இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூலை 31, 2021

இந்தியா வல்லரசா ?


ணக்கம் நட்பூக்களே... இந்தியா வல்லரசாகி விட்டது என்று காலையில் எழுந்தவுடன் தொலைக்காட்சியை பார்த்தால் சேவல்களுக்கு இணையாக கூவுகின்றார்களே... கூமுட்டைகள் இதோ பாருங்கள்... இந்திய வங்கிகளில் சுமார் ஒன்பதாயிரம் கோடியை கடனாக பெற்றுக் கொண்டு இங்கிலாந்தில் போய் வாழும் திருவாளர். விஜய் மல்லையாவை சட்டரீதியாக கைது செய்து கொண்டு வரமுடியாத இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் வல்லரசாகி மக்களுக்கு லாபமென்ன ?
 
பெருமைக்கு வாய் கிழிய பேசாதீங்கடா... பின்புறத்து டவுசரில் ஓட்டையாக வைத்துக் கொண்டு முன்புறச்சட்டையில் தங்கப்பித்தான் வைத்தது போலிருக்கிறது தங்களது வாதம். விஜய் மல்லையா நமது இந்தியன் என்றால் அவரை கைது செய்து கொண்டு வரவேண்டியதுதானே முறை. இந்தியன் மட்டுமல்ல எந்த நாட்டைச் சார்ந்தவன் என்றாலும் தனது நாட்டில் குற்றம் செய்தால் அவனை எந்த நாட்டிலும் போய் ஆதாரம் காட்டி கைது செய்வதுதானே உலகளாவிய சட்டத்தின் ஒழுங்குமுறை.
 
இந்த நாட்டு மக்களுக்கு உணவளிக்கவும், விவசாயத்தை வாழ வைக்கவும் வெறும் பத்தாயிரம் ரூபாயை தனது வயல்களின் பத்திரத்தை வங்கியில் அடகு வைத்து கடன் வாங்கி கட்ட முடியாத காரணத்தால் அவர்களை தற்கொலை செய்து கொல்லும் மனநிலைக்கு தள்ளும் வங்கி மேலாளர்களே.. உங்களுக்கு திராணியிருந்தால் விஜய் மல்லையாவின் வீட்டு வாசலை கடந்து பாருங்கள். காலை ஒடிக்க அடியாட்கள் ஓடி வருவார்கள் என்பது உங்களுக்கும் தெரியும்.
 
இவர்களெல்லாம் பெருங்கொண்ட அரசியல்வாதிகளின் பின்புலம் இல்லாமல் வெளிநாட்டில் வாழ இயலுமா ? இந்தியனையே கைது செய்ய வலுவில்லாத அரசு. வேற்று நாட்டுக்காரன் நமது நாட்டில் குற்றம் செய்து தப்பித்து விட்டால் அவனது நாட்டில் போய் கைது செய்ய இயலுமா ? என்ற கேள்வியும் நம் மனதுள் எழத்தான் செய்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது வாய்ச்சவடால்.
 

சவூதி அரேபிய நாட்டில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த உண்மை நிகழ்வு. சவூதி அரசின் இளவரசர்களில் ஒருவர் எமிரேட்ஸ் நாட்டின் துபாய்க்கு வருகிறார். ஆடம்பர விடுதியில் தங்கி இருக்கிறார். இதில் அவருக்கும், அவரது உதவியாளருக்கும் ஏதோ கோபத்தில் இளவரசர் கை நீண்டுவிட உதவியாளர் எதிர்பாராத விதமாக அடிபட்டு இறந்து விடுகிறார். எமிரேட்ஸ் அரசு சவூதிக்கு தகவல் அனுப்ப, இளவரசரையும், இறந்தவரின் உடலையும் காவல்த்துறை பாதுகாப்புடன் சவூதிக்கு அனுப்பச் சொல்கிறது. இதை எமிரேட்ஸ் அனுமதிக்கிறது காரணம் சவூதி அரேபியா, ஓமன், எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன், குவைத், யெமன் போன்ற நாடுகளின் கூட்டமைப்பு சட்டத்தின் ஒழுங்குமுறை.
 
விமானம் சவூதி அரேபியாவில் இறங்கியவுடன் இளவரசர் கைது செய்யப்படுகிறார், அங்கு நடைமுறையில் உள்ளது இஸ்லாமிய சரீயத் என்னும் சட்டம். அச்சட்டம் சொல்லும் ஸரத்துப்படி இறந்தவரின் குடும்பம் நீதி மன்றத்தால் அழைக்கப்பட்டு. குடும்பத்தாருக்கு நீதி வழங்கும் உரிமையை கொடுக்கிறது.
 
