இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், செப்டம்பர் 17, 2020

NASA நாசமாகி இருக்கும்


     ணக்கம் ஐயா வசம்பு வேந்தன் அவர்களே கொழுந்தியாள் தினமான இன்று தங்களை பேட்டி காண்பதில் எங்களது வெட்டிவேர் தொலைக்காட்சி பெருமிதம் கொள்கிறது பேட்டியை தொடங்கலாமா ?
நன்று நலமே விளைக தொடங்கலாம்

ஐயா உங்களுக்கு வசம்பு வேந்தன் என்று பெயர் வைக்க காரணம் ?
நான் பிறந்து ஆச் என்று தும்மினாலே எதிரில் இருப்பவர்கள் அன்றைய தினம் மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் மேலும் பேச ஆரம்பித்தபோது சிலர் கோமா நிலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு ஆளானார்கள் ஆகவே இவன் வாயில வசம்பை வச்சு தேய்ங்க என்று சொல்லி இருக்கிறார்கள் அதிலிருந்து என்னை வசம்பு வேந்தன் என்றே அழைக்க ஆரம்பித்தனர்.

தாங்கள் அரசியலில் குதிக்கும் எண்ணம் இருக்கிறதா ?
நான் எட்டு வயது பாலகனாக இருந்தபோது கிராமத்தில் ஆற்றில் குதித்து குளித்தபோது எதிர்பாராத விதமாக கால் வழுக்கி சுளுக்கி விட்டது பிறகு கோடாங்கி பார்த்த இடத்தில் நான் எதற்காகவும் குதிக்ககூடாது அப்படி குதித்தால் உயிருக்கு மட்டுமல்ல உலகுக்கே வினையாகும் என்று சொல்லி விட்டார் ஆகவே நான் அரசியலிலும் குதிக்க மாட்டேன்.

இதை பொது நலனாக கருதி உலக நன்மைக்காகவும் என்று எடுத்துக் கொள்ளலாமா ?
அப்படியே எடுத்துக் கொள்ளுங்களேன் என்ன நஷ்டமாகி விடப்போகிறது. என் வாழ்வு முழுவதுமே பொதுநலன் கருதியே என்பதற்கு பல சான்றுகள் உள்ளது. பெரும்பாலும் நான் செய்த நல்ல விசயங்களை உலகறிய விடுவதில்லை இவைகளை பரப்புரை செய்த உகாண்டா நாட்டு பத்திரிக்கை மீது எனக்கு மனஸ்தாபமும் உண்டு.

ஐயா இந்த தொலைக்காட்சி நாடக இயக்குனர்களைப் பற்றி தங்களது கருத்து என்ன ?
இவர்கள் கடந்த ஜென்மத்தில் ஜவ்வு மிட்டாய் வியாபாரம் செய்து இருப்பார்கள் ஆகவே இவர்கள் இந்த துறையில் கொடிகட்டி பறக்க நினைக்கிறார்கள்.

திரைப்படத்தில் நடிப்பதற்கு தங்களுக்கு வந்த வாய்ப்பை வேண்டாமென்று உதறி விட்டீர்களே இதற்கான காரணம் ?
நான் திரைத்துறையில் கால் பதித்தால் பல நடிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது உறுதி பிறகு அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எமனேஸ்வரம் போய் எனக்கு செய்வினை செய்யக்கூடும் ஆகவே வேண்டாம் இந்த வினையாட்டு என்று ஒதுங்கி விட்டேன்.

உங்களுக்கு சிறுவயது முதலே மருத்துவராக வேண்டுமென்ற ஆசை இருந்ததாக சமீபத்தில் பேருந்து நிலையம் அருகே தனியாக மேடை போட்டு நீங்கள் மட்டும் பேசிக்கொண்டு நின்றீர்களே பிறகு எதற்காக மருத்துவம் படிக்கவில்லை ?
எனக்கு பத்து வயது இருக்கும் பொழுது எனது ஐயா பொட்டமுத்தி நான் மருத்துவம் படித்து இந்த உலகே வியக்கும் வண்ணம் எல்லோருக்கும் இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் என்று சொல்லி வந்தார். ஓர்நாள் அவருக்கு சுகமின்மையால் படுத்து கிடந்தார் ஐயா நான் உனக்கு ஊசி போடுகிறேன் என்று நெல் கொட்டத்தில் கிடந்த கோணி ஊசியை வைத்து ஐயாவை குத்தக்கூடாத இடத்தில் குத்தி விட்டேன். பிறகு மருத்துவமனையில் ஒரு மாதமாக கோமாவில் கிடந்த ஐயா நினைவு திரும்பியவர் என்னை அழைத்து உனது வாழ்நாளில் மருத்துவமே படிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து வாங்கிய மறுநொடி உலகை மறந்து விட்டார் அந்த சத்தியத்துக்கு கட்டுப்பட்டு இன்றுவரை நான் மருத்துவராக வில்லை.

இன்னும் தாங்கள் வேறு துறையை தேர்ந்தெடுத்து சாதித்து இந்த நாட்டை உயர்த்தாமல் இருப்பது ஏன் ?  
நான் இராணுவத்தில் சேர்ந்து இந்த உலகையே இந்தியாவுக்கு கீழ் கொண்டு வருவதற்கு துடித்தபோது எனது லட்சியத்தை அறிந்த எனது தந்தையார் நீ ராணுவத்துக்கு சென்றால் இந்த பாரம்பரிய சொத்து முழுவதும் வலைப்பதிவு எழுதிக்கொண்டு இருப்பவர்களுக்கு எழுதி விடுவேன் என்று மிரட்டி பணிய வைத்தார் ஆகவே அதுவும் காணல் நீராய் கரைந்து போனது.

இராணுவத்தில் பணி செய்வது பெருமையான விசயம்தானே உங்களது தந்தையார் மறுப்பதற்கு காரணம் கேட்டீர்களா ?
நானும் அவர் இறக்கும்வரை கேட்டுக்கொண்டே இருந்தேன் சொல்லவில்லை அவருக்கு பதினாறாம்நாள் காரியம் செய்தபோதுதான் இதற்கான காரணத்தை எனது அப்பத்தா ஆதி கடவுள் அகிலாண்டேஷ்வரி சொன்னார். நான் இராணுவத்துக்கு போனால் இந்தியா உலகுக்கு அடிமையாகும் நிலைக்கு போகும் என்பதாக சோலந்தூர் சோசியர் சோனைமுத்து சொல்லி இருக்கிறார். அப்படியானால் நாம் பரம்பரை சொத்தை இழந்து தெருவுக்கு வந்து விடுவோம் ஆகவேதான் வாழும்வரை செல்வந்தனாக வாழ்ந்து போக ஆசைப்பட்டு இருக்கிறார் எனது தந்தையார்.

கிரிக்கெட்டில் தாங்கள் வலம் வந்து இருக்கலாமே ?
நான் கிரிக்கெட்டில் விளையாண்ட்டால் நான் அடிக்கும் பந்துகள் எல்லாமே வளாகத்தை விட்டு வெளியே பறக்கும் இதனால் கிரிக்கெட் வாரியத்துக்கு நஷ்டம் உண்டாகலாம் என்பதை நான் சிறு வயதில் கிராமத்து பொட்டக்காட்டில் விளையாண்டபோது அறிந்து கொண்டேன் நான் அடித்த பந்துகள் கம்மாக்கரையில் ஒதுங்கி அமர்ந்து இருந்தவர்களின் உயிர்நாடியை பதம் பார்த்து இருக்கிறது இதில் இருவரின் உயிருக்கே ஆபத்தாக முடிந்து விட்டது ஆகவே பொதுநலன் கருதி அந்த ஆசையை மண்ணோடு மண்ணாக கரைத்து விட்டேன்.

ஐயா உங்களது திறமையை விஞ்ஞானத்தின் பக்கம் செலுத்தி இருக்கலாமே இன்று நாசாவே உங்களது காலடிக்கு வந்து இருக்குமே... ?
உண்மைதான் ஆனால் நான் விஞ்ஞானப் பாதையில் சென்றிருந்தால் உலகம் இந்நேரம் NASAவோடு நாசமாகி இருக்கும் என்பது எங்கள் குலதெய்வத்தின் சாமியாடி சாமக்கோடனின் வாக்குச் சித்தம் ஆகவே தொடக்கம் முதலே நான் கம்மாக்கரைக்கு ஒதுங்கப் போனாலும் பாதையை கண்காணிக்க ஐவர் குழுவை எமது குடும்பம் நிர்மானித்து இருந்தது ஆகவே இன்று நான் விஞ்ஞானப் பாதையில் காலடி வைக்க முடியவில்லை.

நல்லது ஐயா தங்களது வெட்டி நேரத்தை எங்களது வெட்டிவேர் தொலைக்காட்சிக்கு ஒதுக்கி தந்து பேட்டி தந்ததமைக்கு எங்களது சார்பிலும், எனது சார்பிலும் நன்றி.
நல்லது நாடு நலம் நாடுக உங்களது தொல்லைக்காட்சிக்கு எமது ஆதரவுகளும் கூடி.. என்றும் நேர்மை தவறாது நடுநிலையோடு தொடர எமது வாழ்த்துகள்

சிவாதாமஸ்அலி-
ஆகமொத்தம் கடைசிவரை உழைக்காமலே காலத்தை ஓட்டியாச்சு எல்லாம் பரம்பரை சொத்து இருந்ததுதானே இதுக்குத்தான் பட்டுக்கோட்டையார் எழுதுனாரு... இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால் பதுக்கிற வேலை நடக்காது’’னு...

சாம்பசிவம்-
இவனிடமெல்லாம் பேட்டி எடுக்கிறாய்ங்களே... நாட்டுல.. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆயிட்டானே...

காணொளி

50 கருத்துகள்:

  1. நாமக்கல் (கவிஞர்) நண்பர் திரு. 'பசி' பரமசிவம் அவர்களின் ரசனைக்காக இப்பதிவு - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் ரசனைக்காக ஒரு பதிவு எழுதி என்னை மகிழ்வித்திருக்கிறீர்கள். நன்றி.

      ரசிக்கும்படியாய், கள்ளம் கபடம் இல்லாமல் எழுதுவதால்தான் நல்ல நண்பர்கள் பலரைப் பெற்றிருக்கிறீர்கள்.

      குன்றாத உற்சாகத்துடன் இனியும் எழுதுங்கள் கில்லர்ஜி.


      நீக்கு
    2. வருக நண்பரே தங்களது ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு நன்றி.

      நீக்கு
  2. எதை விடாமல் போட்டு தாக்குறீங்க ஜி... வழக்கம் அறிந்திராத சொற்கள்...!

    பதிலளிநீக்கு
  3. எடிட்டிங் திறமையால், பாடல் செம பொருத்தம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எல்லாம் நம் "தமிழ்ச்சொற்களே" படத்தொகுப்பை பாராட்டியமைக்கு நன்றி.

      நீக்கு
  4. சரியாகப் போட்டுத் தாக்கி இருக்கின்றீர்கள்...

    பதிலளிநீக்கு
  5. எப்படியோ. நாம தப்பித்தோம்!..

    பதிலளிநீக்கு
  6. இன்றைக்கு வெட்டி வேர் போல ஊடகங்கள் எதுவும் இல்லை..

    எல்லாம் வேர் வெட்டி ஊடகங்கள் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி
      ஹா.. ஹா.. நீங்க தப்பித்து விட்டீர்களா ? நாலு வெட்டிப்பயலுகளையும், வெளங்காச்சிறுக்கிகளையும் வச்சுக்கிட்டு இவங்கே படுத்துறபாடு தாங்கமுடியலை ஜி.

      நீக்கு
  7. ஐயா தேவகோட்டை ரயில் நிலையத்தில் டீ விற்றிருக்கலாமே?
    நான் அன்று டீ விற்றிருந்தால் இன்று இந்தியாவையே விற்றிருப்பேன். பாவம் இந்தியா பிழைத்துப் போகட்டும் என்று விற்கவில்லை. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா விடுபட்ட கேள்வி-பதில் போலவே இருக்கிறது ஐயா.

      அதுசரி வசம்பு வேந்தன் தேவகோட்டையா ?

      நீக்கு
  8. யாரும் எதையும் செய்யாமலிருப்பதே நலம் என்கிறீர்களா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா
      ஹா.. ஹா.. என்ன ஐயா இப்படி புரிஞ்சுக்கிட்டீங்க, வசம்பு வேந்தன் உழைக்காத சோம்பேறி இது பேச்சு ஊருக்கு உதவாது.

      நீக்கு
  9. ஹாஹாஹாஹா! நல்ல ரசனைதான். ஆனால் உங்கள் பாட்டு இப்போக் கேட்கவில்லை சரியா! பின்னர் ஒரு முறை கேட்டுடறேன். எல்லாமே நல்லா இருக்கு. இந்த மாதிரி நிறைய வைச்சிருப்பீங்க போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நான் எங்கே இந்த மாதிரி வச்சு இருக்கேன் ?

      வசம்பு வேந்தனை பேட்டி கண்டதை அப்படியே உங்களுக்கும் அறிய வைத்தேன் அவ்வளவுதான்.

      காணொளியை காண்பதற்கு நன்றி.

      நீக்கு
    2. ஹிஹிஹி, சரியா எழுதலையோ? இந்த மாதிரி அகுடியா நிறைய வைச்சிருக்கீங்க என்று சொன்னேன். :)))

      நீக்கு
    3. //அகுடி//
      இஃகி இஃகி இஃகி...

      நீக்கு
    4. இப்போத் தான் கேட்டேன். முதலில் பேசி இருப்பவை எனக்குச் சரியாக் காதில் விழலை. காதில் கோளாறோ? புரியலை! இஃகி,இஃகி! அப்புறமா "ஆனால்"க்குப் பின்னர் வந்தவற்றை ரசித்தேன். நல்லா இருக்கு.

      நீக்கு
    5. மீள் வருகை தந்து காணொளி பார்த்தமைக்கு நன்றி.

      நீக்கு
  10. வசம்பு வேந்தன் பேட்டியும் நீங்கள் தயார் செய்த காணொளியும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது ரசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    பேட்டி சுவாரஸ்யமாக இருக்கிறது. பேட்டி எடுக்கப்பட்டவர், எடுத்தவர் எல்லாம் ஒரே மூலிகை மயமாக...ஹா.ஹா. ஒரு வேளை இவர் இந்தப் பாதையில் போகவில்லையா என அதனால்தான் பேட்டியில் (?) வரவில்லை போலும். நல்ல ரசனையான வார்த்தைகள். உங்களுக்கு இப்படியெல்லாம் நகைச்சுவையாக தோன்றுவதற்கு எங்கள் வாழ்த்துகள். காணோளியும் நன்றாக உள்ளது. ஏனோ பாடல் எனக்கு சரியாக கேட்கவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      பதிவை ரசித்து படித்து இருக்கிறீர்கள் மிக்க நன்றி.

      நீக்கு
  13. பேட்டியையும் காணொலியினையும் ரசித்தேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  14. சுவாரஸ்யமான உரையாடல் - வழக்கம்போல...

    பதிலளிநீக்கு
  15. நல்லவேளை அதுல எதுக்குப் போயிருந்தால் இந்த பேட்டிக்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கும்..கேள்வியும் அருமை பதிலும் அருமை..தொடர வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே
      ஆம் இந்த சோம்பேறி எந்தப்பாதையில் போனாலும் விளங்காதுதான் போலும்.

      நீக்கு
  16. இப்படி வசம்பு மட்டும் கொடுத்து ஆட வைத்து விட்டார்களே.
    வெட்டி வேர் இது மட்டுமா.
    எத்தனை வெட்டிகள் நம் ஊரில்!!!!

    ''அவனை அழைத்து வந்து ஆடவிட்டது நம் குற்றம்.

    பேட்டியும் ,காணொளியும் மிக அருமை. கடவுள் பாதி பாடலுக்கு
    தாங்கள் கொடுத்திருக்கும் காட்சியும்
    தங்கள் திறனை வியக்க வைக்கின்றன. வாழ்த்துகள்
    அன்பு தேவகோட்டை ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது விரிவான பாராட்களுக்கு நன்றியும், மகிழ்ச்சியும்.

      நீக்கு
  17. நல்ல நகைச்சுவைப் பதிவு. அருமை

    பதிலளிநீக்கு
  18. பேட்டியும் காணொளியும் சுவாரசியம் சார்.
    உலகில் கஷ்டமான வேலையே வெட்டியாக இருப்பதுதான்.
    அடுத்து என்ன நூல் வெளியிட இருக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மிக்க நன்றி. மூன்று நூல்களும் படித்து விட்டீர்களா ?

      நீக்கு
  19. மாணிக் பாட்ஷாவை நேற்று முதல் படித்து வருகிறேன்.
    கூடிய சிக்கிரம் ஒரு நாளில் முடித்துவிடுவேன் சார்.
    பிற இரு நூல்கள் நாங்கள் உபையோகிக்கும் திரைவாசிப்பானுக்கு "SCREEN READER SUPPORTED" ஏற்ப கிண்டிலில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. எனவே, என்னால் இப்போது படிக்க இயலாத சூழல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி நண்பரே... படித்த பிறகு விமர்சித்தால் மேலும் மகிழ்ச்சி.

      நீக்கு
  20. நல்லா பேட்டி எடுக்கப் போனாரு வசம்பு வேந்தன் கிட்ட. எக்குத்தப்பா பதில் சொல்ற ஆளாச்சே அவுரு.

    எல்லாத் திறமையும் இருக்குன்றாரு ஆனா வெட்டியாத்தான் காலத்தைக் கழிக்கிறார் போலிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வசம்பு வேந்தன் சொல்றது "டான்ஸ் தெரியாத நடிகை கேமரா கோணலா இருக்கு"னு சொன்னது போலதான்.

      நீக்கு
  21. ஸ்வாரஸ்யமான பேட்டி! :) ரசித்தேன் ஜி!

    காணொளியின் முதல் சில நொடிகள் மெல்லிய ஒலியில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  22. அதிக அளவு வைத்து கேட்டு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பேட்டியை ரசித்தமைக்கு நன்றி. திரைப்படத்தில்கூட தொடக்க ஒலி சிறிய அளவில்தானே இருக்கும்.

      வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  23. நேர் காணலில் வசம்பு வேந்தன் தந்த பதில் பதில்கள் அனைத்தும் அருமை. அதிலும் தொலைக்காட்சி நாடக இயக்குனர்கள் பற்றிய கருத்து அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பதிவை இரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு