வணக்கம் நண்பர்களே... ‘’சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர்’’ போட்டி என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடலை லொள்ளு மன்னன் பாணியில் மாற்றி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.
இதோ எனது பாடல்...
சத்தியமா சொல்லி விட்டார் என்னை காட்டி
சத்தியமா சொல்லி விட்டார் என்னை காட்டி
ஆண்டவனும் தனது கணக்கை கூட்டி
சத்தியமா சொல்லி விட்டார் என்னை காட்டி
அவன் அனைவருக்கும் சுமைதான்டி
அவன் அனைவருக்கும் சுமைதான்டி
சொல்லியடித்தாள் பொண்டாட்டி
சொல்லியடித்தாள் பொண்டாட்டி
சத்தியராஜுக்குத்தான் எத்தனை வேட்டி
சத்தியமா சொல்லி விட்டார் என்னை காட்டி
அத்தனை மச்சானுக்கும் வில்லங்கம்
மைத்துனியின் இன்பம் பல நேரம்
அவள் தாரத்தில் மாறுவாள் தாராளம்
சத்தியராஜுக்குத்தான் எத்தனை வேட்டி
சத்தியமா சொல்லி விட்டார் என்னை காட்டி
நான் எத்தனை முறை அழுகின்றேன்
நான் எத்தனை முறை அழுகின்றேன்
எதனால்தானோ நான் இருக்கின்றேன் - நான்
எதனால்தானோ நான் இருக்கின்றேன்
சத்தியமா சொல்லி விட்டார் என்னை காட்டி
அதனையும் தாங்கினேன் மனதை வாட்டி
ஆண்டவனும் தனது கணக்கை கூட்டி
ஆண்டவனும் தனது கணக்கை கூட்டி
சத்தியமா சொல்லி விட்டார் என்னை காட்டி
வருடம்: 1976
படம்: கிரஹபிரவேசம்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன்
இதோ கவியரசர் கன்னதாசனின் பாடல் வரிகள்
சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர் போட்டி
தர்மம் என்னை வாட்டுதம்மா சொந்தங்களை காட்டி
தர்மம் என்னை வாட்டுதம்மா சொந்தங்களை காட்டி
அத்தனையும் தாங்கி விட்டேன் சக்தியினைக் கூட்டி
ஆண்டவனும் சேர்ந்து கொண்டான் சங்கடத்தில் மாட்டி
ஆண்டவனும் சேர்ந்து கொண்டான் சங்கடத்தில் மாட்டி
சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர் போட்டி
தர்மம் என்னை வாட்டுதம்மா சொந்தங்களை காட்டி
அண்ணன் என்பவன் இடிதாங்கி – அவன்
அத்தனை பேருக்கும் சுமைதாங்கி
அண்ணன் என்பவன் இடிதாங்கி – அவன்
அத்தனை பேருக்கும் சுமைதாங்கி
துணைவன் என்பவன் கண்ணாடி – அதைச்
சொல்லால் அடிப்பவள் பெண்டாட்டி
சொல்லால் அடிப்பவள் பெண்டாட்டி
சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர் போட்டி
தர்மம் என்னை வாட்டுதம்மா சொந்தங்களை காட்டி
மனிதன் வாழ்க்கை வில்லங்கம் – அவன்
மக்களுக்கெல்லலாம் மிருதங்கம்
வாழ்வின் இன்பம் ஒரு நேரம் – பின்
மரத்தில் ஏறும் வேதாளம்
சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர் போட்டி
தர்மம் என்னை வாட்டுதம்மா சொந்தங்களை காட்டி
இடுக்கண் வரும்போது சிரியென்றான் – நான்
எத்தனை பேருக்கென்று சிரிக்கின்றேன்
இடுக்கண் வரும்போது சிரியென்றான் – நான்
எத்தனை பேருக்கென்று சிரிக்கின்றேன்
அடுத்தது நன்மையென்று நினைக்கின்றேன் – நான்
அதனால்தானே உயிரோடு இருக்கின்றேன்
நான் - அதனால்தானே உயிரோடு இருக்கின்றேன்
சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர் போட்டி
தர்மம் என்னை வாட்டுதம்மா சொந்தங்களை காட்டி
அத்தனையும் தாங்கி விட்டேன் சக்தியினைக் கூட்டி
ஆண்டவனும் சேர்ந்து கொண்டான் சங்கடத்தில் மாட்டி
ஆண்டவனும் சேர்ந்து கொண்டான் சங்கடத்தில் மாட்டி
சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர் போட்டி
தர்மம் என்னை வாட்டுதம்மா சொந்தங்களை காட்டி
https://www.youtube.com/watch?v=PxQtQJKnY-k
நன்றி – கில்லர்ஜி தேவகோட்டை
நல்லாயிருக்கு ஜி...
பதிலளிநீக்குகடுக்கன் தானே...?
ஆம் தகவலுக்கு நன்றி ஜி.
நீக்குகண்ணதாசன் பாடலும், நீங்கள் எழுதிய பாடலும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபாடலை கேட்டேன்
பதிலளிநீக்குவருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
நீக்குகவியரசருக்கே போட்டிக் கவிதை எழுத எங்கள் தேவகோட்டை கில்லர்ஜியால்தான் முடியும்
பதிலளிநீக்குவருக தமிழரே இதெல்லாம் ரொம்ப ஓவருருருருரு....
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநீங்கள் புனைந்த பாடல் அருமை. கண்ணதாசன் அவர்களின் கிருஹபிரேவச படப் பாடலையும் கேட்டேன். அவரைப் போல் நீங்களும் சிறந்த கவிஞர் ஆகி விட்டீர்கள். மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குஅன்பு தேவகோட்டைஜி,
பதிலளிநீக்குஎன்றும் நலமுடன் இருங்கள்.
கண்ணதாசன் பாடல் வரிகளில் தான் எத்தனை வேதனை:(
நீங்கள் அதனை அடிப்படையாக வைத்து சொல்லி இருக்கும்
கவிதை வரிகள் ஒரு தகுதியில்லாத உறவைச் சாடுவது போல
அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
சொல்லித் திருந்துவதா இந்த சமுதாயம்.
உங்கள் தமிழ் நன்றாக வளரும். வாழ்த்துகள்.
வாங்க அம்மா தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குஆச்சர்யம், கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நாம் இருவரும் ஒரே படப்பாடலை நினைவில் கொண்டு வந்திருப்பது! பாடல் படித்து புன்னகைத்தேன்.
பதிலளிநீக்குவாங்க ஜி அடுத்த வெள்ளிக்காகவா ? வரட்டும்...
நீக்குநன்றாக உல்டா பண்ணியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது முதல் வருகைக்கு மிக்க நன்றி
நீக்குஹாஹாஹாஹா கில்லர்ஜி செம உல்டா.
பதிலளிநீக்குகீதா
வருக ரசித்தமைக்கு நன்றி.
நீக்குகவிஞர் கில்லர்ஜி வாழ்க
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குஇப்படி எல்லாம் யோசிக்க உங்களால் தான் முடியும். நான் இப்படி ஒரு படம் வந்திருப்பதையோ, பாடல் இருப்பதையோ அறியவில்லை. அதிகம் கேட்டதில்லை. எனினும் உங்களின் கற்பனாசக்தி கொடிகட்டிப் பறக்கிறது. அருமை!
பதிலளிநீக்குவருக வாழ்த்துகளுக்கு நன்றி.
நீக்குஎம்ஜார் நடித்தது என்றாலும் தெரியாது எனலாம். இது உங்கள் ஜிவாஜி நடித்ததாயிற்றே...
நீண்ட நெடிய பாடல் ஒருவழியா படித்தும் பாடியும் பார்த்துவிட்டேன்
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குஉங்கள் கற்பனை வளம் அருமை நண்பரே. விரைவில் நீங்கள் இன்னொரு கண்ணதாஸனாக புகழ் பெற (பேர் )ஆசை படுகிறேன்
பதிலளிநீக்குவருக நண்பரே ஹா.. ஹா.. ஹா...
நீக்கு"யோசனை மஞ்சிவாடு வண்டி சகடை சப்பை"யாம்.
ஆஹா... என்னவொரு கற்பனை கில்லர்ஜி. மெட்டுக்குப் பாட்டு எழுதலாம் நீங்களும்!
பதிலளிநீக்குவாங்க ஜி இனி தொடர்ந்து எழுதுவேன்.
நீக்கு