கொரோனா வந்தாள் பல்லாயிரம் உயிர்களை எடுத்துச் சென்றாள் ஆறறிவு படைத்தவன் என்ற அகந்தை மனிதன் எல்லாம் உருவமற்ற கொரோனாவை கண்டு அஞ்சினான். ஐந்தறிவு பெற்ற சிந்தையில்லா மிருகங்கள் எல்லாம் நாங்கள் இயல்பு வாழ்க்கைதான் வாழ்வோம் என்றன. ஊரடங்கு உத்தரவு எல்லாம் பத்திரிக்கை படிக்கும் பாவேந்தர்களுக்கு மட்டுமே என்றன படிப்பறியா நாய்களும், ஆடுகளும், மாடுகளும், கழுதைகளும், ஏன் பன்றிகளும்கூட.
மூவேந்தர்கள் மூவருமே எங்களுக்கு அபிஷேகமும் வேண்டாம், ஆலாபனையும் வேண்டாம், தொழுகையும் வேண்டாமென கை கழுவினர் இறை நம்பிக்கையற்ற அரை நம்பிக்கை மனிதர்களை..
கொரோனாவின் விழிகளுக்கு நாடு தெரியவில்லை, மாநிலம் தெரியவில்லை, மாவட்டம் தெரியவில்லை, ஊர் தெரியவில்லை, கிராமம் தெரியவில்லை, மதம் தெரியவில்லை, ஜாதி தெரியவில்லை, உறவு தெரியவில்லை, பாலினம் தெரியவில்லை, முதியவர் தெரியவில்லை, முதல்வரும் தெரியவில்லை, பிஞ்சி பாலகரும் தெரியவில்லை, பிரதமரும் தெரியவில்லை. எம்மதமும் சம்மதமே என்று எல்லோரையும் அரவணைக்க முயன்றது பிடி கொடுக்காதோர் பலர் அதில் தேவகோட்டையானும் ஒருவன் இவனை கொரோனா நெருங்கவில்லை காரணம் பெயரே கிலியை கொடுத்தது.
கொரோனா நீ பல மனிதர்களின் முகத்திரையை கிழித்து விட்டாய் நாய், ஆடு, மாடு, பன்றி, சேவல், மயில், காகம் இனங்களை விட்டு விட்டாய் ஒருக்கால் நீ இவைகளையும் தொற்றியிருந்தால் எங்களின் நிலை ? நன்றி கொரோனா இத்தனை காலமும் மருத்துவமனை வளாகங்களில் நிரம்பி வழிந்த மக்கள் வெள்ளம் எங்கே ? இப்பொழுது யாருக்கும் எந்த நோயும் வரவில்லையே... உன்னைத் தவிர காரணமென்ன ? பயம்தானே.. ஆக இத்தனை காலமும் எதற்கெடுத்தாலும் மருத்துவமனை போனது அவசியமற்றதுதானே... ?
இனி இப்படியே வாழ்ந்தால் என்ன ? பர்க்கர், பிட்ஷா, கேஎஃப்ஸி, கோக் இவைகள் இனிமேல் அவசியமில்லையே முதலில் பணம் கிடைக்காது பொருளாதாரச்சரிவு நாட்டுத் தலைவர்களுக்கு மட்டுமல்ல வீட்டுத் தலைவர்களுக்கும்தான்.
கொரோனா பயணச்சீட்டு எடுக்காமலேயே விமானம், கப்பல், புகையிரதம், பேருந்து, என்று சகல வாகனத்திலும் பயணம் செய்தாள். நாடு நாடாய் பறந்து திரியும் மோடிகூட ஊறுகாய் ஜாடியில் போட்ட வடு மாங்காய் போல அடங்கி கிடந்தார். ஆடி மகிழுந்து வைத்திருந்தவர்கூட ஆடிப்போய் விட்டனர் ஓடி ஒளிந்து கொண்டனர் கொரோனா எத்தனை மனிதர்களை நீ மல்லாத்தி விட்டாய் நீ மள்ளாங்கி ஜாதிக்காரி என்றே நினைக்கிறேன். கொரோனா உம்மிடம் ஒரேயொரு கேள்வி.
கொரோனா உம்மை அனுப்பி வைத்தது இயற்கையா ? இறைவனா ?
உண்மை உரக்கக் கூறப்பட்டுள்ளது, வாழ்த்துகள் !!!
பதிலளிநீக்குவருக நண்பரே மிக்க நன்றி
நீக்குஅது என்ன மள்ளாங்கி ஜாதிக்காரி? புரியலை. கொரோனா இன்னமும் அடங்கவில்லை. குறைந்து தான் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு பிரிட்டனில் தடை விதிச்சிருக்காங்க. நம்ம ஊரில் கோயில்களில் பொதுமக்களுக்குத் தான் சேவை இல்லை. மற்றபடி எல்லாக் கோயில்களிலும் அன்றாட வழிபாடுகள் சிறப்பாகவே நடைபெற்றன. எந்தக் கோயிலும் மூடவெல்லாம் இல்லை. மக்கள் வந்து செல்லத் தடை! கோயில் ஊழியர்கள், அர்ச்சகர்கள், மற்றப் பணியாளர்களோடு எல்லாப் பண்டிகைகள், திருவிழாக்கள் கொண்டாடப் பட்டன.
பதிலளிநீக்குஏதோவொரு ஜாதியின் பெயரைக் குறிப்பிட்டால் பிரச்சனையாகி விடும்.
நீக்குநான் சார்ந்த ஜாதியை குறிப்பிட்டாலும்கூட பிரச்சனைதான் ஆகவேதான் கற்பனையில் இப்படியொரு பெயர் வைத்தேன்.
2021 எல்லா மனிதருக்கும் நலமாகும் என்று நம்புவோம்
// ஊறுகாய் ஜாடியில் போட்ட வடுமாங்காய் மாதிரி...//
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா...
ஒரு பிரதமரை நக்கல் செய்து சிரிக்கலாமா ?
நீக்குகண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் மாதிரிதான். கொரோனாவிடம் மாட்டியவர்களுக்குத் தெரியும் அதன் வேகமும், அதனால் விளையும் வேதனையும். மற்றவர்கள் பொய், மெய் என்று சொல்லிக்கொண்டிருப்பர்கள். இந்த நாட்டில் எதை வைத்துதான் பிழைப்பு நடக்கவில்லை? இதை வைத்தும் அனைத்துத் தரப்பினரும் சம்பாதித்தார்கள்/கிறார்கள்! இப்போது லண்டனில் வந்திருக்கும் கொரோனா இன்னும் வீரியம் மிக்கது என்று அந்நாட்டுத் தலைவர் சொல்லி ஊரடங்கு போட்டிருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஆம் இன்று பலரும் பணம் பார்த்து விட்டனர் என்பது உண்மையே...
நீக்குகொரோனா கடவுளுக்கு இணையாகி விட்டதே..
இப்போது யாருக்கும் எந்த நோயும் வரவில்லையா? யார் சொன்னது? என்னுடன் பணிபுரியும் நண்பரின் 45 வயது தம்பி கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக இன்று அபாய கட்டத்தில் இருக்கிறார். அவருக்கு வேறு எந்த நோயும் கிடையாது.
பதிலளிநீக்குஆமாம் ஜி இன்னும் முழுமையாக விடுபடவில்லைதான்
நீக்குதங்களது நண்பரின் தம்பி நலம் பெற பிரார்த்தனைகள்
"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,
பதிலளிநீக்குநிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,
அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!
அன்னவர்க்கே சரண் நாங்களே"
கம்பன்
இயற்கையும் இறைவனும் நீங்களும் நானும் ஓன்றே.ஆக்கியவனும் அவனே, அழிப்பவனும் அவனே. அவனன்றி ஓரணுவும் அசையாது.
Jayakumar
வாங்க ஐயா தங்களது வருகைக்கு நன்றி
நீக்குகொரோனா அனேகமா எல்லாரையும் படுத்திவிட்டது. கொஞ்சம் அதுகிட்ட பயபக்தியோட இருப்பது நல்லதுதான்.
பதிலளிநீக்குஇது ஒவ்வொரு sectorலும் நிறைய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கு. உதாரணமா, Information Technologyல, வீட்டுல இருந்தே ஒருத்தர் இண்டெர்னெட் மூலமா வேலை பார்க்க முடியும்னா, எதுக்கு ஆபீஸ்னு ஒண்ணு வேணும், டிராஃபிக் ஜாம்னு சொல்லி லேட்டா வரவைக்கணும், கார் அலவன்ஸ் தரணும்? வீட்டில இருந்தே வேலை பார்க்க முடியும்னா, கொட்டாம்பட்டியும், பெங்களூரும் சென்னையும் ஒன்றுதானே. எங்கேர்ந்து வேலை பார்த்தால் என்ன? கரண்டும், இண்டெர்னெட்டும் இருக்கணும். அவ்ளோதான்.
இந்த நிலை வந்தால், ஐ.டி. கம்பெனிகளுக்கு பஸ்ஸில் ஆட்களை அழைத்துப்போவதற்காக பஸ்களை வாங்கி அந்தத் தொழில் செய்தவர்கள், புதிது புதிதா சிட்டில அடுக்கு மாடிக் குடியிருப்புகள் உண்டாக்கினவங்க, இவங்களை நம்பி, பிராண்டட் ஹோட்டல்கள், காஃபி ஷாப் வைத்தவங்க, மால்கள் கட்டினவங்க என்று பலப் பல பிஸினெஸ்களும் பாதிப்படைஞ்சிருக்காங்க. வீட்ல வேலை செய்யறேன்னு சொல்லிட்டு, 'சார்..கரண்ட் இல்லை, இண்டெர்னெட் ஒர்க் பண்ணலை'னு யாரேனும் சொன்னா, அவங்க பாஸ் உடனே, 'அப்படியா சரி..இன்றைக்கு லீவு போட்டுக்க' என்று சொல்லிவிடுகிறார்கள்.
இங்க பெங்களூர்ல, அவங்க அரசியல் அழுத்தம் தந்து, ஐ.டி. கம்பெனிகளையெல்லாம் திறக்க வைங்க என்று முதலமைச்சரிடம் வேண்டுகோள் வைத்திருக்காங்க.
இந்த கொரோனானால மிகப்பெரிய லாபம் அடைஞ்சவங்க, மருத்துவ உலகமும், இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகளும்தான். (இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி பற்றி இன்னொரு சமயம்)
வருக நண்பரே
நீக்குஆம் வீட்டிலிருந்து வேலை பார்ப்பது சில சௌகரியங்கள் உண்டு என்றாலும் நீங்கள் சொல்வது போல பலரது வாழ்வாதாரம் பாதிப்பது உண்மைதான்.
தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.
இந்த கொரோனா பலபெரு முதலாளிகளை மேலும் பெருமுதலாளிகளாக்கி இருக்கிறது
பதிலளிநீக்குஆம் நண்பரே நிதர்சனமான உண்மை
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல பதிவு. மள்ளாங்கியை மாற்றி முள்ளங்கி என்று படித்து விட்டேன். அப்படியொரு ஜாதி இருக்கிறதா? படத்தைப்பார்த்தால் மலை ஜாதி பெண் போல் இருக்கிறது. மலை ஜாதியினரோ? நல்ல நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர்.அதற்கு எப்போதும் பயந்து மரியாதை செலுத்துவது நல்லது. அது யாரை, எப்போது வந்து தாக்கும் என கண்களால் கண்டு பிடிக்க முடியாத கடவுள்தான். இயற்கையான வேறு நோய்களும் எப்போதும் போல் மனிதர்களை நெருங்குகின்றன.சுலபமாக கொல்கின்றன. ஆனால் எதற்கும் மருத்துவமனைக்கு செல்லத்தான் பயமாக இருக்கிறது. செல்லாமலும் இருக்க முடியவில்லை. சீக்கிரம் இந்த கொரானாவுக்கு மருந்து கண்டு பிடித்தால் நல்லது. ஆனால் அது வந்து விட்டால் அப்போதும் பயந்தான். (நல்லபடியாக குணமாக வேண்டுமே) என்னவோ.. இந்த ஆண்டு பிறந்த வேளை மனதில் நிறைய கவலைகள் வந்து விட்டது. ஆண்டு வேகமாக ஓடி முடிவுக்கு வந்து விட்டது. ஆனால், கவலைகள்? பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ முள்ளங்கி ஹா.. ஹா.. பலமூறை இந்த ஷாதியை உபயோகப்படுத்தி இருக்கிறேன்.
நீக்குமற்ற ஜாதியை சொன்னால்
பிரச்சனை வரும் ஆகவேதான் கற்பனையில் இப்படியொரு பெயர் வைத்தேன்.
விரிவான கருத்துரைக்கு நன்றி
பதிலளிநீக்குகொரோனா வந்தாள் என்று சொல்வதன் மூலம் அதை பெண்ணாக்கி விட்டீர்கள்... நல்ல வேளை உங்கள் பதிவுகளை பெண்ணியவாதிகள் படிப்பத்தில்லை இல்லையென்றால் உங்களுக்கு எதிராக கிளம்பி இருப்பார்கள்
ஆஹா இப்படியும் ஓர்வகை இருக்கிறதோ...
நீக்கு/மோடிகூட ஊறுகாய் ஜாடியில் போட்ட வடு மாங்காய் போல அடங்கி கிடந்தார்.//
பதிலளிநீக்குமோடியை போய் வடு மாங்காய்யோட ஒப்பிட்டு இருப்பது கண்டணம் ஊறிய வடு மாங்காய் மிக அருமையாக இருக்கும் ஆனால் இந்த மாங்காய் அழுகின மாங்காய்
வடுமாங்காயை கேவலப்படுத்தி விட்டேனோ...
நீக்குஎன்னவென்று சொல்வதம்மா
பதிலளிநீக்குவஞ்சி இவள் பேரழகை!...
சொல்ல மொழியில்லையம்மா
கொஞ்சு மொழிப் பூவழகை!..
வாங்க ஜி வருகைக்கு நன்றி
நீக்கு2.0 காத்திருக்காம்...
பதிலளிநீக்குஅவள் 2021-ல்...?
"ல்" தொகுப்பில் சந்திப்போம்...!
பார்க்கலாம் ஜி நலமே விளையட்டும்.
நீக்குஆறறிவு மனிதன் கொரோனாவைக் கண்டு அஞ்சி நடுங்குகிறான். ஐந்தறிவு உயிர்கள் இயல்பு வாழ்க்கை வாழகின்றன.
பதிலளிநீக்குமனிதனை மட்டும் குறி வைத்துத் தாக்குகிற இந்தக் கொரோனாவை அனுப்பி வைத்தது யார் என்பது உங்கள் கேள்வி.
விடை கிடைக்கிறதோ இல்லையோ மனதராய்ப் பிறந்த அத்தனை பேரையும் சிந்திக்க வைக்கிற கேள்வி.
2 பிழைகள்:
நீக்குவாழகின்றன - வாழ்கின்றன
மனதராய்ப் பிறந்த - மனிதராய்ப் பிறந்த
வருக நண்பரே ஆம் ஆறறிவுக்கே பயஉணர்வு. தங்களது அழகிய கருத்துரைக்கு நன்றி
நீக்குதேவகோட்டையில இருக்கும் என் பெயரைப்பார்த்துப் பயந்து கொரோனா நெருங்கவில்லை என மீசைவீரமெல்லாம் பேசுறீங்களே:)).. சமீபகாலமாக உங்கள் போஸ்ட்டுக்கள் எல்லாம் ஒரு மார்க்கமாகவே இருக்குதே:)).. ஐ மீன் கொரோனா வந்தால் இப்பூடி ஆருக்கும் புரியாப் பாஷையில பேசுவினமாம் என பிபிசி ல சொல்லிச்சினம்.. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ் என ஜிவனே என என் பாட்டில போய்க்கொண்டிருந்தேன்.... பொஸ்ட்டைப் போட்டு என் வாயைக் கிளறிட்டீங்க:)).. என் வாய்தேன் நேக்கு எடிரி:).
பதிலளிநீக்கு//சமீபகாலமாக உங்கள் போஸ்ட்டுக்கள் எல்லாம் ஒரு மார்க்கமாகவே இருக்குதே//
நீக்குஅப்படியா கீது ?
அதுசெரி போட்டோவில அயகாக் கில்லர்ஜியைப் பார்த்துச் சிரிப்பது ஆரு கில்லர்ஜி?:) ஃபுறொம் உகண்டா?:))
பதிலளிநீக்குஹி.. ஹி.. மள்ளாங்கியாக இருப்பாளோ... ?
நீக்குதங்களது வருகைக்கு நன்றி
2021இல் இதற்கு விடிவு பிறக்கும் என நம்புவோம்.
பதிலளிநீக்குஆம் நம்பிக்கையே வாழ்க்கை.
நீக்குநலமே விளையட்டும். இந்த பிரச்சனையிலிருந்து விடுபடும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் - நம்மில் பலரும்!
பதிலளிநீக்குவாங்க ஜி புதிய வருடமாவது உலகுக்கு நன்மை தரட்டும்.
நீக்குகொரோனா புது அவதாரம் எடுத்து வருது ஜி..மீண்டும் ஒரு ரவுண்டு வரப் போகுது போல. இப்படி இன்னும் எத்தனை மாறு வேஷம் போட்டு சுத்தப் போகுதோ?!! எல்லாரையும் கதிகலங்க வைக்கப் போகுதோ. நல்லது நடக்க வேண்டும்
பதிலளிநீக்குகீதா
வருக இது புதிய நாடகம்போல தெரிகிறது எல்லா நாடுகளிலும் இதனை வைத்து பணம் பண்ணுகிறார்கள்
நீக்குகரோனாவை அனுப்பியது இயற்கையுமில்லை..இறைவனுமில்லை நண்பரே.... உலகமயம் என்ற கார்ப்ரேட் தனியார் மயங்களால் விளைந்தது.
பதிலளிநீக்குஆம் நண்பரே மறுக்க இயலாத உண்மை.
நீக்குகேள்வி நல்ல கேள்வி
பதிலளிநீக்குபதில் தேடும் படலம் தொடருது ஐயா!
2021 இல் - தங்கள்
தளத்திற்கு அடிக்கடி வருவேன்.
வருக பாவலரே மிக்க நன்றி
நீக்கு