இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூன் 29, 2022

தைவான், தைமகள் தையல்நாயகி

சித்திரையில் உதித்த முத்திரை நிலவே
வைகாசியில் வளர்ந்த வைதேகி மலரே
ஆனியில் முளைத்த ஆசைக் குயிலே

சனி, ஜூன் 25, 2022

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (2)

முன்குறிப்பு - உலக இணையத் திரையில் முதன்முதலாக தேவகோட்டை இணையத்திலிருந்து உங்கள் கில்லர்ஜியின் உருவாக்கத்தில் வெளியாகிறது...

செவ்வாய், ஜூன் 21, 2022

நம்புவோருக்கு நாராயணன்

 

இரவு 11:15 மணி கல்லல் பேருந்து நிலையம் இரவு நேர ரோந்துப் பணியில் தனது பரிவாரங்களோடு வருகிறார் இன்ஸ்பெக்டர் நாராயணன்.
 
அந்த கல் மேலே உட்கார்ந்து இருக்கிறவனை கூட்டிட்டு வாயா...
அருகில் வந்ததும் தலையில் கட்டிய துண்டை அவிழ்த்து விட்டு ஒரு கும்பிடு போட்டான்.

வெள்ளி, ஜூன் 17, 2022

ஆனந்தம் பொங்கட்டும்



புதாபி நண்பர் குடும்பத்தோடு அங்கு வாழ்கிறார். இந்தியாவில் உள்ள தனது வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டு மற்றும் வங்கிக்கான குறுஞ்செய்திகளுக்கு எனது அழைபேசிக்கு வருவது போல் செய்து விட்டு போய் விட்டார். அவரது குடும்பத்துக்கான சில செலவுகளை நான்தான் பார்த்துக் கொள்கிறேன். இருப்பினும் செலவு செய்ய வேண்டிய அவசியங்கள் பெரும்பான்மையாக வராது காரணம் குடும்பம் அங்கு இருப்பதால்...

திங்கள், ஜூன் 13, 2022

தர்மாவின் கர்மா

நீ செய்த பாவத்தை நீ கடந்தே தீரவேண்டும். நான் ஒரு பாவமும் செய்யவில்லையே என்று கதறலாம். பாவங்கள் உனது அகக்கண்ணுக்கும், முகக்கண்ணுக்கும் அறியாத Wi-Fi போன்ற ஊடல்கள். இதை இறைவன் மட்டுமே அறிவான். ஓர் தினம் நீயும் அதை காணவோ, உணரவோ வேண்டிய தருணம் வரும் அன்று நீ இறைவனின் திருப்பாதத்தில் இளைப்பாறளுக்கு வேண்டி நிற்பாய்.

வியாழன், ஜூன் 09, 2022

நாட்டுக்கோட்டை, நாட்டாமை நாதமுனி

ஊர் நாட்டாமை நாதமுனியின் மகன் மைனர் குஞ்சு ஊரில் இழுத்து வந்த ஏழரையால் ஊர் கூடி நாட்டாமையை பதவியிலிருந்து நீக்கி விட்டார்கள் அந்த வேதனையில் நமது நாதமுனி ஊடகழி கடந்து இருபது வருடங்களாக தான் பஞ்சாயத்து நடத்திய ஆலமரத்தின் கீழ் நின்று பாடுகிறார். இதை எந்த ராகத்தில் பாடினால் பொருந்தும் என்பதை திரு ஸ்ரீராம்ஜி அல்லது சகோ திருமதி கீதா ரங்கன் அவர்கள் இப்பொழுது மேடைக்கு வந்து சொல்வார்கள் என்று விழாக்கமிட்டியாரால் எதிர் பார்க்கப்படுகிறது.

ஞாயிறு, ஜூன் 05, 2022

ஐயா நீ சாப்பிட்டியா ?

வலையும், மகிழ்ச்சியும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது இதை சந்திக்காத மனிதர்களே கிடையாது இவைகளை இறைவன் கலந்தே கொடுக்கின்றான். ஆயினும் எனக்கு மட்டும் இறைவன் மகிழ்ச்சியை மிகவும் குறைந்த பட்சமாகவே அளித்துள்ளான். அதேநேரம் கவலைகளையும், வேதனைகளையும், துன்பங்களையும் நிறைவாகவே கொடுத்துள்ளான். இவைகளின் அடிப்படை எனது நேர்மையான வாழ்க்கையே...

புதன், ஜூன் 01, 2022

இறந்தவனும், சுமந்தவனும்



ணக்கம் நண்பர்களே... இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான்’’ என்ற கவிஞர் ஆலங்குடி சோமு அவர்களின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் இது திரைப்பட நடிகர் திரு. எஸ்.ஏ.அசோகன் அவர்கள் நான் எனது அப்பா வயிற்றில் இருக்கும்போதே பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது எனக்கு மிகவும் பிடித்த பாடல் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.