இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மே 30, 2022

சென்று வா அம்மா

 

னது அம்மா கடந்த செவ்வாய்க்கிழமை காலை மரணம் அடைந்து விட்டார்கள். ஒரு மாதமாக உடல் நலமில்லாமல் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு இறந்து விட்டார்கள். எனது அம்மா விரைவில் இறந்து விடவே இறைவனிடம் பிரார்த்தனை செய்தேன் காரணம் அவர்கள் பட்ட சிரமத்தை என்னால் காண முடியவில்லை.
 
ஒரு மரணம் படிப்படியாக நிகழ்வதை அருகிலிருந்தே பார்த்தேன், எனது தாயாருக்கு கடைசி காலத்தில் அருவெறுப்பு படாமல் சில வேலைகளை செய்து விட்டேன் மனதிருப்திதான். அம்மா உங்கள் ஆலமரத்து குடும்பத்தில் எனது மகள் உள்பட இரண்டு பெண்கள் குழந்தை வரம் வேண்டி இருக்கின்றார்கள். இவர்களில் யாரிடமாவது நீங்கள் வந்து பிறக்க வேண்டும் விரைவில் நல்ல செய்தி எனக்கு கிடைக்க வேண்டும்.
 
அம்மா உங்களது உயிர் பிரிந்த அதே இடத்தில்தான் உறங்குகிறேன். இனி இறுதி வரையில் அதே இடத்தில் உறங்குவதாய் உத்தேசம். ஒருக்கால் என்னையும் அழைத்துப் போனாலும் சத்தியமாக மகிழ்ச்சியே காரணம் வெறுமையான வெட்டி வாழ்க்கை இதை கடத்துவதற்கு மிகவும் கஷ்டப்படுகிறேன். அங்கு வந்தாலும் அப்பாவை காணலாம், சகோதரரை காணலாம், சகோதரிகளை காணலாம், எனது மனைவியை காணலாம், மற்ற உறவுகளையும் காணலாம்.
 
வாழும் மனிதர்களைவிட, ‘’வாழ்ந்த’’ மனிதர்கள் மேலாகத்தான் இருக்க முடியும். இங்கு எல்லோருமே போலி மனிதர்கள் உண்மை இல்லை ஆனால் அங்கு சத்தியமான வாழ்க்கையாகத்தான் இருக்கும் காரணம் அது இறைவனின் திருவடி.
 
எனது அம்மாவுக்கு முன்பு நான் எழுதிய கவிதை இதோ அன்னை

சேனா... இன்று உனது இருபத்து ஒன்றாவது (21) நினைவு தினம் உனது நினைவுகளோடு வழக்கம்போல் இன்று நான் உண்ணாவிரதம்.
 
அலைபேசியில் அழைத்து ஆறுதல் சொன்ன வலையுலக நட்புகளுக்கு நன்றி.

20 கருத்துகள்:

  1. உங்களின் இழப்புக்கு ( இழப்புகளுக்கு ) எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  2. அலைக்கழிக்கும் துக்கம் புரிகிறது. அன்னை அமைதியை நல்குவாராக. சந்ததிகளுக்கு அவரது ஆசி என்றும் இருக்கும் எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  3. ஆழ்ந்த இரங்கல்கள் ஜிஅம்மாவின் ஆன்மா இறைநிழலில் என்றும் இளைப்பாறட்டும்

    பதிலளிநீக்கு
  4. எத்தனை வயதானாலும் அம்மாவின் இழப்பு தாங்க முடியாதது.  உங்கள் மனம் அமைதி பெறட்டும்.  அம்மாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. நேற்றுதான் விபரம் அறிந்தேன். தங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளில்லை. காலம் ஒன்றுதான் துணையாக இருந்து அனைத்தையும் கடந்து வர உதவி செய்யும். மனதை தேற்றிக் கொள்ளுங்கள். தங்கள் அம்மாவின் ஆன்மா இறைவன் காலடியில் இளைப்பாற இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். தங்களின் அம்மாவின் ஆசிகள் தங்கள் குடும்பத்திற்கு நிச்சயம் கிடைக்கும். தங்கள் விருப்பமும் நிறைவேறும்.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் தேவகோட்டைஜி,
    அம்மாவுக்கு அருகில் இருந்து சேவை செய்திருக்கிறீர்கள். வரப் போகும் மதலைகளைக் காணக் காத்திருங்கள்.
    அம்மாவின் அருள் பார்வை உங்களுடன் இருக்கும்.
    அமைதி கிடைக்கட்டும். என்றும் அன்புடன்.

    பதிலளிநீக்கு
  7. ஆழ்ந்த இரங்கள்கள்.
    அன்னையின் அந்திமக் காலத்தில் அருகில் இருந்து அரும்பணி புரிந்திருக்கிறீர்கள். காலம் உங்களுக்கு ஆறுதலை வழங்கட்டும். பாசத்தில் நீங்கள் மீசை வச்ச குழந்தை

    பதிலளிநீக்கு
  8. எனது வருத்தத்தையும் பதிவு செய்கின்றேன்... காலம் தங்களது துயரத்தை மாற்றும்..

    இறைநிழலில் ஆன்மா இன்புற்று இருக்கட்டும்..

    பதிலளிநீக்கு
  9. கில்லர்ஜி அம்மாவின் இழப்பு என்பது எப்போதுமே ஆற்ற முடியாத ஒன்று, இருக்கும் போது தெரிவதை விட இறந்த பிறகு அதிகம் தெரியும். கண்டிப்பாக பிறப்பார். உங்கள் குடும்பத்தில்.

    நீங்கள் கடைசி நிமிடங்களில் அவருக்கு ஆற்றிய பணிகள் மிகவும் நல்ல விஷயம். அவரது ஆசிகள் கண்டிப்பாக உங்களுக்கு இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. இறுதிக்காலத்தில் தாயாருக்கு அருகில் இருந்து பணிவிடை செய்வது என்பதானது அனைவருக்கும் கிடைக்காதது. உங்களுடன், உங்களுக்கு அருகில் அவர் இருந்துகொண்டே இருப்பார். அவரைப் பற்றிய நினைவுகள் உங்களுக்கு அதீத பலத்தைத் தரும். கவலைப்படாதீர்கள். இறைவன் துணையிருப்பான்.

    பதிலளிநீக்கு
  11. அம்மாவின் பிரிவு வேதனைதான்.அவர்கள் துன்பபட்டு விட்டார்கள் என்று கேட்கும் போது மேலும் வருத்தமாக இருக்கிறது.
    அவர்கள் தெய்வமாக இருந்து உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நல்ல வழி காட்ட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
    உங்கள் மகளுக்கு கேட்கும் வரம் வழங்குவார்கள்.
    மற்ற குழந்தைகளும் நலம் பெறுவார்கள்.

    உங்கள் துணைவி அவர்களின் நினைவு தினம் அவர்களும் உங்கள் குடும்பத்தினர்களுக்கு நலங்கள் அருளவேண்டும்.
    மன மகிழ்ச்சியை கொடுக்கட்டும். குழந்தைகள் உங்கள் இல்லத்தில் தாத்தாவுடன் மகிழ்ந்து இருக்க அருள வேண்டும் .

    பதிலளிநீக்கு
  12. அம்மாவிற்கு பணிவிடை செய்யும் பாக்கியம் பெற்று இருக்கிறீர்கள்.அவர்கள் உங்களுக்கு மன அமைதியை, மன மகிழ்ச்சியை வழங்குவார்கள்.

    பதிலளிநீக்கு
  13. கடவுள் தங்களுக்கு ஆறுதல் தர வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
  14. கடைசிக்காலத்தில் தாய்க்குப் பணிவிடை செய்யும் பாக்கியம் கிடைத்திருக்கே. அதுவே பெரிய விஷயம். உங்கள் மனம் இதனாலாவது அமைதி பெறட்டும் கூடுதலாக மனைவியின் நினைவு நாள் வேறே தொடர்ந்திருக்கிறது. இனியாவது இருவரும் உங்கள் மனதில் நிம்மதியைப் பரப்பட்டும். நல்ல அமைதியான தூக்கம். எளிமையான உணவு என உங்கள் வருங்காலம் மகிழ்வுடன் கழியட்டும். பிள்ளை வரம் வேண்டி நிற்பவர்களுக்கும் உடனடியாகக் குழந்தைப் பேறு உண்டாகட்டும். பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  15. உங்கள் இழப்பிற்கு வார்த்தைகளால் ஆறுதல் சொல்லி விட முடியாது. காலம் தான் மருந்திட்டு, மனதை சமனப்படுத்தும். மனதை தைரியமாக வைத்துக்கொள்ளுங்கள்! என் ஆழ்ந்த இரங்கல்கள்!

    பதிலளிநீக்கு
  16. ஈடு செய்ய முடியாத இழப்பு . வெறும் சொற்களால் ஆறுதலை தர இயலாது நண்பரே. அவரது ஆத்மா இறைவனின் திருவடிகளில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  17. ஆழ்ந்த இரங்கல்கள்.
    இத் துயரிலிருந்து தாங்கள் மீண்டுவர வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  18. ஆழ்ந்த இரங்கல்கள்..... மீளாத் துயரிலிருந்து மீண்டு வர எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  19. ஆழ்ந்த இரங்கல்கள். ஈடுசெய்ய இயலா இழப்பு ஈடுஇணையற்ற உறவு .
    அம்மா அவர்களின் ஆன்ம சாந்திக்காக பிரார்த்திப்போம் .
    இந்த துயரத்திலிருந்து இழப்புகளிலிருந்தும் மீண்டு வர இறைவன் துணையிருப்பாராக

    பதிலளிநீக்கு