அபுதாபி நகரின்
மையப்பகுதியில் இருக்கும் நான்கு கி.மீ. இந்த அண்டர்க் ரௌண்டில் நள்ளிரவு 01.00 மணிக்கு நான் எனது காரில் வரணும் காணொளியும்
எடுத்துக் கொண்டு (ஆதாரமாம்) வந்து மறுமுனையில் எனக்காக காத்திருக்கும் அதாவது
இவர்கள் எனது தலைக்கு மேலே வந்து கொண்டு இருப்பார்கள் நண்பர்களிடம் காண்பிக்க
வேண்டும் இது பந்தயம்.
நான் உள்ளே பேயை கண்டு பயந்து விடுவேனாம் நாம
பேயிடமே பேரம் பேசுற பரம்பரை. இது என்னால் முடியாதென சொன்னவர்கள் நான்கு பேர்கள்
பந்தயத் தொகை நூறு திர்ஹாம்ஸ் எனச் பேசப்ப்பட்டது நான்
காறித்துப்பி விட்டு நான்கு பேர் இருக்கீங்க தலைக்கு நூற்றி இருபத்து ஐந்து
திர்ஹாம்ஸ் போடுங்க நான் தோற்றால் உங்களுக்கு ஐநூறு திர்ஹாம்ஸ் தர்றேன். நான்தான்
தீர்மானித்து விட்டேனே நமது பணம் கண்டிப்பாக அந்தப்புறம் போவது சாத்தியமில்லையே
மேலும் இதற்காக நாம் ½ இரவு முழித்து இருக்க
வேண்டுமே அதற்கு கூலி வேண்டுமோனா... அவர்கள் அனைவருமே என்னைவிட உயர்ந்த நிலையில்
இருக்கும் அறிவாளிகள்.
நான் பயந்து விடுவேன் என்று நினைத்து அவர்கள்
பயப்படாமல் சம்மதிக்க நான் காரில் வழக்கம்போல கோடரியை எடுத்துப் போட்டுக் கொண்டு
கிளம்பி மறுமுனைக்கு வந்தேன் கையிலே காசு வாயிலே தோசை ½ மணி நேரத்தில் வேலை
முடிந்தது பணம் கொடுத்தவங்க வயித்தெரிச்சல் நமக்கு வேண்டாமே அவர்களையும்
ஹோட்டலுக்கு அழைத்துப் போய் நல்லபடியாக பகுதி பணத்துக்கு சாப்பிட்டு ஏப்பம் விட்(டோம்)டேன் மீதிப்பணத்தை அடுத்த
மாதம் பெட்ரோல் செலவுக்கு மட்டும் உபயோகப்படுத்தினேன் காரணம் அப்பொழுதுதானே
காற்றில் கரைந்து போகும் மறுநாள் ஏதும் பந்தயம் இருக்கின்றதா ? என்று கேட்டேன் இல்லை சொல்லி விட்டார்கள் என்ன
காரணமோ தெரியவில்லை. மற்றொருநாள் அந்த அறிவாளி நண்பர்களை சந்திக்கும் பொழுது
கேட்டேன்.
எதற்காக நீங்கள் என்னால் அப்படி வரமுடியாது
என்று முடிவு எடுத்தீர்கள் ? நம்மூர் என்றால் பயந்தவன் சட்டென திரும்பி
விடுவான் இது ஒரு வழிப்பாதை போனவன் போனான்டினு இங்கே நுழைஞ்சவன் அங்கே வந்துதானே ஆகணும்
மேலும் உள்ளேதான் பகல் மாதிரி அவ்வளவு லைட் போட்டு இருக்கானே... நீங்க பார்த்ததே
இல்லையா... இந்த சாதாரண ஐடியாகூட இல்லாத நீங்கள் எப்படி ஐ.டி.படிச்சீங்க ?
இல்லை நீ பயந்து போய் அப்படியே நின்றுருவேனு
நினைச்சோம்.
அதாவது நின்று போனால் போலீஸ் வந்து புடிச்சுகிட்டு
போகும்னு இதானே ஐடியா ? அவன் வந்தாலும் வண்டி திடீர்னு நின்று
போச்சுனு சொன்னால் அவன் உதவுவானே ? இதுகூட தெரியாமல் எப்படி
லைசென்ஸ் எடுத்தீங்க ? நான் சிலநேரம் இங்கிலீஷ்ல சந்தேகம்
கேட்டதுக்கு படிக்காதவன் என்பதற்காக நீங்க எல்லோருமே என்னை எத்தனை முறை கிண்டல்
செய்து இருக்கீங்க ? உண்மையிலேயே சொல்றேன் நான் படிக்காததற்காக
வருத்தப்படவில்லை உங்களாலே அந்தக்கவலை கொஞ்சம் இன்றைக்கு குறைந்த்து
விட்டது சந்தோஷமான நன்றி.
பொதுவாக எனக்கு கார் ஓட்டுவது மிகவும்
பிடித்தமான விடயம் மேலும் பலமுறை இரவு நேரத்தில் துபாய் போய்விட்டு வரும்பொழுது
இதே வழியில் தனியாக வந்து இருக்கிறேன் பல நண்பர்களும் குடும்பத்துடன் எங்கு போக
வேண்டுமானாலும் நான் கண்டிப்பாக அவர்களுக்கு வேண்டும் காரணம் கார் ஓட்டுவது
எங்கும் வழி அறிந்தவன் என்பதால் நமக்கென்ன கரும்பு தின்னக்கூலியா ? சும்மா இருக்கும் பொழுது விடுமுறை நாட்களில்
அவர்களது காரில் போகிறோம் வருகிறோம் அவர்கள் செலவு செய்கிறார்கள் உதவி செய்யும்
மனப்பக்குவம் என்னை இப்படியே ஆக்கி விட்டது ஒருமுறை இனிய இந்தியாவில்
இருக்கின்றேன் நண்பரிடமிருந்து போன்...
.
ஹலோ துபாய்ல மஹ்தூம் ப்ரிட்ஜ் பக்கத்துல
நிற்கிறேன் சத்வாவுக்கு எப்படி போறது ?
ஏங்க இது கொஞ்சமாவது நியாயமா... துபாயிலே
நின்னுக்கிட்டே இங்கே போன் செய்து வழி கேட்கிறீங்க ?
சட்டுனு சொல்லுங்க ஸிக்னல் விழப்போகுது
இப்படிப்பட்ட நண்பர்கள் எனக்கு நிறைய...
பதிலளிநீக்குதொகையை இன்னும் அதிகமாக கேட்டு இருக்கலாமே கில்லர்ஜி
வருக நண்பரே இந்த பணத்துக்கே நான்கு நபர்கள் கூட்டு (இ.ரூ.சுமார் 9000/)
நீக்குநல்ல சவால். என் மாமா ஒருவர் ஒரே ரூபாய் பந்தயம் வைத்து சில சவால்களை அவர்கள் நண்பர் குழாமுக்குள் செய்துகொள்வார்கள்! சும்மா ஜாலி... அவ்வளவுதான்.
பதிலளிநீக்குவாங்க ஜி ரம்மி விளையாடுவதில் நான் மிகவும் விருப்பமுள்ளவன் அதிகபட்சமாக நான்தான் ஜெயிப்பேன்.
நீக்குஆனால் பணம் என்றால் ஒதுங்கி விடுவேன். நீதான் ஜெயிப்பாயே பிறகு ஏன் பயம் ? என்பார்கள். பத்துப்பைசா என்றாலும் ஏற்கமாட்டேன். இது எனது கொள்கை.
நல்ல போட்டி, அதில் நீங்கள் வென்றது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஇப்போதும் உங்களை வழி கேட்பது மகிழ்ச்சி.
காணொளி நன்றாக இருந்தது.
நீங்கள் நண்பர்களிடம் கேட்ட கேள்விகள் எல்லாம் அருமை.
வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்துரைக்கும், காணொளி கண்டு ரசித்தமைக்கும் நன்றி.
நீக்குஇதற்கு பந்தயம் வைக்குமளவு நண்பர்கள் அவ்வளவு அப்பாவிகளா?
பதிலளிநீக்குநீங்க சொன்னபடி, உள்ள போனால் வெளிய வந்துதான் ஆகணும், அதுவும்தவிர அங்கெல்லாம் பயம் என்பது கிடையவே கிடையாதே (பாலைவனத்தில் மாட்டிக்கொண்டால் ஒழிய)
நண்பரே அவர்கள் அப்பாவிகள் அல்ல படித்த மேதாவி(?)களே... அவர்கள் நால்வரும் சேர்ந்து நூறு திர்ஹாம்ஸ் சொன்னார்கள்.
நீக்குநான்தான் என்னைவிட பெரிய சம்பளம், படிப்பு என்றும் நான் தோற்றால் ஐநூறு திர்ஹாம்ஸ் உங்களுக்கு கிடைக்கும்
என்று சூடேற்றி விட்டேன் காரணம் எனக்கு இவர்களை மண்ணைக் கவ்வ
விடணும் என்ற பலநாள் ஆத்திரம்
ஆம் பாலைவனத்தில்தான் பகலாக இருந்தாலும் தனியாக சென்றால் சற்றே பய உணர்வு வரும் நானும் அனுபவப்பட்டுள்ளேன் ஷீலா சாலையில் செல்லும்போது (சௌதி அரேபியா ரோடு)
சத்வா என்னுள் பல பழைய நினைவுகளைக் கொண்டு வருது. பிறகு எழுதறேன்
பதிலளிநீக்குசத்வாவில் பாக்கிஸ்தான் ஹோட்டல்களில் சில நல்ல உணவகங்களும் உண்டு.
நீக்குசத்வா அனுபவத்தை சொல்லுங்கள்.
சத்வாவிற்கு நான் சென்றது திருமணத்துக்கு முன்பு (தேரா துபாயில் வசித்தபோது). உடல் எடை குறைய அங்கு ஒரு ஜிம் இருந்தது. அதில் நாம் உடல்பயிற்சிகள் செய்ய வேண்டாம். அந்த அந்த உபகரணங்களில் படுத்துக்கொண்டு, நின்றுகொண்டு இருந்தால், அந்த மிஷின் ஆடும்போது அந்த அந்தப் பகுதிகள் உடல்பயிற்சி செய்ததுபோல ஆகிவிடும். படுத்துக்கொண்டு இருக்கும் உபகரணத்தில் இரண்டு கால்களையும் கட்டிவிடுவார்கள். மிஷினை ஆன் செய்தால் ஒரு கால் மேலே போகும். அது கீழிறங்கியபின் அடுத்த கால் மேலே போகும். இப்படி ஒரு மூன்று மாத கோர்ஸில் சேர்ந்து எடை குறைக்க முயற்சித்தேன். அப்போல்லாம் சத்வா என்பது கொஞ்சம் விலை குறைந்த வீடுகள் இருக்கும் இடம். (உடல் எடைலாம் குறையலை... பாக்கெட்டில் இருந்த பணம்தான் குறைந்தது)
நீக்குஅப்புறம் ஷார்ஜாவில் கிடைத்த ஒரு ஆயுர்வேத டாப்லெட் டப்பா, 35 திர்ஹாம் ஒரு பாட்டில் என்று நினைவு..வாங்கினேன். உணவு உண்ட பிறகு ஒரு டாப்லெட் சாப்பிடணும். அப்போ எடை குறையுமாம். அதையும் 3 டப்பா வாங்கி முயற்சி செய்தேன்.
ஆனால், சாப்பிடுவதில் கண்ட்ரோல் இருக்கணும், பகுதி பகுதியாகத்தான் சாப்பிடணும், இனிப்பு கூடவே கூடாது என்பதெல்லாம் நான் பின்பற்றவில்லை என்பதையும் சொல்லியாகணும். ஹா ஹா
ஹா.. ஹா.. பாக்கெட் மணிதான் காலியானதா ?
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்களுடைய பந்தய அனுபவம் நன்றாக உள்ளது. அதில் நீங்கள் முழு மூச்சாக பயமின்றி அவர்கள் கூறிய இலக்கை அடைந்து வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். ஆனாலும் தங்கள் மனது கேட்காமல், தங்கள் நண்பர்களை உடனே உணவுக்கு அழைத்துச் சென்று அவர்களிடமிருந்து பெற்ற பணத்தை அவர்களுக்கே செலவழித்து விட்டது தங்களின் பெருந்தன்மையான மனதை வெளிப்படச் செய்கிறது. அந்த நல்ல மனதுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
காணோளி கண்டேன். இதில் என்ன இருக்கிறது ஒன்றுமில்லையே..! என நானும் யோசித்து முடிப்பதற்குள் வரும் உருவத்திற்கு பெயர்தான் பேயா? ஹா. ஹா. ஹா. தலைப்புக்கு பொருத்தமான பெயரை இறுதியில் கண்டு ரசித்தேன். சுவாரஷ்யமான பதிவு அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நீக்குவருக சகோ
ஆமாம் அப்படி செலவு செய்யவில்லையெனில் எனக்கு மொத்த பணமும் தண்டமாக செலவு வந்துரும்.
காணொளியை கண்டு தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
உங்கள் மீசையை பார்த்தும், இப்படி ஒரு சவாலா...?
பதிலளிநீக்குதுபாய் to இனிய இந்தியா தொலைதொடர்பு அசத்தல்...
வாங்க ஜி விதி வலியது தலைக்கு 125 திர்ஹாம்ஸ் மொய் என்பது எழுதப்பட்டது
நீக்குசும்மாவா உங்க தாத்தா சொன்னார். மீசையுள்ளவன் பிழைச்சுப்பான்.
பதிலளிநீக்குதாத்தா இதையும் சொல்லி இருக்காரா ?
நீக்குநல்ல பாட்டைப் போட்டுட்டு கடேசியிலே இப்படி பயமுறுத்திட்டீங்களே
பதிலளிநீக்குவருக கவிஞரே
நீக்குநான் எங்கே பயமுறுத்தினேன் ?
அருமையான காணொளி.
நீக்குபாடலும் ,பின் வரும் கூச்சலும் அரண்டு போகிற மாதிரி இருக்கு:)
அன்பு தேவகோட்டைஜி, உங்களிடம் பந்தயம் வைத்தவர்கள் பித்தம் பிடித்தவர்கள்.
இந்த மாதிரி எத்தனை அண்டர்க்ரவுண்ட் சாலைகள். துபாயிலிருந்து
அபுதாபி செல்லும் வழியில் ,120 மைலுக்கு மேல் விரையும் வண்டிகளைப்
படம் எடுத்து அபராதம் கட்ட வேண்டி வந்தவர்களையும் பார்த்திருக்கிறேன்.
ஆனால் அத்து மீறி விரையும் அந்த ஊர்த்தலைவர்களின் பிள்ளைகளாய்க் கவனிப்பார்களா தெரியாது.
நல்லதொரு பதிவு. எப்பொழுதும் வெற்றியுடன் இருக்க வாழ்த்துகள்.
வாங்க அம்மா பதிவை ரசித்து கருத்துரை தந்தமைக்கு நன்றி
நீக்குபணமும் கிடைக்கும், அதற்காக நீங்கள் செய்யவேண்டியதும் உங்களுக்கு நமக்கு பிடித்தமான ஒன்றை. #மச்சம்
பதிலளிநீக்குஅதைவிட இந்தி பாட்டு மிக அருமை. இப்படி பாட்டை கேட்டால் எங்கே பயம் வரும்.
வருக நண்பா
நீக்குஇதில் பயப்பட ஒன்றுமே இல்லை.
வருகைக்கு நன்றி.
அபுதாபி போயும் நம் ஆட்களுக்குப் பேய் பயம் தொடர்வது வேதனைதான் நண்பரே
பதிலளிநீக்குசிலருக்கு தொட்டில் பழக்கம் நண்பரே..
