இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மே 21, 2022

பேரறிவாளன் விடுதலை

பேரறிவாளன் அழகிய பெயர் செயல்தான் சரியில்லை மிகப்பெரிய கொலைக் குற்றத்தின் முக்கிய குற்றவாளி. இவரை விடுதலை செய்தது (18 May 2022) சரி என்றோ, தவறு என்றோ வாதம் செய்யும் பதிவல்ல இது முப்பத்தி ஒன்று (31) ஆண்டு காலம் சிறை இது முறையா ? அன்றே இவரை தூக்கிலிட்டு இருந்திருந்தாலும் அவர் மறுபிறவி எடுத்து பிறந்துகூட இருக்கலாம்.

ஒரு வழக்கு நடத்துவதற்கு இத்தனை ஆண்டு காலமா ? அதுவும் நாட்டின் பிரதமர் கொலை வழக்கு இவ்வளவு காலம் சிறையில் வாழ்ந்து வதங்கி இது என்ன வாழ்க்கை ? அவரது மனநிலையில் சற்றே யோசித்து பாருங்கள். அவரது குடும்பத்தாரின் நிலைப்பாடு என்ன ? இத்தனை ஆண்டுகளாக வயதான அவரது தாயாரை அலைக்கழித்தது நியாயமா ? அப்படி என்னதான் இந்த நீதியரசர்கள் தயிர்வடை சாப்பிட்டுக் கொண்டு நீதியை நிலை நாட்டுகின்றார்கள் ? இதற்கு அன்றே மரணதண்டனை கொடுத்து இருக்கலாம் என்பது எமது கருத்து.

சமீபத்தில் மும்பை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் திரு.டி.கே.ஸ்ரீவஸ்தவா அவர்கள். இந்த அமைப்பின் முரண்பாடுகள் குறித்து ஒரு கேள்விக்கணை பட்டியல் தொடுத்து இருக்கிறார். சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம், பெரும் புள்ளிகள், அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமா ? நீங்களே முடிவு செய்யுங்கள் என்று மக்களுக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறார். இதோ அவரது பட்டியல்.

01. ஒரு குடிமகன் இரண்டு இடங்களில் வாக்களிக்க முடியாது. ஆனால் தலைவர் விரும்பினால், அவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் தேர்தலில் போட்டியிடலாம். 

02. ஒரு குடிமகன் சிறையில் இருந்தால் வாக்களிக்க முடியாது. ஆனால் ஒரு அரசியல்வாதியோ அல்லது ஒரு தலைவரோ சிறையில் இருந்தாலும் தேர்தலில் போட்டி இடலாம்.

03. ஒரு சாதாரண மனிதன் ஏதாவது ஒரு சிறிய குற்றத்திற்காக சிறைக்கு சென்றால்  கூட அவனுக்கு வாழ்நாள் முழுவதும் அரசு வேலைக்கு தடை விதிக்கப்படும், ஆனால், கொலை அல்லது பாலியல் பலாத்காரம் போன்ற பெரிய குற்றம் செய்யும் தலைவன் எத்தனை முறை சிறையில் இருந்தாலும், அவர் தேர்தலில் தாராளமாக போட்டியிடலாம், அவர் பிரதமராகவும் அல்லது  ஜனாதிபதியாக கூட போட்டியிடலாம். எந்த தடையும் இல்லை.

04. ஒரு சாதாரண மனிதன் வங்கியிலோ, அரசாங்கத்திலோ அல்லது தனியார் கம்பெனியிலோ, ஒரு சுமாரான வேலையைப் பெற, பட்டதாரியாக இருக்க வேண்டும். ஆனால், அரசியல்வாதி கட்டைவிரல் ரேகை வைக்கும் படிப்பறிவே உள்ளவராக இருந்தாலும், அவர் இந்தியாவின் நிதி அமைச்சராகவோ பிரதமராகவோ இருக்க முடியும். அவர் பள்ளிக்கே சென்றதில்லை என்றாலும், நாட்டின் கல்வி அமைச்சராகலாம்.

05. ஒரு குடிமகன், இராணுவத்தில் சேர குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும். ஒரு சிப்பாயாக வேலை பெற, நீங்கள் பத்து கிலோ மீட்டர் ஓடி காட்ட வேண்டும். ஆனால் அரசியல்வாதி படிப்பறிவு இல்லாதவராகவும், உடல் ஊனமுற்றவராலவும், மற்றும் தொண்ணூறு வயதானவராக இருந்தாலும், அவர் பாதுகாப்பு அமைச்சராக இருக்கலாம், அந்த இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு கட்டளையிடலாம். அவருக்கே எதிராக  எத்தனை வழக்குகள் இருந்தாலும், ஒரு தலைவர் காவல்துறை, அல்லது உள்த்துறை அமைச்சராகவே இருக்கலாம்.

06. ஒரு அரசு ஊழியர் முப்பது முதல் முப்பத்து ஐந்து ஆண்டுகள் சேவைக்குப் பிறகும் ஓய்வூதியம் பெற நிபந்தனைகளும், காலவரையும் உண்டு. ஆனால் ஒரு எம் எல் ஏ, எம்பி சேவை செய்வதாக சொல்லி பதவிக்கு வந்து, ஐந்து வருடம் லஞ்சம்ஊழல் மற்றும்  எத்தனை அராஜகம் செய்தாலும், எந்த நிபந்தனையும், கால வரையும் இன்றி வாழ்னாள் முழுதும் ஓய்வூதியம் கிடைக்கும்,

07. இதில் அனைவருக்கும் எங்கே ஒரே நீதி இருக்கிறது ? இந்த அமைப்பு மாற்றப்பட  வேண்டுமா, இல்லையா ? தலைவர் மற்றும் மக்கள் இருவருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டுமா, இல்லையா ? மக்களே நீங்கள் முன் வரவில்லை என்றால் கில்லர்ஜி மாதிரி எந்த தலைவரையும் குற்றம் மட்டுமே சொல்லாதீர்கள். ஆம், உங்கள் இழப்புக்கு நீங்களும் பொறுப்பு ஆவீர்கள்.

திரு. டி.கே. ஸ்ரீவாஸ்தவா,
தலைமை அரசு வழக்கறிஞர்,
பம்பாய் உயர் நீதிமன்றம், பம்பாய்.

செய்தி தொகுப்பு
கில்லர்ஜி தேவகோட்டை 

34 கருத்துகள்:

  1. 34 வருடங்களுக்குப் பிறகு சித்துவுக்கு ஓராண்டு (மட்டும்) சிறைத்தண்டனை கிடைத்திருக்கிறது.

    குற்றவாளிகள் பட்ட சிரமங்கள் இருக்கட்டும்.  அவர் விடுதலை, அவர் வாழ்க்கை.  அவர் தாயின் சிரமங்கள்..  

    ஆனால் அவரை ஒரு தியாகி போல ஒரு மாநில முதல்வரே சென்று கட்டித்தழுவி வரவேற்றது சரியில்லை.  அந்நாளில் இவரும் ராசீவ் காந்தியுடன் பழகி இருந்திருப்பார்.  ஊடகங்கள் மைக்குடன் துரத்துகின்றன.. அவர் விடுதலைக்கு தான்தான் காரணம் என்று மூன்று பேர் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி ஆம் சித்து விசயத்தில் நியாயமில்லை.

      குற்றவாளிமீது இரக்கம் உண்டாகலாம் ஆனால் இதனை கொண்டாடுவது தவறு.

      அன்று பாதிக்கப்பட்ட பெண் காவல் அதிகாரி இன்று கொதித்து எழுந்துள்ளார்.

      நீக்கு
  2. தண்டனை தவறாகக் கொடுத்துவிடக் கூடாது என்பது ஆதார காரணம். இந்த வழக்கில் கொலைக்குற்றவாளியாக இருந்தாலும் நீதிமன்றம் பாவம் பார்த்து விடுவித்திருக்கிறது.
    குற்றவாளி விடுதலையைக் கொண்டாடும் போக்கு குற்றவாளிகளுக்கு தக்கார் இருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே இருப்பினும் இவ்வளவு தாமதம் தவறுதான்.

      நீக்கு
  3. ஒரு சிறு திருத்தம். பேரறிவாளனுக்கு முதலில் மரண தண்டனை தான் விதிக்கப்பட்டது. பின்னர் கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    ஆயுள் தண்டனை மற்ற கைதிகளுக்கு அதிக பட்சம் 14 வருடங்கள் என்று மாநில அரசு செயல்படுத்தும்போது இவருடைய ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுதும் என்று மத்திய அரசு வாதாடியது. அதுவே அவர் 31 வருட சிறை வாழ்க்கை அனுபவிக்க காரணமாய் அமைந்தது. 

    அரசியல் வாதிகள் எப்போதுமே தனி தான். அவர்களுக்கு உண்டான சட்ட திட்டங்கள், சம்பளம், பென்ஷன், சலுகைகள் போன்றவற்றை அவர்களே தீர்மானித்துக் கொள்வார்கள். மக்கள் வாயில் விரலை வைத்துக்கொண்டு வேடிக்கை பார்க்கலாம். மீண்டும்  மீண்டும் அவர்களை தேர்ந்தெடுக்கலாம்.   
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களது கருத்து மிகச்சரியாக சொல்லி இருக்கிறீர்கள் மிக்க நன்றி.

      நீக்கு
  4. நாடெங்கும் தயிர்வடைகள் நிறைந்து இருந்தால் உருப்படாது...

    அவர்கள் பெண்களை எவ்வளவு கேவலமாகவும. பேசலாம்... பாலியல் வன்முறை செய்யலாம்...

    ஆண்மையற்றவர்கள், கழிசடைகள் எனவும் நாணமில்லாமல் பேசலாம்... இதைவிட :-

    அந்த கீழ்கள் கொலையே செய்தாலும் தண்டனை கிடையாது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  5. தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நோயாளி போய்ச் சேர்ந்தார்..

    பதிலளிநீக்கு
  6. இருபது ஆண்டுகளுக்கு முன்பு - ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஜவ்வு இழுப்பாக இழுத்துக் கொண்டு கிடந்த போது பொதுவாக பேசிக் கொண்டார்கள்...

    " ராசீவ் அவராவே குண்டு வைச்சு வெடிச்சுக்கிட்டு செத்துப் போய்ட்டார்!.."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டம் அவரவர் தேவைக்கு வளைக்கப்படுகிறது .

      மக்கள் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியது தான்.

      நீக்கு
  7. பேரறிவாளன் விடுதலை அவர் தாய்க்கு மகிழ்ச்சியை தரும்.
    அவர் தண்டனை காலத்துக்கு மேலேவே தண்டனை அனுபவித்து விட்டார்.

    3, 4ம் ஒரே கருத்து , 4 வேறு கருத்து இருந்ததா?


    மக்கள் சட்டம் எல்லோருக்கும் பொதுவாக இருப்பதையே விரும்புவார்கள். வலுத்தவனுக்கு ஒரு சட்டம் இளைத்தவனுக்கு ஒரு சட்டம்தானே நடைமுறையில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மூன்றும், நான்கும் ஒரே கருத்து//

      ஆம் இப்பொழுதுதான் கவனித்தேன் பிறகுதான் சரி செய்யணும்.

      பொதுவாக அலைபேசியில் செய்வதுதான் ஆனால் இது பிறருடைய தகவல் கணினியில்தான் வேறு தகவல் உள்ளதாவென்று பார்க்க வேண்டும்.

      வருகைக்கும், தகவலை சொன்னமைக்கும் நன்றி.

      நீக்கு
    2. மூன்றாவது கருத்தே நான்கிலும் வந்திருக்கு. ஏதேனும் விட்டுப் போயிருக்கா என்று பார்க்கவும். மற்றபடி இதில் அபிப்பிராயம் எல்லாம் சொல்லும் அளவுக்கு எனக்கு எதுவும் தெரியாது.

      நீக்கு
    3. வருக சகோ விரைவில் சரி செய்கிறேன்.

      //அபிப்ராயம் எல்லாம் சொல்லும் அளவுக்கு எனக்கு எதுவும் தெரியாது//

      கர்ர்ர்ர்ர்ர்ர்.... இப்படி பொய் பேசலாமா ?

      நீக்கு
  8. என்ன கில்லர்ஜி சட்டம் இரண்டு மூன்று வகை இருக்கிறதே! அது சிலருக்கு வளையும். நாமெல்லாம் அப்பாவிகள் கில்லர்ஜி.

    பொதுவாகவே குற்றவாளிகளின் குற்றங்கள் நிரூபிக்கப்பட தாமதமாவதன் காரணம், (நான் இதை ஒரு வக்கீலிடம் அறிந்து கொண்டதை வைத்துச் சொல்கிறேன்) அதுவும் பெரிய குற்றங்களில் குற்றவாளிக்குத் தண்டனையோ விடுதலையோ கொடுக்க தகுந்த ஆதாரங்கள் வேண்டும். அந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படுவதில் பல இடையூறுகள், சரியாகக் கிடைக்காமை என்று போகுமாம். ஒரு வேளை கொடுக்கப்படும் தீர்ப்பு தவறாகிவிட்டாலோ என்று.

    ஆனால் தீர்ப்பு வழங்குவதில் வழக்கறிஞர்களின் வாதம், பிரதிவாதம், ஆதாரங்கள் சமர்ப்பித்தல் அடிப்படையில் என்பதால். வழக்கறிஞர்கள் பற்றி உங்களுக்கே தெரிந்திருக்கும் என்று எனக்குச் சொன்னவர்முடித்துக் கொண்டார்!!!!! (இளையவர். இன்னும் அனுபவம் ஏற்படவில்லை!!!!!!!!!!! அதனால் இப்போதைக்கு நீதி நேர்மை பற்றிப் பேசி சம்பாதிக்காமல் இருக்கிறார்!!! அதனால் கல்யாணம் ஆகவில்லை!!!)

    மும்பை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் கொடுத்திருக்கும் கருத்துகள் சூப்பர் நம் எல்லோர் மனதிலும் இருப்பவைதான். நிறைய படங்கள் வந்திருக்கிறதே 2 1/2 மணி நேரத்தில் தீர்ப்பே வழங்கிவிடுவாங்களே!!! அந்தத் தலைப்பை எல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அனுபவ கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  9. பல விஷயங்கள் சரிதான். ஆனால் 5,6 கருத்து எதார்த்தத்தை பிரதிபலிக்கவில்லை.

    மற்ற துறைகளை பொறுத்தவரையில் அந்த துறைக்கான அறிவு மிகவும் அவசியம். அரசியலுக்கு பொது அறிவுதான் முக்கியம். அதை கல்வி நிலையங்களை விட உலகம் உங்களுக்கு நிறையவே தரும்.

    எனவே அரசியல்வாதிகளுக்கு தகுதி இருக்கா என்பதை மட்டும் பார்க்கவேண்டும். அது கல்வித்தகுதிதான் என்பது அவசியமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  10. பதில்கள்
    1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  11. உயர்நீதிமன்ற நீதிபதி கூறியதுபோல மக்களுக்கு ஒரு சட்டம் அரசியல் வாதிகளுக்கு ஒருசட்டம்தானே நடந்துகொண்டுஇருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. பேரறிவாளன் எதுக்கு என்றே தெரியாமல் பேட்டரி வாங்கி கொடுத்ததால் கோலை குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டார். வெடி குண்டுவில் தானு, சிவராசனும்.. பலியானார்கள்...ஆக.. உண்மையில் ராசீவ் காந்தியை கொன்றவர்கள் யார் என்று கண்டுபிடிக்கவில்லை...சந்தரசாமியா, சுப்பிரமணியசாமியா, நரசிம்மராவா, மொசத்தா, அமெரிக்காவா.... இப்படி ஆளாளுக்கு ஒன்றை சொல்கிறார்கள். ஏழு பேருக்கு தண்டனை அளித்த நீதிமன்றமே கொலையாளி யார் என்று அறிவிக்கவில்லை .. இனி அதை கண்டுபிடித்து விசாரணை செய்து அறிவிக்க இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகிடும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இந்தியாவில் எத்தனையோ லட்சங்கள் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

      நீக்கு
  13. என்னை பொருத்தவரை விடுதலை செய்த நீதிபதிகள், விலை போகாமல், கவர்னர் பதவிக்கு ஆசைபடாமல்,எந்தவித அச்சுருத்தலுக்கும் ஆளாகமல் தைரியமாக. இந்திய அரசியல் சாசனத்தின்படி நீண்டகாலமாக இழுத்தடிக்கபட்ட ஒரு வழக்கை நேர்மையாக விசாரித்து உடனடியாக தீர்ப்பளித்துள்ளார்கள். இன்றைய இந்தியாவில் ஆகப் பெரும் அதிசியம்..இதுதான். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று நிருபித்து உள்ளார்கள்,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  14. இதையும் படித்து பாருங்கள் நண்பரே!
    Thambithajafferali
    1 நா ·
    ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது,

    சந்திரசேகர் - PM
    சுப்ரமணியம் சுவாமி - law minister
    NK சிங் IAS - union home secretary, police
    MK நாராயணன் (IB chief)
    RK ராகவன் (TN police chief, IG)

    இதில் NK சிங்கும், RK ராகவனும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தவர்கள்.

    இதில் NK நாராயணன், மே 20, 1991 அதாவது ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நாளுக்கு முந்தைய நாள், ராஜீவ்காந்திக்கு SPG பாதுகாப்பு கேட்டு NK சிங்கிக்கு கடிதம் எழுதுகிறார். அன்று ஞாயிற்றுக்கிழமை. மறுநாள் திங்கள்கிழமை ராஜீவ்காந்தி கொல்லப்படுகிறார்.

    ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது அவருக்கு மத்திய அரசின் சார்பில் துப்பாக்கி ஏந்திய ஒரே ஒரு Personal Security guard தான் உடனிருந்து, அவரும் ராஜீவுடன் மரித்தார்.

    1991 ல் பொதுத்தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த ராஜீவ்காந்திக்கு பாதுகாப்பு வழங்குவதை அந்தந்த மாநில காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும்.

    விடுதலைப்புலிகளை காரணமாக வைத்து தமிழகத்தில் அப்போதைய திமுக அரசு கலைக்கப்பட்டு, கவர்னர் ஆட்சி நடந்தது.

    மே 21 ல் ராஜீவ் காந்தி கொல்லப்படுகிறார். பின்னர் நடந்த அரசியல் மாற்றம் அனைவரும் அறிந்ததே.

    நரசிம்மராவ் பிரதமர் ஆகிறார்.

    பாபர் மசூதி இடிக்கப்படுகிறது.

    இதில் பலரும் கவனிக்காதது,

    சுப்ரமணியம் சுவாமி தன் கட்சியை பாஜகவில் இணைக்கிறார், பின்னர் மோடி பிரதமர் ஆனவுடன் பாஜக MP ஆகிறார்.

    NK சிங் 2002 ல் பாஜகவில் இணைந்து, வாஜ்பாய் அமைச்சரவையில் இணைகிறார்.

    MK நாராயணன், 2014 ல் மோடி பிரதமரான பின்னர், மேற்கு வங்க கவர்னர் ஆகிறார்.

    RK ராகவன், வாஜ்பாய் ஆட்சியில், CBI இயக்குநர் ஆகிறார். பின்னர் 2002 குஜராத் கலவர வழக்குகளை விசாரிக்கும் SIT chief ஆகிறார். 2014 ல் மோடி பிரதமான பின்னர், post retirement service ஆக சைப்ரஸ் நாட்டு தூதராகிறார், தற்போதுவரை இந்த பணியில் தொடர்கிறார்.

    ராஜீவ் காந்தியின் கொலையினால் அரசியல் பலனடைந்தது யார்.?

    பதிவு
    Puliangudi Seyad Ali

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் வாட்ஸ் அப்பில் படித்து இருக்கிறேன் நண்பரே...

      நீக்கு
  15. முதலில் கொடுத்திருக்கும் சவுதி நாட்டின் சட்டமும் நம் நாட்டுச் சட்டமும் வேறு வேறு.

    நம் நாடு ஜனநாயக நாடு என்பதால் அரபு நாடுகளைப் போலச் சட்டம் வந்தால் நன்றாக இருக்கும் என்று சாதாரண மனிதர்கள் நாம் நினைத்தாலும் அவ்வப்போது பேசி வந்தாலும், சட்டத் திருத்தம் என்பது அவ்வளவு எளிதல்ல அதுவும் ஜனநாயக நாட்டில். ஆனால் எழுதப்படாத, திருத்தப்படாத சட்டங்கள் நாட்டில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பாமரனுக்கு ஒன்று, புள்ளிகளுக்கு ஒன்று என்று.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது அழகிய கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு