இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜனவரி 21, 2021

ஆனந்த மரணம்

 

01. உனது மரணத்துக்காக பிறர் கண்ணீர் சிந்தும்படி வாழவேண்டும் என்பது அவசியமில்லை, அந்த மரணத்தை ஆனந்தமாக கொண்டாடும்படி வாழாமல் இருப்பதே நன்று. 

02. உனது சந்ததிகளுக்கு புண்ணியத்தை தேடி வைத்துப் போகவேண்டும் என்பது முக்கியமல்ல, அவர்களுக்கு பாவத்தை ஏற்றி வைக்காமல் வாழ்வதே உத்தமம்.
 
03. உனது உறவுகளுக்கு, பிற மனிதர்களுக்கு நீ உதவிகள் செய்ய வேண்டுமென்பது தேவையில்லை, எந்த கெடுதலும் செய்யாமல் இருப்பதே சிறந்தது.
 
04. நீ நல்லவன் என்று பெயர் எடுப்பதற்கு கஷ்டப்பட்டு வாழ வேண்டியதில்லை, எந்த நிலையிலும் பொய் சொல்வதை நிறுத்தி வைத்தால் போதுமானது.
 
05. கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவ முடியவில்லையே என்று வருந்துவது முக்கியமல்ல, அவர்களுக்கு நல்ல வாழ்வைக்கொடு இறைவா என்று வேண்டுதல் போதுமானது.
 
06. உனது மனைவிக்கு ஆடம்பரமான வாழ்க்கை கொடுக்க வேண்டியதில்லை, அவள் ஆசைப்படும்படி சந்தோஷமான வாழ்க்கை கொடுத்தாலே மகிழ்வானது..
 
07. நீ அயல் தேசத்தில் போய் உயர்கல்வி கற்பது தவறல்ல, கல்வி முடித்து உனது பட்டறிவை இந்தியாவுக்காக பயன்படுத்துவதே பெற்றோருக்கு பெருமையானது.
 
08. கொழுந்தியாள் திருமணத்துக்கு நெக்லஸ் வாங்கி கொடுப்பது முக்கியமல்ல, அதன்மூலம் அவளது வாழ்க்கையை நிர்மூலமாக்காமல் இருப்பதே சிறந்தது.
 
09. நீ அரசியல்வாதியாகி ஏழைகளை காப்பாற்ற நினைப்பது அவசியமற்றது, அவர்களுக்கு உன்னால் இயன்ற அளவு அரிசி வாங்கி கொடுப்பதே போதுமானது.
 
10. நீ திரைப்படக் கூத்தாடியாகி மக்களை மகிழ்விக்க நினைப்பது முக்கியமல்ல, அவர்களை கூலிக்காரனாக விடாமலிருக்க நீ உழைத்தாலே போதுமானது.
 
11. கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவை முன்றேற்ற நினைப்பதைவிட, இன்றைய இளைஞர்களை கிறுக்கனாக ஆக்கி விடாமல் அவர்களை காப்பதுவே முக்கியமானது.
 
12. நீ தேவகோட்டை சாலையில் கண்ணகிக்கு சிலை வைக்கவேண்டும் என்பது அவசியமல்ல, திரைப்பட நடிகைக்கு சிலை வைக்காமல் இருப்பதே நன்றானது.
 
ChavasRegal சிவசம்போ-
நல்லவேளை நமக்கு கொழுந்தியாள் இல்லாமல் போச்சு.

38 கருத்துகள்:

  1. போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து.   உதவி செய்யாட்டா கூட பரவாயில்லை, உபத்திரவம் இல்லாம இருந்தா சரி என்பார்கள்! நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஸ்ரீராம்ஜி இதுவே உண்மை

      நீக்கு
    2. முதல் ஏழும் அருமை. அதன் பிறகு உங்கள் பாணிக்கு மாறிவிட்டது.

      நீக்கு
    3. ஹா.. ஹா.. தங்களது கூர்ந்த பார்வைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  2. எல்லாமே "நச்" அருமை! தேவையானதும் கூட! அது சரி, அந்தப் பெண்கள் தூக்கிச் செல்வது யாரை? மண்டையை உடைக்குதே1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஐந்து வருடங்களுக்கு முன்பு அனாதை பிணத்தை இடுகாடு எடுத்துச் செல்லும் சமூக அமைப்பினர்.


      இன்றைய டிக்டாக் பெண்களைவிட ஆயிரம் மடங்கு உயர்ந்த உள்ளங்கள்.

      நீக்கு
  3. பட்டினத்தார் பாடல்களை வசன நடையில் படிப்பதைப் போல இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கருத்து மகிழ்ச்சி தந்தது.

      நீக்கு
  4. அருமையான பகிர்வு பாராட்டுக்க்கள்

    பதிலளிநீக்கு
  5. காசியிலும் கருத்துகளிலும் இப்படிக் கண்கலங்க வைத்து விட்டீர்களே...

    பதிலளிநீக்கு
  6. // காட்சியிலும்... // என்றிருக்கணும்..

    பதிலளிநீக்கு
  7. காட்சியிலும் காசியிலும்
    கதி ஒன்று தான்..
    கருதி நின்று கண் கலங்க
    மதி ஒன்று தான்.
    விதி ஒன்று தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களின் கருத்துக்கு நன்றி

      நீக்கு
  8. அனைத்தும் அருமையான கருத்துகள் ஜி... சுருக்கமாக மூன்றே சீர்கள் :

    மனத்துக்கண் மாசிலன் ஆதல்...

    பதிலளிநீக்கு
  9. நல்ல இடுகை கில்லர்ஜி..... நரி வலம் போனா என்ன இடம் போனா என்ன....நம்மைக் கடிக்காம போனாச் சரி என்ற கதைதான்.

    ஆனால் ஆரம்பமே மரணத்தில் ஆரம்பிக்கணுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே தலைப்பும், படமும் இசைந்து போனதால் இப்படி தொடங்கினேன்.

      நீக்கு
  10. நவம்பரில் பிறந்த உங்கள் பெயர்த்தி...independentஆக இருப்பா, நியாயம் பேசுவா, அவளே அவளது எதிர்காலத்தைப் பார்த்துக்கொள்வாள், மூத்தவள் என்பதால் உறவைப் பேணுவாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனமகிழ்ச்சி தரும் செய்தி.
      "உறவைப் பேணுவாள்" கூடுதல் மகிழ்ச்சியையும், ஆறுதலையும் தருகிறது.

      கடந்த டிசம்பரில் இரண்டாவது பெயர்த்தி பிறந்து இருக்கிறாள் நண்பரே... (மகன் வழி)

      நீக்கு
    2. பேத்திகள் இருவருக்கும் மனமார்ந்த நல்லாசிகள், வாழ்த்துகள்.

      நீக்கு
    3. வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  11. பெண்கள் பாடை தூக்க அனுமதி அல்லது வழக்கம் எங்கு உள்ளது? அதுவும் சுரிதார் போட்டுக்கொண்டு. அந்தப் போட்டோ எந்த வகையில் இந்த பதிவுக்கு பொருத்தம். 
    தாரை தம்பட்டம் இல்லாமல் அல்லது ஒரு டொய்ங் டொய்ங் போலும் இல்லாமல் எந்த மரண ஊர்வலம்  தமிழ்நாட்டில் நடக்கிறது. உங்களால் செவிடன் காதில் சங்கு ஊதியது போன்று அறிவுரைகள் சொல்ல மட்டும் தான் முடியும். 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா மேலே விளக்கம் கொடுத்துள்ளேன் ஐந்து வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம்.

      அனாதைகளின் மரணத்துக்கு இவைகளை செய்ய நல்ல உள்ளங்கள் இருக்கிறதே இதுவே மகிழ்ச்சிதான்.

      செவிடன் காதில் ஊதும் திராணி எனக்கு இருப்பதே சிறிய வெற்றிதானே ?

      நீக்கு
  12. அருமை! உங்கள் சிந்தனைகள் வியக்க வைக்கின்றன. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக மேடம் தங்களின் வரவுக்கு நன்றி.

      நீக்கு
  13. 'நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்'என்னும் ஆன்றோர் வாக்கை நினைவுபடுத்தும் அற்பதமான பதிவு.

    நெஞ்சார்ந்த பாராட்டுகள் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  14. சிறந்த பதிவு அன்பு தேவகோட்டை ஜி.

    பெரியோர்கள் சொல்லும் அறிவுரை இதுதான்.
    உபசாரம் வேண்டாம். அபசாரம் செய்யாமல் இரு.
    இரண்டாவது பேத்திக்கும், முதல் பேத்திக்கும்
    வாழ்த்துகள்.ஆசிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா பெயர்த்திகளை ஆசீர்வதித்தமைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  15. அனைத்துமே சிறந்த கருத்துகள் கில்லர்ஜி. வழமை போலவே உங்கள் பாணியில் நச்சென்று ஒரு பகிர்வு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி பதிவை பாராட்டியமைக்கு நன்றி

      நீக்கு
  16. நல்லவற்றை ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் பின்பற்றுவதே..இல்லை...அதனால்தான்..இவ்வளவு எடுத்துச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது...நாகரிக காலத்திலும் காட்டுமிராண்டியாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள் என்று தங்கள் பதிவில் இருந்து தெரிந்து கொண்டேன் நண்பரே! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது புரிதல் அருமை வருகைக்கு நன்றி

      நீக்கு
  17. முதலும் கடைசியும் மிகவும் கவர்ந்தன நண்பரே

    பதிலளிநீக்கு