார்கள்.

    பெண்களுக்கு நிறைய கஷ்டங்கள் இருக்கும்.அதை உணர்ந்து நீங்கள் வருத்தபடுவது உங்கள் நல்ல உள்ளத்தை சொல்கிறது.

    காணொளி வியப்பாக இருக்கிறது 10 ரூபாய்க்கு விற்பது

    பதிலளிநீக்கு
  11. வியாபார பயணத்தில் இது போல பலரையும் பார்த்திருக்கிறேன்... அப்போது மனதில் எழும் சிந்தனைகளை பதிவில் கண்டேன்...

    ஆம் ஜி, இம்மாதிரி காணொலி எங்கே உங்களுக்கு கிடைக்கிறது...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதக்கூடியவர்களுக்கு கண்களே புகைப்படக்கருவி தனபாலன். ஆமாம் தலைப்பே ஒரு மார்க்கமாககொடுத்துள்ளார்?

      நீக்கு
  12. பரிதாபத்துக்குரிய இந்த மக்களைப் படம் பிடித்துப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டீர்களே, பார்ப்பவர் மனசு ரொம்பவே வேதனைப்படும் என்று நினைத்தீர்களோ?

    பதிலளிநீக்கு
  13. அருமை...ஒரு காலத்தில் இவர்களோடு சுற்றித் திரிந்தேன்.. கடைசிவரை அவர்கள் என்னை சேர்த்துக் கொள்ளவேயில்லை...!அப்புறம்தான் நான் பாதை மாறிட்டேன்..

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    நல்ல சிந்தனையான பதிவு. இவர்களைப் பற்றி இந்த மாதிரி சிந்தித்து கவலைப்பட்டு எழுதியிருப்பது உங்களது நல்ல மனதை காட்டுகிறது. தங்களது நல்ல உள்ளத்திற்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

    இந்த மாதிரி மரத்தடி, ரோட்டோர மக்களை கண்டு நானும் மனம் இளகியுள்ளேன். ஆனால் இவர்களுக்கு இருக்கும் நாளை என்பதைப் பற்றி கவலைப்படாத மன தைரியம் நமக்கு மிக, மிக குறைவே என்ற எண்ணமும் எனக்குள் எழுந்துள்ளது.

    அடுக்கு மாடி வீடு கட்டும் தொழிளார்களும் அப்படித்தான். அவர்கள் குழந்தைகளை பனி, வெயில், குளிர் என அவர்களை தாக்காத சமயத்தில், ஒரு மழையில் நனைந்தால்,ஒரு வாரம் படுத்து விடும் நம் குழந்தைகளை பார்க்கும் போது,அதிக சுத்தமும் சில சமயம் கெடுதல் செய்யுமோ என்ற எண்ணமும் எனக்கு வரும்.

    தங்கள் அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. இப்படிப்பட்ட ஏழைகளை பார்க்கும் போது தவிகள் செய்கிறோமோ இல்லையோ ஆனால் நமது மனதுகளில் பரிதாபம் இரக்கம் என்பது வந்தாலே நனது மனதுகளில் இன்னும் ஈரம் இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும் நாம் இல்லை நான் கூடத்தான் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விதவிதமாக சமைத்து அவர்களுக்கு கொடுத்து சந்தோசப்படுகிறேன் ஆனால் அதே நேரத்தில் விதவிதமாக கூட சமைக்க வேண்டு ஏதோ சாதம் ஒரு குழம்பு ஒரு காயய் சமைத்து அந்த மாதிரி இருக்கும் குடும்பத்திற்கு கொடுத்து சந்தோசப்படுத்துகிரேணா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் இவ்வளவு கேவலமாக நானும் இப்படிப்பட்ட ஏழைகளை பார்க்கும் போது தவிகள் செய்கிறோமோ இல்லையோ ஆனால் நமது மனதுகளில் பரிதாபம் இரக்கம் என்பது வந்தாலே நனது மனதுகளில் இன்னும் ஈரம் இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும் நாம் இல்லை நான் கூடத்தான் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விதவிதமாக சமைத்து அவர்களுக்கு கொடுத்து சந்தோசப்படுகிறேன் ஆனால் அதே நேரத்தில் விதவிதமாக கூட சமைக்க வேண்டு ஏதோ சாதம் ஒரு குழம்பு ஒரு காயய் சமைத்து அந்த மாதிரி இருக்கும் குடும்பத்திற்கு கொடுத்து சந்தோசப்படுத்துகிரேணா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் இவ்வளவு கேவலமாக நானும் இப்படிப்பட்ட ஏழைகளை பார்க்கும் போது தவிகள் செய்கிறோமோ இல்லையோ ஆனால் நமது மனதுகளில் பரிதாபம் இரக்கம் என்பது வந்தாலே நனது மனதுகளில் இன்னும் ஈரம் இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும் நாம் இல்லை நான் கூடத்தான் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விதவிதமாக சமைத்து அவர்களுக்கு கொடுத்து சந்தோசப்படுகிறேன் ஆனால் அதே நேரத்தில் விதவிதமாக கூட சமைக்க வேண்டு ஏதோ சாதம் ஒரு குழம்பு ஒரு காயய் சமைத்து அந்த மாதிரி இருக்கும் குடும்பத்திற்கு கொடுத்து சந்தோசப்படுத்துகிரேணா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் இவ்வளவு கேவலமாக நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை நினைத்தால் வெட்கமாகத்தான் இருக்கிறது கொண்டிருக்கிறேன் என்பதை நினைத்தால் வெட்கமாகத்தான் இருக்கிறது கொண்டிருக்கிறேன் என்பதை நினைத்தால் வெட்கமாகத்தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  16. நரிக் குறவர்கள் பற்றி படித்தபோது எனக்கு சாவியின் வாஷிங்டனில் திருமணம் நினைவுக்கு வந்தது. பெட்ரோமாஸ் லைட் தூக்க பிளேன் பிளேன் ஆக நரிக்குறவர்களை கொண்டு வந்து அவர்களை indian maharajas என்று சொல்வார். 
    Jayakumar

    பதிலளிநீக்கு
  17. ஏனய்யா தலைப்பு வித்தியாசமாக உள்ளதே?

    பதிலளிநீக்கு
  18. அருமையான தகவல்கள்... ஆனா இக்கரைக்கு அக்கரைப் பச்சைபோலத்தான் இதுவும்.. நாம் நினைக்கிறோம் அவர்கள் மிகவும் மகிழ்வாக இருக்கின்றனர் என.. ஆனா அவர்கள் வேறு வழியில்லாமல்கூட அப்படி இருக்கலாம்.. அவர்களும் மனிதர்கள்தானே.. அவர்களுக்கு ஆசை இருக்காதா. வெஸ்ரேன் ரொயிலெட் பாவிக்கவும் ஷவரில் குளிக்கவும்.. நிறைய தங்கம் போடவும்....

    பதிலளிநீக்கு
  19. கார் முட்ட பொருட்கள் இப்படி ஏத்தினால்:)) எங்கேதான் கில்லர்ஜி இருப்பாரோ:)).. ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  20. தலைப்பு ஒருமாதிரியாக இருந்தாலும், பதிவில் உள்ள கேள்விகள் நியாயமானவை. இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசு இனிமேலாவது நடவடிக்கை எடுக்கவேண்டும். தங்களின் மனிதாபிமான பார்வைக்கு பாராட்டுகள்! அந்த காணொளியில் விற்கப்படுவது தண்ணீர்தானே?

    பதிலளிநீக்கு
  21. தலைப்பை பார்த்ததும் பள்ளி கல்வி துறைக்கு ஏதேனும் நல்ல தகவல் சொல்ல போறீங்கன்னு நினைச்சேன் .
    மாறுபட்ட கோணத்தில் அலசியமைக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  22. குறவருக்கும் பதிவு போட்ட குணக் குன்றே..
    அவர்பற்றிச் சொல்லியதும் மிக நன்றே..
    நிலையறியா மானிடமும் விழுக என்றே
    சொல்லிடுவோம் ஊருக்கு எழுந்து நின்றே!...

    பதிலளிநீக்கு
  23. அன்பின் ஜி..

    அருமையான பதிவை வழங்கியிருக்கின்றீர்கள்.
    என்னால் தான் உடனடியாக வரமுடியவில்லை..

    தவறாக எண்ண வேண்டாம்...

    பதிலளிநீக்கு
  24. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் கில்லர்ஜி... உங்களுக்கும் உங்க குடிம்பத்தினருக்கும்...

    பதிலளிநீக்கு
  25. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஜி , வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  26. இனிய தீபாவளி வாழ்த்துகள் சகோ

    பதிலளிநீக்கு
  27. காணொளி விற்பனையாளரை கொஞ்சம் எட்ட இருந்து பார்த்தால் நம்ம கில்லர்ஜி சாயலில் தெரிகிறாரே? ...

    பதிலளிநீக்கு