இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, பிப்ரவரி 05, 2022

வாழ்வே சாபம்


ணக்கம் நண்பர்களே... வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்’’ என்ற கவிஞர் வாலியின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன். 

இதோ எனது பாடல்...


வாழ்வே சாபம் இங்கு வாழ்வதே பாவம்
வாழ்வே சாபம் இங்கு வாழ்வதே பாவம்
ஊரடங்கு போடும் காலம்
உணவு கிடைக்காத போதும்

உயிர் நிலைக்காதம்மா
கொரோனாவோடு யார் ? வந்தது
காலனோடு யார் செல்வது ?
வாழ்வே சாபம் இங்கு வாழ்வதே பாவம்


யார் யார்க்கு என்ன மருந்தோ ?
யார் யார்க்கு என்ன மாத்திரையோ ?
மூச்சிருந்தால் உயிர் நிற்கும்
மூச்சை விட்டால் உயிர் பறக்கும்
கொரோனாவோடு வந்தது காலனோடு சென்றது

கொரோனாவோடு வந்தது காலனோடு சென்றது
பொய்யாக்கியே உயிர் நின்றது
வாழ்வே சாபம் இங்கு வாழ்வதே பாவம்

ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...

இறந்ததும் பாடை கட்டுவார்
கழுத்தினில் மாலை சூட்டுவார்
ஊரடங்கு ஆனதால்
ஊர்கோலம் தடையானது
உடல் கருவாடு ஆனதால்
தெருவோடு உருளுது
பொய்யாக்கியே உயிர் நின்றது
வாழ்வே சாபம் இங்கு வாழ்வதே பாவம்

சுடுகாடு வரும் நேரம் நெருங்குதம்மா
வாசலில் யாத்திரை ரதம் நுழையுதம்மா

ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...

குழியில் உருட்டும் வேளை வந்ததம்மா
மண்ணில் உடல் மறைந்து போனதம்மா

ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...


பாதைகள் சில புதிதாய் தோன்றுதம்மா
காட்சிகள் பல காணக் கிடைக்குதம்மா
இறையின் ஒளி  விழியில் தெரியுதம்மா
இறுதி உண்மைகள் இன்றே புரிந்ததம்மா

பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி

வருடம்: 1982
படம்: வாழ்வேமாயம்
பாடலாசிரியர்: வாலி
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் மற்றும் கோரஸ்

இதோ கவிஞர் வாலியின் பாடல் வரிகள்


வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும்,
நிலைக்காதம்மா...
யாரோடு யார் வந்தது ? நாம்
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
யாரார்க்கு என்ன வேஷமோ ? இங்கே
யாரார்க்கு எந்த மேடையோ ?
ஆடும் வரை கூட்டம் வரும்,
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்


தாயாலே வந்தது தீயாலே வெந்தது
தாயாலே வந்தது தீயாலே வெந்தது
மெய் என்று மேனியை யார் சொன்னது ?
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

பிறந்தாலும் பாலை ஊற்றுவார், இங்கே
இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான்
ஊர்போவது நாலாலதான்


கருவோடு வந்தது, தெருவோடு போவது
கருவோடு வந்தது, தெருவோடு போவது
மெய் என்று மேனியை யார் சொன்னது ?
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
பாதைகள் பல மாறியே வந்த
தாய் கொண்டு வந்ததை

தண்ணீரில் போடும் கோலம்
போகும்போது யாரோடு யார் செல்வது ?
ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...
ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...

நாடகம் விடும் நேரம்தான்
உச்சக் காட்சி நடக்குதம்மா
வேஷம் கலைக்கவும் ஒய்வு
எடுக்கவும் வேலை நெருங்குதம்மா
ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...

பயணம் முடியுதம்மா
தாலாட்டி வைத்ததை நோய்
கொண்டு போகும் நேரமம்மா

 

இதோ யூட்டியூப் இணைப்பு

https://www.youtube.com/watch?v=1FDKapO95oA

நன்றி – கில்லர்ஜி தேவகோட்டை

32 கருத்துகள்:

  1. பாடல் நல்லா இருக்கு. ஆனால் கொரோனா பயங்கரங்கள் முடிந்த பிறகு எழுதியிருக்கீங்களே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே சமீபத்தில்தான் இந்த புகைப்படத்தை இணையத்தில் கண்டேன் ஆகவே இந்த கொடூர கோலம்.

      நீக்கு
    2. 2020 முதல் 8 மாதங்கள் இப்படித்தான் இருந்தது. என் மாமனார் 2021ல் மறைந்தபோது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக்கிட்டாங்க. அதற்குப் பிறகு ரொம்பவே ரிலாக்ஸ்தான். இப்போல்லாம், வராதீங்க...வீட்டுக்குள்ளேயே க்வாரண்டைன்ல இருங்க என்ற அளவு ஆகிவிட்டது.

      சென்னைல, அந்தச் சமயத்துல என் அம்மா மறைந்தபோது, (1 1/4 வருஷம் ஆச்சு), கொரோனாவால் இறந்தவரை நேரடியாக எரியும் தளத்துக்குக் கொண்டுபோனாங்க, 4 உறவினர்கள், 20 மீட்டர் தொலைவிலிருந்து ஒரு விளக்கைக் காட்டினாங்க, அவ்ளோதான்.

      நீக்கு
    3. வருக தமிழரே ஆம் 2020 தொடக்க காலத்தில் மிகவும் மோசமான நிலைபாடுதான்.
      மீள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. படிக்கையிலே மனது வேதனைப் படுகிறது. இம்மாதிரியான காட்சிகளையோ/நிகழ்வுகளையோ நிறையப் பார்த்துக் கேட்டு அனுபவிச்சாச்சு. போதுமே! இனியாவது ந்னமை பெருகட்டும். நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வாக்குகள் பலிக்கட்டும் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    வாழ்வே மாயந்தான்..! அந்த மாயையோடு வாழ்வதும் ஒரு சாபந்தான்.. வாலியின் பாட்டுக்குப் பொருத்தமாக எழுதியுள்ளீர்கள். மனசுதான் வரிகளைப் பார்க்கையில் பதறுகிறது. (அந்தப் புகைப்படத்தையுந்தான்) அந்தப்பாட்டையும் கேட்கையில் மனது இப்படித்தான் வருத்தப்படும். "மெய்யென்று மேனியை யார் சொன்னது?" அதை மெய்யாக நினைப்பதால்தானே மனிதர்களுக்குள் எல்லா கேடு கெட்ட குணங்களும் பஞ்சமில்லாமல் நிறைந்து வழிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இன்றைய வாழ்வு பலருக்கும் சாபமாகத்தான் இருக்கின்றது தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  4. எல்லாம் சரிதான் என்றாலும் மனம் எதையும் ஒத்துக் கொள்ளாது...

    தீ என்றால் நாக்கில் சுடுவதில்லை தான்.. ஆனால் மனதில் வலிக்கின்றதே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி ஆம் இவைகள் ஏற்பதற்கில்லைதான்.....

      நீக்கு
  5. நல்லா இருக்கு ஜி...

    பாடலில் உள்ளது போலவே சார் சொற்களை சேர்த்திருக்கலாம்... ("இங்கே" - இது போல)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மையான பாடல் வரிகளை சேர்க்க பாண்டு ஒத்து வரவில்லை ஜி அடுத்த பாடல்களில் பார்க்கலாம் வருகைககு நன்றி.

      நீக்கு
  6. நன்றாக இருக்கிறது கில்லர்ஜி... இப்போது கொரோனாவினால் ஏற்படும் சாவுகள் குறைந்துவிட்டன். ஆனால் அது வந்தால் அதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என செய்திகள் தெரிவிக்கின்றன.. அதன் விளைவாக காலப் போக்கில் உடல் நிலை கெட்டு சாவுகள் ஏற்படும் அதனால் இன்னும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  7. படமே சோகம்.  பாடல் அதைவிட...  நன்றாய் மாற்றி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  8. படம் ரொம்ப வேதனை. இப்படித்தானே சில காலம் முன்பு இருந்தது. இப்போதும் கவனமாக இருக்கத்தான் வேண்டும்

    பாடல் மிக நன்றாக மாற்றி எழுதியிருக்கிறீர்கள் கில்லர்ஜி. உங்கள் ஸ்டைல்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  9. பாடல் செம் உல்டா பண்ணி அழகா எழுதிருக்கீங்க கில்லர்ஜி. கரெக்ட்டா பாட்டு சூஸ் பண்ணிருக்கீங்க. ஆனால் சோகமோ சோகம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது பாராட்டுக்கு நன்றிகள் பல!

      நீக்கு
  10. நீங்கள் எழுதிய பாடல் நன்று. வேதனையான நிகழ்வுகள். போதும் தொற்று.

    பதிலளிநீக்கு
  11. எனக்கு வாழ்வு மாயமாக தெரியவில்லை.... ஒவ்வொருத்தருடைய வாழ்வையும் நாசமாக்கிவிட்ட கொடுங்கோலர்கள் வாழ்வே மாயம் என்றார்கள். கிடைத்தற்கரிய இந்த மனித வாழ்வை எல்லோரும் சுகமாய் அனுபவித்தில்லை... தாங்கள் எழுதிய பாடலை படித்தப்பின்தான் தாங்களும் அந்த வாழ்வே மாயம் என்ற ஜோதியோடு அய்க்கியமாகிவிட்டது புரிந்தது நண்பரே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது விரிவான கருத்துரை மகிழ்ச்சி அளிக்கிறது.

      நீக்கு
    2. உற்சாகமாக ஒரு பாடல் எழுதுங்கள்.

      நீக்கு
    3. வருக மேடம் ஒரு பாடல் இல்லை பல பாடல்கள் எழுதி இருக்கிறேன்.
      இன்னும் எழுதுவேன்...

      நீக்கு
  12. கொடுமை. போன வருடம் எனது தங்கை மகன் ஆஸ்பத்திரியில் இருந்தே சுடுகாடு சென்ற ஞாபகம் வருகிறது . இந்தக் கொடுமைக் காட்சிகள் இனிமேல் நடக்கக் கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே
      ஆம் வேண்டாம் இனியும் இந்த நிலை.

      நீக்கு
  13. கலக்கலான ரீமேக் நண்பரே. பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  14. நிஜத்தை பாடலாக தந்துள்ளீர்கள் வேதனைதான் . காலம்தான் மாற்றவேண்டும்.

    பதிலளிநீக்கு