இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, செப்டம்பர் 26, 2020

தேவகோட்டை ஊரிலா... தேன் சிந்தும் வேம்பிலா...


வணக்கம் நட்பூக்களே மௌனம் சம்மதம் (1990) என்ற திரைப்படத்திலிருந்து திரு வாலி அவர்கள் எழுதிய கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அந்த வரிகளை மாற்றி எழுதி இருக்கிறேன் இசை இளையராஜா பாடியவர்கள் கே.ஜே.யேசுதாஸ். மற்றும் சித்ரா ரசித்தால் சொல்லிச் செல்லுங்கள்.

ஆண்
கல்யாணப் பந்தலா
நீ தானே வத்சலா
காயப்போட்ட வத்தலா
என்னோடு பூசலா
முகத்திலென்ன தேமலா
உன் கையில் அவலா
எனக்கு தர ஆவலா

கல்யாணப் பந்தலா
நீ தானே வத்சலா

ஆண்
தெருவோரப் பாடலா
தெருக்கூத்து ஆடலா
கையிலென்ன மூங்கிலா
அது புல்லாங்குழலா

பெண்
நீ களவாணிப் பயலா
சொன்னாளே விமலா
கையில் தேன் பாட்டிலா
உன் பாட்டி வீட்டிலா

ஆண்
உனக்கென்ன கூதலா
உனக்கென்மேல் காதலா

பெண்
நீ களவாணிப் பயலா
சொன்னாளே விமலா

ஆண்
கல்யாணப் பந்தலா
நீ தானே வத்சலா

பெண்
உன் வீடு காட்டிலா
நீ துயில்வது கட்டிலா
என் பார்வை கண்டிலா
நீ கைதி கூண்டிலா

ஆண்
கார்மேகக் கூந்தலா
உடை மட்டும் கந்தலா
நீ குளிப்பது ஆத்திலா
நீர் எடுப்பது ஊத்திலா

பெண்
தேவகோட்டை ஊரிலா
தேன் சிந்தும் வேம்பிலா

ஆண்
கல்யாணப் பந்தலா
நீ தானே வத்சலா
காயப்போட்ட வத்தலா
என்னோடு பூசலா

பெண்
தேரோடும் போதிலா
என் ஆசை காதலா
நீ இருப்பாய் காவலா
இனி உனது வெண்ணிலா

ஆண்
கல்யாணப் பந்தலா
நீ தானே வத்சலா

பாடல் ஆச்சி-----ரியர் தேவகோட்டை கில்லர்ஜி
இதோ திரு. வாலி அவர்கள் எழுதிய உண்மையான பாடல் வரிகள் கீழே

ஆண் :
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

ஆண் :
தென்பாண்டி கூடலா
தேவார பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

பெண் :
என் அன்பு காதலா
எந்நாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா
நீ தீண்டும் கையிலா

ஆண் :
பார்ப்போமே ஆவலா
வா வா நிலா............

பெண் :
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

ஆண் :
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

பெண் :
உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதி கூண்டிலா

ஆண் :
சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா

பெண் :
தேனூறும் வேர்ப்பலா
உன் சொல்லிலா.. ஆ. ஆ...

ஆண் :
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

பெண் :
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

ஆண் :
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

குறிப்பு- இதிலிருந்து ‘’லா’’ என்ற எழுத்தை மட்டுமே உபயோகப்படுத்தி இருக்கிறேன் மற்றபடி வேறு வார்த்தைகளை பெரும்பாலும் எடுக்கவில்லை. இப்படி அற்புதமான பாடலை எழுதியவர் ‘’சமைஞ்சது எப்படி’’ என்ற பாடலை எழுதி தரம் தாழ்த்திக் கொண்டாரே... சமீபத்தில் தேவகோட்டையில் முக்கிய வீதியில் திரு வாலி அவர்களின் பொன்மொழி மற்றும் அவரது புகைப்படம் போட்டு வாலி இல்லம் என்று பெயர் பதித்து வீடு கட்டி இருக்கிறார்கள் ஒருக்கால் அவரது இரத்த உறவுகளின் வீடு என்று நினைக்கிறேன். அவரது ஊர் ஸ்ரீரங்கம் என்பது பலரும் அறிந்த விடயமே


இதோ பாடலுக்கான யூட்டியூப் இணைப்பு சொடுக்கி கேட்கவும்.


தேவகோட்டை கில்லர்ஜி

36 கருத்துகள்:

  1. ஹாஹா... நல்லாத்தான் எழுதறீங்க பாட்டு! ரசித்தேன் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடனடி பாராட்டுகளுக்கு நன்றி ஜி

      நீக்கு
    2. மனம் விட்டு சிரித்தேன். கவிப்பேரரசன் ஒரு பார்சல்.

      நீக்கு
    3. ரசித்து சிரித்தமைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  2. சூப்பர் சார். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. பாட்டு நன்றாக எழுத வருகிறது.
    வாலி மீது பிரியம் கொண்டவர் போலும், அவர் பேரை வீட்டுக்கு வைத்து இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நன்றி எனக்கென்னவோ அவரது மகள் வீடாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். என்றாவது நேரடியாக கேட்டு விடுவேன். நான் போகும் பொழுது பெரும்பாலும் பூட்டியே இருக்கிறது.

      நீக்கு
  4. உங்கள் கற்பனை வளத்துக்குக் கேட்க வேண்டுமா? ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்ஜி தலைப்பு உண்மைதானே...?

      நீக்கு
    2. உண்மையோ பொய்யோ ரசிக்க வைக்கிறதே...

      நீக்கு
    3. வாங்க ஜி அதென்ன பொய்யோ ? உண்மைதானே....

      நீக்கு
  5. கல்யாணத் தேனிலா..
    காய்ச்சாத பால்நிலா!..

    இந்தப் பாட்டின் மீது தங்களுக்குக் காதலா?..
    அல்லது கடுப்பாகிப் போனதால் காய்ச்சலா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஹா.. ஹா.. ஸூப்பர் ஜி வருகைக்கு நன்றி.

      நீக்கு
  6. மெட்டுக்கு பாட்டெழுதும் திறன் உங்களுக்கு அருமையாக வருகிறது...வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  7. கல்யாணப் பந்தலா 
    தேவகோட்டை கிண்டலா 
    கையிலென்ன சுண்டலா 
    இறைத்ததிங்கு மண்ணிலா 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா வாங்க ஐயா
      எல்லோரும் பாட்டு பாடுங்கள்
      என்னோடு சேர்ந்து ஆடுங்கள்.

      நீக்கு
  8. நண்பராக மனதில் பாடிக் கொண்டிருந்த SPB அவர்களின் மறைவின் தாக்கம், உங்களின் வரிகளால் சற்றே தளர்வு அடைந்தது ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு மனமகிழ்ச்சி கிடைத்ததில் மகிழ்ச்சி ஜி

      நீக்கு
  9. நல்ல கற்பனை வளம். உங்கள் கற்பனைக்குக் கேட்க வேண்டுமா? இந்தக் கல்யாணத் தேன் நிலா பாடல் எனக்கும் பிடித்தது. உங்கள் மூலம் அந்தப் பாடலை முழுமையாகத் தெரிந்து கொண்டேன். கலக்குங்க! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    நீங்கள் இட்டுக்கட்டிய பாடல் அருமை. உண்மை பாடலுடன் வெகுவாகப் பொருந்திப் போகிறது. சகோதரர் தனபாலன் சொல்வது போல், ஒரு இறுக்கமான சூழலிருந்து வெளிவர வைத்திருக்கிறீர்கள். அதற்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    உண்மை பாடல் வரிகளையும் இன்றுதான் முழுதாக பாடிப் பார்த்தேன். எனக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடித்தமானது. இரண்டுமே நன்றாக உள்ளது. தங்கள் கற்பனை வளத்திற்கு என் அன்பான பாராட்டுகளும், வாழ்த்துக்களும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பாடல் வரிகளை இரசித்து படித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  11. எங்கயோ...போயிட்டிங்க நண்பரே!! இருந்தாலும் பெண் வரியில் களவாணிபயலா... சொன்னாளே..விமலா!..யார் நண்பரே! அந்த விமலா!!!! அத மட்டும் ரகசியமாய் சொல்லுங்க..நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே...
      உங்களுக்கு விமலா தெரியாதா ? நம்ம அலங்காநல்லூர் அமலாவோட நாத்தனாருதான்.

      நீக்கு
  12. சந்தத்துகாக விழுந்த வார்த்தைகள் கனஜோர்

    பதிலளிநீக்கு
  13. வாலியின் கவிதைக்கு இணையானது உங்கள் கவிதை.

    வெகுவாக ரசித்து மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இரசித்து மகிழ்ந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  14. எல்லையற்ற உங்களின் திறமையை அறிந்து வியக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  15. போகிறபோக்கைப் பார்த்தால் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி, பாடல்கள் கவிஞர் கில்லர்ஜி என திரைப்பட விளம்பரங்களில் பார்க்கலாம் போலிருக்கிறதே. கற்பனை அருமை. பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. அப்படி நிகழ்ந்தால் முதல் மரியாதை உங்களுக்குத்தான்...

      நீக்கு