இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், மார்ச் 11, 2020

செய்யாலூர், செய்வினை செய்யது


மேலே படித்தீர்களா ? குறிமேடையாம் எங்கும் தீர்க்க முடியாத செய்வினை, ஏவல், பில்லி. சூனிய பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படுகிறது. மேலும் பேய் கோளாறுகள் ஒரே நாளில் முற்றிலும் சரி செய்யப்படுகிறது. அதாவது இறைவனுக்கு நிகரானவர்கள் என்றே சொல்லலாம் போல... இவைகள் உண்மையோ பொய்யோ சரி இவைகளெல்லாம் காலங்காலமாய் நம்பி வரும், நம்பப்படும் ஆச்சார விதிமுறைகள் கடன்கள் என்றே சொல்லிக் கொள்வோம்.

சரி கணவன் – மனைவி பிரச்சனைகள் தீர மந்திரிக்கப்படும் அதெப்படி கணவன் மனைவிக்குள் வெளியில் சொல்ல முடியாத பிரச்சனைகள் உள்பட ஆயிரம் இருக்கும் அவர்களே மனதளவில் ஒற்றுமையாக இருக்க முடியாமல்தானே பிரிந்து சென்றார்கள். காரணம் புரிதல் இல்லை இவைகளை புரிய வைக்க முன்பு எல்லா இல்லங்களிலும் பெரியவர்கள் இருந்தார்கள் பக்குவமாக பேசி புரிய வைத்தார்கள். கூட்டுக் குடும்பங்களை ஒழித்தோம் அது இன்று வியாபார நோக்கில் குடும்ப ஆலோசகர் என்றும் கவுண்சிலிங் என்ற பெயரிலும் மூன்றாம் மனிதன் தலையிட்டு பணத்தை வாங்கி கொண்டு கணவனிடம் மனைவியை கூட்டிக் கொடுக்கின்றனர். சமீபத்திய நிகழ்வு ஒன்று கணவன் மீது புகார் கொடுக்க காவல் நிலையம் சென்ற பெண்ணை காவலர் கரைக்ட் செய்து திருமணம் செய்து கொண்டாராம். காலக்கெரகமடி கருமாரி.

சரி கடன் தொல்லைகள் நீங்க மந்திரிக்கப்படும் அவன் வாழ்க்கையில் வாழத் தெரியாமல், ஊதாரித்தனமாக, குடித்து கும்மாளமிட்டு எப்படியோ கடனாளியாக விட்டான் இதை தீர்க்க எப்படியும் உழைத்தால்தான் அடைக்க இயலும் அல்லது எவனாவது இளிச்சவாயன் மாப்பிள்ளை கிடைத்தால் அவனிடம் கறந்து அடைக்கலாம் அதை விட்டு மந்திரித்தால் கடன் தொல்லை நீங்குமா ? எனது பக்கத்து வீட்டு நண்பர் மலங்கோடன்தான் அடிக்கடி சொல்வார் காலையில் எந்திரிச்சா கடன்காரன் சொறிநாய் உருவத்துல காட்சி தர்றான் என்று அதாவது கடன் கொடுத்தவன் சொறிநாய் இதை எல்லாம் அதிரா போன்றவர்கள் நம்புவதால்தானே... இவர்களின் பிழைப்பு இப்படி நகர்கின்றது.
சரி குழந்தை வரம் பெற மந்திரிக்கப்படும் குழந்தை பெறாததற்கு அவர்கள் இருவரில் யாரிடமாவது மருத்துவ ரீதியான குறைபாடுகள் இருக்கலாம் இதை மருத்துவரிடம் போனால் நிச்சயமாக சரி செய்ய இயலும். இறைவனிடம் நம்பிக்கை வைத்து அம்மன் கோவில்களில் மரங்களில் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றார்களே... இதில் மந்திரித்து தாயத்து கட்டினால் குழந்தை உண்டாகி விடுமா ? இவர்களுக்கு தெய்வங்களும் உடந்தை ஆகின்றனரா ? விஞ்ஞானம் வளர்ந்தாலும் இவர்களும் வாழ்கின்றார்கள்.

சரி விற்காத வீடு, தோட்டம் நல்ல விலைக்கு விற்க மந்திரிக்கப்படும் இதெப்படி சாத்தியமாகும் ? சத்தியமாக சாத்தியமில்லை அந்த இடத்தின் மார்கெட் நிலவரம் எவ்வளவோ இதைத்தானே விற்க முடியும் நல்லவிலை எப்படி கிடைக்கும் ? கில்லர்ஜியோட தேவகோட்டை வீடு இன்றைய மார்கெட் நிலவரப்படி 8 C போகும் இதில் நான் இவரிடம் போய் மந்திரித்து 12 C க்கு விற்க முடியுமா ? நம்புறது மாதிரி சொல்லுங்கடா... சட்டப்படி இப்படி தவறான தகவல்களை பரப்பி சுவரொட்டி ஒட்டுவதையே தடுத்தல் வேண்டும் ஆனால் நமது காவலர்களுக்கு இதுவா முக்கியம் ? போங்கடா பொழப்பத்தவங்களா...

Chivas Regal சிவசம்போ-
வாயுள்ளவன் பொழைக்கிறான் ஏமாந்தவன் வாயை பொளக்குறான்.

சாம்பசிவம்-
பெரியார் இந்த மாதிரி மூடநம்பிக்கையைத்தான் எதிர்த்தாரு... அது நாளடைவில் கடவுளை எதிர்த்தது போல அமைஞ்சிடுச்சு...

67 கருத்துகள்:

  1. அஆவ் !! இன்னிக்கு பில்லி சூனியத்துக்கே  சூனியம் வச்சிட்டீங்க பதிவில் :)நான் எதையும் நம்புவதில்லை அதாவது நம்பிக்கை கடவுளில் மட்டுமே மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதித்ததில்லை .எது வேணும்னாலும் விண்ணப்பத்தை நேரடியா சொல்லிடுவேன் கிடைச்சா கடவுள் கிருபை இல்லேனா அதுவும் இறைசித்தம் இவ்ளோதான் நம்ம பாலிசி ..ஷிவாஸ் ரீகல் சாம்பசிவம்லாம் கருத்து சொன்னாங்க ஆனா சிவதாமஸ்அலி ஒன்னும் சொல்லலையே :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே வாங்க சகோ
      ஹா.. ஹா.. கடைசியில் என்னையும் இவங்களோடு சேர்த்து விட்டீர்களே...

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஉ

      நீக்கு
  2. அருகில் இருந்தால் நேரமும் இருந்தால் ஒருமுறை இது மாதிரி இடங்களை சென்று பார்த்து வர ஆசை.   ஹலோ...   சும்மா சென்று பார்த்து வரத்தான்... வேறொன்றும் இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பார்த்து வருவதற்கு இதென்ன பொருட்காட்சியா ?

      நீக்கு
    2. இல்லை ஜி...   பொழுது போக்குக் காட்சி.

      நீக்கு
    3. சில சமயம் பயமஆகக் கூட இருக்கும் ஶ்ரீராம். இதெல்லாம் நம்ப வேண்டாம் தேவகோட்டை ஜி சொல்வதே உண்மை.

      நீக்கு
    4. வாங்க அம்மா வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    மாயம், மந்திரம் என்ற ஏமாற்று வேலையெல்லாம் பொய் என்பதை அழகாக தெளிவுடன் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இறை நம்பிக்கையை தவிர்த்து மக்களில் பலர் இவர்களை நம்புவதினால்தான் இந்த சுவரொட்டிகள் ஆங்காங்கே முளைக்கின்றன. என்ன செய்ய?

    நடப்பது நடந்துதான் தீரும் என்ற கடவுள் நம்பிக்கை அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் என்ற எண்ணம் முழுமையாக எல்லோருக்கும் எப்போது வரப் போகிறதோ?
    இதை அனைவரும் உணரும் பதிவு. பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மைதான் நடப்பது நடந்தே தீரும். வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. இதையெல்லாம் நம்புபவர்கள் உள்ளவரை இவர்கள் காட்டில் மழை தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா இதற்காக இவர்களது கட்டணம் எவ்வளவு தெரியுமா ?

      சுமார் 75,000 (எழுபத்து ஐந்தாயிரம்) வரை உயர்ந்து இருக்கிறது.

      சமீபத்தில் ஒருவருக்காக மந்திரவாதியை பார்க்க போனதில் நானும்தான் (ஸ்ரீராம்ஜி போல் வேடிக்கை பார்க்க) அவர் சொன்னது 1978-ல் ரஜினிகாந்துக்கு நான்தான் மந்திரித்து தாயத்து கொடுத்தேன்.

      இன்றுவரை இவரது வாழ்க்கை புறங்கையை ........ கொண்டு இருக்கிறார்.

      நீக்கு
  5. பணம் தான் ஜி முதன்மை... அதற்கு மக்களின் மூடத்தனம் தான் மூலதனம்...

    பாருங்க ஜி... இன்று கொரோனா உலகில் உள்ள அனைத்து கடவுள் நம்பிக்கைகளையும் போட்டுத் தாக்குகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொரானோ கை கொடுத்து கொள்வதை நிறுத்தி, கை கூப்பி வணங்குவதை தொடங்கி வைத்து இருக்கிறது.

      நீக்கு
  6. எத்தை தின்னால் பித்தம் தெளியும் என்று மக்கள் இப்போது இருக்கிறார்கள். அவர்களை பயன்படுத்திக் கொள்ளுபவர்கள் இவர்கள்.

    "மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம் என்றார்கள்" பெரியவர்கள் இப்போது மனம் என்ன சொல்லுதோ அதை கேள் என்று வழி நடத்த படுகிறார்கள்.

    எவ்வளவு கஷ்டம் வந்தாலும் வெளியே சொல்ல கூடாது இறைவனிடம் மட்டும் சொல்ல வேண்டும்.
    வெளியே சொன்னால் அதை பயன்படுத்திக் கொள்ள கவுண்சிலிங்க் என்று அது இது என்று நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது.

    இன்று ரேடியோவில் குளிகை காலத்தில் கடன் வாங்க கூடாது அந்த நேரம் கடன் வாங்கினால் கடன் அதிகம் ஆகும்.


    கடனை அடைப்பது குளிகை நேரத்தில் அடைத்தால் சீக்கீரம் கடன் அடைந்து விடும் என்றார்கள்.

    குளிகை நேரத்தில் நல்லது செய்தால் அது பன்மடங்கு பெருகும் என்றார்கள் பெரியவர்கள் .

    காலத்துக்கு ஏற்ற மாதிரிதான் இது போன்ற விளம்பரங்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.
    தொலைக்காட்சியை போட்டால் இந்த மோதிரம் வாங்கினால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்
    என்றுதான் விளம்பரங்கள் வந்து கொண்டு இருக்கிறது.

    நல்ல பதிவு.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      மிக அழகாக மக்களின் மனநிலைப்பாட்டை விளக்கினீர்கள்.

      //எவ்வளவு கஷ்டம் வந்தாலும் வெளியே சொல்ல கூடாது இறைவனிடம் மட்டும் சொல்ல வேண்டும்//

      அருமை ஆம் அவனிடம் முறையிடுவதே முறையானது.

      நீக்கு
  7. பெரியார் மூட நம்பிக்கைகளை எதிர்த்தார் அதுவே கடவுளை எதிர்ப்பது போல் அமைந்து விட்டது அப்போது மூட நம்பிக்கைகளே கடவுளா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா
      பெரியார் இவ்வகையான நம்பிக்கைகளை எதிர்த்தார் முடிவில் அவர் இறைவனை எதிர்த்ததாக பரப்பிவிட பெரியார் அதையும் ஏற்றே எதிர்த்தார்.

      நீக்கு
    2. அப்போது பெரியார் கடவுள் நம்பிக்கையை எதிர்க்க வில்லையா

      நீக்கு
    3. ஐயா பெரியார் முதலில் தொடங்கியது மூடபழக்கங்களைத்தான். பின்னால் கடவுள் இல்லை என்றே பரப்புரை செய்தார்.

      உங்களை விடவா ஐயா நான் பெரியாரை அறிந்து இருக்கப்போகிறேன். நீங்கள் நேரில்கூட பார்த்து, பேசி இருந்திருக்கலாம்.
      நான் தெரிந்து கொண்டது ரஜினிகாந்த் அளவே இருக்கும்.

      நீக்கு
    4. eனக்குத் தெரிந்ததால் கேட்கவில்லை ஒரு க்லாரிடிக்க்காகத்தான்

      நீக்கு
  8. என்னவோ போங்க!...

    குறிமேடைக்கெல்லாம் குறி மேடையா ஆகிட்டீங்க!...

    ஆமா... உடுக்கைச் சத்தம் கூட கேக்குற மாதிரி இருக்கே!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி குறி சொல்பவர்களின் வயதை பாருங்கள் 25 வாலிபர்களே அதிகம் பி.காம் படித்து இருக்கிறேன் என்கிறான்.

      நீக்கு
  9. கானாடுகாத்தான் குட்டிச்சாத்தான் மந்திரித்த தாயத்து, மாந்திரீகம் என்றெல்லாம் அந்தக் காலத்திலிருந்து இப்போது வரை வரும் விளம்பரங்களெல்லாம் உங்கள் கண்ணில் படாமல், இந்த பிச்சாத்து விளம்பரம் கண்ணில் பட்ட உடனேயே ஒரு இடுகை தயார் பண்ணிட்டீங்களே கில்லர்ஜி...

    நம்ம தமிழ் தொலைக்காட்சிகளை சர்ஃப் செய்துகொண்டு இருந்த போது, மேரு மோதிரம், உரு ஏற்றிய சக்ரா என்று வித விதமாக வட இந்திய விளம்பரங்கள் (அரை மணி நேர ஸ்லாட்) தமிழ் பேச்சோடு வந்துகொண்டிருக்கு. 1800 ரூபாய் அனுப்பி இதனை வாங்கினால், வீட்டில் எல்லாப் பிரச்சனைகளும் போய்விடும், பெரிய பணக்காரராகிடலாம் என்றெல்லாம் விளம்பரம் போய்க்கொண்டிருக்கிறது. அதெல்லாம் பார்க்க ஆரம்பித்தால் குறைந்த பட்சம் 6 இடுகைகளாவது நீங்க தயார் பண்ணிடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே
      மக்களின் மனஓட்டத்தை அறிந்த இந்த கூட்டமும் பிழைக்கிறது

      இருப்பினும் நல்லா இருக்கும் என்னை இந்த தொலைக்காட்சி பார்க்க வைத்து எனது அறிவை மழுங்கடிக்க நினைக்கும் உங்கள் திட்டம் புரிகிறது.

      நீக்கு
  10. செய்வினை, பில்லி சூனியம் இவற்றில் உண்மை இருக்கிறது. ஆனால் இந்த வழியில் சென்றவர்கள் நல்லா இருக்க முடியாது. பிறருக்குச் செய்யும் கெடுதல் இவர்களுக்கு எதிராக கண்டிப்பாகத் திரும்பும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே சமீப காலமாக நான் இதை நம்பும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளேன். அதை எடுத்துவிட செலவு செய்தேன்.

      திருப்பி செய்யவா ? என்று என்னிடம் கேட்டதற்கு அந்தப் பாவச்செயலுக்கு நான் உடந்தை ஆகவில்லை செய்தவர்களை இறைவன் கவனிக்கட்டும் எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று வந்து விட்டேன்.

      இதோ ஒரு வருடம் கடந்த பிறகு எனது மகன் என்னை 'அப்பா' என்று அழைக்கிறான்.

      நீக்கு
    2. கில்லர்ஜி.... கே.பி.சுந்தராம்பாள் அவர்களுக்கு அவர்களது உறவினர்களில் (வேற யாரு... கே.பி.எஸ் உழைத்துச் சம்பாதித்ததை ஆட்டையைப் போடக் காத்திருந்தவர்கள்) ஒருவர் செய்வினை வைத்தார் என்றும், அதனால் கே.பி.எஸ் கடைசி சில நாட்கள் மிகவும் துன்பமுற்றார் என்றும் படித்திருக்கிறேன். ஆனால் ஒன்று, செய்வினை வைப்பது பெரிய பாவம் என்றும் அவர்களை அது கடுமையாகத் தாக்கும் என்றே படித்திருக்கிறேன்.

      நீக்கு
    3. தகவல் எனக்கு புதிது நண்பரே...

      செய்வினையை நம்பாமல் இருப்பவனே நான் ஆனால் சமீப காலமாக அதனுள் சிக்குண்டு சீரழியும்போது நம்பிக்கை துளிர் விடுகிறது.

      நண்பர்கள் சொன்னதுபோல் எத்தை தின்றால் பித்தம் தீரும் தற்போது எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறதாம்.

      சரி எல்லோரும் சொல்கிறார்களே போவோம் தாயத்து போடுவோம் ஆயிரம் ரூபாய் செலவு வரும்போல என்று ஆயிரம் ரூபாய் போகப்போகுதே என்று மனம் புழுங்கி போன எனக்கு...

      சொன்னான் பாருங்க அமௌண்ட்

      35,000 ஆயிரம் ரூபாய் கல கலவென சிரித்து விட்டு வந்தேன் வந்தேன் நோய் விட்டு போனது போன்ற பிரமை எனக்கு.

      எனது உயிருக்கு கேரண்டியாம் இந்த தாயத்து இது உண்மை என்றால் முதல்வர் ஆக ஆசைப்படுபவர்கள் உடனே வாங்கி கட்டிக் கொள்வார்களே...

      நீக்கு
    4. இதெல்லாம் பிஸினஸ் கில்லர்ஜி.... ஜெ. வுக்கும் ஒரு யாகம் கும்பகோணம் பக்கம் நடந்தது. சசி குரூப் இந்த மாதிரி பில்லி சூனியம், மாந்திரீகம் இவற்றில் மிகவும் நம்பிக்கை உடையவர்கள். ஆனால் எதனாலும் வரப்போவதைத் தடுக்க முடியாது.

      நீங்க என்னவோ, முதல்வர் ஆக ஆசைப்படுபவர்கள் இதெல்லாம் செய்யவில்லை என்று நினைக்கிறீர்கள். அவர்கள் இத்தகைய எல்லா வழிமுறைகளையும் செய்துவிடுவார்கள். ஆனா ரிசல்ட்? ஹா ஹா

      நீக்கு
    5. நான் கேள்விப்பட்ட வகையில் நிறைய அரசியல்வாதிகள் இவ்வழிகளில் இறங்கித்தான் உச்சம் தொட்டார்கள் என்பது தெளிவாகியது.

      நீக்கு
    6. உங்க மகன் அப்பாவாகி விட்டார். அப்பாவின் தியாகங்கள் புரிந்து இருக்கும் சகோ.

      உங்களை புரிந்து கொண்டு அன்பு செலுத்துவார்.

      நீக்கு
    7. மிக்க நன்றி சகோ

      நீக்கு
  11. ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை
    ஏமாற்றுகிறவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்

    பதிலளிநீக்கு
  12. அக்காலத்தில் ஒருசிலரே அனுபவம் உள்ளவர்கள் இருந்தார்கள்.ஆனா இப்ப பணம் பார்க்கும் வியாபாரமாக்கி பலனில்லாமல் செய்கிறார்கள். எது எப்படியோ நமக்கு என்ன நடக்க இருக்கிறதோ அதுதான் நடக்கும் என நம்புபவள். அவனின்றி அணுவும் அசையாது. மகன் அப்பா என அழைக்கிறார் என வாசிக்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கு அண்ணா ஜீ.. நல்லதே நடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ சரியாக சொன்னீர்கள் தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  13. 'எத்தைத் தின்றால் பித்தம் தீரும்.' என்ற மனப்பான்மை மக்களிடத்தே இருக்கும் வரையில் இதுபோன்ற 'பல்திறன்' கொண்ட வணிகர்கள் இருந்துகொண்டுதான் இருப்பார்கள். அரசு இதில் தலையிடாது. நாமும் பார்த்துக் கொண்டு இருக்கவேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே இதுதான் உண்மை நிலை. நம்மால் ஒன்றும் செய்ய இயலாதுதான்

      நீக்கு
  14. இதையும் நம்புறவங்க உண்டுதானே?! நான் கவனக்குறைவா கீழ விழுந்து கால் உடைச்சுக்கிட்டதுக்கு கண்ணேறுதான் காரணம்ன்னு சொல்லி கடுப்படுக்கிறவங்க இங்க உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ நலமா ?
      கீழே விழுந்தது இயல்மானது கவனக்குறைவே... இதில் கண்ணேறு எப்படி ?

      அப்படிப் பார்த்தால் நண்பர் மோடிஜி மீது எவ்வளவு கண்ணேறு இருக்கும் ???

      நீக்கு
  15. நல்லா இருக்கு. மூட நம்பிக்கை தான் எல்லாம் என்றாலும் சில, பல சமயங்களில் மருத்துவர்களே ஆண்டவனை வேண்டிக்கோங்க, பிரார்த்தனை செய்யுங்க என்று சொல்லுவதும் உண்டு. ஆகவே இறை நம்பிக்கையோ, இறைவனிடம் வேண்டுவதோ பொய்ப்பது இல்லை. என்னைப் பொறுத்தவரை இதை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      உண்மையே இறைவன் தீர்மானித்தபடி கண்டிப்பாக நிகழும் நமது மரணம் உள்பட...

      நீக்கு
  16. எங்க மாமியார்/மாமனாருக்கு இத்தகையோரிடம் நம்பிக்கை அதிகம். நாம் எடுத்துச் சொன்னால் சண்டைபோடுவார்கள். நீ ரொம்பக் கண்டுட்டியோ என்பார் மாமனார். ஆனால் இப்படியான மூட நம்பிக்கைகள் மூலம் பணம், காசு, பொருட்கள் என நிறையவே இழந்திருக்கின்றனர். அதைச் சுட்டிக் காட்டினால் கூட ஒத்துக்க மாட்டாங்க. இம்மாதிரிக்குறி சொல்பவர்கள் என்ன செய்யச் சொல்கிறார்களோ அதை அப்படியே நிறைவேற்றுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலருக்கு நம்பும் சூழல் வரும்போது அந்நிலைக்கு தள்ளப்படுவர்.

      அலைபேசியில் புகைப்படம் அனுப்பி துபாயில் இருப்பவனை தனக்கு பணம் அனுப்பும்படி செய்து விடுகின்றனர்.
      இது நடந்த உண்மை.

      நீக்கு
  17. இவர்களின் அடாவடித்தனம் சுவரொட்டி ஒட்டுவதோடு நிற்பதில்லை; பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறார்கள். இனி, மாந்திரீகத்தைப் பாடத்திட்டத்தில் சேர்க்கச் சொல்லுவார்கள்! இவற்றில் நம்பிக்கையுள்ள அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் இருக்கும்வரை இவர்கள் காட்டில் மழைதான்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே இப்ப எல்லாப் பயலுகளும் கேரளா போய் பழகிட்டு வந்து கடையை விரிச்சுடுறாங்கே...

      இவங்கெளுக்கு முடிவு கட்ட ஒரு முதல்வர் வராமலா நாசமாப் போயிடுவாரு...

      நீக்கு
  18. நீங்க சொன்னதுதான்...
    வாயுள்ளவன் பிழைக்கிறான் அண்ணா.
    நாம் இன்னும் ஏமாளியாய்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அது நானா சொன்னேன் ? சிவசம்போவுல சொன்னாரு...

