இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜூலை 27, 2021

பல்லும், பலமும்

 

வணக்கம் நட்பூக்களே... பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்ற கவியரசரின் அற்புதமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே உண்மையான பாடல் வரிகளும் இருக்கிறது. அதன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.
 
இதோ எனது பாடல்...
 
ம்ம்ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்ம்...
ரசமும் விசமும் கால்களில் ஏந்தி
விசமத்தோடு பார்வையை சிந்தி
கொல்லும் கழுகே நீ வருவாயே
கொன்று முடித்து பறந்து செல்வாயே

உண்ண பின்னும் பார்த்திருப்பாயே
உடல் முழுதும் சுத்தி இருப்பாயே
உண்ண பின்னும் பார்த்திருப்பாயே
உடல் முழுதும் சுத்தி இருப்பாயே

உறங்கும் விழியை கொத்தி கிழிப்பாயே
உயிரை வதமும் செய்து முடிப்பாயே
உறங்கும் விழியை கொத்தி கிழிப்பாயே
உயிரை வதமும் செய்து முடிப்பாயே

ரசமும் விசமும் கால்களில் ஏந்தி
விசமத்தோடு பார்வையை சிந்தி
கொல்லும் கழுகே நீ வருவாயே
கொன்று முடித்து பறந்து செல்வாயே 

கள்ளிச்செடியில் அமர்ந்திருப்பாயே
கள்ளக்கழுகே பறந்து செல்வாயே
கள்ளிச்செடியில் அமர்ந்திருப்பாயே
கள்ளக்கழுகே பறந்து செல்வாயே

பிஞ்சு முகம்போல் ஒளி தருவாயே
நஞ்சு மொழியில் ஒலி கொடுப்பாயே
பிஞ்சு முகம்போல் ஒளி தருவாயே
நஞ்சு மொழியில் ஒலி கொடுப்பாயே

ரசமும் விசமும் கால்களில் ஏந்தி
விசமத்தோடு பார்வையை சிந்தி
கொல்லும் கழுகே நீ வருவாயே
கொன்று முடித்து பறந்து செல்வாயே

அஞ்சி நடக்கும் வழி வகுத்தாயே
அல்லல் வாழ்வை அளித்து விட்டாயே
அஞ்சி நடக்கும் வழி வகுத்தாயே
அல்லல் வாழ்வை அளித்து விட்டாயே

ஈன்ற சிசுவை நான் கண்டதில்லை
எனது பசுவும்  வேறெங்குமில்லை
ஈன்ற சிசுவை நான் கண்டதில்லை
எனது பசுவும்  வேறெங்குமில்லை

உயிரை எடுத்த உனையே கொல்வேன்
உயர பறந்தே ஓர்தினம் வெல்வேன்
உயிரை எடுத்த உனையே கொல்வேன்
உயர பறந்தே ஓர்தினம் வெல்வேன்

ரசமும் விசமும் கால்களில் ஏந்தி
விசமத்தோடு பார்வையை சிந்தி
கொல்லும் கழுகே நீ வருவாயே
கொன்று முடித்து பறந்து செல்வாயே
ம்ம்ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்ம்...
 
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
 

வருடம் - 1961
திரைப்படம் - பாலும் பழமும்
பாடலாசிரியர் - கவியரசு கண்ணதாசன்
இசை - விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடகர் - டி. எம். சௌந்தரராஜன்
 
இதோ கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள்
 
ம்ம்ம்ம்ம்ம்..... ம்ம்ம்ம்ம்ம்....
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவள வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவாயே
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே

உண்ணும் அழகை
பார்த்திருப்பாயே உறங்க
வைத்தே விழித்திருப்பாயே
கண்ணை இமை
போல் காத்திருப்பாயே
காதற் கொடியே கண்
மலர்வாயே

பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவள வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவாயே
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே

பிஞ்சு முகத்தின்
ஒளி இழந்தாயே பேசிப்
பழகும் மொழி மறந்தாயே
அஞ்சி நடக்கும்
நடை மெலிந்தாயே
அன்னக் கொடியே
அமைதி கொள்வாயே

பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவள வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவாயே
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே

ஈன்ற தாயை
நான் கண்டதில்லை
எனது தெய்வம்
வேறெங்கும் இல்லை
உயிரை கொடுத்தும்
உனை நான் காப்பேன்
உதய நிலவே கண்
துயில்வாயே

பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவள வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவாயே
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே
ம்ம்ம்ம்ம்ம்..... ம்ம்ம்ம்ம்ம்....
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=iw_QtgwIer8
நன்றி – கில்லர்ஜி தேவகோட்டை

32 கருத்துகள்:

 1. நன்றாயிருக்கிறது. ஏன் திடீரென கழுகைப் பற்றி எழுதத் தோன்றியது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி அதாவது பாடலின் உண்மையான கோணத்திலிருந்து வரிகள் மாற்ற வேண்டும் அதேநேரம் ஏதோவொரு விடயத்தையும் சொல்ல வேண்டும் வரிகளின் வழியே போகும் பொழுது எதிரிபுறம் கழுகே தென்பட்டது. நன்றி ஜி

   நீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  பாடல் அருமை. பழைய பாடல் வரிகளுகேற்ப பொருத்தமாய் நீங்கள் அருமையாய் சிந்தித்து எழுதியிருக்கும் கழுகு பாடலை அந்த பாலும்,பழமும் பாடல் ராகத்தில் பாடிப் பார்த்தேன். நன்றாக வந்திருக்கிறது. ஆமாம்.. கழுகுக்கு பல் இருக்கிறதா?.அதன் கூரிய அலகுதான் பல்லோ?

  /ரசமும் விசமும் கால்களில் ஏந்தி
  விசமத்தோடு பார்வையை சிந்தி
  கொல்லும் கழுகே நீ வருவாயே
  கொன்று முடித்து பறந்து செல்வாயே/

  மாற்றிப் போடப்பட்டிருக்கும் இந்த வரிகளை ரசித்தேன். உங்களுக்கு நல்ல சிந்திக்கும் திறமை, கற்பனை வளம் நிறைய உள்ளது மனம் கனிந்த பாராட்டுக்கள். இன்னும் நிறைய பாடல்களை எழுதி ஒரு சிறந்த பாடலாசிரியராக எனது மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பாடல் வரிகளை கூர்ந்து ரசித்து படித்தமைக்கு நன்றி.
   லாக்டௌண் நேரத்தில் நிறைய பாடல்கள் எழுத நேரம் கிடைத்தது.

   நீக்கு
 3. மிகவும் அருமையாகவும் அதே நேரம் பொருத்தமாகவும் பாடல் வரிகள் உள்ளன.
  பாத்து நண்பரே பாடல் வரிகளின் திறமையால் வருமான வரி அதிகம் ஆயிட போகுது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வந்தவுடன் வயிற்றில் டைகரை கரைக்கின்றீர்களே...?

   நீக்கு
 4. இது மாதிரி ஒரு பத்து கவிதையை அதன் மூலம் பற்றி சொல்லாமல் எழுதினால் நீங்களும் கவிஞரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக வேறு கோணத்தை சொல்லி இருபது பாடல்கள் எழுதி விட்டேன் வரிசையாக வரும்...

   நீக்கு
 5. ஹா ஹா ஹா... பாடலை ரசித்தேன். அழகிய பைங்கிளிக்காக எழுதின பாடலை, கழுகுக்கு அர்ப்பணம் செஞ்சுட்டீங்களே...

  நான் கழுகின் குரலைக் கேட்டு அதிசயித்திருக்கிறேன். அதற்கேற்ற கம்பீரக் குரல் இல்லை. க்ருக் க்ருக் என்று சாதாப் பறவைபோலக் கத்துது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே வார்த்தைகளை எதுகைமோனையோடு தேடும் பொழுது கழுகுதான் கிடைத்தது.

   ஆம் நானும் கழுகின் குரலை கேட்டு இருக்கிறேன். வருகைக்கு நன்றி.

   நீக்கு
 6. மாற்றி எழுதப்பட்ட பாடல் வரிகள் நன்று. ரசித்தேன் கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி பாடலை இரசித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 7. ரசித்தேன், மகிழ்ந்தேன் சார்.

  பதிலளிநீக்கு
 8. பயணத்தில் கழுகு ஏரியிலிருந்து மீனை பிடித்து குத்தி குதறி சாப்பிடுவதை காணொளி எடுத்தேன்.வித வித மாக படம் எடுத்தோம் நானும், மகனும். உணவை உண்டு விட்டு வெகு நேரம் மர்க்கிளையில் அமர்ந்தே இருந்தது.

  செத்த உடல் கீழே இருந்தால் அதை சுற்றி நிற்கும். பிணம் திண்ணும் கழுகுகள் என்று பணத்திற்கு ஆசைபடுவோரை சொல்வது உண்டு.

  பாசம் இல்லா, பணத்திற்கு மட்டும் மதிப்பு அளிப்பவர்களைப்பற்றி கவிதை எழுதினீர்களா?
  மனக்குமறல் சற்று ஆறுதல் அடைந்து இருக்கும்.
  நன்றாக கவிதை எழுத வருகிறது. நிறைய கவிதை எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இன்று பந்தபாசத்துக்கு வேலையே இல்லை.
   அதை எதிர்பார்த்து வாழ்ந்தால் மனம் வேதனைபடத்தான் செய்யும்.
   தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
 9. அன்பின் தேவ கோட்டைஜி,
  கழுகு தன் உயிருக்காக உணவருந்துகிறது.
  மனிதர்களோ பணத்துக்காக உயிரை எடுக்கிறார்கள்.

  பழைய கதை ஒன்றில் , வயல் எலிக்கு ஒரு பாம்பும்,
  அந்தப் பாம்பைக் கொல்ல ஒரு கழுகும் என்று சொல்வார்கள்.
  அந்தக் கழுகை வீழ்த்தவும் ஒரு வேடன் இருப்பான்.

  தங்கள் எழுத்துத் திறமையும் , லாவகமும்
  மிக வியக்க வைக்கிறது. எப்படிப்
  பாந்தமான வார்த்தைகளைப்
  பொருத்துகிறீர்கள் என்று அதிசயப் படுகிறேன்.

  கீறிக் காயப்படுத்திய கழுகு ஓடட்டும். உங்கள் மன ரணங்கள் ஆறட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா
   நல்லதொரு பழைய செய்தியை தந்தீர்கள்.

   கவிதையை முழுமையாக உள் வாங்கி படித்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கு நன்றி அம்மா.

   நீக்கு
 10. ஆஹா! எப்படி இப்படி எல்லாம் சிந்திக்கிறீங்க? திடீர்னு கழுகைப் பற்றி எழுதத் தோன்றியது ஏன்? பொருத்தமான வார்த்தைகள். உங்கள் மனதைக் கீறிய கழுகுகள் ஓடிப் போகட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ ஸ்ரீராம்ஜி அவர்களுக்கு பதில் சொல்லி இருக்கிறேனே....

   நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறேன் விரைவில் வரும் பாராட்டுகளுக்கு நன்றி,

   நீக்கு
 11. நல்ல கற்பனை! மெட்டுக்கு பொருத்தமான வரிகள் அழகாக வந்து விழுந்திருக்கின்றன. உங்களுடைய இன்னொரு அவதாரம் வியக்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம் எனக்கு இன்னொரு அவதாரம் இருக்கு அது கர்நாடகா அல்ல...
   வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 12. அழகான பாடல்+உங்கள் ரசனை = சிறப்பு. வாழ்த்துகள். ரூம் போட்டு சிந்திப்பீர்களோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே வீட்டின் அறையிலிருந்துதான் சிந்திக்கிறேன்.
   வருகைக்கு நன்றி.

   நீக்கு
 13. அருமை
  ரசித்தேன்
  கவிஞர் கில்லர்ஜி வாழ்க வாழக

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் இரசிப்புக்கு நன்றி நண்பரே...

   நீக்கு
 14. தங்களின் பாட்டிலிருந்து .....கோழியிலிருந்து முட்டை வந்ததா.. முட்டையிலிருந்து கோழி வந்ததா என்பது எனக்கு தெரிந்துவிட்டது நண்பரே..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ஹா... ஹா... பெரிய விடையாச்சே ?

   நீக்கு
 15. பாடல் வரிகள்
  அருமை

  பதிலளிநீக்கு