நீக்குநல்ல போட்டி அதில் நீங்கள் வென்றதும் மகிழ்ச்சி. காணொளி நன்றாக இருக்கிறது. அடிக்கடி கேட்ட பாடல்! அதிலே பாருங்க,கில்லர்ஜி பெயர் வந்ததும் முடிஞ்சாச்சாக்கும்னு நினைச்சா! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பேயார் வந்து பயமுறுத்தறார். இது எதிர்பார்க்காத ஒன்று. நல்லா ரசனையோடு யோசிச்சு யோசிச்சு எழுதறீங்க!
பதிலளிநீக்குஹா.. ஹா.. காணொளி மிரட்டி விட்டதா ?
நீக்குபோலீஸோ, அரசுத் துறைகளோ மக்களின் நண்பன் என்பதற்கு உதாரண தேசங்கள் பெரும்பாலான கல்ஃப் தேசங்கள். இதை நம்மவர்களால் (இந்தியர்களால்) புரிந்துகொள்ள முடியாது.
பதிலளிநீக்கு//காவல்துறை மக்களின் நண்பன் என்பதற்கு உதாரண தேசங்கள் பெரும்பாலான கல்ஃப் தேசங்கள்//
நீக்குஉண்மையான வார்த்தை நண்பரே
காணொலி கண்டேன் பேயைக்காணவில்லையே
பதிலளிநீக்குகாணொளி இறுதிவரை காணுங்கள் ஐயா.
நீக்குநமக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைச்சி இப்படி பல்ப் வாங்கும் பலர் உண்டு .சில விஷயங்கள் common சென்ஸ் இதுக்கு பட்டம் படிப்பு தேவையில்லை :)துபாய்லருந்து அட்ரஸ் வழி கேட்பவர் உங்க மேலுள்ள ஒரு நம்பிக்கையில் கேட்டிருக்கிறார் ஹாஹா :)காணொளியில் இருப்பது அந்த அண்டர்கிரவுண்ட் பாதையா ?பேய் அழகா இருக்கு :) அது யாரை பார்த்து பயப்படுது பாவம் :))))) வீஸ்ச் வீல்ன்னு கத்துது :)
பதிலளிநீக்குவருக சகோ பேய் என்னைப் பார்த்து கத்தி விட்டதோ ?
நீக்குஅதானே... யாருக்கிட்டே வந்து யார் சவால் விடுறது!..
பதிலளிநீக்குசரி... பயமுறுத்தாம இருக்கணும்..ந்னு அந்தப் பேய்களுக்கு கொஞ்சம் அன்பளிப்பு
கொடுத்தீங்களே...
இல்லையில்லை... நான் ஒன்னும் அதப் பத்திப் பேசலை...
வாங்க ஜி இரண்டு எலுமிச்சம் பழம் கொடுத்தேன்.
நீக்குயாரை... உங்களையா பயமுறுத்த முடியும்! பாவம் அந்த நண்பர்கள்.
பதிலளிநீக்குகாணொளி நன்று. முடிவில் இப்படி எதோ ஒன்று நடக்கப் போகிறது என எதிர்பார்க்க முடிந்தது. :)
வாங்க ஜி ரசித்தமைக்கு நன்றி
நீக்குதுணிச்சலுக்கு ஒரு கில்லர்ஜி. இது வலையுலகம் அறிந்த செய்தி. போட்டியில் வெற்றி பெற்றதற்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குநானும் நண்பர்களுடன் ரம்மி விளையாடுவேன். தோற்றவர்கள் கடலை மிட்டாய், பொறியுருண்டை வாங்கித் தரவேண்டும். பணம்? ஊஹூம்.
பாராட்டுகளுக்கும், தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி நண்பரே
நீக்குவீடியோவில் பார்க்கப் பயமாக இல்லையே கில்லர்ஜி, இங்கும் இப்படி tunnel பாதை இருக்கிறது, ஆற்றுக்குக் கீழால போகும், மேலே கப்பல்கள் போகும்.. நான் தனியே போயிருக்கிறேனே.. பயமில்லைத் தெரியுமோ:)).. பேய் வராது:)) ஹா ஹா ஹா..
