இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஆகஸ்ட் 08, 2022

அண்ணன் நாகேந்திரன் (3)

 
முந்தைய தொடர்ச்சிகளை படிக்க கீழே சொடுக்குக...
 
முன்பு... ம்ம்.. சிங்கம் போல் உட்காந்திருந்தேன்....
சொல்லுங்க கில்லர்ஜி... ?
இல்லைணே இனிமே உண்மையான பெயரையே சொல்லிடுறேன்.
இனி சொல்றது இருக்கட்டும் மேனேஜர் வரும்போது இவளுகள் இப்படி கூப்பிட்டால் ?
அவளுகள்ட்ட சொல்லுங்கண்ணே அப்படி சொல்லக் கூடாதுனு...
 
எது நானா ? அவளுகளுக்கு அர்த்தம் தெரிஞ்சும் அப்படித்தானே... சொல்லுறாளுக... அவளுகளுக்கும் தேவகோட்டை அத்தானை பிடிச்சுப் போச்சு  நீங்கதான் எந்த வார்த்தைக்கும் உல்டா ஒண்ணு வச்சு இருப்பீங்களே... ரெடிமேடா அதுல ஒண்ணை அவளுகள்ட்ட எடுத்து விட்டு மாத்தி சொல்லச் சொல்லுங்க..
 
என்ன வார்த்தைணே சொல்லலாம் ?
அது சரி என்னைக் கேட்டா ?
அது அசிங்கமான வார்த்தைனு சொல்லலாமா ?
ஆமா, ஆபரேஷன் தியேட்டருல வேலை செய்யிறாரே கோபால் அவரு பெயரைச் சொல்லாமல் கோ, கோ, அப்படீனு சொல்லுறாளுகளே ஏன் ?
அது..... வந்துணே...... அது... கெட்டவார்த்தை...
கோபால்’’ கெட்ட வார்த்தையா என்னையா இது காலக்கொடுமை. ?
நீங்களே சொல்லுங்கண்ணே அத்தான்’’னு சொல்ல வேணாம்னு...
நான் சொன்னாத்தான் கேட்க மாட்டாள்களே...
எனக்கு பயமா இருக்குணே...
யாருக்கு உங்களுக்கா ? விட்டால் அரபிக்காரியைக்கூட அத்தான்’’னு கூப்பிட வச்சுருவீங்களே... சூடானியை எம்கேடி பாகவதர் பாட்டு பாட வச்சது போல...
 
நீங்க சொல்லுங்க மேனேஜருக்கு தெரிஞ்சா என்னைக் கேன்ஷல் செய்து அனுப்பிடுவாருனு சொன்னால் கேட்பாங்க...
அதான் நல்ல ஐடியா போன மாசம் உங்களை நைட் டூட்டிக்கு மாத்தணும்னு ஹெட் சூப்பர்வைசர் சொன்னதுக்கு சண்டைக்கு வந்துட்டாளுங்க, ஒருவேளை நீங்கதான் தூண்டி விட்டீங்களோ...
இல்லைணே நான் அப்படி சொல்லலையே...
சரி வாங்க அவளுகள்ட்ட உங்க ஐடியாப்படி சொல்லுவோம் வேறவழி இல்லை.
 
ஸ்டோர் ரூமை பூட்டி விட்டு இருவரும் வெளியே வர... சற்று தூரத்தில் கொரிடாரில் எனது ஜென்ம சத்ரு மேனேஜர் பி.கே மீசையை முறுக்கிக் கொண்டு நிற்க பக்கத்தில் மற்றொரு பிலிப்பைனி ரோஸ்லின் அவரிடம் என்னமோ ? ? ? ஏதோ ? ? ? சொல்லிக் கொண்டு இருக்க நானும், சூப்பர்வைசரும் ஒருவரையொருவர் பார்க்க, எனக்கு மதியம் சாப்பிட்ட எலிக்கறி குழம்பு வயிற்றில் புளியைக் கரைத்து மனதில் கிலி உண்டாக்கியது....
 
அடிப்பாவி ரோஸ்லின் இவ அந்த மீசைக்காரன் கிட்ட சொல்றாளோ... அவனுக்கு சும்மாவே நம்மளை கண்ணுல கண்டாலே ஆகாது இவ ’’அத்தான்’’ விசயத்தை சொன்னால் மீசையை பலமுறை குறைக்கச் சொல்லியும் குறைக்க மாட்றானே.. அந்தக் கோபத்தை இதுல வச்சு என்ன செய்யப் போறானோ.... ? அந்த ஆளுக்கு இந்த உலகத்துலயே... தான் மட்டுமே மீசை பெரிசா வைக்கணும் மற்றவன் வச்சா பிடிக்காது சரி ரோஸ்லின் ஏன் என்னை போட்டுக் கொடுக்கப் போறாள் ? ஒருவேளை அன்றைக்கு அவள் வரும்போது நண்பன் நந்திவர்மனை பகடைக்காயாய் உபயோகப்படுத்தி...
 
//நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா//
என்ற பாடலை அவனைப் பாடச் சொன்னதை இது என்னோட வேலைதான் எனபுரிந்து கொண்டு முறைத்தாளே... அந்தக் கோபமோ... அதான் மறுநாள் காலையில் மஹந்தங் குமாஹா சொன்னாளே... பதிலுக்கு நானும் மஹந்தங் குமாஹா சொன்னேனே... அடிப்பாவி இந்த அப்பாவியை போட்டுக் கொடுக்க, உனக்கு எப்படி மனசு வருது... ச்சே என்ன உலகமடா இது ? நாட்டுல அவனவன் மக்கள் பணத்தை கோடி கோடியா கொள்ளையடித்து ஸ்விஸ் வங்கியில ஏழு தலைமுறைக்கு பணம் சேர்த்து வைக்கிறாங்கே... அது தவறில்லையா ? தமிழ் வாழ்க ஹிந்தி ஒழிக அப்படினு ஊரை ஏய்த்து விட்டு குடும்பத்துல உள்ளவங்களை ஹிந்தி படிக்க வைக்கிறாங்க.... அது குற்றமில்லையா ? நான் அப்படியா செய்தேன்... ? ஏதோ தெரியாத நாட்டுக்காரிகளுக்கு என் இனிய தமிழைச் சொல்லிக் கொடுத்து தமிழ் வளர்ப்பதற்கு ஒரேயொரு வார்த்தை ’’அத்தான்’’ இதைச் சொல்லிக் கொடுத்தது தவறா ? இந்த பாழும் உலகின் மீது வெறுப்பு தோன்றியது... இடுப்பில் யாரோ குத்துவது உணர்ந்து சுயநினைவு வர, சூப் நாகேந்திரன் அண்ணன்தான் குத்தியிருக்கிறார்...
 

மீசைக்காரன் பார்த்துட்டான் ரோஸ்லின் என்ன சொல்றாளோ... தெரியலை ?  அவனுக்கு ஒரு சல்யூட் போட்டுட்டு இடத்தை காலி பண்ணுங்க பிறகு பேசிக்கிறலாம்...
சரிண்ணே...
கொரிடாருக்கு வந்ததும்...
 
குட் ஈவ்னிங் சார்
ஒரு இராயல் சல்யூட் போட்டு நகர்ந்தேன் மீசைக்காரர் முறைத்துக் கொண்டே.... ம்..ம்.. என்றார் சூப்பர்வைசர் இணைந்து கொள்ள, நான் இடத்தை காலி செய்து விட்டு ரோஸ்லின் வேலை செய்யும் கிச்சனில் போய் காத்திருந்தேன் ரோஸ்லின் வரவுக்காக....
 
தொடரும்... நாளை மறுதினம்

36 கருத்துகள்:

  1. படத்திலிருப்பது யார்?  மீசை வைப்பதற்கு முன் தேவகோட்டை ஜியா?  நம்பவே முடியவில்லையே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தொடக்க காலம் ஆகவே மீசையை குறைவாக வைத்திருந்தேன்.

      நீக்கு
  2. போக்கிரிக்கு போக்கிரி ராஜா பாடுவது அம்புட்டு தப்பா? நந்திவர்மன்.. பெயர் நல்லாயிருக்கே..

    பதிலளிநீக்கு
  3. எனக்கும் அதே ஐயம் நண்பரே. போக்கிரி ராஜா பாட்டு தப்பா என்ன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே.. ஆம் ஒவ்வொரு மொழியிலும் எவ்வளவு வேறுபாடுகள் இருக்கின்றன...

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்னமும் தங்கள் சிக்கல் விடுபடவில்லையா? அழகான பெண்களுடன் இருக்கும் இந்தப் புகைப்படங்களைப் பார்த்தால் நீங்கள் சொல்வதை மேனேஜர் நம்பவா போகிறார். ஹா ஹா ஹா. பார்க்கலாம்.. . கோபால்....கோபால்.. கொஞ்சும் மழலையில் பழைய படம் ஒன்று நினைவுக்கு வருகிறது.:)) அடுத்தப் பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  5. தங்களின் படம் கண்டு, முகம் கண்டு மகிழ்ந்தேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  6. அன்றே இன்று போல் மீசை இருந்திருந்தால்...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த பெண்ணும் பேசி இருக்க மாட்டார்கள் ஜி

      நீக்கு
  7. மீசை இல்லாத கில்லர்ஜி இளமையாக நன்றாக இருக்காரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அப்படீனாக்கா... இப்ப நன்றாக இல்லையா ?

      நீக்கு
  8. பசுமை நிறைந்த நினைவுகளாக இருக்கிறது... எனக்கும் அந்தக் காலங்கள் மனதில் வந்துபோகின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது பழைய நினைவுகளை மீட்டியதில் மகிழ்ச்சி.

      நீக்கு
  9. அதிலும் ஃபிலிப்பினோ பெண்கள் (ஆண்களும்தான்) நல்லவர்கள்தாம்.

    பதிலளிநீக்கு
  10. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னோட கருத்துரை எங்கே? நீங்க நெல்லைக்கும் இன்னொரு நண்பருக்கும் கொடுத்த பதில் எனக்கு வருது. ஆனால் என்னோட கருத்துரை இங்கே இல்லை! தேடணும் போல! :(

    பதிலளிநீக்கு
  11. உங்கள் பழைய படங்கள் நன்றாக இருக்கிறது.
    ரோஸ்லின் வந்தாரா அறிய ஆவல்.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது காத்திருப்புக்கு நன்றி

      நீக்கு
  12. கில்லர்ஜி, இளம் வயது புகைப்படங்கள்!! நல்ல ஸ்மார்ட்டா இருக்கீங்க! அது சரி எப்பலருந்து முடி போச்சு?!!!!

    அப்பவும் மீசை இருக்கு ஆனா இப்போதைய ஸ்டைல் அதுக்கு அப்புறம்தான் தொடங்கினீங்க போல! அப்பவே வைச்சிருந்தா ஒரு வேளை அந்தப் பெண்கள் திரும்பிக் கூடப் பார்த்திருக்கமாட்டாங்க இல்லையா?!!! ஹாஹாஹா

    ரோஸ்லின் என்ன சொல்லப் போகிறார்? ஏதேனும் புதுசா கிளப்பிடுவாரோ?!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நான் அபுதாபி போகும்போது சீலா மீன் மாதிரி இருந்தேன்.

      அங்கு போனபின் நெத்திலி கருவாடு போல் ஆகிட்டேன்.

      மீசையை குறைவாக வைத்தது புதிய இடம் மேலாளருக்கு பயந்து பிறகு பயம் போயிந்தி.

      ரோஸ்லின் பார்க்கலாம்.

      நீக்கு
  13. மௌன ராகம் படத்தில் ரேவதி இப்படி தமிழ்ல சொல்லிக் கொடுப்பாரே அந்த சீனும் நினைவுக்கு வந்தது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா ? நான் மெலனராகம் பார்த்ததில்லை.

      நீக்கு
  14. இளமைக் கால நினைவுகள் அருமை.. இனிமை..

    பதிலளிநீக்கு
  15. ம்..

    பழைய நெனப்புல மோட்டு வளைய பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியது தான்..

    பதிலளிநீக்கு
  16. தேவகோட்டை புலவரா...அப்பவே கவி பல பாடி பல பொண்ணுகள தன் பக்கத்தில் கட்டி வச்சு இருக்காரே...... அது சரி எலிகறி கொழம்பு வயித்த கலக்குமோ....???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே கட்டி வைக்கவில்லை சும்மாதான் அமர்ந்து இருக்கின்றார்கள்.

      நீக்கு
  17. இப்போதெல்லாம், சில யுட்யூப், பதிவுகள் சிலவற்றில் பார்க்க நேரிடும் ஒரு சொல் 'வைச்சு செஞ்சிட்டாங்க' முதலில் இதன் அர்த்தம் புரியவில்லை. அதன் பின் மெதுவாகப் புரிந்தது. இந்தப் பதிவு தொடரை வாசித்த போது இந்த வார்த்தை நினைவுக்கு வந்தது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஹா.. ஹா.. நானும் படித்து இருக்கிறேன்.

      நீக்கு
    2. ஆமாம், துளசிதரன். எனக்கும் புரியாமல் இருந்தது. பின்னர் நாளாக ஆகப் புரிய ஆரம்பித்தது.

      நீக்கு
    3. மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு