இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், நவம்பர் 16, 2021

ஏழூர், ஏழரை ஏழுமலை

 

அதோ போறாரே அவரு ரொம்ப காஸ்ட்லியா செலவு செய்வாரு...
எப்படி ?
வீடு கட்டும்போது மினரல் வாட்டரில்தான் கலவை போடச் சொல்லுவாரு...
? ? ?
0********************1

அது போல கூழு குடிச்சாலும் கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் குடிப்பாரு...
எப்படி ?
கூழுல நெய் ஊற்றித்தான் குடிப்பாரு...
? ? ?
0********************2
 
கோயிலுக்கு சாமி கும்பிடப் போனாலும் இப்படித்தான் பெருமைக்கு மாவு இடிச்ச கதைதான்.
பணத்தை அள்ளி உண்டியலில் கொட்டுவாரா ?
இல்லை யாராவது பிடிக்காமல் போயிட்டா காளி கோயில்ல போயி தங்ககாசு வெட்டிப் போடுவாரு...
? ? ?
0********************3
 
அது போல பார்ட்டிக்கு போயி தண்ணியடிச்சாலும் ஊறுகாய் வாங்க மாட்டாரு...
ஏன் ?
அதற்கு பதிலா தேன் வாங்கி வச்சுக்கிருவாரு...
? ? ?
0********************4
 
பெட்ரோல் போடப்போன இடத்திலும் இப்படித்தான்..
என்ன செய்தாரு ?
நான் பணக்காரன் எனக்கு விமானத்துக்கு போடுற பெட்ரோல் போடுனு சண்டை போட்டு இருக்காரு...
? ? ?
0********************5
 
இவரை ஏன் ஏழரை ஏழுமலைனு சொல்றாங்க ?
வங்கியில கேஷியர் ஐநூறு ரூபாய்த்தாள் கொடுத்து இருக்காரு... இவரு நான் பணக்காரன் எனக்கு இரண்டாயிரம் ரூபாய்த்தாள் வேணும்னு சண்டை போட்டு இருக்காரு அதிலருந்து இவருக்கு இந்த பேருதான்.
கேஷியர் இரண்டாயிரம் ரூபாயை கொடுத்து தொலைக்க வேண்டியதுதானே ?
அதெப்படி இவரு எடுத்த மொத்த பணமே ஆயிரத்து ஐநூறுதானே...
? ? ?
0********************6
 
அதோ... மது குடிச்சுட்டு வாந்தி எடுக்குதே அந்தப் பொண்ணு யாரு ?
நம்ம பி. ஜி. நாகேந்திரன் மகள் மதுவந்திதான்.
? ? ?
0********************7
 
புதுசா கட்சியில் சேர்ந்தாரே அவரை உடனே கட்சியை விட்டு தூக்கிட்டாங்களே ஏன் ?
எனக்கு இன்னொரு முகம் இருக்கு நான்தான் ஆறுமுகம்னு தலைவர்ட்ட காட்டி இருக்காரு...
? ? ?
0********************8
 
ஸ்கூலில் போயி வாத்தியாரை அடிச்சிட்டாராமே ?
ஆமா தன்னோட மகனது மார்க் ஷீட்டில் முகேஷ் என்பதற்கு பதில் முருகேஷ்னு எழுதி விட்டாராம் தன்னோட பணக்கார பெயரை எப்படி மாற்றி எழுதாலாம்னு சண்டை போட்டு இருக்கார்.
? ? ?
0********************9
 
இவரு சொந்தப் பெயரே ஏழுமலைதானா ?
இல்லை சொந்தப் பெயர் பிச்சாண்டி பணக்காரர் ஆகவும் பணக்கார தெய்வமான திருப்பதி ஏழுமலையானைப் போல பெயர் வச்சுக்கிட்டாரு...
? ? ?
1********************0
 
கில்லர்ஜி தேவகோட்டை

29 கருத்துகள்:

  1. அம்மாடி...! பயங்கரமான ஆளு தான்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி எனக்கும் அப்படித்தான் தோணுது...

      நீக்கு
  2. சில இடங்களில் எடக்குமடக்கு ஏழுமலை ஆயிட்டாரே ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏழுமலை, அண்ணாமலைக்கு சொந்தமாக இருப்பாரோ... ?

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. அனைத்து நகைச்சுவை துணுக்குகளையும் ரசித்தேன்.சில வாய் விட்டு நகைக்க வைத்தது. 1லும், 2லும் அவர் பணக்காரதனத்தை காட்டியவர் வங்கியில் போய் தன் உண்மை சொரூபத்தை காட்டி விட்டார் போலும்.:) ஆனாலும் ஏழுமலை பல இடங்களில் விபரமான ஆள்தான். தலைப்பை ரசனையுடன் பொருத்தமாக தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்.ரசிக்கும்படி உள்ளது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து சிரித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  4. நல்ல நகைச்சுவை பதிவு.

    முகேஷ். முருகேஷ் பெயர் மாற்றம் ரசித்தேன்.
    ஏழுமலை என்று பெயர் வைத்துக் கொண்டால் செல்வந்தர் ஆகலாமா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்தமைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  5. நகைச்சுவைகளை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. சவரம்  செய்துகொண்டாலும் தங்க அல்லது வைர ப்ளேடில்தான் சவரம் பண்ணுவாரோ!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி இருக்கலாம். ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  7. ஹாஹாஹா! நல்ல நகைச்சுவை. அதற்காக வங்கியில் போய் வரிசையை காட்டியிருக்க வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. நல்ல நகைச்சுவைகள். ரசித்தேன்.

    தங்க காசு வெட்டிப் போடறதுன்னா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே...
      தனக்கு பிடிக்காதவர்களின் வாழ்வு நாசமாக காளி கோவிலில் போய் காசு வெட்டிப் போடுவது நல்ல தமிழர்களின் மரபு.(இதில் ஏழுமலை தனது பகுசியை காட்டுகிறார்)

      இப்படி அரசாங்க நாணயங்களை பொதுவெளியில் வெட்டிப் போடுவது சட்டப்படி குற்றமாகும் ஆனால் ஏனோ தடுப்பாரில்லை காரணம் காளி மீது பயமோ... பக்தியோ...

      நீக்கு
  9. இந்தக் காசு வெட்டிப் போடுவது செட்டி நாட்டில் தான் அதிகம்னு நினைக்கிறேன். அதன் பிறகு இருவர் குடும்பங்கள் அல்லது இருவருக்கும் பேச்சு, வார்த்தையோ முகாலோபனமோ இருக்காது. ஜென்ம விரோதிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இப்பொழுது எதற்கெடுத்தாலும் காளி கோவிலை இழுப்பது வழக்கமாகி விட்டது.

      நீக்கு
  10. கில்லர்ஜி வழக்கமான கலக்கல் பதிவு. என்றாலும் ஒய்.ஜி.மகேந்திராவின் பெண் மதுவந்தியை உங்களுக்குப் பிடிக்கலை என்பதால் அவரைக் குடிகாரர்னு மறைமுகமாய்ச் சொல்லி இருப்பது கொஞ்சம் உறுத்தலா இருக்கு. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கென்ன மதுவந்தி எதிரியா ? பெயர் கோர்வையாக வந்ததால் உபயோகித்தேன்.

      இங்கு பல பதிவர்களின் பெயர்களை உபயோகப்படுத்த இயலாமல் தவிக்கிறேன்.

      நீக்கு
  11. ரசித்தேன் நண்பரே. நீங்கள் ஏதேனும் ஒரு சஞ்சீகைக்கு அனுப்பலாம்.
    ஆமாம் இடையில் ஏன். ஜீ நம்ம மஹேந்திரனையும் இழுக்கறீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நான் மகேந்திரனை இழுக்கவில்லையே... எனது நண்பர் நாகேந்திரனைத்தான் இழுத்தேன்.

      நீக்கு
  12. நல்ல நகைச்சுவை வழக்கம் போல இடக்கு மடக்கா!!

    கால்ல போடுற செருப்பு தங்கம் வெள்ளில போட்டிருப்பாரோ?!!!!!!!!!! தலை முடில கூட தங்க முலாம் பூசிருவாரு போல!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வருகைக்கு நன்றி. ஏழுமலை அப்படி ஆள்தான்...

      நீக்கு
  13. ஊறுகாய்க்கு பதிலாக தேன்...மற்றவை பொருந்தினால் கூட இது பொருந்தவில்லையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவர் அவர்களே இரண்டுமே தொட்டுக் கொள்ளத்தான்.

      நீக்கு
  14. அய்யோ....ஏழுர்..ஏழரை..ஏழுமலை..!!!

    பதிலளிநீக்கு
  15. நகைச்சுவையை ரசித்தேன் கில்லர்ஜி. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு