இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், நவம்பர் 09, 2020

ருசியான வசியம்


மருமகனுக்கு மாமியார் வீட்டில்
ருசியா விருந்து வைத்தது அந்தக்காலம்
வசிய மருந்து வைப்பது இந்தக்காலம்.

தனது மகளை மாப்பிள்ளைக்கு
வாஞ்சையோடு கட்டிக் கொடுத்தார்கள் அன்று
வஞ்சகத்தோடு கூட்டிக் கொடுக்கின்றார்கள் இன்று.

மனப்பொருத்தம் அறிய ஜாதகம் பார்க்கிறார்கள்
மணம் முடிந்ததும் தனக்கு சாதகமாக பிரிக்கிறார்கள்

திருமணம் நடத்தும்வரை சம்பந்தி என்கிறார்கள்
திருமணம் முடிந்ததும் சம்மந்தி என்கிறார்கள்.

கழுத்தில் தாலி ஏறும்வரை பெரிய மனிதராக நடக்கிறார்கள்
ஏறி முடிந்ததும் தனது சின்ன புத்தியை காட்டி விடுகிறார்கள்.

திருமணத்தில் மாமியாரை அறிமுகப்படுத்தி வைக்கிறார்கள்
மறுவாரமே மாமியை யார் என்று கேட்டு அலற விடுகிறார்கள்.

பலரது மரணம் பிரிந்த குடும்பத்தை இணைத்து வைக்கிறது
சிலரது திருமணம் ஒற்றுமையான குடும்பத்தை பிரித்தும் வைக்கிறது.

சொத்துக்கு ஆசைப்பட்டு சிலரது வீட்டில் பெண் கொடுக்கிறார்கள்
காரியம் முடிந்ததும் பெற்றோரை சோத்துக்கு அலைய விடுகிறார்கள்.

திருமணத்துக்கு முன் சம்பந்திகளுக்கு செய்முறை சிறப்பாக செய்கிறார்கள்
திருமணத்துக்கு பின் சம்பந்திகளுக்கு செய்வினையும் செய்கிறார்கள்.

தனது பெண்ணை கொடுக்கும்போது நல்ல குடும்பமாக பார்க்கிறார்கள்
காரியம் முடிந்ததும் மருமகனை மட்டும் குடும்பத்திலிருந்து பிரிக்கிறார்கள்.

சமூகத்தில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டு இருக்கிற கசக்கும் உண்மைகள் இவை பலரது குடும்பங்களில் இன்றைய நிலைப்பாடு.

ChivasRegal சிவசம்போ-

பேப்பயலுக... பெத்த புள்ளைய விட்டுக் கொடுத்துட்டு தெருவுல போக வேண்டியதுதான்...

41 கருத்துகள்:

  1. யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க

    ன்னு இருந்தால்தான் நாம நிம்மதியா பொழைக்கமுடியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே இதுவே தற்போது நடைமுறை கொள்கை முதல் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. ருசியா விருந்து - வசிய மருந்து
    வாஞ்சையோடு - வஞ்சகத்தோடு
    ஜாதகம் - சாதகம்
    சம்பந்தி - சம்"மந்தி"

    சரி தான்... இனி திருக்குறளை ஆய்வு தொடங்க வேண்டியது தான்... பதவுரையைப் பிரிக்க நண்பர் கில்லர்ஜி இருக்கும் போது கவலை ஏன்...? நன்றி ஜி....

    ஏறும்வரை - ஏறி முடிந்ததும்

    மாமியாரை - மாமியை யார்

    பலரது மரணம் - சிலரது திருமணம்

    சொத்துக்கு - சோத்துக்கு

    செய்முறை - செய்வினையும்

    பார்க்கிறார்கள் - பிரிக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      ஹா.. ஹா.. பிரித்து மேய்ந்து விட்டீர்கள் நன்றி ஜி

      நீக்கு
  3. இவை எல்லாம் எந்தக் காலத்திலும் உண்டு நண்பரே! இப்போதை விட முன்னாட்களில் தான் வசிய மருந்து, வஞ்சகம் எல்லாம் அதிகமாகவே இருந்ததாகச் சொல்லுவார்கள். எக்காலத்திற்கும் பொருத்தமானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் இது இக்காலத்தில் அதிகரித்து விட்டது(ம்) உண்மை.

      நீக்கு
  4. கசக்கும் உண்மைகள் . காலம் காலமாய் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
    கடமையை முடித்து விட்டால் எங்கிருந்தாலும் வாழ்க ! என்று வாழ்த்திக் கொண்டு இருக்க வேண்டியதுதான் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் வாழ்த்தி விட்டு ஒதுங்குவோம் இதுவே நலம் வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  5. நீங்கள் எந்த் காலத்தவர் ஜி

    பதிலளிநீக்கு

  6. எனக்கு தெரிந்த வரை இந்த மாதிரி பிரச்சனைகள் இங்கு இல்லை....கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே அது (அறிவில்) வளர்ந்த நாடு.

      நீக்கு
    2. இங்கே அப்படி இல்லை என்று சொல்லுவதற்கு காரணம் இங்கு அவர்களாகவே தங்களுக்கு பிடித்தவர்களை கல்யாணம் செய்து கொள்வதுதான்

      நீக்கு
    3. @மதுரைத்தமிழன் - பசங்களுக்கு 18 ஆகிவிட்டாலே, அவங்க நம்மை எதிர்பார்க்க மாட்டாங்க, நாம அவங்களை எதிர்பார்க்க மாட்டோம்... நீ நல்லாருக்கயா, நான் நல்லாருக்கேன் என்ற ரிலேஷன்ஷிப்தான் அங்க.

      ஆனா இங்க இன்னமும், குடும்பம், தன் பையன்/பெண், தன் வாரிசுகள் என்ற cycle இருக்கு இல்லையா? அதனால்தான் மகன், தன் மாமியார் வீட்டோடு ஒன்றிவிடுவது, மகளை, அவங்க புகுந்த வீட்டில் சேரவிடாமல் பிறந்தவீட்டினர் கொஞ்சம் டாமினேட் பண்ணுவது போன்ற பிரச்சனைகள் உண்டு.

      இங்கயும் அனேகமா பிடித்தாத்தான் கல்யாணம் (அங்க மாதிரி அவங்களே கல்யாணத்தையும் செலவையும் பார்த்துப்பாங்க, குழந்தை பெற்றுக்கொள்வதும் அதற்கான கவலைகளும் அவங்களை மட்டுமே சேர்ந்தது என்பதெல்லாம் இங்க இல்லை இல்லையா?)

      நீக்கு
    4. நெ.த.அவர்களின் விளக்கம் ஸூப்பர் உண்மை.

      நீக்கு
  7. அன்பு தேவகோட்டைஜி,
    மிக மிக உண்மை.

    மனதுக்கு மிகவும் வேதனை தரக் கூடிய நிகழ்வுகள்
    திருமணங்களால் நிகழ்கின்றன.

    வசியம் செய்வது எத்தனை நாட்களுக்கு நீடிக்க முடியும்.
    பெரியவர்கள் ஒதுங்க வேண்டியதுதான். வாழ்த்தி
    விலகி இருப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா இன்று இதுதான் பரவலாக நடந்து கொண்டு இருக்கிறது.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    நல்ல ஆழமான பதிவு. நீங்கள் வார்த்தைகளை வைத்து எங்களை வசியம் செய்து விட்டீர்கள். ஹா.ஹா.ஹா.

    என்ன செய்வது? நீங்கள் கூறுவதும் என்றும் உண்மைதான். இது அந்த காலத்திலிருந்தே தொடர்கிறது. அப்போது மாப்பிள்ளைக்கு ஒரு மரியாதையாவது இருந்தது. இப்போது அதுவும் கிடையாது. (வசியத்தினாலோ என்னவோ அந்த மாப்பிள்ளையும் அதையும் எதிர்பார்ப்பதில்லை. ஹா.ஹா.) பெரியவர்கள்தாம் கண்டும் காணாதது மாதிரி ஒதுங்கி வாழ கற்றுக் கொள்ள வேண்டும். (இல்லாவிட்டால் அவர்கள் செய்(யாத) வினையையும் அனுபவிக்க வேண்டும்.) நன்றாக கோர்வையாக எழுதியுள்ளீர்கள். ஒவ்வொரு வரிகளும் இந்த சமூகத்திற்கு சாட்டையடிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      அந்தக் காலத்தைவிட, இந்தக் காலத்தில் நிறைய நடக்கிறது.

      உலக மக்களின் சிந்தை தவறான பாதையில் செல்கிறது.

      தங்களது விரிவான அலசலுக்கு நன்றி.

      நீக்கு
  9. மூன்று, எட்டு மற்றும் கடைசிக் கண்ணிகளை மிகவும் ரசித்தேன் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது ரசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  10. எதிர்பார்ப்புகளைக் குறைத்து, ஒட்டியும் ஒட்டாமலும் பட்டும் படாமலும் வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆம்...
      எதிர்பார்ப்பு இல்லாமல் வாழப்பழகினால் ஏமாற்றம் இல்லாமல் வாழ்ந்து முடிக்கலாம்.

      தங்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  11. தற்போதைய நடைமுறையைத் தெளிவாகக் கூறியுள்ளீர்கள். இச்சூழலில் காணாமல் ஒதுங்கிவிடுவது சாலச்சிறந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே...
      ஆம் ஒதுங்கினால் உயிராவது மிஞ்சும்.

      நீக்கு
  12. எல்லாம் சுயநலம்தான்.. காரணம் .....போகும்போது எதையும் கொண்டு போகமுடியாது என்று தெரிந்தும்.. இப்படியான ஒரு இப்படியொரு மனநிலை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  13. ஆஹா புட்டுப் புட்டு வச்சிட்டீங்க கில்லர்ஜி.... வரவர மெருகு ஏறிக்கொண்டே வருதே.. எதில எண்டு கேய்க்கப்பிடாது:))...

    பெத்த பிள்ளையை விட்டுக் குடுக்காட்டிலும்:), சில பெற்றோர் தெருவுக்குத்தான் வருகினம் என சிறீ சிவசம்போ அங்கிளிடம் சொல்லி விடுங்கோ கில்லர்ஜி:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா உங்கள் அங்கிளிடம் ஜொள்ளுகிறேன்.

      நீக்கு
  14. சூப்பர் கில்லர்ஜி! எழுதியவிதம் நல்லாருக்கு.

    திருமணம் ஜாதகம்....சாதகம்.......மரணம் இந்த வரிகள் நல்லாருக்கு. கடைசி வரிகளும்!!!

    புரிந்தது எது என்னவென்று நீங்கள் சொல்வது..

    கீதா



    பதிலளிநீக்கு
  15. நீங்கள் கவிதை எழுதுவதிலும் அசத்துகிறீர்கள் கில்லர்ஜி.

    நடப்பைச் சொல்லியிருக்கும் விதம் அருமை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  16. அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

    இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.


    இக்குறள் அரசியலுக்கும் பணியிடங்களுக்கும் மட்டும் பொருந்துவதல்ல.
    பரமசிவம் அன்னா சொல்வது போல் குடும்பத்திற்கும் பொருந்துவதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  17. இவையெல்லாம் எல்லா காலங்களிலும் இருந்திருக்கிறது சகோ. கிளிக்கு ரெக்கை முளைச்சதும் பறந்து போய் விடும் என்பதை நாம் புரிந்து கொண்டு ஒதுங்கி இருந்தால் பிரச்சனைகள் குறையும். எழுதி இருக்கும் விதம்  அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மேடம் தங்களது கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  18. மிகவும் சுவாரஸ்யமான பதிவு Killergee வாழ்த்துக்கள்..! :)

    நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/

    பதிலளிநீக்கு