01.
நாம் பிறருக்கு செய்த உதவியை மறப்பது நன்று.
பிறர் நமக்கு செய்த உதவியை மறப்பது நன்றன்று.
02.
தனது மனைவியை நினைத்திருப்பது நன்று
பிறருடைய மனைவியை நினைப்பது நன்றன்று.
03.
கவலைகளை மறக்க நினைப்பது நன்று.
கவலையே நினைவாக இருப்பது நன்றன்று
04.
மனைவியோடு ஆனந்தமாக வாழ்வது நன்று.
ஆனால் ஊதாரித்தனமாக வாழ்வது நன்றன்று.
05.
கூத்தாடிக்கு ரசிகனாக இருப்பது நன்று.
அவனுக்கு வெறியனாக இருப்பது நன்றன்று.
06.
பொழுது போக்குக்காக கிரிக்கெட் பார்ப்பது நன்று.
அதையே வேலையாக்கி கிறுக்கனாவது நன்றன்று.
07.
அரசியல்வாதிகளுக்கு ஓட்டு போடுவது நன்று.
அவர்களுக்கு தொண்டனாக இருப்பது நன்றன்று.
08.
வாழ்க்கை உயர்வுக்காக கடன் வாங்குவது நன்று.
வாழ்வு முழுவதும் கடன் வாங்குவது நன்றன்று.
09.
நாள்தோறும் இறைவனை வணங்குவது நன்று.
நம்பிக்கை இன்றி வணங்குவது நன்றன்று.
10.
மாமனார் வீட்டுக்கு போய் வருவது நன்று.
மாமனார் வீட்டிலேயே வாழ்வது நன்றன்று.
11.
நாம் பிறருக்கு கொடுத்த கடனை மறப்பது நன்று.
பிறரிடம் வாங்கிய கடனை மறப்பது நன்றன்று
12.
கஷ்டப்படும் சகலைக்கு உதவுவது நன்று.
கொழுந்தியாளுக்காக உதவுவது நன்றன்று.
ChavasRegal சிவசம்போ-
மதுவை அருந்துவது நன்று, மதுமிதாவையும் அருந்தச் செய்வது நன்றன்று.
சாம்பசிவம்-
ஆமா பிறகு அவள் பாட்டிலை காலி பண்ணிடுவாளே...
பிறர் நமக்கு செய்த உதவியை மறப்பது நன்றன்று.
பிறருடைய மனைவியை நினைப்பது நன்றன்று.
கவலையே நினைவாக இருப்பது நன்றன்று
ஆனால் ஊதாரித்தனமாக வாழ்வது நன்றன்று.
அவனுக்கு வெறியனாக இருப்பது நன்றன்று.
அதையே வேலையாக்கி கிறுக்கனாவது நன்றன்று.
அவர்களுக்கு தொண்டனாக இருப்பது நன்றன்று.
வாழ்வு முழுவதும் கடன் வாங்குவது நன்றன்று.
நம்பிக்கை இன்றி வணங்குவது நன்றன்று.
மாமனார் வீட்டிலேயே வாழ்வது நன்றன்று.
பிறரிடம் வாங்கிய கடனை மறப்பது நன்றன்று
கொழுந்தியாளுக்காக உதவுவது நன்றன்று.
மதுவை அருந்துவது நன்று, மதுமிதாவையும் அருந்தச் செய்வது நன்றன்று.
ஆமா பிறகு அவள் பாட்டிலை காலி பண்ணிடுவாளே...
ஒன்றும் பதினொன்றும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கிறதோ....! பனிரெண்டு படித்ததும் சிரித்து விட்டேன்!
பதிலளிநீக்குவாங்க ஜி ஆம் உதவியும், கடனும் கிட்டத்தட்ட ஒன்றுதானோ ?
நீக்குஐந்தும் ஆறும்... அப்பாடி.. கொஞ்சம் ரசிக்கலாம் என்று சொல்லி இறங்கி வந்திருக்கிறீர்கள்! எலலாமே அருமை.
பதிலளிநீக்குஏன் ஏழையும் அந்த வரிசையில் சேர்க்கலாமே... வருகைக்கு நன்றி ஜி.
நீக்குஎல்லாமே நன்று!!!! கில்லர்ஜி! நன்றல்ல என்றதும் கூட நன்று!!!
பதிலளிநீக்குகிரிக்கெட்டும் நடிகர்களும் கொஞ்சம் பிழைத்தது/தார்கள்!! ஹாஹாஅ
கீதா
வாங்க ஹா.. ஹா.. எல்லோருமே ஏன் இப்படி நினைக்கிறீர்கள் ?
நீக்குநன்று, நன்றன்று...மிகவும் அருமை.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. பொருத்தமான சொற்கள் அமைத்து ஒவ்வொரு வரிகளையும் சிந்தித்து நன்றாக எழுதி உள்ளீர்கள். முகப்பு படமும் பதிவுக்கு பொருத்தமாக உள்ளது. உடை நன்றாக இருப்பதையும் இப்படித்தான் கிழித்து அணிகிறார்கள்.
12 தத்துவங்களும் நன்றாக உள்ளது. அருமை. ரசித்தேன். கடைசியில் புன்னகைக்க வைத்து விட்டீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ பதிவை இரசித்தமைக்கு நன்றி.
நீக்குஅந்தப் புகைப்படம்தான் இந்த வார்த்தைகளுக்கு வித்து.
நன்று நன்றன்று கவிதை அருமை.
பதிலளிநீக்குநன்றாக இருக்கிறது.
வருக சகோ வருகைக்கு நன்றி.
நீக்குஅனைத்தும் அசத்தல் ஜி...
பதிலளிநீக்குவாங்க ஜி வருகைக்கு நன்றி
நீக்குபதிவு நன்று. நன்றன்று என்று எவரேனும் சொல்ல நினைத்தால் நன்றன்று.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது பாராட்டுகளுக்கு நன்றி.
நீக்குபதிவு நல்லா இருக்கு. படத்தைப் பார்த்தால்,
பதிலளிநீக்கு13. யாரேனும் கிழிந்த ஜீன்ஸ் டிரவுசர், மாடர்ன் என்று வாங்கித்தந்தால் உபயோகிப்பது நன்று.
ஆனால் நாம் வாங்கின ஜீன்ஸ் டிரவுசரை கிழித்து விட்டுக்கொண்டு இதுதான் லேடஸ்ட் மாடல் என்று சொல்வது நன்றன்று
என்று எழுதியிருக்கலாமோ?
வருக நண்பரே
நீக்கு13. ஹா.. ஹா.. ஸூப்பர் வசனம் தொடர்ந்து எழுதுங்கள்.
3 ஆவது எழுதும்போது என்னை நினைச்சுக் கொண்டீர்களோ! நம்ம நிலைமை அப்படித் தான் இருக்கு! இஃகி,இஃகி,இஃகி! நல்லாத் தான் இருக்கு எல்லா நன்றன்றுகளும்! :)
பதிலளிநீக்குவாங்க இது இன்றைய வாழ்க்கை முறையில் பலருக்கும் இதே நிலைப்பாடுதான் பாராட்டுகளுக்கு நன்றி.
நீக்குகருத்துகள் நன்று. மதுமிதாவை[?] வம்புக்கிழுத்தது நன்றன்று!
பதிலளிநீக்குவருக நண்பரே அது ChavasRegal சிவசம்போவைத்தான் கேட்கணும்.
நீக்குநல்லதையும் , அல்லதையும் சொல்லியிருக்கீங்க.... பின்பற்றணுமே...
பதிலளிநீக்குவாங்க மேடம் வருகைக்கு நன்றி.
நீக்கு
பதிலளிநீக்கு//கொளுந்தியாளுக்காக உதவுவது நன்றன்று///
கில்லர்ஜி ஒழிக கில்லர் ஒழிக கில்லர்ஜி இந்த வரியை வாபஸ் வாங்கும் வரைக்கும் கலைஞர் ஸ்டைல் உண்ணாவிரதம் இருக்கப் போறேன்
வருக தமிழரே ஐயய்யோ கொலைஞர் ஸ்டைலா ? இது சுத்த மோசமாச்சே...
நீக்குஹா ஹா ஹா நானும் இதற்கு எதிர்ப்புச் சொல்லுவேன்:)).. கொழுந்தியாளை தன் சகோதரியாக நினைச்சு உதவோணும் தெரியுமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
நீக்கு//சகோதரியாக நினைச்சு//
நீக்குஇதென்ன புதுக்கூத்து ?
அத்தனை நன்றுகளும் நன்று.
பதிலளிநீக்குகிழிந்ததைத் தைத்துப் போட்டுக் கொள்பவர்கள் நாம்.
இவர்கள் இருப்பதைக் கிழித்து
உடலைக் காண்பிக்கிறார்கள். என்ன ஒரு மன நிலை
இது:(
வாங்க அம்மா இதுவா முற்போக்கு சிந்தனை ?
நீக்கு3,4,5,6 என்று சொல்ல வேண்டும் என்று நினைப்பது நனறு.
பதிலளிநீக்குஆனால் அனைத்துமே மக்களுக்குப்
பொருந்தும் என்பதால்
எல்லா வாக்கியங்களும் நன்றி அன்பு தேவகோட்டை ஜி.
தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி நண்பரே...
நீக்குஎல்லாமே நன்று, நன்று, நன்றுதான். கடைசியில் வைத்தீர்களே ஒரு பஞ்ச்!ஹாஹாஹா!
பதிலளிநீக்குவாங்க மேடம் பல பதிவுகளுக்கு வரவில்லையே...
நீக்குபத்தோடு முடித்திருந்தால் ஒரு வேளை திருக்குறள் மாதிரி இருந்திருக்கலாமோ...
பதிலளிநீக்குஇருப்பினும் நன்று நண்பரே.
ஹா.. ஹா.. வருக நண்பரே குறளோடு இதை ஒப்பீடு செய்யலாமா ?
நீக்குஹா ஹா ஹா அனைத்தும் நன்று..
பதிலளிநீக்குஆனால் கொழுந்தியாளைக் குறை சொல்வது நன்றல்ல:))..
ஆவ்வ்வ் மீயும் ஜொள்ளிட்டேன் பஞ்ஞ்ஞ்ஞ்:))
வாங்க அதிரா வருகைக்கு நன்றி.
நீக்குசிரித்துக் கொண்டே சிந்தித்தேன்...
பதிலளிநீக்குஎனது பதிவு
என் அழகான நாட்கள்...!
https://inaiyaidhazh.blogspot.com/2021/04/en-azhagana-naatkal.html
வருக நட்பே தங்களின் முதல் வருகைக்கு வந்தனம்.
நீக்குஎன்ன கில்லர்ஜி இதெல்லாம்? ம்.. நவீன உலகம் போல...
பதிலளிநீக்குநீங்கள் இந்த கேள்விக்கு பதில் தருவதாக சொன்னீர்கள் என்பதை நினைவுபடுத்தி....
https://newsigaram.blogspot.com/2018/06/FEW-MINS-WITH-SIGARAM-QandA.html
வருக நண்பரே நன்றி.
நீக்குஇதோ தளம் வருகிறேன் என்ன விடயம் ?
நன்று ! நன்றன்று--super.. நண்பரே!!
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி.
நீக்குநல்லா இருக்கு நண்பரே!
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி.
நீக்கு