இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, மார்ச் 21, 2021

GOடாங்கி தொலைக்காட்சி

 

ணக்கம் ஐயா இன்று மொக்கையர்கள் தினத்தை முன்னிட்டு எங்களது GOடாங்கி தொலைக்காட்சியில் தங்களிடம் ஓர் நேர்காணல் பேட்டியை தொடங்கலாமா ?
நன்று பேட்டியை தொடங்கலாம் மொக்கையர்களுக்கு எமது வாழ்த்துகள்.
 
ஐயா தாங்கள் கதாநாயகர்களை கசா’’நாயகன் என்றே குறிப்பிடுகின்றார்களே என்ன காரணம் ?
கதா என்றால் ஹிந்தி மொழியில் கழுதை என்று அர்த்தம் ஆகவேதான் நான் அவர்களை கதா என்று சொல்லி அவமானப்படுத்த விரும்புவதில்லை. இயல்பாகவே திரைப்படக் கூத்தாடிகளை எனக்கு பிடிக்காது என்று நெல்லைத்தமிழர் போன்றவர்கள் ஐ.நா.சபையில் என்னைக் குறித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக ஸ்கோட்லாண்டிலிருந்து இரகசிய தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது ஆகவேதான் நான் தொடர்ந்து கசா என்ற சொல்லை பயன்படுத்துகின்றேன்.
 
அதேபோல் நடிகர் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் கூத்தாடி என்று குறிப்பிடுகின்றீர்களே இதன் காரணம் என்ன ?
பண்டைய காலத்தில் தெருக்கூத்துகள் நடந்தன, அந்த கூத்துகளில் தெருக்களில் ஆடியதால் கூத்தாடி என்ற வார்த்தைகள் உருவானது. நமது முன்னோர்களின் வாக்குகளில் பொருள் பதிந்து இருக்கும் ஆகவே அவைகளுக்கு மரியாதை செய்வது நமது கடமை. மேலும் நடி என்பது ஒருமை படுத்துகிறது நடியுங்கள் என்பதே மரியாதையானது. அடுத்து ‘’கர்’’ என்ற வார்த்தையை திருச்சி பதிவர் திருமிகு. கீதா சாம்பசிவம் அவர்கள் இராயல்டி வாங்கி வைத்து இருப்பதாக தகவல்கள் வந்தன. நான் நடிகர் என்று உச்சரித்தால் கர் என்ற வார்த்தையும் உடன் வருகிறது ஆகவே டெல்லியின் ஆட்களை பகைத்துக் கொள்வது தமிழகத்தில் வாழ இயலாத நிலையாகி கொண்டு இருக்கிறது. ஆகவேதான் நான் கூத்தாடி என்ற வார்த்தையை உபயோகித்து வருகிறேன்.
 
திரைப்படங்கள் சமூகத்தை சீரழிப்பதாக குற்றம் சாட்டுகிறீர்களே ஏன் ?
ஆம் திரைப்படங்களில், தாலியை கழட்டி வீசுவது போன்ற காட்சிகள் இப்பொழுது பெறுகி விட்டன... இதனைக் கண்டுதான் இன்று பலரது வீட்டிலும் தாலியை ஒரு புனிதமானதாக கருதாமல் சாதாரண ஆபரணமாக நினைக்கின்றார்கள். கிலோக்கணக்கில் ஆபரணங்களை போட்டு வரும் நாடக கூத்தாடிகள் சுமங்கலி என்று கதையில் போதிக்கப்படுகிறது ஆனால் கழுத்தில் தாலி இல்லை. ஒரு தொலைக்காட்சி நாடகத்தில் கணவனை போடா, வாடா என்று மனைவி அழைக்கின்றாள். ஆனால் கணவன் மனைவியை வாங்க, போங்க என்று அழைக்கின்றான். இது எந்த வகையான கலாச்சாரம் ? இதை மாக்கள் அங்கீகரிப்பதால் இவ்வகையான காட்சிகள் தொடர்கின்றன... கல்லூரியில் படிக்கும் பொழுதே தனது பெற்றோர்களுக்கு தெரியாமலேயே பதிவுத்திருமணம் செய்து கொண்டு வாழ்வதாக சித்தரிக்கின்றார்கள்.. இதனால் இன்றைய இளைய சமூகமும் இவைகளை பின்பற்றுகின்றனர். இப்படி தரங்கெட்ட காட்சிகளை சித்தரிக்கும் முடுமையை மணியான இயக்குனர் என்று போற்றுகின்றனர் ஊடகக்காரர்கள். இந்தக் கலாச்சாரக்கேடுகளை தணிக்கை அதிகாரிகளும் கண்டிப்பதில்லை காரணம் பணம் கை மாறுகிறது.
 
ஊடகங்கள் மக்களை மனதை திசை திருப்புகிறது என்று சொல்கிறீர்களா ?
நிச்சயமாக, இன்றைய ஊடகங்கள் மக்களை மாக்களாக்கி கொண்டு செல்கிறது. அதிலும் விஜய் டிவி, ஜீ தமிழ் டிவி, சன் டிவி இவைகளால் தமிழ்க்கலாச்சாரம் அழிவது உறுதி. நீயா ? நானா ? என்று ஒரு நிகழ்ச்சி இவைகளில் நல்ல விடயங்களையும் விவாதிக்கின்றார்கள். ஒருமுறை மிகவும் மடத்தமான பேசிய ஒரு பெண்மணிக்கு பரிசு கொடுத்து கௌரவிக்கின்றார்கள். இப்படி முரணாக பேசினால் பரிசு கிடைக்கும் என்ற நிலைப்பாட்டை இங்கு விதைக்கின்றார்கள். இவைகளை தெளிவான அறிவாற்றலான மக்களால் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும். கட்சி கொள்கைகளில் முரண்பாடு, ஊழல்கள் இருந்தாலும் மக்கள் டிவி நல்ல விடயங்களை, கலாச்சாரங்களை இன்றுவரை காப்பாற்றிக் கொண்டு வருகிறார்கள் என்பது உண்மை. ஆனால் மக்கள் இதை விரும்புவதில்லை.
 
ஐயா, ஊடகங்களை ஒதுக்கி வைப்பது இன்றைய சூழலில் சாத்தியமா ?
இன்றைய தொலைக்காட்சிகளில் அவசியமற்ற விசயத்தை குழி தோண்டி எடுத்து நான்கு நபர்களை வைத்து சண்டை போட வைக்கின்றார்கள். அவர்களுக்கு டி.ஆர்.பி. ரேட் உயர்கிறது இந்து சமூகத்திற்கு, மக்களுக்கு கிடைப்பது என்ன ? வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய நாடகத்தில் பதினைந்து நிமிடங்கள் விளம்பரமும், ஐந்து நிமிடம் முன்பு காட்டிய காட்சிகளையும் காட்டி அரைமணி நேரமாக பெண்களை அந்த இடத்தை விட்டு நகர விடாமல் செய்து விடுகிறார்கள். பத்து நிமிடத்துக்காக அரைமணி நேரம் மின்சாரச் செலவு செய்கிறார்கள். இதேபோல் ஒரு தினத்துக்கு பத்து நாடகங்களை பெண்கள் பார்க்கின்றார்கள். ஐந்து மணிநேரம் தொலைக்காட்சியை ஓடவிட்டு நூறு நிமிடங்கள் மட்டுமே பார்க்கிறார்கள். அந்த பத்து நிமிடம் ஓடிய காட்சிகளும் குடும்பத்தை எப்படி பிரிப்பது, என்றுதான் சொல்லிக் கொடுக்கின்றார்கள். ஏற்கனவே கூட்டுக் குடும்பத்தை பிரித்து விட்டார்கள் இப்பொழுது பிரிப்பது யாரை ? கணவனையும், மனைவியையும்தான் இதனாலேயே இன்று விவாகரத்துகள் பெறுகி விட்டது.
 
விளம்பரங்களை நிறுத்த வேண்டும் என்பது தங்களது கோரிக்கையா ?
அப்படி சொல்லவில்லை அர்த்தமற்ற முட்டாள்த்தனமான கருத்துகளை உள்ளடக்கி வசனங்களை வைக்கின்றார்கள். உங்கள் சோத்துல உப்பு இருக்கிறதா ? என்று கேட்பது போன்றவை மக்களை அடிமுட்டாளாக கருதுவதாக நான் உணர்கிறேன். பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை பெண்களை பாவாடை-சட்டையுடன் காண்பதே அரிதான காட்சிகளாக இருந்தது இன்று அவசியமின்றி உள்ளாடைகளுடன் பெண்களை காட்டுகின்றார்கள். குடும்பத்தில் மகனோ, மகளோ இருக்கும் பொழுது இக்காட்சிகள் சங்கோஜத்தை உருவாக்குகின்றது. இதில் முக்கியமான விளம்பரம் Prithvi INNER WEARS என்ற உள்ளாடை நிறுவனங்கள். நாம் பணத்தை செலவு செய்து விபரீத சங்கடங்களை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமென்ன ? என்பதே எமது வினா.
 
அரசியல்வாதிகளை உங்களுக்கு எப்பொழுதுமே பிடிக்கவில்லையே ஏன் ?
எப்பொழுதுமே அல்ல நான் உலகையறிந்த மூன்றரை அகவை முதல்தான் அன்றிலிருந்து இன்றுவரை... நல்ல மனம் படைத்த அரசியல்வாதிகளை நான் சந்திக்கவில்லை கர்மவீரர் காமராஜர் அவர்களை அறியத் தொடங்கும்பொழுது அவர் மறைந்து விட்டார், இனி நான் மறையும் காலம்வரை நல்லவர்களை காண முடியாது என்பதே எமது கணிப்பு. காரணம் பொதுவில் உள்ள மக்களில், எனது மாவட்டத்தில், எனது ஊரில், எனது தெருவில், எனது உறவில், எனது வீட்டில் உள்ள மனிதர்களில் ஒருவரைக்கூட நல்ல சிந்தனையுள்ளவரை காண்பது அபூர்வமாக இருக்கிறது.
 
நல்ல அரசியல்வாதிகளை கொண்டு வருவது எப்படி ?
அரசியல் அமைப்பை மாற்ற வேண்டும் பட்டதாரிகள் மட்டுமே தேர்தலில் நிற்கும் வகையில் சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்தால்தான் தேர்தலில் வாக்களிப்போம் என்ற உறுதியை மக்கள் எடுக்க வேண்டும். ரௌடிகளை அரசியலிலிருந்து புறந்தள்ள வேண்டும்.
 
ஐயா இது நடக்கும் வாய்ப்பு உள்ளதா ?
இதைத்தான் நான் முன்பே சொன்னேன் மக்களின் மனதில் நல்ல சிந்தனைகள் இல்லை. அயோக்கியன் என்று தெரிந்தே அவனுக்கு வாக்களிக்கின்றார்கள். காரணம் இங்கும் பணம் கை மாறுகிறது. மேலும் தனது ஜாதிக்காரன் என்ற சுயநல எண்ணங்கள், தனது அபிமானமுள்ள திரைப்படக் கூத்தாடி என்ற குறுகிய மனப்பான்மை, பணத்துக்காக தனது வாக்கை விற்கின்ற மாக்கள் மரணித்து முடியும்வரை இதற்கு தீர்வு கிடைக்காது. காரணம் அவன் தனது சந்ததிக்கும் இதே வித்தை விதைக்கின்றான். வினை விதைத்தவன் வினையை அறுத்தே தீரவேண்டும் என்பதே இறை நியதி.
 
சரி ஐயா கிரிக்கெட் வீரர்களையும் உங்களுக்கு பிடிக்கவில்லையே ஏன் ?
முதலில் அவர்களை வீரர்கள் என்று சொல்வதை தவிருங்கள் அவர்கள் இராணுவீரர்களா ? விளையாட்டாளர்கள் அவ்வளவுதான் கபடிகூட விளையாட்டுதான், கிட்டிகூட விளையாட்டுதான் அவர்களை வீரர்கள் என்று சொல்வதில்லையே... உண்மையான வீரன் இராணுவவீரர்களே... அதிலும் பீரங்கிக்கு முன் தனது நாட்டுக்காக மட்டுமல்ல, நமக்காகவும்தான் தனது உயிரை துச்சமென கருதி நடந்து செல்பவர்தான் உண்மையான வீரன், நாயகன். கிரிக்கெட்காரர்கள் சந்தர்ப்பத்தை பயன் படுத்தி விளம்பரப் படங்களில் தவறான செயல்களை செய்து காண்பித்து பணம் பண்ணும் வேஷதாரிகள். விளையாடட்டும் அதற்கான ஊதியத்தை பெறட்டும், கைவண்டி இழுக்கும் தொழிலாளியின் ஊதியம் உயரவில்லையே இதற்கு யார் காரணம் ? சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு க்ரைம் எழுத்தாளர் திரு. ராஜேஸ்குமார் அவர்கள் ஒரு வாசகரின் கேள்விக்கு பதில் சொன்னார். தொலைக்காட்சி விளம்பரத்தில் சச்சின் டெண்டுல்கர் ஒரு கப் பெப்ஸி  கிடைத்ததற்காக கிரிக்கெட் மட்டையையே தானமாக கொடுக்கிறார். இவர்கள் எப்படி இந்தியாவுக்காக விளையாடுவார்கள் என்ற சந்தேகமும் வருகிறது. என்று பதில் சொல்லி இருந்தார்.
 
நல்லது ஐயா எங்களது பத்து கேள்விகளுக்கும் பொறுமையாக முத்தான பதில்கள் தந்தமைக்கு எங்களது GOடாங்கி தொலைக்காட்சி சார்பாக நன்றி
நன்று GOடாங்கிக்கு எமது வாழ்த்துகளும் கூடி.. நன்றி வணக்கம்.
 
ChavasRegal சிவசம்போ-
தொலைக்காட்சி பெயரே போ...கழுதை (Go Donkey) என்பது போலத்தானே இருக்கு... தமிழ் வார்த்தையில் கழுதையை பயன் படுத்துவதில்லையா ?
 
சாம்பசிவம்-
அப்படீனாக்கா... கிரிக்கெட் விளையாடும் சச்சின் டெண்டுல்’’கர்’’ பெயரைச் சொல்லலாமோ... ?
 
சிவாதாமஸ்அலி-
இவரு சொல்லவில்லையே... எழுத்தாளர் திரு. ராஜேஸ்குமார் அவர்கள் சொன்னதைதானே சொல்லி இருக்கிறார். ஆகமொத்தம் நீங்க கூத்தாடினு சொல்றதுக்கு காரணகர்த்தா திருச்சிகாரவுங்கதான். நாளை கூத்தாடிகள் சங்க பிரச்சனை வந்தால் பழியை அங்கிட்டு தள்ளி விட்டுடலாம் உச்சிப் பிள்ளையார் பார்த்துக் கொள்வார்.
 


காணொளி

56 கருத்துகள்:

  1. ஹா...  ஹா...  ஹா...   கர் உரிமை வரிகளை ரசித்தேன்.  ஆனாலும் அவர் உரிமை பெற்றிருப்பது கிர் தானே?!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி கர்ர்ர்ர்ர், கிர்ர்ர்ர்ர் எல்லாம்தானே வருகிறது.

      நீக்கு
  2. திட்டிக்கொண்டே எல்லாத் தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் பார்க்கிறீர்கள் போலவே...!  

    இனி நான் என் வாழ்நாளில் ஒரு நல்ல அரசியல்வாதியை பார்ப்பேன் என்று தோன்றவில்லை என்பதை நானும் ஏற்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எங்கே ஜி பார்த்தேன் ? பார்க்கா விட்டால் நல்லது என்றுதான் சொல்கிறேன்.

      நீக்கு
    2. // பார்க்கா விட்டால் நல்லது என்றுதான் சொல்கிறேன். //

      கமலஹாசன் வாசனை அடிக்கிறதே....!!!!  

      பார்க்காமல் இவ்வளவு நுண்ணிய விவரங்கள் தெரிவதெப்படி!!!! L)))

      நீக்கு
    3. //கமலஹாசன் வாசனை//

      ஹா.. ஹா.. ரசித்தேன் ஜி

      நீக்கு
  3. காணொளியை ஒலி இல்லாமல் பார்த்தேன்.  பின்னர் ஒருமுறை ஒலியுடன் கேட்கவேண்டும்!

    பதிலளிநீக்கு
  4. ஹாஹாஹாஹா! சந்தடி சாக்கில் என்னை டெல்லிவாசியாக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். "க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"க்குத் தான் நான் உரிமை வாங்கி வைச்சிருக்கேன். "கர்"க்கெல்லாம் இல்லை. அதோடு ஹிந்தியில் "கதா" என்னும் சொல் வெவ்வேறு உச்சரிப்புக்களில், வெவ்வேறு பொருட்களில் வரும். கதை என்று சொல்வதற்கும் கதா தான்! "கதா சாகர்" என்பார்கள். கதா மாலா என்பார்கள். இஃகி,இஃகி,இஃகி. நீங்க சொல்லும் கழுதைக்கான ghகதா உச்சரிப்பே வேறே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நீங்க டெல்லிவாலா இல்லையா ?

      நமக்கு ழ ள ல எல்லாம் ஒரே உச்சரிப்புதானே....

      நீக்கு
  5. காணொளியில் அவரோட உக்கிரத்தை என்னால் தாங்க முடியலை. நல்ல அரசியல்வாதிகள் என்பதே குதிரைக்கொம்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அவர் நல்லாவே நடித்து இருக்கிறார். இவ்வருட கருவாடு இவருக்குத்தான்.

      நீக்கு
  6. பட்டதாரியான மோடிதான் பட்டதாரிகள் மட்டுமே தேர்தலில் நிற்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். அதை வரை பட்டதாரியான மோடிக்கு நம் ஆதரவுகளை தரவேண்டும் அப்பதான் மோடி மாதிரியான நல்ல அரசியல் தலைவர்களை கொண்டு வர முடியும். ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஹிந்த்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே அவரது சான்றிதழ் போலி என்ற தகவல்கள் வந்ததே பிறகு எப்படி அவர் பட்டதாரி ?

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய உண்மை நிலைகளை ஆங்காங்கே நகைச்சுவை கலந்து கேள்விக்கு பதிலாக தந்து விட்டீர்கள். நகைச்சுவை உங்களுக்கு இயல்பாகவே வருகிறது. அதிலும் இந்த மாதிரி விதவிதமான சமூகவிடங்களில் இருந்து வந்து தங்களை பேட்டிகள் எடுக்கும் போது தங்கு தடையின்றி வரும் நகைச்சுவைகளை நிறையவே ரசிக்கிறேன். பதிவர்களையும் பேட்டியில் சேர்த்திழுத்து நகைச்சுவையாக பேசிய விதங்களையும் ரசித்தேன்.

    ஆரம்பத்தில் உள்ள கோடாங்கி டி. வி பெயருடன் கூடிய படம் நன்றாக உள்ளது. காணொளி பிறகு கேட்டு விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை இரசித்து படித்து கருத்திட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  8. ஒவ்வொன்றிற்கும் தகுந்த பதில்கள் அருமை ஜி...

    காணொளியில் கோடாங்கி பேசுவது தான் நடக்கும் போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எப்படியோ நாடு மீண்டும் சுதந்திரப் போராட்டத்திற்கு தயாராக வேண்டும்.

      நீக்கு

    2. இங்கே சுதந்திரத்திற்காக போராட தனபாலன் கில்லர்ஜி இருவர் மட்டும் வருவார்கள் போல,,,,,ஹும்ம்ம்ம்

      நீக்கு
    3. நீங்க அமெரிக்காவிலிருந்து ஆதரவு கொடுப்பீர்களே அது போதாதா ?

      நீக்கு
  9. சமூக அக்கறையுடன் இட்ட தங்களின் பதிவை ரசித்தேன் நண்பரே. கேள்விகள் வெறும் 10 தானா.
    மேலும் இது சென்றடைய வேண்டியோரை அடைய வேண்டுமே...
    நடக்குமா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தற்கால தமிழர்களுக்கு தன்மானம், சுயமரியாதை உணர்வு இல்லை என்பதே உண்மை.

      நீக்கு
  10. பதில்கள் முத்தானவை மட்டுமல்ல, சத்தானவையும்கூட.

    மேற்கண்டவர்கள் எல்லாம் கில்லர்ஜியால் பாராட்டப்படும் நிலை விரைவில் உருவாகவேண்டும் என்பது என் ஆசை...அல்ல, அல்ல; பேராசை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது அழகிய கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  11. கேள்வி பதில்கள் ரசித்தேன்... உண்மையானவைதான். ஆனால் அதைக் கேட்பதற்கு 0.5 சதவிகித மக்கள்கூட தயார் இல்லையே என்று யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அந்த 0.5 %-ல் நீங்களும் இருப்பதில் மகிழ்ச்சியே...

      நீக்கு
    2. மக்களுக்கு இலவசமே பிரதானமாக ஆகிவிட்டது. ஒருத்தர் 1000 ரூபாய் தர்றேன்னா இன்னொருத்தர் 1500 ரூபாய், வாஷிங் மெஷின் என்று லிஸ்ட் போடறாங்க. இன்னொருத்தர் லேப்டாப்.... நாடு எங்க போகுதுன்னே தெரியலை. நம்ம உலக்கை, அவர் படங்களுக்கு இலவச டிக்கெட் தர்றேன்னு சொல்லியிருக்காரா?

      பேசாம, எலெக்‌ஷனே வைக்கப்போவதில்லை, அதற்குப் பதில், அதற்குச் செலவாகும் பணத்தை வாக்காளர்களுக்கு 10,000 வீதம் பிரித்துத் தந்துவிடுகிறோம் என்றால், அதையே பண்ணிடுங்க என்று சொல்லிடுவாங்க போலிருக்கு.

      நீக்கு
    3. எனக்கு தெரிந்து மாற்றம் வேண்டுமெனில் திராவிட கட்சிகளை ஒதுக்கி விட்டு...

      சீமானுக்கோ, உலக்கைக்கோ ஓர் சந்தர்ப்பம் கொடுத்து பார்க்கலாம்.

      மீண்டும் மோடி வந்தால் இனி தேர்தல் வேண்டாமென்று சட்டம் இயற்றி விடுவார். பிறகு மன்னர் மோடி என்று சொல்ல வேண்டிய நிலை வரலாம்.

      நீக்கு
  12. சமூக அக்கறையுடன் கேள்விகள், பதில்கள்.

    காணொளி அருமை.

    பதிலளிநீக்கு
  13. ஹாஹாஹா :) தேம்ஸ் கரையில் இருந்து நானும் அந்த அப்பாவி கழுதை குழந்தைகள் சார்பாக உங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறேன் .காரணம் அந்த அப்பாவி உழைப்பாளி  கழுதை குழந்தைகள் உங்களை என்ன பண்ணுச்சுங்க ??? அநியாயத்துக்கு அதுங்க பேரை சொல்லி  கதாநாயகர்களை திட்ட யூஸ் பண்றிங்களே :))   

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நான் அவர்களை அப்படி திட்ட வேண்டாம் என்றுதான் "கசா" என்ற வார்த்தையை உபயோகிக்கின்றேன்.

      நீக்கு
  14. சகோ இந்த கல்லூரியில் படிக்கும்போது ரெஜிஸ்டர் மேரேஜ் விஷயம் 95  இல் ஆரம்பிச்சு .என்னுடன் படித்த இருவர் எனக்கு ஜூனியர் மாணவிகள் சிலர் இந்த வேலையை செய்தனர் .அவசரக்குடுக்கைதனம்மா .இது ஒரு வகையில் பெண் தன்னை விட்டு பிரிய முடியாதென்ற முட்டாள் தைரியத்தில் செய்யப்பட்டது பிறகு பெரிய பிரச்சினைகள் உருவாசாம் ஆனால் 2000 தில்தான் இவ்விஷயம் சினிமாவா வந்து அலைபாய்ந்தது :) எனக்கென்னமோ சில விஷ்யங்கள் பொது ஜனத்துட்டேருந்து டைரக்டர்ஸ் திருடிட்டாங்க . தவறான அதை பலருக்கும் கொண்டு சேர்த்தது சினிமாதான் 



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... அப்படியா ?
      இருப்பினும் தவறான செய்திகளை பரப்பி விடுவது திரைத்துறையே...

      நீக்கு
    2. கில்லர்ஜி... நடிகர் பிரசாந்தின் மனைவி, அவரைத் திருமணம் செய்வதற்கு முன்பு, கல்லூரி மாணவியாக இருந்தபோது இதுமாதிரி விளையாட்டுத்தனமாகவோ இல்லை ஆசையுடனோ, இன்னொருவனுடன் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துகொண்டார் (ஆனால் திருமணமோ, சேர்ந்து வாழவோ இல்லை). பிரசாந்துடன் திருமணத்துக்குப் பின், குழந்தை பிறந்தபிறகு ஏதோ பிரச்சனையில் ஆரம்பித்து இந்த விஷயம்லாம் வெளில வந்தது. பாவம்..அவள் வாழ்க்கை போனதுதான் மிச்சம்.

      நீக்கு
    3. ஆம் நண்பரே கல்லூரியில் இதைப்பற்றிய பொது அறிவை மாணாக்கர்களுக்கு விளக்க மாட்டார்களா ?

      நீக்கு
  15. மக்கள் டிவி முன்பு பார்ப்பது .ஊடகங்கள் குறித்த உங்கள் கருத்துடன் உடன்படறேன் .சிங்கப்பேன் :) (ஸ்பெல்லிங் மிஸ்டேக்கில்லை )என்றெல்லாம் பட்டம் தந்தா இப்படித்தான் ஏக்குமாக்கா நடக்கும் .உங்கள் ஆதங்கம் அனைத்தும் உண்மையே 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  16. சாட்டையடிப் பதிவு...
    மரத்துப் போன முதுகுகளுக்குப் போதாது...

    இந்தப் பதிவுக்கு இணைப் பதிவு ஒன்றினை
    எனது தளத்தில் காண்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது தளம் வந்தேன் GOடாங்கி பாட்டு அருமை வருகைக்கு நன்றி.

      நீக்கு
  17. கேள்விகளுக்கான பதில்கள் நன்று.

    //மரத்துப் போன முதுகுகளுக்குப் போதாது// துரை செல்வராஜூ ஐயா சொல்வது சரி தான்.

    பதிலளிநீக்கு
  18. பட்டப்படிப்பு படித்தவர்கள்மட்டும் அரசியலில் வந்தால் நல்லது நடக்கலாம்என்பதுகோடாங்கி வாக்கா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்தவர்களிடம் சற்று நல்ல குணமிருக்கலாம் என்பது சிறிய நப்பாசை எண்ணம்தான் ஐயா.

      நீக்கு
  19. சிரித்துக் கொண்டே குத்தினா வலிக்காது என்பார்கள். அதைத்தான் முயற்சித்திருக்கிறீர்களோ? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் சிரிக்க வேண்டுமெனில் முந்தைய பதிவு "வடைமாலை" படியுங்கள்.

      நீக்கு
  20. கேள்வியும் பதிலும் நன்று...அந்த உச்சி பிள்ளையார் பாத்துகுவார் என்றால்.. .அவரைத்தான் ஒரு இன்ஞ் கூட நகரவிடாமல் சிலையாக ஆக்கிவிட்டார்களே! பின்னே எப்படி மேல்..கீழ் எந்தப் பக்கம் பார்ப்பார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அவருக்கு எல்லா திசையிலும் கண் இருக்கிறதாம்.

      நீக்கு
  21. சிந்திக்கச் சிறப்பான கேள்வி பதில்

    பதிலளிநீக்கு
  22. யதார்த்தத்தை இவ்வாறாகக் கூற உங்களால் மட்டுமே முடியும் என்பது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  23. அன்பு தேவகோட்டைஜி,

    சத்தான பதிவு.
    இங்கும் பேரன் என்னுடன் விவாதிக்கும் போது
    ஏன் பாட்டி நீ யாரையும் ஆதரிக்க மாட்டியா என்பான்.

    ஒருத்தனும் உத்தமன் இல்லைடா. தான் வாழத் தேர்தலில் நிற்கிறான்.
    என்பேன்.

    நீங்கள் சொல்லி இருப்பது போல கமலஹாசன்
    தேறுவாரோ என்னவோ.

    மிக மிக அருமையான சிந்தனைகளுடனான பதிவு.
    தொலைக்காட்சி விளம்பரங்கள் சில மனதை மிகக் கூச வைக்கின்றன.

    தொலைக்காட்சி என்று வந்ததோ அப்போதே
    அழிவுப்பாதையை ஆரம்பித்து விட்டார்கள்.

    கோடாங்கிக் காணொளி அதிர வைக்கிறது.
    உங்களது நல் நோக்குகள் பலிக்கட்டும்.
    இராணுவ வீரர்கள் வெற்றி பெறட்டும்.
    வாழ்க நலமுடன் அன்பு தேவ கோட்டைஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா
      தங்களது வருகைக்கும், விரிவான கருத்துரைக்கும், காணொளி கண்டு ரசித்தமைக்கும் நன்றி.

      நீக்கு