பதிலளிநீக்குஉங்களுக்கு நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள்.. நீங்கள்தான் அவர்களுக்கு வழிகாட்டி போலும்..
நீங்கள் எப்படி பேய்க்கு பயபடுவீர்கள் ?
நீக்குஎன்ன சின்னப் புள்ளைத்தனமா இருக்கு....
உங்களை பயமுறுத்தமுடியுமா? அப்படியே பேய் வந்திருந்தாலும் தங்களின் மீசையைப் பார்த்து பற(ய)ந்தோடியிருக்கும்! காணொளியில் தங்களின் பெயரைப் பார்த்து பேய் அலறுவதை இரசித்தேன்!
பதிலளிநீக்குஆஹா எனது பெயரைப் படித்துதான் பேய் அலறியதா ?
நீக்குபேயிடம் பேரம் பேசுவதா?
பதிலளிநீக்குஅருமையான படைப்பு
கொரோனா தொற்றில் இருந்து முற்காப்பு எடு!
http://www.ypvnpubs.com/2020/03/blog-post_15.html
வருக நண்பரே இதோ வருகிறேன்.
நீக்குஉங்களிடம் பந்தயம் வைத்தவர்கள் துபாய்க்கு புதியவர்களா? சிறு குழந்தை கூட அதில் தனியாக தைரியமாக போகுமே? ஜெயித்ததோடு மட்டும் இல்லாமல் அவர்களுக்கும் விருந்து கொடுத்த உங்கள் பண்பை பாராட்டுகிறேன்.
பதிலளிநீக்குவாங்க மேடம் என்னைவிட ஜூனியர்கள்தான் ஆனால் பெரிய பொச்ஷிசன்.
நீக்குவிமானத்தில் பறந்தாலும், கப்பலில் பயணித்துத் தொலைதூரம் சென்றாலும் பேய் பயம் விடாதோ?
பதிலளிநீக்குவருக முனைவரே
நீக்குசிலருக்கு தொட்டில் பழக்கம்....... மட்டும்.
''நான் காரில் வழக்கம்போல கோடரியை எடுத்து போட்டுக்கொண்டு '' .... எனக்கு இங்கதான் உங்க தைரியம் மேல கொஞ்சம் டவுட்டு வருது... நீங்கதான் தைரியமான ஆளாச்சே ?!! பேயிடமே பேரம் பேசுற பரம்பரை வேற ... [ம் ...ம் நெனப்புதான் பொழப்ப கெடுக்குமாம்] எதுக்குங்க பக்கத்துல ''கோடரி'' ??? !! தோட்டத்துல பூ பறிக்கிறதுக்கா???
பதிலளிநீக்குவருக நண்பரே கோடரி எப்பொழுதும் என்னுடன் இருக்கும் பேனாவைப் போலவே கூடவே இருக்கும்.
நீக்குஓ ... அப்படியா? .... இது நமக்கு இம்புட்டுக்காலமா தெரியாம போச்சே !!... இப்ப ஒத்துக்கிறேன் .... நீங்க ஒரு தைரியமான பர்சன்தான் என்கிற உண்மைய அத்தனைபேரு முன்னாடியும் நான் ஒத்துக்கிறேன் !!!...
நீக்குஆம் நண்பரே பஜ்ஜி கடைக்கு போனாலும் கோடரியால் வெட்டித்தான் பஜ்ஜியை தின்பேன்.
நீக்குதலைப்பையும் அதன் கீழே இருந்த புகை படத்தையும் பார்த்தவுடன் பே பே பே என்று தான் விழித்தேன் .
பதிலளிநீக்குகடைசியில் நீங்கள் எழுதிய நான்கு வரிகள் தான் சிரிப்பின் உச்சக்கட்டம்.
வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி.
நீக்கு