விதிமுறைகள் இரண்டு அவை...
 
01. இளவரசரை மன்னித்து அதற்கு பகரமாக பணம் பெற்றுக் கொள்வது அளவீடு அவர்கள் சொல்வதே (ஒன்று முதல் பல மில்லியன்கள் வரை)
 
02. அல்லது எங்களது மகனின் மரணத்துக்கு பகரமாக இளவரசரை உயிர் பிரியும்வரை தூக்கிலிட வேண்டும்.
 
குடும்பத்தார் வழங்கிய நீதி என்ன தெரியுமா ?
 
இளவரசருக்கு தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும்.
 
சட்டம் ஆமோதித்தது...
மன்னர் குடும்பம் சம்மதித்தது...
தூக்கு நிறைவேறியது...
 
ஆம் மன்னர் குடும்பத்தில் முதன் முறையாக ஒரு குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை சரித்திரத்தில் இடம் பெற்றது.
 
இதுவல்லவோ... நாடு,
இதுவல்லவோ... நீதி,
இதுவல்லவோ... நேர்மை,
இதுவல்லவோ... சட்டம்.
 

நாம் மனிதனை வெட்டுபவனுக்கு ஜாமீன் கொடுத்து விட்டு, பசு மாட்டை வெட்டுபவனை தூக்கிலிடச் சொல்கிறோம். அதற்காக மாட்டை வெட்டுவது குற்றமல்ல என்று நான் சொல்வதாக அர்த்தமல்ல... மாட்டை வெட்டுவது குற்றமெனில் கோழியை வெட்டுவதும் குற்றமே... உலகில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் வாழ உரிமையுண்டு.
 
நமது நாட்டில் வார்டு உறுப்பினரின் மூன்றாவது வைப்பாட்டியின் தம்பி காவல் நிலையத்தில் போய் மிரட்டுகின்றான். எனது மச்சான் யார் தெரியுமா ?
 
அங்கு பெரும் செல்வம் படைத்த மன்னர் குடும்பம், சட்டத்துக்கு கட்டுப்பட்டு ஒரு சாதாரண குடும்பத்தின் சொல்லுக்கு கை கட்டி நிற்கிறது.
 
கன்றுக்காக மகனை தேரில் ஏற்றிக் கொன்றதுதானே தமிழனின் வரலாறு. இன்று எங்கு போனது அந்த நீதியும், நேர்மையும் ? நான் மதவாதம் பேச வரவில்லை. ஆனால் மதம்தான் என்னை இங்கு பேச வைத்தது. வாழ்க நீதியும், நீதியரசர்களும்...
 
இங்கு நிகழும் இத்தனை இழிவுகளுக்கும் காரணகர்த்தா வெறும் ஆயிரம் ரூபாய்க்காக தனது வாக்குரிமையை விற்கும் மா’’க்களே... இவர்களுக்கு மக்களாட்சி தேவையில்லை. மன்னர்கள் ஆட்சியே தேவை. திடீர் சுனாமி வந்து இவர்களை அழைத்துக் கொண்டு போகட்டும். அதில் இந்த தேவகோட்டையானும் அடங்கலாம்தான்... அடுத்த தலைமுறைகளாவது அறிவாற்றலுடன் மனிதம் உள்ள மனிதராக வாழட்டும்.
 
கில்லர்ஜி தேவகோட்டை

34 கருத்துகள்:

 1. இந்தியா வல்லரசாகி விட்டது. அதனால் தான் ஒலிம்பிக்ஸில் பதக்கங்களை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டது

  சுனாமி வரக்கூடிய தூரத்திலா தேவகோட்டை இருக்கிறது?
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது ஊரை முதலில் சொன்னால் சண்டைக்கு வருவீர்களே... ஐயா ஆகவேதான்.

   நீக்கு
 2. நம் நாட்டு ஜண்டா, பண மோசடி செய்த ஒருவரை தண்டனை கொடுப்போம் என்றது... இன்றைக்கு தண்டனை என்னவென்று தெரியுமா ஜி...? ஒரு துறைக்கு பதவி...

  பாலியல் குற்றங்களுக்கு பா. ஜல்சா பார்ட்டியில் உடனடி பதவி உண்டு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தவறை செய்பவர்களைவிட தவறுக்கு தூண்டுகோலாக இருப்பவர்களே முதல் குற்றவாளி ஜி

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  தங்கள் மனஆதங்கம் பதிவில் தெரிகிறது. ஒன்றும் சொல்வதற்கில்லை. உண்மைக் கதை நெகிழ்ச்சி. நீதி தேவதையே இருகண் திறந்து பார்க்க பிரியப்படவில்லை போலும். வேறு என்ன சொல்வது? நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 4. சட்டத்தின் முன், இந்தியாவில், அனைவரும் சமமல்ல. இது இந்த ஜென்மத்துக்கு மாறாது. பஹ்ரைனிலும் இந்த மாதிரி, சட்டம் ஆளுக்கேற்றபடி சில வழக்குகளில் மாறுவதைக் கண்டிருக்கிறேன்.

  சௌதியில், ஒரு இந்தியன் (பெட்ரோல் பங்க்?) ஒரு அரபியை ஏதோ சண்டையில் குத்திவிட்டான். அரபியின் கண் அவுட். இந்தியனோ சிறையில். சட்டப்படி அவனது கண் பறிக்கப்பட வேண்டும். அரபியின் குடும்பத்திலிருந்து அவனுக்கு மன்னிப்பு கிடைக்கவில்லை. அப்போது சௌதி அரசர் இந்தியாவிற்கு அரசு முறைப் பயணமாக வரணும். அவர், அந்த அரபியியைச் சந்திக்கிறார் (வரவழைத்து). அப்போது அரபி இந்த விஷயத்திற்காக உங்களைச் சந்தித்ததே எனக்குப் பெரிய பெருமை. நான் அவனை மன்னிக்கிறேன் என்று சொல்லிட்டான். அதன் பிறகுதான் அந்த இந்தியன் விடுதலை செய்யப்பட்டான். சட்டம் அங்கு அவ்வளவு ஸ்டிரிக்ட்.

  நம்ம ஊர்ல அப்படி எதிர்பார்க்கலாமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே
   சௌதியின் தகவல் எனக்கு புதியது மறப்போம் நன்னிப்போம் என்ற சித்தாந்தவாதிகள் அரபிகளே...

   மேலும் அவனது ஆயுள் கெட்டிதான் போலும்.

   நீக்கு
 5. நீதிக்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். நடை முறையில் சாத்தியம் இல்லை.
  வலுத்தவனுக்கு ஒரு சட்டம், இளைத்தவனுக்கு ஒரு சட்டம் தான். சட்டம் ஒரு இருட்டு அறைதான்.
  நம் மனதில் உள்ளதை சொல்லி புலம்பி கொள்ளலாம். அதுதான் நம்மால் முடியும்.
  வேறு என்ன செய்வது?

  நீங்கள் சொன்னவைகள் மாதிரி நடந்தால் நல்லது.
  தப்பு செய்து விட்டு ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் உலவும் மக்களை இறைவன் தான் கேட்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ ஆம் ஓர்தினம் இறைவனில் மன்றத்தில் அனைவரும் பதில் சொல்லியே தீரவேண்டும்.

   நீக்கு
 6. மகனைத் தேரிலேற்றிக் கொன்றது போன்ற நிகழ்வுகள் கூட நம்மால் ஒன்றிரண்டுதான் சொல்ல முடிகிறது.  பெரும்பாலும் இந்தியாவில் சட்டங்கள் ஒருதலைப் பட்சமாகவே இருக்கிறது.  பணமிருப்பவனுக்கு ஒரு நீதி.  இல்லாதவனுக்கு இல்லை நீதி.  தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பார்கள்.  நம் நாட்டில் ஒவ்வொரு தீர்ப்பும் வரவே எத்தனை காலம் பிடிக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஸ்ரீராம்ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல...

   நீக்கு

 7. இந்திய சட்டங்கள் செல்வாக்கு மிக்க குற்றவாளிகள் தப்பிப்பதற்கு ஏற்றாவறு மிகப் பெரிய ஒட்டைகளை கொண்டு இருக்கிறது அதனால் செல்வாக்கு உள்ளவன் தப்பித்து கொள்கின்றான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே அன்று இந்திய சட்டங்கள் வகுத்த குழுவிலிருந்த டாக்டர் அம்பேத்தரே இது எரிக்கப்பட வேண்டிய ஒன்று என்றுதான் சொல்லிச் சென்று இருக்கிறார்.

   நீக்கு
 8. \\இதுவல்லவோ நாடு.... இதுவல்லவோ சட்டம்//

  இதுவல்லவோ பதிவு!!!

  கில்லர்ஜியைப் பாராட்டச் சில வார்த்தைகள் போதா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பாராட்டுகளுக்கு நன்றி.
   முந்தைய பதிவு பாலும், பழமும் பாடல் வாசித்தீர்களா ?

   நீக்கு
  2. இப்போதுதான் வாசித்தேன்.

   கழுகைக் கருப்பொருளாகக் கொண்டு கவிதை எழுதிய பெருமை க்குரியவர் நீங்கள் மட்டுமே.

   நீக்கு
  3. மீள் வருகை தந்து படித்து கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 9. சுனாமிக்கு பதிலாகத்தான் குரோனோ வந்துவிட்டதொ என்றொரு சந்தேகம் எனக்கு??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இருக்கலாம் இதுவும் சரிதான்.

   நீக்கு
 10. நம் மீதும் தவறு இருக்கிறது என்பதை பெருமனதோடு ஒத்துக்கொண்டது சிறப்பு.

  பதிலளிநீக்கு
 11. சவுதி அரேபிய நடைமுறைகள் வியப்பை அளிக்கின்றன
  மக்களும் ஒத்துழைக்கிறார்கள்
  அரசும் விதிகளை மீறாமல் கடைபிடிக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ஆம் அவர்கள் இறைவனுக்கு பயந்து வாழ்பவர்கள்.

   நீக்கு
 12. அன்பின் தேவ கோட்டைஜி,
  நீங்கள் சொல்லி இருக்கும் ஆள் மட்டும் அல்ல,
  இந்தியாவிலேயே இருந்து கொண்டு

  ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சட்டத்திலிருந்து
  தப்பித்துக் கொண்டே இருப்பவர்கள்
  எத்தனை எத்தனை!!!

  யார் கேட்கப் போகிறார்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா யார்தான் இவர்களை தட்டிக் கேட்க முடியும் ஆயிரம் ரூபாய்க்கு வாக்குரிமையை விற்கும்போதே நாம் தகுதியை இழந்து விட்டோம்.

   நீக்கு
 13. வல்லரசோ வல்லவர்களின் அரசோ.
  எங்குமே நியாயம் சில இடங்களில் தான் வெற்றி பெறுகிறது.தெய்வம் நின்று
  கொல்லும் என்பது பழமொழி.பார்க்கலாம்:(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் தெய்வமே கேட்கும்.
   வருகைக்கு நன்றி அம்மா.

   நீக்கு
 14. என் வலைப்பக்கம்[கடவுளின் கடவுள்!!!https://kadavulinkadavul.blogspot.com] அகற்றப்பட்டுள்ளது. பெரியதொரு 'பூட்டு'ப் படத்துடன், இது பூட்டப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவிக்கிறது[பழைய பிளாக்குகளும் நீக்கப்பட்டுள்ளன].

  பொழுது போக்க மிகவும் உதவியாக இருந்த என் 'பிளாக்' தடைசெய்யப்பட்டதால் எனக்கு வருத்தம் ஏதும் இல்லை. இதற்காக வருந்துவோரும் இல்லை[நீங்கள் விதிவிலக்கு].

  பொழுதைக் கழிக்கவும் எண்ணங்களைப் பதிவு செய்வதற்குமான வழிவகைகளை இனி ஆராய வேண்டும்.

  இந்த என் கருத்துரையால் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படலாம் என்பதால், வாசித்ததும்[நண்பர்களுக்கும் தெரிய வேண்டும் என்றுதான் இங்கு எழுதுகிறேன்] delete செய்துவிடுங்கள்.

  நன்றி கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர்களுக்கு தெரியட்டுமே...

   நீக்கு
  2. இடைவிடாமல் முயற்சி செய்ததில் என் வலைப்பக்கத்திற்குப் போட்ட பூட்டை பிளாக்கர் திறந்துவிட்டது.

   மீண்டும் பூட்டப்படுமா என்பதை நான் அறியேன்.

   இதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன் கில்லர்ஜி.

   நீக்கு
  3. தளம் திறக்கப்பட்டதில் எனக்கும் மகிழ்ச்சி....

   பதிவுகள் தொடரட்டும்

   நீக்கு
 15. ஏனங்க ஐயம்
  வல்லரசு தான்
  கொரோனா
  முன்னேற்றத்தைத் தடுக்குமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் வருகைக்கு நன்றி

   நீக்கு