இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மார்ச் 27, 2021

கருப்பு வெளிச்சங்கள்


01. பணம் படைத்தவனுக்கு பசி தேவையாகிறது.
பசியுள்ளவனுக்கு பணம் தேவைப்படுகிறது.
 
02. மனம் உள்ளவனிடம் தனம் இல்லை.
தனம் இருப்பவனிடம் மனம் இல்லை.
 
03. குணம் இருப்பவனிடம் கோபமும் இருக்கும்.
கோபம் இருப்பவனிடம் குணம் இல்லை.
 
04. உண்மையானவனிடம் பொய்கள் தழைப்பதில்லை.
பொய்யானவனிடம் உண்மை துளிர்ப்பதில்லை.
 
05. உண்மையான பாசமுள்ளவன் ஏமாளியாகிறான்.
ஏமாற்றுபவன் பாசக்காரனாக்கப்படுகின்றான்.
 
06. பாடல் வரிகளின்றி இசை கேட்கலாம்.
இசையின்றி பாடல்களை கேட்க இயலாது.
 
07. கள்ளம் உள்ளவனுக்கு கருணையில்லை.
கருணையுள்ளவனுக்கு இறையே எல்லை.
 
08. வழுக்கியும் எழுபவன் அழமாட்டான்.
வாழ்க்கையில் அழுபவன் எழமாட்டான்.
 
09. காமத்திற்கு கண்கள் திறப்பதில்லை.
திறந்த கண்களுக்கு காமம் தெரியும்.
 
10. உண்மையாய் அழுபவனுக்கு தேவை தனிமை.
பொய்யாய் அழுபவனுக்கு கூட்டமே இனிமை.
 
11. பிறரை சிரிக்க வைத்தவனின் அழுகை தெரியாது.
பிறரை அழ வைத்தவன் பொதுவில் சிரிப்பான்.
 
12. ஞானம் உள்ளவன் தெளிவு பெறுகிறான்.
அதில் நாலும் தெரிந்தவன் ஞானியாகிறான்.
 
ஞானி ஸ்ரீபூவுவின் பெயரன் கில்லர்ஜி தேவகோட்டை

38 கருத்துகள்:

  1. ஞானி ஶ்ரீபுவின் புகழ் ஓங்குக..

    பதிலளிநீக்கு
  2. எல்லாமே மிக அருமையான வாசகங்கள்.  நன்றாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு

  3. வித்தியாசமாக சிந்தித்து சிந்தித்து எழுதுறீங்க குட்

    பதிலளிநீக்கு
  4. நல்ல சிந்தனை.... அர்த்தமுள்ள வாசகங்கள்.

    வெளிப்படையாக இருப்பது, அதிலும் நம் எண்ணங்களை வெளிப்படையாகத் தெரிவிப்பது, பெரும்பாலும் வரவேற்கப்படுவதில்லை. பொய்மையைத்தான் உலகம் விரும்புகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஆம் இதுவே உண்மை. தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
    2. இந்த விஷயத்தில் எனக்கு நிறையவே அனுபவங்கள்! :( யாரும் ரசிப்பதில்லை. அதிலும் உண்மையை!

      நீக்கு
    3. உண்மை தன்னை அலங்காரப்படுத்திக் கொள்வதில்லை.

      பொய் அழகாக ஜோவடிக்கப்படும்.

      நீக்கு
  5. அனைத்தும் அருமை ஜி...

    உள்ளம் என்பது ஆமை...
    அதில் உண்மை என்பது ஊமை...
    சொல்லில் வருவது பாதி...
    நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அருமையான பாடலை மேற்கோள் காட்டியமைக்கு நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. தங்கள் எண்ணங்கள் அனைத்தும் சிறந்தவை. கோர்வையாக கோர்த்தெடுத்த நல்மணி முத்துக்கள். நன்கு சிந்தித்து அருமையான வடிவமாக்கி தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். ஒவ்வொன்றையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை இரசித்து படித்து கருத்திட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  7. மிக மிக அற்புதம் நண்பரே.
    ஆழமாக சிந்தித்து சொற்களை தொடுத்துள்ளீர்கள். மனம் நிறைந்த பாராட்டுக்கள் உங்களுக்கு.👌👌👌👌👌

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  8. அனைத்துமே நல்ல வாசகங்கள். பொதுவாய்க் "காமம்" என்பது ஆசை என்னும் பொருளில் பார்க்கப்பட வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் தமிழ்ச் சொற்களின் பொருளே மாறி வருகிற காலம். நாற்றம்/காதல் போன்றவற்றைப் போலக் காமமும் இங்கே உடல் வேட்கையை மட்டும் குறிப்பதாகி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  9. மனித மனங்களின் பலங்களையும் பலவீனங்களையும் மிக நுட்பமாக ஆராய்ந்திருக்கிறீர்கள் கில்லர்ஜி.

    வாசித்து மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது அழகிய கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  10. அருமையான சிந்தனைகள் சார்.

    பதிலளிநீக்கு
  11. சிறப்பான சிந்தனைகள். பாராட்டுகள் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  12. அனைத்தும் அருமையான வாசகங்கள்!

    பதிலளிநீக்கு
  13. அருமை
    அருமை
    ரசித்தேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  14. வித்தியாசமான சிந்தனைகள்..
    பதிவுலகின் ஞானி தாங்கள்...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  15. மிக அருமையான எண்ணங்களை, உண்மைகளைக் கவிதையாக வடித்திருக்கிறீர்கள்.
    நல்ல ஆழ்ந்த சிந்தனை மனதைத் தொடுகிறது. நன்றி ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  16. வாசகங்கள் யோசிக்கச் செய்கிறது ஞானியின் வேலை அதுதானே... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் நலமா ? நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களின் வருகை நன்றி.

      நீக்கு
  17. நல்ல கருத்து பொதிந்த வாசகங்கள். 

    பதிலளிநீக்கு