இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜனவரி 27, 2022

நான் ரசித்தவை (1)


    ணக்கம் நண்பர்களே... நான் ரசித்த திரைப்பட வசனங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆச்சர்யமாக இருக்கிறதா ? ஆம் நானும் ரசிகன்தானே... எனக்கும் ஆசாபாசங்கள், ரசனைகள் இருக்கத்தானே செய்யும். ஆனால் இந்த வசனங்களை எழுதிய இருட்டுக்குள் வாழும் அந்த வசனகர்த்தா யாரென்று எனக்கு தெரியாது. வழக்கம் போல வாயசைத்த கூத்தாடிகளை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன் – கில்லர்ஜி

 
திரைப்படம் – ஏழாம் அறிவு (2011)
இயக்குனர் – ஏ. ஆர். முருகதாஸ்
வாயசைத்தது – ஸ்ருதி ஹாசன்

வசனம்-
இந்தியனா இருக்கிறதால வெளிநாட்டுல மதிக்க மாட்டுறான், தமிழனா இருக்கிறதால இந்தியாவுல மதிக்க மாட்டுறான்.
-----------01-----------

திரைப்படம் – ஏழுமலை (2002)
இயக்குனர் – அர்ஜூன்
வாயசைத்தது – அர்ஜூன்
 
வசனம்-
என் குழந்தை வளர்ந்து பெரிய ஆளாகி எனக்கு கிடைத்த அப்பா போல யாருக்குமே கிடைக்கலைனு சொல்லணும் இதுதான் என்னோட ஆசை.
-----------02-----------

திரைப்படம் – இந்தியன் (1996)
இயக்குனர் – ஷங்கர்
வாயசைத்தது – கமல்ஹாசன்

வசனம்-
அங்கெல்லாம் கடமையை மீறிவதற்குத்தான்டா லஞ்சம், இங்கே கடமையை செய்யிறதுக்கே லஞ்சம்.
-----------03----------- 

திரைப்படம் – கேப்டன் பிரபாகரன் (1991)
இயக்குனர் – ஆர். கே. செல்வமணி
வாயசைத்தது – விஜய்காந்த்

வசனம்-
அடுத்த வீட்டுப் பொண்ணுங்களையும் அக்காவா, தங்கச்சியா, அம்மாவா நினைக்கிற குணம் உங்கள் எல்லோருக்கும் என்றைக்கு வருதோ... அன்றைக்குத்தான் காப்பாத்தணுங்கிற எண்ணமும் வரும்.
-----------04-----------
 
திரைப்படம் – எத்தன் (2011)
இயக்குனர் – எல். கே. சுரேஷ்
வாயசைத்தது – வி.ஜெயப்பிரகாஷ்

வசனம்-
சும்மாவா சொன்னாங்க, தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்.
-----------05-----------

திரைப்படம் – மௌனம் சம்மதம் (1990)
இயக்குனர் – கே. மது
வாயசைத்தது – ‘’என்னத்த கன்னய்யா
 
வசனம்-
ஏன் ஸார் இருபத்து அஞ்சு வருஷமா பியூனா இருக்கேன். என்னைக் கேட்காம ஆறு மாசத்துக்கு முன்னால் வந்த ஆஃப்ட்ரால் மேனேஜர்கிட்டே நீங்க என்னத்த கேட்டு... அவரு என்னத்த சொல்லி...
-----------06-----------
 
திரைப்படம் – எந்திரன் (2010)
இயக்குனர் – ஷங்கர்
வாயசைத்தது – கருணாஸ், ரஜினிகாந்த்
 
வசனம்-
நாங்க சொல்லவே இல்லை ஸார்... இவன் பொய் சொல்றான் ஸார்.
சீ... மனுசங்கதான் கேவலமா பொய் சொல்வாங்க, மிஷின் பொய் சொல்லாது.
-----------07----------- 

திரைப்படம் – தசாவதாரம் (2008)
இயக்குனர் – கே. எஸ். ரவிக்குமார்
வாயசைத்தது – கமல்ஹாசன்
 
வசனம்-
சுங்கம் தவிர்த்த சோழனின் பேரனிடம் கர்வம் தவிர்க்கச் சொல். அப்படிச் சொன்னவன் இந்த ரங்கராஜ நம்பி என்று சொல். மன்னனை சூழ இருக்கும் பிற தோஷங்களுடன் பிரம்மகத்தி தோஷமும் சூழும் என்று சொல்.
-----------08-----------

திரைப்படம் – முதல்வன் (1999)
இயக்குனர் – ஷங்கர்
வாயசைத்தது – அர்ஜூன்
 
வசனம்-
ஒருநாள்ல நான் பெரிய சேவையோ,. சாதனையோ எதுவும் பண்ணலை இந்த பதவிக்குண்டான வேலை மட்டும்தான் செஞ்சுருக்கேன். இதையே நீங்க அஞ்சு வருசமா செஞ்சுருந்தீங்கன்னா நம்ம நாடே சொர்க்க பூமியா இருந்துருக்கும்.
-----------09-----------

திரைப்படம் – விருமாண்டி (2004)
இயக்குனர் – கமல்ஹாசன்
வாயசைத்தது – கமல்ஹாசன்
 
வசனம்-
சந்தோஷம்னா என்னன்னு அதை அனுபவிக்கையிலே மனுஷனுக்கு தெரியிறது இல்ல... அது இல்லாம போகுது பாருங்க அப்பத்தான்...
-----------10-----------

சிவாதாமஸ்அலி -
இவருக்கு திரைப்படத்தைப்பற்றி எதுவும் தெரியாதுனு ஸ்ரீராம்ஜி நாளைக்கு மண்டபத்துல சொல்லி விடக்கூடாதுல... ?

சாம்பசிவம்-
இது இன்னும் தொடர்ந்து வந்தால் சித்திரவதையை அனுபவிக்கிறது யாரு ?

Chivas Regal சிவசம்போ-
நாமதான் அனுபவிக்கணும்....

52 கருத்துகள்:

  1. அடடே "மய்"யம் நிறைய இருக்கே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா எனக்கு முத்திரை குத்தி விடாதீர்கள் ஜி

      நீக்கு
  2. ஆச்சர்யம் தான் நண்பரே. அப்புறம் ஷங்கர் படங்களுக்கு வசனம் சுஜாதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா... எல்லா படங்களுக்கும் தெரிந்தால் நல்லதே...

      நீக்கு
  3. இப்படியெல்லாம் வசனம் இருந்ததா என்று யோசிக்கிறேன். காட்சியோடு கடந்து விட்டேன் போல.. ஆனாலும் வேறு நிறைய வசனங்கள் எனக்குள்ளும் இடம் பிடித்தது உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி இதில் ஒரு வசனம் எமது வாழ்க்கை பாதையை தீர்மானித்து விட்டது.

      இன்று அதற்காக வருந்துகிறேன்.

      நீக்கு
  4. ஏழுமலை படத்துக்கு இயக்குநர் அர்ஜுனேவா? எத்தன் என்றொரு படமா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அர்ஜூன் தான்.

      எத்தன் படம் இருக்கிறது.

      நீக்கு
  5. ஏழாம் அறிவு :- +
    தமிழன் தன்னை மதிக்க மறந்தான்...!

    ஏழுமலை :- +
    அம்மா அப்பா அனைத்தும் என்றவருக்கு, எந்த மலையும் தேவையில்லை...!

    இந்தியன் :- +
    கடமை நினைப்பிற்கு முன் அன்பளிப்பு எனும் லஞ்சம்...!

    கேப்டன் பிரபாகரன் :- +
    பெண் குழந்தை பிறந்தால் தான் அரசாங்க வேலை...!

    எத்தன் :- +
    செய்யாத தொழிலும் தெய்வம்...!

    மௌனம் சம்மதம் :- +
    முயற்சி உடையாதார் இகழ்ச்சியும் அடையாதார்...!

    எந்திரன் :- +
    நம் வெங்கோலன் சுட்ட வடைகளை கணக்கிட முடியாது...!

    தசாவதாரம் :- +
    தோ"ஷ"ங்கள் என்றொன்று, என்றைக்கு நுழைந்த்தோ அன்றே மக்களின் 'ஷ'ந்தோஷத்திற்கு தோ'ஷ'ம் பிடித்து விட்டது...!

    முதல்வன் :- +
    சித்திரு - ப
    னித்திரு - த
    ழித்திரு - வி

    விருமாண்டி :- +
    எதிலும் திருப்(#)தி போதும்...
    (#) = ப அவசியமில்லை...
    ப = பணமும்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா அருமை ஜி
      பி(டி)ரித்து மேய்ந்து விட்டீர்கள்.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திரைப்பட வசனங்களை தேர்ந்தெடுத்து போட்டது நன்றாக உள்ளது. குறிப்பாக ஏழுமலை,எத்தன்,விருமாண்டி பட வசனங்கள் நன்றாகவே உள்ளது. முதல்வன் படத்தின் வசனத்தை தொ.காட்சியில் பார்க்கும் போது கேட்டு ரசித்திருக்கிறேன். மற்றும் பழைய சில படங்களின் வசனங்களும் மனதில் நிற்கும். திரைப்பட பாடலை விட்டு வசனத்திற்கு போய் விட்டீர்களா? எல்லாமே நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      //திரைப்பட பாடலை விட்டு வசனத்திற்கு போய் விட்டீர்களா ?//

      ஆஹா இதற்காகவே உடனே பாட்டு எழுத வேண்டுமே...

      எல்லாவற்றிலும் கை வைக்க வேண்டும் என்பதே குறிக்கோள்.

      நீக்கு
  7. திரைப்பட வசனங்களை நன்றாகவே அலசியுள்ளீர்கள் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  8. நீங்கள் ரசித்த வசனங்களில் சில எனக்கும் நினைவுக்கு வந்தது. நல்லதொரு தொகுப்பு.

    பதிலளிநீக்கு
  9. தேர்ந்தெடுத்த வசனங்கள் எல்லாமே சிறப்பான வசனங்கள்!!

    பதிலளிநீக்கு
  10. //இந்தியனா இருக்கிறதால வெளிநாட்டுல மதிக்க மாட்டுறான், தமிழனா இருக்கிறதால இந்தியாவுல மதிக்க மாட்டுறான்.//

    முட்டாளா இரு பிரதமர் ஆக்கி அழகு பார்ப்பான் என்ற வரியை வசனகர்த்தா எழுத மறந்துவிட்டாரா என்ன? அல்லதி எடிட்டிங்கில் வெட்டி விட்டார்களா ஹீஹீஹீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே வசனம் இப்படியா இருந்துச்சு... ?

      நீக்கு

  11. //என் குழந்தை வளர்ந்து பெரிய ஆளாகி எனக்கு கிடைத்த அப்பா போல யாருக்குமே கிடைக்கலைனு சொல்லணும் இதுதான் என்னோட ஆசை.

    நிச்சயம் இது மோடியின் ஆசையாக இருக்காது

    பதிலளிநீக்கு
  12. பதில்கள்
    1. முனைவர் ஐயா அவர்களின் ரசிப்புக்கு நன்றி.

      நீக்கு
  13. வசனங்களை எல்லாம் நினைவு வைச்சு எழுதியது ஆச்சரியமான விஷயம். இந்தப் படங்களிலே "ஏழாம் அறிவு" தவிர்த்து மற்றப் படங்களை நான் பார்த்ததில்லை என்பதைப் பெருமையோடு சொல்லிக்கிறேன். :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எனக்கும்தான் திரைப்படங்களை கண்ணுல கண்டாலே ஆகாது.

      நீக்கு
  14. அருமையான வசநங்கள் சார்.
    ஷங்கர் படங்களுக்கு உயிர் கொடுத்தது சுஜாதா வசனங்களே.
    எந்திரன் பட பாதியிலேயே சுஜாதா அவர்கள் மறைய ஷங்கர் படங்களின் ஜீவநும் இல்லாமல் போயி படங்களும் வெற்றியடைவது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக அரவிந்த் தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  15. அருமையான வசனங்கள். வசனகர்த்தாக்களுக்கும் , தேர்ந்தெடுத்த உங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. அட கில்லர்ஜி வசங்கள் எல்லாம் அழகா நினைவு வைச்சு சொல்லியிருக்கீங்க. சில வசனங்கள் மனதில் உரைக்கும் தான் ஆனால் அப்புறம் அது எந்தப் படம் என்பதெல்லாம் எனக்குமறந்துவிடும். பார்த்த படங்களே ரொம்பக் கம்மிதான். வசனங்கள் எலலம் செம

    கில்லர்ஜி அந்தந்தப் படத்த்தைப் பற்றிய தகவல்கள் தேடினால் கிடைத்துவிடுமே யார் வசனகர்த்தா என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது தகவல்களுக்கு நன்றி அடுத்த தொடரில் முயற்சி செய்கிறேன்.

      நீக்கு
  17. ஏழுமலை படத்திற்கு - கே சி தங்கம் - வசனம். (ஹிஹிஹி கூகுள்தான்)

    ஷங்கர் படத்துக்குப் பெரும்பாலும் சுஜாதாதான் வசனம் ஆனால் எந்திரன் படத்திற்கு அவர் இல்லை என்பதால் சங்கர், ஜெயமோகன், மதன் கார்கி.

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
  18. வசனங்கள் எல்லாம் கூர்ந்து நினைவு வைத்திருக்கிறீர்களே, பாராட்டுகள். நல்ல தொகுப்பு. இதில் ஒரு சில படங்கள் தவிர மற்றவை பார்த்திருக்கிறேன் ஆனால் வசனங்கள் நினைவு இல்லை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக எனக்கு ஞாபகசக்தி குறைவு ஆகவே முழு வசனமும் எழுத இயலவில்லை.

      நீக்கு
  19. வசனங்கள் தொகுப்பு நன்றாக இருக்கிறது.
    திரைப்படங்களில் நல்ல கருத்துக்களும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ ஆம் சில நன்மைகளும், பல கேடுகளும் இருப்பது உண்மையே...

      நீக்கு
  20. நீங்கள் எழுதியுள்ள (இங்கே தேர்ந்தெடுத்துள்ள) வசனங்கள் எனக்கும் நினைவுக்கு வந்தது. வசனம் படித்தாலே காட்சி, படம் நினைவுக்கு வந்தன.

    அது சரி.. பரமக்குடிக்கார்ர் அவர் மகள் என்று அதிகமாகப் படம் பார்த்திருக்கிறீர்களே.. ஊர்ப்பாசமா இல்லை மய்யம் பாசமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே பதிவு எழுதுவதற்காக நல்ல கருத்துகளை தேடினால் இப்படி குதற்க்கமாக பழி சுமற்றலாமா ?

      நீக்கு
  21. என் குழந்தை வளர்ந்து... இந்த வசனமா ஶ்ரீராமுக்குள்ள பதிலில் சொன்னது?

    பதிலளிநீக்கு
  22. தாங்களும் வசன கர்த்தாவாக ஆகிவிடலாம்....பிற்பாடு டைரக்டரு..!!!

    பதிலளிநீக்கு
  23. தாங்கள் ரசித்ததை
    நானும் ரசித்தேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  24. அலசி எடுத்துப் பகிர்ந்த விதம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  25. தேர்வு செய்த வசனங்கள் எல்லாமே இதுவரை அவ்வளவாக பிரபலம் ஆகாத ஒன்றாக இருந்தாலும் அர்த்தத்துடன் உள்ளது

    பதிலளிநீக்கு