இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஏப்ரல் 01, 2021

மாதவனூர், மாவுடியான் மாதவன்

 

கிஷோர் அபுதாபிக்கு வந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாகின்றது ஒரு மாதிரியான பேர்வழி சட்டென யாரையும் கலாய்த்து விடுவான் ஒருமுறை இந்தியப் பிரதமர் மோடிஜி சார்ஜா வந்து பொதுக் கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது அவரையும் கலாய்த்தான் தனியாக நின்று கொண்டு கலாய்த்ததால் யாரும் அவனைக் கண்டு கொள்ளவில்லை. திருமணமாகி மூன்று வருடமாகின்றது ஒரு வயதில் பையன் இருக்கின்றான். ஒரு அலுவலகத்தில் வரவேற்பில் வேலை நல்ல சம்பளம் அவன் தங்கியிருந்த கட்டடம் இடிக்கப் போவதால் தற்போது இந்த அறைக்கு குடி வந்து இருக்கின்றான் அறை எடுத்திருந்த மாதவன் கொஞ்சம் சிடுமூஞ்சி தனக்குப் பிடிக்காத அடுத்த அறைக்காரர்களிடம் இந்த அறையில் இருப்பவர்களும் பேசக்கூடாது என்று நினைப்பவன் கிஷோர் வந்து மறுநாள்...
 
கிஷோர் அடுத்த அறைல வளர்ந்தவன் ஒருத்தன் மலையாளி இருக்கானே அவன்கிட்ட பேச வேண்டாம்.
ஏன் ?
 
அவன் எங்கூட சண்டை..
உங்களோட சண்டைன்னா நான் பேசாமல் இருக்க முடியுமா ?
 
அதெல்லாம் சரியா வராது...
சரியா வராட்டினா.. அறையைக்காலி பண்ணிட்டுப் போங்க...
 
என்னையா..... பேசுறே... இது நான் எடுத்த அறை நேற்று வந்துட்டு என்னைப் போகச் சொல்றே... ?
உங்க அறையா... அப்படீனாக்கா... நான் போறேன் கணக்கை உடனே முடிச்சு விடுங்க... ?
 
கணக்கை முடிச்சு விடவா... என்னோட நிறுவனத்துல நீ வேலை செஞ்சது மாதிரி கேட்கிறே ?
பக்கத்து கட்டிலில் படுத்துக் கொண்டு டிவியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டு இருந்த பாஸ்கரனும், முரளியும் கண்களால் சிரித்துக் கொண்டார்கள்.
இங்கே பாருங்க நான் ஒசாமா கூடவும் பேசுவேன், ஒபாமா கூடவும் பேசுவேன் உங்களுக்கென்ன ?
 
ஒசாமா கூடவா... சரி ஒபாமா கூட எப்படி பேசுவே ?
என்னங்க... லூசு மாதிரி கேட்கிறீங்க... செத்துப்போன ஒசாமா கூடவே பேசுறபோது உயிரோட இருக்கிற ஒபாமாகூட பேச முடியாதா ? வாயை மூடுங்க... பாம்பு குடி போயிறப்போகுது நான் போயி குளிச்சுட்டு வாறேன்.
 
சொல்லி விட்டு டாய்லெட்டுக்குள் நுழைந்தான் கிஷோர். திறந்த வாய் மூடாமல் நின்று கொண்டே இருந்த மாதவன் கிச்சனிலிருந்து விசில் சத்தம் வரவும் குக்கரில் போட்டு வைத்த க. பருப்பு ஞாபகம் வந்து ஓடினான் அவன் போனதும் பாஸ்கரனும், முரளியும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
 
என்ன பாஸூ சரியான ஏழரை வந்து சேர்ந்திருக்கு போல...
இவனுக்கு இப்படி ஆளுதான்யா வேணும், நமக்கு நல்லா பொழுது போகும்.
 
குளித்து விட்டு வெளியே வந்த கிஷோர் மாதவனிடம் கேட்டான்.
என்னங்க டாய்லெட் இந்த நாற்றம் நாறுது ?
 
டால்லெட்னா நாறத்தான் செய்யும்.
அது தெரியும் யூஸ் பண்ணிட்டு தண்ணியைத் திறந்து விட வேண்டாமா ?
 
நீதானே... உள்ளே போயிட்டு வந்தே.... ?
நான் போகும்போதே அப்படித்தான் இருந்துச்சு.
 
அப்பவே வந்து சொல்ல வேண்டியதுதானே ?
எனக்கு அவசரம் நம்பிக்கை இல்லைன்னா இதோ வீடியோ எடுத்து இருக்கேன் பாருங்க....
 
யோவ்.... யோவ்... கொண்டு போயா... அங்கிட்டு அதை எதுக்கு வீடியோ எடுத்தே... ?
இனிமேல் இந்த மாதிரி நடந்துச்சு ஃபேஸ்புக்ல போட்டு கிழிச்சுருவேன் ஞாபகம் இருக்கட்டும்.
 
யோவ் பாஸ்கரு நீ டாய்லெட்டுக்கு போனியா ?
நான் டாய்லெட்டு போயி மூணு நாளாச்சுன்னே...
 
அதான் ரூம் இந்த நாற்றம் நாறுதா... முரளி நீ... ?
என்னண்ணே உங்களுக்குத் தெரியாதா ? நான் ராத்திரி பதினொரு மணிக்கு மேலதான் மொத்தமாக இறக்குவேன்.
 
இந்த ரூம்ல இருக்குறது நாம நாலு பேர் மட்டும்தானே...
நீங்கதான் காலையில டாய்லெட்லருந்து வரும்போதே போன் பேசிக்கிட்டே வந்தீங்க... மறந்துட்டு எந்திரிச்சு வந்துருப்பீங்க...
 
சொல்லி விட்டு மாதவனை ஒரு சுற்று சுற்றி வந்த முரளி... மூக்கை சற்று உறிஞ்சு விட்டு...
ஆமாண்ணே கைலி கலர் மாறி இருக்கு கழுவ மறந்துட்டீங்க... பாஸ்கரனும் சொல்லிக்கிட்டே இருந்தாரு... ரூம் நாறுதுன்னு...
 
அவரசமாக மற்றொரு கைலியை எடுத்துக் கொண்டு டாய்லெட்டுக்குள் போன மாதவன் திரும்பி வரும் பொழுது கிஷோர் அவனது லேப்டாப்பில் தனது செல்போனை ஒயர்களால் இணைத்து Video Convertor -ல் எதையோ பார்த்துக் கொண்டு இருந்ததை கண்டதும் அலறினான்.
 
யோவ் என்னய்யா செய்யிறே ?
வீடியோ கன்வெர்டர் பண்ணுறேன்..
 
எதுக்கு ?
இப்ப போடமாட்டேன் எல்லாம் தயாரா இருக்கும் ஏதாவது அசம்பாவிதம் நடந்துச்சு மறுநொடியே ஃபேஸ்புக்ல பப்ளிஷ் செய்வேன் உங்க ஃபோட்டோ உங்க ஃபேஸ்புக்ல எடுத்து வச்சுக்கிட்டேன்.
 
முதல்ல.. அதை டெலைட் பண்ணுய்யா ?
அப்படீன்னா... இந்த மாச வாடகை கேட்க கூடாது.
 
யோவ் என்னை என்ன... மாவுடியான்னு நினைச்சியா ?
அப்படித்தானே சொன்னாங்க..
 
யாரு ?
இதோ நம்ம அண்ணன் பாஸும், முரளியும்....
 
யோவ் நாங்க எப்பய்யா... சொன்னோம் ?
ஏங்க இவரு மாதவனூர் மாவுடியான் மாதவன் அப்படின்னு நீங்க சொல்லாமலா எனக்கு தெரியுது... ?
 
மாதவன்ணே... இந்த ஆளு சொல்றதை நம்பாதீங்க.... இவரை கழட்டி விடுங்க வாடகையை நாம மூணு பேருமே ஷேர் பண்ணிக்கிறலாம்.
ஹலோ நம்மளை கழட்டி விடலாம்னு நினைச்சீங்க... நீங்களும், முரளியும் நேற்று ராத்திரி தண்ணியடிச்சிட்டு கைலி இல்லாமல் கிடந்ததை வீடியோ எடுத்து எடிட் பண்ணி வச்சு தயாரா இருக்கு க்ளிக் பண்ணுனேன் அவ்வளவுதான் நான் ரூம்ல சமைக்க மாட்டேன், டாய்லெட் க்ளீன் செய்ய மாட்டேன் நீங்க முணு பேரு மட்டுமே செய்துக்கிருங்க.. வாடகை மட்டும்தான் தருவேன் நான் வெளியே போனவுடன் எனது லேப்டாப்பை ஒளிச்சு வச்சுக்கிறலாம்னு லூசு மாதிரி நடந்துக்கிறாதீங்க வீடியோ எல்லாமே என்னோட ஆஃபீஸ் கம்ப்யூட்டருலயும், செல்போன்லயும் வச்சு இருக்கேன் லேப்பை தொட்டாலே எனக்கு தெரிஞ்சிடும் அந்த அளவுக்கு மைக்ரோ அஸோமுசியன் செட்டிங் சிஸ்டத்தை ரெகார்ட் பண்ணி 999 ன்ல கணைக்ட் கொடுத்து இருக்கேன் தொட்டுத் திறந்த மறுநொடியே நேரே ட்ராஃபிக் போலீஸ் டிபார்ட்மெண்டுக்கு போயிடும் ஜாக்கிரதை சரி நான் வெளியில் போகணும் சாப்பாடு ரெடியா ?
 
என்று கேட்டுக் கொண்டே கிச்சனில் போய் சோறைப் போட்டு எடுத்து வந்து கீழே பேப்பர் விரித்து உட்கார்ந்து சாப்பிட்டவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் மாதவனும், பாஸ்கரனும், முரளியும் சாப்பிட்டு விட்டு எழுந்து உடையணிந்து கொண்டு வெளியேறினான் கிஷோர்.
 
மாதவன்ணே.... எங்கேயிருந்துங்க புடிச்சு வந்தீங்க இந்த கெரகத்தை ?
எனக்கு என்னய்யா தெரியும் பெட் ப்ளேஸ் அவைலபிள்னு பேப்பர் ஒட்டினேன் மறுநாளே கால் பண்ணுனான் வாடகை எவ்வளவுன்னு கேட்டான் தமிழ்க்காரனா இருந்ததால சரின்னு வரச்சொன்னேன் முரளி நீங்க சொல்லுங்க என்ன செய்யலாம் ?
 
என்னத்தை சொல்ல, படிச்சவனைக் கொண்டு வந்தால் இப்படித்தான் பிரச்சனை வரும் ஏதோ மைக்ரோ அஸோமுசியன் செட்டிங் சிஸ்டம் அப்படின்னு சொல்றான்... அப்படின்னா ?
யாருக்கு தெரியும் ? நான் ஊருல மளிகைக் கடையில் கசகசா மடிச்சுக் கொடுத்துக்கிட்டு இருந்தவன்.
 
யாருட்டயாவது கம்ப்யூட்டர் கடைகாரன்ட்ட கேட்போமா ?
ஏய்யா.... ஏதாவது வில்லங்கமா இருக்கப் போகுது.                
 
பாஸு லேப்டாப்பை உடைச்சுருவோமா ?
டேய் நீ வேற... தொட்டாத்தான் போலீஸுக்கு போயிரும்னு சொல்றானே... என்ன முரளி யோசிக்கேறே ?
 
மாதவன்ணே... எனக்கு ஊருல பொண்ணு பார்த்து வச்சு இருக்காங்கே.... அடுத்த மாசம் நான் ஊருக்கு போகும்போது ரூமை காலி பண்ணிக்கிறேன் திரும்பி வந்தால்... பார்ப்போம் அதுக்கு முன்னால காட்டைக் கலைச்சு விட்றாதீங்க... அவனை அனுசரிச்சு போவோம் இவன் பாட்டுக்கு ஃபேஸ்புக்ல விட்டான்னா.. ஒரு பய பொண்ணு கொடுக்க மாட்டான்.
ஆமாண்ணே... என்னோட மாமனாரு ஊருக்கு வாங்க கடை வச்சுத் தாரேன்னு சொல்லி இருக்காரு நான் இந்த மாசமே கேன்சல் லட்டர் கொடுக்கப் போறேன் நானும் ரூமைக்காலி பண்ணிக்கிறேன்.
 
ரெண்டு பேரும் இப்படிச் சொன்னால் நான் என்ன செய்யிறது ?
நீங்களும் கேன்சல் பண்ணிட்டு வாங்கண்ணே சம்பாரிச்சது போதும்.
 
இவனுக்கு பயந்துக்கிட்டு நாம கேன்சல்ல போறதா ?
ஆளைப்பத்தி விசாரிக்காமல் வரவச்சீங்க இப்ப அனுபவிங்க... சரி நாங்க ரெண்டு பேரும் ஊருக்குப் போறதை இந்தக் கிரகத்துக்கிட்டே சொல்லாமல் புது ஆளு பாருங்க...
 
என்று சொல்லி விட்டு ஆளுக்கொரு பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டு படுத்தார்கள் முரளியும், பாஸ்கரனும் மாதவன் முழித்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தான் டி.வி.யில் செய்தி வாசிப்பாளினி தலைப்புச் செய்திகள் சொல்லிக் கொண்டு இருந்தாள் இப்படி...
 
புதிதாக கொ.இ.க. கட்சியில் சேர்ந்த கிறுக்கு கிருஷ்ணன் என்பவர் கட்சியின் உள் விவகாரத்தில் குட்டையை குழப்பி பரபரபாக்கிக் கொண்டு இருக்கின்றார் இவர் சொல்லும் மேலதிக விபரங்கள் எதிர்கட்சித் தலைவர் திரு. முந்..............
 
Chivas Regal சிவசம்போ-
மாதவனூரை மொட்டையடிச்ச இந்த கிஷோர் எந்த ஊருக்காரனா இருப்பான் ?

49 கருத்துகள்:

  1. யாரையோ மறைமுகமாகக் குறிக்கும் அரசியல் பதிவோ... ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி எனது எழுத்துகள் எல்லா காலமும், எங்கும் பொருந்தும்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. நான் நினைத்தேன் உங்களிடமிருந்து இந்த வார்த்தையை...

      நீக்கு
  3. கிஷோர் மாதிரி பேர்வழிகள் எங்கும் இருக்கிறார்கள்.பதிவை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் ஐயா அவர்களின் இரசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. முதல் படமும் அருமை. பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பார்கள். அதுக்காக அதன்கிட்டேயும் போய் வாடகை கேட்பதா?

    இந்த கிஷோர் மாதிரி ஆட்களுடன் வாழ்வது கஸ்டந்தான் என்று இங்கு வந்தால் இங்கேயுமா தொல்லை? என்ற யோசனையுடன் அந்த முதல் படத்தில் அக்காடாவென்று நிம்மதியாக படுந்திருந்தவர் எழுந்திருக்கிறாரோ?:))

    அழகாக சிந்தித்து இயல்பாக பதிவை எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      "நோ ஆதார் கெட்அவுட்" என்று மோடி சடலத்திடம் சொன்ன புகைப்படத்தைத்தான் நான் எனது யோசனையில் மாற்றி இருக்கிறேன்.

      கிஷோர் போல கிறுக்கன்கள் நிறைய பேர் உண்டுதான் என்ன செய்வது ? பதிவை இரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  5. அடுத்த வாரம் முதல் டோல்கேட்டை நடந்து கடந்தாலும் fastag கட்ட வேண்டும் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அப்படியா ?

      இன்னும் எவ்வளவு கடக்க வேண்டியது இருக்கோ ராமா... ஜெய் ஸ்ரீராமா...

      நீக்கு
    2. தனபாலன் அடுத்த மாதம் முதல் கார் பைக் எல்லாவற்ரையும் ஆர் டி ஒ ஆபிஸிற்கு எடுத்து போய் மைலேஜ்ஜை குறித்து விட்டு வர வேண்டும் அதன் பின் மாதம் மாதம் அது மாதிரி சென்று குறித்து மைல்லேஜ் வரி என்று ஒரு வரியை கட்ட வேண்டும் இப்படி ஒரு வரி தேர்தலுக்கு அப்புறம் வரும் என்று உளவுத்துறை மூலம் எனக்கு செய்தி வந்திருக்கிறது

      நீக்கு
    3. ஐயய்யோ நான் உடனே காரை விற்கணும் போலயே...

      நீக்கு
  6. காலையிலேயே கலக்கல்.. அபாரம்!..

    கிறுக்கன் போல கிசார்..
    கிசார் போல கிறுக்கன்!...

    பேரை ஏன் மாற்றிச் சொல்கிறேன் என்றால்
    காரணம் தங்களுக்கே தெரியும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஹா.. ஹா.. ரசித்தேன் தங்களது கருத்தை நன்றி ஜி

      நீக்கு
  7. எனக்குப் புரிஞ்சுபோச்சு.. கில்லர்ஜி என்பவருக்கு.. முரளி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்குது இங்கு ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே வாங்க அதிரா பல பதிவுகளுக்கு வரவில்லையே... நான் அவனில்லை.

      நீக்கு
    2. ஓ பல பதிவுகளோ.. ஒன்றுதான் என நினைச்சு விட்டிருந்தேன்.. இனி வருகிறேன்.

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி அதிரா.

      நீக்கு
  8. முதல்ப் படம் சூப்பராய்த் தேடிப் போட்டிருக்கிறீங்கள்... இறந்த பின்பும் நிம்மதி இல்லை:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா தூங்குபவரை எழுப்புவது உங்கள் அங்கிள் மோடிஜிதான்.

      நீக்கு
  9. செம எண்டெர்ட்டெய்ண்மெண்டு சார்.
    வீக்நெஸ் வெளிய போச்சுனா அதோ கதிதாந்.

    பதிலளிநீக்கு
  10. சிரிச்சி முடியல!

    புகைப்படத்தில் திருத்தம் அருமையோ அருமை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சிரிப்பது மனதுக்கு நல்லது.

      நீக்கு
  11. நகைச்சுவை கதைன்னு நினைச்சு சிரிச்சேம். கமெண்டில் அரசியல்னு போட்டிருக்காங்களா.... யாராயிருக்கும்னு மண்டைக் குடைச்சல் இப்போ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் ஹா.. ஹா.. ஹா.. தங்களது கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  12. இது அரசியல் பதிவா :)  நமக்கு அரசியல் ஞானம் கொஞ்சம் குறைவு ஆனாலும் கூட்டி கழிச்சி பார்த்ததில் எதோ கொஞ்சம் புரிஞ்சது ..உண்மையில் சிலரிடம் குறிப்பா கிஷோர் மாதிரி ஆட்களிடம் கவனமாத்தான் இருக்கணும் எல்லாத்துக்கும் ப்ரூப் வச்சிருக்காய்ங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      //எல்லாத்துக்கும் ப்ரூப் வச்சிருக்காய்ங்க// ஹா.. ஹா.. ஸூப்பர்

      நீக்கு
    2. ஆமாம் அம்மணி ஏஞ்சலுக்கு சமையல் ஞானம் அதிகம் அதிலும் அதீஸ்பேலஸ் மூலம் இன்னும் அதிகமாகிவிட்டது போல ஹீஹீ

      நீக்கு
    3. @  ட்ரூத் :) உண்மையில் ஒரு காலத்தில் ஹிந்து பத்திரிக்கை இண்டியன் எக்ஸ்ப்ரெஸ் ,ஜூவி ,எல்லாம் படிச்சு நிறைய தெரிஞ்சு வச்சிருந்தேன் .அது ஒரு காலம் எங்கப்பாவும் நிறைய விஷயங்களை சொல்லியிருக்கார் .பிறகு எனோ அரசியலில் அப்படியே  படிப்படியா ஆர்வமில்லாம போச்சு .அதீஸ் பேலஸ் ஓனரம்மா செய்முறையில் அந்த சிக்கன் பிரட்டல் செய்து கொடுத்தேன் வீட்ல ஆஹா ஓஹோன்னு புகழறாங்க :) ஹீஈ நீங்க சொல்றமாதிரி இப்போ கொஞ்சம் சமையல் ஞானம் வருதுன்னு நினைக்கிறன் 

      நீக்கு
    4. சமையல் ஞானம் வரட்டும் தங்களது குடும்பத்தாருக்கு நலமாகும்.

      நீக்கு
  13. அரசியல் பதிவுல இறங்கிட்டீங்களா? துபாயில் பெட் ஸ்பேஸ் அவய்லபிள் என்ற விளம்பரங்கள் நிறைய வரும் 1993 நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எல்லோருமே அரசியல் பதிவு முத்திரையை குத்திட்டீங்க... ஹா.. ஹா..

      நீக்கு
  14. யாரைக்குறித்துனு புரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவு நகைச்சுவைதான் புகைப்படம்தான் அரசியலாக்கி விட்டது.

      "நோ ஆதார் கெட்அவுட்" என்று மோடி சடலத்திடம் சொன்ன புகைப்படத்தைத்தான் யாரோ வசனத்தை மாற்றி இருக்கிறார்கள். (ஒருவேளை அது நானாக இருக்குமோ ஹி.. ஹி..)

      பதிவைப்பற்றி ஜொள்ள'வில்லையே...

      நீக்கு
  15. நகைச்சுவையாக நாட்டு நடப்பை சொல்லி விட்டீர்கள்.முதல் படம் கவலை அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மைதான் இனி சர்வாதிகார ஆட்சிதான் இந்தியாவில் நடக்கும் போல...

      தங்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  16. அன்பு தேவகோட்டைஜி,
    அருமையான விழிப்புப் பதிவு.
    இப்பதான் ஒவ்வொரு கட்சிக்கும் கிஷோர் இருக்கிறாங்களே.
    எல்லாத் தலைவர்களும்
    அடங்கிப் போறாங்களாமே.

    சூப்பர் டயலாக். வெளுத்து வாங்குங்க:)



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா கிஷோர் பெயரை நேரடியாக வைத்ததும் நல்லதுதான். வருகைக்கு நன்றி அம்மா.

      நீக்கு
  17. ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதையா இருக்கே..... !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. உண்மைதான் நண்பரே... தமிழகத்தை ஆண்டவர்களும், ஆள நினைப்பவர்களும் இப்படித்தானே...?

      நீக்கு
  18. பதிவு அருமை. சிரிப்பு வந்தது. ம்... யாரை சொன்னால் என்ன? நமக்கு சிரிப்பு தான் முக்கியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நட்பே... ரசித்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  19. கருத்துப்படம் மிகவும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு