கோடீஸ்வரன் இவன் ஒவ்வொரு தினமும்...
ராக்கெட்டில் போவான் ராதிகாவோடு...
கப்பலில் பயணிப்பான் கனகாவோடு...
ரயிலில் போவான் ரதிதேவியோடு...
பேருந்தில் செல்வான் பேச்சியம்மாவோடு
மகிழுந்தில் போவான் மஞ்சுளாவோடு...
மோட்டார் சைக்கிளில் பறப்பான் மோகனாவோடு...
ஆட்டோவிலும் போவான் ஆராதனாவோடு...
ரிக்சாவில் போவான் ரிதுமிதாவோடு...
ஸ்கூட்டியில் போவான் ஸ்வப்னாவோடு...
சைக்கிளில் போவான் சைலஜாவோடு...
நடந்தும் போவான் நளினாவோடு...
காரணம் இந்த தூங்குமூஞ்சி எப்பொழுதும் கனவில்தான் பெயர்தான் கோடீஸ்வரன் செய்யும் வேலையோ பிச்சை எடுப்பது அதற்கும் சோம்பல் பட்டு வாரத்தில் மூன்று தினம் விடுமுறை போட்டு விடுவான் கனவு காண....
காணொளி...
ஹாஹாஹாஹா! கொஞ்சம் தீவிரமான யோசனையில் கருத்துப் பதிந்துவிட்டு வந்தால், இங்கே ஒரே சிரிப்பு! இஃகி,இஃகி,இஃகி!
பதிலளிநீக்குவருக ரசித்து சிரித்தமைக்கு நன்றி.
நீக்குஇவர் கோடீஸ்வரரா கேடீஸ்வரரா சார்?
பதிலளிநீக்குவருக நண்பரே பேடீஸ்வரராக இருப்பாரோ ?
நீக்குமாட்டு வண்டிக்கு யாரும் மாட்டவில்லையா ஜி? காணொளியில் இருக்கும் அந்த உந்து என்ன உந்து?! முன்பு பெரிய காணொளியாய் இதைப் பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்குமாட்டுவண்டியில் போவதற்கு மாலா ஒப்புக்கொள்ளவில்லை போலும்...
நீக்குஇப்படிக் கனவு காணவும் கொடுத்துவைத்திருக்க வேண்டும்!
பதிலளிநீக்குஉயர்தரக் கற்பனை!
வருக நண்பரே ஆம் கொடுப்பினை வேண்டும்தான்.
நீக்குஇதை கிழக்கு கடற்கரையோராமாக கில்லர்ஜி கீர்த்தனாவோடு இருக்கும் போது யோசித்து எழுதியதாக இருக்குமோ என்னவோ
பதிலளிநீக்குஆஹா இப்படியும் இருக்கலாமோ... நன்றி தமிழரே...
நீக்குகில்லர்ஜி கிருஷ்ணவேணியோடு - என்று போட்டால்தானே சரியாக வரும்? இல்லை கிரிஜாவோடு.
நீக்குபைக்கில் பறப்பான் பைங்கிளியோடு
ஜெட்டில் செல்வான் ஜெஸிகாவோடு
பாடிக்கொண்டே செல்வான் பாமாவோடு
ஓடிக்கொண்டே செல்வான் ஓமனாவோடு
மாட்டுவண்டியில் செல்வான் மாளகிவாவோடு
குதிரை வண்டியில் செல்வான் குந்தவையோடு
இதெல்லாம் மிஸ்ஸிங்கோ?
ஆஹா எதிர்ப்பாட்டு ஸூப்பர் நண்பரே இரசித்தேன்.
நீக்குஏன் யானை குதிரை ஒட்டகம் ஆகியவற்றை விட்டு விட்டீர்கள். கோடீஸ்வரன் மிருகங்களை மதிப்பவரோ? (மாட்டு வண்டி ஸ்ரீ ராம் கேட்டுவிட்டார்)
பதிலளிநீக்குவாங்க ஐயா இவர் லேட்டஸ்ட் கற்பனைவாதியாக இருப்பாரோ ?
நீக்குநண்பரே எந்த அடிப்படையில் இவர் கோடிஸ்வரர் ஆனாரோ தெரியலியே
பதிலளிநீக்குவருக நண்பரே மனம் நினைத்தால் மாளிகை கட்டலாம். (ஹி.. ஹி.. கனவில்)
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல பெயர் பொருத்தங்களுடன் அருமையான கனவுகளுடன் வாழ்க்கை வண்டி இப்படி ஓடுது கோடீஸ்வரனுக்கு.(கொடுத்து வைத்தவர். ஹா.ஹா) அவர் இப்படித்தான் என நிர்ணயத்த உங்கள் கற்பனையும் அருமை. இப்படியெல்லாம் கற்பனை செய்யவும் உங்கள் ஒருவரால்தான் முடியும். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.
நீக்குஆகா
பதிலளிநீக்குரசித்தேன் நண்பரே
ரசித்தமைக்கு நன்றி நண்பரே...
நீக்கு12 பேர்கள் தானா ஜி...!
பதிலளிநீக்குநடப்பு கணக்கு 12 தான் ஜி
நீக்குரசித்த கனவு...
பதிலளிநீக்குரசித்தமைக்கு மிக்க நன்றி
நீக்குநனவுலகில் செய்ய முடியாதவை கனவிலாவது நடக்கட்டுமே
பதிலளிநீக்குவாங்க ஐயா அதானே... இதுவாவது நடக்கட்டும்.
நீக்குஹா ஹா ஹா இது ஆரு கில்லர்ஜியோ:)) எது எப்படியோ கொடுத்து வைத்தவர்:) ஒவ்வொரு வாகனத்திலும் ஒவ்வொருவரோடு:)).. ஆனா எல்லாம் பாஷனாக ஆட்களாக இருக்கு பேரூந்தில மட்டும் ஏன் கிராமத்துப் பெயர்.. பேச்சியம்மா?:)) அங்குதான் இடிக்குது:))
பதிலளிநீக்குவாங்க ஏன் பேச்சியம்மாள் பெயர் கசக்குதோ ?
நீக்குகோடீஸ்வரன் வில்லேஜ் முதல் விண்டேஜ் வரை ஆசைப்படுகிறான் இதில் உங்களுக்கு ஏன் பொறாமை ?
மீசை வச்ச ஆட்களே இப்பூடி ஒரு அநியாயத்தைத் தட்டிக் கேய்க்காமல் சப்போர்ட் பண்ணினால் வேறு ஆராம் தட்டிக் கேய்க்கிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... என்னை ஆரும் தடுக்க வாணாம் நேக்கு ந்நிடி வேணும் .. இப்பவே மனுக் கொடுக்கிறேன் மோடி அங்கிளுக்கு:)..
நீக்குவாங்க மோடியும் அங்கிளா ?
நீக்குதங்களது மீள் வரவால் எனக்கு நல்லதொரு தலைப்பு கிடைத்து விட்டது நன்றி.
உங்கள் கவிதையைப் படித்துக்கொண்டு வரும்போதே அது கனவு என்று புரிந்து விட்டது!
பதிலளிநீக்குவருக சகோ தங்களது வருகைக்கு நன்றி.
நீக்கு