      நீக்கு
  19. மக்களின் அறியாமையைக் காசாக்கிக் கொள்கிறார்கள். வேதனையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே இதுவே இன்று பலரை வாழவைக்கிறது.

      நீக்கு
  20. என்னது இது பீலிங்ஸ் வாரம் மாதிரி:), இது பொயிங்கும் வாரமோ:)... கில்லர்ஜியின் பிபி இன்னும் இறங்குதே இல்லையே... இப்போ ஒரு மந்திரக்காரரைக் கூட்டி வந்து கில்லர்ஜிக்கு தாயத்துக் கட்டினால்தான் பொயிங்குவது குறையும் ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தாயத்துக்கு 35 ஆயிரம் நீங்களா கொடுப்பீங்க ?

      நீக்கு
  21. அங்கு போகும் மக்களைத் திட்டாமல் மந்திரக்காரரைத் திட்டி என்ன ஆகும் கில்லர்ஜி... அவர்களுக்கு அது தொழில்...

    ///அதாவது இறைவனுக்கு நிகரானவர்கள் என்றே சொல்லலாம் போல..///
    அதுக்கும் மேல:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அந்தஆளு பேசும்போது தானே இறைவன் போலதான் பேசினான் அதாவது எனது உயிருக்கு கியாரண்டி தருவாராம்.

      நீக்கு
  22. ///Chivas Regal சிவசம்போ-
    வாயுள்ளவன் பொழைக்கிறான் ஏமாந்தவன் வாயை பொளக்குறான்.///
    சிறீ அங்கிள் சொல்றதுதான் கரீட்டூஊஊஊ:).. இதில உங்களுக்கு ஏன் பொயிங்கி பொயிங்கி வழியுது கில்லர்ஜி கர்ர்ர்ர்ர்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா உங்கள் அங்கிள் சரியாகத்தான் ஜொள்ளுகிறார்.

      நீக்கு
  23. குழந்தை வரம் பெற என்பதனை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே...
      யாருக்கு தெரியும் நானா மந்திரவாதி ?

      நீக்கு
    2. ஏமாறுவோர் இருக்கும்வரை ஏமாற்றத்தான் செய்வார்கள்.

      நீக்கு
    3. ஆம் ஏமாறுபவர்களே முதல் குற்றவாளி.

      நீக்கு
  24. MGR க்காக TMS அவர்கள் பாடிய முதல் பாடல் (என்று நினைவு) தான் நினைவுக்கு வருகிறது நண்பரே.
    "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே"
    அப்புறம் உங்க வீடு 12 கோ என்ன, 120 கோ போகட்டுமே உங்களுக்கு லாபம் தானே. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் பொருத்தமான பாடலே...
      120 கோடி எனக்கு அவ்வளவு பேராசை கிடையாது நண்பரே 115 கோடி போதுமே...

      நீக்கு
  25. ஹாஹா... இப்படியானவர்கள் நிறைய இடங்களில் உண்டு கில்லர்ஜி. நம் தமிழகத்தில் மட்டுமல்ல, நம் தேசத்தின் எல்லா மாநிலங்களிலும் இந்த மாதிரி நம்பிக்கைகளும், அந்த நம்பிக்கையை தன் லாபத்திற்குப் பயன்படுத்தும் ஆசாமிகளும் உண்டு. தலைநகர் தில்லியின் பேருந்துகளில் இது போன்ற பிட் நோட்டீஸ்கள் விநியோகமும் உண்டு, பேருந்தில் ஒட்டி வைப்பதும் உண்டு! முடிந்தால் ஒரு படம் எடுத்து உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஆம் உண்மையே தங்களது புகைப்படத்துக்காக காத்திருக்கிறேன் நன்றி ஜி

      நீக்கு
  26. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை
    ஏமாற்றுபவர்கள் இருக்க இடமிருக்கே!

    பதிலளிநீக்கு